Agri Info

Adding Green to your Life

July 18, 2023

பழங்களை சாப்பிடுவதற்கான விதிமுறைகள் தெரியுமா..? ஆயுர்வேதம் சொல்லும் டிப்ஸ்..!

July 18, 2023 0

 நம் உடல் ஆரோக்கியத்திற்கு பழங்கள் எந்த அளவுக்கு முக்கியம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதிலும் பச்சை காய்கறிகள் மற்றும் வண்ணமயமான பழங்களை சாப்பிட வேண்டியதன் அவசியம் குறித்து சமூக வலைதளங்கள் மூலமாக ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக மக்களின் நுகர்வு அதிகரித்துள்ளது.

பழங்களை சாப்பிட்டால் ரத்த அழுத்தம் குறையும் மற்றும் இதய நோய்க்கான ஆபத்துகள் குறைகின்றன. இது மட்டுமல்லாமல், புற்றுநோயை உருவாக்குகின்ற செல்களை மட்டுப்படுத்தும். பழங்களின் தேவை குறித்து அறிந்து வைத்திருக்கும் அளவுக்கு, அதை எவ்வளவு சாப்பிட வேண்டும், எதனுடன் சேர்த்து சாப்பிடக் கூடாது என்ற விவரங்கள் பலருக்கும் தெரிவதில்லை.

இந்த நிலையில், பழங்களை எப்படி சாப்பிட வேண்டும், எப்படியெல்லாம் சாப்பிடக் கூடாது என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் டிம்பிள் ஜங்க்டா விளக்கம் அளித்துள்ளார். அதை இப்போது பார்க்கலாம்.

துவர்ப்பு சுவையுள்ள பழங்கள் : ஆப்பிள், பேரிக்காய், முழுமையாக பழுக்காத வாழைப்பழம், கிரேன்பெர்ரி, மாதுளை, பெர்ரி, செர்ரி, ஸ்ட்ராபெர்ரி போன்றவையெல்லாம் துவர்ப்பு தன்மை கொண்ட பழங்களாகும். இவை வறண்டு காணப்படும். ஆனால் குளிர்ச்சி தரக் கூடியவை. இதுபோன்ற சுவையுள்ள பழங்கள் நம் திசுக்களை வலுப்படுத்தும், வியர்வையை குறைக்கும் மற்றும் உஷ்ணத்தை மட்டுப்படுத்தும்.

புளிப்பு சுவையுள்ள பழங்கள் : எலுமிச்சை, செர்ரி தக்காளி, ஆரஞ்சு, திராட்சை, பிளம்ஸ், கிவி போன்றவை புளிப்பு சுவை கொண்ட பழங்கள் ஆகும். இவை வாயில் ஈரப்பதத்தை அதிகப்படுத்தி, எச்சில் சுரப்பை மேம்படுத்தும். நம் உடலில் பைல் திரவ உற்பத்தியை மேம்படுத்தும் மற்றும் திசுக்களை சுத்தம் செய்ய உதவும்.

இனிப்பான பழங்கள் : மாம்பழம், வாழைப்பழம், பப்பாளி, மஸ்க் மெலான், அவகோடோ, அன்னாசி போன்றவை இனிப்பு சுவை கொண்ட பழங்கள் ஆகும். இவை நம் உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும். எலும்புகள், தசைகள், பல், நகங்கள் மற்றும் முடி ஆகியவற்றை பலப்படுத்த இனிப்பு சுவை உறுதுணையாக அமையும் என்று ஆயுர்வேதம் தெரிவிக்கிறது.

பழங்களுக்கான கட்டுப்பாடுகள் : 

பழங்களை தனியாக சாப்பிட வேண்டும். பழங்களுடன் பருப்புகள், காய்கறிகள், பால், தயிர், இறைச்சி போன்றவற்றை கலக்க கூடாது. ஏனென்றால் அவை செரிமானம் ஆகாமல் கழிவுகளாக மாறிவிடும். பழங்கள் வெகுவிரைவாக செரிமானம் ஆகிவிடும். வயிற்றில் ஒரு மணி நேரம், சிறுகுடலில் ஒரு மணி நேரம், பெருங்குடலில் ஒரு மணி நேரம் என்பதுதான் பழங்களின் செரிமான நேரம் ஆகும்.
சூரிய அஸ்த்தமனத்திற்குப் பிறகு பழங்களை சாப்பிடக் கூடாது. தூங்குவதற்கு முன்பாக பழங்களை சாப்பிடும் பழக்கம் இருக்கிறது. இது உங்கள் ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும். உங்களை சுறுசுறுப்பாக்கி தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

வெவ்வேறு இன வகையுடன் பழங்களை சேர்க்க கூடாது. உதாரணத்திற்கு ஆப்பிளையும், மாம்பழத்தையும் ஒன்றாக சாப்பிடக் கூடாது. இது செரிமானக் கோளாறை உருவாக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

July 14, 2023

தினசரி நாம் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும்..? இதனால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன..?

July 14, 2023 0

 நாம் உயிர் வாழ நீர் மிக அவசியமானது என்று எல்லோரும் அறிந்து வைத்திருப்போம். ஆனால், தினசரி எவ்வளவு தண்ணீர் அருந்த வேண்டும், நம் உடலுக்கு எவ்வளவு தான் தண்ணீர் தேவை என்பது நமக்கு தெரிந்திருக்காது. நம் உடலில் 50 முதல் 60 சதவீதம் நீர்ச்சத்து நிரம்பியுள்ளது.

தினசரி தண்ணீர் தேவையை நேரடியாக குடிநீரில் இருந்து மட்டுமே பெற வேண்டும் என்பதில்லை. பழங்கள், பழச்சாறுகள், இளநீர், பானங்கள் போன்றவற்றில் இருக்கக் கூடிய நீர்ச்சத்தும் இதில் அடக்கமாகும். பொதுவாக பெண்கள் 11.5 கப் அளவும், ஆண்கள் 15.5 கப் அளவும் தினசரி தண்ணீர் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.

நாம் உண்ணும் உணவுகளின் மூலமாக நமக்கான 20 சதவீத நீர்ச்சத்து தேவை கிடைத்து விடுமாம். எஞ்சியுள்ள 80 சதவீத நீர் தேவையை நாம் குடிநீர், பானங்கள் மூலமாக ஈடுகட்டிக் கொள்ள வேண்டும். மேற்குறிப்பிட்ட அளவுகள் ஒரு சராசரி கணக்கு மட்டுமே. தினசரி எவ்வளவு தண்ணீர் துல்லியமாக தேவை என்பது ஒவ்வொரு நபருக்கும், ஒவ்வொரு நாளுக்குமே கூட வேறுபடும்.

வியர்வை, சிறுநீர் போன்றவற்றின் மூலமாக எவ்வளவு நீர்ச்சத்து வெளியேறுகிறது, நமது மூச்சுக்காற்றின் ஈரப்பதம் உள்பட பல காரணங்களின் அடிப்படையில் நீர்ச்சத்து தேவை மாறுபடுகிறது.நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக இயங்குகிறோம், சுற்றியுள்ள சிதோஷ்ண நிலை என்ன மற்றும் நம் உடல்நிலை என்ன என்பதைப் பொருத்தும் நீர்ச்சத்து தேவை மாறுபடுகிறது. 6 மாதங்களுக்கு உட்பட்ட பச்சிளம் குழந்தைகளுக்கு நாம் தண்ணீர் கொடுக்கவே தேவையில்லை என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

தாய்ப்பால் மற்றும் பரிந்துரை செய்யப்பட்ட அளவிலான புட்டிப்பால் ஆகியவற்றின் மூலமாகவே குழந்தைகளின் நீர்ச்சத்து தேவை பூர்த்தி ஆகிவிடும். குழந்தைகளுக்கு உணவூட்ட தொடங்கும்போது, அவர்களது உணவில் கொஞ்சம், கொஞ்சமாக நீர் சேர்த்துக் கொள்ளலாம். குழந்தைகளுக்கு 4 முதல் 8 அவுன்ஸ் வரையில் தண்ணீர் தேவைப்படும்.

குழந்தைக்கு ஒரு வயது நிரம்பிய நிலையில், அவர்களுக்கு கொடுக்கப்படும் தண்ணீரின் அளவை நாம் அதிகரித்துக் கொள்ளலாம். கோடை காலங்களில் மிகுதியாகவும், மழை மற்றும் குளிர் காலங்களில் குறைவாகவும் தண்ணீர் தேவை இருக்கும்.

தண்ணீர் அருந்துவதால் கிடைக்கும் பலன்கள் : 

  • நம் உடலின் ஒட்டுமொத்த இயக்கமும் நீர்ச்சத்தை நம்பி உள்ளது. போதுமான அளவில் தண்ணீர் குடித்தால் மட்டுமே உடலில் உஷ்ணம் அதிகரிக்காமல் வெப்பநிலை சீரான அளவில் இருக்கும். திசுக்கள் பாதுகாக்கப்படும் மற்றும் மூட்டுகளில் ஈரப்பதம் கிடைக்கும்.
  • உடலில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சுக்களை சிறுநீர், வியர்வை மற்றும் மலம் ஆகியவை மூலமாக வெளியேற்றுவதற்கும் நீர்ச்சத்து அவசியமான தேவையாகும்.
  • வேறென்ன பலன்கள் கிடைக்கும்..!

    • பொதுவாக நீர்ச்சத்தை தக்க வைத்துக் கொண்டால் வயோதிக பிரச்சினைகள் அதிகரிக்காது. இளமையான தோற்றம் நீடிக்கும்.
    • டைப் 2 வகை நீரிழிவு கட்டுப்படுத்தப்படும்.
    • உடல் பருமன் தவிர்க்கப்படும் மற்றும் உடல் எடை சீரான அளவில் இருக்கும்.
    • மலச்சிக்கல் பிரச்சினை இருக்காது. மலம் இலகுவாக வெளியேறும்.
    • நம் சருமங்களில் சுருக்கம் ஏற்படாமல் புத்துணர்ச்சியாக இருக்க நீர்ச்சத்து அவசியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மழைக்காலத்தில் வரும் சளி , காய்ச்சலுக்கு உதவும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்த உணவுகள்..!

July 14, 2023 0

 மழைக்காலம் தொடங்கிவிட்டது. வெப்பம் தணிந்து ஊரே குளுமை அடைந்து வருகிறது. நீர் தீண்டும் அளவு இன்னும் மழையை ஆரம்பிக்கவில்லை என்றாலும் மாநிலத்தின் பெரும்பகுதிகளில் மழை பெய்ய ஆரம்பித்து விட்டன. மழைக்காலத்தில் கிருமிகள் வளரவும், பரவவும் அதிக வாய்ப்புகள் உள்ளன.

நமது உடலின் எதிர்ப்பு சக்தியும் குறையும். அதற்கு சில உணவு பொருட்களை நமது தினசரி வாழ்க்கையில் சேர்த்துக்கொள்வது நல்லது. அது இந்த மழை காலத்தில் நமது உடல் நோய்வாய்ப்படாமல் இருக்க பேருதவியாக இருக்கும். அப்படியா சிலவற்றை இப்போது உங்களுக்கு சொல்கிறோம்.

இஞ்சி மற்றும் பூண்டு உணவில் சேர்ப்பது சுவைத்தாண்டி பல மருத்துவ நன்மைகளை கொடுக்கும். இருமல் மற்றும் சளிக்கு மருந்தாக பயன்படுத்தலாம். இஞ்சியில் ஜிஞ்சரோல்ஸ், பாரடோல்ஸ், செஸ்கிடர்பீன்ஸ், ஷோகோல்ஸ் மற்றும் ஜிங்கரோன் ஆகியவை நிறைந்துள்ளன, இவை உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். அது மட்டும் அல்லாமல் அழற்சி உணவுக்கு எதிரான  ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும். பூண்டில் உள்ள அல்லிசின் சளியை குறைக்கும்.

பால் பொருட்கள் : பால், தயிர், வெண்ணை, நெய் உள்ளிட்ட பால் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளாகும். இதிலுள்ள புரோபயாடிக்குகள் செரிமானத்திற்கு உதவும். புரதங்கள், கொழுப்புகள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ள குறைந்த கொழுப்புள்ள தயிர், பால் பொருட்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

சிட்ரஸ் பழங்கள்: ஆரஞ்சு, எலுமிச்சை மற்றும் திராட்சைப்பழம் போன்ற சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நமது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த அவசியம். வைட்டமின் சி வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது, இது தொற்றுநோய்களை எதிர்த்துப் போராட உதவும்.

உலர் பழங்கள் மற்றும் கொட்டைகள்: சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமாகும். பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் முந்திரி போன்ற கொட்டைகள் கொண்ட வைட்டமின் ஈ உங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறந்த ஆக்ஸிஜனேற்றிகளாக செயல்படும். மேலும், அவற்றில் புரதங்கள் மற்றும் கொழுப்புகள் அதிகமாக உள்ளன, இது அதிக நேரம் ஆற்றல் அளவை வைத்திருக்கும்.

க்ரீன் டீயில் கேட்டசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிரம்பியுள்ளன, இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதில் L-theanine என்ற அமினோ அமிலமும் உள்ளது. இது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் வைரஸ் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. காலையில் ஒரு கப் கிரீன் டீ குடிப்பது  உங்கள் நோயெதிர்ப்பு அமைப்புக்கு ஆரோக்கியமான தேர்வாக இருக்கும்.

சக்கரைவள்ளிக்கிழங்கில் பீட்டா கரோட்டின் அதிகமாக இருப்பதால் இது மிகவும் நன்மை பயக்கும், இது வெள்ளை இரத்த அணுக்களை அதிகரித்து  உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

பெர்ரி : நெல்லி, ஸ்ட்ராபெர்ரி, அவுரிநெல்லிகள் மற்றும் ராஸ்பெர்ரி போன்ற பெர்ரிகளில் ஆக்ஸிஜனேற்றிகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அதிகம் உள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக போராட உதவுவதோடு நமது நோயெதிர்ப்பு மண்டலத்தின் ஒட்டுமொத்த செயல்பாட்டை மேம்படுத்தும்.

பச்சை இலை காய்கறிகள் : கீரை, கோஸ் மற்றும் ப்ரோக்கோலி போன்ற பச்சை இலைக் காய்கறிகள் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளன. அவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவுகின்றன. இந்த காய்கறிகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது, இது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. ஆனால் மழை காலத்தில் இதை சமைக்கும் முன்னர் நன்கு கழுவி பூசிக்க புழுக்கள் இல்லை என்பதை உறுதி செய்து கொள்ளவும். இல்லையேல் நோய் வரும் காரணமாக இது மாறிவிடும்.

மஞ்சள் ஒரு இயற்கையான அழற்சி எதிர்ப்பு மசாலா ஆகும். இது பல நூற்றாண்டுகளாக பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இதில் குர்குமின் என்ற கலவை உள்ளது. இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. பால் மற்றும் உணவுகளில் தினமும் பால் சேர்ப்பது நன்மை பயக்கும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

July 13, 2023

1066 சுகாதார ஆய்வாளர் காலிப் பணியிடங்கள் - எவ்வித எழுத்துத் தேர்வும் இல்லை : உடனே அப்ளை பண்ணுங்க

July 13, 2023 0

 தமிழ்நாடு மருத்துவ பணிகளில் அடங்கிய சுகாதார ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் ( Medical Service Recruitment Board - MRB) வெளியிட்டுள்ளது. இந்த பதவிக்கு ஆண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மருத்துவ சார்நிலைப் பணிகளில் அடங்கிய பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பட உள்ளன.

பதவியின் பெயர்: சுகாதார ஆய்வாளர் (Health Inspector Grade-II)

காலியிடங்கள் எண்ணிக்கை:  1,066

கல்வித் தகுதி : உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தைக் கொண்டு 12ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

10ம் வகுப்பில் தமிழை பாடமாகக் கொண்டு தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர், தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மற்றும் நோய் தடுப்பு மருந்து துறையால் வழங்கப்பட்ட இரண்டு வருட  Health Worker (Male) course / Health Inspector/ Sanitary Inspector சான்றிதழ் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதிய விவரம்: இந்த பதவிக்கு ரூ. 19,500 முதல் ரூ.62,000 வரை மாத ஊதியமாக வழங்கப்படும். (Pay Matrix Level-11)

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 01.07.2023 அன்று 18-32க்குள் இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசு இடஒதுக்கீடு விதிமுறைகளின் படி,  அதிகபட்ச வயதுவரம்பில் தளர்வுகள் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை :  இந்த பதவிக்கு எவ்வித எழுத்துத் தேர்வும் கிடையாது. 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு,    சான்றிதழ் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் இறுதி தகுதி பட்டியல் தயாரிக்கப்படும்.  பத்தாம் வகுப்பு மதிப்பெண்கள் 20%- க்கும், 12 -ஆம் வகுப்பு மதிப்பெண்கள் 30%- க்கும், சான்றிதழ் படிப்பு மதிப்பெண்கள் 50%- க்கும் கணக்கிடப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.600 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், அருந்ததியர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.300 ஐ விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும். பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.500 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை :

 இதற்கு விண்ணப்பிக்க https://mrbonline.in/ - என்ற அங்கீகரிக்கப்பட்ட வலைதள முகவரியில் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த தேர்வு குறித்த மேற்படி விவரங்களை தெரிந்து கொள்ள இந்தஇணைப்பைக் கிளிக் செய்யலாம்.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இளம் பொறியாளர் பட்டதாரி திட்டம் : வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 58% முன்னுரிமை.. ஆல்ஸ்டாங் இந்தியா அதிரடி

July 13, 2023 0

 இளம் பொறியாளர் பட்டதாரி திட்டம் – 2023 இன் கீழ் புதிதாக 700 பொறியாளர்களை தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் 58% பேர் பெண்கள் என்றும் ஆல்ஸ்டாம் (Alstom) நிறுவனம் தெரிவித்துள்ளது.

இளம் பொறியாளர் பட்டதாரி திட்டத்தின் கீழ் நாட்டிலேயே அதிகபட்ச ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவது இதுவே முதல்முறை என்று ஆல்ஸ்டாம் நிறுவனம் கூறியுள்ளது. வேலைவாய்ப்பில் உள்நாடு மற்றும் சர்வதேச அளவிலான தேவைகளுக்கு ஏற்ப திறன் வாய்ந்த பொறியாளர்களை உருவாக்கும் நோக்குடன் இளம் பொறியாளர் பட்டதாரி திட்டத்தை ஆல்ஸ்டாம் நிறுவனம் கடந்த 2015 ஆம் ஆண்டில் இருந்து செயல்படுத்தி வருகிறது.

இதன் கீழ் தேர்வு செய்யப்படும் பொறியாளர்களுக்கு 14 நாட்கள் சிறப்பு பயிற்சி வழங்கப்படுகிறது. அப்போது ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடும் வாய்ப்பை இவர்களுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலமாக இந்த நிறுவனத்தின் செயல்பாடு, வணிக நடவடிக்கைகள், திட்டம் மற்றும் நோக்கம் ஆகியவை குறித்து பொறியாளர்கள் புரிந்து கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கப்படுகிறது.

இளநிலை பட்டதாரிகள் மற்றும் முதுநிலை பட்டதாரிகள் என இரண்டு வகையாக தேர்வர்கள் பிரிக்கப்பட்டு அவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான பயிற்சி வழங்கப்படுகிறது. செயல்திட்ட பொறியாளர், ரயில் வடிவமைப்பு பொறியாளர், ரயில் இயக்க பொறியாளர், பரிசோதனை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பொறியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.

பின்னர் உள்நாட்டு அளவிலும், வெளிநாட்டு அளவிலும் செயல்பட்டு வருகின்ற ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் 4 பொறியாளர் கேந்திரங்கள், 6 உற்பத்தி ஆலைகள் ஆகியவற்றில் இந்த பொறியாளர்கள் பணியமர்த்தப்படுவார்கள்.

Alstom's #YoungEngineeringGraduateProgram empowers India's future talent!
We are set to onboard 700 graduate engineers talent and train them to take up roles catering to domestic & international mobility projects🚀#YEGP2023

இதுகுறித்து ஆல்ஸ்டாம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “ரயில் போக்குவரத்து மற்றும் கட்டமைப்பு தொடர்பான தொழில்துறை மிக வேகமாக வளர்ச்சி கண்டு வருகிறது. அதன் தேவைக்கு ஏற்ப இளம் பொறியாளர் பட்டதாரிகளை தேர்வு செய்வதில் நாங்கள் பெருமை அடைகிறோம். எதிர்காலத்திற்கு தேவையான திறன் வாய்ந்த இந்திய பணியாளர்களை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாக கொண்டுள்ளோம்” என்று கூறினார்.

மும்முரமாக நடைபெற்ற ஆள்சேர்க்கை:  தங்கள் நிறுவனத்திற்கு திறன் வாய்ந்த பொறியாளர்களை தேர்வு செய்யும் விதமாக நாடெங்கிலும் ஆல்ஸ்டாம் நிறுவன அதிகாரிகள் சுற்றுப்பயணம் செய்து பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். வடகிழக்கு மாநிலங்கள் முதல் குஜராத் வரை, காஷ்மீர் முதல் கேரளா வரை என 26 மாநிலங்களில் பயணித்துள்ளனர்.

சிறப்பு வாய்ந்த 54 பல்கலைக்கழகங்களுக்கு நேரில் சென்று மாணவர்களிடம் நேர்காணல் நடத்தி பணியாளர்களை தேர்வு செய்துள்ளனர். மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், இன்ஸ்ட்ருமெண்டேஷன் போன்ற பிரிவுகளின் கீழ் பயின்ற மாணவர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்துள்ளது.


NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

July 13, 2023 0


NTPC நிறுவனத்தில் Associate வேலைவாய்ப்பு – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Associate பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை NTPC நிறுவனம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. Degree/Diploma in Engineering தேர்ச்சியுடன் 35 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

NTPC காலிப்பணியிடங்கள்:

NTPC வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Associate பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Associate தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Degree/Diploma in Engineering தேர்ச்சியுடன் 35 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டவர்கள்(Retired Executives from PSUs/Govt. organisations/organisations) இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTPC வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 62 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Associate ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு NTPC-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

NTPC தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 17.07.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் Technical Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

July 13, 2023 0

 

TCS நிறுவனத்தில் Technical Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பங்கள் வரவேற்பு!

TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) என்பது மிகப்பெரிய இந்திய பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப (IT) சேவை மற்றும் ஆலோசனை நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. B.E தேர்ச்சி பெற்று வேலை தேடும் நபர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Blue Yonder Technical Consultant பதவிக்கான தகுதி, அனுபவம், வயது வரம்பு மற்றும் விண்ணப்பங்களை செலுத்தும் செயல்முறைகள் குறித்த விவரங்களை விரிவாக காணலாம்.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து B.E. படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

4 முதல் 14 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

விண்ணப்பிக்கும் முறை:
  • TCS ibegin போர்ட்டலில் உள்நுழையவும்.
  • இப்போது TCS ஆஃப் கேம்பஸ் பணியமர்த்தல் செயல்முறைக்கு பதிவுசெய்து விண்ணப்பிக்கவும்
  • இப்போது, நீங்கள் ஏற்கனவே பதிவு செய்த பயனராக இருந்தால் ibegin போர்ட்டலில் உள்நுழைந்து விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்யவும்.
  • படிவத்தை சமர்ப்பித்ததும் ‘Apply For Drive’ என்பதைக் கிளிக் செய்யவும்.
  • ஒருவேளை, நீங்கள் ஒரு புதிய பயனராக இருந்தால் ‘இப்போது பதிவு செய்’ என்பதைக் கிளிக் செய்து ‘IT’ வகையை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் விவரங்களை நிரப்ப தொடரவும்.
  • விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து, Apply For Drive என்பதைக் கிளிக் செய்யவும்.
  • இப்போது விண்ணப்ப நிலையை உறுதிப்படுத்த, “உங்கள் விண்ணப்பத்தைக் கண்காணிக்கவும்” என்பதை சரிபார்க்கவும்.

Download Notification 2023 Pdf
Apply Online

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – Junior Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.18,000/-

July 13, 2023 0

 

IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – Junior Executive காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.18,000/-

தமிழ்நாட்டில் உள்ள ஜூனியர் எக்ஸிகியூட்டிவ் பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-07-2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

Junior Executive பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் Degree in Logistics Management, B.Com, M.Com ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

Executive வயது வரம்பு:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி மெட்ராஸ் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 28 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Document Verification/ Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

Junior Executive பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.18,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 12-07-2023 முதல் 31-ஜூலை-2023 வரை விண்ணப்பிக்கலாம்.

ஸ்கூல் போகும் உங்கள் பிள்ளைகளின் லஞ்ச் பாக்ஸை ஆரோக்கியமானதாக மாற்ற டிப்ஸ்..!

July 13, 2023 0

 முன்பெல்லாம் இதயம் சார்ந்த பிரச்சனைகளால் முதியவர்கள் மட்டுமே அதிகம் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது இளவயதினரும் கூட இந்த அபாயகர பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலை காரணமாக சிறு வயது முதலே இதய ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தியே ஆக வேண்டும் என்ற எச்சரிக்கை மணியை நம் சமுகத்திற்கு அடித்துள்ளது.

தற்போது பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளதால் குழந்தைகள் பள்ளிக்கு செல்வது, படிப்பு என பிஸியாக இருந்து வருகின்றனர். இந்த சூழலில் அவர்களின் இதய ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்க தேவையான உணவுகளை அவர்களை சாப்பிட வைக்கும் பெரும் பொறுப்பு பெற்றோர்களுக்கு இருக்கிறது. குழந்தைகளிடத்தில் சமச்சீரான டயட்டின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவது மிக முக்கியம். ஏனென்றால் இது ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரம் மேலோங்கி இருக்கும் காலமாக இருக்கிறது. குறிப்பாக தற்காலத்தில் பல குழந்தைகளை பாதிக்கும் பொதுவான ஒரு சிக்கலாக இருக்கிறது உடல் பருமன். இதன் காரணமாக குழந்தைகளுக்கு கொடுத்தனுப்பும் லஞ்ச் பாக்ஸில் கூட சத்துமிக்க உணவுகளை இடம்பெற செய்வது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்கிறார் ஏஷியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்டில் பணியாற்றும் பிரபல கார்டியலஜிஸ்ட் டாக்டர் அபிஜித் போர்ஸ்.

குழந்தைகளிடத்தில் பிஸிக்கல் ஆக்டிவிட்டீஸ்களை ஊக்குவிப்பது, அவர்கள் சாப்பிடும் உணவுகளில் சர்க்கரை மற்றும் கொழுப்பை குறைப்பது, ஊட்டச்சத்துக்கள் மிக்க உணவுகளை அவர்களின் டயட்டில் சேர்ப்பது, அதிக நேரம் உட்கார்ந்தே இருக்கும் வாழக்கை முறையிலிருந்து அவர்களை விலக்கி வைப்பது உள்ளிட்ட நடவடிக்கைகள் அவர்களின் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் முக்கிய வழிகளாக இருக்கும் என்றார்.

ஃபாஸ்ட் ஃபுட் கலாச்சாரத்தின் தாக்கம்: சமீபத்திய ஆண்டுகளாக முன்பை விட மலிவான விலையில் மற்றும் அதிக இடங்களில் துரித உணவுகள் கிடைக்கின்றன. துரித உணவுகளின் சுவைக்கு அடிமையாகும் குழந்தைகள் தொடர்ந்து அவற்றை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனால் பாதிக்கப்படுகின்றனர். இதற்கு முக்கிய காரணம் துரித உணவுகளில் பெரும்பாலும் ஆரோக்கியமற்ற கொழுப்புகள், சர்க்கரை மற்றும் சோடியம் மிக அதிகமாக சேர்க்கப்படுகிறது. அதே நேரம் இந்த உணவுகளில் பெரும்பாலும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் எதுவுமே சேர்க்கப்படுவதில்லை.

இது போன்ற ஆரோக்கியமற்ற உணவுகளை தொடர்ந்து சாப்பிடுவது ஆட்டோமேட்டிக்காக உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. தவிர கொலஸ்ட்ரால் லெவல் அதிகரிப்பதோடு எதிர்காலத்தில் இதய நோய்கள் ஏற்படுவதற்கான அபாயங்களும் அதிகரிக்கின்றன. எனவே மத்திய உணவு உட்பட ஒரு நாளின் சாப்பிடும் அனைத்து நேரங்களிலும் ஆரோக்கியமான உணவுகள் அடங்கிய டயட்டை பராமரிப்பது குழந்தைகளின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவுகிறது.

ஆரோக்கிய இதயத்திற்கு உதவும் பேலன்ஸ்ட் டயட்: இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் சமச்சீர் டயட் முக்கிய பங்கு வகிக்கிறது. சமச்சீரான டயட்டில் நம் உடலுக்கு தேவையான வைட்டமின்ஸ், மினரல்ஸ் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களை வழங்கும் பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் அடங்கும். பள்ளி செல்லும் உங்கள் குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்ஸ் ரெடி செய்யும் போது பின்வரும் டிப்ஸ்களை பின்பற்றுங்கள்....

பழங்கள் & காய்கறிகள்: குழந்தைகளுக்கு பள்ளிக்கு கொடுத்தனுப்பும் ஸ்னாக்ஸ் & லஞ்ச் பாக்ஸ்களில் வண்ணமயமான பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்ப்பது அவசியம். இவற்றில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்திருப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.

முழு தானியங்கள்: ரீஃபைன்ட் ஆப்ஷன்களை விட நார்ச்சத்து நிரம்பிய முழு தானிய ரொட்டி, பாஸ்தா மற்றும் தானிய வகைகளை தேர்வு செய்து அவர்களின் டயட்டில் சேர்ப்பது சிறந்த செரிமானத்திற்கு உதவுகிறது. தவிர முழு தானியங்கள்ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதோடு, இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

லோ-ஃபேட் ப்ரோடீன்ஸ்: பருப்பு வகைகள் மற்றும் டோஃபு போன்ற லீன் அல்லது லோ-ஃபேட் சேச்சுரேட்டட் ப்ரோடீன் நிறைந்த உணவுகளை சேர்க்கலாம்.

ஆரோக்கிய கொழுப்புகள்: அவகேடோ, நட்ஸ், சீட்ஸ் மற்றும் ஆலிவ் ஆயில் போன்றவற்றில் ஆரோக்கிய கொழுப்புகள் உள்ளன. ஹெல்தி ஃபேட்ஸ் எனப்படும் ஆரோக்கிய கொழுப்புகள் அழற்சியை குறைக்கவும், கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்த உதவி இதய ஆரோக்கியத்திற்கு நன்மைகள் செய்கின்றன.

குறைவான சர்க்கரை: பொதுவாக குழந்தைகளுக்கு சர்க்கரை பானங்கள், பதப்படுத்தப்பட்ட ஸ்னாக்ஸ்கள் மற்றும் இனிப்பு வகைகளை கொடுப்பதை படிப்படியாக கட்டுப்படுத்துங்கள். ஃபிரெஷ்ஷான பழங்கள், ஹோம்மேட் கிரானோலா பார்ஸ், யோகர்ட் உள்ளிட்டவற்றை அவர்களின் டயட்டில் சேருங்கள். ஆடட் சுகர்ஸ் மற்றும் அன்ஹெல்தி ஃபேட்ஸ் உள்ளிட்டவற்றை குறைப்பதன் மூலம் உடல் பருமனை தவிர்த்து இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம்.

இவை தவிர உடல் செயல்பாடுகள் இதய ஆரோக்கியத்திற்கு முக்கியம். எனவே தினசரி உடற்பயிற்சி, பள்ளி நேரத்திற்கு பிறகு அவுட்டோர் கேம்ஸ் உள்ளிட்ட பிசிக்கல் ஆக்டிவிட்டீஸ்களில் ஈடுபட குழந்தைகளை ஊக்குவிக்கவும். வழக்கமான உடல் செயல்பாடுகள் சரியான எடையை பராமரிக்க, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தவிர மொபைல், டிவி, லேப்டாப் உள்ளிட்டவற்றை அவர்கள் பயன்படுத்தும் நேரத்தை கட்டுப்படுத்துங்கள். மொத்தத்தில் சமச்சீரான டயட் மற்றும் உடல் செயல்பாடுகளைசெய்ய ஊக்குவித்தல், சர்க்கரைகள் & கொழுப்பு நுகர்வை கட்டுப்படுத்துவது உள்ளிட்டவற்றின் மூலம் உடல் பருமன் மற்றும் இதயம் சார்ந்த பிரச்சனைகளை குழந்தைகளிடையே தவிர்க்கலாம் என கூறுகிறார் அபிஜித் போர்ஸ்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மழைக்காலத்தில் இந்தியாவிற்குள் செல்லக்கூடிய பாதுகாப்பான சுற்றுலா தளங்கள்!

July 13, 2023 0

 இந்தியாவில் பல்வேறு விதமான நிலப்பரப்புகள் உள்ளன. ஒவ்வொரு காலத்திற்கும் ஏற்ற இடங்களைத் தேடி அங்கு பயணம் செய்யலாம். வெளிக்காலத்தில் செல்லவேண்டிய இடங்கள், பனி பொழியும்போது செல்லவேண்டிய இடங்கள், சாரல்களை ரசிக்கவேண்டிய இடங்கள் என்று நிறைய உள்ளது.

மழை காலம் கடந்த ஜூனில் தொடங்கி இப்பொது இந்தியாவின் வடக்கு பகுதியில் மழை கொட்டித் தீர்த்துக்கொண்டு இருக்கிறது. குலு, மணாலி போன்ற ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு  பகுதிகளில் நிலச்சரிவுகள், வெள்ளம் சூழ்ந்த வருகிறது. இது போன்ற மழை காலத்தில் செல்லக்கூடிய பாதுகாப்பான சுற்றுலா தளங்களை பற்றி தான் இப்போது சொல்ல இருக்கிறோம்.

ஷில்லாங், மேகாலயா: மேகாலயாவின் தலைநகரான ஷில்லாங் "கிழக்கின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் இது ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸை ஒத்திருக்கிறது. மழைக்காலத்தில், இந்த அழகிய மலைவாசஸ்தலம் நிறைய மழையைப் பெறுகிறது, இதன் விளைவாக ஏராளமான நீர்வீழ்ச்சிகள், பசுமையான புல்வெளிகள் மற்றும் சுத்தமான ஏரிகள் உள்ளன. வெள்ளம் வெறும் அபாயங்கள் இங்கு பெரிதாக இல்லை.

பூக்களின் பள்ளத்தாக்கு, உத்தரகாண்ட் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமான உத்தரகாண்டில் உள்ள பூக்களின் பள்ளத்தாக்கு, மழைக்காலத்தில் உயிர்ப்புடன் இருக்கிறது.  கர்வால் இமயமலையில் அமைந்துள்ள இந்த வண்ணமயமான பள்ளத்தாக்கில் ஏராளமான பசுமையான புல்வெளிகளுக்கு மத்தியில்  பூத்துக் குலுங்கும் ஆல்பைன் மலர்கள் கண்களுக்கும் ஆன்மாவுக்கும் விருந்தாக இருக்கும். பனி மூடிய சிகரங்கள் மற்றும் பாய்ந்து செல்லும் நீரோடைகள் நிறைந்த இடத்தை பார்க்க = ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் சிறந்த நேரம்.

மூணாறு, கேரள பகுதியில்  மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இது மழைக்காலத்தில் பசுமையான புகலிடமாக மாறும். தென்மேற்கு பருவக்காற்று வீசும் நேரத்தில் மூடுபனி மூடிய மலைகள், தேயிலைத் தோட்டங்கள், மற்றும் நீர்வீழ்ச்சிகள் ஆகியவை நிரம்பிய  மயக்கும் நிலப்பரப்பாக மாறுகிறது.

கூர்க், கர்நாடகா "இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கூர்க், கர்நாடகாவில் அமைந்துள்ள மற்றொரு பருவமழைத் தலமாகும். மழை சாரலுக்கு நடுவே ட்ரெக்கிங் செல்வது, பெருக்கெடுக்கும் காவிரி பார்ப்பது, சாகச பயணங்கள் செய்வது என்று பலவற்றை செய்யலாம், சாரல் வீசும்  மலை உச்சிகளில் கேம்பிங் கூட செய்யலாம்.

சிரபுஞ்சி, மேகாலயா : உலகின் மிக அதிக மழைப்பொழிவு இருக்கும் இடங்களில் மேகாலயாவின் சிரபுஞ்சியம் உள்ளது. இது பூமியின் ஈரமான இடம் என்று அழைக்கப்படுகிறது. அதன் எண்ணற்ற நீர்வீழ்ச்சிகள், வாழும் ரூட் பாலங்கள் மற்றும் அழகிய  இயற்கைக்காட்சிகளுடன், மழைக்காலம் இந்த பகுதியின் உண்மையான சிறப்பை வெளிப்படுத்துகிறது. அதிக மழை பெய்தாலும், பருவமழையின் விளைவுகளைச் சமாளிக்க சமூகத்தின் உள்கட்டமைப்பு தயாராக இருப்பதால், சிரபுஞ்சி பயணிகளுக்கு பாதுகாப்பானது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மன அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்வது எப்படி?

July 13, 2023 0

 இன்றைய நவீன யுகத்தில் ஒவ்வொருவரும் தனக்கான கடமைகளை செய்து முடிக்கவும், தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவும் ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொருவருக்கும் பொறுப்புகள் இருந்தாலுமே எந்த அளவிற்கு தங்களது கடமைகளில் கவனம் செலுத்துகிறோமோ அதே அளவிற்கு நம்முடைய உடல் நலத்தின் மீதும் அதிக அக்கறை செலுத்த வேண்டியது அவசியமாகிறது.

உடலை நன்றாக பேணி பாதுகாத்து, தேவையான நேரத்தில் ஓய்வு கொடுத்து, தேவையற்ற மன அழுத்தங்களை தவிர்த்து வந்தாலே நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க முடியும். ஆனால் இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் இவை அனைவருக்கும் சாத்தியமற்றதாகும்.

சமீபத்தில் கிடைத்த ஆய்வுகளின் அடிப்படையில் மன அழுத்தத்தினால் ஒருவருக்கு இதய கோளாறுகள், அதிக ரத்த அழுத்தம், உடலுக்கு நன்மை செய்யும் கொழுப்புக்களின் அளவு குறைதல், உடல் பருமனுக்கான உணர்திறன் அதிகரித்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.எனவே ஒருவர் தன்னுடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டுமெனில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகளை கண்டறிந்து அவற்றிலிருந்து விலகி இருக்க வேண்டும்.இதற்கு சில வழிமுறைகளை பின்பற்றினாலே போதுமானது. தினசரி வாழ்வில் எவ்வாறு மன அழுத்தத்தை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது என்பதை பற்றி இப்போது பார்ப்போம்.

சுய அக்கறைக்கு முன்னுரிமை: ஒருவர் எப்போதுமே தன்னுடைய உடல் நலனிற்கும் மனநலத்திற்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும். மற்றவர்களுக்காக இல்லாமல் உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களை செய்வது, மனதை ரிலாக்ஸாக வைத்திருக்க முயற்சி செய்வது, உங்களை அமைதிப்படுத்தும் சூழ்நிலையில் இருப்பது ஆகியவற்றை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். முடிந்த அளவு இயற்கையோடு நேரம் செலவிடுவது, தியானம், நல்ல புத்தகங்களை படிப்பது ஆகியவை ஒட்டுமொத்தமாக மன அழுத்தத்தை குறைக்க உதவும்.

ஆரோக்கியமான உறவு: எப்போதும் நமக்கு மிகவும் பிடித்தவர்களோடும் அன்பானவர்களோடும் இருக்கும் போது மன அழுத்தம் இருந்தாலும் கூட அவை மிக எளிதில் குறைந்து விடும். முடிந்த அளவு உங்களுக்கு பிடித்தவரோடும், யாரோடு இருந்தால் மகிழ்ச்சியாக இருப்பீர்களோ, யார் உங்களை ஊக்கப்படுத்தியும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்களோ அவர்களோடு இருக்க முயற்சி செய்யுங்கள். இது மன அழுத்தத்தை குறைத்து இதய சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை மெதுவாக குறைக்கும்.

மன அழுத்த மேலாண்மை உத்திகள்: இணையத்தில் மன அழுத்தத்தை எவ்வாறு குறைப்பது என்பதை விவரிக்கும் பல்வேறுவித வழிமுறைகள் கொட்டி கிடைக்கின்றன. அதில் உங்களுக்கு ஏற்ற ஒன்றை தேர்வு செய்து கொள்ளலாம். ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தசைகளை ரிலாக்ஸாக வைத்துக் கொள்வது, யோகாசனம் செய்வது, நடைப்பயிற்சி ஆகியவை பொதுவாக மன அழுத்தத்தை குறைக்கவும் மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளவும் பின்பற்றப்படும் வழிமுறைகள் ஆகும்:

நிம்மதியான உறக்கம்: தூக்கம் என்பது ஒருவரின் மனதிற்கும் உடலுக்கும் மிகவும் முக்கியமான ஒன்றாகும். தூங்குவதற்கு சரியான நேர மேலாண்மையை பின்பற்றுவது, தூங்குவதற்கு ஏற்ற சூழ்நிலையை உண்டாக்கிக் கொள்வது, தூங்குவதற்கு முன் மொபைல் மற்றும் கணினி ஆகியவற்றை பயன்படுத்துவதை தவிர்ப்பது ஆகியவை ஆரோக்கிய உறக்கத்திற்கு வழிவகுக்கும். ஒருவர் தினசரி ஆரோக்கியமான உறக்கத்தை மேற்கொள்ளும் போது மன அழுத்தம் குறைவது மட்டுமல்லாமல் அவரது இதயத்தின் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.

வாழ்க்கை முறையை மாற்றி அமைத்து கொள்ள வேண்டும்: இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாமல் ஒருவர் தப்பிக்க வேண்டுமெனில், முடிந்த அளவு இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் வகையில் தனது வாழ்க்கை முறையை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும். சத்துக்கள் அதிகம் நிறைந்த பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது, காய்கறிகள், தானியங்கள், குறைந்த அளவு உப்பு மற்றும் சர்க்கரை ஆகியவை இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் நீச்சல் அடிப்பது, சைக்கிள் ஓட்டுவது, நடனம் ஆகியவையும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. லேசான அளவில் உடற்பயிற்சி செய்யும் போது செய்வதினால் இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும்..

இவை அனைத்தையும் தாண்டி உங்களால் மன அழுத்தத்தை சமாளிக்க முடியவில்லை என்ற உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இந்த 5 பொருட்களை உங்கள் உணவில் சேர்த்தாலே போதும்... மழைக்கால நோய்களை பற்றி கவலை வேண்டாம்...

July 13, 2023 0

 நாடு முழுவதும் பெரும்பாலான பகுதிகளில் பருவ வெளுத்து வாங்கி வருகிறது. கோடை வெயில் கொளுத்தி எடுத்த நிலையில் தற்போது பெய்து வரும் தொடர் மழை பலருக்கு மகிழ்ச்சியான மனநிலையை ஏற்படுத்தி இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து நிவாரணம் அளித்தாலும் இந்த பருவமழையானது, மழைக்கால நோய்களையும் கூடவே கொண்டு வருகிறது. பருவமழையானது சளி, காய்ச்சல், டெங்கு, காலரா, மலேரியா போன்ற பல நோய்கள் ஏற்பட வழிவகுக்கும்.

இது போன்ற பருவகால தீவிர நோய்கள் நம்மை மற்றும் நம் குழந்தைகளை பாதிக்காமல் தற்காத்து கொள்ள சில அடிப்படை தடுப்பு நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நம்முடைய பாரம்பரிய மருத்துவ முறையான ஆயுர்வேதம் பல முக்கிய நோய்கள் மற்றும் தொற்றுகளுக்கு எதிர்க்க நம்மை பாதுகாத்து கொள்ள சில எளிய வீட்டு வைத்தியங்கள் மூலம் உதவுகிறது. பிரபல ஊட்டச்சத்து நிபுணரான லோவ்னீத் பத்ரா, மழைக்கால நோய்களைத் தடுக்க சில ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியலை தனது சமீபத்திய இன்ஸ்டா போஸ்ட் ஒன்றில் ஷேர் செய்திருக்கிறார்.

இந்த போஸ்ட்டிற்கு " பருவமழை முழு வீச்சில் பெரிது வருகிறது. மழைக்காலங்களில் நம் டயட்டில் இயற்கையான மூலிகைகளை சேர்த்து கொள்ள வேண்டிய நேரம் இது. உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க இது உதவும்" என கேப்ஷன் கொடுத்து உள்ளார். மழைக்கால நோய்களை தடுக்கும் ஆயுர்வேத மூலிகைகளின் பட்டியல் இங்கே...

அஷ்வகந்தா: இது பல மருத்துவ குணங்கள் கொண்ட அற்புத மூலிகையாகும். இது மன அழுத்தம், சோர்வு, வலி மற்றும் கவலை உள்ளிட்டவற்றை குறைக்கும் சக்தி வாய்ந்த ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. தவிர இந்த மூலிகையில் இருக்கும் immune-modulating பண்புகள் நம்முடைய நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவும். அஷ்வகந்தாவை ஒரு சப்ளிமென்ட்டாக எடுத்து கொள்வது மழைக்காலத்தில் நம் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும். இது சோர்வு, ஜலதோஷம் போன்ற பிற பருவகால நோய்களை விரட்டும்.

வேப்பிலை: வேப்பிலையில் உள்ள நிம்பிடின் (Nimbidin) மற்றும் நிம்போலைடு (Nimbolide) ஆகியவை பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருக்கின்றன. மழைக்காலத்தில் வேம்பு டீ குடிப்பது அல்லது வேப்ப இலைகளை மென்று சாப்பிடுவது நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இதிலிருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ், கிருமி நாசினிகள், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்டவை நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

லெமன் கிராஸ் : எலுமிச்சை புல் அலல்து வாசனை புல் என லெமன் கிராஸ் குறிப்பிடப்படுகிறது. இது வலி மற்றும் வீக்கத்திலிருந்து நிவாரணம், கொலஸ்ட்ரால் லெவலை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. Journal of Agriculture and Food Chemistry இதழில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றில், லெமன் கிராஸில் பல ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்கள் உள்ளன. இவை நம் உடலில் இருக்கும் நோயை உண்டாக்க கூடிய ஃப்ரீ ரேடிக்கல்ஸ்களை அகற்ற உதவுகின்றன. லெமன்கிராஸ் டீ அல்லது சூப்பில் இதனை சேர்த்து கொள்வது நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, மழைக்கால நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுவதாக நிபுணர் லோவ்னீத் கூறுகிறார்.

சீந்தில்: Giloy என குறிப்பிடப்படும் இதய வடிவில் இருக்கும் சீந்தில், ஆயுர்வேதத்தில் இன்றியமையாத மூலிகையாகும். இது சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களின் மூலமாகும். எனவே இந்த மூலிகை உடலில் இருந்தும் சருமத்தில் இருந்தும் நச்சுகளை வெளியேற்ற, சரும அமைப்பை மேம்படுத்த உதவுகிறது. தவிர இது காய்ச்சலுக்கு சிகிச்சையளிக்க, ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மற்றும் செரிமானத்தை மேம்படுத்தவும் பயனுள்ளதாக இருக்கிறது. சீந்திலை டிகாஷனாகவோ அல்லது பவுடர் வடிவிலோ எடுத்து கொள்வது மழைக்காலத்தில் நம் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவும்.

இஞ்சி: இஞ்சியில் காணப்படும் முக்கிய பயோஆக்டிவ் உட்பொருளான Gingerol அழற்சி எதிர்ப்பு, ஆன்டிவைரல், ஆன்டிட்யூமர், ஆன்டிஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டிபாக்டீரியல் என பலவற்றை கொண்டிருக்கிறது. தவிர டயட்டில் இஞ்சி சேர்த்து கொள்வது மலச்சிக்கல் மற்றும் அழற்சி, வாயு போன்ற பிற சிக்கல்களை குறைக்கும். இஞ்சியில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் அதிகம் உள்ளன. மழைக்காலத்தில் இஞ்சி டீ குடிப்பது அல்லது சூப்கள், ஸ்டவ்ஸ் அல்லது ஸ்டிர்-ஃப்ரைஸ் உள்ளிட்டவற்றில் இஞ்சி சேர்ப்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவும் என்கிறார் லோவ்னீத்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்களுக்கு சர்க்கரை நோய் இருக்குமோ என சந்தேகமாக உள்ளதா..? இந்த அறிகுறிகளை கவனியுங்கள்..!

July 13, 2023 0

 ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும் பொழுது நீரிழிவு நோய் அபாயம் ஏற்படுகிறது. சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருந்துகள், உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாடு உள்ளிட்டவை மூலம் ரத்தத்தில் இருக்கும் குளுக்கோஸ் அளவை கட்டுபாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு ஏற்படுவதற்கான ஒரு சில அறிகுறிகள் இருக்கிறது. அதே போல நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் என்னதான் உணவு கட்டுப்பாடு மருந்துகள் என்று சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க முயற்சித்தாலும் ஒரு சில நேரங்களில் குளுக்கோஸ் அளவு அதிகரிக்கலாம். நீரிழிவு நோயாளிகள் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கிறது என்பதை பின்வரும் ஐந்து அறிகுறிகளின் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.

மந்தமாக உணர்வது : எவ்வளவு விழிப்போடு சுறுசுறுப்பாக இருக்க முயற்சித்தாலும் சாதாரண விஷயம் கூட சரியாக புரிந்து கொள்ள முடியாமல், ஏனோ தானோவென்று மந்தமாக இருப்பது ஒரு அறிகுறியாகும். ஆங்கிலத்தில் இதை brain fog என்று குறிப்பிடுவார்கள். எதுவும் சரியாக தோன்றாத ஒரு குழப்பமான மனநிலையை, சோர்வான மனநிலையை இது குறிக்கிறது. ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகரிப்பதால் மூளைக்கு சிக்னல்களை எடுத்து செல்லும் நியூரோ டிரான்ஸ்மிட்டர்களில் இது தாக்கத்தை எற்படுத்துகிறது. இதனால் ரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டு, ரத்த ஓட்டத்தில் குறைபாடு ஏற்படுவதால், மூளை மந்தமாகி இந்த அறிகுறி தோன்றுகிறது.

நீண்ட நேரம் பசி : ரத்தத்தில் சர்க்கரை அளவு ஏற்ற இறக்கமாக இருப்பதால் எப்போதும் பசித்துக்கொண்டே இருப்பது போன்ற உணர்வு நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும். அதிகமான இன்சுலின், ரத்தத்தில் உயரும் குளுக்கோஸ் அளவு இரண்டுமே பசி சார்ந்த ஹார்மோனை பாதிக்கும். இதனால்தான் நீரிழிவு நோயாளிகளை பொதுவாகவே உணவுகளை பிரித்து, நாள் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

எக்சீமா என்ற தோல் பிரச்சனை : எக்ஸிமா என்பது ஒரு தோல் நோயாகும். நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால் அதாவது சர்க்கரை அளவை அவர்களால் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள முடியவில்லை என்றால் அது தொழில் சின்ன சின்ன வெடிப்புகளாகவும் கட்டிகளாகவும் வெளிப்படும். மற்றவர்களை விட, நீரிழிவு நோயாளிகளுக்கு எக்சீமா அதிகம் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

பெண்களுக்கு முடி உதிர்வு : பெண்களுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு இருந்து, அவர்களுக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் பட்சத்தில் அது டெஸ்டோஸ்டிரோன் அளவையும் அதிகரிக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்சனையை எதிர்கொள்வார்கள். செல்களுக்கு செல்லும் பொதுவான ரத்த ஓட்டம் குறைவதால், ஆக்சிஜன் ஓட்டமும் குறைகிறது. எனவே, இது முடி வளர்ச்சியை பாதிக்கிறது, முடி உதிர்வை அதிகரிக்கிறது.

படபடக்கும் இதயத்துடிப்பு : திடீரென்று ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்தால், அதை குளுக்கோஸ் சர்ஜ் அல்லது கிராஷ் என்று கூறுவார்கள். இதன் காரணமாக இதயம் வேகமாக துடிக்கும். உதாரணமாக, ஹெவியான டின்னர் அல்லது விருந்துக்குப் பிறகு, இதயத்துடிப்பு அதிகரிக்கும். இதைத் தவிர்க்க, அடுத்த வேளை உணவு அல்லது அடுத்த நாள் காலை உணவை குறைவான GI கொண்ட உணவாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியாக இருப்பதை உறுதி செய்ய எவையெல்லாம் குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும் என்பதைப் பற்றிய சரியான புரிதல் இருக்க வேண்டும். தினமும் சாப்பிடுவதற்கு முன்பு சர்க்கரை அளவை பரிசோதித்து பார்க்க வேண்டும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பாலுடன் இந்த 5 உணவுகளை ஒரு போதும் சேர்த்து சாப்பிடாதீங்க.. மீறினால் ஆபத்து..!

July 13, 2023 0

 பால் ஒரு முழு உணவு அதை தினமும் எடுத்துக்கொள்வது நல்லது என்றாலும்,  வெறும் பால் குடிப்பது என்பது நம்மில் பெரும்பாலோருக்கு பிடிக்காத  ஒன்றாக இருக்கும். பாலோடு டீ, காபி, அல்லது வேறு சுவை சேர்க்கும் எதாவது ஒன்றை கலந்து தான் குடிப்போம். ஆனால் பாலுடன் நீங்கள் சேர்க்கக் கூடாத சில உணவுகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? இப்போது தெரிந்துகொள்ளுங்க..

இயற்கையாகவே புரோட்டீன் அளவை அதிகரிக்க வாழைப்பழ மில்க் ஷேக் மூலம் சத்தியம் என்பது பலரது கருத்து. ஆனால் இதை சேர்த்து சாப்பிடுவது உங்களது உடலை பாதிக்கலாம். வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து சாப்பிட்டால் ஜீரணமாக அதிக நேரம் எடுக்கும். வயிற்று பிரச்சனைகள் வரலாம். இந்த இரண்டு புரதச்சத்து நிறைந்த உணவுகளையும் தனித்தனியாக சாப்பிடுவது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

மீன் மற்றும் பால் என்று இரண்டு வகையான புரதங்களை இணைப்பது ஒரு மோசமான கலவையாகும்.மீன் ஒரு தனித்துவமான சுவை கொண்டது, இது பொதுவாக பாலின் கிரீமி அமைப்புடன் நன்றாக கலக்காது. பாலுடன் மீன் மற்றும் எந்த வகையான இறைச்சியையும் சாப்பிடுவது செரிமான பிரச்சனைகள் மற்றும் கனமான உணர்வுகளுக்கு வழிவகுக்கும்.

புளிப்பு மற்றும் சிட்ரஸ் பழங்கள் அல்லது பொருட்களுடன் பால் கலந்து சாப்பிடுவது  தவிர்க்க வேண்டியது. ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை போன்ற புளிப்பு உணவுகளில் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் அமிலம் இருப்பதால், பாலுடன் இணைந்தால் உறைந்து அமில வீச்சு, நெஞ்செரிச்சல், வயிற்றுப்போக்கு, ஒவ்வாமை, மார்பு நெரிசல் மற்றும் சளி இருமல் ஆகியவை ஏற்படலாம்.

முள்ளங்கி சாப்பிட்ட உடனேயே பால் குடிப்பது உடலில் பெரிய விளைவுகளை ஏற்படுத்தும், ஏனெனில் முள்ளங்கி உடலுக்கு  வெப்பத்தைத் தருகிறது மற்றும் பாலுடன் சேர்ந்தால் நெஞ்செரிச்சல், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் வயிற்று வலியைத் தூண்டும். எனவே, இந்த இரண்டு உணவுகளையும் சாப்பிடுவதற்கு இடையே சில மணிநேர இடைவெளியை வைத்திருப்பது நல்லது.

கடைகளில் முலாம்பழ ஜூஸ் என்று கேட்டால் பல் ஊற்றி தான் அடித்து தருவார்கள் ஆனால் இது உங்கள் உடலுக்கு நகத்தன்மையைக் கொண்டுவரும். முலாம்பழங்களில் டையூரிடிக் பண்புகள் இருப்பதால், பாலில் உள்ள மலமிளக்கிகள் மற்றும் கொழுப்புகளுடன் இணைந்தால், அமைப்பில் நச்சுகள் உருவாகும். ஒவ்வாமையைத் தூண்டுவதோடு வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip