Agri Info

Adding Green to your Life

August 6, 2023

அஞ்சல் துறையில் 30,041 காலியிடங்கள்.. 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு.. உடனே அப்ளை பண்ணுங்க!

August 06, 2023 0

 இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.  இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுளளது.

பணி விவரங்கள்: 

பணியின் பெயர்கிராம அஞ்சல் பணியாளர் (GRAMIN DAK SEVAKS -GDS) NOTIFICATION NO: No.17-67/2023-GDS
காலியிடங்கள்2,994  (தமிழ்நாட்டில் மட்டும்) . நாடு முழுவதும் 30, 041 காலியிடங்கள்
ஊதியம் மற்றும் படிகள்கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM - BranchPostmaster BPM) - ரூ. 12,000 முதல் 29,380 வரை. உதவிக் கிளை போஸ்ட் மாஸ்டர் / அஞ்சல் பணியாளர் (Assistant Branch Postmaster - ABPM /Dak Sevak) - ரூ. 10,000 முதல் 24,470/- வரை
கல்வித் தகுதிகுறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்
மத்திய அரசு வேலையா?ஆம். இருந்தாலும்,  அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது.   (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)
வயது வரம்பு:குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம்அனைத்து பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள்,   பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. ஏனைய வகுப்பினர் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்

Indian Post Gramin Dak Sevas (GDS) விண்ணப்பம் செய்வது எப்படி? 

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்.

Notification -ஐ பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித் தகுதி சான்றிதழ், வண்ண பாஸ்போர்ட் புகைப்படம் மற்றும் இதர ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி தேதி 23.08.2023 ஆகும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

போஸ்ட் ஆபிசில் 30 ஆயிரம் காலியிடங்கள்: பெண்களுக்கு வாய்ப்புகள் அதிகம் தெரியுமா? உடனே விண்ணப்பியுங்கள்

August 06, 2023 0

 அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதில்,  பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும் , 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன

இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பெண்களுக்கு கூடுதல் வாய்ப்பு:

இந்த காலிப்பணியிடங்களுக்கு 10ம் வகுப்பு தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதிப் பட்டியல் (Merit List) தயாரிக்கப்படும்.

10ம் வகுப்பு தேர்ச்சிப் பட்டியலில், மதிப்பெண்களுக்கு பதிலாக Grade தகுதி அளவீடுகளைக் கொண்டிருந்தால், அவை 9.5 என்ற விழுக்காட்டு அளவால் பெருக்கப்பட்டு, மதிப்பெண்களாக மாற்றம் செய்யப்படும்.

பெண்களுக்கு முன்னுரிமை :

10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால்,

" வயதில் முதியவர், பழங்குடியின இனத்தைச் சேர்ந்த திருநங்கை, பட்டியல் இனத்தைச் சேர்நத திருநங்கை, பட்டியல் இனத்தைச் சேர்ந்த பெண்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநங்கை, ஓபிசி  பிரிவினரில் உள்ள  பெண்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநங்கை, பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள  பெண்கள், பொதுப் பிரிவினரில் உள்ள திருநங்கை, பொதுப் பிரிவினரில் உள்ள பெண்கள், பழங்குடி வகுப்பைச் சேர்ந்த  திருநம்பி, பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், பட்டியல் வகுப்பைச் சேர்ந்த திருநம்பி,  பட்டியல் வகுப்பைச் சேர்ந்த ஆண்கள், ஓபிசி பிரிவைச் சேர்ந்த திருநம்பி, பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் உள்ள  ஆண்கள்,  பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பைச் சேர்ந்த திருநம்பி, பொருளாதார பின்தங்கிய வகுப்பினரில் உள்ள  ஆண்கள், பொதுப் பிரிவினரில் உள்ள திருநம்பி, பொதுப் பிரிவினரில் உள்ள ஆண்கள்" என்ற  முறையின் மூலம் மூப்பு நிலை கண்டறியப்படும்.

விண்ணப்பக் கட்டணம் கிடையாது:  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். இருப்பினும், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

கடந்த சில ஆண்டுகளாகவே, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாணவர்களை விட மாணவிகளே தேர்ச்சி விகிதத்திலும், மதிப்பெண் அளவிலும் சிறந்து விளங்கி வருகின்றனர். தற்போது, சமமான மதிப்பெண் பெற்றிருந்தால், அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண் விண்ணப்பதாரங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுளளது. எனவே, பெண்கள் இத்தேர்வில் வெற்றி பெற சாதகமான சூழல் உருவாகியுள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

30, 041 அஞ்சல் துறை காலியிடங்கள்... நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன? முழு விவரம் இதோ!

August 06, 2023 0

 இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள 30, 041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.காலியிடங்கள் 2,994 (தமிழ்நாட்டில் மட்டும்) . 

நாடு முழுவதும் 30, 041 காலியிடங்கள்

கல்வித் தகுதி: குறைந்தபட்சம் 10ம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.கட்டாயமாக விண்ணப்பதாரர்கள் உள்ளூர் மொழியறிவு கொண்டிருக்க வேண்டும். அதேபோன்று, மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருப்பது கட்டாயமாகும்

வயது வரம்பு: குறைந்தபட்ச வயது - 18 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)அதிகபட்ச வயது - 40 (விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க நிர்ணயிக்கப்பட்ட இறுதி நாளன்று பூர்த்தியடைத்திருக்க வேண்டும்)பட்டியல் சாதிகள் (5 ஆண்டுகள்), பட்டியல் பழங்குடியினர் (5 ஆண்டுகள்) பிரிவினருக்கும், இடஒதுக்கீடு சலுகை பெற தகுதியுடைய இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் (3 ஆண்டுகள்), மாற்றுத் திறனாளிகள்(10 ஆண்டுகள்) நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் வயது வரம்புச் சலுகை அளிக்கப்படும்.

இந்த பதவிக்கு எந்தவித எழுத்து மற்றும் நேர்காணல் தேர்வும் இல்லாமல், 10ம் வகுப்புத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலே தேர்வு செய்யப்பட உள்ளனர். 10ம் வகுப்புத் தேர்வில், இரண்டிற்கும் மேற்பட்ட தேர்வர்கள் சமமான மதிப்பெண்களைப் பெற்றிருந்தால், பெண் தேர்வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் அஞ்சல் வட்டத்தை முதலில் தேர்வு செய்ய வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட வட்டங்களில் உள்ள காலியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பக் கட்டணம் கிடையாது: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 100 ஆகும். இருப்பினும், பட்டியல் சாதிகள்/ பட்டியல் பழங்குடியினர்/ அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த பெண்கள், மாற்றுத் திறனாளிகள்/ திருநர்கள் ஆகிய பிரிவைச் சார்ந்த விண்ணப்பதார்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை

மத்திய அரசு வேலையா? ஆம்... இருந்தாலும், அஞ்சல்துறை துறை சாராத சேவை அமைப்பின் (Extra Departmental system in the Department of Posts) கீழ் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன. இந்த பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை, படிகள் மத்திய அரசால் நிர்ணயிக்கப்பட்டாலும், அஞ்சல் துறையில் முழு நேர ஊழியர்களுக்கான சம்பள விகிதம் இவர்களுக்கு பொருந்தாது. (Gramin Dak Sevaks are holders of civil posts but they are outside the regular civil service)


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 3, 2023

சரியாக தூங்கவில்லை எனில் எவ்வளவு பிரச்சனைகளை உண்டாக்கும் தெரியுமா..? அலட்சியமா இருக்காதீங்க..!

August 03, 2023 0

நம்மில் பெரும்பாலானோர் தினமும் போதுமான அளவு தூக்கத்தை பெறுவதில்லை. நமது பணிச்சுழல் காரணமாக தூக்கத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் நீண்ட காலத்திற்கு சரியான தூக்கம் பெறாமல் இருப்பது நமது உடலை மட்டுமல்லாமல் மனதையும் பெருமளவு பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் இதனால் ஒரு சில நரம்பு சார்ந்த கோளாறுகள் ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. தூக்கமானது நமது மனநிலை, ஆரோக்கியம் மற்றும் நமது ஒட்டுமொத்த நல்வாழ்வில் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் தூங்கும் பொழுது நமது மூளை பல்வேறு விதமான செயல்பாடுகளில் ஈடுபடுகிறது.

நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நாள் முழுவதும் நடந்த விஷயங்களை நமது மூளை நினைவுகளாக சேமிக்கிறது. இது போன்ற ஒரு நிலையில் நாம் போதுமான அளவு தூங்காத போது மூளையினால் அந்த செயல்பாடுகளை செய்ய முடியாமல் போகிறது. இதன் காரணமாக ஒரு சில பிரச்சனைகள் எழுகிறது. நன்றாக தூங்குவது முடிவு எடுக்கும் திறனை மேம்படுத்துகிறது. அதோடு பிரச்சனைகளை தீர்ப்பதற்கான திறன்களையும் மேம்படுத்துகிறது.

ஒரு நபர் தொடர்ச்சியாக 7 மணி நேரத்திற்கும் குறைவான தூக்கத்தை பெற்று வரும் பொழுது அவரது கவனிப்பு திறன் நாளுக்கு நாள் குறைகிறது. இது கற்கும் செயல்முறையில் பாதிப்பை உண்டாக்குகிறது. கூடுதலாக போதுமான அளவு தூக்கம் பெறாதது நமது மனநிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இப்பொழுது போதுமான அளவு தூக்கம் பெறாததால் ஏற்படக்கூடிய ஒரு சில நரம்பு சார்ந்த பிரச்சனைகளை பார்க்கலாம்.

இன்சோம்னியா: நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனை ஆபத்து நிறைந்த புரதங்களான பீட்டா அமைலாய்டு அதிக அளவில் மூளையில் படிய காரணமாகிறது. இது அல்சைமர் நோய் ஏற்படுவதற்கான ஆபத்தை அதிகரிக்கிறது. இது உணர்வு சார்ந்த சிக்கல்கள் மற்றும் குறைந்த கவனிப்பு திறன் போன்ற விளைவுகளை ஏற்படுகிறது.

அல்சைமர்:

சீர்குலைக்கப்பட்ட தூக்க அட்டவணை மற்றும் நாள்பட்ட தூக்கமின்மை பிரச்சனை காரணமாக எழக்கூடிய நரம்பு சார்ந்த பிரச்சனை இது. தூங்கும் பொழுது நமது மூளையில் இருக்கக்கூடிய பீட்டா அமைலாய்டு போன்ற ஆபத்து நிறைந்த கழிவு பொருட்களை அகற்றும் செயல்முறை நடைபெறுகிறது. ஆனால் போதுமான அளவு தூக்கம் பெறாமல் இருக்கும் பொழுதோ அல்லது தூக்க அட்டவணையில் சீர்குலைவு ஏற்படும் பொழுது இந்த நச்சுக்கள் நமது மூளையில் சேகரிக்க துவங்குகிறது. இது அல்சைமர் நோய்க்கு வழிவகுக்கும்.


ஸ்லீப் ஆப்னியா: தூங்கும் பொழுது அடிக்கடி மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுவது ஸ்லீப் ஆப்னியா எனப்படும். இதனால் மூளைக்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் கிடைக்காமல் போகிறது. இது மனநிலை ஆரோக்கியத்தை பாதிக்கும், அதோடு ஞாபகம் சார்ந்த பிரச்சினைகள் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை ஏற்படுத்துகிறது.

நார்கோலெப்சி: தூக்க-விழிப்பு சுழற்சியை (sleep-wake cycle) சீராக நடத்துவதற்கான திறனை மூளை இழக்கும் பொழுது நார்கோலெப்சி ஏற்படுகிறது. நார்கோலெப்சியை அனுபவிக்க கூடிய நபர் பகல் நேரத்தில் அதிகப்படியான நேரம் தூங்குவார். இதுவும் ஒரு நபரின் மனநிலை, ஞாபக சக்தி மற்றும் கவனிப்பு திறனை பாதிக்கும்.

இரவு நேரத்தில் போதுமான அளவு தூங்குவதன் முக்கியத்துவம் என்ன? நமது மூளை திறம்பட செயல்படுவதற்கு இரவு நேரத்தில் போதுமான அளவு தூக்கம் அவசியம். நாம் தூங்கும் பொழுது நமது மூளையில் இருக்கக்கூடிய ஆபத்து நிறைந்த நச்சுக்கள் மற்றும் கழிவு பொருட்கள் அகற்றப்படுகிறது. இது மூளையின் ஆரோக்கியம் மற்றும் மனநிலை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கக்கூடிய ஒரு செயல்பாடு. கூடுதலாக நினைவுகளை சேகரிப்பது, கற்கும் திறன் மற்றும் மனநிலையை மேம்படுத்துவது போன்ற செயல்பாடுகளிலும் தூக்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. தூக்க-விழிப்பு சுழற்சியில் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனுக்கு முக்கிய பங்கு உள்ளது. இருட்டிற்கு பதிலளிக்கும் விதமாக நமது மூளையில் அமைந்துள்ள பீனியல் கிளாண்ட் மெலடோனின் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது.

ஒரு சில பழக்கவழக்கங்கள் மூலமாக மெலடோனின் அளவுகளை இயற்கையாக அதிகரிக்கலாம். இதற்கு முதலில் எலக்ட்ரானிக் சாதனங்களில் இருந்து வெளிப்படக்கூடிய ப்ளூ லைட்டிலிருந்து விலகி இருக்க வேண்டும். குறிப்பாக படுக்கைக்கு செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பே எலக்ட்ரானிக் சாதனங்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது மெலடோனின் உற்பத்தியை அதிகரிக்கும். மேலும் படுக்கைக்கு செல்லும் பொழுது மனதை அமைதிப்படுத்த கூடிய செயல்பாடுகளான தியானம், புத்தகம் வாசிப்பது போன்றவற்றை செய்வதும் உதவக்கூடும். பகல் பொழுதில் இயற்கையான சூரிய ஒளியை பெறுவதும் மெலடோனின் உற்பத்தியை அதிகரித்து நமது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பது நல்லதா..? தண்ணீரைக் குடிக்க சரியான வழிகள்..!

August 03, 2023 0

 தண்ணீர் ஒவ்வொரு உயிருக்கும் உயிர் வாழ என்று அமையாத ஒரு தேவையாகும். ஒரு மனிதனால் உணவில்லாமல் கூட ஒரு வாரம் வரை உயிர் வாழ இயலும். ஆனால் தண்ணீர் இல்லாமல் மூன்று நாட்கள் கூட வாழ முடியாது. மேலும் நமது உடலின் பெரும் பகுதி நீரால் ஆனது. உடலின் ரத்த ஓட்டத்திற்கும் ஜீரணத்திற்கும் ஆரோக்கியமான தசைகளுக்கும் நீர் மிகவும் அவசியம்.

தண்ணீரைக் குடிக்க சரியான வழி :

இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் மட்டும் காலம் காலமாக வாய்க்கால் தகராறு இருந்து வருகிறது. நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாது என்று ஒருவர் சொல்ல, சரி என்று உட்கார்ந்து கொண்டு குடித்தால் கிளாசை இப்படி தூக்கி குடிக்க கூடாது என்று மற்றொருவர் சொல்ல, சரி என்று கிளாசில் வாயை வைத்து குடித்தால் இப்படி குடிப்பது நாகரிகம் அல்ல என்று மற்றொருவர் சொல்ல எனக்கு தண்ணியே வேணாம் என்று சில சமயங்களில் தோன்றும் அளவிற்கு செய்து விடுவார்கள். அவ்வளவு கருத்து வேறுபாடுகள் இந்த தண்ணீர் குடிக்கும் விஷயத்தில் இருந்து வருகிறது.

இதையும் தாண்டி இன்னும் ஆழமாக அறிந்து கொள்ள விரும்பினால், முதலில் நீங்கள் உ.பி அல்லது உ.மு வா என்பதை கண்டறிய வேண்டும். அதாங்க உணவுக்கு பின் தண்ணீர் அருந்துவீர்களா அல்லது உணவு உண்ணும் முன் தண்ணீர் அருந்துவீர்களா என்பதும மிகவும் முக்கியம். ஆயுர்வேதத்திலும் இதைப்பற்றி பல தகவல்கள் இருக்கிறது. உணவு உண்டவுடன் தண்ணீர் குடித்தால் வயிற்றில் சுரக்கும் அமிலங்களை சமன்படுத்தி உணவு செரிமானத்தை கடுத்து விடும் என்பது போன்ற கருத்துக்களும் நிலவி வருகிறது.எனினும் இன்று வரை யாருக்கும் சரியான விடை தெரிந்த பாடில்லை.


அறிவியல் என்ன சொல்கிறது :

உணவு உண்ட பின் தண்ணீர் குடிப்பதால் உடலுக்கும் அல்லது உணவு ஜீரணத்திற்கும் தீங்கு ஏற்படுவதாக எந்த ஒரு ஆய்விலும் இதுவரை கண்டறியவில்லை. ஆனால் அதே சமயத்தில் உணவு ஜீரணத்தின் போது நமக்கு சுரக்கும் ஹைட்ரோ குளோரிக் அமிலம் ஆனது அதிகமான நீருடன் அந்த அமிலம் தன்னுடைய உணவை செரிக்கும் திறனை சற்று இழக்கிறது என்பது உண்மைதான்.

உண்ணும் உணவுக்கேற்றபடி தண்ணீர் குடிக்க வேண்டும் :

உண்மையில் நீங்கள் எந்தவிதமான உணவு உட்கொள்ளுகிறீர்கள் என்பதை பொருத்தும் நீங்கள் எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதும் அமைகிறது. உதாரணத்திற்கு நீங்கள் புரதச்சத்து நிறைந்த உணவை உண்டால் தண்ணீர் குடிப்பதை தவிர்ப்பதன் மூலம் ஜீரண சக்தியை அதிகரிக்கலாம்.

நீங்கள் குடிக்கும் தண்ணீர் எப்படிப்பட்டது :

மேற்கண்ட காரணிகளுடன் சேர்த்து நீங்கள் குடிக்கும் தண்ணீரின் தரமும், அதன் தன்மையும் முக்கிய காரணியாக அமைகிறது. காரத்தன்மை அதிகம் உள்ள நீரை குடிக்கும் போது அவை வயிற்றில் உள்ள அமிலங்களை சமன் செய்கின்றன. அதே சமயத்தில் அமிலத்தன்மை உள்ள நீரை பருகும் போது அவை உணவு செரிமானத்திற்கு உதவுகின்றன.

மேற்கண்ட தரவுகளை வைத்து பார்க்கும் போது இந்த தண்ணீர் குடிப்பது என்பது ஒவ்வொருவருக்கும் அவருடைய உடல் அமைப்பை பொருத்தும் அவருடைய உணவு முறையை பொருத்தும் மாறுபடுகிறது இதில் நீங்கள் எந்த வகை என்பதை நீங்களே யோசித்து அதற்கேற்றபடி உங்கள் தண்ணீர் குடிக்கும் முறையை மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.

தண்ணீர் குடிக்க சரியான நேரம் எது?

  • தினமும் காலை எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உடல் உறுப்புகளுக்கு மிகவும் நல்லது உடலில் உள்ள நச்சுக்கிருமிகளை வெளியேற்றுவதற்கு இது உதவியாக இருக்கும்.
  • நீங்கள் காலை உணவு உன்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பது உங்கள் உணவு செரிமானத்தை ஊக்குவிக்கும். அவ்வாறு இல்லையெனில் உணவு உண்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
  • நீங்கள் குளிப்பதற்கு முன்பு ஒரு கிளாஸ் தண்ணீர் குடிப்பதன் மூலம் உங்கள் உடலில் உள்ள ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஒரு மாதத்திற்கு அரிசி சாப்பிடாமல் இருந்தால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..?

August 03, 2023 0

 ஆசியாவில் வசிக்கும் பெரும்பாலான மக்களின் முக்கிய உணவாக அரிசி இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அரிசி உணவை சாப்பிட்டால் தான் திருப்தியாக இருக்கும் என்ற அளவிற்கு அரிசி நம் வாழ்க்கையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. ஆனால் உண்மையிலேயே அதிக அளவு அரிசி உணவை உட்கொள்வது உடலுக்கு ஆரோக்கியமானது தானா என்ற கேள்வி பலருக்கும் எழலாம்!

அரிசியில் உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன மேலும் ஸ்டார்ச் மற்றும் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும் அதில் நிறைந்துள்ளன. அதே சமயத்தில் அரிசி உணவை அதிகம் உட்கொள்ளும் போது அவை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரித்து உடல் எடை கூடுவதற்கு வழிவகுக்கும்.

ஆனால் அதற்காக அரிசி உணவை ஒட்டு மொத்தமாக ஒதுக்கி விட வேண்டும் என்று கூறி விட முடியாது. உதாரணத்திற்கு ஒரு மாதத்திற்கு நீங்கள் அரிசி உணவை சாப்பிடாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

“ஒரு மாதம் வரை அரிசி உணவை நீங்கள் உட்கொள்ளாமல் இருக்கும்போது, உடலில் கலோரிகள் குறைவதன் காரணமாக உடல் எடை குறைய வாய்ப்பு உண்டு. மேலும் கார்போஹைட்ரேடுகள் உட்கொள்ளாத காரணத்தினால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் இருக்கும்” என பாலாஜி ஆக்சன் மெடிக்கல் இன்ஸ்டிட்யூட்டின் தலைமை ஊட்டச்சத்து நிபுணரான பிரியா பர்மா தெரிவித்துள்ளார்.

ஒர்க் ஹார்ட் மருத்துவமனையில் பணிபுரியும் மற்றொரு வல்லுனரான ரியா தேசாய் கூறுகையில், ஒரு மாதத்திற்கு அரிசி உணவை உட்கொள்ளாமல் இருக்கும்போது கண்டிப்பாக அது உடல் எடை குறைவதற்கு வழிவகுக்கும். ஆனால் அரிசிக்கு பதிலாக வேறு ஏதேனும் தானியங்களையோ அல்லது அதே அளவு கலோரிகளை தரும் வேறு ஏதேனும் கார்போஹைட்ரேடுகள் நிறைந்த உணவுப் பொருட்களையும் நீங்கள் உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். “அரிசி உணவை தவிர்ப்பது என்பது கண்டிப்பாக ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சமநிலையில் வைக்க உதவும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே சமயத்தில் “நீங்கள் அரிசி உணவை கைவிட்ட அந்த மாதத்தில் மட்டுமே ரத்தத்தில் சர்க்கரை அளவானது குறைந்திருக்கும் எனவும் அல்லது மீண்டும் அரிசி உணவை எடுத்துக் கொள்ள ஆரம்பித்ததில் இருந்து குளுக்கோஸ் அளவு அதிகரிக்க துவங்கும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் சிறிய அளவிலான அரிசி உணவை உட்கொள்வது எந்த விதத்திலும் உடலுக்கு தீங்கு விளைவிக்காது என்பதையும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரிசி உணவை கைவிடுவதால் அரிசியின் மூலம் கிடைக்கும் கார்போஹைட்ரேட்டுகள் வைட்டமின் பி மற்றும் சில தாதுக்கள் ஆகியவற்றில் குறைபாடு ஏற்படலாம் என்று அவர் கூறுகிறார். எனினும் இது நபருக்கு நபர் வேறுபடலாம்.

ஆனால் உண்மையிலேயே அரிசி உணவை மொத்தமாக உங்களது உணவு பட்டியலில் இருந்து நீக்க வேண்டுமா என்று கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் கூற வேண்டும். ஒரு மாதத்திற்கு அரிசி உணவை கைவிட வேண்டும் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பமாகும். அரிசி உணவை விரும்புபவர்கள் தங்களது உணவு கட்டுப்பாட்டில் ஒரு பகுதியாக அரிசி உணவை சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அவை அளவோடு இருப்பது நல்லது. மேலும் நம் உணவு பட்டியலில் ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருட்கள் அதிகம் இருக்கும் படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒட்டுமொத்தமாக அரிசி உணவை உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நல்ல அணுகுமுறை அல்ல என்று தேசாய் குறிப்பிட்டுள்ளார். அரிசி உணவுடன் புரதச்சத்து மிகுந்த உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் அரிசி உணவை மிகவும் சத்து மிகுந்த உணவாக நம்மால் மாற்ற முடியும். அரிசியில் உள்ள கார்போஹைடிரேட்டுகள் தான் உடலின் சக்திக்கு அடிப்படையானவை. எனவே அவற்றை முற்றிலுமாக உணவு பட்டியலில் இருந்து நீக்குவது என்பது நம்மை பலவீனம் அடையச் செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இந்த செயல்முறை தசைகள் வலுவிழிப்பதற்கும் உடலில் அதிக அளவிலான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படுவதற்கும் வழி வகுக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. உடலில் அதிக அளவில் சேர்ந்துள்ள கொழுப்பை குறைப்பது மட்டுமே நமது நோக்கமாக இருக்க வேண்டுமே தவிர தசைகளை குறைப்பது நோக்கமாக இருக்கக் கூடாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாலை நேரத்தில் டீ குடிப்பது தவறா..? நிபுணர்கள் கூறும் அதிர்ச்சி தகவல்..!

August 03, 2023 0

 இந்திய மக்களின் வாழ்வியலுடன் டீ எந்த அளவுக்கு பின்னி பிணைந்துள்ளது என்பதை நாம் சொல்லி தெரிய வேண்டியது இல்லை. அதிகாலையில் வீட்டில் எழுந்த உடனேயே பல் துலக்கி கம கமவென்ற மணத்துடன் டீ அருந்தாவிட்டால் நம் மக்களுக்கு அன்றைய பொழுதே தொடங்காது.

வீட்டில் டீ அருந்திய கையோடு அன்றைய பொழுது கழிந்து விடாது. ஒவ்வொரு தெருவிலும், திரும்பிப் பார்க்கும் திசையிலும் எண்ணற்ற டீக்கடைகள் இருக்கின்றன. அவை அத்தனையிலும் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும். கோடை வெயில் சுட்டெரிக்கும் சமயத்திலும் கூட சூடாக டீ அருந்தும் பழக்கம் பலருக்கு உண்டு. நம் மக்கள் இந்த அளவுக்கு தீராத மோகம் கொண்ட டீயை மாலை நேரத்தில் அருந்தலாமா என்று கேள்வி எழுகிறது. இந்த கேள்விக்கான விடையை இப்போது பார்க்கலாம்.

மாலையில் டீ அருந்தக்கூடாது..! நீங்கள் டீ பிரியராக இருக்கலாம், நேரம் காலம் பார்க்காமல் டீ அருந்துபவராக இருக்கலாம். ஆனால் மாலை நேரத்தில் டீ அருந்தக் கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

தூக்கம் மற்றும் கல்லீரல் சுத்திகரிப்பு : நாம் தூங்குவதற்கு 10 மணி நேரம் முன்பாகவே டீ மற்றும் காஃபைன் பானங்களை தவிர்த்து விட வேண்டும் என்று மருத்துவர் சவாலியா அறிவுறுத்துகிறார். நிம்மதியான தூக்கம், கல்லீரலில் நச்சுக்களை உடல் சுத்திகரிப்பது, அழற்சி தடுப்பு, ஆரோக்கியமான செரிமானம் ஆகியவற்றுக்கு இது உதவும் என்று அவர் தெரிவிக்கிறார்.

ஆரோக்கியம் தரும் பிளாக் டீ : நம் மக்களில் பலருக்கு பிளாக் டீ அருந்தும் பழக்கம் இருக்கிறது. பாலிஃபினால்ஸ் மற்றும் ஆண்டிஆக்ஸிடென்ட் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் செல்களின் சிதைவு மற்றும் அலர்ஜி போன்றவற்றை இது தடுக்கும்.

பால் கலந்தால் என்ன ஆகும்.? இருப்பினும் டீ என்றாலே அதில் பால் மற்றும் சர்க்கரை ஆகியவற்றை பிரதானமாக இந்தியர்கள் சேர்த்துக் கொள்கின்றனர். இதனால் டீ யில் உள்ள ஊட்டச்சத்து அளவுகள் மாறுபடுகின்றன. அதன் முழுமையான பலன் நமக்கு கிடைப்பதில்லை.

சுவை மாறுகிறது - இயல்பாக பார்த்தால் டீ லேசான கசப்பு சுவை கொண்டது. பால் மற்றும் சர்க்கரையை சேர்க்கும்போது இது இனிப்பு தன்மை கொண்டதாக மாறுகிறது. இதனால் சுவை மற்றும் தன்மை மாறுபட்டு விடுகிறது.

பிளாக் டீ-யே சிறப்பானது... டீயுடன் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கும்போது அதில் உள்ள ஆண்டிஆக்சிடென்ட் சத்துக்கள் மாறுபடுகின்றன. நேரடியாக டீ அருந்தும் போது கிடைக்கும் புத்துணர்ச்சியை காட்டிலும் பால் கலந்து குடிக்கும் போது குறைவான புத்துணர்ச்சியே நமக்கு கிடைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தினமும் காலை லெமன் வாட்டர் குடிப்பதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்..!

August 03, 2023 0

 ஆரோக்கிய பானங்களில் ஒன்றாக பிரபலமடைந்துள்ளது லெமன் வாட்டர். லெமன் வாட்டரா இது என்ன பெயர் புதுசா இருக்கு என்று யோசிக்கும் முன்பு, பெயர் தான் புதிது! சாதாரணமாக நாம் பருகும் தண்ணீரில் எலுமிச்சை சாறை மிக்ஸ் செய்து தயாரிக்கப்படுவதைத் தான் குறிக்கிறது.

எலுமிச்சை ஜூஸை தண்ணீரில் கலந்து செய்யப்படும் சிம்பிள் ட்ரின்க்காண லெமன் வாட்டர். இதில் சேர்க்கப்படும் எலுமிச்சை சாறின் அளவு அவரவர் விருப்பத்தை பொறுத்தது ஆகும். வெதுவெதுப்பான நீரில் தயார் செய்யப்படும் இதை காலை எழுந்தவுடன் குடிப்பது பலவிதமான நன்மைகளை அளிக்கிறது. ஒரு சிலர் இதில் புதினா இலை, தேன் அல்லது பிற சுவையூட்டும் பொருட்களை சேர்த்து குடிப்பார்கள். காலை நேரத்தில் இதைக் குடிப்பதால் கிடைக்கும் சில முக்கிய நன்மைகளை இங்கே பார்க்கலாம்.

ஹைட்ரேஷன்: இரவு நேரத்தின் நீண்ட தூக்கத்திற்குப் பிறகு காலை எழுந்தவுடன் உங்கள் நாளை உற்சாகமாக துவங்க மற்றும் ஆற்றலை அதிகரிக்க நம் உடலை ரீஹைட்ரேட் செய்ய வேண்டும். இதற்கு காலை நேரத்தில் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம். காலை எழுந்தவுடன் நீங்கள் குடிக்கும் தண்ணீரில் சிறிதளவு எலுமிச்சை ஜூஸ் அல்லது ஸ்லைசை சேர்ப்பதன் மூலம் அது ஆரோக்கியமானதாக மாறும். மேலும் தண்ணீரில் சுவைக்காக கொஞ்சம் எலுமிச்சை சாற்றைப் பயன்படுத்தினால் நீங்கள் அதிகமாக தண்ணீரை விரும்பி குடிப்பீர்கள். இதனால் உடலில் ஹைட்ரேஷன் லெவலை பராமரிக்க உதவும்.

வைட்டமின் சி: வைட்டமின் சி-யின் சிறந்த மூலமாக இருக்கிறது எலுமிச்சை. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டிஆக்ஸிடன்ட் ஆகும். இது நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துவதோடு, கொலாஜன் உற்பத்திக்கு உதவுகிறது மற்றும் தாவர அடிப்படையிலான உணவுகளில் இருந்து இரும்புச்சத்தை உறிஞ்சுவதற்கும் உதவுகிறது.

செரிமானம் மேம்படும்: லெமன் வாட்டர் குடிப்பது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மற்றும் வயிற்றில் ஆசிட் உற்பத்தியை ஊக்குவிக்கும் என்று சிலர் நம்புகிறார்கள். மேலும் இது உணவை உடைத்து செரிமானத்தை எளிதாக மேம்படுத்த உதவுகிறது. எனினும் இதற்கான சான்றுகள் குறைவாகவே உள்ளன.

சுவாசத்தை புத்துணர்ச்சியாக வைக்கும்: எலுமிச்சையின் சிட்ரஸ் பண்புகள் வாயில் உமிழ்நீர் உற்பத்தியை ஊக்குவிக்கும், செயல்பாட்டில் உள்ள துர்நாற்றத்தை எதிர்த்துப் போராடும். எனவே காலை நேரத்தில் லெமன் வாட்டர் குடிப்பது சுவாசத்தை புத்துணர்ச்சியடைய செய்து துர்நாற்றத்தை குறைக்கும்.

டீடாக்ஸிஃபிகேஷன்: லெமன் வாட்டர் பெரும்பாலும் டீடாக்ஸிஃபையிங் ஏஜென்ட்டாக செயல்படுகிறித்து, மேலும் இது உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. டீடாக்ஸ் பானமாகவும் இருக்கும் லெமன் வாட்டரை தினமும் குடித்தால் மலச்சிக்கலை குணமாகும், நச்சுக்கள் வெளியேறி குடல் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த, லெமன் வாட்டர் மட்டுமே தீர்வல்ல. சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் போன்ற பிற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களுடன் சேர்த்து இதனை பின்பற்ற வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

எலும்பை வலுப்படுத்த அசைவம் மட்டுமல்ல இந்த சைவ உணவுகளும் உதவும்..!

August 03, 2023 0

 வலுவுடன் கூடிய ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பது ஒட்டுமொத்த உடலுக்கு அவசியம். குறிப்பாக நாம் வயதாகும்போது, பால் அல்லது அசைவ உணவுகளை அதிகம் உட்கொள்வது எலும்புக்கு நல்லது என்று கூறுவதுண்டு. ஆனால், இங்கு பல சைவ உணவுகள், எலும்புகளை வலுவாக்கும் சூப்பர் ஃபுட்ஸாக வலம் வருகின்றன. அந்த வகையில், வலுவான எலும்புகளுக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களின் சிறந்த ஆதாரங்களாக இருக்கும் ஆறு தாவர அடிப்படையிலான சூப்பர் உணவுகள் குறித்துப் பார்க்கலாம்.

டோஃபு : சோயாபீன்களிலிருந்து தயாரிக்கப்படும் இந்த டோஃபு, ஒரு தாவர அடிப்படையிலான சத்தான புரதத்தைக் கொண்டிருக்கும் உணவாகும். இது பால் பொருள்களுக்கு ஒரு சிறந்த மாற்றாகக் கருதப்படுகிறது. இதில் அதிகளவும் கால்சியம், புரதம் ஆகிய சத்துகள் நிறைந்துள்ளன. டோஃபுவை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகள் பலமாகவும், எலும்பு முறிவுகளின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.

கீரைகள் : தாவர வகையை சார்ந்த கீரைகள் உணவின் முக்கிய அங்கமாகப் பார்க்கப்படுகிறது. இவை அத்தியாவசிய வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்து, புரதச்சத்தைக் கொண்டுள்ளன. கீரைகளை சாப்பிடுவது, நம் உடலை வலுவாக வைத்திருக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை சீராக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. சாலடுகள், சாண்ட்விச்கள், கூட்டு பொரியல் என எந்த விதத்திலும் உணவுடன் கீரை வகைகளைச் சேர்த்துக் கொள்ளலாம். இவை எந்தவொரு உணவிற்கும் ஒரு சுவையான மற்றும் சத்தான சைட் டிஷ்ஷாக அமைகின்றன. அதிகளவு கால்சியம் இதில் நிரம்பியுள்ளதால், எலுப்புகளுக்கு தேவையான வலுவை கீரை உணவுகள் தங்கு தடையின்றி வழங்குகின்றன.

பாதாம்: பாதாம் என்பது ஒரு 'நட்ஸ்' வகைகளில் சுவையானது மட்டுமல்ல; எலும்புகளுக்கு ஊட்டமளிக்கும் ஊட்டச்சத்துக்களின் அருமையான ஆதாரமாகும். கால்சியம், வைட்டமின் ஈ ஆகியவை நிறைந்த பாதாம் பருப்பு, எலும்பின் அடர்த்தியை ஆதரிக்க உதவுகிறது. மேலும், அவற்றின் கட்டமைப்பை பராமரிக்க உதவுகிறது. பாதாமில் இருக்கும் நல்ல ஆரோக்கியமான கொழுப்புகள் ஒட்டுமொத்த எலும்பு வலிமைக்கு பங்களிக்கின்றன.

வீகன் மில்க் : விலங்கில் இருந்து கிடைக்கும் பாலுக்கு மாற்றாக, வலுவூட்டப்பட்ட வீகன் மில்க் கூடுதல் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளன. இந்த பால் பொதுவாக பாதாம், சோயா, ஓட்ஸ் அல்லது தேங்காய் போன்ற தாவர வகை தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதாகும். லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு வலுவூட்டப்பட்ட தாவர பால் ஒரு சிறந்த வழி ஆகும்.

வீகன் மில்க் : விலங்கில் இருந்து கிடைக்கும் பாலுக்கு மாற்றாக, வலுவூட்டப்பட்ட வீகன் மில்க் கூடுதல் ஊட்டச்சத்துக்களால் செறிவூட்டப்பட்டுள்ளன. இந்த பால் பொதுவாக பாதாம், சோயா, ஓட்ஸ் அல்லது தேங்காய் போன்ற தாவர வகை தயாரிக்கப்படுகிறது. இதில் கால்சியம், வைட்டமின் டி, வைட்டமின் பி 12 போன்ற தாதுக்கள் அடங்கியுள்ளது. இந்த ஊட்டச்சத்துக்கள் நமது எலும்புகள், நோயெதிர்ப்பு அமைப்பு, ஒட்டுமொத்த ஆரோக்கியம் ஆகியவற்றிற்கு அவசியமானதாகும். லாக்டோஸ் ஒவ்வாமை இருப்பவர்களுக்கு வலுவூட்டப்பட்ட தாவர பால் ஒரு சிறந்த வழி ஆகும்.

ப்ரோக்கோலி : ப்ரோக்கோலி என்பது எலும்பு வலுப்படுத்தும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பிய ஒரு காய்கறி வகையாகும். அதன் கால்சியம், வைட்டமின் கே, மெக்னீசியம் ஆகியவை எலும்பு ஆரோக்கியத்திற்கு முதன்மையானதாக இருக்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மலச்சிக்கல் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க தினமும் காலை இதை குடிச்சுட்டு வாங்க..!

August 03, 2023 0

 காலை எழுந்ததும் வெறும் வயிற்றில் நாம் சாப்பிடக்கூடிய உணவுகளில் இருக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களை நமது உடல் உறுப்புகள் மிக எளிதாக உறிஞ்சுவதன் காரணமாக, நமது ஆரோக்கியத்தில் சிறந்த மாற்றத்தை பெறலாம் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. வெறும் வயிற்றில் சாப்பிடுவதற்கு ஏராளமான உணவுகள் மற்றும் பானங்கள் பரிந்துரைக்கப்பட்டாலும் உலர் திராட்சை தண்ணீர் பருகுவது நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது. எனவே வெறும் வயிற்றில் ஊற வைத்த உலர் திராட்சையை சாப்பிடுவதால் நாம் பெறக்கூடிய பலன்கள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.

கல்லீரலை சுத்தம் செய்கிறது : உலர் திராட்சை தண்ணீர் பருகுவது நமது உடலில் இருக்கக்கூடிய நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற உதவுகிறது. கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு, ரத்தத்தை சுத்தப்படுத்துவதற்கும் இந்த உலர் திராட்சை தண்ணீர் பேருதவி புரிகிறது.

உடல் எடை குறைக்க உதவுகிறது : தினமும் காலை எழுந்ததும் உலர் திராட்சை தண்ணீர் பருகி வந்தால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். அதிகப்படியான ஃபிரக்டோஸ் மற்றும் குளுக்கோஸ் நமக்கு தேவையான ஆற்றலை தருகிறது. அதோடு இதில் ஏராளமான நார்ச்சத்து காணப்படுவதால் நம்மை நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வுடன் இருக்க செய்கிறது. இதன் காரணமாக நமது கலோரி உட்கொள்ளல் குறைக்கப்பட்டு, உடல் எடை குறைய வழி வகுக்கிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது : உலர் திராட்சையில் பொதிந்து கிடக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

புற்றுநோய் அபாயத்தை குறைக்கிறது : உலர் திராட்சையில் பொதிந்து கிடக்கும் ஆன்டி-ஆக்சிடன்டுகள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடிய ஃப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராடுகிறது.

இதயத்தை ஆரோக்கியமாக வைக்கிறது : உலர் திராட்சை தண்ணீர் இதயத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதோடு இரத்த சுத்திகரிப்பானாகவும் செயல்படுகிறது. கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதை தடுப்பதன் மூலமாக இதயத்தின் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்கிறது.

வயிற்றில் உள்ள அமிலத்தை பராமரிக்கிறது  : அசிடிட்டி பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு உலர் திராட்சை தண்ணீர் ஒரு அருமருந்தாக செயல்படுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது  : ஆன்டி-ஆக்சிடன்டுகள் நிறைந்த இந்த உலர் திராட்சை தண்ணீர் நமது நோய் எதிர்ப்பு அமைப்பை வலுபடுத்தி, எந்த விதமான தொற்றுகள் நம்மை நெருங்குவதையும் தடுக்கிறது.

மலச்சிக்கல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கிறது : தொடர்ந்து உலர் திராட்சை தண்ணீர் குடித்து வருவது நமது செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல், வயிற்று உப்புசம், அஜீரணம் போன்ற செரிமான கோளாறுகள் ஏற்படுவதை தடுக்கிறது.

எலும்புகளை வலுப்படுத்துகிறது : உலர் திராட்சையில் காணப்படும் போரான் எலும்புகளின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. அதோடு உலர் திராட்சையில் கால்சியம் சத்தம் காணப்படுவதால் இது எலும்புகளை வலுவாக்கவும் உதவுகிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது : உலர் திராட்சையில் காணப்படும் பொட்டாசியம் சத்து உடலின் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்க உதவுகிறது.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பு வர என்ன காரணம்? தப்பிக்கும் வழிகள் என்ன? நிபுணரின் விளக்கம்..!

August 03, 2023 0

 அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர்.

உடலமைப்பில் கட்டுமஸ்தானவர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறானது. விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் மாரடைப்பால் இறந்து வருவதை செய்திகளில் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆரோக்கியமானவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதைக்கூட பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் என்ன? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக பலருக்கும் இருக்கிறது.

இது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் இன்டர்நேஷ்னல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டாக இருக்கும் மருத்துவர் டாக்டர் அமன் மகிஜா பேசும்போது, மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய பாதிப்பு (Cardiac Arrest) என்பது ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எனத் தெரிவித்துள்ளார். தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஒரு நபருக்கு திடீர் மார்பு வலி, வியர்வை, படபடப்பு மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்படும் என விளக்கம் அளித்துள்ளார். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்று டாக்டர் அமன் மகிஜா கூறியுள்ளார்.

இதய நோய்க்கான காரணங்கள்:

இருதய நோய்களுக்கான முதன்மை காரணம் ஆரோக்கியமற்ற, செயலற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து உள்ளவர்கள், எந்த செயல்பாடும் இல்லாத வாழ்க்கை முறையில் இருந்தால் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும் இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள் என கூறும் மருத்துவர்கள், பரம்பரையாக இதய நோய் வருவதற்கும் சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, அர்ரித்மியா, கரோனரி இதயநோய் உள்ளிட்டவை பிற இதய நோய்களாகும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிகள் :

பரம்பரை இருதய நோய் ஆபத்து இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுபவராக இருந்தால் கூட மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை சமச்சீராக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு, தலைவலி, மார்பு வலி போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. இவை திடீர் மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.

கொலஸ்ட்ரால் அதிகமானால் இந்த அறிகுறிகள் தான் முதலில் தெரியும்... லேசுல விட்டுடாதீங்க..!

August 03, 2023 0

 ரத்தத்தில் கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது உடலில் எந்த மாதிரியான அறிகுறிகள் தோன்றும் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். கொலஸ்ட்ரால் என்றாலே நம் உடலுக்கு கேடு விளைவுக்கும் என்ற ஒரு தவறான கண்ணோட்டம் இருக்கிறது. ஆனால் ஆரோக்கியமான செல்களை உருவாக்க நமது ரத்தத்திற்கு மெழுகு போன்ற ஒரு பொருளான கொலஸ்ட்ரால் அவசியம்.

எனினும், நம் உடலில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்ந்தால் அது தான் இதய நோய்களை ஏற்படுத்தும். கொலஸ்ட்ரால் என்பது நமது கல்லீரலால் உருவாக்கப்படும் மெழுகு போன்ற கொழுப்பு மாதிரியான ஒரு பொருள். இது வைட்டமின் டி, பல்வேறு ஹார்மோன்கள் மற்றும் செல் சுவர்கள் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிக்கிறது. கொலஸ்ட்ரால் நீரில் கரையாது. அதேபோல அதனால் தனித்து உடலில் எங்கும் செல்ல இயலாது.

இன்று உலக அளவில் பலமக்கள் அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர். இது மோசமான வாழ்க்கை முறை காரணமாக ஏற்படுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் ஒரு சில குணப்படுத்த கூடியவையாகவும், ஒரு சில தவிர்க்கக் கூடியவையாகவும் உள்ளன. நல்ல உணவு மூலமாகவும், அன்றாடம் உடற்பயிற்சி செய்வதன் மூலமாகவும் அதிக கொலஸ்ட்ராலை எளிதாக குறைக்கலாம்.

எந்த ஒரு நோயையுமே ஆரம்பத்தில் கண்டுபிடிப்பது அதற்கான தீர்வை எளிதாக்கும். ஒரு சிலர் தங்களுக்கு அதிக கொலஸ்ட்ரால் இருப்பது தெரியாமலேயே வாழ்கின்றனர். ஆகவே, அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் என்னென்ன அறிகுறிகள் தென்படும் என்பதை பார்க்கலாம்.

  • கை கால் மரத்து போவது: அதிக கொலஸ்ட்ரால் நரம்பைகளை பாதிப்பதால் கை மற்றும் கால்களில் கூசுவது போன்ற உணர்வு அல்லது மரத்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அதிகப்படியான கொலஸ்ட்ரால் ஒரு பகுதியில் தேங்கும்போது அங்கு ரத்த ஓட்டம் குறைகிறது. இதனால் மரத்து போன உணர்வு உண்டாகிறது.
  • மூச்சு விடுவதில் சிரமம்: அதிக கொலஸ்ட்ரால் உட்பட பல இதய நோய்களுக்குான முக்கிய அறிகுறியாக மூச்சு திணறல் கருதப்படுகிறது. கொலஸ்ட்ரால் தமனிகளில் (arteries) தேங்குவதன் காரணமாக இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதால் இந்த மூச்சுத் திணறல் உண்டாகிறது.
  • நெஞ்சு வலி: அதிக கொலஸ்ட்ரால் காரணமாக இதயம் சார்ந்த நோய்கள் உள்ள பெரும்பாலான நபர்கள் நெஞ்சில் ஒருவிதமான அசௌகரியத்தை அனுபவிப்பதாக கூறுகின்றனர். தமனிகளில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் தேங்கி, அங்கு அடைப்புகளை உண்டாக்குகிறது. இதனால் நெஞ்சு வலி ஏற்படுகிறது.
  • சோர்வு: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சனையால் அவதிப்படும் பெரும்பாலான நபர்கள் அதிகப்படியான சோர்வை அனுபவிக்கின்றனர். கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கும் பொழுது தசைகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைவதன் காரணமாகவே இந்த சோர்வு உண்டாகிறது.
  • உயர் ரத்த அழுத்தம்: அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த அழுத்தம் அதிகமாகும். தமனிகளில் கொலஸ்ட்ரால் அதிகப்படியாக படியும் பொழுது, ரத்த ஓட்டம் தடைபடுகிறது. இதனால் ரத்தத்தின் அழுத்தம் அதிகமாகிறது.
  • கண்பார்வை சார்ந்த கோளாறுகள்: அதிகப்படியான கொலஸ்ட்ரால் நேரடியாக நமது கண் பார்வையை பாதிக்கக்கூடும். ரத்த தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக கண்களுக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து கண் சார்ந்த பிரச்சனைகள் உருவாகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 முக்கியமான பயிற்சிகள்..!

August 03, 2023 0

 

நமது இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது என்பது நம்முடைய ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் முக்கியமான ஒன்று. உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது என்பது இதய ஆரோக்கியத்தை சிறப்பாக பராமரிக்க உதவும் ஒரு முக்கிய படியாகும்.

இதய தசையை வலுப்படுத்த, எடையை கட்டுக்குள் வைக்க, மாரடைப்பு அல்லது பக்கவாதத்திற்கு வழிவகுக்கும் ஹை கொலஸ்ட்ரால், உயர் ரத்த சர்க்கரை மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட சிக்கல்கள் காரணமாக ஏற்படும் தமனி சேதத்தை தடுக்கவும் வழக்கமான உடல் செயல்பாடுகள் மிகவும் பயனுள்ளது.

அந்த வகையில் நம் இதயத்தை வலுப்படுத்த சிறந்த வழி உடற்பயிற்சி. தினசரி உடற்பயிற்சி செய்பவர்களை விட, உடற்பயிற்சி செய்யாதவர்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம் என எச்சரிக்கிறார்கள் நிபுணர்கள். வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது மிதமான உடற்பயிற்சி செய்ய நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உங்கள் இதயத்தை வலுவாக மற்றும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் 5 முக்கிய உடற்பயிற்சிகள் இங்கே.

சுறுசுறுப்பான வாக்கிங்: வாக்கிங் என்பது ஒருவர் தனது தினசரி வழக்கத்தில் எளிதாக இணைத்து கொள்ள கூடிய குறைந்த தாக்கம் கொண்ட ஒரு கார்டியோ பயிற்சி ஆகும். நடைபயிற்சி, குறிப்பாக வேக நடைபயிற்சி, உங்கள் இதயத்தை வலுப்படுத்த ஒரு சிறந்த வழியாகும். எனவே இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் வாரத்தில் குறைந்தது 6 நாட்களுக்கு 30 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.

சைக்கிளிங்: சைக்கிள் ஓட்டும் பழக்கம் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் சைக்கிளிங் என்பது இதயத்தை பலப்படுத்தும் ஒரு சிறந்த ஏரோபிக் பயிற்சியாகும். இது இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கலோரிகளை எரிக்கவும் ஆரோக்கியமான எடையை பராமரிக்கவும் சைக்கிளிங் உதவுகிறது.

நீச்சல்: நீச்சல் பயிற்சி என்பது நம் உடலை மட்டுமல்ல இதயத்தையும் பலப்படுத்த உதவும் சிறந்த முழு உடல் பயிற்சியாகும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைக்கும் அனைத்து வயதினருக்கும் நீச்சல் ஒரு சிறந்த தேர்வாகும்.நீச்சல் பயிற்சியானது இதயத்தை வலிமையாக்குகிறது.

ஏரோபிக் டான்ஸ் அல்லது ஜூம்பா: டான்சிங் செய்வது என்பது வேடிக்கையானது மட்டுமல்ல, நம் இதயத்தை சிறப்பாக செயல்பட தூண்டுவதற்கான சிறந்த வழியாகும். ஏரோபிக் டான்ஸ் அல்லது ஜூம்பா கிளாஸ் நடன அசைவுகளை ஏரோபிக் பயிற்சிகளுடன் இணைத்து செய்வது சுவாரஸ்யமான மற்றும் பயனுள்ள இதய பயிற்சியாக அமைகிறது.

ஜம்பிங் ரோப்: ஜம்பிங் ரோப் என்பது இதய ஆரோக்கியம், ஸ்டாமினா மற்றும் கோர்டினேஷன் ஆகியவற்றை மேம்படுத்த உதவும் ஹை-இன்டென்சிட்டி கார்டியோவாஸ்குலர் பயிற்சி ஆகும். இது இதய துடிப்பை சீராக வைப்பதோஇதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை கணிசமாகக் குறைக்கும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

பிரஷர் குக்கரில் ஒருபோதும் இந்த உணவுகளை சமைத்துவிடாதீர்கள்..!

August 03, 2023 0

 முன்னர் எல்லாம் எதை வேகவைக்க வேண்டும் என்றாலும் தண்ணீர் கொதிக்க வைத்து அதில் சமைக்க வேண்டியதை போட்டு சமைத்து வந்தனர்.ஆனால் நவீன சமையலறைகளில் பிரஷர் குக்கர்கள் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி, பருப்பு, கிழங்கு  முதல் புலாவ், பிரியாணி வரை, மக்கள் எல்லாவற்றையும் பிரஷர் குக்கரில் செய்கிறோம்.

சுவை மற்றும் ஆரோக்கியத்திற்காகவும் எரிவாயுவை சேமிப்பதற்கும் இந்த சிறந்த சமையல் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் பிரஷர் குக்கரில் ஒருபோதும் செய்யக்கூடாத சில உணவுகளும் உள்ளன. அவை என்னென்ன மற்றும் ஏன் என்று நிபுணர்கள் சொல்வதைத் தெரிந்துகொள்வோம்.

வறுத்த உணவுகள்:  அதிக அழுத்தம் மற்றும் சூடான எண்ணெயுடன் தொடர்புடைய டீப் பிரை உணவுகள் சமைக்க பிரஷர் குக்கரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஆழமாக வறுக்க சரியான  வெப்பநிலை கட்டுப்பாடு தேவைப்படுகிறது. பிரஷர் குக்கர் இந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்படவில்லை. மீறி பயன்படுத்தினால் அதீத வெப்பம்,  தீக்காயங்கள் மற்றும் தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. டீப் பிரை  வாணலி அல்லது பிரத்யேக டீப் பிரையர்கள் பயன்படுத்துங்கள்.

விரைவாக சமைக்கும் காய்கறிகள் : பச்சை பட்டாணி, புடலங்காய், சுரைக்காய் போன்ற காய்கறிகள் மென்மையாகவும் விரைவாகவும் சமைக்கப்படுகின்றன. இந்த காய்கறிகளுக்கு பிரஷர் குக்கரைப் பயன்படுத்தினால், அளவுக்கு அதிகமாக வெந்து அவற்றின் துடிப்பான ஊட்டச்சத்துக்களை இழக்க நேரிடும்.

அதே போல இந்த விதி இலை கீரைகளுக்கும் பொருந்தும்.  சத்துக்கள் எளிதாக வீணாகிவும். கீரைகளின் ஊட்டச்சத்து ஒருமைப்பாட்டைத் தக்கவைக்க, திறந்த பாத்திரங்களில் இலை கீரைகளை வேகவைத்தல் அல்லது வதக்குதல் போன்ற  முறைகளைப் பயன்படுத்தி சமைப்பது சிறந்தது.

முட்டைகள் : பிரஷர் குக்கரில் முழு முட்டைகளை அவற்றின் ஓடுகளோடு சமைப்பது ஆபத்தானது. முட்டைகளுக்குள் சிக்கியுள்ள நீராவி அவற்றை வெடிக்கச் செய்யலாம். மேலும் இது குக்கர் சேதம் ஆவதற்கும் வழிவகுக்கும்.அதனால் தனியாக மூடி உள்ள சாதாரண பாத்திரத்தில் வேக வையுங்கள்

பால் பொருட்கள் : பாலை பொதுவாக அதற்காக வைத்திருக்கும் பாத்திரம் அல்லது பால் குக்கரில் தான் சூடு செய்வோம். இருந்தாலும் பாயசம், கிரேவி போன்று எதை செய்யும்போதும் பாலை பிரஸர் குக்கரில் சேர்த்து வேக வைத்துவிட கூடாது. அதிக அழுத்தம் மற்றும் வெப்பநிலைக்கு வெளிப்படும் போது, ​​பால் அல்லது கிரீம் போன்ற பால் பொருட்கள் திரிந்துவிடும். இது உங்கள் உணவுகளில் விரும்பத்தகாத சுவைகளை ஏற்படுத்தும். பிரஷர் குக்கரில்-சமையல் செயல்முறை முடிந்ததும் பால் பொருட்களைச் சேர்ப்பது நல்லது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மழைக்கால தொற்றிலிருந்து உங்கள் கண்களை பாதுகாக்க உதவும் எளிய வீட்டு வைத்தியங்கள்.!

August 03, 2023 0

 மழைக்காலம் வந்துவிட்டாலே நோய்களும் தொற்றுகளும் படையெடுத்து வந்துவிடும். ஈரப்பதமான யும் அங்கங்கே தேங்கி நிற்கும் நீரும் பல நோய்கள் பரவ காரணமாகின்றன. இதனால் மழைக்காலங்களில் வழக்கத்தை விட நம் உடல்நிலை பல பிரச்சனைகளை சந்திக்கிறது. பொதுவாக இந்த சமயங்களில் கண்களில் வெண்படல அழற்சி ஏற்படுகிறது. இதனை “மெட்ராஸ் ஐ” என்றும் கூறுவார்கள். இதனால் உங்கள் கண்கள் சிவந்து, கடுமையான எரிச்சல் உண்டாகும். எளிதில் தொற்றக் கூடிய இதனை, வீட்டு வைத்தியத்தின் மூலமே குணப்படுத்தலாம். இதில் சரியாகாவிட்டால், நீங்கள் கண் மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுக்க வேண்டியது அவசியமாகும்.

தேன் : தேனில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறையவே உள்ளது. ஆகையால் கண்களில் ஏற்படும் தொற்றை சீராக்க தேனை தாராளமாக பயன்படுத்தலாம். அதற்கு என்ன செய்ய வேண்டுமென்றால், ஒரு கிளாஸ் தண்ணீரில் இரண்டு டேபிள் ஸ்பூன் தேனை சேர்த்து, அந்த தண்ணீரால் உங்கள் கண்களை கழுவுங்கள். இப்படிச் செய்வதால் கண்களில் ஏற்படக் கூடிய வலி மற்றும் எரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ரோஸ் வாட்டர் : கண்களில் ஏற்படும் தொற்றை குணப்படுத்த ரோஸ் வாட்டர் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதுவொரு கிருமிநாசினியாகும். மேலும் இதில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் இருப்பதால், பாக்டீரியாவால் ஏற்படும் தொற்றை சீராக்க ரோஸ் வாட்டர் பெரிதும் உதவுகிறது. இது நம் கண்களை சுத்தப்படுத்துவதோடு குளிர்விக்கவும் செய்கிறது. ஒவ்வொரு கண்ணிலும் இரண்டு துளி டோஸ் வாட்டரை இடுங்கள். ஒரு நிமிடத்திற்கு உங்கள் கண்களை அப்படியே மூடி வைத்திருங்கள். இப்படிச் செய்வதால் வலி மற்றும் எரிச்சலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கு குளிர்ச்சித்தன்மை கொண்டது. கண்களில் ஏற்படும் எரிச்சலை இது குறைக்கிறது. உருளைக் கிழங்கில் உள்ள பண்புகள் நம் கண்களில் தொற்று ஏற்படாமல் காக்கிறது. மெல்லிய துண்டுகளாக உருளைக் கிழங்கை வெட்டிக் கொள்ளுங்கள். அதை இரவு தூங்குவதற்கு முன் உங்கள் கண்களின் மேல் வையுங்கள். 10 அல்லது 15 நிமிடங்கள் கழித்து எடுத்துவிடுங்கள். கண்களில் ஏற்படும் வலி மற்றும் வீக்கம் இதனால் குறையும்.

துளசி : துளசியில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்டும், பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. கண்களில் ஏற்படும் வலி மற்றும் எரிச்சலை துளசி குறைக்க உதவுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் கொஞ்சம் துளசியை எடுத்து இரவு நேரத்தில் ஊற வையுங்கள். அடுத்த நாள் காலையில் அந்த நீரை பயன்படுத்தி, உங்கள் கண்களை சுத்தம் செய்யுங்கள். இப்படியே தொடர்ந்து 3-4 நாட்கள் செய்தால், கண் வலி குறையத் தொடங்கும்.

மஞ்சள்: இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால், மஞ்சளில் பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. ஆனால் மஞ்சள், கண் எரிச்சலை குணப்படுத்துமா என பலரும் ஆச்சர்யப்படுவீர்கள். ஒரு கிளாஸ் மிதமான சுடு தண்ணீரில் கொஞ்சம் மஞ்சள் தூளை போட்டு, அதை நன்றாக கிளருங்கள். இப்போது சிறிய காட்டன் பஞ்சை எடுத்து, அதை இந்த மஞ்சள் நீரில் நனைத்து, உங்கள் கண்களை சுத்தப்படுத்துங்கள். இப்படிச் செய்வதால், உங்கள் கண்களில் இருக்கக்கூடிய அழுக்குகள் அகன்று, தொற்று ஏற்படுவதை தடுக்கும்.

க்ரீன் டீ பேக்ஸ் : இதில் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் உள்ளது. ஆகையால் கண்களின் வீக்கத்தையும் வலியையும் இது குறைக்கிறது. மிதமான சுடு தண்ணீரில், க்ரீன் டீ பையை நனைத்து, அதை உங்கள் இரண்டு கண்களின் மேல் வைத்துக் கொள்ளுங்கள். இந்த க்ரீன் டீ பைகளை ஃபிரிட்ஜில் வைத்தும் பயன்படுத்தலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip