Agri Info

Adding Green to your Life

August 10, 2023

ஐ.ஏ.எஸ்-க்கு இணையான ஐ.இ.எஸ் தேர்வு: இந்த 4 என்ஜினீயரிங் குரூப் மாணவ

August 10, 2023 0

 தமிழகத்தில் பொறியியல் கவுன்சலிங் நடைபெற்று வரும் நிலையில், மாணவர்கள் அவசியம் தெரிந்துக் கொள்ள வேண்டிய ஐ.இ.எஸ் தேர்வு பற்றியும், அதற்கு என்ன பிரான்ச் படிக்க வேண்டும் என்பது பற்றியும் இப்போது பார்ப்போம்.

அகில இந்திய குடிமை பணிகள் போலவே, அகில இந்திய பொறியியல் பணிகள் உள்ளன. அதாவது ஐ.ஏ.எஸ் போல் ஐ.இ.எஸ் பணிகள் உண்டு. IES – Indian Engineering Services. ஐ.இ.எஸ் என்பது நாட்டின் உயரிய பொறியியல் சார்ந்த பணியாகும். இதற்கான தேர்வு சிவில் சர்வீஸ் தேர்வுகளைப் போன்றே கடினமானது. இந்த தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த இந்தத் தேர்வை என்ஜினீயரிங் படிப்புகளில் நூற்றுக்கு மேலான பாடப்பிரிவுகள் இருந்தாலும், 4 பாடப்பிரிவுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே எழுத முடியும்.

இந்தநிலையில், ஐ.இ.எஸ் தேர்வு மற்றும் அதற்கான பொறியியல் பாடப்பிரிவுகள் குறித்து கல்வியாளர் அஸ்வின் தனது யூடியூப் பக்கத்தில் விளக்கியுள்ளார். கம்ப்யூட்டர் சயின்ஸ் எதிர்காலத்திற்கு தேவையான படிப்பு தான். ஆனால் இத்தனை பேர் படிக்க வேண்டுமா என்பது தான் கேள்விக்குறி. எலன் மஸ்க் உள்ளிட்ட பெரு நிறுவன தலைவர்கள் உங்கள் துறையில் ஆட்டோமேஷன் சார்ந்து படியுங்கள் என்று அறிவுறுத்துகிறார்கள். இதேநிலை நீடித்தால், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்பவர்கள், ஆட்டோமேஷன், மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ் உள்ளிட்ட பாடங்களை படிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

என்ஜினீயரிங் படித்தவர்கள் மட்டுமே எழுதக்கூடிய ஐ.இ.எஸ் தேர்வு உள்ளது. இதற்கான தேர்வை யூ.பி.எஸ்.சி தான் நடத்துகிறது. இந்தியாவிலே என்ஜினீயர்களுக்கு அதிக சம்பளம் வழங்கும் பதவி இது தான். இதற்கு கீழ்கண்ட 4 பொறியியல் பாடப்பிரிவை படித்தவர்கள் மட்டுமே தகுதி பெறுவர்.

  1. சிவில் என்ஜினீயரிங்
  2. மெக்கானிக்கல் என்ஜினீயரிங்
  3. எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்
  4. எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன் என்ஜினீயரிங்

இது தவிர பிற பாடப்பிரிவை படித்தவர்கள் எழுத முடியாது. குறிப்பாக கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்தவர்கள் எழுத முடியாது. கோர் டிபார்ட்மெண்ட்களில் நிறைய வேலை வாய்ப்புகள் உள்ளன. எனவே நல்ல கல்லூரிகளில் இதுபோன்ற கோர் படிப்புகளை தேர்வு செய்யுங்கள்.


ஐ.இ.எஸ் தேர்வு செயல்முறை

முதல் நிலை தேர்வு – 500 மதிப்பெண்கள்

முதன்மை தேர்வு – 600 மதிப்பெண்கள்

நேர்முகத் தேர்வு – 200 மதிப்பெண்கள்

முதல்நிலைத் தேர்வில் ஜெனரல் ஸ்டெடிஸ் என்ஜினீயரிங் ஆப்டிடியூட் மற்றும் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடத்தில் இருந்து வினாக்கள் இடம்பெறும். முதன்மைத் தேர்வில் பொறியியல் படிப்புகளில் இருந்து விரிவான விடையளிக்கும் வகையில் வினாக்கள் இடம்பெறும்.

ஐ.இ.எஸ் தேர்வில் தேர்வாகுபவர்களுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வசதிகள் வழங்கப்படும். எனவே மாணவர்கள் கோர் படிப்புகளுக்கு கவனம் கொடுங்கள்.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் வேல்ராஜூம் கம்ப்யூட்டர் சயின்ஸ் தவிர கோர் படிப்புகளில் கவனம் செலுத்துங்கள் என்று கூறியுள்ளார். மேலும் நல்ல கல்லூரிகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுறுத்தியுள்ளார்.

ஐ.ஐ.டி மெட்ராஸ் ஆன்லைன் கோர்ஸ்; ஜே.இ.இ, கேட் மார்க் தேவை இல்லை!

August 10, 2023 0

 இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் (IIT Madras) அதன் அவுட்ரீச் மற்றும் டிஜிட்டல் கல்வி மையம் (CODE) மூலம் ‘பயிற்சி பொறியாளர்களுக்கான சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்கள்’ (Additive Manufacturing Technologies) என்ற ஆன்லைன் சான்றிதழ் படிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. அதிகாரப்பூர்வ வெளியீட்டின்படி, பதிவு செய்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 20 ஆகும்.

பல்வேறு பொறியியல் மற்றும் பயோமெடிக்கல் கூறுகளை உற்பத்தி செய்வதற்கான கவர்ச்சிகரமான செயல்முறையாக சேர்க்கை உற்பத்தி (AM) உருவாகி வருகிறது. ஐ.ஐ.டி-மெட்ராஸ் அறிவிப்பின்படி, பல்வேறு பொறியியல் மற்றும் பயோமெடிக்கல் பயன்பாடுகளில் சேர்க்கை உற்பத்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு பெரிய சாத்தியம் உள்ளது. குறிப்பிட்ட தனிப்பயனாக்கப்பட்ட வடிவமைப்புகளுடன் சிக்கலான உடல் உள்வைப்புகளை குறைந்த அளவு உற்பத்தி செய்வதற்கான சாத்தியமான, செலவு குறைந்த மற்றும் நிகர-வடிவ உற்பத்தி செயல்முறையாக சேர்க்கை உற்பத்தி ஏற்கனவே வெளிப்பட்டுள்ளது என்று அறிவிப்பு கூறுகிறது.

தகுதிகள்: பொறியியல் அல்லது பயன்பாட்டு அறிவியல் அல்லது அடிப்படை அறிவியலில் இளங்கலைப் பட்டம் பெற்று குறைந்தபட்சம் 3 வருட பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

ஐ.ஐ.டி மெட்ராஸின் உலோகவியல் மற்றும் பொருள்கள் பொறியியல் துறை இணைப் பேராசிரியர் டாக்டர் முருகையன் அமிர்தலிங்கம் கூறியதாவது: வகுப்பறையில் சேர்க்கை உற்பத்தி குறித்து கற்பிக்கப்படாத பயிற்சி பொறியாளர்கள் மற்றும் நடுத்தர நிலை மேலாளர்களை இலக்காகக் கொண்டு இந்தப் படிப்பு நடத்தப்படுகிறது. இந்த பாடநெறி, சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்கள் பற்றிய அடிப்படை மற்றும் பயன்பாட்டு அறிவை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. தங்கள் பணியிடத்தில் பல்வேறு சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்களை செயல்படுத்த விரும்புவோர், இந்தப் படிப்பின் மூலம் பயனடையலாம்.

இந்த பாடநெறி, செயலாக்கத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய செயலாக்க முறைகள், சேர்க்கை உற்பத்திக்கான வடிவமைப்பு உத்தி மற்றும் சேர்க்கை உற்பத்தி செயல்முறைகளின் செயல்பாட்டுக் கொள்கைகள் ஆகியவற்றின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. பயிற்சி பொறியாளர்கள் பல்வேறு சேர்க்கை உற்பத்தி முறைகளை நிர்வகிக்கும் அடிப்படைக் கோட்பாடுகள் மற்றும் கிடைக்கக்கூடிய சேர்க்கை உற்பத்தி தொழில்நுட்பங்களின் வணிகப் பொருத்தத்தை மேம்படுத்துவதற்காக வளர்ந்த அறிவு சேவையில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.

இந்த பாடத்திட்டத்தை முடித்தவுடன், சேர்க்கை உற்பத்தித் துறையில் தங்கள் வேலை வாழ்க்கையைத் தொடங்கலாம்.

ஆர்வமுள்ளவர்கள் பின்வரும் இணைப்பின் மூலம் விண்ணப்பிக்கலாம் – https://code.iitm.ac.in/additive-manufacturing-technologies-for-practising-engineers

மதுரை எய்ம்ஸ் வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

August 10, 2023 0

 மதுரை எய்ம்ஸ் நிறுவனத்தில் உதவியாளர், ஸ்டெனோகிராபர், எழுத்தர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Library and Information Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Library Science or Library and information/ B.Sc. Degree and Bachelor Degree or Post Graduate Diploma in Library Science படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,400

Technicians (Laboratory)

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : B.Sc. in Medical Lab. Technology/ Diploma in Medical Lab. Technology படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,400

Warden

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலைப் பட்டப்படிப்பு மற்றும் Diploma / Certificate in House Keeping / Material Management / Public Relations / Estate Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 30 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 35,400

Stenographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சுருக்கெழுத்து தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,500

Upper Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 25,500

Lower Division Clerk

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு மற்றும் கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 25 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம் : ரூ. 19,900

வயது வரம்பு: மத்திய அரசு விதிகளின் படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://jipmer.edu.in/announcement/aiims-madurai-direct-recruitment-various-group-b-and-c-posts என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவு மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 1500, எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு ரூ. 1200

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://jipmer.edu.in/sites/default/files/Detailed%20Advertisement%20of%20Various%20Gr%20B%20%26%20C%202023%20Madurai.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

NLC Jobs; என்.எல்.சி வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிப்ளமோ தகுதி; உடனே அப்ளை பண்ணுங்க!

August 10, 2023 0

 தமிழகத்தில், நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் 12 ஆம் வகுப்பு மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 18 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 23.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Health Inspector

காலியிடங்களின் எண்ணிக்கை: 18

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Diploma in Health & Sanitation படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 30 வயதிற்குள் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.nlcindia.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 23.08.2023.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Health%20Inspector%20Final%20Advt28072023.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.



 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 9, 2023

இந்த 10 உணவுகள் உங்களது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா..?

August 09, 2023 0

 உலகளவில் மக்களை பாதிக்கும் பொதுவான நோய்களில் ஒன்றாக இருக்கிறது நீரிழிவு நோய். சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் தகவலின்படி, 20 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 537 மில்லியன் மக்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.


நீரிழிவு ஒரு நாள்பட்ட நோயாகும், மேலும் இதனை சரியான நேரத்தில் கவனிக்காமல் விட்டால், சிறுநீரகம் தொடர்பான பிரச்சினைகள், இதய நோய் போன்ற பல அபாய நிலைமைகள் ஏற்படும். இந்த சூழலில் டைப் 2 நீரிழிவு நோய் இருப்பவர்கள் மற்றும் ப்ரீடயாபட்டீஸ் நிலையில் இருப்பவர்கள் தங்களது ரத்த சர்க்கரை அளவை பராமரிப்பது அவசியம். இதன் ஒரு பகுதியாக ஒருவர் எந்த உணவுகளை சாப்பிட்டால் தனது ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் என்பதில் விழிப்புடன் இருக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும் மற்றும் நீரிழிவு நிலைக்கு மோசமான 10 உணவுகளை பற்றி இங்கே நாம் பார்க்கலாம்.

ஆரஞ்சு ஜூஸ்: 100% ஆரஞ்சு ஜூஸில் பல வைட்டமின்ஸ் மற்றும் மினரல்ஸ் இருக்கிறது என்றாலும், இதில் நார்ச்சத்து இல்லை. ரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துவதற்கு நார்ச்சத்து அவசியம். நார்ச்சத்து இல்லாமல் இருப்பதால் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது என்பது ஸ்டார்ச்சை, குளுக்கோஸாக உடைப்பதை மெதுவாக்குகிறது. எனவே ஆரஞ்சு ஜூஸ் குடிப்பது ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கும்.

காஃபி: நீங்கள் அடிக்கடி காஃபி குடிப்பவரா..! இந்த பானத்தில் உள்ள காஃபின் நம் உடலில் ஒரு ஹார்மோன் ரெஸ்பான்ஸை தூண்டுவதன் மூலம் ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்க செய்யும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

Quick குக்கிங் ஓட்ஸ்மீல்: இந்த ஓட்ஸ் ஒருபக்கம் எடை இழப்புக்கு உதவும் என்றாலும் மறுபக்கம் இது பதப்படுத்தப்பட்டு இதிலிருக்கும் நார்ச்சத்து அகற்றப்படுகிறது. இது ரத்த சர்க்கரையின் அளவு கணிசமாக அதிகரிக்க வழிவகுக்கும்.

பிரெட்ஸ்: ஒயிட் மற்றும் முழு தானிய பிரெட்கள் ஹை கிளைசெமிக் இன்டெக்ஸை (GI) கொண்டிருக்கின்றன. அதாவது GI அதிகமுள்ள உணவுகள் விரைவாக ரத்த சர்க்கரையை உயர்த்த கூடியவை.

ரெஸ்டாரன்ட்டில் தயாரிக்கப்படும் சூப்கள்: ​பெரும்பாலான சந்தர்ப்பங்களில் ரெஸ்டாரன்ட்டில் தயாரிக்கப்படும் சூப்களில் சுவைக்காக நிறைய Added sugars (சுகர் மற்றும் சிரப்கள்) சேர்க்கப்படும். இது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க வழிவகுக்கும்.

திராட்சைகள்: திராட்சை பழங்களில் சர்க்கரை அதிகமாகவும், நார்ச்சத்து குறைவாகவும் உள்ளது. எனவே இது ரத்த சர்க்கரையின் அளவை சட்டென்று அதிகரிக்க செய்யும்.

எனர்ஜி பார்ஸ்: பேக்கேஜ் செய்யப்பட்ட எனர்ஜி பார்கள் சில சாக்லேட் பார்களைப் போலவே அதிக அல்லது அதற்கு மேற்பட்ட சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்களை கொண்டிருக்கிறது. எனவே ஆற்றலுக்காக எனர்ஜி பார்களை சாப்பிடுவோர் அது ரத்த சர்க்கரை அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிரவுன் அரிசி: வெள்ளை அரிசியை விட பழுப்பு அரிசி ஆரோக்கியமானதாக இருந்தாலும், இதில் பொதுவாக கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. எனவே இது எளிதாக ரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கிறது.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு: சர்க்கரை வள்ளிக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது. இதனை அதிகம் எடுத்து கொள்வது ரத்த சர்க்கரையின் அளவில் அதிகரிப்பை ஏற்படுத்தும்.

டயட் சோடா: டயட் சோடாக்களில் உள்ளதை போன்ற ஜீரோ கலோரி செயற்கை ஸ்வீட்னர்ஸ்களை எடுத்து கொள்வது நீண்ட காலத்திற்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிக்கும் என ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. மேலும் டயட் சோடா எடை அதிகரிப்பு மற்றும் வளர்சிதை மாற்ற நோய்க்குறி ஆகியவற்றுடன் தொடர்புடையது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மின்னல் வேகத்தில் எடை குறைய வேண்டுமா..? இந்த ஸ்பெஷல் ட்ரிங்கை குடிங்க

August 09, 2023 0

 இன்றைய காலகட்டதில் உடல் பருமன், உடல் கொழுப்பு, தொப்பை போன்ற பிரச்சனைகள் ஒரு பொதுவான பிரச்சனை போல மாறிவிட்டது. எல்லாருக்கும் இருக்கிறது எனக்கும் இருக்கிறது என்று விட்டுவிட்டு பின்னர் அது உடல் ஆரோக்கியத்திற்கு காரணம் ஆகும்போது அதைக் குறைக்க போராட வேண்டி உள்ளது.

ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு இல்லா வேலைகளின்  விளைவுதான் உடல் எடை அதிகரித்தல். ஆனால், இனி நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. இந்த கட்டுரையில், எளிமையான முடிரையில் உங்கள் உடல் கொழுப்பைக் குறைபாதற்கான வழிகளை உங்களுக்கு சொல்கிறோம். அதன் செய்முறையைப் பற்றியும் நாங்கள் உங்களுக்குச் கூறப் போகிறோம், அதை உட்கொள்வதன் மூலம் சில நாட்களிலேயே அதன் பலனை உணர்வீர்கள்.

ஓமம் பொதுவாக எல்லா வீடுகளிலும் இருக்கும். இந்திய உணவுகளில் ஓமம் (Celery) விதைகளுக்கு என்று தனி இடம் உள்ளது. பொதுவாக செரிமான பிரச்சனை இருந்தால் ஓமம் தண்ணீர் குடிக்க சொல்வார்கள் ஆனால் இது எடை குறைபிற்கும் உதவும் என்பது நமக்குத் தெரியாது.

ஓமத்தை தண்ணீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, காலையில் எழுந்தவுடன் இந்த தண்ணீரை குடித்தால்  இதில் உள்ள தைமால் (Thymol) தொப்பையை குறைக்க உதவும். தைமால் (Thymol) வளர்சிதை (Metabolism) மாற்றத்தை பலப்படுத்துகிறது, செரிமானத்தை மேம்படுத்துகிறது மற்றும் அமிலத்தன்மை பிரச்சனையை நீக்குகிறது.

அதோடு அயோடின் (Iodine), பாஸ்பரஸ் (Phosphorus), கால்சியம் (Calcium) மற்றும் பொட்டாசியம் (Potassium) ஆகியவை இதில் காணப்படுகின்றன. இவை அனைத்தும் உடலுக்கு மிகவும் அவசியமான கூறுகள் ஆகும். அதோடு தினமும் ஓமம் தண்ணீர்  குடிப்பதால் சர்க்கரை மற்றும் வயிறு தொடர்பான பிற நோய்கள் குணமாகும்.மலச்சிக்கலில் (Constipation) இருந்தும் நிவாரணம் தருகிறது.

அதேபோல் வாயு மற்றும் ஆஸ்துமா பிரச்சனையால் சிரமப்படுவார்கள், ஓமம் தண்ணீரைப் பயன்படுத்தினால், அதன் விளைவு சில நாட்களில் தெரியும். ஒரு மாதம் தொடர்ந்து ஓமம் தண்ணீரை உபயோகிப்பதன் மூலம் 3-4 கிலோ எடை கண்டிப்பாக குறையும் என்று கூறப்படுகிறது.

எவ்வாறு பயன்படுத்துவது? பெட்டர் பலன்களை பெறுவதற்கு ஒரு தேக்கரண்டி சீரகம், ஒரு தேக்கரண்டி ஓமம் மற்றும் அரை தேக்கரண்டி இஞ்சி பொடியை தண்ணீர் சேர்த்து கலக்கி இந்த கலவையை தினமும் குடித்துவவும். நிச்சயம் உடல் எடை விரைவாகக்  குறைவதைக் காண்பீர்கள்.

மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு  ட்ரிங்கை குடிங்க.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தீவிர உடற்பயிற்சி செய்வதால் இதயம் எப்படி பாதிக்கப்படுகிறது..? இதனால் வரும் ஆபத்துகள் என்னென்ன..?

August 09, 2023 0

 நமது ஆரோக்கியமான வாழ்க்கைமுறைக்கும், இதய நலனை மேம்படுத்தவும், மன ஆரோக்கியத்திற்கும், நீண்ட ஆயுளுக்கும் சீரான உடர்பயிற்சி முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை அனைவரும் ஒத்துக்கொள்வார்கள். மிதமான உடற்பயிற்சி எப்போதும் நமக்கு நன்மையையே தரும்.

ஆனால் அதேசமயத்தில், தீவிர உடற்பயிற்சி மேற்கொள்வதால் உண்டாகும் பிரச்சனைகளையும், அதனால் நம் உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளையும் நீங்கள் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும். நம் உடலுக்கு இவ்வுளவுதான் முடியும் என்ற வரம்புகள் இருக்கும். அதையும் மீறி, ஓய்வில்லாமல் உடற்பயிற்சி செய்தால், மாரடைப்பு வரும் ஆபத்து அதிகமுள்ளது.

மிதமான உடற்பயிற்சி செய்வதால் நம்முடைய இதயத் துடிப்பு சீராக இருக்கும். ஆனால் தொடர்ந்து தீவிர உடற்பயிற்சியை மேற்கொண்டால், எதிர்வினைகள் பயங்கரமாக இருக்கும். மேலும் அதிகப்படியான தீவிர உடற்பயிற்சியால், சில நோய்க்குறிகளும் தென்படும். உதாரணமக, நம் உடல் வரம்பையும் மீறி எந்த ஓய்வும் இல்லாமல், தொடர்ச்சியாக தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ளும் போது, அவர்களுக்கு நாள்பட்ட சோர்வும், செயல்திறனில் குறைபாடும் ஏற்படும்.

தீவிர உடற்பயிற்சி செய்வதால் நம் இதயத்தின் மின்சார அமைப்பில் தற்காலிகமாக தொந்தரவு ஏற்படுகிறது. இதன் காரணமாக அசாதாரணமான முறையில் இதயம் துடிக்க தொடங்குகிறது. இதனால் எந்த ஆபத்தும் இல்லை, நாமே கட்டுப்படுத்திக் கொள்ளலாம். ஆனாலும், நாளடைவில் இது மேலறை நடுக்க நோய் அல்லது கீழறை துரித இதயத் துடிப்பு நோய் போன்ற தீவிர பிரச்சனைகளை உண்டாக்கும். ஏற்கனவே இதய நோயுள்ளவர்கள் எந்த மாதிரியான உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம் என மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு உங்கள் பயிற்சியை தொடங்குங்கள்.

உங்கள் இதயத்திற்கு எந்த ஆபத்தும் ஏற்படாமல், உடற்பயிற்சி செய்வதன் பலன் உங்களுக்கு முழுமையாக கிடைக்க வேண்டுமென்றால், சில பழக்கங்களை நாம் பின்பற்ற வேண்டும். இதோ சில பரிந்துரைகள்..

  • தீவிர உடற்பயிற்சியை கொஞ்சம் கொஞ்சமக அதிகப்படுத்துங்கள்: திடீரென உடற்பயிற்சியின் தீவிரத்தை அதிகப்படுத்தாதீர்கள். அதற்குப் பதிலாக உங்கள் உடல் ஏற்றுக் கொள்ளும் வகையில், அதிக உடல் உழைப்பின் ஆபத்தை குறைத்து கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சியை அதிகப்படுத்துங்கள்.
  • உங்கள் உடல் கூறுவதை கேளுங்கள்: அதிகப்படியான பயிற்சி செய்வதால் மிகவும் களைப்பாக உணர்வீர்கள். உங்கள் செயல்திறன் குறையும். அல்லது, சில சமயங்களில் உங்கள் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இதுபோன்ற அறிகுறிகளுக்கு கவனம் கொடுங்கள். கொஞ்சம் ஓய்வெடுங்கள். உங்கள் உடல் மீட்டெடுப்பதற்கு சற்று நேரம் கொடுங்கள்.
  • அவசியம் ஓய்வு தேவை: தீவிர உடற்பயிற்சிக்கு இடையே உங்கள் உடலை மறுபடியும் மீட்டெடுக்க கொஞ்சம் ஓய்வு தேவை. உங்கள் தசைகள் பழுதடையாமல் இருக்கவும், ஹார்மோன் சரிவிகிதத்தில் இருக்கவும், ஒட்டுமொத்தமாக நம்முடைய இதய நலன் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நம் உடலுக்கு போதுமான ஓய்வு தேவை.
  • சரிவிகிதமான உடற்பயிற்சியை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள்: பல்வேறு வகையான பயிற்சிகளை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள். உடலை வலுப்படுத்தும் பயிற்சி, நெகிழ்வுத்தன்மையை உண்டாக்கும் பயிற்சி, உங்கள் இதயம் மற்றும் இணைப்புகளுக்கு ஏற்பட்டுள்ள திரிபுகளை குறைக்கக் கூடிய குறைந்த தாக்கம் கொண்ட உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
  • நீர்ச்சத்தை இழக்காதீர்கள்: நம் இதய அமைப்புகள் நன்றாக செயல்படுவதற்கு நீர்ச்சத்து மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் போதும், அதற்கு முன்பும், பின்பும் போதுமான நீர் அருந்துங்கள்.
  • எச்சரிக்கை அரிகுறிகளுக்கு கவனம் கொடுங்கள்: உடற்பயிற்சி செய்யும் போதோ அல்லது அதன் பிறகோ, மார்பில் வலியோ, மூச்சு விடுவதில் சிரமமோ, படபடப்போ, தலைசுற்றலோ ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறுங்கள்.


  • தீவிர உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறலாம், நம் உடலுக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும் என கூறப்பட்டாலும், இதனால் நம் இதயத்திற்கு ஏற்படக்கூடிய ஆபத்து குறித்து நீங்கள் நிச்சியம் தெரிந்திருக்க வேண்டும். எந்தவித உடற்பயிற்சி செய்யத் தொடங்குவதற்கு முன்னும் அல்லது உடற்பயிற்சி முறையில் ஏதாவது மாறுதல் செய்வதற்கு முன்னும் தகுந்த பயிற்சிபெற்ற மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுவிட்டு பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.48,700/- ஊதியம்!

August 09, 2023 0

 

தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையத்துறையில் வேலைவாய்ப்பு 2023 – மாதம் ரூ.48,700/- ஊதியம்!

தமிழ்நாடு அரசு இந்து சமய அற நிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Priest, Assistant Priest, Nadhaswaram,Thavil & others பணிக்கென 26 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Tamil Nadu Government Hindu Charities Department காலிப்பணியிடங்கள்:

Prasar Bharati ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Priest, Assistant Priest, Nadhaswaram,Thavil & others பணிக்கென 26 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Nadu Government Hindu Charities Department வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 18 முதல் 45 வரை இருக்க வேண்டும். மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu Government Hindu Charities Department கல்வித் தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழில் எழுத படிக்க தெரிந்த நபர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள், மேலும் பணி சார்ந்த துறையில் பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

Tamil Nadu Government Hindu Charities Department ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.11,600/- முதல் ரூ.48,700/- வரை ஊதியம் வழங்கப்படும்

தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Tamil Nadu Government Hindu Charities Department விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு விரைவாக அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || தேர்வு கிடையாது

August 09, 2023 0

 

TNPESU தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.25,000/- || தேர்வு கிடையாது

சென்னையில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள (TNPESU) Guest Lecturer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.08.2023 அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.

TNPESU காலிப்பணியிடங்கள்:
  • Guest Lecturer Tamil – 1 பணியிடம்
  • Guest Lecturer English – 1 பணியிடம்
கல்வி தகுதி:

TNPESU அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் முதுகலை பட்ட படிப்பில் 55% தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் NET/SLET/SET முடித்திருக்க வேண்டும்.

Trainer சம்பள விவரம்:

பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.25,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பக் கட்டணம்:
  • SC/ST விண்ணப்பதாரர்கள்: ரூ. 250/-
  • பிற சமூக விண்ணப்பதாரர்கள்: ரூ. 500/-
  • பணம் செலுத்தும் முறை: Demand Draft
TNPESU பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன், பதிவாளர், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுப் பல்கலைக்கழகம், மேலக்கோட்டையூர், சென்னை – 600127 என்ற முகவரிக்கு 10.08.2023 அல்லது அதற்கு முன் அனுப்ப வேண்டும்.

Download Notification 2023 Pdf

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை பெருநகர போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

August 09, 2023 0

 

சென்னை பெருநகர போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10 கடைசி நாள்!

சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமம்‌ ஆனது Social Expert, Senior Data Integration, Junior Data Scientist பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி என உள்ளது. இந்த அரசு பணிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 10.08.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

போக்குவரத்து குழும வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Social Expert, Senior Data Integration, Junior Data Scientist பதவிக்கு தலா ஒரு பணியிடம் என மொத்தம் 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • இப்பணியிடங்கள் அனைத்தும் இரண்டு வருட ஒப்பந்த கால அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
  • இந்த பணி குறித்த கூடுதல் விவரங்கள் www.cumta.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IBPS ஆணையத்தில் Degree முடித்தவர்களுக்கான வேலை – 4000+ காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்‌ 10-ஆகஸ்ட்‌-2023 அன்று அல்லது அதற்கு முன்‌ cumtaoffice@tn.gov.in என்ற மின்னஞ்சலுக்கு, தற்குறிப்பு போர்ட்‌ஃபோலியோ, கடந்த 3 மாதங்களுக்கான ஊதியச்‌ சீட்டு மற்றும் எதிர்பார்க்கப்படும் சம்பளம் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CUMTA -Tamilnadu நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.80,000/- ஊதியம்! - last date :10.08.2023

August 09, 2023 0

 

CUMTA நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.80,000/- ஊதியம்!

CUMTA ஆனது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், Junior Data Scientist, Communication Expert பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் விரைவாக விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUMTA காலிப்பணியிடங்கள்:

CUMTA ஆனது தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Data Scientist, Communication Expert பணிகளுக்கென 03 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

CUMTA கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Bachelor’s/Master’s degree பெற்றிருக்க வேண்டும்.

CUMTA ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.80,000/- முதல் ரூ.1,50,000/-வரை ஊதியம் வழங்கப்படும்.

CUMTA தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

CUMTA விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட மின்னஞ்சல் மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news