Agri Info

Adding Green to your Life

June 5, 2023

கோவை மாவட்ட நல்வாழ்வு சங்கத்தில் பல்வேறு காலியிடங்கள்: உடனே விண்ணப்பியுங்கள்

June 05, 2023 0

 

கோயம்பத்தூர் மாவட்ட நல் வாழ்வு சங்கம் மூலம் ஒப்பந்த அடிப்படையில் முற்றிலும் தற்காலிக காலி பணியிடத்திற்க்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Ads by 
காலிப் பணியிடங்கள்எண்ணிக்கை வயது வரம்பு 
Programme cum Administrative Assistant145 Years
Optometrist135 Years
IT- Coordinator (LIMS)135Years
District Quality Consultant145 Years
IT- Coordinator135Years
Data Entry Operator (NRHM)221-35 Years

விண்ணப்பிக்க கடைசி நாள் : 12.06.2023 மாலை 5.00 மணி.

விண்ணப்பம் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி:-

உறுப்பினர் செயலர்/துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்

மாவட்ட நல்வாழ்வு சங்கம்

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்

219, பந்தய சாலை

கோயம்புத்தூர் – 641018.

தொலைபேசி எண்: 0422-2220351

நிபந்தனைகள்:

நிபந்தனைகள்:

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.

2.எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது

3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை coimbatore.nic.in என்ற   இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை வேலைவாய்ப்பு அறிவிப்பில் மூலம் படித்து தெரிந்து கொள்ளலாம்

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8-ம் வகுப்பு முதல் MBBS வரை.... தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையில் தகுதிக்கேற்ற பல்வேறு வேலைவாய்ப்பு

June 05, 2023 0

 Tamil Nadu Government Jobs: கோவை மாசாணியம்மன் திருக்கோயிலில் அமைக்கப்படவுள்ள மருத்துவ மையத்தில் மருத்துவ அலுவலர், செவிலியர் பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் ஆகிய பணிகளுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் எதிர்வரும் 11ம் தேதி (11.06.2023) ஆகும்.

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காத்திருக்காமல் போதிய கால இடைவெளி இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்:

பதவியின் பெயர்வயதுகல்வித்தகுதிஒப்பந்த ஊதியம்
மருத்துவ அலுவலர் (Medical Officer ) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்MBBSரூ.75,000/-
செவிலியர் (Staff Nurse) 2 பதவிகள்1.07.2023 அன்று 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்DGNM ( DiplomaIn General NursingMidwife )ரூ.14,000/-
பல்நோக்கு மருத்துவ பணியாளர்கள் (Multi Purpose hospital worker/ Attender)2 பதவிகள்1.07.2023 அன்று 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்8ம் வகுப்புத் தேர்ச்சி மற்றும் தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்ரூ.6,000

மேற்கண்ட விவரப்படியான காலிப்பணியிடங்களுக்கு தகுதியுள்ள இந்து சமயத்தைச் சார்ந்த நபர்களிடமிருந்து 11.06.2023 மாலை 5.45 மணி வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலியிடங்கள் விவரம், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை  இந்து அறநிலையத் துறை தேர்வு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை இங்குபதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பொது நிபந்தனைகள்:

இந்து மதத்தை சார்ந்தவராகவும், தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் 01.07.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும் இருக்க வேண்டும்.

தொற்று நோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள், நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

நன்னடத்தை உடையவராக இருக்க வேண்டும். இதற்கு அரசிதழ் பதிவு பெற்ற அரசு உயரதிகாரிகளிடமிருந்து பெறப்பட்ட நன்னடத்தைச் சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.

இந்த வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடும் தேதிக்கு முன்னதாக வரப்பெற்ற விண்ணப்பங்களும், 11.06.2023-ம் தேதி மாலை 05.45 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விவரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.

வரப்பெற்ற விண்ணப்பங்கள் அனைத்தும் சரிப்பார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு பட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.

விண்ணைப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் அரசு பதிவு பெற்ற அலுவலர் சான்றொப்பம் பெறப்பட்ட புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் அனுப்ப கூடாது.

விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை நேரிலோ அல்லது hrce.tn.gov.in என்கிற இணையதள முகவரியில் மூலமோ ஆன்லைன் மூலம் பதிவிறக்கம் செய்து கொன்னைம்.

விண்ணப்பதாரர் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி உதவி ஆணையர் / செயல் அலுவலர்,  அருள்மிகு மாசாணியம்மன் திருக்கோயில், ஆனைமலை நகர் மற்றும் வட்டம், கோவை மாவட்டம் 642 104 ஆகும்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ இனி நடைபெறுமா? ஐடி நிறுவனங்களின் புதிய முடிவு இதுதானா?

June 05, 2023 0

  

இன்றைய நிலையில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் கடுமையான நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றன. தகவல் தொழில்நுட்பத்துறை முன்னர் எப்போதும் இல்லாத வகையில் மிகப்பெரிய சவால்களை சந்தித்து வருகிறது. ஆயிரக்கணக்கான பணியாளர்கள் தங்களது வேலையை இழந்துள்ளனர். மேலும் கல்லூரிகள் மூலம் பணியாளர்களை தேர்வு செய்து வந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்த ஆண்டில் அதனை 40% குறைக்க உள்ளதாக மற்றொரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்.

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் இத்தகைய நெருக்கடியை சந்தித்து வருவதற்கு பொருளாதார நெருக்கடி மட்டுமின்றி இந்தியாவில் அதிகரித்துள்ள போட்டியும் முக்கிய காரணமாகும். மேலும் செலவை குறைக்கும் பொருட்டு சிறு நிறுவனங்கள் மட்டுமின்றி மிகப்பெரும் டெக் ஜாம்பவான்களான கூகுள், மைக்ரோசாப்ட் ஆகிய நிறுவனங்களும் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன. இவை அனைத்தையும் ஒட்டுமொத்தமாக மனதில் வைத்து டீம் லீஸ் டிஜிட்டல் நிறுவனமானது சமீபத்தில் புதிய சர்வே ஒன்றை எடுத்துள்ளது.

அதாவது 2023 - 2024 ஆம் நிதியாண்டில் கல்லூரிகள் மூலம் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்யும் விகிதமானது கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 40 சதவீதமாக குறைக்கப்படும் என தெரியவந்துள்ளது. அதாவது இந்த நிதி ஆண்டில் 1,55,000 எண்ணிக்கையிலான புதிய பணியாளர்கள் கல்லூரி வளாகங்களின் மூலம் இருந்து தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இதுவே கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் கல்லூரி வளாகங்களின் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,30,000 ஆகும்.

விப்ரோவின் மூத்த அதிகாரியான சவுரப் கோவில் கூறுகையில், விப்ரோ ஏற்கனவே யார் யாருக்கெல்லாம் பணியமர்த்தல் ஆணைகளை அளித்துள்ளதோ அவர்களில் பெரும்பாலானோரை இன்னமும் கூட பணியில் சேர்க்க முடியாத சூழ்நிலை இருப்பதாகவும், அவர்களை பணியமர்த்துவதற்கே முக்கியத்துவம் கொடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இதன் காரணமாக இந்த ஆண்டு கல்லூரிகளில் இருந்து புதிதாக தேர்வு செய்யப்படும் பணியாளர்களின் எண்ணிக்கை கணிசமாக குறைக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், சென்ற ஆண்டு இருந்த நிலைமையை போல் இந்த ஆண்டு இல்லை என்றும், தேவைக்கு முன்னதாகவே பணியாளர்களை பணியமர்த்தும் விகிதமானது தற்போது மிகவும் கவனமாக கையாளப்படுகிறது என்றும் பொருளாதாரம் நெருக்கடி போன்றவையும் கணக்கில் வைத்து மிகவும் எச்சரிக்கையாக இதை அணுக வேண்டியிருப்பதாகவும் சவுரப் கோவில் தெரிவித்துள்ளார்.

மேலும், விப்ரோ போன்ற பெரும் நிறுவனங்கள் ஏற்கனவே வெளியிட்ட பணியமர்த்தல் ஆணைகளை திரும்ப பெறவோ அல்லது திருத்தி அளிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன. முன்னர் இருந்த சம்பளத்தை விட குறைவான சம்பளத்திற்கு பணியாளர்களை பணியில் சேரும்படி அவர்கள் ஆணைகளை திருத்தி அளித்துள்ளார்கள். புதிதாக பணியில் சேரும் பணியாளர்களும் வேறு வழி இன்றி அவற்றை ஏற்றுக் கொள்ளும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இதைப் பற்றி பேசிய விப்ரோவின் தலைமை நிதி நிர்வாகியான ஜதின் தலால் கூறுகையில், கிட்டத்தட்ட 92 சதவீதத்திற்கும் அதிகமான புதிய பணியாளர்கள் குறைந்த சம்பளத்துடன் பணியில் சேர்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்கள் என்று கூறியுள்ளார். விப்ரோவின் அனைத்து நடவடிக்கைகளும் மிகவும் நேர்மையுடனும் வெளிப்படை தன்மையுடனும் நடத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

June 3, 2023

Nabfins நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விண்ணப்பியுங்கள்!

June 03, 2023 0

 

திருவாரூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மாதம் ரூ.50,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Office Assistant பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

DCDRC காலிப்பணியிடங்கள்:

District Consumer Disputes Redressal Commission ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Office Assistant பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

DCDRC வயது வரம்பு:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 37 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DCDRC கல்வி தகுதி:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசால் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 08ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DCDRC ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.15,700 /-முதல் ரூ.50,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

DCDRC தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் நபர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

DCDRC விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

June 03, 2023 0

 

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Webchat பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள்(31.07.2023) முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS iBegin நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Webchat பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

TCS கல்வி தகுதி:

TCS iBegin நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor degree பெற்றிருக்க வேண்டும்.

TCS அனுபவ விவரம் :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 01 ஆண்டு முதல் அதிகபட்சம் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாதம் ஊதியம் வழங்கப்படும்.

TCS தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

TCS விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் (31.07.2023) தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification  & Apply Online Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

June 03, 2023 0

 

Indigo Airlines நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- ஆன்லைனில் விண்ணப்பிக்க முந்துங்கள்!

Indigo Airlines நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதி, வயது மற்றும் ஊதியம் போன்ற தகவல்களை கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo Airlines நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இண்டிகோ ஏர்லைன்ஸ் கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த ஏதேனும் பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo Airlines அனுபவ விவரம் :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 03-07 ஆண்டுகள் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Indigo Airlines ஊதிய விவரம் :

Indigo Airlines நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indigo Airlines விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியும் ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிமையாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஹாப்பி ஹார்மோனை அதிகரித்து மன அழுத்தத்தை போக்கும் ‘சில’ உணவுகள்!

June 03, 2023 0

தற்காலத்தில் பிஸியான வாழ்க்கை மற்றும் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் என்பது ஒரு பொதுவான பிரச்சனையாகி வருகிறது. மன அழுத்தம் உடலில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. இதன் காரணமாக, உங்களுக்கு சோர்வு, தசை வலி, மார்பு வலி, பாலியல் ஆரோக்கியத்தில் மோசமான பாதிப்பு, கவனம் இல்லாமை, பசியின்மை, கோபம், எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம். கோபம், சந்தோஷம், பயம், துக்கம் போன்ற உணர்வுகள் அனைத்தும் மனித உடம்பில் சுரக்கும் ஹார்மோன்கள் செய்யும் மாயம் தான். செரடோனின் எனப்படும் ஹார்மோன் சரியாக சீராக சுரந்தால் மனதில் மகிழ்ச்சி அதிகரித்து, மன அழுத்தம் மறையும். இதனை சந்தோஷ ஹார்மோன் அல்லது ஹாப்பி ஹார்மோன் என்றும் அழைக்கிறார்கள். செரடோனின் ஒருவரின் மனநிலையை சந்தோஷமாக வைத்துக் கொள்வதோடு, பாலுணர்ச்சியையும் தூண்டுகிறது.

மன அழுத்தத்தை கவனிக்காமல் அலட்சியப்படுத்தினால், அது உங்களை மனநோயாளியாகவும் மாற்றும். மன அழுத்தத்தைத் தவிர்க்க, உங்கள் உணவில் கவனம் செலுத்த வேண்டும். முக்கியமாக மூளையில் மகிழ்ச்சியான ஹார்மோன்களை நிரப்புவதன் மூலம் மன அழுத்தத்தையும் பதட்டத்தையும் போக்க  சில உணவுகள் உதவுகிறது என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். 

வைட்டமின் பி அதிகம் உள்ள உணவுகள்

கொண்டைக்கடலை மற்றும் இலை கீரைகள் போன்ற பி வைட்டமின்கள் கொண்ட உணவுகளை உட்கொள்வது மன அழுத்தத்தை சமாளிக்க உதவும். அழுத்தமாக இருக்கும்போது, ​​​​உங்கள் உடல் பி வைட்டமின்களை அதிகம் பயன்படுத்த முனைகிறது என்கின்றனர் வல்லுநர்கள்.

கடிக்க கடினமான பச்சை காய்கறிகள்

செலரி அல்லது கேரட் போன்ற கடித்து சாப்பிட சிறிது கடினமான பச்சை காய்கறிகளை சாப்பிடுவது மன அழுத்தத்தை பெருமளவு குறைக்க உதவும்.

வாழைப்பழம்

வாழைப்பழம் மிக விரைவாக ஜீரணிக்கக்கூடிய பழமாகும். மேலும் அதில் டிரிப்டோபான் என்ற அமினோ அமிலமும் உள்ளது. உடலில் 5-HTP அளவை அதிகரிக்க டிரிப்டோபானைப் பயன்படுத்துகின்றனர். வாழைப்பழம் சிறந்த தூக்கத்தையும் கொடுக்கிறது

பச்சை இலை காய்கறிகள்

பச்சை இலைக் காய்கறிகள் மெக்னீசியத்தின் நல்ல மூலமாகும் மற்றும் அவற்றை தொடர்ந்து உட்கொள்வது மன அழுத்தம் மற்றும் பதட்டத்தை எதிர்த்துப் போராட உதவும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்

வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகிறது. இது தவிர, இது மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கும்.

லைட்டான உணவு

பருப்பு மற்றும் அரிசி போன்ற லைட்டான மற்றும் எளிதில் ஜீரணிக்கக்கூடிய உணவுகளை சாப்பிடுவது மகிழ்ச்சியான ஹார்மோனான செரோடோனின் அளவை அதிகரிக்கவும், பசியைக் குறைக்கவும் உதவும்.

பாதாம்​ பருப்பு

பாதாம் ஒரு உலர் பழம், இதில் ஏராளமான ஃபோலேட் மற்றும் மெக்னீசியம் உள்ளது. மெக்னீசியம் செரோடோனின், அத்துடன் வைட்டமின் பி2 மற்றும் ஈ (வைட்டமின் பி 2 & ஈ) பாதாம் பருப்பில் அதிக அளவில் உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தையும் பலப்படுத்துகிறது.

வைட்டமின் ஈ கொண்ட உணவுகள்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் ஈ நிறைந்த பாதாம் மற்றும் மன அழுத்தத்திற்கு பி வைட்டமின்கள் கொண்ட உணவுகளை சாப்பிடுங்கள். இது தவிர, மூளை சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடுவதன் மூலம் அதிக செரோடோனினை உருவாக்குகிறது.

சோயா பொருட்கள்

சோயா பொருட்களிலும் டிரிப்டோபான் அதிகம் உள்ளது. இது சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். அதே போல் சோயா பால், சோயா பனீர் (டோஃபு), சோயா தயிர் போன்ற உணவுகளை டயட்டில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவலுக்காக மட்டுமே. இது எந்த வகையிலும் எந்த மருந்துக்கும் அல்லது சிகிச்சைக்கும் மாற்றாக இருக்க முடியாது. மேலும் விவரங்களுக்கு எப்போதும் உங்கள் மருத்துவரை அணுகவும்.

பெண்களுக்கான 5 சூப்பர் உணவுகள்..! நோய்களை பற்றி கவலைப்படாதீங்க..!

June 03, 2023 0

 நல்ல உணவு ஒவ்வொருவரின் ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. உணவு நம் உடலின் தேவைகளை பூர்த்தி செய்து ஆற்றலை அளிக்கிறது. சத்தான உணவுகளை சரியான அளவில் உட்கொள்வதன் மூலம் நீண்ட காலம் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க முடியும். ஆண் மற்றும் பெண் இருவருக்கும் வெவ்வேறு அளவு ஊட்டச்சத்துக்கள் தேவைப்படுகின்றன. சில உணவுகள் ஆண்களின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.சில உணவுகள் பெண்களின் ஆரோக்கியத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்தவகையில், பெண்களை நோய்களில் இருந்து பாதுகாத்து ஃபிட்டாக வைத்திருக்கும் அத்தகைய சூப்பர் உணவுகளை பற்றி பார்க்கலாம். 

பருப்பு வகைகளை பெண்களுக்கு சூப்பர் உணவுகளாக கருதலாம். அவற்றில் நிறைய புரதம் மற்றும் நார்ச்சத்து உள்ளது. சைவ உணவு உண்பவர்கள் தங்கள் உணவில் பீன்ஸை சேர்த்துக்கொள்ள வேண்டும். WebMD-ன் அறிக்கையின்படி, பருப்பு வகைகளை உட்கொள்வது இரத்த அழுத்தம், இதய துடிப்பு மற்றும் இரத்த சர்க்கரையை குறைக்க உதவுகிறது. இந்த நிலைமைகள் அனைத்தும் இதய நோயை ஏற்படுத்துகின்றன. அமெரிக்காவில் பெண்களின் இறப்பிற்கு இதய நோய் தான் மிகப்பெரிய காரணம்.

பழங்கள்

பெண்கள் தங்கள் உணவில் பப்பாளி, திராட்சைப்பழம், பெர்ரி மற்றும் செர்ரிகளை சேர்க்க வேண்டும். திராட்சைப்பழம் பெண்களுக்கு சில வகையான பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். பெர்ரி மற்றும் செர்ரிகளில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன, அவை ஆரோக்கியமான செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்கும். நீங்கள் வயதாகும்போது உங்கள் மனதை கூர்மையாக வைத்திருக்க பெர்ரி உதவுகிறது. இதுவும் சருமத்தை இளமையாக வைத்திருக்கும். பப்பாளி கர்ப்பப்பை வாய் மற்றும் மார்பக புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது. கொலஸ்ட்ராலையும் பப்பாளி கட்டுப்படுத்துகிறது.

தயிர் 

50 வயதிற்குப் பிறகு, பெண்களுக்கு அதிக கால்சியம் தேவைப்படுகிறது. இது தயிரில் ஏராளமாக உள்ளது. உங்கள் உணவில் ஒரு கிண்ணம் தயிர் சேர்த்துக்கொள்ளலாம். இதன் காரணமாக, உங்கள் உடலில் கால்சியம் குறைபாடு ஏற்படாது மற்றும் எலும்புகள் வலுவாக இருக்கும். மனதில் கொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால், பெண்கள் குறைந்த கொழுப்புள்ள தயிர் அல்லது சாதாரண தயிர் சாப்பிட வேண்டும். குறைந்த கொழுப்புள்ள பாலையும் சாப்பிடலாம்.

ஆளிவிதை

ஆளிவிதை பெண்களுக்கு சூப்பர் உணவாக கருதப்படுகிறது. இந்த சிறிய விதைகளில் நிறைய நார்ச்சத்து உள்ளது, இது மார்பக புற்றுநோயிலிருந்து பெண்களைப் பாதுகாப்பதில் உதவியாக இருக்கும். ஆளிவிதை எண்ணெய் ஒமேகா-3 பெற ஒரு நல்ல வழி. ஆளி விதைகளை சாலட் அல்லது தயிரில் கலந்து சாப்பிடலாம். ஆளி விதைகள் கொலஸ்ட்ரால் பிரச்சனையில் இருந்து நிவாரணம் அளிப்பதில் ஒரு சஞ்சீவி என நிரூபிக்க முடியும்.

பசலைக்கீரை 

கீரையில் ஃபோலேட் உள்ளது. இது பெண்களின் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று கருதப்படுகிறது. கீரை இதய நோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது. கீரையில் ஃபோலேட்டுடன் லுடீனும் உள்ளது. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட் உங்கள் கண்களில் உள்ள லென்ஸ் மற்றும் விழித்திரையை பாதுகாக்கிறது. இதனுடன், சருமத்தில் உள்ள சுருக்கங்களையும் நீக்கும். கீரையிலும் நல்ல அளவு கால்சியம் உள்ளது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முகத்தின் அழகை கெடுக்குமா டீ? அசர வைக்கும் உண்மையை தெரிந்துக்கொள்ளுங்கள்

June 03, 2023 0

 காஃபின் உங்கள் சருமத்தை கருமையாக்குமா: சிறுவயதில் டீ குடிக்க வேண்டும் என்று கேட்கும் போது, ​​டீ குடித்தால் சருமம் கருப்பாகிவிடும் என்று சொல்லி பயமுறுத்துவார்கள் பெற்றோர்கள். இந்த பயத்தின் காரணமாக, பல குழந்தைகள் டீயைத் தவிர்க்கத் தொடங்கிவிடுவார்கள். அத்தகைய சூழ்நிலையில் தேயிலைக்கும் தோலின் நிறத்திற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்பதை இன்று ணாம் இந்த கட்டுரை மூலம் தெரிந்துக்கொள்வோம்.

டீ குடித்தால் முகம் கருமையாகுமா?
இந்தியாவில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிகமாக உட்கொள்ளும் பானங்களில் ஒன்று தேநீர். மக்கள் காலையில் எழுந்தது முதல் மாலை ஓய்வு நேரம் வரை தேநீருக்கு ஏங்குகிறார்கள். டீ குடிப்பதால் வயிற்று வலி, தூக்கமின்மை மற்றும் சர்க்கரை நோய் உள்ளிட்ட பல தீமைகள் உள்ளன என்பதை பெரும்பாலான மக்கள் அறிந்திருப்பார்கள், ஆனால் இதை குடிப்பதன் மூலம் சருமம் கருமையாக மாறும் என்று உங்களுக்கு தெரியுமா?

குழந்தை பருவத்தில், குழந்தைகள் தேநீர் குடிக்கக்கூடாது என்று கூறப்படுகிறது, ஏனெனில் அதில் காஃபின் உள்ளது, இது சிறு குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நிரூபிக்கிறது, ஆனால் அதே குழந்தைகள் வளர்ந்த பிறகும் அதை உண்மை என்று நம்புகிறார்கள். டீ குடிக்கும் பழக்கம் இல்லாதது நல்லதுதான், ஆனால் தேவையில்லாமல் வாழ்நாள் முழுவதும் வதந்தியை சுமந்து செல்வது சரியல்ல.

தேயிலையால் சருமத்தின் நிறம் கருப்பாக மாறும் என்பதற்கு இதுவரை அறிவியல் சான்றுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தோல் பராமரிப்பு நிபுணர்களின் கூற்றுப்படி, தோலின் நிறம் உங்கள் மரபியல், வாழ்க்கை முறை, வெளிப்புற நடவடிக்கைகள் மற்றும் சருமத்தில் மெலனின் இருப்பதைப் பொறுத்தது. எனவே இதுபோன்ற வதந்திகளைப் பரப்பாமல் இருப்பது நல்லது.

அதிக அளவு டீ குடிப்பதால் ஏற்படும் தீமைகள்

* நீண்ட நாட்களாக காஃபியை அருந்தி வருபவர்களுக்கு, வயது முதிர்வு ஏற்படும் போது ஒருவித நடுக்கம் ஏற்படும். ஏனெனில் தேநீர் தூளிலும் காஃபைன் இருப்பதே முக்கிய காரணம். அதனால் முடிந்தவரை டீயை அளவுடன் பருகுவதை பழக்கமாக்கிக் கொள்ளுங்கள். அதேபோல் உடலில் பதற்றம், சோர்வு உணர்வு ஏற்படுவது உள்ளிட்ட அறிகுறிகளும் ஏற்படக்கூடும்.

* இயற்கையாகவே தேநீரில் காஃபைன் இருப்பதால், அதை அதிகளவில் உட்கொள்வது உங்களுடைய தூக்கச் சங்கலியை பாதிக்க தொடங்கும். நம் மூளைக்கு உறங்க வேண்டும் என்பதை உணர்த்துகிற ஹார்மோன் தான் மெலடோனின். இதுதொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகளில், காஃபின் மெலடோனின் செயல்பாட்டை தடுப்பது தெரியவந்துள்ளது. 

* மிதமஞ்சிய அளவில் டீ குடிப்பது அல்லது வெறும் வயிற்றில் டீ அருந்துவது எதுக்களித்தல் பிரச்னையை உருவாக்கும். இதனால் வயிற்றுள்ள அமிலத்தின் செயல்பாடு அதிகரித்து, வயிற்றில் எரிச்சல் ஏற்படும். 

* நமது உடல் காஃபைனை எளிதாக உள்ளிழுத்துக்கொள்ளும். இதன்காரணமாக மூளையில் ஏதாவது பிரச்னை ஏற்படும். காஃபின் ஒரு தூண்டுதலாகக் கருதப்படாவிட்டாலும், அது நமது மூளையில் சில செயல்பாட்டை தடுக்கிறது. இதனால் மூளை கூடுதலாக டோபமைன் மற்றும் எண்டோர்பின்களை வெளியிட வழிவகுக்கும். 

* தேநீரில் காஃபைன் இருப்பதால் தலைவலியை ஏற்படுத்தும். ஒரு நாளில் பலமுறை டீ குடிக்கும் பழக்கம் இருந்தால், காஃபைன் இருப்பதன் காரணத்திற்காகவே தலைவலியை நீடித்து இருக்கும். அதிக டீ குடிப்பதால், காஃபின் மூளையைச் சுற்றியுள்ள ரத்த நாளங்களை சுருக்கி விடுகிறது. அதன்காரணமாகவே தலைவலி ஏற்படுகிறது. 

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த ஜூன் மாதம் இந்தியாவில் பார்க்கவேண்டிய டாப் 5 ஸ்பாட்ஸ்..!

June 03, 2023 0

 வெளிநாட்டில் இருக்கும் இடங்களை போலவே நமக்கு அதிகம் தெரியாத சில சூப்பர் ஸ்பாட்கள் உள்ளன. அப்படி  இந்த ஜூன் மாதம் செல்லக்கூடிய சில ஸ்பாட்களை உங்களுக்கு அடையாளம் காட்டுகிறோம்.

மேற்கு வங்காளத்தில் உள்ள லாவா நகரம் பசுமையான காடுகள் , ட்ரெக்கிங் தலங்கள், வெளிநாட்டு பறவைகளை பார்ப்பது என்று பலவகையான செயல்பாடுகளுக்கு ஏற்றது. மடாலயங்கள் முதல் நீர்வீழ்ச்சிகள், அரிய சிவப்பு பாண்டாக்கள், காஞ்சன்ஜங்காவின் மயக்கும் காட்சிகள், தொங்கும் பாலங்கள், கதிரியக்க ரோடோடென்ட்ரான்கள் வரை, லாவாவிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிறைய இடங்கள் உள்ளன.

லே மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அழகான கிராமம் தான் ஹெமிஸ். இந்த கிராமம் அதன் அழகான மற்றும் புகழ்பெற்ற ஹெமிஸ் மடாலயத்திற்கு புகழ்பெற்றது. இந்த இடத்தில் ஹெமிஸ் தேசிய பூங்கா உள்ளது, அங்கு நீங்கள் பனிச்சிறுத்தைகள், லாங்கர்கள், ஓநாய்கள், சிவப்பு நரிகள், மான்கள் மற்றும் மர்மோட்களின் ஒரு பார்வையைப் பிடிக்கலாம். இமையமலைகள் சூழ்ந்த அழகிய கிராமம் அது.

கர்நாடகாவில் உள்ள மற்றொரு அழகிய இடம் நாகர்ஹோல் தேசிய பூங்கா. 847.981 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் இங்கு புலி, சிறுத்தை, ஆசிய காட்டு நாய் , கரடி, கவுர், சாம்பார், சிட்டல், முண்ட்ஜாக்,  லாங்கூர் உள்ளிட்ட வனவிலங்குகளை சஃபாரி செய்து பார்க்கலாம். இது வயநாடு வனவிலங்கு சரணாலயம் (கேரளா) மற்றும் பந்திப்பூர் புலிகள் காப்பகத்துடன் இணைந்துள்ளது. கபினி மற்றும் தாரகா நீர்த்தேக்கங்கள் குளுகுளு அனுபவம் தரும். உடையார் வம்சத்தின் வேட்டையாடும் இடமாக இருந்த இடத்தை பார்க்க வேண்டாமா!

புன்னமடா என்றும் அழைக்கப்படும் வேம்பநாடு நமக்கு மிக அருகில் உள்ள அட்டகாசமான ஸ்பாட். கோட்டயத்தின் அனைத்து ஆறுகள் மற்றும் கால்வாய்கள் இணையும் இந்த ஏறி சுமார் 96.5 கிமீ நீளம் கொண்டது, இது இந்தியாவின் மிக நீளமான ஏரி இது தானாம். செழுமையான இயற்கை அழகுடன் அரேபிய கடல் அருகில் அமைந்துள்ளது, கடலில் இருந்து ஏரியை பிரிக்கும் ஒரு குறுகிய பாறை அமைப்பு கூட உள்ளது. இங்கு படகு சவாரி, மீன்பிடித்தல் போன்றவற்றை நிச்சயம் செய்ய வேண்டும்.

உத்தர் கர்நாடகா மாவட்டத்தில் அரபிக்கடலை ஒட்டிய கடற்கரை நகரம் தான் கும்டா. பிரபல கடற்கரையான கோகர்ணாவிலிருந்து 31 கிமீ தொலைவில் உள்ளது. இங்கு கடற்கரை தாண்டி மிர்ஜான் கோட்டை, யானா குகைகள், கோர் கோபாலகிருஷ்ணா கோவில், நிர்வாண கடற்கரை, பாடா கடற்கரை ஆகியவற்றை பார்க்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

டீ-யுடன் வெல்லம் சேர்த்து சாப்பிடக் கூடாதாம்... ஏன் தெரியுமா..?

June 03, 2023 0

 சுட்டெரிக்கும் கோடை வெயில் காலத்தில் கூட, டீ-யை விட்டுக் கொடுக்காத அளவுக்கு டீ பிரியர்களாக இருப்பவர்கள் நம் மக்கள். அதிகாலைப் பொழுதில் எழுந்தவுடன் ஆவி பறக்க, மணமிக்க ஒரு டீ அருந்தாவிட்டால் அன்றைய பொழுதே நகராது நமக்கு.

ஒவ்வொரு நாட்டிலும் டீ-யில் என்னென்ன சேர்க்கப்படுகிறது என்பது வேறுபடுகிறது. பால் சேர்க்காமல் தயாரிப்பதுதான் ஒரிஜினல் டீ என்று பலர் வாதிடுவார்கள்.

அதில் உண்மை இருக்கவும் செய்கிறது. ஆனால், இனிப்பு சேர்க்காத டீ குறித்து நாம் சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டோம். நீரிழிவு நோயாளிகள் கூட அரை அளவு சர்க்கரை சேர்த்துக் கொள்வது தான் வழக்கம். சிலர் வெல்லம் சேர்த்துக் கொள்வார்கள். டீ உடனான நம் பந்தம் இந்த அளவுக்கு நெருக்கமாக இருக்கும் நிலையில், டீ-யில் வெல்லம் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று ஆயுர்வேதம் பரிந்துரை செய்கிறது என்று சொன்னால் உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும் அல்லவா!

தவறான உணவு சேர்க்கைகள்: ஒவ்வொரு உணவுப் பொருளின் மனமும், சுவையும் வெவ்வேறானது என்று நமக்கு தெரியும். ஆனால், பல வகை உணவுகளை சேர்த்து சாப்பிடுவது நம் பழக்கமாக உள்ள நிலையில், சில உணவுப் பொருட்களை ஒன்று சேர்த்து எடுத்துக் கொள்ளக் கூடாது என்ற விழிப்புணர்வு நம்மிடம் இல்லை. ஆம், சில உணவுப் பொருள்கள் ஒன்றிணையும்போது செரிமானப் பிரச்சினை ஏற்படுகிறதாம்.

அந்த வகையில் டீ-யும், வெல்லமும் ஒன்று சேரக் கூடாது என்று ஆயுர்வேதம் அறிவுறுத்துகிறது. வெல்லத்தில் வைட்டமின்கள், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இதனுடன் பால் சேர்ப்பது ஆபத்தானதாம். இதுகுறித்து ஆயுர்வேத மருத்துவர் ரேகா ராதாமோனி கூறுகையில், “ ஆயுர்வேதத்தைப் பொருத்தவரையில் தவறான சேர்க்கை அடிப்படையில் சேருகின்ற உணவுகளால் குடலில் நச்சுக் கழிவுகள் உருவாகும். அது செரிமானத்தை பாதிக்கும். ஒவ்வொரு உணவுக்கும் பிரத்யேகமான தரம், சுவை, தன்மை, செரிமானத் திறன் போன்றவை உள்ளன என்று ஆயுர்வேதம் வரையறை செய்துள்ளது.

வெல்லம் உஷ்ணத்தன்மை கொண்டது. ஆனால், பால் குளிர்ச்சி கொண்டது. இந்த இரண்டையும் சூடான நிலையில் ஒன்று சேர்க்கும்போது பொருத்தமற்ற உணவுப் பொருளாக மாறிவிடும்’’ என்று தெரிவித்தார்.

மாற்று வழி உண்டா? பால் அல்லது டீ-யில் இனிப்பு சுவை கட்டாயமாக வேண்டும் என்று விரும்புபவர்கள் மாற்று வழிகளை கையாளலாம். கற்கண்டு அல்லது பனங்கருப்பட்டி, தேன் போன்றவற்றை பாலில் சேர்த்துக் கொள்ளலாம். சிலர் பேரீட்சை பழங்களை சேர்த்து பாலுக்கு இனிப்புச் சுவையூட்டுகின்றனர்.

வேறென்ன உணவுகளை சேர்க்கக் கூடாது.! பால் மற்றும் வாழைப்பழத்தை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது. அதேபோல பால் மற்றும் மீன், தயிர் மற்றும் வெண்ணெய், நெய் மற்றும் தேன் ஆகியவற்றை சேர்த்து சாப்பிடக் கூடாது என்று எச்சரிக்கப்படுகிறது. இவ்வாறு செய்யும் பட்சத்தில் அழற்சி, சரும பிரச்சினைகள், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்தும் நோய்கள் போன்றவை ஏற்படலாம் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

May 31, 2023

ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

May 31, 2023 0

 

ECGC PO வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,02,090/- || விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்!

ஏற்றுமதி கடன் உத்தரவாத கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் ஆனது ப்ரோபேஷனரி அதிகாரி (PO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிட்டது. இந்த பதவிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் மே 31 ஆம் தேதி வரை செயலில் இருக்கும் என முன்னதாக தெரிவிக்கப்பட்டது. தற்போது இதற்கான கால அவகாசம் ஆனது தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் உடனே தங்களின் பதிவுகளை 11.06.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ECGC Limited வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Probationary Officer (PO) பதவிக்கு என 17 பணியிடங்கள் காலியாக உள்ளன. அதாவது, Accounts (CA) – 01 பணியிடம், Legal – 04 பணியிடங்கள், Company Secretary – 01 பணியிடம், Actuary – 02 பணியிடங்கள், IT – 02 பணியிடங்கள் , IT/CISO – 01 பணியிடம், Country Underwriting/ research – 01 பணியிடம், Rajbhasha/Hindi – 04 பணியிடங்கள், Data Science – 01 பணியிடம்.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor of Law (LLB)/ B Tech or BE in Computer Science / Information Technology or MCA / Master’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • 01.04.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள் ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் (எஸ்சி/எஸ்டி மாற்றுத் திறனாளிகளுக்கு 15 ஆண்டுகள் & ஓபிசி மாற்றுத் திறனாளிகளுக்கு 13 ஆண்டுகள்) என உயர் வயது வரம்பில் அரசு விதிகளின்படி தளர்வு வழங்கப்பட்டுள்ளது.
  • Probationary Officer (PO) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.53600- 2645(14)- 90630- 2865(4)- 1,02,090/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Online Examination மற்றும் Descriptive Paper (Test of English Language) & Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 11.06.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

May 31, 2023 0

 

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- B.Tech முடித்தவர்களுக்கு முன்னுரிமை!

HCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Sr. Technical Lead பணிக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HCL காலிப்பணியிடங்கள் :

HCL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Sr. Technical Lead பணிக்கு என 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

HCL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HCL நிறுவன அனுபவ விவரம் :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 07 ஆண்டுகள் முதல் 12 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

HCL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview / Written Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

HCL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் எளிதாக விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.



GAIL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.93,000/- ஊதியம்!

May 31, 2023 0

 

GAIL (India) Limited நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.93,000/- ஊதியம்!

GAIL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதில் Full time Factory Medical Officer on temporary tenure basis பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

GAIL காலிப்பணியிடங்கள் :

GAIL நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Full time Factory Medical Officer on temporary tenure basis பணிக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

GAIL கல்வி தகுதிகள் :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBBS பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

GAIL ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.93,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

GAIL தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

GAIL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்திற்கு சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் மின்னஞ்சல் hrgandhar@gail.co.in மூலம் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news