உலகிலேயே அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழங்களில் ஒன்று உலர் திராட்சை. இதனை கிஸ்மிஸ் பழம், முந்திரிப் பழம் என பல பெயர்களிலும் அழைப்பார்கள். நாம் வழக்கமாக சக்கரைப் பொங்கலுக்கு பயன்படுத்துவோமே, அதே பழம்தான். இந்தப் பழத்தை சாப்பிடுவதால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கிறது. அதனால்தன் பலரும் இதை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுகிறார்கள்.
ஊற வைத்த உலர் திராட்சையில் விட்டமின், மினரல், நார்ச்சத்து என நம் உடலை பல வழிகளிலும் மேம்படுத்தக் கூடிய பல வகையான ஊட்டச்சத்துகள் உள்ளது. இதற்கு முன் இதை சாப்பிடாமல் இருந்தீர்கள் என்றால், இனி உங்கள் டயட்டில் உலர் திராட்சை சேர்த்துக் கொண்டு, அதை தண்ணீரில் ஊற வைத்து, அந்த நீரை தினசரி குடியுங்கள். உலர் திராட்சை ஊறை வைத்த நீரை குடிப்பதால் நம் உடலுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் இதோ...
புளித்த ஏப்பங்களையும் பிற வயிற்று பிரச்சனைகளையும் தடுக்கிறது : உலர் திராட்சை நீரை குடிப்பதால் பல வயிற்று பிரச்சனைகளை சரி செய்யலாம். இதில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள், நமது குடலின் செயல்பாட்டை மேம்படுத்துவதோடு குடலில் உள்ள பாக்டீரியாக்களையும் கட்டுப்படுத்துகிறது. ஆகவே தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பது உங்கள் செரிமான அமைப்பிற்கு மிகவும் நல்லது.
உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றுகிறது : உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிப்பதால், நம் உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேற்றி ரத்தத்தை தூய்மைபடுத்துகிறது. குறைந்தது ஒரு வாரம் இந்த நீரை குடித்தால், இதய நோய் வரும் ஆபத்து குறையும். அதோடு உங்கள் கல்லீரலையும் சுத்தபடுத்தி அதன் செயல்பாட்டை அதிகரிக்கும்
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் : உலர் திராட்சை ஊற வைத்த நீரில் அதிகளவு அண்டி ஆக்ஸிடெண்ட் இருப்பதால், உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தி, பல நோய்களிலிருந்து உங்களை காக்கிறது. அதோடு உங்களின் செரிமான ஆரோக்கியத்தையும் பலப்படுத்துகிறது.
முடி உதிர்வை தடுக்கிறது : முடி உதிர்வை எப்படி தடுப்பது என பலரும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். உலர் திராட்சை இருக்கும்போது ஏன் கவலைப்படுகிறீர்கள். உலர் திரட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, நம் உடலில் ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி உதிர்வு தடுக்கப்படுகிறது.
தூக்கமின்மை பிரச்சனையை போக்குகிறது : இன்றைய காலத்தில் பலரும் தூக்கமின்மையால் பெரிதும் அவதிப்படுகிறார்கள். தினமும் உலர் திராட்சை ஊற வைத்த நீரை குடிக்கும் போது, இதிலிருக்கும் தூக்கத்தை தூண்டும் ஹார்மோனான மெலடோனின் காரணமாக தூக்கமின்மை பிரச்சனையை தடுத்து உங்களுக்கு நல்ல தூகத்தை வரவழைக்கிறது.