Agri Info

Adding Green to your Life

July 23, 2023

தமிழ்நாடு அரசின் TANUVAS வேலை வாய்ப்பு வந்தாச்சு!

July 23, 2023 0

 TANUVAS Recruitment 2023: தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் (TANUVAS – Tamil Nadu Veterinary and Animal Sciences University) காலியாக உள்ள Project Associate-I பணிக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த TANUVAS Job Vacancies-க்கு விண்ணப்பிக்க தேவையான கல்வித்தகுதியானது BE/B.Tech, MVSc. ஆகும். தமிழ்நாடு அரசு வேலையில்  ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் 06/07/2023 முதல் 04/08/2023 வரை TANUVAS Jobs 2023 அறிவிப்புக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் Namakkal-யில் பணியமர்த்தப்படுவார்கள். இந்த TANUVAS Job Notification-க்கு, நேர்காணல் (Walk-in) முறையில் விண்ணப்பதாரர்களை TANUVAS ஆட்சேர்ப்பு செய்கிறது. இந்த TANUVAS நிறுவனத்தை பற்றி நீங்கள் அறிந்து கொள்ள விரும்பினால் அதன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (http://www.tanuvas.ac.in/) அறிந்து கொள்ளலாம். TANUVAS Vacancy 2023 பற்றிய முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

TANUVAS CAREERS 2023 FULL DETAILS:


பதவிProject Associate-I
காலியிடங்கள்01
கல்வித்தகுதிBE/B.Tech, MVSc
சம்பளம்மாதம் ரூ.25,000 முதல் ரூ.31,000/- வரை சம்பளம் வழங்கப்படும்
வயது வரம்பு35 வயது உடையவராக இருக்க வேண்டும்
பணியிடம்Jobs in Namakkal
தேர்வு செய்யப்படும் முறைஎழுத்துத் தேர்வு, நேர்காணல்
விண்ணப்பக் கட்டணம்இல்லை
விண்ணப்பிக்கும் முறைநேர்காணல் (Walk-in)
முகவரிDepartment of Animal Nutrition, Veterinary College and Research Institute, Mohanur Road, Namakkal-637002.

TANUVAS RECRUITMENT 2023 IMPORTANT DATES & NOTIFICATION DETAILS:

எந்த வேலையாக இருந்தாலும், விண்ணப்பிக்க கால அவகாசம் கொடுக்கப்படும். TANUVAS -யின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேதி, விண்ணப்பிக்க கடைசி தேதி, காலியிடங்களின் முழு விவரங்கள் என அனைத்தையும் கவனமாக படித்து அறிந்துகொள்ளுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள TANUVAS Recruitment 2023 Notification-னில் உள்ளபடி, குறிப்பிட்டுள்ள தேதிக்குள் Walk-in முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு வெளியான தேதி: 06 ஜூலை 2023
கடைசி தேதி: 04 ஆகஸ்ட் 2023
TANUVAS Recruitment 2023 Notification & Application Form pdf

TANUVAS CAREERS 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

  • அதிகாரப்பூர்வ வலைத்தளமான http://www.tanuvas.ac.in/-க்கு செல்லவும். TANUVAS Jobs 2023 பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டும்.
  • மேற்கூறிய இணைப்பிலிருந்தோ (TANUVAS Recruitment 2023 Notification pdf) அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பிலிருந்தோ TANUVAS Recruitment 2023 விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, படிவத்தை நிரப்பவும்.
  • TANUVAS Vacancy 2023 பற்றிய அனைத்து விவரங்களையும் எந்த தவறும் இல்லாமல் விண்ணப்பத்தை நிரப்பவும். தேவையான அனைத்து ஆவணங்களையும் (ID proof, Educational Qualification, Recent Photograph, Resume, if any Experience etc,.) பதிவேற்றவும்.
  • தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் அதிகாரிகள் உங்களை தொடர்புகொள்ள சரியான மின்னஞ்சல் ஐடி மற்றும் மொபைல் எண்ணை (Email ID and Mobile Number) விண்ணப்பத்தில் குறிப்பிடவும்.
  • தேவைப்பட்டால் TANUVAS Recruitment 2023 விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள்.
  • TANUVAS Vacancy 2023 அனைத்து தகவல்களையும் முடித்த பிறகு, விவரங்கள் சரியானதா என்று ஒரு முறை சரிபார்க்கவும். உங்கள் விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுக்கவும்.

  • TANUVAS Careers 2023 அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளபடி விண்ணப்பதாரர்கள் ஆஃப்லைன் / ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

TANUVAS RECRUITMENT 2023 FAQS

Q1. What is the TANUVAS Full Form?

TANUVAS-Tamil Nadu Veterinary and Animal Sciences University – தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம்

Q2.TANUVAS Jobs 2023 விண்ணப்பிக்கும் முறை என்ன?

The apply mode is Walk-in.

Q3. How many vacancies are TANUVAS Vacancies 2023?

தற்போது, 01 காலியிடம் உள்ளன.

Q4. What is the qualification for this TANUVAS Recruitment 2023?

The qualification is BE/B.Tech, MVSc.

Q5. What are the TANUVAS Careers 2023 Post names?

The Post name is Project Associate-I.

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் உங்களுக்கான சூப்பர் வேலை இதோ!

July 23, 2023 0

 

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? தமிழக அரசில் உங்களுக்கான சூப்பர் வேலை இதோ!

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் சுகாதார பணியாளர் அலுவலகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் அலுவலக உதவியாளர் பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென ஒரே ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மாறும் தகுதியானவர்கள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 08 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.18 வயது பூர்த்தியான மற்றும் 37 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,700/- முதல் ரூ.58,100/- வரை ஊதியமாக வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் 31.07.2023ம் தேதிக்குள் பூர்த்தி செய்த விண்ணப்ப படிவ அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.34,800/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

July 23, 2023 0

 

அரசு வனத்துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – மாத ஊதியம்: ரூ.34,800/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Ministry of Environment, Forests and Climate Change ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள PT & Sports Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MOEF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி PT & Sports Officer பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sports Officer தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Diploma தேர்ச்சி பெற்ற மற்றும் மத்திய அரசில் அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

MOEF வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Sports Officer ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Level 7 அளவில் ரூ.9,300/- முதல் ரூ.34,800/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOEF தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

July 23, 2023 0

 

CIPET நிறுவனத்தில் மாதம் ரூ.40,000/- சம்பளத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

CIPET Institute of Petrochemicals Technology ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Assistant Professor பணிக்கென காலியாக உள்ள 7 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CIPET காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Professor பணிக்கான 7 காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Professor கல்வி தகுதி:

அரசு அனுமதி பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech. & ME / M.Tech / Bachelor’s degree / Master degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CIPET வயது வரம்பு:

65 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Professor ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.35,000/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

CIPET தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு 02.08.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Download Details

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

DRDO ஆணையத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.31,000/- தேர்வு எழுத தேவையில்லை!

July 23, 2023 0

 

DRDO ஆணையத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.31,000/- தேர்வு எழுத தேவையில்லை!

DRDO DRDL ஆணையம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

DRDO வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Research Fellow தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.E./ M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

DRDO வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 08.08.2023, 10.08.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மழைக்காலத்திலும் உங்க எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்ள 10 கால்சியம் நிறைந்த உணவுகள்..!

July 23, 2023 0

 நம்மில் பலருக்கு மிகவும் பிடித்தமான பருவம் க்காலம். தேநீர் அருந்தியவரே மழையை பார்த்து ரசிப்பதில் இருக்கும் சுகம் தனி தான். மழைக்காலம் நமக்கு ஆனந்தத்தை அள்ளி தந்தாலும், அதில் ஒரு சில ஆபத்துகளும் நிறைந்துள்ளது. மழைக்காலத்தில் நாம் நோய்வாய்ப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஆகவே சரியான உணவுகளுடன், போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து நமது ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் வலுவான எலும்புகளுக்கு கால்சியம் நிறைந்த உணவை சாப்பிடுவது மிகவும் அவசியம். எலும்புகளின் ஆரோக்கியத்தில் கால்சியம் என்ற அத்தியாவசியமான தாது முக்கிய பங்கு வகிக்கிறது.

2/ 12
பச்சை இலை காய்கறிகள் : கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஏராளமான கால்சியம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றில் எலும்பு உருவாக்கம் மற்றும் குணப்படுத்துவதற்கு அவசியமான வைட்டமின் K சத்தும் காணப்படுகிறது.

எலும்புகளின் வளர்ச்சி, சேதமடைந்த எலும்புகளை குணப்படுத்துதல், எலும்புகளுக்கு வலு சேர்த்தல் மற்றும் எளிதில் எலும்பு முறியாமல் கவனித்துக் கொள்ளுதல் போன்ற பல பணிகளை கால்சியம் செய்கிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கால்சியம் எந்தெந்த உணவுகளை இருக்கிறது என்பதை தெரிந்து கொண்டு அதனை உங்கள் மழைக்கால டயட்டில் சேர்த்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் : பாலில் அதிக அளவு கால்சியம் இருக்கிறது என்பதை நாம் அறிவோம். கால்சியம் தவிர பாலில் வைட்டமின் D மற்றும் புரோட்டீன் போன்ற கால்சியம் உறுஞ்சுவதற்கு உதவி புரியக்கூடிய அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. பால், தயிர், சீஸ் மற்றும் பிற பால் சார்ந்த பொருட்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்க முயற்சி செய்யுங்கள்.

பச்சை இலை காய்கறிகள் : கீரை, கேல், ப்ரோக்கோலி போன்ற பச்சை இலை காய்கறிகளில் ஏராளமான கால்சியம் நிறைந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் இவற்றில் எலும்பு உருவாக்கம் மற்றும் குணப்படுத்துவதற்கு அவசியமான வைட்டமின் K சத்தும் காணப்படுகிறது.

சால்மன் மீன் : கொழுப்பு நிறைந்த சால்மன் மீனில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மட்டுமல்லாமல் நல்ல அளவு கால்சியமும் காணப்படுகிறது. வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை சால்மன் மீனை நம் உணவில் சேர்த்து சாப்பிடுவது வலுவான எலும்புகளை பெற உதவும்.

பாதாம் பருப்பு : பாதாம் பருப்பில் கால்சியம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களான மெக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் E போன்ற எலும்பு ஆரோக்கியத்திற்கு பங்களிக்கக்கூடிய பல சத்துக்கள் உள்ளது. மாலை நேரத்தில் ஏதாவது ஸ்நாக்ஸ் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் என்று தோன்றும் சமயத்தில் ஒரு கைப்பிடியளவு பாதம் சாப்பிடுங்கள். இது உங்களுக்கு ஊட்டச்சத்தை அளிப்பதோடு நொறுக்கு தீனி சாப்பிடுவதையும் தவிர்க்க உதவும்.

டோஃபு : சோயா பாலில் இருந்து தயாரிக்கப்படும் டோஃபு கால்சியத்தின் சிறந்த ஆதாரம். வெஜிடேரியன் அல்லது சைவ உணவு பிரியவர்களுக்கு டோஃபு அற்புதமான கால்சியம் சத்தின் மூலமாக செயல்படுகிறது.

எள் விதைகள் : எள் விதைகளில் கால்சியம் மட்டுமல்லாமல் மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற எலும்பு ஆரோக்கியத்தை ஊக்குவிக்க கூடிய பிற தாதுக்களும் காணப்படுகிறது. ஆகவே அன்றாட உணவில் சிறிதளவு எள் சேர்த்து சாப்பிடுவது எலும்புகளின் ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும்.

ஆரஞ்சு பழம் : ஆரஞ்சு பழம் வைட்டமின் C -இன் ஆதாரம் என்பதை நாம் அறிவோம். ஆனால் இப்பழத்தில் கால்சியம் சத்தும் ஏராளமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் எழும்பு ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமாக கருதப்படும் பொட்டாசியம் சத்தும் ஆரஞ்சு பழத்தில் காணப்படுகிறது.

மத்தி மீன் : இந்த சிறிய எண்ணெய் மீனில் கால்சியம் வைட்டமின் D மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் இது எலும்பு ஆரோக்கியத்திற்கு பெரிய அளவில் உதவுகிறது.

கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதும் அவசியமாக கருதப்படுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்வது, குறிப்பாக மிதமான நடைப்பயிற்சி அல்லது ஜாகிங் போன்றவை செய்வது எலும்பு அடர்த்தியை மேம்படுத்தி, அதனை வலுப்பெறச் செய்யும்.

மேலும் சூரிய வெளிச்சத்தில் அவ்வப்போது தினமும் நமது உடலை வெளிப்படுத்துவது உடலில் வைட்டமின் D ஊட்டச்சத்தை பெற உதவும். கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு வைட்டமின் D உதவுகிறது. போதுமான சூரிய வெளிச்சம் இல்லாத சமயத்தில் வைட்டமின் D சப்ளிமெண்ட்ஸ் எடுப்பதையும் ஒருவர் கருத்தில் கொள்ளலாம். ஆனால் எந்த ஒரு உணவு அல்லது மருந்தை சாப்பிடும் முன்பு மருத்துவரை ஆலோசிப்பது அவசியம்.

மழைக்காலத்தில் பாதுகாப்பான பயணத்திற்கு இந்த 7 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க..!

July 23, 2023 0

 மழைக்காலத்தில் பயணம் செய்வது ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். சொந்த வாகனம் , பேருந்து, ரயில் என்று எதில் பயணித்தாலும், ஜன்னல் ஓரம் அமர்ந்து வெளியில் இருந்து காற்றுடன் மிதந்து வரும் சாரல் காற்றோடு , மழை பொழிந்து பசுமையுடனும் புத்துணர்ச்சியுடனும் மிளிரும் சூழலை ரசிப்பதே தனி சுகம். அதை ரசிப்பதற்காகவே பலர் மழை காலங்களில் சுற்றுலா செல்வர்.

சொந்த வாகனத்தில்  தூறல் மழை, குளிர்ந்த காற்றோடு  நீண்ட தூர சாலைகளில் நீண்ட நேரம் ஓட்டும் மகிழ்ச்சிக்கு ஈடு இணையே கிடையாது. நீங்களும் மழைக்கால பயணத்தை மிகவும் ரசிக்கிறீர்கள் என்றால், சில முக்கியமான விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு உங்கள் பயணத்தைத் திட்டமிடுங்கள். அவை  பயணத்தின் போது உங்களைப் பாதுகாப்பாக வைத்திருக்கவும், சில சிக்கல்களைத் தவிர்க்கவும் உதவியாக இருக்கும்.

வானிலை முன்னறிவிப்பு : எங்கு செல்வதற்கு முன்னும், அங்குள்ள வானிலை நிலையை அறிந்து கொள்ளுங்கள். ஒரு இடத்திற்கு செல்லும் 1 வாரத்திற்கு முன்னரே அந்த இடத்தின் வானிலை மற்றும் எதாவது பேரிடர் எச்சரிக்கைகள் விடப்பட்டிருக்கிறதா என்று தெரிந்துகொண்டு செல்லுங்கள்.

வாகனத்தைச் சரிபார்க்கவும்: நீங்கள் சாலைப் பயணம் செய்யப் போகிறீர்கள் என்றால், பயணத்திற்கு பாதுகாப்பான வாகனத்தை சரியாக தேர்வு செய்யவும். சொந்த வாகனம் என்றால் வாகனத்தின் டயர்கள், பிரேக்குகள் மற்றும் விளக்குகள் போன்றவற்றை சர்வீஸ் சென்டரில் முழுமையாகச் சரிபார்த்தால் நல்லது. மழை பெய்யும்போது இடையில் எந்த பிரச்சனை வந்தாலும் சமாளிப்பது சிரமமாகிவிடும்.

வானிலைக்கு ஏற்ப பேக்கிங் செய்யுங்கள்: மழைநீரால் சேதமடையக்கூடிய பொருட்களை ஒன்றாக எடுத்துச் செல்லாதீர்கள். அதனுடன் ஒரு நீர்ப்புகா பையை எடுத்துச் செல்லவும். மொபைல், கேமரா, டார்ச் போன்றவற்றை வாட்டர் ப்ரூப் பைகளில் மட்டும் வைத்திருங்கள். ஈரமான ஆடைகள் அல்லது பொருட்களை வைக்க தனியாக ஒன்று அல்லது இரண்டு கூடுதல் பிளாஸ்டிக் பைகளை வைத்திருங்கள். அவற்றை ஒன்றாக போட்டால் நல்ல ஆடைகளும் வீணாகும். வாசம் வீசும்.

ஆடைகளின் தேர்வு: உங்கள் ஆடைகள் ஈரமான பிறகு எளிதில் உலரும் வகையில் இருப்பது முக்கியம். ரெயின்கோட், குடை, ஜாம்பூட் போன்றவற்றையும் சேர்த்து வைத்துக் கொள்ளலாம். நீர் புகாத பாதணிகளை எடுத்துச் செல்லுங்கள். அதே போல அடர்த்தியான எளிதில் காயாத ஆடைகளை தவிர்ப்பது நல்லது.

விதிகளைப் பின்பற்றவும்: மழைக்காலத்தில் சாலை மற்றும் போக்குவரத்து மாற்றங்களின் வழிகாட்டுதல்களை தெரிந்துகொண்டர் அதை சரியாக பின்பற்றவும். அதே போல வழிமாற்றங்கள் ஏதும் உள்ளதா என்பதையும் அறிந்து கொண்டு கிளம்புங்கள். அதே போல மாற்று பாதைகளையும் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். ஆப்லைன் மேப் வைத்திருப்பது முக்கியம்.

உணவு தண்ணீர் : பயணத்தின் போது போதுமான அளவு தண்ணீர் மற்றும் உணவுப் பொருட்களை உங்களுடன் வைத்துக் கொள்ளுங்கள். மழைக்காலத்தில் வெளியில் சாப்பிடும்  தண்ணீர் மற்றும்  உணவால் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆரோக்கியமான நீண்ட நாள் கெடாத உணவு பண்டங்களை கையில் வைத்துக்கொள்ளுங்கள். அதே போல அவச கால மருந்துகளையும் உடன் வைத்திருங்கள்.

ஃபோன் மூலம் தொடர்ந்து இணைந்திருங்கள்: உங்கள் வழித் தகவலை அல்லது திட்டத்தை உங்களுக்கு நெருக்கமாக  உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். இதனால் ஏதேனும் தகவல் தொடர்பு செயலிழந்தால் அவர்கள் உங்களுக்கு உதவ முடியும். ஏதேனும் ஆபத்து என்றால் உடனடியாக உங்களை கண்டறியவும் இது உதவி செய்யும்.

உலகத்திலேயே மழையே பெய்யாத ஒரே கிராமம் எது தெரியுமா..? ஏன் அங்கு மழை பெய்வதில்லை..? விரிவான தகவல்கள்..!

July 23, 2023 0

 தென் மேற்கு பருவக்காற்று வீசி  பெய்யும்போது தான் இத்தனை மாதங்களாக கொளுத்தி எடுத்த வெயிலில் இருந்து தப்பித்தோம் என்ற ஆறுதலும் குளுமையான உணர்வும் ஏற்படுகிறது. இத்தனை நாட்கள் வறண்டு கிடந்த இடங்கள் எல்லாம் மழை பெய்தபிறகு தான் புத்துயிர் பெற்றது போல இருக்கிறது.

நிலத்தில் இருந்து நீர் ஆவியாகி பூமியின் வளிமண்டலத்தில் குளிர்ந்து மேகங்களை உருவாக்குகிறது. இந்த மேகங்கள் போதுமான அளவு கனமாக இருக்கும்போது, ​​​​குளிர்காற்று படும்போது அவை மழை வடிவத்தில் பூமியில் விழுகின்றன. உலகின் அனைத்து பகுதிகளும் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ மழையைப் பெறுகின்றன. ஆனால் உலகில் மழையே பெய்யாத இடம் இருக்கிறது என்று சொன்னால் நம்புவீர்களா?

அது எப்படி இருக்க முடியும். எல்லா இடங்களிலும் லேசான மழையாவது பொழியுமே என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் உண்மைதான். உலகில் மழையே பெய்யாத ஒரு கிராமம் உள்ளது.   பல ஆண்டுகளாக மழையின்றி அந்த கிராம மக்கள் தவித்து வருகின்றனர். அந்த கிராமத்தை பற்றி தான் இப்போது உங்களுக்கு சொல்ல இருக்கிறோம்.

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் தான் அல்-ஹுதீப் என்ற இந்த கிராமம் உள்ளது.  இந்த கிராமம்  தரை மட்டத்திலிருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் ஒரு சிவப்பு மணற்கல் மலையின் உச்சியில் உள்ளது. மற்ற இடங்களை விட்டு உயரமாக இருந்தாலும் இந்த இடம் வறட்சியுடன் தான் காணப்படுகிறது.

உலகம் முழுவதும் வருடத்தின் வெவ்வேறு நேரங்களில் மழை பெய்கிறது.  ஆனால் அல் ஹுதைபே கிராமம் எப்போதும்  வறண்டு கிடக்கிறது.  இந்த கிராமத்தில் எப்போதும் மழை பெய்யாததால், வானிலை மிகவும் வறண்டு காணப்படும். பகலில் அதிகப்படியான வெப்பமும்  இரவில், கிராமத்தில் உறைபனி குளிரும் இறங்குகிறது.  மீண்டும் காலை சூரியன் உதிக்கும்போது வானிலை வெப்பமடைகிறது.

ஆனால் இந்த கிராமத்தில் ஏன் மழை பெய்வதில்லை என்ற கேள்வி எழும். அதற்கு  காரணம், எமனின் இந்த பகுதியில் நீர் ஆதாரங்கள் போதுமானதாக இல்லாதது மற்றும்  மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளது தான் காரணம்.  அதன் கீழ் அடுக்குகளில் மேகங்கள் குவிகின்றன.

அல் ஹுதைப் கிராமத்தின் இடம் சமவெளியில் இருந்து சுமார் 3200 மீட்டர் உயரத்தில் உள்ளது.  சாதாரண மழை மேகங்கள் சமவெளியில் இருந்து 2000 மீட்டருக்குள் குவியும்.  எனவே அல்-ஹுதைபின் மீது மேகங்கள் குவிவதில்லை.  மேலும் மேகங்கள் இல்லாவிட்டால் மழை பெய்ய வாய்ப்பில்லை. அதனால் தான் இங்கு மழைக்கான பேச்சே இல்லை.


July 20, 2023

இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்தனுமா..? உங்களுக்கான டிப்ஸ் தான் இது.!

July 20, 2023 0

 இனிப்புகள் என்றால் யாருக்குத்தான் பிடிக்காது! குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் எல்லோருக்கும் இனிப்புகள் என்றால் அலாதி பிரியம்தான். இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆசை மனதில் எழும்போது ஓரிருவாய் சுவைத்து விட்டு நிறுத்திக் கொள்வதில் தவறில்லை தான்.

ஆனால் நம் மனமும், வாயும் அத்தோடு கட்டுப்பட்டு நிற்குமா என்ன! அடுத்தடுத்து இன்னும் கொஞ்சம், இன்னும் கொஞ்சம் என்ற வகையில் இனிப்புகளை நாம் சுவைத்துக் கொண்டே இருப்போம். ஏனென்றால் நம் நாக்கும், மனமும் இனிப்புகளுக்கு அடிமை என்பதில் மாற்று கருத்து இல்லை.

அதேசமயம் அளவுக்கு அதிகமான இனிப்புகள் என்பது நம் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும் என்பதிலும் மாற்று கருத்து இல்லை. ஆகவே எதனால் இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் மேலோங்குகிறது என்பதனை கண்டறிந்து அதை கட்டுப்படுத்த வேண்டிய தேவை நமக்கு இருக்கிறது.

ஆனால், நம் மனதில் இனிப்பு காண வேட்கையை தூண்டுவது எது என்ற காரணத்தை துல்லியமாக கணிப்பது மிக சவாலான காரியம். இந்த நிலையில் இனிப்புகளை குறைத்துக் கொள்வது எப்படி என்பது குறித்து பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்நீத் பாத்தரா விளக்கம் அளித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், “இனிப்புகளுக்கான வேட்கை என்பது மிகவும் இயல்பான விஷயம்தான். ஏதோ ஒன்று சிறப்பாக வேண்டும் என்ற நம் சிந்தனையின் விளைவாகவே இனிப்புகளை சாப்பிட தோன்றுகிறது. ஆனால் உண்மையில் உடலுக்கு இனிப்புகள் தேவைப்படாது. அதேசமயம் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற ஆவல் கட்டுப்பாடு இல்லாமல் போனது என்றால் உங்கள் உணவுப் பழக்கம் குறித்து நீங்கள் அக்கறை செலுத்த வேண்டி இருக்கும்” என்று தெரிவித்தார்.

இனிப்பு சாப்பிடும் ஆசையை கட்டுப்படுத்துவது எப்படி ?

நம் உடலில் இன்சுலின் அளவை சீராக வைத்திருக்க உதவும் சில தாதுக்கள் குறையும் பட்சத்தில் இனிப்பு சாப்பிட வேண்டிய வேட்கை அதிகரிக்கும்.
ஆரோக்கியமான கொழுப்பு உள்ள உணவுகளை சாப்பிடுவதன் மூலமாக இனிப்புகளுக்கான ஆசையை கட்டுப்படுத்த இயலும். ஏனென்றால் உடலுக்கு தேவையான ஆற்றல் கொழுப்புகளிலிருந்து கிடைத்துவிடும்.
புரதம், நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் ஜிங்க் போன்ற சத்துக்கள் நிறைந்த தாவர உணவுகளை மிக அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். ஜிங்க் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்களின் அளவு உடலில் குறைந்தால் அதுவும் கூட சர்க்கரை தேடலுக்கு காரணமாக அமைந்து விடும்.

நம் உடலுக்கு போதுமான தூக்கம் அவசியமானது. தூக்கம் இல்லை என்றால் உடனடி ஆற்றல் பெறும் நோக்கில் நாம் இனிப்புகளை சாப்பிட தூண்டப்படுவோம். நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 7 மணி நேரம் முதல் 9 மணி நேரம் வரையிலான தூக்கம் மிகவும் அவசியமாகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip