Agri Info

Adding Green to your Life

May 31, 2023

ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

May 31, 2023 0

 

ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மே 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை 11.06.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECGC Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Probationary Officer (PO) பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, Accounts (CA) – 01 பணியிடம், Legal – 04 பணியிடங்கள், Company Secretary – 01 பணியிடம், Actuary – 02 பணியிடங்கள், IT – 02 பணியிடங்கள் , IT/CISO – 01 பணியிடம், Country Underwriting/ research – 01 பணியிடம், Rajbhasha/Hindi – 04 பணியிடங்கள், Data Science – 01 பணியிடம்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law (LLB)/ B Tech or BE in Computer Science / Information Technology or MCA / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • Probationary Officer (PO) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.53600- 2645(14)- 90630- 2865(4)- 1,02,090/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Examination மற்றும் Descriptive Paper (Test of English Language) & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

May 31, 2023 0

 

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Sr. Technical Lead பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HCL காலிப்பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Sr. Technical Lead பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

HCL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HCL நிறுவன அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 07 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

HCL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.



GAIL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.93,000/- ஊதியம்!

May 31, 2023 0

 

GAIL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.93,000/- ஊதியம்!

GAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Full time Factory Medical Officer on temporary tenure basis பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GAIL காலிப்பணியிடங்கள் :

GAIL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Full time Factory Medical Officer on temporary tenure basis பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

GAIL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

GAIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.93,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

GAIL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

GAIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் hrgandhar@gail.co.in மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.54,000/-

May 31, 2023 0

 

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.54,000/-

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Research Associate-III, Lab Technician, Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Pondicherry University காலிப்பணியிடங்கள்:

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Research Associate-III, Lab Technician, Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 3 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc / M.Sc / P.hD தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Pondicherry University வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.54,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Pondicherry University தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 20.06.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

May 31, 2023 0

 

TNSTC அரசு போக்குவரத்து கழகத்தில் 10 ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு!

மத்திய அரசின் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் கீழ் நாகப்பட்டினம் மாவட்ட அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாக உள்ள Mechanic Diesel பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பணிக்கு 10 ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNSTC காலிப்பணியிடங்கள்:

Mechanic Diesel பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம் :

தேர்வானவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.7,700/- வரை ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TNSTC விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமும் தகுதியும் உடைய விண்ணப்பதாரர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து ஆன்லைன் மூலம் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/-ஊதியம்!

May 31, 2023 0

 

CBI பணியகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/-ஊதியம்!

மத்திய புலனாய்வு பணியகத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Consultants பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Bureau of Investigation காலிப்பணியிடங்கள் :

மத்திய புலனாய்வு பணியகத்தில் நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Consultants பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Central Bureau of Investigation வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 65 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation கல்வி தகுதிகள் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

CBI ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Application Link Form


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IBPS RRB PO & CLERK வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!

May 31, 2023 0

 

IBPS RRB PO & CLERK  வேலைவாய்ப்பு அறிவிப்பு 2023 – நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!
வங்கி பணியாளர் தேர்வாணையம் ஆனது, பிராந்திய கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள Group “A”- Officers (Scale-I, II & III) மற்றும்  Group “B”- Office Assistant (Multipurpose) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய ஆன்லைன் விண்ணப்ப தேதியை வெளியிட்டுள்ளது. இது பற்றிய முழு விவரங்களை இங்கு காண்போம்.
IBPS RRB PO & CLERK  வேலைவாய்ப்பு:
ஆண்டுதோறும் பல்வேறு பணியிடங்கள் IBPS மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த வங்கி பணிக்கு விண்ணப்பத்தார்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
முக்கிய நாட்கள்:
EventsTentative Dates
Online registration including Edit/Modification of Application & Payment of Application Fees/Intimation Charges01.06.2023 to 21.06.2023
Conduct of Pre-Exam Training (PET)17.07.2023 to 22.07.2023
Online Examination – PreliminaryAugust 2023
Result of Online Exam – PreliminaryAugust/ September 2023
Online Examination – Main / SingleSeptember 2023

 

Download Notification PDF

Official Site

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.28,000/-ஊதியம்!

May 31, 2023 0

 

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.28,000/-ஊதியம்!

சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Driver பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் 02.06.2023 அன்று நடைபெறும் Walk-in Interview சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Cement Corporation of India Ltd காலிப்பணியிடங்கள் :

Cement Corporation of India Ltd நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Driver பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

Cement Corporation of India Ltd வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் நபர்களின் வயதானது அதிகபட்சம் 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Cement Corporation of India Ltd தகுதிகள் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 20 வருடம் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Cement Corporation of India Ltd ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.28,000/- சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 02.06.2023 அன்று நடைபெறும் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bureau of Investigation விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 02.06.2023 அன்று நடைபெறும் Walk-in Interview சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

UPSC EPFO தேர்வுக்கு என்னென்ன புத்தகங்களை படிக்க வேண்டும் தெரியுமா?

May 31, 2023 0

ஜூலை 2 அன்று மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer), கணக்கர் அலுவலர் (Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு வர இருக்கிறது.

இன்னும் ஒரு மாதத்தில் தேர்வு வரவுள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அதற்கு முழு வீச்சில் தயாராகி இருப்பீர்கள். ஒரு சிலர் இப்போது தான் என்ன செய்வது, என்ன படிப்பது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். உங்கள் அனைவருக்காகவும் தான் இந்த செய்தி.

Ads by 

இந்த தேர்வின் முதல் படிநிலை எழுத்துத் தேர்வு. Multiple Choice Questions எனப்படும் பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள்கொண்ட கொள்குறி வினாக்களைக் கொண்டதாக இருக்கும். மொத்தம் 120 கேள்விகள். ஒரு கேள்விக்கு 2.5 மதிப்பெண்கள். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும்.அதற்கு என்னென்ன புத்தகங்களை படிக்க வேண்டும் என்று இப்போது உங்களுக்கு பட்டியலிடுகிறோம்.

பாடம் புத்தகத்தின் பெயர் ஆசிரியர் பதிப்பகம் 
ஆங்கிலம்High School English Grammar and Compositionஎஸ். சந்த்ரென் மற்றும் மார்ட்டின்
ஆங்கிலம்Objective General Englishஎஸ்பி பக்ஷிஅரிஹந்த்
வரலாறு-இந்திய சுதந்திரப் போராட்டIndia’s Struggle for Independenceபிபன் சந்திராபென்குயின்
வரலாறுModern Indian History-NCERT XIIபிபன் சந்திராNCERT
நடப்பு நிகழ்வுகள்நடப்பு நிகழ்வுகள் ஆண்டு 2023அரிஹந்த்
இந்திய அரசியல்Indian Polityஎம் லக்ஷ்மிகாந்த்மெக்ரா ஹில்
அரசியல் - பொருளாதாரம்Contemporary World PoliticsNCERT
பொது கணக்கியல் மற்றும் கோட்பாடுகள்கணக்கியல் வகுப்பு 11 மற்றும் 12NCERT
தொழில்துறை உறவுகள் மற்றும் தொழிலாளர் சட்டங்கள்Industrial Relations and Labour Lawsடாக்டர் நிகிதா அகர்வால் கல்கோடியா
பொது அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகளின் அறிவுEncyclopedia for General Science and Handbook for Computer Science and ITஅரிஹந்த்
இந்தியாவில் சமூக பாதுகாப்புSocial Security in Indiaரவி பிரஜாஷ் யாதவ்அவிஷ்கர்
மன திறன் மற்றும் அளவு திறன்Quantitative Aptitudeஅப்ஜித் குஹாமெக்ரா ஹில்


இது போக தினசரி செய்தித்தாள் படித்து தனிப்பட்ட குறிப்புகள் எழுத்து வைத்திருந்தால் அதை படித்துக்கொள்ளவும். இவை இருந்தாலே தேர்வை நிச்சயம் பாஸ் பண்ணி விடலாம். 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

EPFO தேர்வு : ஜூலையில் வரும் EPFO தேர்வுக்கு எப்படி தயாராவது? அதன் பாடத்திட்டம் என்ன?

May 31, 2023 0

 மத்திய அரசின் குடிமைப் பணிக்கான தேர்வுகள் 28.05.2023 அன்று  நடந்து முடிந்த நிலையில் மாணவர்கள் அடுத்த தேவுக்காகத்  தயாராகத் தொடங்கிவிட்டனர். குடிமைப்பணி தேர்வுகள் கடந்த ஆண்டின் அமைப்புகளில் இருந்து கொஞ்சம் மாறுபட்டு வந்த நிலையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் வரும் தேர்வுகளும் இந்த ஆண்டே அடுத்து வரும் தேர்வுகளும் எப்படி இருக்க போகிறதோ என்ற அச்சம் மாணவர்கள் இடையே எழுந்துள்ளது. 

கவலை வேண்டாம் மாணவர்களே! எல்லாவற்றையும் தட்டித் தூக்கும் அளவுக்கு நாம் தயாராகிவிடுவோம். மத்திய அரசு தேர்வு என்ன வருகிறது என்று பார்த்தால், ஜூலை 2 அன்று மத்திய தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் காலியாக உள்ள அமலாக்க அதிகாரி (Enforcement Officer), கணக்கர் அலுவலர் (Accounts Officer), உதவி வருங்கால வைப்பு நிதி ஆணையர் (Assistant Provident Fund Commissioner) ஆகிய பதவிகளுக்கான ஒருங்கிணைந்த தேர்வு வர இருக்கிறது.

இன்னும் 33 நாட்களே உள்ள நிலையில் பெரும்பாலான மாணவர்கள் அதற்கு முழு வீச்சில் தயாராகி இருப்பீர்கள். ஒரு சிலர் இப்போது தான்  என்ன செய்வது, என்ன படிப்பது என்று சிந்தித்துக்கொண்டு இருப்பீர்கள். உங்கள் அனைவருக்காகவும் தான் இந்த  செய்தி.

ஒரு தேர்வு எழுத போகிறோம் என்றால் முதலில் என்ன தேர்வு, தேர்வின் அமைப்பு என்ன , எப்படி கேள்விகள் வரும், எப்படி பதில் அளிக்க வேண்டும், எந்த தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்படும், எத்தனை மதிப்பெண்களுக்கு எழுத இருக்கிறோம் என்றாவது தெரிந்து வைத்துக்கொண்டு போக வேண்டும்.

அப்படி இன்னும் ஒரு மாதத்தில் நடக்க இருக்கும் EPFO - EO /AO /APFC   பதவிகளுக்கு மொத்தம் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் என்ற இரண்டு இரண்டுநிலை தேர்வுகள் உள்ளன.  எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெரும் மக்கள் அடுத்து நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். எழுத்துத் தேர்வுக்கு 75 சதவிகித விழுக்காடும், நேர்காணல் தேர்வுக்கு 25 சதவிகித விழுக்காட்டும் முன்னுரிமை அளிக்கப்படும்.

எழுத்துத் தேர்வு  Multiple Choice Questions எனப்படும்  பல பதில்கள் தேர்வு அம்ச வினாக்கள்கொண்ட கொள்குறி வினாக்களைக் கொண்டதாக இருக்கும். மொத்தம் 120 கேள்விகள். ஒரு கேள்விக்கு 2.5 மதிப்பெண்கள். மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். இரண்டு மணி நேரம் நடக்கும்  தேர்வில் ஒவ்வொரு தவறான பதிலுக்கும்  சரியான மதிப்பெண்ணில் 3-ல் 1 பங்கு மதிப்பெண் , அதாவது 0.833 மதிப்பெண் குறைக்கப்படும். சரி அடுத்து படத்திட்டத்திற்கு வருவோம்:

i) பொது ஆங்கிலம்- தேர்வர்களின் ஆங்கில மொழியின் புரிதல் மற்றும் சொல் வளத்தை சோதிக்கும் வகையில், பொருள், எதிர்சொல், சொல் அமைப்பு, வாக்கிய அமைப்பு, தவறை கண்டறிதல், சொற்றொடரை மாற்றுதல்,  வாக்கியத்தை  நிறைவு செய்தல்,  எழுத்துப்பிழைகள், ஒத்த சொற்கள்/எதிர்ச்சொற்கள். போன்ற வினாக்கள் கேட்கப்படும்.

ii) இந்திய சுதந்திரப் போராட்டம். ஆரம்பகால எழுச்சிகள், 1857 கிளர்ச்சி-காரணங்கள், தன்மை, போக்கு மற்றும் விளைவு, தேசிய உணர்வு வளர்ச்சி, சங்கங்களை உருவாக்குதல், இந்திய தேசிய காங்கிரஸின் ஸ்தாபனம் மற்றும் அதன் மிதமான நிலை, சுதேசி இயக்கம், பொருளாதார தேசியவாதம், தீவிரவாதத்தின் வளர்ச்சி மற்றும் காங்கிரஸில் பிளவு, பிரித்து ஆட்சி செய்யும் கொள்கை, காங்கிரஸ்-லீக் ஒப்பந்தம் 1916,

கர்நாடகப் போர்கள், வங்காளப் படையெடுப்பு. மைசூர் மற்றும் பிரிட்டிஷ் விரிவாக்கத்துடன் அதன் மோதல்: மூன்று ஆங்கிலோ-மராத்தா போர்கள். ஒழுங்குபடுத்துதல் மற்றும் பிட்டின் இந்தியா சட்டங்கள். பிரிட்டிஷ் அரசின் ஆரம்பகால அமைப்பு.

பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான போராட்டம்:

ஆரம்பகால எழுச்சிகள், 1857 கிளர்ச்சி-காரணங்கள், தன்மை, போக்கு மற்றும் விளைவு, இந்திய சுதந்திரப் போராட்டம் முதல் கட்டம்: தேசிய உணர்வு வளர்ச்சி; சங்கங்களை உருவாக்குதல்; இந்திய தேசிய காங்கிரஸின் ஸ்தாபனம் மற்றும் அதன் மிதமான நிலை; சுதேசி இயக்கம்; பொருளாதார தேசியவாதம்; தீவிரவாதத்தின் வளர்ச்சி மற்றும் காங்கிரஸில் பிளவு; பிரித்து ஆட்சி செய்யும் கொள்கை; காங்கிரஸ்-லீக் ஒப்பந்தம் 1916.

காந்திய சிந்தனைகள் மற்றும் மக்கள் அணிதிரட்டலின் நுட்பங்கள்:

கீழ்ப்படியாமை, கிலாபத் இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் மற்றும் வெள்ளையனே வெளியேறு இயக்கம்; தேசிய இயக்கத்தின் மற்றொரு இழை - புரட்சியாளர்கள், சுபாஷ் சந்திர போஸ் மற்றும் இந்திய தேசிய இராணுவம்.

iii) நடப்பு நிகழ்வுகள் : கடந்த ஒரு ஆண்டில் நடந்த முக்கிய அரசியலியல், பொருளாதார நிகழ்வுகள், அறிவியல் நடப்பு நிகழ்வுகள்.  பொதுமக்களின் நலனுக்காக அரசாங்கம் வெளிப்படுத்திய திட்டங்களையும் வளர்ச்சிப் பிரச்சினைகள் உள்ளடக்குகின்றன.

iv) இந்திய அரசியல் & பொருளாதாரம்: வரலாற்று அடிப்படைகள், பரிணாமம், அம்சங்கள், திருத்தங்கள், யூனியன் மற்றும் மாநிலங்கள், நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள் - கட்டமைப்பு, செயல்பாடு, வணிகம், அதிகாரங்கள் மற்றும் சலுகைகள் மற்றும் இவற்றில் இருந்து எழும் பிரச்சினைகள், பாதிக்கப்படக்கூடியவர்களுக்கான நலத்திட்டங்கள் மையம் மற்றும் மாநிலங்களின் மக்கள் பிரிவினர் மற்றும் இந்தத் திட்டங்களின் செயல்திறன், நிர்வாகத்தின் முக்கிய அம்சங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல், மின்-ஆளுமை- பயன்பாடுகள், குடிமக்கள் சாசனங்கள், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் மற்றும் நிறுவன மற்றும் பிற நடவடிக்கைகள். பஞ்சாயத்து ராஜ், பொதுக் கொள்கை, உரிமைகள் பிரச்சினைகள் அடங்கும்.

இந்தியப் பொருளாதாரம்:

பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு - பொருளாதாரம் மற்றும் பொருளாதாரத்தின் அடிப்படைக் கருத்து மற்றும் வரையறை, வளங்களின் பயன்பாடு மற்றும் பரிமாற்றம், விநியோக விளைவுகள், மேக்ரோ மற்றும் மைக்ரோ பொருளாதாரக் கொள்கை, மைக்ரோ-மேக்ரோ சமநிலை, பொருளாதாரக் கொள்கைகளின் விநியோக தாக்கம், உள்ளடக்கம் - வரையறை, பொருத்தம், வகைகள், நிதி உள்ளடக்கம், சமீபத்திய முயற்சிகள். நிதிக் கொள்கை - வரையறை, கூறு, ரசீதுகள், வருவாய் மற்றும் மூலதன கணக்கு, வரி வருவாய், செலவு, பட்ஜெட்.

v) பொது கணக்கியல் கோட்பாடுகள்: கணக்கியல் கொள்கைகள், பகுப்பாய்வு செய்தல் & பதிவு செய்தல் பரிவர்த்தனைகள், சரிசெய்தல் & நிதி அறிக்கைகள், கணக்கியல் சுழற்சிகளை நிறைவு செய்தல், துணை லெட்ஜர்கள் மற்றும் சிறப்பு சட்டங்கள் அனைத்தும் அடங்கும்.

vi) தொழில்துறை விதிகள்,  மற்றும் தொழிலாளர் சட்டங்கள், தொழில்துறை உறவுகள் குறியீடு (IRC) மசோதா, தொழிலாளர் சீர்திருத்தங்களின் மாதிரி.

vii) பொது அறிவியல் மற்றும் கணினி பயன்பாடுகளின் அறிவு:  பள்ளி அளவிலான இயற்பியல், வேதியியல், வாழ்க்கை அறிவியல் பாடங்கள் படிக்க வேண்டும். கணினி நிறுவனங்கள், இயக்க முறைமைகள், தரவுத்தள மேலாண்மை, தரவு கட்டமைப்புகள், தரவுத் தொடர்புகள், கணினி நெட்வொர்க்குகள்

viii) பொது மனதிறன் மற்றும் அளவு திறன்:  எண் அமைப்புகள், சதவீதம், லாபம் மற்றும் இழப்பு, சராசரி விகிதம், SI & CI மற்றும் எண்கணித கேள்விகள். தரவு விளக்கம் (விளக்கப்படங்கள், வரைபடங்கள், அட்டவணைகள்), தரவு போதுமான அளவு சிலோஜிசம், புதிர்கள் மற்றும் பல.

ix) இந்தியாவில் சமூக பாதுகாப்பு: சமூகப் பாதுகாப்பு என்றால் என்ன?, சமூகப் பாதுகாப்பின் வரலாறு, இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு, சமூகப் பாதுகாப்பு: அரசியலமைப்பு விதிகள் ஒருங்கிணைந்த பட்டியல், மாநிலக் கொள்கையின் பகுதி IV வழிகாட்டுதல் கோட்பாடுகள், இந்தியாவில் ஒழுங்கமைக்கப்பட்ட மற்றும் அமைப்புசாரா துறைகளுக்கு இடையிலான வேறுபாடு சமூக பாதுகாப்புச் சட்டங்கள், ஊழியர்களின் மாநில காப்பீட்டுச் சட்டம், 1948 (ESI சட்டம்), ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிச் சட்டம், 1952, தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம், 1923 (WC சட்டம்), மகப்பேறு நலச் சட்டம், 1961 (MB சட்டம்), பணிக்கொடைச் சட்டம், 1972 (PG சட்டம்), இந்தியாவில் சமூகப் பாதுகாப்பு, வருங்கால வைப்பு நிதி. தொடர்பான தகவல்களை படிக்க வேண்டும்



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news