Agri Info

Adding Green to your Life

June 21, 2023

சிகரெட் பிடிப்பதால் மூளையை சுருக்கி நினைவாற்றலை குறைக்கும் அபாயம் - ஆய்வில் தகவல்..!

June 21, 2023 0

 இன்றைய வாழ்க்கை முறையில் மிக மோசமான பழக்கம் என்று குறிப்பிட்டால் அதில் புகை பழக்கம் முதல் இடத்தில் இருக்கும். அந்த அளவிற்கு புகை பழக்கத்தால் ஏராளமான பாதிப்புகள் உடலுக்கு உண்டாகும். இது புகை பிடிக்கும் நபருக்கும் மட்டுமன்று, அவரை சுற்றி இருப்போரையும் பாதிக்க கூடும். புகை பழக்கம் என்பது உலகளவில் அதிக இறப்புகளை ஏற்படுத்த கூடிய ஒன்றாக உள்ளது. சிகரெட்டில் உள்ள தீங்கு விளைவிக்க கூடிய இரசாயனங்களால் புற்றுநோய் பாதிப்பு உண்டாகுகிறது. இதற்கான அறிகுறிகள் ஆரம்ப காலத்தில் பெரும்பாலானோருக்கு வெளிப்படுவதில்லை. இதனாலேயே எப்போதும் போல ஆரோக்கியமாக இருப்பதாக புகை பழக்கம் உள்ளவர்கள் கருதுகிறார்கள்.

இது புற்றுநோயை உண்டாக்குவதோடு, நுரையீரல், இதயம் மற்றும் பொது ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. இது ஒரு புறம் இருக்க, மூளையில் புகை பழக்கத்தால் ஏற்பட கூடிய விளைவுகள் பற்றி பெரிதாக விவாதிக்கப்படுவதில்லை. சமீபத்திய ஆய்வில், புகை பழக்கம் உள்ளவர்களுக்கு மூளையில் பாதிப்புகள் ஏற்படும் என்று கண்டறிந்துள்ளனர். புகைபிடிப்பதால் மூளை சுருக்கமடையவும், மூளையின் அளவு குறையவும், மூளையின் செயல்திறனுக்கு பாதிப்பை ஏற்படுத்தவும் கூடும் என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

நமது மூளையானது பெருமூளை, சிறுமூளை மற்றும் மூளைத் தண்டு (மெடுல்லா) ஆகிய மூன்று முக்கிய பாகங்களைக் கொண்டுள்ளது. எனவே, ஒருவர் புகைபிடிக்கும் போது அதில் உள்ள நிகோடின் போன்ற தீங்கு விளைவிக்கும் இரசாயனங்கள் மூளையின் இந்த முக்கிய பகுதிகளை பாதிக்கும் என்று பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன.

நமது உடலில் மிக முக்கிய உறுப்பான மூளை பாதிக்கப்பட்டால், அது நமது உயிருக்கே ஆபத்தாக கூடும். குறிப்பாக அதிக அளவில் புகைப்பிடிப்பவர்கள் மற்றும் பல ஆண்டுகளாக புகை பழக்கம் உள்ளவர்களுக்கு பெருமூளைப் புறணியில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும். இதன் காரணமாக மூளையின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. அதன்படி, புகைபிடிக்காதவர்களின் மூளையுடன் ஒப்பிடும்போது, புகைபிடிப்பவர்களின் பெருமூளையின் அளவு குறைவதாக கண்டறிந்துள்ளனர். மேலும், இதன் காரணமாக மூளையின் அளவு கணிசமாகக் குறையக்கூடும் என்றும் தெரிய வந்துள்ளது.

மூளையின் மிகப்பெரிய பகுதியாக கருதப்படும் பெருமூளையானது நமது பார்வை திறன், காதுகேட்கும் திறன், பேச்சு திறன், தொடுதலுக்கான திறன், உணர்ச்சி, கற்றல் திறன் மற்றும் சிந்தனைக்கான முக்கிய காரணியாக உள்ளது. எனவே, இதன் அளவு குறையும் பட்சத்தில் இது நேரடியாக முன்பு குறிப்பிட்ட அத்தியாவசிய திறன்களை பாதிக்கிறது. புகை பழக்கத்தால் மூலையில் ஏற்படுகிற மோசமான விளைவுகள், ஒருவருக்கு நினைவாற்றல் குறைபாடு, பதட்ட மனநிலை, உளவியல் சார்ந்த சிக்கல்கள் ஆகியவற்றை உண்டாக்கும்.

ஒருவர் அதிக அளவில் புகைபிடிப்பதால் மூளைக்கு செல்ல கூடிய இரத்தத்தின் அளவு குறையும். இதனால், இரத்த நாளங்களில் இரத்தம் உறைந்து, இரத்தக் கட்டிகளை உருவாக்கி மூளைக்கு இரத்த ஓட்டத்தைத் தடை செய்யும். மேலும், புகை பழக்கத்தால் ஒருவருக்கு நியூரோடிஜெனரேஷன், அல்சைமர் மற்றும் டிமென்ஷியா போன்ற நரம்பியல் சார்ந்த நோய்களின் அபாயங்களும் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

எனவே, புகைப்பழக்கத்தை கைவிட மருத்துவரின் ஆலோசனையை பெற்று, சரியான சிகிச்சைகளை எடுத்து கொண்டு வருவது ஆரோக்கியமான வாழ்வை தரும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிரண்டையில் இத்தனை மருத்துவ குணங்களா? தெரிஞ்சா அசந்திடுவீங்க!

June 21, 2023 0

 தமிழகத்தில் தற்போது வளர்ந்து வரும் இளம் சமுதாய மக்களுக்கு பிரண்டை என்றாலே என்னன்னு தெரியாத சூழ்நிலை இருந்து வருகிறது.

பொதுவாக, பிரண்டை என்பது அனைத்து கடைகளிலும் கிடைப்பதற்கு வாய்ப்பு குறைவு என்று சொல்லலாம். இந்த பிரண்டையானது மனித நடமாட்டம் குறைவாகக் காணப்படும் பொட்டல் காடுகள் மற்றும் வேலிகளில் படர்ந்து வளரும் தன்மை கொண்டது.

இதன் வேர் மற்றும் தண்டுப்பகுதிகளே அதிகப்படியான மருத்துவத்துக்குப் பயன்படுகின்றன. இதில் நிறைய வகைகள் இருந்தாலும், நான்கு பட்டைகளைக்கொண்ட சாதாரணப் பிரண்டையே திண்டுக்கல் மாவட்ட சுற்று வட்டார பகுதிகளில் அதிகமாகக் கிடைக்கிறது.

எந்த கடைகளிலுமே கிடைக்காத இந்த பிரண்டையை யார் அதிகம் சாப்பிட விரும்புவார்கள் என்று ஒரு சின்ன அபிப்பிராயம் நம் அனைவருக்கும் தோன்றுவது இயல்புதான்.

இருந்தாலும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மணியகாரன்பட்டி பகுதி மக்கள் இந்த பிரண்டையைத் தேடி காடு மேடெல்லாம் அலைந்து கற்கள் முட்கள் இருக்கும் என கவலை இல்லாமல் பிரண்டை பறிப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுகுறித்து இப்பகுதியில் பிரண்டை தேடி செல்லும் கோமதி என்பவரிடம் கேட்டபோது, தன் மகனுக்கு சில வயிற்று பிரச்சனை இருப்பதாகவும், இந்த வயிற்றுப் பிரச்சனைகளை சரி செய்ய பிரண்டை உதவியாக இருக்கும் எனவும் , இந்தப் பிரண்டையானது கடையில் கிடைக்காது எனவும் காடு மேடுகளில் தேடி வந்துள்ளோம் எனவும், மேலும் இந்த பிரண்டையை பற்றி இளைய சமுதாயங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை எனவும், எனவே பிரண்டையின் மகத்துவத்தை புரிந்து கொண்டு பிரண்டை வளர்ப்பதில் ஆர்வம் காட்ட வேண்டும் என தெரிவித்துள்ளார், மேலும் பிரண்டை எப்படி வளர்க்க வேண்டும் என்ற வழிமுறைகளையும் கூறியுள்ளார்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

குழந்தைகளோடு பயணம் செய்யும்போது இந்த விஷயங்களை கவனிக்க மறந்துடாதீங்க..!

June 21, 2023 0

 பள்ளி என்று வந்துவிட்டால் குழந்தைகளோடு வெளியே போவது இயல்பு. கொஞ்சம் பெரிய பசங்களை வெளியில் கூட்டிச்  செல்லும் போது பயணத்திற்கான தயாரிப்புகளை அவர்களே செய்து கொள்வார்கள். அதே நேரம் சிறு வயது குழந்தைகளை வெளியில் கூட்டி செல்லும்போது அதற்கான தயாரிப்புகளை எல்லாம் பெற்றோர் தான் செய்ய வேண்டும். அப்படி குழந்தைகளை டூருக்கு அழைத்துச்செல்லும் போது தேவைப்படும் டிப்ஸ் தருகிறோம்.

முன்கூட்டியே திட்டமிடுங்கள்: குழந்தைகளுடன் ஒரு பயணம் என்றால் கவனமாக திட்ட வேண்டும். சுற்றி  ,தாங்கும் இடங்கள் எல்லாம் குழந்தைகளுக்கு ஏற்றதா என்று பார்க்க வேண்டும். இரு நகரத்திற்கு சுற்றுலா செல்லும் பொது அவர்கள் ஆர்வமாக பார்க்கவும் கற்றுக்கொள்ளவும் உதவும் இடங்களும் அந்த பட்டியலில் உள்ளதா என்று பார்க்க வேண்டும்.

தேவையான அனைத்து பொருட்களையும் பேக் செய்வது அவசியம். ரொம்ப சின்ன குழந்தைகளை அழைத்து செல்லும்போது அவர்களுக்கான டயப்பர்கள், துடைப்பான்கள், கூடுதல் உடைகள், தின்பண்டங்கள், பொம்மைகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட முக்கியமான விஷயங்களின்  பட்டியலை உருவாக்கி அதன்படி எடுத்துச்செல்லவும்.

குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்: பயண திட்டத்தை உருவாக்கும் போது, கொஞ்சம் பெரிய குழந்தைகள், கணக்கு போடும் அளவு பெரியவர்கள் என்றால் அவர்களையும் ஈடுபடுத்தி பயண திட்டங்களை உருவாக்குங்கள். அவர்களுக்கு பிடித்தமான இடங்களை தேட வைத்து அதன் தகவல்களை தெரிய வைத்து அதற்கு ஏற்ப பயண திட்டத்தை உருவாக்குங்கள்.அதே போல பேக்கிங் செய்யும் பொது அவர்களது பொருட்களை அவர்களே எடுத்துவைத்து கிளம்ப பழக்குங்கள்.

சில பயணங்கள் குழந்தைகளுக்கு மிகவும் சோர்வாக இருக்கும், இதன் விளைவாக அமைதியின்மை, கோபம், எரிச்சல்  ஏற்படும். அவர்களை ஈடுபாட்டுடன் வைத்திருக்க பல பொழுதுபோக்கு சார்ந்த பொருட்களை  தயாராக வைத்துக்  கொள்ளுங்கள். வண்ணப் புத்தகங்கள், புதிர்கள் மற்றும் கையடக்க விளையாட்டு பொருட்களை பேக் செய்யலாம்.

குறுகிய இடைவேளைகள்: நீண்ட பயணங்கள் குழந்தைகளுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வாக இருக்கும். எனவே சாலைப் பயணங்களின் போது சிறிய இடைவெளிகளைத் திட்டமிடுங்கள். வழியில் உள்ள பூங்காக்கள் அல்லது விளையாட்டு மைதானங்களில் விளையாடும் நேரத்தைச் சேர்த்துக்கொள்வது மன அழுத்தத்தைக் குறைக்கவும், பயணத்தை மிகவும் சுவாரஸ்யமாக மாற்றவும் உதவும்.

பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுங்கள் : பயணம் செய்யும்போது  அவர்கள் இருக்கை பெல்ட்கள் அல்லது பாதுகாப்பு சாதனைகளை  அணிந்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நெரிசலான இடங்களில் அவர்களை உன்னிப்பாகக் கண்காணித்துகொள்ளுங்கள். உள்ளூர் அவசர எண்களைப் பற்றி நன்கு தெரிந்து கொள்ளுங்கள் மற்றும் முதலுதவி பெட்டியை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.

சிற்றுண்டி : பசியுள்ள குழந்தைகள் விரைவில் எரிச்சலடையலாம், எனவே ஆரோக்கியமான தின்பண்டங்களை பேக் செய்யுங்கள். பழங்கள், சிப்ஸ், சாக்லேட் பார்கள் , சின்ன சாண்ட்விச்கள் போன்ற உணவுகளை எடுத்துச்  செல்லவும். கூடுதலாக, போதுமான அளவு தண்ணீரை எடுத்துச் செல்லுங்கள்.

நினைவுகளை உருவாக்குதல் : குழந்தைகளுடன் பயணம் செய்வது அந்த இடத்தைப் பற்றியது மட்டுமல்ல, நினைவுகளை உருவாக்குவதும் கூட என்பதை மறந்துவிடாதீர்கள். குழந்தைகளுக்கும் அந்த பருவத்தின் நினைவுகள் பொங்கல் மூலம் தான் கடத்தப்படும். நிறைய படங்களை எடுங்கள், விளையாடுங்கள், கதைகள் சொல்லுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

கை விரல்களில் அடிக்கடி சொடக்கு எடுத்தால் இந்த எலும்பு பிரச்சனை வருமா..? உஷார்..!

June 21, 2023 0

 பலருக்கும் கை விரல்களை நெட்டி முறித்து சொடக்கு எடுப்பது பொதுவான பழக்கமாக இருக்கும். இதை சிலர் வேலைக்கு இடையே செய்வது புத்துணர்ச்சி தருவது போல் உணர்வார்கள். சிலர் டென்ஷனாக இருக்கும்போது கை விரல்களை சொடக்கு எடுப்பதை பழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் உங்களுக்கு புத்துணர்ச்சி தரும் இந்த பழக்கம் உங்களுக்கே ஆபத்தாக மாறலாம் என சில கருத்துகள் உள்ளன.. இது உண்மையா..?

நீங்கள் அவ்வாறு சொடக்கு எடுக்கும்போது அந்த சத்தம் எங்கிருந்து வருகிறது என என்றைக்காவது யோசித்ததுண்டா..?

நாம் விரல்களில் சொடக்கு எடுக்கும்போது விரல் மூட்டுகளில் இடைவெளியை உருவாகிறது. அதாவது மூட்டுகளுக்கு இடையே உள்ள திரவம் உருவாக்கிய வாயுக் குமிழ்களை (gas bubbles) உடைப்பது போன்றதாகும். ஒரு விரலில் ஒரு முறை மட்டுமே சொடக்கு எடுக்க முடியும். உடனே உடைக்க நினைத்தால் சொடுக்கு சத்தம் கேட்காது. ஏனெனில் அந்த கேஸ் பப்புள் மூட்டுகளில் மீண்டும் உருவாக சில மணி நேரம் எடுத்துக்கொள்ளும்.

இவ்வாறு விரல்கலில் சொடக்கு எடுப்பது எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது. இருப்பினும் சிலர் எடக்கு மடக்காக அல்லது பலமான அழுத்தத்துடன் சொடக்கு எடுத்து மூட்டு இடம் மாறியதாகவும், தசை நார்களில் காயம் ஏற்பட்டதாகவும் அறிக்கைகள் உள்ளன. ஆனால் இது மிகவும் அரிதாக நிகழக்கூடியதாக சொல்லப்படுகிறது.

சொடக்கு எடுத்தல் எப்படி எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..?

கலிஃபோர்னியாவை சேர்ந்த மருத்துவர் ஒருவர் தனக்கு தானே இந்த பரிசோதனையை செய்து ஆய்வு அறிக்கை தயார் செய்துள்ளார். அதில் அவர் இவ்வாறு நாம் சொடக்கு எடுப்பது எந்த வகையிலும் பாதிக்காது என்று கூறியுள்ளார். அவர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் ஒரு கையில் மட்டும் சொடக்கு எடுத்துள்ளார். தோன்றும்போதெல்லாம் செய்திருக்கிறார். பின் அவர் கைகளை எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் எந்தவித மாற்றங்களும் இல்லை. விரல்களுக்கு இடையிலோ, கை எலும்புகள், மூட்டுகளிலோ எந்தவித மாற்றமும் இல்லை. இதே பதிலை மிகப்பெரிய ஆய்வும் வெளியிட்டுள்ளது.

மிகவும் அரிதான சில வழக்குகள் நெட்டி முறித்ததால் நிகழ்ந்ததாக வந்துள்ளது உண்மைதான் என்றாலும் அது சொடக்கு எடுக்கும் பழக்கத்தால் இல்லை என்கிறது. அவர் எப்படி அழுத்தம் கொடுத்து சொடக்கு எடுத்தார் என்பது அவர் சொடக்கு எடுக்கும் டெக்னிக்கை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது என்கிறார்.

1990 ஆம் ஆண்டு வெளியான ஒரு ஆய்வு 226 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளது. அதில் சொடக்கு எடுப்பதை பழக்கமாகக் கொண்ட 74 பேரை ஆய்வு செய்துள்ளது. அப்போது அவர்களின் விரல்களில் பிடிப்பின் பலம் குறைவாகவும், கை வீக்கம் இருந்துள்ளது. மற்றவர்களுக்கு அதே கீழ்வாதம் பாதிப்பு மற்றும் பிரச்சனை இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

சொடக்கு எடுக்கும்போது சத்தம் எப்படி வருகிறது..?

சொடக்கு எடுக்கும் போது எப்படி சத்தம் வருகிறது என்பதற்கு உறுதியான காரணங்கள் கண்டுபிடிக்கவில்லை. எலும்புகளுக்கு கீழே உள்ள முழங்காற்சில்லு உரசும் போது சத்தம் வரலாம் என்று கூறப்படுகிறது.

இறுதியாக சொடக்கு எடுப்பதால் எந்த பாதிப்பு இல்லை. அதேசமயம் உங்கள் அன்புக்குரியவர் அடிக்கடி சொடக்கு எடுக்கும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும் என நினைத்தால் எலும்புகள் பாதிப்படையும் என்று சொல்வதே சரியாக இருக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

யூரிக் அமிலத்தின் அளவை குறைக்க வேண்டுமா..? இந்த 5 இலைகளை சாப்பிடுங்க.. எளிதில் குறைச்சிடலாம்..!

June 21, 2023 0

 உடலில் புரதச் சிதைவு காரணமாக யூரிக் அமிலம் உருவாகத் தொடங்கும் போது, ​​கீல்வாதம் ஒரு நோய் உண்டாகிறது. இந்த நோயில், மூட்டுகளில் கடுமையான வலி உண்டாகும். ஏனெனில் மூட்டுகளின் குருத்தெலும்புகள் தேய்மானமடைமதே இந்த வலிக்கு காரணம் . பொதுவாக, யூரிக் அமிலம் சிறுநீரகங்கள் மூலம் சிறுநீர் வழியாக வெளியேறும். உடல் அதிக பியூரினை உருவாக்கத் தொடங்கும்போது, ​​சிறுநீரகங்களால் அதை வெளியேற்ற முடியாது. பிறகு, இந்த அதிகப்படியான யூரிக் அமிலம் உடலின் மூட்டுகளின் குருத்தெலும்புகளில் குவியத் தொடங்குகிறது.பின் இது வீக்கத்தை ஏற்படுத்துகிறது. இதனால் மூட்டு வலி ஏற்படுகிறது.

ஒரு சாதாரண நபருக்கு யூரிக் அமிலம் ஒரு டெசிலிட்டருக்கு 3.5 முதல் 7.2 மில்லிகிராம் வரம்பில் இருக்க வேண்டும். இந்த அளவை தாண்டினால் விவரிக்க முடியாத மூட்டு வலியை அனுபவிக்கக்கூடும். எனவே உங்கள் உடலில் யூரிக் அமிலங்களின் அளவை இயற்கையான முறையில் குறைக்க வேண்டுமெனில் இந்த உணவுகளை சாப்பிட்டால் கட்டுக்குள் வைத்திருக்கலாம்.

1. புதினா இலைகள்- புதினா இலைகளில் போதுமான அளவு இரும்பு, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் ஏ, ஃபோலேட் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. புதினா இலைகளை சாப்பிடுவதால் சிறுநீரில் உள்ள பியூரின்கள் வெளியேறும். புதினா உடலையும் நச்சு நீக்குகிறது

2. கொத்தமல்லி இலைகள்- Onmanorama இணையதளத்தின் படி, கொத்தமல்லி இலைகள் வாசனைக்கு பெயர் பெற்றவை. ஆனால் இதில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. கால்சியம், பொட்டாசியம், தியாமின், பாஸ்பரஸ், வைட்டமின் சி, வைட்டமின் கே போன்ற பல சத்துக்கள் கொத்தமல்லி இலையில் உள்ளன. கொத்தமல்லி இரத்தத்தில் உள்ள கிரியேட்டினின் அளவையும் யூரிக் அமிலத்தையும் குறைக்கிறது.

3. பிரிஞ்சி இலை : பிரிஞ்சி இலையும் பல மருத்துவ குணங்கள் நிறைந்தது. பிரிஞ்சி இலை அழற்சி எதிர்ப்பு சக்தி கொண்டது. பிரிஞ்சி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்த பிறகு, அதன் தண்ணீரை குடிக்கலாம். இதனால் மூட்டு வலி குறையும்.

4. வெற்றிலை பாக்கு- வெற்றிலையை மென்று சாப்பிடுவதும் சிறுநீர் மூலம் யூரிக் அமிலத்தை வெளியேற்றுகிறது. நாள் முழுவதும் மூட்டு வலி பிரச்சனை வராமல் இருக்க அதிகாலையில் வெற்றிலையை மென்று சாப்பிடலாம்.

5. கறிவேப்பிலை- கறிவேப்பிலை யூரிக் அமிலத்தை வெளியேற்றுவதில் நன்கு வேலை செய்யும். கறிவேப்பிலையை உட்கொள்வதால் இரத்தத்தில் தேங்கிய யூரிக் அமிலம் சிறுநீர் மூலம் வெளியேறும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு பொட்டாசியம் குறைபாடு இருக்கா.? இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க..!

June 21, 2023 0

 உங்கள் உடலில் உள்ள எலக்ட்ரோலைட்ஸ் ஆரோக்கியமான அளவில் பராமரிக்க வேண்டியது மிகவும் முக்கியம். அதற்கு நமது தினசரி உணவில் பொட்டாசியம் சத்து அதிகமுள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த 10 உணவுகளின் பட்டியல் இதோ..

வாழைப்பழம் : பொட்டாசியம் சத்து உங்களுக்கு கிடைக்க வேண்டுமென்றால் அதற்கு நாம் முதலில் சாப்பிட வேண்டியது வாழைப்பழம். இது எளிதில் கிடைக்க கூடியது மட்டுமல்லாமல் எல்லாரும் விரும்பக்கூடிய உணவு. இதில் பொட்டாசியம் மட்டும் அல்லாமல் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. ஒரு வாழைப்பழத்தில் ஏறக்குறைய 400-450 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளன.

சர்க்கரை வள்ளிக் கிழங்கு : இது மிகவும் சுவையானது. இதில் அதிகமான பொட்டாசியம் சத்து உள்ளது. ஒரு சர்க்கரை வள்ளிக் கிழங்கில் தாராளமாக 500 முதல் 600 மில்லி கிராம் பொட்டாசியம் சத்து இருக்கும்.

கீரைகள் : கீரைகள் எப்போதும் நம் உடலுக்கு நிறைய பலன்களை கொடுக்க கூடியது. இதில் அதிகளவு பொட்டாசியம் சத்து உள்ளது. அகவே இதை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அரை கப் சமைத்த கீரையில் ஏறக்குறைய 420 முதல் 450 மில்லிகிராம் வரையில் பொட்டாசியம் உள்ளது.

அவகோடா பழம் : இதை வெண்ணெய் பழம் என்றும் கூறுவார்கள். சாப்பிடுவதற்கு க்ரீமியாகவும் சுவையாகவும் இருக்கும். இந்தப் பழத்தில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. ஒரு அவகோடா பழத்தில் 700 முதல் 800 மில்லிகிராம் வரையில் பொட்டாசியம் சத்துள்ளது.

மொச்சை பயறு (வெள்ளை) : பருப்பு வகைகளில் மொச்சைப் பயிறில், அதுவும் குறிப்பாக வெள்ளை மொச்சைப் பயிறில் அதிகளவு பொட்டாசியம் உள்ளது. அரை கப் சமைத்த மொச்சைப் பயறுகளில் 600 முதல் 700 மில்லிகிராம் பொட்டாசியம் சத்துள்ளது.

தயிர் : தயிரில் கால்சியம் மற்றும் ப்ரோபயாடிக்ஸ் மட்டுமல்லாமல் பொட்டாசியம் சத்தும் அதிகமாக உள்ளன. ஒரு கப் தயிரில் ஏறக்குறைய 500 முதல் 600 மில்லிகிராம் பொட்டாசியம் உள்ளது.

சால்மன் மீன் : கொழுப்பு சத்து மிகுந்த இந்த சால்மன் மீனில் அதிகளவு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. அதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கு தேவையான பொட்டாசியம் சத்தையும் இந்த மீன் கொண்டுள்ளது. மூன்று அவுன்ஸ் சால்மன் மீனில் 300 முதல் 400 மில்லி கிராம் பொட்டாசியம் அடங்கியுள்ளது.

காளான் : குடை காளான் போன்ற பல வகை காளான்களில் பொட்டாசியம் சத்து அதிகளவில் உல்ளது. அரை கப் சமைத்த காளானில் 300 – 400 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

ஆரஞ்சு பழம் : சிட்ரஸ் பழ வகைகளில் ஒன்றான ஆரஞ்சு பழம் நம் உடலுக்கு மிகவும் புத்துணர்ச்சியை தரக் கூடியது. இதில் பொட்டாசியம் சத்தும் கொஞ்சம் உள்ளது. ஒரு ஆரஞ்சு பழத்தில் 200 முதல் 250 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

இளநீர் : இது ஒரு இயற்கை பானம். அதிக நீர்ச்சத்து கொண்டது. இதில் பொட்டாசியம் சத்து அதிகமாக உள்ளது. கால் லிட்டர் இளநீரில் 400 முதல் 600 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

June 20, 2023

சென்னை Cognizant ஐ.டி கம்பெனியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

June 20, 2023 0

 

சென்னை Cognizant ஐ.டி கம்பெனியில் சூப்பர் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

Cognizant ஐ.டி கம்பெனியில் காலியாக உள்ள Test Manager பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. Bachelor’s Degree முடித்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான அனைத்து விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கி உள்ளோம். அதன் மூலம் விண்ணப்பதாரர்கள் உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Cognizant காலிப்பணியிடங்கள்:

 Test Manager  பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate (Bachelor’s Degree in Computer Science)  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

மேற்கண்ட பணிக்கு 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

 தகுதி மற்றும் திறமை உள்ளவர்கள் Cognizant இணையதளம் சென்று பணி தொடர்பான அறிவிப்பை படித்து பார்த்து ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்ய வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் இன்னும் நிர்ணயம் செய்யப்படவில்லை. இருப்பினும் விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது.

Download Notification Pdf
Apply Online


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

June 20, 2023 0

 ஆயில் இந்தியா நிறுவனத்தில் ரூ.80,000/- சம்பளத்தில் வேலை – தேர்வு இல்லை || விண்ணப்பிக்கலாம் வாங்க!

ஆயில் இந்தியா ஆனது Drilling Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


Oil India காலிப்பணியிடங்கள்:

Drilling Engineer பணிக்கென காலியாக உள்ள 7 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Drilling Engineer கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Oil India வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 24 என்றும் அதிகபட்ச வயதானது 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Drilling Engineer ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.80,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Oil India தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.07.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DRDO ஆணையத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

June 20, 2023 0

 DRDO ஆணையத்தில் ரூ.31,000/- ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || உடனே விண்ணப்பியுங்கள்!

DRDO-ன் கீழ் Centre for Artificial Intelligence & Robotics (CAIR) ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/ B.Tech / ME/ M.Tech தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.CSIR-UGC (NET)/GATE தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (29.07.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.07.2023ம் தேதிக்குள் jrf.recruitment.blore@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

June 20, 2023 0

 

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Graduate Apprentice Engineers பணியிடங்களை நிரப்ப இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் இருந்து சமீபத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியானது. இந்த மத்திய அரசு பதவிக்குஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOCL இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Graduate Apprentice Engineers பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 26 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • இந்த பதவிக்கு விண்ணப்பதாரர்கள் GATE 2023 தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து B.Tech./BE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் Marks in GATE 2023 exam, Personal Interview (PI) மற்றும் Group Discussion (GD) and Group Task (GT) மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    https://iocl.com/latest-job-opening என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 22.06.2023 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

    Download Notification 2023 Pdf

    Download Notification 2023 Pdf

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,40,000/- || கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

June 20, 2023 0

 RITES நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.1,40,000/- || கல்வி தகுதி, வயது குறித்த முழு விவரங்களுடன்!

RITES நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Engineer, Ju+++++++++++++nior Manager, Senior Assistant பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RITES காலிப்பணியிடங்கள்:

RITES வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Engineer, Junior Manager, Senior Assistant பணிக்கென காலியாக உள்ள 42 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / Bachelor’s Degree Engineering / Master’s Degree / Diploma என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Assistant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.26,000/- முதல் ரூ.1,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

RITES விண்ணப்ப கட்டணம்:

General/OBC – ரூ.600/-

EWS/ SC/ST/ PWD – ரூ.300/-

Senior Assistant தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் முன் அனுபவத்தின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 15.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

June 20, 2023 0

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் மாதம் ரூ.15,000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு!

Central Bank of India ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், Supervisor பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Central Bank of India காலிப்பணியிடங்கள்:

Central Bank of India தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Supervisor பணிக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CBI வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 60 முதல் 65 வரை இருக்க வேண்டும்.

Central Bank of India கல்வித் தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் M. Sc. (IT)/ BE (IT)/ MCA/MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Central Bank of India ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.12,000/- முதல் ரூ.15,000/- வரை ஊதியமாக வழங்கப்படும்.

Central Bank of India தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Central Bank of India விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு இறுதி நாளுக்குள் (27.06.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

June 17, 2023

SSC Group A வேலைவாய்ப்பு 2023 – Level-12ன் படி ஊதியம்!

June 17, 2023 0

 

SSC Group A வேலைவாய்ப்பு 2023 – Level-12ன் படி ஊதியம்!

மத்திய பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Joint Director, Deputy Director மற்றும் Finance & Budget Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 6 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC காலிப்பணியிடங்கள்:
  • Joint Director (Examination Reforms) – 01 பணியிடம்
  • Joint Director (Research & Analysis) – 01 பணியிடம்
  • Deputy Director (Research & Analysis) – 01 பணியிடம்
  • Deputy Director (Electronic Data Processing) – 02 பணியிடங்கள்
  • Finance & Budget Officer – 01 பணியிடம்
Group A கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்ட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Joint Director (Examination Reforms) – Level-12 (Pre-revised pay scale PB-3GP- Rs. 7600)
  • Joint Director (Research & Analysis) – Level-12 (Pre-revised pay scale PB-3GP- Rs. 7600)
  • Deputy Director (Research & Analysis) – Level-11 (Pre-revised pay scale PB-3+ GP Rs. 6600)
  • Deputy Director (Electronic Data Processing) – Level-11 (Pre-revised pay scale PB-3+ GP Rs. 6600)
  • Finance & Budget Officer – Level-10 (Pre-revised pay scale PB-3+ GP – Rs. 5400)
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு https://ssc.nic.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் அறிவிப்பு வெளியான 60 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

June 17, 2023 0

 

தமிழ்நாடு மீன்வளத்துறை பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.20,000/-

தமிழ்நாடு டாக்டர் ஜெ.எம்.ஜெயலலிதா மீன்வளத்துறை பல்கலைக்கழகம் ஆனது Junior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு என 01 பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNJFU காலிப்பணியிடங்கள்:

இப்பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

மீன்வளத்துறை பல்கலைக்கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s/Master’s degree in Fisheries Science or M.Sc degree in Life Science/Biotechnology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

TNJFU சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.20,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். ஆன்லைன் நேர்காணல் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வம் உள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 24.06.2023 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Download Notification Pdf


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news