புதுச்சேரி
என்றாலே மினி கோவா என்று வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளால் அழைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் தற்போது மினி கோவாவுக்கு ஏற்றது போல், பாண்டி பெண்ணா கடற்கரை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாண்டி மெரினாகடற்கரை வம்பாகீரை பாளையம் பகுதியில் உள்ள கலங்கரை விளக்கத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது.
இது சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் பகுதியாகும். இது புதுவை அரசாங்கத்தால் தீம் அடிப்படையிலான கடற்கரை திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்டது. மேலும், "பாண்டி மெரினா" கடற்கரை உணவு அடிப்படையிலான திட்டங்களுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடற்கரையில் பல்வேறு விதமான உணவு அரங்குகள், சுற்றுலா குடில்கள்அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கடற்கரையின் அழகை ரசித்தபடியே உணவருந்த பிரம்மாண்ட கூடாரம் அமைக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், அதற்கும் ஒரு படி மேலாக, குழந்தைகளை மகிழ்விக்க டாய் ரயில், பவுன்சிங் கேன்சல், செயற்கை மழை நடனம் போன்ற விளையாட்டு சாதனங்கள் உள்ளன. இதனால் சுற்றுலா பயணிகளின் வருகைஅதிகரித்துள்ளது. இவ்வாறு, பாண்டி மெரினா பீச்சிற்கு வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சி கழகமும் களம் இறங்கியுள்ளது.மேலும், சென்னை மெரினா கடற்கரை போல் புதுச்சேரியிலும் குதிரை சவாரி, ஒட்டக சவாரி, சிறப்பு நான்கு சக்கர வாகன சவாரி, ஆகியவை அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் உள்நாட்டு உணவு முதல், அயல் நாட்டு உணவுகள் வரை இங்கு அனைத்து விதமான உணவுகளும் கிடைக்க வழி வகுத்துள்ளது சுற்றுலாத்துறை. அதேபோல் கடற்கரை அழகை ரசித்துக் கொண்டே மது பிரியர்களுக்கு ஏற்றது போல் அரசு அனுமதியுடன் ஒரு தனியார் மதுபான கூடமும் அமைக்கப்பட்டுள்ளது. இது சுற்றுலா பயணிகள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த பொதுமக்களிடையே அமோக வரவேற்பை பெற்றுள்ளது.