Agri Info

Adding Green to your Life

August 12, 2023

பெரும் தொந்தரவுகளுக்கு இடையே பணியாற்றும் அலுவலகத்தில் உங்கள் மன நலனை காப்பது எப்படி.?

August 12, 2023 0

 நல்லதொரு வாழ்க்கை துணை மற்றும் பிள்ளைகள் அமைவது சிறப்பான வரம் என்றாலும், அலுவலக வாழ்க்கை அதே போல் அமைந்து விடும் என்று உறுதியாக கூறிவிட முடியாது. போட்டியும், பொறாமையும் கொண்ட சக ஊழியர்கள், எப்போதுமே நம் மீது எரிந்து விழும் உயர் அதிகாரிகள் என்று பல இன்னல்களுக்கு இடையே நாம் பணியாற்ற வேண்டி இருக்கும்.

கடும் பணிச்சுமை, இறுதிக்கெடு போன்றவை நமக்கு மன நெருக்கடியை ஏற்படுத்தும். பொருளாதார பாதுகாப்பு வேண்டியும், நமக்கென்று வேலை உத்தரவாதம் வேண்டியும் பல சமரசங்களுக்கு இடையே நாம் பணியாற்றிக் கொண்டிருப்போம். இத்தகைய தருணத்தில் நம் மன நலனை பாதுகாப்பதற்கு கீழ்காணும் டிப்ஸ்களை பின்பற்றலாம்.

எல்லைகளை வரையறுத்துக் கொள்ளுங்கள் : மிகுந்த ஈடுபாட்டுடன், நம் திறமை முழுவதையும் பயன்படுத்தி கடுமையாக உழைக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் நம்முடைய திறன் வரம்பை காட்டிலும் கூடுதலான பணிச்சுமை இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் இயல்புக்கு மாறான பணி சுமையை நம் மீது திணித்தால் அதை ஏற்க முடியாது என்று மறுத்து விடுங்கள்.

சுய அக்கறைக்கு முக்கியத்துவம் : இயந்திரம் போல ஓடிக் கொண்டிருக்கும் நம் வாழ்க்கையில் நம்முடைய சுய ஆரோக்கியம் மற்றும் நலனுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அலுவலகத்தில் பணிகளுக்கு இடையே அவ்வபோது 10, 15 நிமிடம் ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்வதுடன், இரவில் நிம்மதியான உறக்கம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். பிடித்தமான விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு அம்சங்களில் கவனம் செலுத்தி மனநலனை மேம்படுத்த வேண்டும்.

ஆதரவு கோருதல் : என்னதான் முயற்சி செய்தாலும் பணி ரீதியான ஸ்ட்ரெஸ் மற்றும் கவலை உங்கள் மனதை ஆட்கொண்டு விட்டது என்றால், உங்கள் மீது நல்லெண்ணம் கொண்ட சக ஊழியர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் இது குறித்து பகிர்ந்து கொள்ள வேண்டும். தேவைப்படும் பட்சத்தில் மனநல ஆலோசகரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

பாசிட்டிவ் பணிச்சூழல் : அலுவலகத்தில் பலதரப்பட்ட தொந்தரவுகள் மற்றும் இன்னல்கள் இருந்தாலும் கூட, முடிந்தவரை அந்த சூழலை நமக்கு சாதகமானதாக நாம் மாற்றிக்கொள்ள வேண்டும். நியாயமான அளவில் நமக்கு ஒப்படைக்கப்படும் பொறுப்புகள் மற்றும் இலக்குகளை பூர்த்தி செய்தால் யாரிடத்திலும் பகைமை காட்ட வேண்டிய தேவை இருக்காது.

வேலையை ராஜினாமா செய்தல் : நம் உடல் நலம் மற்றும் மன நலனை காட்டிலும் மதிப்பு மிக்கது வேறு எதுவும் இல்லை. எல்லாவற்றையும் பொறுத்துக் கொண்டு கஷ்டப்பட்டு சம்பாதித்து, உடல் நலன் மற்றும் மன நலனை மேம்படுத்துவதற்காக மருத்துவத்தில் பணத்தை கொண்டு சென்று கொட்டுவதில் எந்தவித அர்த்தமும் இல்லை. ஓரளவுக்கு பொருளாதார பாதுகாப்பு உறுதி செய்து கொண்டால், உங்களுக்கு இன்னல் தருகின்ற வேலையை விட்டுவிட்டு வேறொரு நல்ல வேலையை தேடிக் கொள்ளலாம்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

August 11, 2023

நீங்க தனிமையாக இருக்கும் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத 6 விஷயங்கள்..!

August 11, 2023 0

 தனிமையில் இருக்கும் நேரத்தை வரப்பிரசாதமாக நாம் கருத வேண்டும். ஆனால் நாம் இப்படி தனிமையில் இருக்கும் போது அதை பயனுள்ள வகையில் கழிக்க வேண்டும். தனியாக இருக்கும் நேரத்தில் இதெல்லாம் செய்யக்கூடாது, இதெல்லாம் செய்ய வேண்டும் என சில விஷயங்கள் உள்ளன. அதை நீங்கள் கண்டிப்பாக கடைபிடித்தாக வேண்டும். அப்படியான 6 விஷயங்களை இந்தக் கட்டுரையில் கூறியுள்ளோம்.

இதை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள் : தனிமையில் இருக்கும் நேரத்தை நாம் எப்படி, எந்த வகையில் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதை பொறுத்துதான், நமது தனிப்பட்ட வளர்ச்சியும் ஆரோக்கியமும் இருக்கும். சில சமயங்களில் வாழ்க்கையில் அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு முன்பு நமக்கொரு ஓய்வு தேவைப்படும். வேலையிலிருந்து சிறுது காலத்திற்கு ஓய்வெடுப்பதோ அல்லது சமூகத்திலிருந்து சில காலம் ஒதுங்கியிருப்பதும் கூட ஒரு வகையில் நமக்கு நல்லதே.

சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள் :நீங்கள் தனியாக இருக்கும் சமயத்தில், உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள். உங்கள் எண்ணங்கள், உணர்வுகள், அனுபவங்கள் குறித்து ஆழமாக யோசியுங்கள். உங்கள் இலக்கு என்ன, குறிக்கோள் என்ன போன்ற அர்த்தமுள்ள கேள்விகளை உங்களிடமே கேட்டுக் கொள்ளுங்கள். இதை செயல்படுத்த சிறந்த வழி, இவை எல்லாவற்றையும் எதிலாவது எழுதி வையுங்கள். அப்போதுதான் உங்கள் ஆழ் மனசு குறித்து உங்களுக்கு ஒரு புரிதல் ஏற்படும். உங்களை நன்கு புரிந்து கொள்வீர்கள்.

முழுதும் உங்களை தனிமைப்படுத்தி கொள்ளாதீர்கள் : நீங்கள் தனிமையில் நேரத்தை செலவிடும் போது உங்கள் மனநிலை நன்றாக இருக்கும் என்பது உண்மைதான் என்றாலும், மற்றவர்களோடு பழகுவதை முற்றிலும் நிறுத்திவிடாதீர்கள். முக்கியமாக உங்களை நீங்களே தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். நம் மனநிலை நன்றாக இருக்க வேண்டுமென்றால் மனிதர்களோடு அவசியம் உரையாட வேண்டும். உங்கள் நண்பர்கள், உறவினர்களை அடிக்கடி சந்தித்து பேசுங்கள். உங்களுக்கு விருப்பமான சமூக நடவடிக்கைகளில் கலந்து கொள்ளுங்கள்.

