Agri Info

Adding Green to your Life

June 10, 2023

சமீபத்தில் காஷ்மீரில் நடந்த லாவெண்டர் திருவிழா பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை...

June 10, 2023 0

 இந்தியாவில் பலவிதமான திருவிழாக்களை நாம் பார்த்திருப்போம். அந்த வரிசையில் சமீபத்தில் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், CSIR-IIIM ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட 'ஒரு வாரம் ஒரு ஆய்வகம்' என்ற பிரச்சாரத்தின் ஒரு பகுதியான, ஜம்முவின் பதேர்வாவில் நாடாகும் லாவெண்டர் திருவிழாவைத் தொடங்கி வைத்தார்.

லாவெண்டர் புரட்சியை மையப்படுத்தி நடக்கும்  2 வது ஆண்டு திருவிழா ஆகும். காஷ்மீர் பகுதியில் உள்ள பதேர்வா இந்தியாவின் லாவெண்டர் தலை நகரம் என்றும் , அக்ரி ஸ்டார்ட்அப் இடமாகவும் போற்றப்படுகிறது . இந்த திருவிழாவின் முக்கியங்களை பார்ப்போம்.

லாவெண்டர் அதன் நறுமண ஊதா பூக்கள் மற்றும் இனிமையான வாசனைக்காக அறியப்பட்ட ஒரு மணம் கொண்ட பூக்கும் தாவரமாகும் . அரோமாதெரபி, அழகுசாதனப் பொருட்கள் மற்றும் சமையல் பயன்பாடுகளில் பல்வேறு பயன்பாடுகளைக் கொண்ட எண்ணெய்க்காக இது பரவலாகப் பயிரிடப்படுகிறது .

இந்தியாவில் காஷ்மீர் சூழல் இந்த பயிர்  வளர்வதற்கு சாதகமாக இருப்பதால் வணிக ரீதியாக இதை வளர்க்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக ஊதா அல்லது லாவெண்டர் புரட்சி 2016 இல் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தால் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (CSIR) அரோமா மிஷன் மூலம் தொடங்கப்பட்டது.

ஜம்மு & காஷ்மீரின் கிட்டத்தட்ட அனைத்து 20 மாவட்டங்களிலும் லாவெண்டர் சாகுபடி நடைமுறையில் உள்ளது.இத்திட்டத்தின் கீழ், முதல் முறை விவசாயிகளுக்கு இலவச லாவெண்டர் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன , அதே நேரத்தில் லாவெண்டர் சாகுபடி செய்தவர்களுக்கு  ஒரு மரக்கன்றுக்கு ரூ.5-6 கட்டணம் பெறப்படுகிறது.

லாவெண்டர்பூக்களில் இருந்து பிரியும் லாவெண்டர் நீர், தூபக் குச்சிகள் தயாரிக்கப் பயன்படுகிறது. பூக்களில் இருந்து  எண்ணெயில் வடிகட்டப்பட்ட பிறகு உருவாகும் ஹைட்ரோசோல், சோப்புகள் மற்றும் ரூம் ஃப்ரெஷ்னர்கள் தயாரிக்கப் பயன்படுகிறது

இந்த திருவிழாவின் போது, உள்ளூர் லாவெண்டர் சாகுபடி பற்றிய விழிப்புணர்வும் , சாகுபடி செய்யத்தேவையான கன்றுகளும்  மக்களுக்கு வழங்கப்படுகிறது. மேலும் லாவென்டர் எண்ணெய்  மற்றும் இதர பொருட்கள் தயார் செய்யும் முறைகளையும் பார்க்கலாம். லாவெண்டர் வயல்கள் இடையே படங்களையும் எடுக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

செரிமானம் முதல் உடல் பருமன் வரை.. உங்க பிரச்சனைகளை சரி செய்ய உதவும் தனியா விதை தண்ணீர்..!

June 10, 2023 0

 

மோசமான வாழ்க்கை முறை உடல் பருமன் பிரச்சனையை அதிகரிக்கிறது. எனவேதான் உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் எடை அதிகரிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படுகின்றனர். உடல் பருமனை குறைக்க மக்கள் பல்வேறு வகையான முயற்சிகளையும் செய்கிறார்கள். ஆனால் சமையலறையில் வைக்கப்படும் ஒரு மசாலா கூட உடல் எடையை குறைக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா?

அந்த வகையில் கொத்தமல்லி உடல் எடை குறைப்பில் பெரும் பங்கு வகிக்கிறது. பொதுவாக உணவின் சுவையை அதிகரிக்க தனியா தூள் பயன்படுத்தப்படுகிறது. அதேசமயம் எடையை எளிதில் குறைக்க நினைக்கிறீர்கள் எனில் தனியா விதைகளை ஊற வைத்து வடிகட்டிய தண்ணீரை குடித்தால் பலன் கிடைக்கலாம்.

தனியா விதையில் உள்ள சத்துக்கள்

ஹெல்த்லைன் செய்தியின்படி, கொத்தமல்லி விதைகள் ஊட்டச்சத்துக்களின் நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. வைட்டமின் கே, சி மற்றும் ஏ ஆகியவற்றுடன் நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வளர்சிதை மாற்றத்தையும் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்க உதவுகிறது. இதனுடன், கொழுப்பை எரிக்கும் தன்மையும் இந்த பானத்தில் உள்ளது. அதே நேரத்தில், செரிமான செயல்முறையை சரியாக வைத்திருக்கிறது.

உடலில் உள்ள நச்சுகளை நீக்குகிறது

தனியா விதை தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது மிகவும் நன்மை பயக்கும். இந்த நீரை தொடர்ந்து வெறும் வயிற்றில் குடித்து வந்தால் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறும். எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து இந்த பானத்தை குடிப்பதன் மூலம் சிறந்த எடை மேலாண்மைக்கு உதவுகிறது. இதை உட்கொள்வதன் மூலம், தொற்றுநோய்க்கான அபாயமும் குறைகிறது என்பதை உங்களுக்குச் சொல்வோம்.

கொத்தமல்லி விதைகள் ஒவ்வாமையை குறைக்கும்

கொத்தமல்லி விதை நீர் ஆரோக்கியத்திற்கு ஒரு சர்வ மருந்தாக செயல்படுகிறது. இந்த விதைகளின் நீரில் ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. இதில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சருமத்தின் பொலிவை அதிகரிக்கச் செய்கிறது. இந்த டிடாக்ஸ் தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பது அதிக பலன் தரும். இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர முகப்பரு பிரச்சனை நீங்கும்.

செரிமான அமைப்பு நன்றாக இருக்கும்

கொத்தமல்லி தண்ணீரிலிருந்து உங்கள் நாளைத் தொடங்கினால் பல நோய்கள் குணமாகும். இந்த நீரை குடிப்பதால், வயிற்று உப்புசத்திலிருந்து நிவாரணம் கிடைக்கும். இது தவிர, இந்த தண்ணீரை தொடர்ந்து குடிப்பது வளர்சிதை மாற்ற விகிதத்தை மேம்படுத்துகிறது, இதன் காரணமாக எடை குறைக்க உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

காலையில் வெறும் வயிற்றில் கொத்தமல்லி தண்ணீரை குடித்து வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி பலப்படும். அவை எந்த நோயையும் எதிர்த்துப் போராடும் திறன் கொண்டவை. இந்த நீரில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை குறைக்க உதவுகிறது. அதனால் நோய்வாய்ப்படும் அபாயம் குறைவு.

கொத்தமல்லி தண்ணீர் செய்வது எப்படி

கொத்தமல்லி தண்ணீர் தயாரிக்க, முதலில்,

ஒரு ஸ்பூன் கொத்தமல்லி விதைகளை நன்கு கழுவவும். இப்போது அவற்றை ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்கவும். அதன் பிறகு, இந்த தண்ணீரை வடிகட்டி காலையில் குடிக்கலாம். தண்ணீரை வடிகட்டிய பிறகு, விரும்பினால், இந்த கொத்தமல்லி விதைகளை குப்பையில் போடுவதற்கு பதிலாக, அவற்றை உலர்த்தி பொடி செய்து, காய்கறி பொரியல்களில் சேர்க்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

செலவே இல்லமா சூப்பர் ட்ரிப்.. கன்னியாகுமரியில் இந்த அணையை கண்டு ரசிக்க கட்டணம் இல்லை!

June 10, 2023 0

 

பெருஞ்சாணி அணை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள முக்கியமான அணைகளில் ஒன்றாகும். இந்த அணை பறளியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது கன்னியாகுமரியிலிருந்து 85 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு அழகான சுற்றுலாத்தலமாகும்.

இந்நீர்த் தேக்கம் திருவனந்தபுரத்தின் தென்கிழக்கு, 58 கி.மீ. தொலைவிலும், குலசேகரம் என்னுமிடத்திலிருந்து 10 கி.மீ. கிழக்கிலும் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அணை மூலம் சுமார் 6000 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது.இதன் நீர் கொள்ளளவு 72 அடி ஆகும்.

குமரிக்கு சுற்றுலா வரும் பயணிகள் மறக்காம இந்த அணைய பார்த்து ரசிக்கலாம் . நாகர்கோயில் பேருந்து நிலையத்தில் இருந்தும் குலசேகரம் பேருந்து நிலையத்தில் இருந்தும் இந்த அனைக்கு பஸ் வசதிகள் இருக்கு சுற்றிலும் நீர் இயற்கை காற்று என இந்த அணை மறக்க முடியாத அனுபவத்தை எல்லாருக்கும் கொடுக்கும் இந்த அணை குமரி மாவட்டத்தில் மிக பெரிய அணை ஆகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஐஸ் வாட்டரில் கண்களை கழுவினால் இவ்வளவு பாதுகாப்பா? செங்கல்பட்டு மருத்துவர் விளக்கம்!

June 10, 2023 0

 இருசக்கர வாகனத்தில் சாலையில் பயணம் மேற்கொள்ளும் வாகன போட்டிகள் தங்களது கண்களை எவ்வாறு பாதுகாக்க கொள்ள வேண்டும் என விளக்குகிறார் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த கண் மருத்துவர் வேணுகோபால்.

செங்கல்பட்டு மாவட்ட கண் மருத்துவர் வேணுகோபால் நியூஸ் 18 தமிழ்நாடு டிஜிட்டல் பக்கத்திற்கு அளித்த பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.

இது குறித்து வேணுகோபால் கூறுகையில் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது கண்களில் தூசிகள் அல்லது மண் துகள்கள் விழுந்திடுச்சுனா வீட்டிற்கு வந்ததும் சுத்தமான குளிர்ச்சியான ஐஸ் வாட்டரில் முகம் கழுவ வேண்டும்.

இப்படி நீங்கள் ஐஸ் வாட்டரில் கண்களில் நீரை அடித்து கழிவினால் கண்களில் உள்ள தூசிகள் மண்கள் ஆகியவை தாமாக வெளியேறும்

இதை செய்யாமல் நீங்கள் தவறினால் தூசிகள் நிறைய சேர்ந்து கண்களின் நிறத்தையே மாற்றிவிடும் , எனவே அப்பப்ப வெளியே போய்விட்டு வீட்டிற்கு வரும்போது ஐஸ் வாட்டரில் முகம் கழுவினால் இதுபோல் கண்களில் தூசி தங்குவதை தவிர்க்கலாம் எனவும் அப்படி இல்லை என்றால் அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று eye irrigation செய்து கொள்ளலாம் என மருத்துவர் வேணுகோபால் கூறுகிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் 2 குழந்தைகளுக்கு இடையே ஒற்றுமை மற்றும் அன்பை வளர்க்க என்ன செய்ய வேண்டும்..?

June 10, 2023 0

 வீட்டில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கிறது என்றால் எப்போதும் போர்க்களமாகவே காட்சியளிக்கும். இரவு தூங்கி கண் விழிப்பதுதான் தாமதம். எழுந்த உடனேயே குழந்தைகள் பிரச்சினையை தொடங்கி விடுவார்கள். மீண்டும் இரவு தூங்கும் வரையிலும் இந்தச் சண்டைகள் ஓயாது.

அதே சமயம், பெற்றோராகிய நாமே ஆச்சரியம் அடையும் அளவுக்கு எப்போதாவது குழந்தைகள் தங்களுக்குள் கொஞ்சிப் பேசி விளையாடிக் கொண்டிருப்பார்கள். ஆனாலும் அடுத்த நாளில் மீண்டும் சண்டைகள், கருத்து வேறுபாடுகள் தொடருவதை நாம் பார்க்க முடியும்.

இரண்டு குழந்தைகள் என்றாலும், இரண்டுமே நம் கண்கள் தான். யார் ஒருவர் மீதும் கூடுதல் அன்பை பொழிந்துவிட முடியாது. ஒரு குழந்தையின் மீது மட்டும் பாகுபாடு காட்டிவிடவும் முடியாது. சில வீடுகளில் அப்பா செல்லம், அம்மா செல்லம் என்று குழந்தைகள் இருவேறாக இருப்பதைப் பார்க்க முடியும்.

சிலர் பெண் குழந்தை மீது மட்டும் அளவில்லா பாசம் வைத்திருப்பார்கள். சிலர் ஆண் குழந்தைகளுக்கு மட்டும் அதிகமான சுதந்திரம் கொடுப்பார்கள். ஆனால், இந்த பேதங்களை கடந்து இருவரையும் ஒன்றுபோல வளர்க்க வேண்டும். அவர்களிடையே ஒற்றுமை மேலோங்க நாம் என்ன செய்யலாம், என்ன செய்யக் கூடாது என்பதை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

ஒற்றுமை மேலோங்க செய்ய வேண்டியவை

  • குதூகலமான வேலைகளை குழந்தைகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதை அவர்கள் இருவரும் சேர்ந்து செய்யும்படியாக இருக்க வேண்டும். இதைச் செய்யும்போது ஒருவருக்கு, ஒருவர் கற்றுக் கொள்வதுடன், புரிந்துணர்வு அதிகரிக்கும்.
  • தன் உடன் பிறந்தவர் மீது அன்பும், அக்கறையும் காட்ட வேண்டும் என்பதை உங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க வேண்டும். அதை எப்படியெல்லாம் மேற்கொள்ளலாம் என்பதை அடிக்கடி உணர்த்த வேண்டும்.
  • குழந்தைகளிடையே சின்ன, சின்ன சண்டைகள் ஏற்படுவது சகஜம் தான். ஆனால், முக்கியமான சண்டைகள் நடைபெறும் சமயத்திலும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. நாம் தலையிட்டு சுமூகமான முடிவை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
  • குழந்தைகளின் நற்குணங்களை பாராட்டி, அதைப் போலவே நீயும் இருக்க வேண்டும் என்று மற்றொரு குழந்தையையும் ஊக்குவிக்க வேண்டும். அவர்களின் உதவி மனப்பான்மையை உடனுக்குடன் பாராட்ட வேண்டும்.
  • செய்யக் கூடாதவை :

    • ஒரு குழந்தையிடம் மட்டும் அதீத அன்பு காட்டுவது, பாச மழை பொழிவது, அதற்கு மட்டும் கேட்கின்ற அனைத்தையும் வாங்கிக் கொடுப்பது என்று இல்லாமல் இருவரையும் சம அளவில் பார்க்க வேண்டும்.
    • வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு இடையே எல்லா விஷயத்திலும் போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தக் கூடாது. தோல்விகள் அவர்களுக்கு தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தலாம். அதுவே பொறாமைகளுக்கு வழிவகை செய்யும்.
    • குழந்தைகள் இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமே தவிர, யாரோ ஒருவர் தலைமையேற்க வேண்டும் என்ற வகையில் நாம் நடந்து கொள்ள கூடாது.
    • குழந்தைகள் ஒருவரை, ஒருவர் குற்றம் சுமத்தும் சமயங்களில் அதை கண்டுகொள்ளாமல் கடந்து விடக் கூடாது. எந்தப் பிரச்சினையானாலும் உடனுக்குடன் தீர்த்து வைத்து அன்பையும், சமரசத்தையும் கற்பிக்க வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நீங்கள் தூங்கும்போது குறட்டை விட இந்த 9 விஷயங்கள்தான் காரணம் என்பது தெரியுமா..?

June 10, 2023 0

 நமக்கு இருக்கின்ற பிரச்சினையால் நம்மைவிட, நம்முடன் இருப்பவர்கள் அதிக தொந்தரவை எதிர்கொள்ள நேரிடுகிறது என்றால் அது குறட்டை சத்தம் தான். குறட்டை சத்தத்தால் வெளிநாடுகளில் விவாகரத்து பெற்றவர்களும் உண்டு. அவ்வளவு ஏன், நாமே கூட திருப்தியான தூக்கத்தை தூங்கிவிட முடியாது.

என்ன செலவானாலும் பரவாயில்லை, எத்தனை மருத்துவரைப் பார்த்தாலும் பரவாயில்லை, இந்தக் குறட்டை பிரச்சினைக்கு ஒரு முடிவு கட்டிவிட வேண்டும் என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியானால் முதலில் பிரச்சினைக்கு என்ன காரணம் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

குறட்டை எப்படி நிகழுகிறது? : வாய் மற்றும் மூக்கு இடையிலான சுவாசப் பாதையானது தூங்கும்போது அடைபடுவதன் காரணமாக குறட்டை சத்தம் கேட்கின்றது. இந்த அடைப்பு எதனால் ஏற்படுகிறது, அதற்கு நாம் எந்த வகையில் காரணமாக அமைகின்றோம் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

தொண்டை அமைப்பு காரணமாக இருக்கலாம்: நம் தொண்டை அமைப்பு கூட நமக்கு குறட்டை வருவதற்கு காரணமாக இருக்கலாம். உதாரணத்திற்கு குட்டையான கழுத்து மற்றும் தடிமனான சருமம் அல்லது குரல் வளையை ஒட்டி சதை தொங்குவது, உள்நாக்கு வளர்ச்சி போன்றவற்றின் காரணமாக குறட்டை சத்தம் கேட்கலாம்.

உடல் பருமன்: உடல் பருமன் உடையவர்களை பார்த்தாலே இவர்களெல்லாம் நன்றாக குறட்டை விட்டு தூங்குபவர்கள் என்ற முன் முடிவுக்கு நாம் வந்துவிடுவோம். அது ஓரளவுக்கு உண்மை தான். கழுத்து மற்றும் குரல்வலை பகுதியை சுற்றிய அதிகப்படியான தசைகளும் கூட குறட்டைக்கு காரணமாக அமைகின்றன.

வயது: முடி உதிர்தல், சருமம் சுருக்கம் அடைதல் போன்றவை மட்டும் வயோதிகத்திற்கான அறிகுறிகள் அல்ல. குறட்டை விடுவதும் கூட வயோதிகத்தின் அறிகுறி தான். குரல்வலை பகுதியின் தசைகள் பலவீனம் அடைவதன் காரணமாக குறட்டை சத்தம் வரலாம்.

மது அருந்துவது: மது அருந்துவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற முக்கியமான உறுப்புகளுக்கு பாதிப்பு வரும் என்ற விழிப்புணர்வு எல்லோருக்கும் உண்டு. ஆனால், குறட்டை சத்தத்திற்கு கூட இது வழிவகுக்கும் என்பது பலரும் அறியாத தகவல். மது அருந்தினால் சுவாசப் பாதை சுருங்க தொடங்குகிறது.

மூக்கு அடைப்பு: அலர்ஜி, சைனஸ் தொற்று அல்லது மூக்கு உள்ளே சதை வளர்ச்சி போன்றவை காரணமாக மூக்கில் அடைப்பு ஏற்படுகிறது. இதனால் காற்று சுவாசப் பாதையில் தடை ஏற்படும் நிலையில் அதன் காரணமாக உங்களுக்கு குறட்டை ஏற்படலாம்.

தூங்கும் பொசிஷன்: இடதுபக்கமாக தலை சாய்த்து, ஒரு பக்கமாக தூங்குவது தான் நல்ல ஆழ்ந்த தூக்கத்திற்கு வழிவகை செய்யும் மற்றும் உடல்நலன் பாதிக்கப்படாது. உங்கள் முதுகுப் பகுதியின் ஆதரவில் நீங்கள் தூங்கும்போது உங்கள் நாக்கு தொண்டையுடன் ஒட்டிவிடும். இதானால் சுவாசப்பாதை சுருங்கு குறட்டை சத்தம் உண்டாகும்.

சிகரெட் பிடித்தல்: புகையிலை புற்றுநோயை உண்டாக்கும் என்ற விழிப்புணர்வு வாசகத்தை ஒவ்வொரு முறையும் தியேட்டர் செல்லும்போது கேட்டிருப்பீர்கள். அதே சமயம், புகைப்பிடிப்பதால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள தசைகள் எரிச்சல் அடைகின்றன. இதனால் வீக்கம் மற்றும் மூச்சுப் பிரச்சினை ஏற்படும்.

மருந்துகள்: நீங்கள் எடுத்துக் கொள்ளும் சில மருந்துகளும் குறட்டை சத்தத்திற்கு வழிவகை செய்யும். உதாரணத்திற்கு மயக்க மருந்துகள், தசைகளை வலுவிழக்க செய்யும் மருந்துகள் போன்றவற்றை பயன்படுத்துவதால் தசைகள் வலுவடைந்து குறட்டையை உண்டாக்கும்.

தூக்கமின்மை: அசந்து தூங்குவது தான் நல்ல பலனை தரும். தூக்கம் போதுமானதாக இல்லை என்றாலும் கூட உங்களுக்கு குறட்டை பிரச்சினை ஏற்படலாம். நாளொன்றுக்கு 8 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலும் தூங்குவது அவசியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

June 9, 2023

ரூ.12,000 வரை ஊக்கத்தொகை.. திண்டுக்கல்லில் அப்ரண்டிஸ்ஷிப் மேளா..

June 09, 2023 0

 திண்டுக்கல் மாவட்டத்தில் அப்ரண்டிஸ்ஷிப் மேளா நடைபெற உள்ளது.

இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “இந்திய அரசு, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு அமைச்சரகம் மற்றும் இயக்குநரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பாக, திண்டுக்கல் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் மற்றும் அரசு தொழிற்பயிற்சி நிலையம் இணைந்து நடத்தும் Pradhan Mantri National Apprenticeship Mela (PMNAM) 2023 தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம், திண்டுக்கல், நத்தம் ரோடு, குள்ளனம்பட்டியில் அமைந்துள்ள அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் வரும் 12.06.2023 திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறவுள்ளது.

Ads by 

இம்முகாமில் திண்டுக்கல்லில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழில் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான தொழிற்பிரிவுகளில் தொழிற் பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்யவுள்ளனர்.

இதில் ITI படித்த ஆண் / பெண் இருபாலரும் கலந்து கொண்டு பயன்பெறலாம். தற்போது தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.8000 முதல் ரூ.12.000 வரைவழங்கப்படும்.

எனவே, இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் ஆண்/பெண் இருபாலரும் மேற்படி முகாமில் கலந்து கொண்டு இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் அவர்களை 0451-2970049 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்” என தெரிவித்துள்ளார்.