Agri Info

Adding Green to your Life

June 17, 2023

BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.23,000/- ஊதியம்!

June 17, 2023 0

 

BHEL நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ.23,000/- ஊதியம்!

பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Lead Consultant/ Advisor or Senior Consultant பணிகளுக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BHEL காலிப்பணியிடங்கள்:

BHEL நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Lead Consultant / Advisor or Senior Consultant பணிகளுக்கு என 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BHEL வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 63 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelors or Master பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

BHEL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.23,000/- ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

BHEL தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் நபர்கள் Committee/ Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BHEL விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள www.careers.bhel.in இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் Online ல் (03.07.2023) இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BOAT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,500/- ஊதியம் !

June 17, 2023 0

 

BOAT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – மாதம் ரூ.25,500/- ஊதியம் !

BOAT நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Lower Division Clerk, Stenographer, Multi-Tasking Staff பணிகளுக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ள நபர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BOAT காலிப்பணியிடங்கள்:

BOAT நிறுவனத்தில் தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பின் படி Lower Division Clerk, Stenographer, Multi-Tasking Staff பணிக்கென 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

BOAT கல்வி தகுதி:

பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOAT ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.25,500/- வரை ஊதியம் வழங்கப்படும்.

BOAT தேர்வு செய்யப்படும் முறை :

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Skill test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

BOAT விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிப்பது எப்படி?

June 17, 2023 0

 

Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிப்பது எப்படி?

முன்னணி தனியார் நிறுவனமான Amazon நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் Software Development Engineer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Amazon காலிப்பணியிடங்கள்:

Amazon நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Software Development Engineer பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Amazon கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree பெற்றிருக்க வேண்டும் என.

Amazon ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும்.

Amazon தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Amazon விண்ணப்பிக்கும் முறை:

Amazon நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அறிவித்துள்ளது.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

June 16, 2023

இதயத்தை பற்றி உங்களுக்கு என்னவெல்லாம் தெரியும்..?

June 16, 2023 0

 மனித உடலில் இதயம் மிக முக்கியமான உறுப்பு. உண்மையில், இது உடலின் மிகவும் ஆற்றல் மற்றும் கடினமாக உழைக்கும் உறுப்பு ஆகும். ரத்த நாளங்கள் வழியாக உடலின் அனைத்து பகுதிகளுக்கும் ரத்தத்தை கொண்டு செல்வது தான் இருதயத்தின் முக்கிய வேலை. உடலில் ஓய்வின்றி எப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் உறுப்பும் இதுவாகும்.

இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்பதை மறுப்பதற்கில்லை. சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதால் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவு, ரத்த அழுத்தம் ஆகியவற்றை நம்மால் பாதுகாப்பான வரம்பிற்குள் வைத்திருக்க முடியும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பல உணவுகள் உள்ளன.

இந்த வேளையில், இதயத்தை குறித்த சில முக்கிய தகவல்களை அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் கூறப்படும் சிலத் தகவல்கள் உங்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.

இதயத்தின் எடை : 

ஒரு ஆண் இதயத்தின் சராசரி எடை 300 கிராம் முதல் 350 கிராம் வரை இருக்கும். அதுவே, ஒரு பெண் இதயத்தின் சராசரி எடை 250 கிராம் முதல் 300 கிராம் வரை இருக்கும்.

இதயத் துடிப்பு :

சராசரியாக வளர்ந்த நபரின் இதயம் நிமிடத்திற்கு 70 முதல் 80 தடவை துடிக்கும். பொதுவாக, வளர்ந்தோரில் 60 முதல் 100 வரை இயல்பான துடிப்பு எனக் கருதப்படுகின்றது.

இதயம் நன்றாகச் செயல்பட்டு ஆக்ஸிஜன், ரத்தம், தாதுப் பொருட்களை உடலின் அனைத்துப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லக் கூடிய வேலையை இயல்பான இருதயத் துடிப்பு உணர்த்துகிறது.

ரத்த பரிமாற்றம் :

இதயம் என்பது நுரையீரலுக்கு இடையில், மார்பின் நடுவில், மையத்துக்குச் சற்று இடதுபுறமாக அமைந்திருக்கும். ஒவ்வொரு நாளும் இதயம் சுமார் 100,000 முறை துடிக்கிறது. மேலும், 7,570 லிட்டர் ரத்தத்தை உடலின் பிற பகுதிகளுக்கு அனுப்பும் வேலையை செய்கிறது.

