Agri Info

Adding Green to your Life

July 20, 2023

அடிக்கடி கொட்டாவி வந்தா அலட்சியமா நினைக்காதீங்க... இது கூட பிரச்சனையா இருக்கலாம்..!

July 20, 2023 0

 நமது உடல் சோர்வாக இருக்கும் பொழுது அல்லது அலுப்பாகும் பொழுது அல்லது ஓய்வு தேவைப்படும் பொழுது இயற்கையான எதிரொலியாக கொட்டாவி உண்டாகிறது. ஆனால் எந்தவொரு தெளிவான காரணமும் இல்லாமல் அடிக்கடி உங்களுக்கு கொட்டாவி வருகிறது என்றால் அது ஏதேனும் ஒரு நோயின் அறிகுறியாக . அடிக்கடி கொட்டாவி வருவதற்கான ஒரு சில காரணங்கள் என்ன என்பதை இப்பொழுது புரிந்து கொள்வோம்.

1. போதுமான தூக்கம் இல்லாமை மற்றும் சோர்வு: நீண்ட நாட்களாக உங்கள் உடல் சோர்வாக காணப்பட்டாலோ அல்லது உங்களுக்கு போதுமான தூக்கம் கிடைக்கவில்லை என்றாலோ உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. உடலுக்கு தேவையான ஓய்வு கிடைக்காத பொழுது கொட்டாவியை ஏற்படுத்துவதன் மூலமாக ஆக்சிஜன் உள்ளெடுப்பு அதிகரிக்கப்பட்டு, தற்காலிகமாக எச்சரிக்கை உணர்வை அதிகரிக்கிறது. நீங்கள் போதுமான அளவு தூங்கிய பிறகும் அளவுக்கு அதிகமாக உங்களுக்கு கொட்டாவி வருகிறது என்றால், உங்கள் உடலானது சோர்வுடன் போராடி வருகிறது என்று அர்த்தம்.

2. தூக்க கோளாறுகள்: ஒரு சில தூக்க கோளாறுகள் காரணமாக அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். தூக்கத்தில் மூச்சு விடுவதில் சிரமத்தை ஏற்படுத்தும் ஸ்லீப் ஆப்னியா இருக்கும் நபர்கள் பகல் நேரத்தில் தூக்க கலக்கத்துடன் காணப்படுவார்கள். மேலும் அடிக்கடி கொட்டாவி விடுவார்கள். கூடுதலாக கட்டுப்படுத்த இயலாத தூக்கத்தை ஏற்படுத்தும் நார்கோலெப்சி என்ற பிரச்சினையினால் அவதிப்பட்டு வரும் நபர்களின் உடல் தன்னை விழிப்பாக வைத்துக் கொள்ள அதிகப்படியான கொட்டாவியை உருவாக்கும்.

3. மருந்துகளின் விளைவுகள்: ஒரு சில மருந்துகளின் பக்க விளைவாக அதிகப்படியான கொட்டாவி ஏற்படலாம். மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கக்கூடிய ஆன்டி டிப்ரசன்ட்கள், ஆன்டி சைக்கோடிக்ஸ் மற்றும் சடேடிவ்ஸ் போன்ற மருந்துகளின் விளைவாக அடிக்கடி கொட்டாவி தூண்டப்படும். ஏதேனும் புதிய மருந்து சாப்பிட தொடங்கி இருக்கும் சமயத்தில் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் இது குறித்து உங்கள் மருத்துவரிடம் பேசுவது அவசியம்.

4. பதட்டம் மற்றும் மன அழுத்தம்: பதட்டம் மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதன் விளைவாக கொட்டாவி உருவாகலாம். அதிகப்படியான டென்ஷன் ஏற்படும் சமயத்தில், நமது உடல் அதனை சமாளிக்க ஆழமான மூச்சுகள் மற்றும் ஆக்சிஜன் உள்ளெடுப்பை அதிகரிக்க முயற்சி செய்கிறது. மூச்சு சுழற்சியை கட்டுப்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் கொட்டாவி உதவி புரிகிறது. மன அழுத்தம் நிறைந்த சமயத்தில் உங்களுக்கு அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால், உங்களின் மன அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டிய முயற்சிகளில் நீங்கள் ஈடுபட வேண்டும் என்று புரிந்து கொள்ளுங்கள்.

5. உடல்நலக் கோளாறுகள்: ஒரு சில நோய்களின் காரணமாகவும் அடிக்கடி கொட்டாவி ஏற்படலாம். மல்டிபிள் ஸ்கிலீரோசிஸ், மைக்ரெய்ன் அல்லது எபிலெப்சி போன்ற நரம்பு கோளாறுகள் இதில் அடங்கும். மேலும் அதிகப்படியான கொட்டாவி இதயம் சார்ந்த நோய்களுக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். உங்களுக்கு எந்த ஒரு காரணமும் இல்லாமல் அடிக்கடி கொட்டாவி வருகிறது என்றால் அதனை அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவரை ஆலோசித்து அதன் காரணத்தையும், அதற்கான சிகிச்சையும் பெறுவது அவசியம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஆண்களை பாதிக்கும் பொதுவான நோய்கள் என்ன..? அபாயங்களை குறைப்பது எப்படி.?

July 20, 2023 0

 ஆரோக்கியத்தை பொறுத்தவரை பெண்களை விட ஆண்கள் சில நேரங்களில் தனித்துவ சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். தவிர சில குறிப்பிட்ட நோய்களுக்கு எளிதில் பாதிக்கப்படுகின்றனர். இந்த அபாயங்களை கருத்தில் கொண்டு நோய்களால் எளிதில் பாதிக்கப்படாமல் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது ஆண்களின் ஆரோக்கியத்தை கணிசமாக மேம்படுத்தும். இங்கே ஆண்களுக்கு ஏற்படும் பொதுவான நோய்கள் பற்றியும், நோய் அபாயங்களை குறைப்பதற்கான வழிகளை பற்றியும் பார்ப்போம்.

கார்டியோவாஸ்குலர் நோய்:

இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக் உள்ளிட்ட கார்டியோவாஸ்குலர் நோய்கள் ஆண்களிடையே ஏற்படும் மரணத்திற்கு முக்கிய காரணங்களாக உள்ளன. உயர் ரத்த அழுத்தம், ஹை கொலஸ்ட்ரால், புகைபழக்கம், உடல் பருமன் மற்றும் உடல் செயல்பாடுகளற்ற உட்கார்ந்தே இருக்கும் வாழ்க்கை முறை போன்ற காரணிகள் இந்த ஆபத்தான நிலைமைகளின் வளர்ச்சிக்கு பங்களிக்கின்றன. கார்டியோவாஸ்குலர் நோய் ஆபத்தை குறைக்க, ஆண்கள் கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் இங்கே பட்டியலிடப்படுள்ளன.

  • ஆரோக்கியமான உணவுமுறை - ஆண்கள் தங்கள் டயட்டில் ஊட்டச்சத்துக்கள் மிக்க பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், லீன் ப்ரோட்டீன்களை சேர்த்து கொள்ள வேண்டும்.சேச்சுரேட்டட் ஃபேட்ஸ் , கொலஸ்ட்ரால் மற்றும் சோடியம் உட்கொள்ளலை கட்டுப்படுத்த வேண்டும்.
  • வழக்கமான உடல் செயல்பாடுகள் - ஸ்ட்ரென்த் ட்ரெயினிங் பயிற்சிகளுடன் இணைந்து வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்கள் மிதமான தீவிரம் கொண்ட ஏரோபிக் உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.
  • புகை மற்றும் மது - ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும் மது மற்றும் புகைப்பழக்கத்தை முற்றிலும் தவிர்க்க வேண்டும் அல்லது கணிசமாக கட்டுப்படுத்த வேண்டும்.
  • ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் - சீரான இடைவெளியில் ஆண்கள் தங்களது ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் லெவலை கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும். இதற்காக வழக்கமான பரிசோதனைகள் மற்றும் நிபுணர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை பின்பற்றுவது அவசியம்.

ப்ராஸ்டேட் கேன்சர்:

ஆண்களை பாதிக்கும் மிக பொதுவான புற்றுநோய்களில் ஒன்றாக இருக்கிறது ப்ராஸ்டேட் கேன்சர். இதனை துவக்கத்திலே கண்டறிவது பாதிப்புகளை குறைத்து வெற்றிகரமான சிகிச்சைக்கு உதவும். குறிப்பாக 50 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அல்லது குடும்பத்தில் ஏற்கனவே இந்த வகை கேன்சரால் பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் ஆண்கள் வழக்கமான பரிசோதனையை கருத்தில் கொள்ள வேண்டும். கூடுதலாக, பின்வரும் நடவடிக்கைகள் இந்த கேன்சர் ஆபத்தை குறைக்க உதவும்:

  • ஆரோக்கியமான எடை - உடல் பருமன் ப்ரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே சீரான உணவு மற்றும் வழக்கமான உடற்பயிற்சி மூலம் ஆரோக்கியமான எடையை பராமரிக்க முக்கியத்துவம் கொடுங்கள்.
  • சத்தான உணவுகள் - பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த டயட்டை பின்பற்றுங்கள். இதன் மூலம் அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் கிடைக்கும். கேன்சர் அபாயம் குறையும்.
  • பதப்படுத்தப்பட்ட உணவுகளை கட்டுப்படுத்துங்கள்- சிவப்பு இறைச்சி மற்றும் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிடுவதை குறைத்து கொள்ள வேண்டும். ஏனெனில் இவை ப்ரோஸ்டேட் புற்றுநோய் அபாயத்துடன் தொடர்புடையவை.
  • ஸ்கிரீனிங் ஆப்ஷன்ஸ் - prostate-specific antigen டெஸ்ட்டிங் போன்ற ப்ரோஸ்டேட் கேன்சர் ஸ்கிரீனிங் சோதனைகளின் நன்மைகள் மற்றும் சாத்திய அபாயங்களை புரிந்து கொள்ள நிபுணர்களை கலந்தாலோசிக்கலாம்.
  • நுரையீரல் புற்றுநோய்:

    ஆண்களிடையே காணப்படும் புகைப்பழக்கம் காரணமாக அவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் அபாயம் அதிகமாக உள்ளது. எனவே கேன்சர் அபாயத்தை குறைக்க புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். கூடுதல் தடுப்பு நடவடிக்கைகள் என்னென்ன என்பதை பார்க்கலாம்

    • செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கிங்கிற்கு வெளிப்படுவதை தவிர்க்க வேண்டும்.
    • தொடர் இருமல், மூச்சுத் திணறல், மார்பு வலி அல்லது விவரிக்க முடியாத எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறிகளை பற்றி எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றை அனுபவிக்க நேர்ந்தால் உடனடியாக சுகாதார நிபுணரை சந்திக்க வேண்டும்.

    நீரிழிவு நோய்:

    பெண்களை விட ஆண்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த நிலையை சரியாக நிர்வகிக்கப்படாவிட்டால் கடும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும். எனவே நீரிழிவு அபாயத்தைக் குறைக்க ஆரோக்கியமான எடையை பராமரிப்பது, சர்க்கரை பானங்கள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் சாப்பிடுவதை கட்டுப்படுத்துவது, ரத்த சர்க்கரை அளவை சீரான இடைவெளியில் பரிசோதித்து கொள்வது உள்ளிட்டவற்றை பின்பற்றுவது அவசியம்.

  • ஆண்கள் தங்கள் ஆரோக்கியத்தை பற்றி எச்சரிக்கையாக இருப்பது தீவிர பாதிப்பு ஏற்படுத்தும் நோய்களின் அபாயங்களை தவிர்த்து கொள்வதில் முக்கிய பங்கு வகிக்கும். தவிர வழக்கமான சோதனைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறிகளைப் புரிந்து கொள்வது தங்கள் நல்வாழ்வை ஆண்கள் உறுதிப்படுத்தி கொள்ள சிறந்த வழி.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காலையில் எலுமிச்சை சாறு , தேன் கலந்த தண்ணீர் பருகுவது ஆபத்தா..? வெறும் வயிற்றில் சாப்பிடக்கூடாத உணவுகளின் பட்டியல்..!

July 20, 2023 0

 இரவு நேர உணவுக்கு பின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு காலை உணவு சாப்பிடுவதாலும், அன்றைய தினத்திற்கான புத்துணர்ச்சியை வழங்குவதாலும் காலை உணவு மிக அவசியமாகிறது. சிலர் காலையில் வயிறு நிரம்ப சாப்பிடுகின்றனர். இன்னும் சிலர் அளவோடு சாப்பிடுகின்றனர்.

எவ்வளவு சாப்பிடுகிறோம் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், காலையில் வெறும் வயிற்றுடன் இருக்கும்போது என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது என்பது முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக உள்ளது. நம் சந்தேகங்கள் அனைத்திற்கும் தீர்வு அளிக்கும் வகையில் ஊட்டச்சத்து நிபுணர் நேஹா சஹாயா இன்ஸ்டாகிராமில் பல்வேறு ஆலோசனைகளை பகிர்ந்துள்ளார். குறிப்பாக 4 விதமான உணவுகளை சாப்பிட கூடாது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேன் மற்றும் எலுமிச்சை சாறு : கொழுப்பை குறைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பலர் காலையில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து அருந்துகின்றனர். ஆனால், சர்க்கரையை காட்டிலும் தேனில் கலோரிகள் மிக அதிகம் என்பதாலும், தற்போது மார்க்கெட்டில் தேன் என்ற பெயரில் ரைஸ் சிரப் வருவதாலும் இதை எடுத்துக் கொள்வது சரியல்ல என்று நேஹா தெரிவிக்கிறார். இது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்று அவர் எச்சரிக்கிறார்.

டீ மற்றும் காஃபி : அதிகாலை பொழுதில் நம் எல்லோருக்குமே புத்துணர்ச்சி தரக் கூடிய பாகங்களாக இவை இருப்பினும், பலருக்கு அமில சுரப்பை அதிகப்படுத்தி செரிமான பிரச்சினைகளை உண்டாக்குமாம். தூங்கி எழுந்து குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரத்திற்கு இதுபோன்ற பானங்களை தவிர்க்க வேண்டும் அல்லது உணவுடன் சேர்த்து அருந்த வேண்டும் என்று நேஹா அறிவுறுத்துகிறார்.

இனிப்பான உணவுகள் : காலையிலேயே ரத்த சர்க்கரை அளவுகள் விறுவிறுவன ஏறுவதை தடுக்க வேண்டும் என்றால், இனிப்பான உணவுகளை நாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். இது மாவுச்சத்து வேட்கையை தூண்டும் மற்றும் ஆற்றலை மட்டுப்படுத்தும்.

பழங்கள் : பழங்கள் ஆரோக்கியமானவை மற்றும் சத்தானவை என்றாலும், அவை எளிதில் செரிமானம் ஆகக் கூடியவை ஆகும். இதனால் உடனடியாக பசி எடுக்கும். மேலும் சிட்ரஸ் பழங்களை காலையில் சாப்பிட்டால் அல்சர் உண்டாகும்.

அதே சமயம் காலை வேளையில் புரதச்சத்து உணவுகள், நட்ஸ், ஆரோக்கியமான கொழுப்பு உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம் என்று நேஹா தெரிவித்தார்.

கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்: ஒவ்வொரு தனிநபரின் உடல்நிலையும் வெவ்வேறான தன்மையை கொண்டிருக்கும். சில உணவுகள் சிலருக்கு ஒவ்வாமையை கொடுக்கலாம். ஆகவே உங்கள் உடல்நிலைக்கு தகுந்த உணவுகளை எடுத்துக் கொள்வது குறித்து ஊட்டச்சத்து நிபுணர்களை கலந்து ஆலோசிக்கவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவும் ஆரோக்கிய பழக்கங்கள் - விளக்கும் நிபுணர்.!

July 20, 2023 0

 கார்டியோவாஸ்குலர் நோய்கள் அதிலும் குறிப்பாக கடந்த பல ஆண்டுகளாக ஹார்ட் அட்டாக், உலகளவில் அதிக உயிர்களை பலி வாங்கும் நோய்களில் முதலிடத்தில் உள்ளது. வயது வித்தியாசம் இன்றி இளைஞர்கள் முதல் பெரியவர்கள் அரை பலரும் ஹார்ட் அட்டாக்-கால் பாதிக்கப்பட்டு உயிரிழந்து வருகின்றனர்.


மேற்கத்திய நாடுகளில் வாழும் மக்களை விட இந்தியர்களுக்கு சுமார் 10 - 15 வருடங்கள் முன்னதாகவே ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். சமீபத்திய புள்ளிவிவரங்கள் ஹார்ட் அட்டாக்கால் பாதிக்கப்பட்டிருக்கும் 40 வயதுக்கு குறைவானவர்களின் சதவீதம் சுமார் 40% ஆக இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறது. பெங்களூர் எலக்ட்ரானிக் சிட்டியில் இருக்கும் காவேரி மருத்துவமனை மருத்துவரான ஞானதேவ் இதய நோய் பற்றியும், இதயத்தை வலுவாக வைத்திருக்க உதவும் ஆரோக்கியமான பழக்கங்கள் பற்றியும் கூறியுள்ளார்.

ஹார்ட் அட்டாக் என்பது ஒரு லைஃப் ஸ்டைல் டிசீஸ் ஆகும், இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான முக்கிய காரணமாக ஆரோக்கியமற்ற வாழ்க்கைமுறை இருக்கலாம். இதய தசைகளுக்கு (heart muscle) ரத்தம் வழங்கும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவதால் ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது. பொதுவாக ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கும் இந்த ஃபேட் டெபாசிட் , ஒருவரின் 11 வயதிற்கு மேலில் இருந்து துவங்குவதாக நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். எனவே எதிர்காலத்தில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் சிறு வயதிலேயே தொடங்க வேண்டும். இதற்கு குறிப்பிடத்தக்க நடத்தை மாற்றங்கள் மற்றும் விழிப்புணர்வு தேவை.

காரணிகள்: பொதுவாக இதய நோய்களுக்கான ஆபத்து காரணிகள் மாற்றியமைக்கக்கூடியது மற்றும் மாற்றியமைக்க முடியாதது என வகைப்படுத்தப்பட்டுள்ளன. மாற்ற முடியாத ஆபத்து காரணிகளில் வயது, பாலினம், ஜெனிடிக் மேக்கப் அல்லது குடும்ப வரலாறு ஆகியவை ஆகும். மாற்ற கூடிய ஆபத்து காரணிகளில் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிகரெட் பழக்கம், ஹை கொலஸ்ட்ரால், உடல் பருமன், உட்கார்ந்தி இருக்கும் வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் உள்ளிட்டவை அடங்கும். இதய நலனுக்காக ஆரோக்கியமான மற்றும் சமச்சீரான உணவுகளை டயட்டில் சேர்த்து கொள்வது மிக முக்கியம். இதயத்திற்கான ஆரோக்கியமான உணவுகள் என்று பார்க்கும் போது டயட்டில் காய்கறிகள் மற்றும் பழங்கள், பீன்ஸ், மீன், குறைந்த கொழுப்புள்ள பால் உணவுகள், முழு தானியங்கள், ஆலிவ் ஆயில் போன்ற ஆரோக்கிய கொழுப்புகள், அதிக நார்ச்சத்து மற்றும் குறைந்த கொழுப்பு கொண்ட உணவுகளை அதிகம் சேர்க்க வேண்டும்.

தவிர்க்க வேண்டிய அல்லது கட்டுப்படுத்த வேண்டிய உணவுகளில் உப்பு, சர்க்கரை, ஆல்கஹால், ரெட் மீட், முழு கொழுப்பு பால் பொருட்கள் மற்றும் நன்கு வறுத்த உணவுகள் உள்ளிட்ட பல அடங்கும். இளம் வயதினருக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக சிகரெட் பழக்கம் இருக்கிறது. புகைப்பழக்கம் ரத்த அழுத்தம் மற்றும் inflammation-ஐ அதிகரிக்கிறது, இதனால் இதயத்திற்கு ரத்தத்தை எடுத்து செல்லும் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது அதிகரிக்கிறது.

புகைபிடிப்பவர்கள் இந்த பழக்கத்தை நிறுத்திய உடனேயே இதய நோய்க்கான அபாயம் குறையத் தொடங்குகிறது, புகைப்பதை நிறுத்திய 1 வருடத்திற்குப் பின் இதய நோய்களுக்கான ஆபத்து 50% குறைகிறது. தவிர போதுமான உடல்செயல்பாடுகள் இல்லாதது இதய நோய்கள் ஏற்படுவதற்கான மற்றொரு ஆபத்து காரணி. வழக்கமான அடிப்படையில் உடல்செயல்பாடுகளில் ஈடுபடுவது எடையை கட்டுப்படுத்துகிறது, ரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பை கட்டுக்குள் வைக்கிறது மற்றும் நீரிழிவு அபாயத்தை குறைக்கிறது. எனவே வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சி போன்ற மிதமான தீவிரம் கொண்ட உடற்பயிற்சிகள் அல்லது 75 நிமிட தீவிர ஏரோபிக் ஆக்டிவிட்டி உள்ளிட்டவற்றில் ஈடுபட டாக்டர் ஞானதேவ் வலியுறுத்துகிறார்..

குறிப்பாக 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் very high intensity பயிற்சிகளில் கவனம் செலுத்தாஹ் வேண்டியதில்லை. ஒருவேளை அப்படி செய்ய வேண்டும் என்றால் ஒருவர் தனது இதய ஆரோக்கியத்தை நிபுணரிடம் சென்று மதிப்பீடு செய்து கொள்ள வேண்டும். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சிறு வயது முதலே ஆரோக்கியமான எடை மற்றும் சரியான BMI லெவலை பராமரிப்பதும் முக்கியம். இந்தியர்களுக்கு உகந்த BMI லெவல் 23-க்கும் குறைவாக இருக்க பரிந்துரைக்கப்படுகிறது. பெண்கள் குறிப்பாக 102 செ.மீ மற்றும் 89 செ.மீ.க்கும் குறைவான இடுப்பு சுற்றளவை பராமரிக்க பரிந்துரைக்கப்படுகிறது.

நாளொன்றுக்கு 7 - 8 மணிநேரம் நிம்தியான தூக்கத்தை ஒருவர் தவிர்க்க கூடாது. மனஅழுத்தத்தை நிர்வகிப்பதும் முக்கியம். ஏனென்றால் மன அழுத்தம் கார்டிசோல் மற்றும் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் பிற ஹார்மோன் லெவலை அதிகரிக்க செய்யும். ஒருமுறை இதய நோய்கள் வந்துவிட்டால் பெரும்பாலும் அதிலிருந்து முற்றிலும் மீள முடியாது என்றாலும் கட்டுப்படுத்த முடியும். எனவே இதய நோய் வராமல் தடுக்க உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறு வயதிலேயே தொடங்க வேண்டும் என நிபுணர் அறிவுறுத்துதுகிறார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

July 18, 2023

உங்கள் குழந்தைகள் அடிக்கடி கண்களை கசக்கிக்கொண்டே இருக்கிறார்களா..? அதற்கு காரணம் இதுதான்..!

July 18, 2023 0

 இன்றைய வாழ்க்கைச் சூழலில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினர் எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்றாக கண் வறட்சி பிரச்சினை மாறி வருகிறது. இது கண்களுக்கு மிகுந்த அசௌகரியத்தை ஏற்படுத்தும். காலைப் பொழுதில் எழுந்த உடனே கண்களில் மணல், மணலாய் அழுக்கு வெளியேறும் மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படும்.

அன்றைய நாள் முழுவதும் இந்த பிரச்சினை தீவிரமடையும். இதன் காரணமாக குழந்தைகளுக்கு பார்வை மங்கலாக மாறலாம். ஆனால், கண் வறட்சி என்பது நீண்டகால பார்வை பிரச்சினைகளை ஏற்படுத்தாது. கண் வறட்சிக்கு பல காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலும் வானிலை வறட்சியின் காரணமாக கண்களிலும் எரிச்சல் ஏற்படுகிறது.

இத்துடன் புகைமூட்டம் அல்லது மாசுபாடு போன்ற காரணங்களாலும் வறட்சி ஏற்படலாம். சிலருக்கு அலர்ஜி காரணமாகவும் கண்களில் எரிச்சல் ஏற்படும். உங்கள் குழந்தைகளின் கண் நலன் காப்பதற்கு கண் மருத்துவரை அணுகி நீங்கள் சிகிச்சை அளிக்கலாம். அதே சமயம், வீட்டிலேயே சில எளிய தீர்வுகளை முயற்சி செய்யலாம்.

குழந்தைகளுக்கு கண் வறட்சி ஏற்பட காரணம் என்ன? குழந்தைகளின் அன்றாட பணிகள் அல்லது நடவடிக்கைகளில் கண்களில் வறட்சி ஏற்பட காரணமாக அமைகின்றன. நீண்ட நேரம் வாசிப்பது, கம்ப்யூட்டர் பார்ப்பது, வீடியோ சாதனங்களில் விளையாடுவது மற்றும் தூசு நிறைந்த இடத்தில் விளையாடுவது போன்ற காரணங்களால் கண்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் உணர்வு ஏற்படலாம்.

ஆரோக்கியமான பளபளக்கும் சருமத்திற்கு இந்த 5 காலை பானங்கள் குடிங்க

July 18, 2023 0

 ஆரோக்கியமான அதே நேரம் பளபளக்கும் சருமம் என்பது எல்லோரும் வேண்டும் ஒரு விஷயம். நிறம் மேம்படுவதை விட தெளிவான அதே நேரம் ஆரோக்கியமான சருமம் இருப்பது தான் முக்கியம். அது தான் நம் உடல் ஆரோக்கியத்தையும் பிரதிபலிக்கும். அப்படி ஆரோக்கியமான சருமத்தை பெற சில காலை நேர ஜூஸ் ரெசிபிக்களை தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

எலுமிச்சை ஜூஸ்: காலையில் எழுந்தவுடன் முதலில் ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை பிழிந்து தேன் சேர்த்து எலுமிச்சை ஜூஸ் பருகுவது உங்கள் சருமத்திற்கு மேஜிக் செய்யும். எலுமிச்சை வைட்டமின் சி இன் சிறந்த மூலமாகும், இது நம் சருமத்தை உள்ளே இருந்து ஊட்டமளிக்கிறது மற்றும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. மேலும் இது கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது. சருமத்தின் ஏற்படும் சுருக்கங்களைக் குறைக்கிறது.

கிரீன் டீ: க்ரீன் டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் அதிகம் இருப்பதால், சருமம் தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. இதில் வைட்டமின் ஈ உள்ளது அதனால் இது சருமத்தை இயற்கையாக ஈரப்பதமாக்க உதவுகிறது. மேலும் இது உள்ளிருந்து சருமத்தை புத்துணர்வு அடைய செய்கிறது.

மஞ்சள் பால்: சளி, இருமல், செரிமான பிரச்சனை என பல்வேறு நோய்த்தொற்றுகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான மருந்தாக பயன்படும் இது சரும ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது.  சிறந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்ற இது உங்கள் சருமத்தை உள்ளிருந்து குணப்படுத்த உதவுகிறது காலையில் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான மஞ்சள் பாலில் சிறிது இஞ்சியை கலந்து பருகவும்,

நெல்லி சாறு: ஆம்லா, இந்திய நெல்லிக்காய் என்றும் அழைக்கப்படும் இது அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் ஆற்றல் மையமாகும். வைட்டமின் சி நிறைந்திருப்பதால், உங்கள் தோலுக்கு  தீங்கு விளைவிக்கும் நச்சுகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.  ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், சருமத்தை பொலிவாகவும் இளமையாகவும் மாற்றுகிறது.

இளநீர்: உங்கள் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் இருந்தால், சருமத்தில் வெடிப்பு, வறட்சி காணப்படும். அதற்கு  ஒரு டம்ளர் தேங்காய் தண்ணீர் அல்லது இளநீரை குடிப்பது உங்கள் தோலை ஈரப்பதத்துடன் மீட்டெடுக்க உதவும். அதோடு இதில் மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் சோடியம் போன்ற எலக்ட்ரோலைட்டுகளால் நிரம்பியுள்ளதாள் தோலில் இழந்த ஊட்டச்சத்துக்களை நிரப்ப உதவுகின்றன. அது மட்டும் இல்லாமல்  முகப்பரு தழும்புகளின் தோற்றத்தையும் குறைக்க உதவும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்பவர்கள் இதையெல்லாம் கட்டாயமாக செய்ய மாட்டார்கள்..!

July 18, 2023 0

 பொதுவாக மனிதர்களில் ஒற்றுமைகள் வேற்றுமைகள் காணப்பட்டாலும், அடிப்படை பண்புகள், விருப்பு வெறுப்பு ஆகியவற்றில் அதிக வேறுபாடுகள் காணப்படும். அதேபோல ஒரு குறிப்பிட்ட நபர் ஒரு குறிப்பிட்ட விஷயத்தை எவ்வாறு எதிர் கொள்வார் என்பது மிகப்பெரிய அளவில் வேறுபடும். உதாரணமாக, ஒரு சிலர் எல்லாவற்றுக்கும் உணர்ச்சிவசப்படுபவராக இருப்பார்; ஒரு சிலர் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் வெளிக்காட்டாத நபராக இருப்பார். சிலர் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நபராக இருப்பார்.

இதில் குறிப்பாக மற்றவர்களின் உணர்ச்சிகளையும் புரிந்து கொண்டு நடப்பவர்கள், மற்றவர்களின் பிரச்சனைகளை காது கொடுத்து கேட்பவர்கள், ஆறுதல் சொல்பவர்கள், ஆதரவாக இருப்பவர்கள் emotionally available people என்று கூறப்படுகிறார்கள். இவ்வாறு மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளும் நபர்கள், பின்வரும் இந்த ஆறு விஷயங்களை கண்டிப்பாக செய்ய மாட்டார்கள். இது இவர்களை தற்காத்துக்கொள்ளும் முறையாகவும் கூறப்படுகிறது.

தங்கள் உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் எவ்வாறு கையாள வேண்டுமென்பதில் இவர்கள் மிகத் தெளிவாக இருப்பார்கள். ஒரு உறவில் அல்லது தன்னுடைய பாட்னாரிடமும் என்ன தேவை என்பதை என்பதை பற்றி எந்த குழப்பமும் இருக்காது. ஏதேனும் ஒரு குறிப்பிட்ட நிகழ்வால் அல்லது கடினமான சூழலால் பாதிக்கப்பட்டால் கூட அதிலிருந்து ஓட மாட்டார்கள். எந்த சூழலாக இருந்தாலும் அதை துணிச்சலாக எதிர்கொள்வார்கள். மேலும், உறவை பொறுத்தவரை அதை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்கு எதை தவிர்க்க வேண்டும் என்பது இவர்களுக்கு கட்டாயமாக தெரியும்.

பார்ட்னரிடம் Vulnerable ஆக இருப்பதை தவிர்ப்பது : ஒரு உறவு வலுப்படவும், அழகாக வளரவும், நீடிக்கவும், ஒருவருக்கொருவர் vulnerable ஆக இருப்பதில் தவறே இல்லை. அதாவது, எமோஷனல் நபர்கள் அழகான உறவை வளர்க்க, தன் இணையால் பாதிக்கப்படலாம் என்பதை புரிந்து கொள்கிறார்கள். உணர்ச்சிபூர்வமான ஆபத்துகளை இவர்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறார்கள். சில நேரங்களில் காயப்படுவோம் அல்லது பெரிய வருத்தம் ஏற்படும் என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், இவர்கள் ரிஸ்க் எடுத்து மனதில் இருப்பதை, எண்ணங்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த தயங்குவதே இல்லை.

உறவுகளில் மாற்றி மாற்றி கேம் ஆடுவது : எந்த உறவாக இருந்தாலுமே நேர்மையாக இருப்பதும் வெளிப்படையான உரையாடலும் மிக மிக முக்கியம். எமோஷனல் நபர்கள் தங்கள் பார்ட்னரிடம் எந்த விதமான கேமையும் விளையாட மாட்டார்கள். மாற்றி மாற்றி பேசுவது ஒருவரை அவருக்கு தெரியாமலேயே மேனிபுலேட் செய்வது, விசுவாசம் இல்லாமல், நேர்மை இல்லாமல் நடந்து கொள்வது உள்ளிட்ட எந்தவிதமான நடவடிக்கைகளிலும் இவர்கள் ஈடுபட மாட்டார்கள். அது மட்டுமல்லாமல் இது போல யார் செய்தாலுமே அவர்களிடமிருந்து முழுக்க முழுக்க விலகியே இருப்பார்கள்.

அவமரியாதையாக பேசுவது : எந்த உறவாக இருந்தாலும், ஒருவருக்கொருவர் எந்த அளவுக்கு தொடர்பு கொள்கிறார்கள் எவ்வளவு வெளிப்படையாக பேசுகிறார்கள் என்பது உறவை வலுப்படுத்தும். குறிப்பாக கணவன் மனைவி உறவுக்குள் கம்யூனிக்கேஷன் மிக மிக முக்கியம். அதிலும் ஒருவருக்கு ஒருவர் பரஸ்பர மரியாதையுடன் பேச வேண்டும் என்பதை பின்பற்றுவார்கள். மரியாதை இல்லாமல் பேசுவது என்பது உறவை தீவிரமாக பாதிக்கும். தேவையற்ற, அநாகரிகமான சொற்கள், மட்டம் தட்டிப் பேசுவது இவர்களுக்கு பிடிக்கவே பிடிக்காது.

கடினமான உரையாடல்களில் இருந்து விலகுவது : இமோஷனல் நபர்கள் ஒரு சூழல் எவ்வளவு கடினமாக இருந்தாலும், அதிலிருக்கும் உரையாடல் கடுமையாக இருந்தாலும் அதிலிருந்து விலகி செல்லமாட்டார்கள். அதை தைரியமாக எதிர்கொண்டு இருக்கும் பிரச்சனைகளை புரிந்துகொண்டு சுமூகமாக தீர்க்கத்தான் முயற்சி செய்வார்கள். அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் அல்லது அதிலிருந்து எப்படியாவது எஸ்கேப் ஆகிவிட வேண்டும் என்ற எண்ணம் இவர்களுக்கு இருக்கவே இருக்காது.

எமோஷனல் நெருக்கத்தை தவிர்ப்பது : கணவன் மனைவிக்குள் நெருக்கம் என்பது உடல் ரீதியாக மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமாகவும் இருக்க வேண்டும். இதைத்தான் எமோஷனல் இன்டிமசி என்று கூறுவார்கள். எமோஷனல் நபர்கள் தங்கள் மனம் விரும்புவதை நன்றாக புரிந்து கொண்டிருப்பார்கள். எனவே பாட்னருடன் இமோஷனல் இன்டிமசியை வளர்த்துக்கொள்வார்கள். உறவுகளை பிணைக்க எமோஷனல் நெருக்கம் மிக மிக இன்றையமையாதது. இத்தகைய நபர்கள் பெரும்பாலும், மன முதிர்ச்சியுடன் இருப்பார்கள். உணர்ச்சிபூர்வமாக உறவில் தங்களை இணைத்து கொள்ள விரும்பாதவர்கள் நபர்களிடம் இருந்து இவர்கள் விலகியே இருப்பார்கள். என்னென்றால் உணர்வுகளைப் பற்றி பெரிதாக கவலை படாத நபர்களிடம் ஏற்படும் உறவு நீண்ட காலம் நிலைக்காது, உறவை வளர்க்க முடியாது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

முடி உதிர்வு பிரச்சனையை சமாளிக்க முடியலையா..? உங்களுக்கான சில டயட் டிப்ஸ் இங்கே..!

July 18, 2023 0

 பலருக்கும் முடி உதிர்வு பெரும் பிரச்சனையாக மாறி இருக்கிறது. கூந்தல் ஆரோக்கியத்தை பராமரிக்க பலரும் பலவித ஆயில்களை பயன்படுத்தி பார்க்கின்றனர். ஆனாலும் முடி உதிர்வு நின்றபாடில்லை என்று புலம்புவதை கேட்க முடிகிறது. நீங்களும் இவர்களில் ஒருவரா.! உங்கள் தலைமுடி ஏன் உதிர்கிறது என எப்போதாவது யோசித்ததுண்டா.. முடி உதிர்வுக்கான காரணங்களில் மன அழுத்தம், வளர்சிதை மாற்றத்தில் ஏற்படும் கோளாறுகள், மாசுபாடு என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இதில் மோசமான உணவுமுறையும் அடங்கும்.

முடி உதிர்தல் சிக்கலுக்கு உங்களின் உணவுமுறை முக்கிய காரணமாக இல்லாவிட்டாலும், நல்ல உணவு முறை மூலம் முடி உதிர்வை கட்டுப்படுத்தலாம்.நேஷ்னல் லைப்ரரி ஆஃப் மெடிசின் இதழிலில் வெளியிடப்பட்ட ஆய்வு ஒன்றின்படி, முடி அமைப்பு மற்றும் முடி வளர்ச்சி இரண்டையும் ஊட்டச்சத்து குறைபாடு பாதிக்கலாம். முடி வளர்ச்சியானது கலோரி மற்றும் புரத சத்து குறைபாடு மற்றும் நுண்ணூட்டச் சத்து குறைபாடு உள்ளிட்ட காரணிகளால் பாதிக்கப்படலாம். தவிர திடீர் எடை இழப்பு அல்லது புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்து எடுத்து கொள்வதில் குறைபாடு போன்றவை பெரும்பாலும் முடி உதிர்வுக்கு வழிவகுக்கிறது.முடி உதிர்வை எப்படி நிறுத்துவது..?

முடி உதிர்வு சிக்கலை சரி செய்வதில் ஆரோக்கியமான முடி பராமரிப்பு முறையை தொடர்ந்து பின்பற்றுவதைத் தவிர, நல்ல ஆரோக்கியமான உணவுகளை டயட்டில் எப்போதும் சேர்ப்பதும் உதவுகிறது. ஏனென்றால் உங்கள் மயிர்க்கால்கள் வலுவாக இருக்க நிறைய ஊட்டச்சத்துகளும் தேவை. இவற்றை உணவில் இருந்து நாம் பெற முடியும்.

கூந்தல் ஆரோக்கியத்திற்கு உகந்த உணவுகள் எவை..? நல்ல அளவு ஊட்டச்சத்துக்கள் இருக்கும் எந்த உணவும் நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்று குறிப்பிடும் பிரபல டயட்டீஷியன் ஷீனம் கே மல்ஹோத்ரா, நம் தலைமுடிக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் அவற்றை வழங்கும் உணவுகள் பற்றி தனது இன்ஸ்டாவில் ஷேர் செய்து இருக்கிறார். இவர் தனது லேட்டஸ்ட் இன்ஸ்டா போஸ்ட்டில் முடி உதிர்வை தடுக்க நம் டயட்டில் கட்டாயம் இருக்க வேண்டிய உணவுகளை பகிர்ந்துள்ளார். முடி உதிர்வை சமாளிப்பதற்கான நிபுணர் ஷீனமின் சில டயட் ஹேக்ஸ் இங்கே....

ப்ரோட்டீன்: கூந்தல் ஆரோக்கியத்திற்கு ப்ரோட்டீன் மிக முக்கியமான ஊட்டச்சத்து. மேலும் நமது முடியானது என்பதை ப்ரோட்டீனால் ஆனது. எனவே உங்கள் கூந்தலை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக மாற்ற உங்கள் டயட்டில் போதுமான அளவு ப்ரோட்டீன் நிறைந்த உணவுகளை சேர்ப்பது முக்கியமானது. குறைந்த அளவு ப்ரோட்டீன் நுகர்வும் கூட முடி உதிர்தலுக்கு காரணமாக இருக்கும் என்பதால் கோழி, மீன், பால் பொருட்கள் மற்றும் முட்டை போன்ற புரதச்சத்து நிறைந்த உணவுகள், பருப்பு வகைகள் மற்றும் நட்ஸ்கள் உள்ளிட்டவற்றை நிறைய சாப்பிட பரிந்துரைக்கிறார்.

இரும்புச்சத்து : கூந்தல் ஆரோக்கியத்திற்கு தேவையான மினரல்ஸ் என்று வரும் போது நம்முடைய மயிர்க்கால்களுக்கு இரும்பு சத்து அதிகம் தேவைப்படுகிறது. இரும்புச்சத்து குறைபாடு முடி வளர்ச்சி சுழற்சியை (Hair growth cycle) பாதிக்கிறது மற்றும் முடி உதிர்தலுக்கு வழிவகுப்பதாக நிபுணர் ஷீனம் குறிப்பிட்டுள்ளார். அசைவம் சாப்பிடுவோர் என்றால் தங்கள் டயட்டில் சிவப்பு இறைச்சி, கோழி மற்றும் மீன் போன்ற விலங்கு பொருட்கள், சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவோர் என்றால் பருப்பு, கீரை மற்றும் ப்ரோக்கோலி, காலே மற்றும் சாலட் க்ரீன்ஸ் போன்ற பச்சை இலை காய்கறிகளை தங்கள் டயட்டில் சேர்த்து இரும்புச்சத்து நிக்கரை அதிகரிக்கலாம்.

வைட்டமின் சி: இரும்பு சத்தை சிறப்பாக உறிஞ்ச வைட்டமின் சி உதவுகிறது, எனவே வைட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை இரும்புச்சத்து நிறைந்த உணவுகளுடன் சேர்த்து சாப்பிடுவது கூந்தல் ஆரோக்கியத்திற்கு நல்லது. வைட்டமின் சி ஒரு ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும், எனவே இது உடலால் உடனடியாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை வைட்டமின் சி தூண்டுகிறது. ப்ளூபெர்ரி, ப்ரோக்கோலி, கொய்யா, கிவி பழங்கள், ஆரஞ்சு, பப்பாளி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஸ்வீட் பொட்டேட்டோ உள்ளிட்டவை உங்கள் டயட்டில் சேர்க்க கூடிய வைட்டமின் சி நிறைந்த சில உணவுகள் ஆகும்

ஒமேகா 3 : நம்முடைய தலைமுடிக்கு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கிய கொழுப்புகள் தேவை, ஆனால் இவற்றை நம் உடலால் சொந்தமாக உற்பத்தி செய்ய முடியாது. எனவே ஒமேகா 3-யானது உணவின் மூலம் பெறப்பட வேண்டும். நம் உச்சந்தலை மற்றும் முடியை ஹைட்ரேட்டாக வைத்திருக்கும் எண்ணெய்களை Omega-3 வழங்குகின்றன. ஆய்லி மீன், காட் லிவர் ஆயில் மற்றும் அவகேடோ, சீட்ஸ் மற்றும் நட்ஸ் போன்றவரை டயட்டில் சேர்க்கவும்.

ஜிங்க் மற்றும் செலினியம் : இரும்புச்சத்து தவிர ஜிங்க் மற்றும் செலினியம் உள்ளிட்டவை முடி உதிர்வைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய மினரல்ஸ் ஆகும். செறிவூட்டப்பட்ட தானியங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் முட்டைகளை டயட்டில் சேர்ப்பதன் மூலம் இந்த மினரல்ஸ்களை நீங்கள் பெறலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip