காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை நமது உடல் உறுப்புகள் மிக எளிதாக உறிஞ்சுவதன் காரணமாக, நமது ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை பெறலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் மற்றும் பானங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் உலர் திராட்சை தண்ணீர் பருகுவது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் நாம் பெறக்கூடிய பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
கல்லீரலை சுத்தம் செய்கிறது : உலர் திராட்சை தண்ணீர் பருகுவது நமது உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் இந்த உலர் திராட்சை தண்ணீர் பேருதவி புரிகிறது.
உடல் எடை குறைக்க உதவுகிறது : தினமும் காலை எழுந்ததும் உலர் திராட்சை தண்ணீர் பருகி வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அதிகப்படியான ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நமக்கு தேவையான ஆற்றலை தருகிறது. அதோடு இதில் ஏராளமான நார்ச்சத்து காணப்படுவதால் நம்மை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்க செய்கிறது. இதன் காரணமாக நமது கலோரி உட்கொள்ளல் குறைக்கப்பட்டு, உடல் எடை குறைய வழி வகுக்கிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது : உலர் திராட்சையில் பொதிந்து கிடக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.
புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது : உலர் திராட்சையில் பொதிந்து கிடக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.
இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது : உலர் திராட்சை தண்ணீர் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதோடு இரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதை தடுப்பதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.
வயிற்றில் உள்ள அமிலத்தை பராமரிக்கிறது : அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உலர் திராட்சை தண்ணீர் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது : ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்த இந்த உலர் திராட்சை தண்ணீர் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுபடுத்தி, எந்த விதமான தொற்றுகள் நம்மை நெருங்குவதையும் தடுக்கிறது.
மலச்சிக்கல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது : தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடித்து வருவது நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.
எலும்புகளை வலுப்படுத்துகிறது : உலர் திராட்சையில் காணப்படும் போரான் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதோடு உலர் திராட்சையில் கால்சியம் சத்தம் காணப்படுவதால் இது எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது : உலர் திராட்சையில் காணப்படும் பொட்டாசியம் சத்து உடலின் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.