உங்கள் பொழுதுபோக்கு மற்றும் ஆர்வத்தை பின் தொடருங்கள் : நாம் தனிமையில் இருக்கும் சமயத்தில் தான் நமக்கு விருப்பமுள்ள, ஆர்வமுள்ள விஷயங்களை பின் தொடர முடியும். அது ஓவியம், எழுத்து, கவிதை, இசை என எதுவாகவும் இருக்கலாம். நீங்கள் சுதந்திரமாக இருக்கும் இந்த சமயத்தில் தான் உங்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடிய விஷயங்களை செய்ய முடியும். இது உங்களின் படைப்புத் திறனை மட்டும் வளர்ப்பதில்லை; உங்களுக்கு ஒரு நிறைவையும் எடுத்துக்கொண்ட செயலை முடித்துவிட்டோம் என்ற சாதித்த உணர்வையும் கொடுக்கும்.

தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதிலிருந்து விலகியிருங்கள் : தனிமையில் இருக்கும் அந்த சமயத்திலும் ஸ்மார்ட்போனையும் சமூக ஊடகங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்காதீர்கள். தொடர்ந்து நீங்கள் இதை பயன்படுத்தி வந்தால், அதிகப்படியான தகவல்கள் உங்கள் மூளைக்குள் செல்லும். இதிலிருந்து கொஞ்சம் விலகி இருந்து பாருங்கள். உங்கள் சிந்தனைகளுக்கும் உணர்ச்சிகளுக்கும் நீங்கள் மதிப்பு கொடுக்க ஆரம்பிப்பீர்கள்.

எதிர்மறை சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளாதீர்கள் : நாம் தனிமையில் இருக்கும் போது பழைய நினைவுகளும் எதிர்மறை எண்ணங்களும் தோன்றும். இது இயல்பானதுதான். ஆனால் எப்போதும் அதிலியே மூழ்கி இருந்தால், உங்களின் எதிர்கால வளர்ச்சி தடைபடும். நேர்மறை எண்னங்களை வளர்த்துக் கொண்டு, அடுத்து என்ன செய்யலாம் என்பதில் கவனம் செலுத்துங்கள்.

தனிமையில் இருக்கும் போதும் வேலைப்பளுவில் மூழ்காதீர்கள் : குறிப்பிட்ட நேரம் தனிமையில் இருப்பது நல்லதுதான். ஆனால் அதன்மீது பெரிய எதிர்பார்ப்பு வைக்காதீர்கள். தனிமையில் இருந்தால் மட்டுமே ஒரு வேலையை முடிக்க முடியும் என்ற நிலைக்குச் செல்லாதீர்கள். தனிமையில் இருக்கும் போது நன்றாக ஓய்வெடுங்கள். உங்களை புதுப்பித்துக் கொள்ள இந்த தனிமையை பயன்படுத்திக் கொள்ளுங்கள். சில சமயங்களில் தனிமையில் இருக்கும் போது எதுவும் செய்யாமல் “சும்மா” இருப்பதும் அவசியமாகும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

இரவு நல்லா தூங்கிய பிறகும் காலையில் சோர்வாக உணர்கிறீர்களா..? இந்த பிரச்சனை இருக்கலாம்..!

August 11, 2023 0

 நமது ஆரோக்கியத்தை நல்ல முறையில் பராமரிக்க இரவு தூக்கம் மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது. மொபைல் போனை சார்ஜ் செய்வது போல நாம் தூங்கும் சமயத்தில் நமது உடலானது தன்னை மீட்டமைத்து கொள்ளும் வேலையை பார்க்கிறது. எனினும், நல்ல இரவு தூக்கத்தை நம் உடலுக்கு நாம் அளிக்கவில்லை என்றால் நோய்கள் மூலமாக நமக்கு பதிலடி கொடுக்கிறது. இன்னும் சிலர் இரவு நன்றாக தூங்கிய பிறகும் காலை எழும்பொழுதே சோர்வுடன் காணப்படுவார்கள். இது ஸ்லீப் ஆப்னியா என்ற தூக்க கோளாறு இருப்பதைக் குறிக்கிறது.

தூங்கும் பொழுது மூச்சு விடுவதில் ஏற்படும் சிரமங்கள் அல்லது சிக்கல்கள் ஸ்லீப் ஆப்னியா என வரையறுக்கப்படுகிறது. இதன்போது காற்றுப்பாதையானது பாதியளவு அல்லது முழுவதுமாக மூடி மூச்சு விடுவதில் சிரமத்தை உண்டாக்குகிறது. இது ஒரு சில வினாடிகள் முதல் ஒரு சில நிமிடங்கள் வரை இரவு முழுவதும் பலமுறை ஏற்படலாம். இதன் விளைவாக தூக்கத்தில் தடை ஏற்பட்டு அடுத்த நாள் பகல் பொழுது முழுவதும் தூக்க கலக்கத்தோடு உணர வைக்கும். ஏற்கனவே இதய நோய்களால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பிரச்சனை ஏற்படுமாயின் குறைந்த இரத்த ஆக்சிஜன் காரணமாக இது சீரற்ற இதயத்துடிப்பை உண்டாக்கும்.

​​ஸ்லீப் ஆப்னியா மற்றும் இதய நோய்களுக்கு இடையே உள்ள தொடர்பு : 

இங்கு நாம் புரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், ஸ்லீப் ஆப்னியா காரணமாக இதய நோய்கள் ஏற்படலாம். மேலும் இதய நோய் காரணமாகவும் ஸ்லீப் ஆப்னியா உண்டாகலாம் என்பதுதான்.

ஸ்லீப் ஆப்னியா காரணமாக இரத்த அழுத்தம் அதிகரித்து, ரத்தத்தில் இருக்கக்கூடிய ஆக்சிஜன் அளவு குறைகிறது. இது இதயத்திற்கு அதிக அழுத்தத்தை அளித்து இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது. மேலும் ஸ்லீப் ஆப்னியா வழக்கமான தூக்க சுழற்சியை சீர்குலைப்பதன் மூலமாக அட்ரினலின் மற்றும் கார்டிசோல் போன்ற மன அழுத்த ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது. இந்த ஹார்மோன்கள் நமது இதயத்தை மோசமாக பாதித்து அதனால் வீக்கம், இன்சுலின் எதிர்ப்பு மற்றும் பிற வளர்சிதை மாற்ற கோளாறுகளை உண்டாக்குகிறது. இது தொடர்ச்சியாக நடைபெறும் பொழுது ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

​​ஸ்லீப் ஆப்னியா இருப்பதை தெரிந்து கொள்ள உதவும் அறிகுறிகள்

போதுமான நேரம் தூங்கிய பிறகும் தூங்கி எழும்பொழுதே சோர்வாகவும், சோம்பேறித்தனமான உணர்வோடு இருப்பது ஸ்லீப் ஆப்னியாக்கான முக்கியமான அறிகுறியாக கருதப்படுகிறது. மூச்சு விடுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக தூக்க சுழற்சி பாதிக்கப்பட்டு அதனால் ஆழ்ந்த தூக்கம் கிடைக்காமல் போனதன் விளைவு தான் இது.

பகல் நேர தூக்க கலக்கம் தவிர சத்தமாக குறட்டை விடுவது, அடிக்கடி இரவில் காரணமின்றி விழித்துக் கொள்வது, காலை நேர தலைவலி, தூங்கி எழும் பொழுது வறண்ட வாய் மற்றும் தொண்டை வலியை அனுபவிப்பது, கவனம் செலுத்துவதில் சிக்கல், எரிச்சல் மற்றும் உணர்வு மாற்றங்கள் ஸ்லீப் ஆப்னியாவிற்கான பிற அறிகுறிகளாக உள்ளன.

ஸ்லீப் ஆப்னியாவிற்கு தகுந்த சிகிச்சை அளிக்காவிடில் இது உயர் ரத்த அழுத்தம், இதய நோய், பக்கவாதம், வகை 2 நீரிழிவு நோய் மற்றும் பிற நாள்பட்ட நோய்கள் உண்டாவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். கூடுதலாக இது ஞாபக சக்தி குறைபாடு, கவனம் செலுத்துவதில் பிரச்சனை போன்ற மனநிலை சார்ந்த பிரச்சினைகளையும் உண்டாக்கலாம். அது மட்டுமல்லாமல் இதன் விளைவாக விபத்துகள் ஏற்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளது.

​​ஸ்லீப் ஆப்னியாவிற்கான சிகிச்சை

மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இதற்கு ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. ஸ்லீப் ஆப்னியாவை குணப்படுத்த பயன்படுத்தப்படும் கன்டினுவஸ் பாசிடிவ் ஏர்வே பிரஷர் தெரப்பியில் (continuous positive airway pressure - CPAP) தூங்கும் பொழுது மூக்கு அல்லது வாயில் மாஸ்க் அணிந்து கொள்வது தடை இல்லாத காற்றோட்டத்தை பெற்று தர உதவுகிறது. இது தவிர ஓரல் அப்ளையன்ஸ், வாழ்க்கை முறை மாற்றங்கள் (உடல் எடை குறைப்பது மற்றும் உடற்பயிற்சி), பொசிஷனல் தெரபி மற்றும் சில சமயங்களில் அறுவை சிகிச்சை கூட செய்யப்படுகிறது.

உங்களுக்கு ஸ்லீப் ஆப்னியா இருப்பதற்கான அறிகுறிகள் இருப்பதாக நீங்கள் உணர்ந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி அதற்கான சிகிச்சையை பெற்றுக் கொள்வது அவசியம். உங்கள் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் நல்ல இரவு தூக்கம் மிகவும் அவசியம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு செயல்படுங்கள்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்:ரூ.55,000/-

August 11, 2023 0

 BEL நிறுவனத்தில் Project Engineer வேலைவாய்ப்பு – 50+ காலிப்பணியிடங்கள் || மாத ஊதியம்:ரூ.55,000/-

BEL நிறுவனம் ஆனது Trainee Engineer– I, Project Engineer-I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

BEL காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer– I, Project Engineer-I பணிக்கென மொத்தம் 57 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Project Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் BE / B.Tech / MBA / MSW / PGHRM தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Engineer ஊதிய விவரம்:

Trainee Engineer-I

1st Year – ரூ.30,000/-

2nd Year – ரூ.35,000/-

3rd Year – ரூ.40,000/-

Project Engineer-I

1st Year – Rs. 40,000/-

2nd Year – Rs. 45,000/-

3rd Year – Rs. 50,000/-

4th Year – Rs. 55,000/-

BEL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 26.08.2023 தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Job vacancy at IIT Madras -Patent Agent- Graduates can apply

August 11, 2023 0

 IIT Madras- ல் ரூ.25,000/- ஊதியத்தில் – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை அவ்வப்போது நிரப்பி வருகிறது. தற்போது Patent Agent பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

University of Madras காலிப்பணியிடங்கள்:

Patent Agent பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Patent Agent கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் சம்பந்தப்பட்ட துறையில் Graduate from Physics / Chemistry / Chemical Engineering / Metallurgy Engineering / Electrical Engineering தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

University of Madras வயது வரம்பு:

இப்படிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Patent Agent ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- முதல் ரூ.25,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

University of Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 13.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IIT Madras வேலைவாய்ப்பு 2023 - HR Executive-Graduates can apply | No Exam

August 11, 2023 0

 

IIT Madras வேலைவாய்ப்பு 2023 – ரூ.35,000/- வரை ஊதியம் || தேர்வு கிடையாது!

சென்னை ஐஐடியில் உள்ள சாலைப் பாதுகாப்புக்கான சிறப்பு மையத்தில் (CoERS) HR Executive தற்காலிக பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20.08.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IIT Madras காலிப்பணியிடங்கள்:

HR Executive பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Executive கல்வி தகுதி:

ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் Any Graduation or Post Graduation பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2-4 ஆண்டுகள் பணிக்கு தொடர்புடைய துறையில் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

IIT Madras தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Document Verification/ Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

HR Executive பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.20,000/- முதல் ரூ.35,000/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 20.08.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஆசிரியர், காவலர் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்

August 11, 2023 0

 ஆசிரியர் தேர்வு மற்றும் இரண்டாம் நிலை காவலர் தேர்வு ஆகிய இரு தேர்வுகளுக்கும், வேலைவாய்ப்பு அலுவலகத்தில், இலவச பயிற்சி வகுப்புகள் நடக்க உள்ளதாக, கலெக்டர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தால், இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பயிற்சி முடித்தவர்களுக்கு, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம், காலிப் பணியிடங்கள் அறிவிக்க உள்ளன.

இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு, 6,556 காலிப் பணியிடங்களுக்கும், பட்டதாரி ஆசிரியர் பணியிடத்துக்கு, 3,587 பணியிடங்களுக்கும் தேர்வு நடத்தப்பட உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு முடித்தவர்கள், இத்தேர்வை எழுத இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


இப்பயிற்சி வகுப்பில் பங்கேற்க விரும்புவோர், தங்களது புகைப்படம், ஆதார் அட்டை விபரங்களுடன் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இப்பயிற்சி வகுப்புகள், வரும் 21ல் துவக்க உள்ளது. 

இதேபோல், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால், இரண்டாம் நிலை காவலர் பணிக்கு, 3,559 பணியிடங்களுக்கு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு, வரும் 18 முதல், செப்., 17 வரை விண்ணப்பிக்கலாம்.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள், காஞ்சிபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், வரும் 31ம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்பில் சேர விரும்புவோர், வேலைவாய்ப்பு அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

ஆசிரியா் தேர்வுக்கு ஆக. 18 முதல் இலவச பயிற்சி

August 11, 2023 0

 தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் ஆசிரியா் தேர்வு வாரிய தேர்வுக்கு ஆகஸ்ட் 18 ஆம் தேதி முதல் இலவச பயிற்சி அளிக்கப்படவுள்ளது என ஆட்சியா் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளாா்.


இதுகுறித்து அவா் மேலும் தெரிவித்திருப்பது: நிகழாண்டு இடைநிலை ஆசிரியா் பணிக்கும், பட்டதாரி ஆசிரியா் பணிக்கும் போட்டித் தேர்வுகளை தமிழ்நாடு ஆசிரியா் தேர்வு வாரியம் நடத்தவுள்ளது. 

இதையொட்டி, தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் மூலம் இப்போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்பு ஆகஸ்ட் 18 ஆம் தேதி காலை 10 மணிக்கு தொடங்கப்படவுள்ளது. தொடா்ந்து இப்பயிற்சி வகுப்பு திங்கள் முதல் வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடைபெறவுள்ளது. 

இத்தேர்வுக்கு தயாராகும் இளைஞா்கள் தேர்வின் பெயா், தங்களது பெயா், கல்வித் தகுதியைக் குறிப்பிட்டு 8110919990 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் அனுப்பி பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும், விவரங்களுக்கு 04362 - 237037, 9499055905 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

BECIL நிறுவனத்தில் Associate, Assistant வேலைவாய்ப்பு - சம்பளம்: ரூ.60,000/-

August 11, 2023 0

 

BECIL நிறுவனத்தில் Associate Manager, Assistant வேலைவாய்ப்பு 2023

BECIL நிறுவனத்தில் Associate Manager, Assistant பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 15-08-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:

BECIL

பணியின் பெயர்:

Associate Manager, Assistant

மொத்த பணியிடங்கள்:

03

தகுதி:

BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் Graduate degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

BECIL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.30,000/- முதல் ரூ.60,000/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

BECIL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 40 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

BECIL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் via email / telephone for their Skill Tests / Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

BECIL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (15.08.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

15.08.2023

Notification for BECIL 2023: Download Here

Official Site: https://www.becil.com/

தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

August 11, 2023 0

 தனியார் வங்கியில் வேலை வேண்டுமா? CSB வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

CSB வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Corporate Salary Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CSB Bank காலிப்பணியிடங்கள்:

Corporate Salary Officer பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடம் நிரப்ப உள்ளதாக CSB Bank தெரிவித்துள்ளது.

Corporate Salary Officer கல்வி தகுதி:

அரசு அலல்து அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

CSB Bank வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Corporate Salary Officer முன் அனுபவம்:

1 முதல் 10 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

CSB Bank ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு CSB வங்கியின் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Corporate Salary Officer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 30.03.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

August 11, 2023 0

 

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

தனியார் நிறுவனமான TCS ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அதன் அதிகாரபூர்வ தளத்தில் தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Floor planner பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

Floor planner பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Floor planner கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor of Commerce தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Floor planner முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

TCS ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Floor planner தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Written Test / Online Test (CBT) / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HDB Financial Service Area Credit Manager வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

August 11, 2023 0


HDB Financial Service Area Credit Manager வேலைவாய்ப்பு 2023 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

Area Credit Manager – Auto Loan காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை HDB Financial Service நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. தனியார் துறையில் பணிபுரிய விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HDB காலிப்பணியிடங்கள்:

Area Credit Manager – Auto Loanபதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Any Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 8 முதல் 10 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

HDBF ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு HDB Financial Service- நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 10, 2023

ரூ.25,000 உதவித்தொகை.. யு.பி.எஸ்.சி. தேர்வில் வெற்றி பெற்றவர்களா நீங்கள்? உடனே விண்ணப்பியுங்கள்

August 10, 2023 0

 தமிழ்நாடு அரசின் 2023-2024 ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரியுடன் இணைந்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குடிமைப்பணிகள் தேர்வுகளுக்காக பயின்று வரும் ஆர்வமுள்ள மாணவர்களுக்கு சிறந்த பயிற்சி மற்றும் இதர தேவையான வசதிகளை செய்து உதவும் வகையில் ஒரு திட்டத்தை செயல்படுத்தும் என்று  அறிவிக்கப்பட்டிருந்தது.

அறிவிக்கப்பட்ட இந்த திட்டத்தின்படி, யு.பி.எஸ்.சி. குடிமைப்பணிகள் முதல்நிலை தேர்வில் தேர்ச்சி  பெற்றவர்களுக்கு, ரூ.25 ஆயிரம் ஊக்கத்தொகையாக வழங்கப்படும். இத்திட்டத்தின் தொடக்கமாக, கடந்த 7-ந் தேதி நடைபெற்ற நான் முதல்வன் திட்டத்தின் ஓராண்டு வெற்றி விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 மாணவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகள் வழங்கி யு.பி.எஸ்.சி. முதன்மைத் தேர்வுக்கான ஊக்கத்தொகை  திட்டத்தை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகத்தின் கீழ் இயங்கிவரும் நான் முதல்வன் போட்டி தேர்வுகள் பிரிவின் வாயிலாக 2023-ம் ஆண்டுக்கான யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் முதன்மைத் தேர்வுக்கு பயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ரூ.25,000 ஊக்கத்தொகை நேரடியாக மாணவர்களின் வங்கி கணக்கில் செலுத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

அதன் படி, இந்த ஊக்கத்தொகையை பெறுவதற்கு யு.பி.எஸ்.சி. முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் https://www.naanmudhalvan.tn.gov.in என்ற இணையதளத்தில் ஆகஸ்ட் 11 முதல் 22 ஆம் தேதி வரை விண்ணப்பித்துக் கொள்ளலாம்  என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news