ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொலஸ்ட்ரால் என்றாலே நம் உடலுக்கு கேடு விளைவுக்கும் என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க நமது ரத்தத்திற்கு மெழுகு போன்ற ஒரு பொருளான கொலஸ்ட்ரால் அவசியம்.
எனினும், நம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது தான் இதய நோய்களை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலால் உருவாக்கப்படும் மெழுகு போன்ற கொழுப்பு மாதிரியான ஒரு பொருள். இது வைட்டமின் டி, பல்வேறு ஹார்மோன்கள் மற்றும் செல் சுவர்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் நீரில் கரையாது. அதேபோல அதனால் தனித்து உடலில் எங்கும் செல்ல இயலாது.
இன்று உலக அளவில் பலமக்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மோசமான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு சில குணப்படுத்த கூடியவையாகவும், ஒரு சில தவிர்க்கக் கூடியவையாகவும் உள்ளன. நல்ல உணவு மூலமாகவும், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் அதிக கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்கலாம்.
எந்த ஒரு நோயையுமே ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது அதற்கான தீர்வை எளிதாக்கும். ஒரு சிலர் தங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். ஆகவே, அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பார்க்கலாம்.