காலகட்டத்தில் அனைத்து வயதினரும் ரத்த அழுத்த பிரச்சனையால் போராடி வருகின்றனர். பெரும்பாலான மக்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளது. இரத்த அழுத்தம் அதிகமாகி, அதை தொடர்ந்து அலட்சியப்படுத்தினால், இதய நோய்கள் ஏற்படும் அபாயம் அதிகரிக்கிறது. பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளைத் தவிர, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க சில வீட்டு வைத்தியங்களையும் முயற்சி செய்ய வேண்டும். அந்த வகையில் தினமும் வாழைப்பழம் சாப்பிட்டால் ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் வைக்க முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
வாழைப்பழத்தைத் தவிர, கீரை, செலரி, ஓட்ஸ், வெண்ணெய், தர்பூசணி, ஆரஞ்சு, பீட், சூரியகாந்தி விதைகள் மற்றும் கேரட் போன்றவை உயர் இரத்த அழுத்தத்தைக் குறைப்பதில் உதவியாக இருக்கும். இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் வாழைப்பழம் எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பார்க்கலாம்.
வாழைப்பழம் சாப்பிடுவது பலன் தருமா? TOI இன் அறிக்கையின்படி, தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இதுவரை, வாழைப்பழத்தின் நன்மைகள் குறித்தும் பல ஆய்வுகள் வெளிவந்துள்ளன. ஆய்வுகளின்படி, பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகமாகவும், சோடியம் குறைவாகவும் உள்ளது.
இது உயர் இரத்த அழுத்தம், இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும். உடலில் உள்ள அதிகப்படியான சோடியம் (உப்பு) இரத்த நாளங்களில் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது மற்றும் நீர் சமநிலையை சீர்குலைக்கிறது. அப்படிப்பட்ட நிலையில் பொட்டாசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் சிறுநீரகத்தின் அழுத்தம் குறைந்து, உடலில் உள்ள அதிகப்படியான உப்பு, சிறுநீர் வழியாக வெளியேறுகிறது. பொட்டாசியம் உடலில் திரவம் மற்றும் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இது இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : எந்த உணவையும் குறிப்பிட்ட அளவில் உட்கொள்ள வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதிகப்படியான நுகர்வு நன்மைக்கு பதிலாக தீங்கு விளைவிக்கும். ஆய்வின்படி, இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க, தினமும் இரண்டு வாழைப்பழங்கள் மட்டுமே சாப்பிட வேண்டும். இதனால் ரத்த அழுத்தத்தை 10 சதவீதம் வரை குறைக்கலாம்.
நீங்கள் நீரிழிவு அல்லது பிற தீவிர நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு முன் உங்கள் மருத்துவரை அணுகவும். மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் 109 கலோரிகள், 18 கிராம் இயற்கை சர்க்கரை, 20 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 1 கிராம் புரதம், நார்ச்சத்து ஆகியவை உள்ளன.
இதில் வைட்டமின் சி, ஃபோலேட் மற்றும் வைட்டமின் ஏ ஆகியவையும் உள்ளன. வாழைப்பழம் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாகும். ஒரு சிறிய வாழைப்பழத்தில் 362 மில்லிகிராம், நடுத்தர அளவிலான வாழைப்பழத்தில் 422 மில்லிகிராம் மற்றும் பெரிய வாழைப்பழத்தில் 487 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது. பொட்டாசியம் நம் உடலுக்கு இன்றியமையாத சத்து.