இதயம் குறித்து மேலும் சில சுவாரஸ்யமான தகவல்கள் : 

  • அதிகமான மகிழ்ச்சி, அதிகம் சிரிப்பவர்களின் ரத்த நாளங்கள் சரியாக வேலை செய்யும். மற்றவரை விட இவர்களின் உடலில் 20% அதிக ரத்தத்தை இதயம் பம்ப் செய்கிறது.
  • அதிகளவில் உடலுறவு கொள்வது இதயத்திற்கு நல்லதாக பார்க்கப்படுகிறது. அதிக உடலுறவு கொள்பவர்களுக்கு இதயம் சார்ந்த நோய்களுக்கான வாய்ப்புகள் குறைவு என மருத்துவ ஆய்வுகள் தெளிவுப்படுத்துகின்றன.
  • ஒரு வாகனத்தை நிலாவிற்கு கொண்டு சென்று, பின் பூமிக்கு கொண்டு வருவதற்கு தேவைப்படும் ஆற்றலை, ஒரு நபரின் இதயம் தனது ஆயுள்காலத்தில் உருவாக்குகிறது.
  • சாகும் வரை ஒரு விநாடி கூட ஓய்வில்லாமல் உழைப்பது இதயம் தான்.
  • பொதுவாக, திங்கள்கிழமைகளில் தான் அதிகமான நபர்களுக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என பகுப்பாய்வு முடிவுகளின் தரவுகள் கூறுகின்றன.
  • ஒரு வீட்டில் உள்ள மின்சார வயரிங் எவ்வளவு முக்கியமோ, அதே அளவு உடலில் முக்கியமாக திகழ்கிறது இருதயம். இதன் வேலையை நிறுத்திவிட்டால், மனிதனால் உயிர்வாழ முடியாது.

பப்பாளியை விட அதன் விதைகளில் அதிக நன்மை உள்ளது என்றால் நம்ப முடிகிறதா..? மிஸ் பண்ணிடாதீங்க.!

June 16, 2023 0

 ஆரோக்கியமான உடல் ஆரோக்கியம் வேண்டுமெனில் அதற்கு அடிப்படையாக நாம் கவனித்துக்கொள்ள வேண்டியது செரிமான அமைப்பைதான். அது சீராக இருந்தாலே நம் ஆரோக்கியத்தை பற்றி கவலையே பட வேண்டாம். எனவே செரிமானத்தை மேம்படுத்த நாம் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களுமே போதுமானது. அந்த வகையில் செரிமானத்தை மேம்படுத்துவதில் பப்பாளி பழத்தை காட்டிலும் அதன் விதைகள் சிறந்த ஆற்றல் மிக்கவை என்று சொன்னால் நம்ப முடிகிறதா..?

ஆம்.. பப்பாளியைப் போலவே அதன் விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். இந்த விதைகள் மோசமான செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகின்றன. அதோடு நோய்த்தொற்றை எதிர்த்துப் போராடும் பண்புகளும் அவற்றில் உள்ளன. ஆரோக்கியமான கொழுப்பு அமிலங்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நார்ச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் காணப்படுகின்றன. ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகள் சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்துகிறது. ஹெல்த்லைன் செய்தியின்படி, பப்பாளி விதைகளில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளன. மேலும் பல நன்மைகளை தெரிந்து கொள்வோம்.

ஊட்டச்சத்து நிறைந்தது - பப்பாளியைப் போலவே, பப்பாளி விதைகளும் மிகவும் நன்மை பயக்கும். ஊட்டச்சத்து நிறைந்த பப்பாளி விதைகளில் பாலிபினால்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. இந்த விதைகளில் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களும் உள்ளன, அவை நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பயனுள்ளதாக இருக்கும். பப்பாளி விதைகளிலும் நார்ச்சத்து அதிகம் உள்ளது.

நோய்த்தொற்று தடுப்பு - பப்பாளி விதைகளில் உடலில் ஏற்படும் தொற்றுகளுக்கு எதிராக போராடும் கூறுகள் உள்ளன . சிறப்பு வகை பூஞ்சை மற்றும் ஒட்டுண்ணிகளை அழிக்க பப்பாளி விதைகள் உதவிகரமாக இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது தொடர்பாக மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

செரிமானத்தை மேம்படுத்துகிறது - பப்பாளி விதையில் நார்ச்சத்து நிறைந்துள்ளது, இது செரிமான அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. பப்பாளி விதைகளை தொடர்ந்து உட்கொள்வது செரிமானத்தை மேம்படுத்தும்.

சிறுநீரக செயல்பாட்டைப் பாதுகாத்தல் - நல்ல ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சிறுநீரகங்கள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. உடலில் உள்ள அதிகப்படியான திரவம் மற்றும் கழிவுகளை வெளியேற்றும் வேலையை சிறுநீரகம் செய்கிறது. பப்பாளி விதைகளை சாப்பிடுவது சிறுநீரக செயல்பாடு மற்றும் சிறுநீரக ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இருப்பினும், இது குறித்து மேலும் ஆய்வுகள் தேவை.

புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் - பப்பாளி விதையில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. சில ஆய்வுகளில் பப்பாளி விதையில் புற்றுநோயை தடுக்கும் பண்புகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. பப்பாளி விதைகளை உட்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும். ஒரு ஆய்வில் பப்பாளி விதைகள் வீக்கம் மற்றும் புற்றுநோய் வளர்ச்சியிலிருந்து பாதுகாக்க உதவுகின்றன என்று கண்டறியப்பட்டுள்ளது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தனுமா..? இந்த சுவாசப் பயிற்சிகளை செய்து பாருங்கள்..!

June 16, 2023 0

 தினம் தினம் நம் இரத்த அழுத்த நிலையானது ஏற்ற இறக்கத்தில் செல்ல தொடங்குகிறது. நாம் செய்யும் வேலைக்கு ஏற்ப இது மாறுகிறது. உயர் இரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களைத் தவிர பெரும்பாலான நேரங்களில் இது கட்டுப்பாட்டில் உள்ளது. தீவிர உடற்பயிற்சி, மன அழுத்தம், பதட்டம், அதிக ஆல்கஹால் உட்கொள்வது என பல விஷயங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கையாளும் நபர்களிடையே காணப்படுகின்றன. இது பக்கவாதம், மாரடைப்பு மற்றும் மரணத்திற்கு கூட வழிவகுக்கும். இதுபோன்ற எந்தவொரு நிகழ்வையும் தடுக்க, இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். மருந்துகள், வீட்டு வைத்தியம் மற்றும் உடற்பயிற்சி ஆகியவை உங்கள் இரத்த அழுத்த அளவை கட்டுப்படுத்த உதவும் சில எளிய வழிகள் ஆகும்.

இரத்த அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் சில குறிப்பிட்ட சுவாச பயிற்சிகள் உள்ளன. இந்த ஆழமான சுவாச பயிற்சிகள் பாராசிம்பெடிக் நரம்பு மண்டலத்தை செயல்படுத்துகிறது. இது இதயத் துடிப்பை திறம்பட நிர்வகித்து இரத்த நாளங்களை நீர்த்துப்போகச் செய்வதால் உங்கள் ஒட்டுமொத்த இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துகிறது. மன அழுத்த சூழ்நிலைகளில் ஆழ்ந்த சுவாசத்தை கடைப்பிடிப்பதன் மூலம், எந்தவொரு சவாலான சூழ்நிலையையும் எதிர்கொள்ளும் போது அமைதியான முறையில் செயல்பட உங்களை நீங்களே பயிற்றுவிக்கலாம். நீங்கள் செய்ய வேண்டிய 3 எளிதான சுவாச பயிற்சிகள் இங்கே…

சமமான சுவாச பயிற்சி: அமைதியான இடத்தில் உட்கார்ந்து கொள்ளுங்கள். கண்களை மூடிக்கொண்டு தசைகளை தளர்த்திக் கொள்ளுங்கள். உங்கள் மூக்கு வழியே சுவாசத்தை நான்கு விநாடிகள் உள்ளிழுக்கவும் உங்கள் நுரையீரலுக்கு காற்று செல்லும்வரை சில விநாடிகள் இடைநிறுத்தவும். மீண்டும் உங்கள் மூக்கு வழியாக நான்கு விநாடிகள் சுவாசத்தை வெளியேற்றவும். இதே போல் 5-10 முறை செய்யவும்.

30 விநாடி சுவாச பயிற்சி: உயர் இரத்த அழுத்தம் மற்றும் சாதாரண இரத்த அழுத்தத்தைக் கையாளும் 20,000 ஜப்பானிய நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி, 30 ஆழ்ந்த சுவாசங்களை மேற்கொள்வது இரத்த அழுத்த அளவை நிர்வகிக்க உதவுகிறது. 30 விநாடிகளுக்குள் 6 ஆழமான சுவாசங்களை மேற்கொள்வது சிஸ்டாலிக் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று ஆய்வு கூறுகிறது. அமைதியான இடத்தில் முதலில் உட்கார்ந்து கொள்ளுங்கள். உங்கள் முதுகெலும்பை நிமிர்ந்து வைத்து கண்களை மூடிக்கொள்ளவும். 30 விநாடிகளுக்கு ஒரு டைமரை அமைத்து, இந்த நேரத்தில் 6 ஆழமான சுவாசங்களை மேற்கொள்ளுங்கள். மீண்டும் அதனை செய்யவும்.

உதரவிதான சுவாசம்: உங்கள் முழங்கால்கள் மற்றும் தலைக்கு கீழே ஒரு தலையணையுடன் தட்டையாக படுக்கவும். பின்னர் ஒரு கையை தொப்புளின் மேலேயும், மற்றொரு கையை மார்பிலும் வைக்கவும். உங்கள் மூக்கு வழியாக 2 விநாடிகள் சுவாசத்தை உள்ளிழுக்கவும் உங்கள் வயிற்று தசைகளில் ஈடுபடுவதன் மூலம் உங்கள் வாயின் வழியாக மெதுவாக சுவாசத்தை வெளியேற்றவும். எல்லா காற்றையும் வயிற்றில் இருந்து வெளியேற்றவும். இந்த பயிற்சியை ஒரு நாளைக்கு 10 முறை செய்ய வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் பார்க்கும் இந்த காய்கறிகள் எல்லாம் இந்திய காய்கறி இல்லை..எங்கிருந்து வந்தது தெரியுமா..?

June 16, 2023 0

 தக்காளி இல்லாத சமையலை நினைத்து கூட பார்க்க முடியாது. அப்படி நாம் சமையலறையில் படுத்தும் நிறைய காய்கறிகளை நாம் ஊர் காய்கறி  என்று நினைத்துக்கொள்வோம். நம் ஊரில் விளைவிப்பதால் அது நம் ஊர் காய்கறி ஆகிவிடாது. நாம் இன்று பயன்படுத்தும் நிறைய காய்கறிகள் வெளிநாடுகளில் இருந்து இங்கு கொண்டு  வரப்பட்டு விளைவிக்கப்பட்டது. அப்படி தினமும் நாம் சாப்பிடும் காய்கறிகள் எந்த நாட்டில் இருந்து வந்தது என்று தெரிந்துகொள்வோம்.

தக்காளி முதன்முதலில் தென் அமெரிக்காவில் தான் சாப்பிடப்பட்டதாம். வரலாற்றுக்கு முந்தைய காலங்களில், அது  மெதுவாக மத்திய அமெரிக்கா மற்றும் மெக்சிகோவிற்கு குடிபெயர்ந்தது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1493 இல் தக்காளியை ருசித்ததாகக் கருதப்பட்டது, பின்னர் அது ஸ்பெயினுக்கு எடுத்து செல்லப்பட்டு விளைவிக்கப்பட்டுள்ளது.  நூறு ஆண்டுகளுக்குப் பிறகு மற்ற ஐரோப்பிய நாடுகளும் பரவி, அங்கிருந்து அவற்றின் அமெரிக்க காலனிகளும் பயிரிட்டு சாப்பிடத் தொடங்கின. அதேபோல தான் இந்தியாவிற்கும் காலனியாட்சி செய்த மக்களால் வந்தது.

முட்டைக்கோஸ் வட சீனாவில் 4000 ஆண்டுகளுக்கு முன்பும், வடக்கு ஐரோப்பாவில் 3000 ஆண்டுகளுக்கு முன்பும் வளர்க்கப்பட்டதாக கதைகள் சொல்கின்றன. கிமு நான்காம் நூற்றாண்டில், முட்டைக்கோஸ் எகிப்து, கிரீஸ் மற்றும் ரோமானியப் பேரரசு முழுவதும் காணப்பட்டுள்ளது. 16 ஆம் நூற்றாண்டில் பிரெஞ்சுக்காரர்களால் உலகம் முழுவதும் பரவியுள்ளது. ஐரோப்பாவில் இருந்து முதலில் ஏற்றுமதி செய்யப்பட்ட காய்கறிகளில் இதுவும் ஒன்றாகும். மாலுமிகள் அதிகம் விரும்பி உண்ட காய்கறியாம்.

தர்பூசணிகள் எகிப்திய ஹைரோகிளிஃபிக்ஸில் தோன்றின மற்றும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய பாரோவின் கல்லறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ளன. முட்டைக்கோஸைப் போலவே, தர்பூசணிகளும் மாலுமிகளின் விருப்பமானவை. மத்தியதரைக் கடல் முழுவதும் கப்பல் மூலம் பரவியது, 10 ஆம் நூற்றாண்டில் சீனாவில் தரையிறங்கி 13 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் பரவியது.  ஐரோப்பா மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய இரு நாடுகளிலிருந்தும் வட அமெரிக்காவின் கடற்கரைக்கு வந்து பின்னர் உலகம் முழுவதும் படர்ந்தது.


அதேபோல வெண்டைக்காய் என்றதும் நம் ஊர்த்தானங்க.. நாட்டு காய்கறி என்று நினைக்கலாம் ஆனால் இது உண்மையில் மேற்கு ஆப்பிரிக்க பகுதியில் தான் முத்தத்தில் தோன்றியதாம். அங்கிருந்து ஆசிய பகுதிக்கு கொஞ்சம் கொஞ்சமாக பரவி, எகிப்தில் இருந்து இந்தியாவிற்கு குடியேறிய பாண்டு பழங்குடியினரால் வெண்டைக்காய் இந்தியாவில் அறிமுகமானதாக கருதப்படுகிறது.

நாம் பயன்படுத்தும் மிளகாய் வகைகளும் நம்முடையது அல்ல. மெக்சிகோவில் தோன்றி இன்று உலகம் முழுவதும் பயிரிடப்படுகிறது. அதோடு பெருவில் அதிக மிளகாய் வகைகள் பயிரிடப்படுகிறது. கிறிஸ்டோபர் கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தபோது இந்த மிளகாயை பார்த்து ஐரோப்பாவில் அப்போது பயன்படுத்தப்பட்ட ஆசிய மிளகுக்கு ஒத்த காரம் இருந்ததால் இதற்கு bell pepper  என்று பெயரிட்டார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கோவை தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

June 16, 2023 0

 

கோவை தமிழ்நாடு வனத்துறையில் Data Entry Operator வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

கோவை வனப் பிரிவு, தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள Data Entry Operator (DEO) மற்றும் Technical Assistant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தமிழ்நாடு வனத்துறை காலிப்பணியிடங்கள்:

Data Entry Operator (DEO) மற்றும் Technical Assistant ஆகிய பதவிகளுக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Technical Assistant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Sc. Forestry / Agriculture அல்லது M.Sc. Wildlife Biology / Life Sciences / Botany / Zoology / Natural Sciences / அல்லது M.C.A தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

DEO கல்வி தகுதி:

Any Degree / Diploma in Computer Application / Computer Science அல்லது Any Degree / Diploma with Certificate in Computer Applications அல்லது 12 ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் certificate in Computer Applications தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

1. Short Listing

2. Physical Appearance

விண்ணப்பிக்கும் முறை:

மேற்படி ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்களுக்கு தகுதியுள்ள தனியர்களிடமிருந்து விண்ணப்பம்‌ வரவேற்கப்படுகின்றன, விண்ணப்பத்தினை கீழ்கண்ட முகவரிக்கு 30.06.2023க்குள்‌ விருப்பமுள்ள தனியர்கள்‌ அனுப்பி வைக்க கேட்டுக்‌ கொள்ளப்படுகிறார்கள்‌.

Download Notification 2023 Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indian Navy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் !

June 16, 2023 0

 

Indian Navy நிறுவனத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.40,000/- ஊதியத்தில் !

Indian Navy ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Agniveer பணிக்கென 35 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்கள் (02.07.2023) அன்று நடைபெறும் walk-in-interview கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Indian Navy காலிப்பணியிடங்கள்:

Indian Navy தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Agniveer பணிகளுக்கென 35 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy வயது வரம்பு:

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்களின் வயதானது 21 ஆக இருக்க வேண்டும்.

Indian Navy கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Indian Navy ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Indian Navy தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் Medical Examination, Screening, Merit List, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Indian Navy விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் ஆன்லைனில் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || முழு விவரங்களுடன்!

June 16, 2023 0
மத்திய அரசில் ரூ.35,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || முழு விவரங்களுடன்!

ICAR – National Research Centre for Banana ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Ph.D. Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.  

ICAR காலிப்பணியிடங்கள்:

Ph.D. Fellow பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

Ph.D. Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. (Agri.) / M.Sc. or M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICAR வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Ph.D. Fellow ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

ICAR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 29.06.2023ம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

June 16, 2023 0

 

DOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்க முழு விவரங்கள் உள்ளே!

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultants பணிக்கென 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Department of Telecommunication காலிப்பணியிடங்கள்:

தொலைத்தொடர்பு துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Consultants பணிக்கு என 04 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Department of Telecommunication வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 64 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Department of Telecommunication கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Level 8/Level 7 of the 7th CPC அளவின் படி பணிபுரிந்து ஓய்வு பெற்ற அரசு அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Department of Telecommunication ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் விதிமுறைப்படி ஊதியம் வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

Department of Telecommunication தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்கள் interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Department of Telecommunication விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, போதிய ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

June 16, 2023 0

 

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க!

அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow, Project Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Annamalai University காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow, Project Assistant பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Sc, M.Sc டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai University வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai University தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 23.06.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

June 14, 2023

சுகர் இருக்கவங்க பால் குடிக்கலாமா..? நிபுணர்களின் பதில்..!

June 14, 2023 0

 இந்தியாவில் 7 கோடிக்கும் மேற்பட்டோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக நீரிழிவு நோயின் தலைநகரம் என இந்தியா உலகளவில் அறியப்படுகிறது. ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் அளவு அதிகரித்து கார்போஹைடரேட்ஸ், புரதம் மற்றும் கொழுப்பின் மெட்டபாலிஸம் மாறுகிறது. இதன் காரணமாக இன்சுலின் சுரப்பதில் அல்லது இன்சுலின் செயல்பாட்டில் ஒழுங்கற்ற முறை காணப்படுகிறது. அதிகரிக்கும் நகரமயமாதல், அதிக கலோரி மற்றும் சுத்திகரிகப்பட்ட குறை நார்ச்சத்து உணவுகள், எந்த உடல் இயக்கமும் இன்றி உட்கார்ந்தே இருப்பது, அதிகமான உடல் எடை போன்ற காரணங்களால் இந்தியாவில் அதிகளவில் நீரிழிவு நோயாளிகள் இருக்கிறார்கள்.

ஆரோக்கியமான உணவு, நல்ல உடலியல் செயல்பாடு, புகையிலை மற்றும் மதுபானத்தை தவிர்த்தல் போன்றவைகளால் சர்க்கரை வியாதி வராமல் 80% தடுக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உணவில் மாற்றம் செய்யும் போது நாம் கவனத்தில் கொள்ள வேண்டியவை:

சீரான மற்றும் ஒரேப்போன்ற உணவு: நீரிழிவு நோய்க்காக இன்சுலின் அல்லது மாத்திரைகள் சாப்பிடுபவராக இருந்தால் சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். முக்கியமாக, வழக்கத்தை விட குறைவாக உண்பது, நேரம் தவறி உணவை சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் தவிர்ப்பதால் சர்க்கரை அளவு குறைந்து ஹைபோக்ளைசீமியா ஏற்படும். ஆகவே எப்போதும் போல் சாப்பிடுங்கள். சாப்பிடும் நேரத்தை மாற்றிக் கொள்ளாதீர்கள்.

உணவில் கார்போஹைடரேட்ஸ் அளவு : உணவில் கார்போஹைடரேட்ஸை எவ்வுளவு எடுத்துக் கொள்கிறோம் என்பதை வைத்துதான் சர்க்கரை அளவு மாறுபடும். ஆகவே தனிநபரின் தேவைகளைப் பொறுத்து கார்போஹைடரேட்ஸை உணவில் சேர்ப்பது முக்கியம். முழு தானியம், திணை போன்றவற்றோடு நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை உணவில் சேர்த்தால் சர்க்கரை அளவு உயராமல் பார்த்துக் கொள்ளலாம்.

நீரிழிவு நோயாளிகள் பால் குடிக்கலாமா?

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் உள்ள நன்மைகள்:

  • நம் உடல் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது. இதில் முக்கியமான விட்டமிங்களும் கால்சியம், பாஸ்பரஸ் ரிபோஃபிளாவின் மற்றும் விட்டமின் பி12 போன்றவை அதிகளவில் உள்ளன.
  • எலும்பின் ஆரோக்கியத்திற்கும் உறுதிக்கும் பால் முக்கிய பங்காற்றுகிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு எலும்பின் உறுதித்தன்மை திடீரென்று குறையும். தொடர்ந்து பால் அருந்தி வரும் நபருக்கு இப்பிரச்சனை ஏற்படும் வாய்ப்பு குறைவு.
  • பால் அருந்துவதால் ரத்த அழுத்தம் குறையும், இதய நோய்கள் மற்றும் குடல் புற்றுநோய் வராமல் பாதுகாக்கும்.

பால் சாப்பிடுவதை வழக்கமாக்கி கொண்டால் டைப் 2 நீரிழிவு நோய் வரும் ஆபத்து குறையும் என பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதற்கு காரணம் பாலில் உள்ள புரதங்கள். இவை உடலில் உள்ள இன்சுலினை அதிகரித்து ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை குறைக்கிறது. ஆகவே ஆரோக்கியமான நபர்களும் நீரிழிவு நோயாளிகளும் பால் அருந்துவதில் எந்தப் பிரச்சனையுமில்லை.

எனினும் பாலில் லாக்டோஸ் உள்ளது. ஆகவே நாம் தினசரி உட்கொள்ளும் கார்போஹைடரேட்ஸ் அளவோடு இதையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 100 மில்லி பசும் பாலில் 5 கிராம் கார்போஹைடரேட்ஸ் உள்ளது. அதுவே 100 மில்லி எருமை மாட்டு பாலில் 8 கிராம் கார்போஹைடரேட்ஸ் உள்ளது. ஆகவே நீரிழிவு நோயாளிகளின் தினசரி உணவில் பால் சேர்க்கும் போது இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

மற்ற கார்போஹைடரேட்ஸ் பொருட்களில் இருப்பதை விட பால் மற்றும் தயிரின் க்ளைகோமிக் இண்டக்ஸ் (GI) மிகவும் குறைவே. பாலின் வகையை பொறுத்து இது 31-37 என்ற அளவுக்குள் இருக்கும். இவ்வுளவு குறைவான GI இருப்பதால், இதை உண்வைல் சேர்ப்பதால் அந்தளவிற்கு சர்ரக்கரை அளவு ஏறாது. ஆனால் சுவையேற்றப்பட்ட பால் சாப்பிடுவதை தவிருங்கள். ஏனென்றால் இதில் அதிகளவு சர்க்கரை இருப்பதால் நம் உடலின் குளுக்கோஸ் அளவு உயரக்கூடும்.

ஆரோக்கியமான வாழ்வுக்கு, பெரியவர்கள் என்றால் தினசரி 300மில்லி பால் அருந்த வேண்டும். நீரிழிவு நோயாளியாக இருந்தால், அவரின் தேவைகளை முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். அவருக்கு அதிக கொழுப்பு மற்றும் கலோரி தேவையா அல்லது எடை குறைப்பதற்காக பாலில் உள்ள புரதம் மட்டும் வேண்டுமா என்பதை பொறுத்தே அவர் எந்த வகையான பாலை (பசும் பால், எருமை பால், ஆடை நீக்கிய பால்) குடிக்கலாம் என்பதை முடிவு செய்ய முடியும்.

  • புரதம், விட்டமின், மினரல்கள் போன்றவை பாலில் அதிகமாக உள்ளன
  • பாலில் நம் உடலுக்கு தேவையான நிறைய நன்மைகள் உள்ளன. ஆகவே இதை நீரிழிவு நோயாளிகளும் தங்கள் தினசரி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்
  • பாலில் குறைவான GI இருப்பதாலும், இதிலுள்ள புரதங்கள் சர்க்கரை அளவை குறைவாகவே உயர்த்தும் என்பதாலும் பாலின் மூலம் கிடைக்கும் கார்போஹைடரேட்ஸ் அளவையும் நாம் தினசரி உண்ணும் உணவின் கார்போஹைடரேட்ஸ் அளவோடு சேர்த்து கணக்கிட வேண்டும். அப்போதுதான் நிறைய கார்போ எடுத்துக்கொள்வதை தவிர்க்க முடியும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip