Agri Info

Adding Green to your Life

August 20, 2023

போஸ்ட் ஆபீஸில் 30,000 வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்.. முழுவிவரம்

August 20, 2023 0

 அஞ்சல்துறையில் காலியாக உள்ள 30,041 கிராம அஞ்சல் பணியாளர்களுக்கான (GRAMIN DAK SEVAKS -GDS) ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில், தமிழ்நாட்டில் மட்டும் 2,994 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில், பொதுப் பிரிவினருக்கு 1406 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 689 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 280 இடங்களும் , 492 இடங்கள் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவருக்கும், 20 இடங்கள் பட்டியல் பழங்குடியியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த பதவிக்கு விண்ணப்பிக்க,https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதள முகவரிக்கு செல்லவும்..

Step : 1  - Registration என்ற விருப்பத்தை கிளிக் செய்யவும்

Step : 2 - அதன் தொடர்ச்சியாக விவரங்களை சேகரிக்கும் பக்கம் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய கட்டாய விவரங்கள் உள்ளிட வேண்டும். முதலில் உங்களுக்கு என்று தனித்துவமான போன் நம்பர் வேண்டும். அதனைத் தொடர்ந்து, ஒரு தனித்துவ இமெயில் வேண்டும். பின்னர் விண்ணப்பதாரின் பெயர் 10 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழில் இருப்பது போலவே இருக்க வேண்டும். அதனைத்தொடர்ந்து, அப்பா பெயர், பிறந்த நாள், பாலினம், சாதி, 10 ஆம் வகுப்பு எந்த வட்டாரத்தில் தேர்ச்சி பெற்றீர்கள், தேர்ச்சி பெற்ற வருடம் போன்றவை இடம்பெற வேண்டும். போன் நம்பர் மற்றும் இமெயிலை சரிபார்க்க validate என்ற ஆப்சன் இருக்கும் அதனை கிளிக் செய்து தரவுகளை உறுதி செய்ய வேண்டும். கடைசியாகக் கீழே கொடுக்கப்பட்டுள்ள எழுத்துகளை அதில் உள்ளது போலவே உள்ளிட்டு Submit செய்யவும்.

Step : 3 - அடுத்த கட்டமாக, ஆதார் எண் மற்றும் இதர விவரங்களை உள்ளிடுவதற்கான பக்கம் தரையில் தோன்றும். அதில் ஆதார் எண், மாற்றி திறனாளியாக இருந்தால் அதற்கான குறிப்பு, 10 ஆம் வகுப்பில் படித்த மொழி, ஏற்கனவே வேலையில் உள்ளவரா? அப்படி என்றால், தடையின்மை சான்றிதழ் (NOC) உள்ளதா போன்ற கேள்விகள் இடம்பெறும். அதற்குத் தகுந்த பதில்கள் அளித்து, புகைப்படம் மற்றும் கையொப்பம் பதிவேற்ற வேண்டும். புகைப்படத்தில் அளவு 50 KB கீழ் இருக்க வேண்டும், கையொப்பத்தின் அளவு 20 KB கீழ் இருக்க வேண்டும்.

Step : 4 - அதன் பின்னர் நீங்கள் உள்ளீடு செய்த விவரங்கள் திரையில் தோற்றும். உங்களின் விவரங்களைச் சரிபார்த்துக் கொண்டு கீழ் உள்ள Box யை கிளிக் செய்து Submit கொடுக்கவும்.

Step : 5 - ஆன்லைன் விண்ணப்படிவம் திரையில் தோன்றும். அதில் உங்களின் பெயர், அப்பா பெயர், பாலினம், பதிவு எண், பிறந்த நாள் மற்றும் சாதி ஏற்கனவே இடம்பெற்று இருக்கும். அதன் கீழ் உங்களில் வீட்டு முகவரி தகவல்களை உள்ளீடு செய்ய வேண்டும். வீட்டு முகவரியைப் பொறுத்தவரைக் கதவு எண், தெரு பெயர், பகுதி, மாவட்டம் மற்றும் அஞ்சல் குறியீடு போன்றவற்றை உள்ளிட வேண்டும். நிரந்தர முகவரிக்கும் அதையே கொண்டு பூர்த்தி செய்யலாம். தொடர்ந்து, அதன் கீழ் கல்வித்தகுதி பற்றிய விவரங்களை உள்ளீடு செய்ய வேண்டும். எந்த போர்டில் படித்தீர்கள் என்ற இடத்தில் தமிழ்நாடு State Board of School Examination என்ற option தேர்வு செய்யவும். Result type இல் Marks என்று பதிவிடவும். அதனைத் தொடர்ந்து, 10 ஆம் வகுப்பு மதிப்பெண்களைப் பதிவிடுவதற்கான கட்டங்கள் திறக்கும். அதில் நீங்கள் எடுத்த மதிப்பெண்களைச் சரியாகப் பதிவிடவும். மொழி தேர்வில் தமிழ் மொழியைத் தேர்வு செய்ய வேண்டும். அதன் பின்னர் save and continue என்ற இடத்தை கிளிக் செய்யவும்.

Step : 6 - எந்த பகுதியில் உங்களுக்கு வேலை வேண்டும் என்று தேர்வு செய்வதற்கான பக்கம் திரையில் தோன்றும் . அதில் Circle தமிழ்நாடு என்றும் Division applying for என்ற இடத்தில் உங்களுக்கு ஏற்ற பகுதியை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் உள்ளீடு செய்த முகவரியில் அடிப்படையில் Divisions உங்களுக்கு காண்பிக்கப்படும்.

Step : 7 - நீங்கள் தேர்வு செய்யும் பகுதியை பொருத்து பணியிடம் காலியாக உள்ள தபால் நிலையங்களின் பட்டியல் காட்டும். அதில் நீங்கள் விருப்பப்படும் இடத்தை தேர்வு செய்துகொள்ளலாம். குறைந்தது 5 இடங்கள் தேர்வு செய்யலாம். அதனைத்தொடர்ந்து, கீழே உள்ள Box யை கிளிக் செய்து save and Proceed கொடுக்க வேண்டும்.ஸ்டெப் தற்போது முழுமையாக நிரப்பப்பட்ட விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அதனை Print கொடுத்து எடுத்து வைத்துகொள்வது நல்லது. பெண்கள், திருநங்கைகள், SC/ST/PwD பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் கிடையாது. இதர பிரிவினர் ரூ.100 விண்ணப்பக்கட்டணமாக ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

Step : 8 இந்த பதவிக்கான விண்ணப்ப செயல்முறை ஆன்லைன் மூலமாக மட்டுமே நடைபெறும். indiapostgdsonline.cept.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கடைசி தேதி 23.08.2023 ஆகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 18, 2023

அரசுப் பள்ளியில் 6,329 காலியிடங்கள்: விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

August 18, 2023 0

 ஏகலைவா மாதிரி குடியிருப்புப் பள்ளிகளில் காலியாக உள்ள  ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பதவிகளுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும். இந்த ஆட்சேர்ப்பு மூலம் 6329 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. பழங்குடியினர் நல அமைச்சகத்தின் கீழ் உள்ள தன்னாட்சி அமைப்பான பழங்குடி மாணவர்களுக்கான தேசியக் கல்வி சங்கம் (National Education Society for Tribal Students) இந்த ஆள்சேர்க்கையை நடத்துகிறது. 

எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பித்தார்கள் கடைசி நிமிடம் வரை காலம் தாழ்த்தாமல் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்..எம்.ஆர்.எஸ் பணியாளர் தெரிவுத் தேர்வு (ஈ.எஸ்.எஸ்.இ) -2023 க்கான அறிவிப்பை நெஸ்ட்ஸ் வெளியிட்டுள்ளது. 

காலியிடங்கள்:

டி.ஜி.டி (பட்டதாரி ஆசிரியர்) மற்றும் விடுதி காப்பாளர் (Hostel Warden) பதவிக்கான 6329 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

பதவி காலியிடங்கள்
பட்டதாரி ஆசிரியர் (Trained Graduate Teachers)5660
விடுதி காப்பாளர் (Hostel Warden)669
Total6329

இதற்கான விண்ணப்ப நடைமுறை 19.07.2023-ல் தொடங்கியது. விண்ணப்பங்கள் சமர்பிப்பதற்குரிய கடைசி நாள் 18.08.2023 ஆகும்.

கல்வித் தகுதி :

பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு, தொடர்புடைய துறைகளில் இளம்நிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இளங்கலை கல்வியியல் (Bachelor of Education)  படிப்பு முடித்திருக்க வேண்டும். விடுதி காப்பாளர் பதவிக்கு கட்டாயம் இளங்கலை கல்வியியல் (Bachelor of Education)  படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ.யுடன் இணைந்து நெஸ்ட்ஸ் இ.எஸ்.இ -2023-ஐ "ஓ.எம்.ஆர் அடிப்படையிலான (பேனா காகிதம்)" முறையில் நடத்தப்படும்.

இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் ஒவ்வொரு பதவிக்கும் பாடத்திட்டத்துடன் பிற விவரங்கள் emrs.tribal.gov.in. என்ற வலைதளத்தில் கிடைக்கின்றன. அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.

மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள ஈ.எம்.ஆர்.எஸ்.களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு நடைமுறை தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 19.07.2023 முதல் 18.08.2023 வரை செயல்பாட்டில் இருக்கும்.

ஈ.எம்.ஆர்.எஸ் என்பது பழங்குடியின மாணவர்களுக்குக் குடியிருப்பு அமைப்பில் தரமான கல்வியை வழங்குவதற்கான பழங்குடியினர் விவகார அமைச்சகத்தின் முக்கியத் தலையீடாகும்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில் 685 பேருக்கு வேலை.. உடனே விண்ணப்பியுங்கள்

August 18, 2023 0

 மாநில அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தில்  (State Express Transport Corporation)  காலியாக உள்ள 685 ஓட்டுநர் உடன் நடத்துனர் (Driver Cum Conductor) பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப செயல்முறை இன்று முதல் துவங்குகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 685

வயது வரம்பு: 01.01.2023 அன்று 24 வயது பூர்த்தியாக இருக்க வேண்டும். பிசி/ எம்பிசி/எஸ்சி/எஸ்டி பிரிவினர் 45 வயது வரை விண்ணப்பிக்கலாம்.

கல்வித் தகுதி: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஊட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் (18 மாதங்கள் பூர்த்தியாகிருத்தல் வேண்டும்)  இருக்க வேண்டும். முதலுதவி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். செல்லத்தக்க நடத்துனர் உரிமம் 01.01.2023க்கு முன்னர் பெற்றதாக இருக்க வேண்டும்.

இதர தகுதிகள்:  உயரம் குறைந்த பட்சம் 160 செ.மீ, எடை குறைந்தபட்சம் 48 கிலோ இருத்தல் வேண்டும். கண் திறன் குறைபாடு இருக்கக் கூடாது. காது கேட்கும் திறன் குறைபாடு இருக்கக் கூடாது. வளைந்த கால்கள், முழங்கால்கள் ஓட்டுதல் மற்றும் சமமான பாதங்கள் ஆகிய குறைபாடு இருக்கக் கூடாது.

மேற்படி நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள், www.arasubus.tn.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இணையதள விண்ணப்பங்களின் விரிவான நடைமுறை, தகுதி அளவுகோல்கள் மற்றும் இதர  பிற விவரங்கள் மேற்படி வலைதளத்தில் கிடைக்கின்றன. பணியிடங்களை நிரப்புவதற்காக ஆட்சேர்ப்பு ஆன்லைன் விண்ணப்ப நடைமுறை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களைப் பெறுவதற்கான இணையதளம் 18.08.2023 முதல் 15.09.2023 வரை செயல்பாட்டில் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1180 (ஜிஎஸ்டி உட்பட) ஆகும். எஸ்சி/எஸ்டி பிரிவினர் ரூ.590 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

கண்டண்ட் கிரியேட்டரா நீங்க? இதோ பெங்களூரில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்!

August 18, 2023 0

 இந்தியாவில் சமீப ஆண்டுகளாக சோசியல் மீடியா இன்ஃப்ளூயன்சர்கள் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. இது சம்மந்தமான வேலைவாய்ப்புகள் மட்டுமே தங்களது தளத்தில் 117 சதவிகிதம் அதிகரித்துள்ளதாக Indeed வலைதளம் கூறுகிறது.

மேலும், இத்தகைய வேலைவாய்ப்பு பதிவுகளை க்ளிக் செய்யும் போக்கும் 75.30 சதவிகிதம் அதிகரித்துள்ளது என இத்தளம் கூறியுள்ளது. இந்தியா முழுவதும் எடுத்துக் கொண்டால், இதுபோன்ற இன்ஃப்ளூயென்சர்கள் மார்கெட்டிங் வேலைகளுக்கான விளம்பரங்கள் பெங்களூரு நகரத்தில்தான் அதிகமாகப் பதிவிடப்படுவதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவின் இன்ஃப்ளூயன்சர் மார்கெட்டிங் தலைநகரமாக பெங்களூரை அழைக்கிறார்கள். Indeed தளத்தின் தரவுகளை வைத்து பார்க்கும் போது, இன்ஃப்ளூயென்சர் மற்றும் கண்டன்ட் கிரியேட்டர்கள் தொடர்பான வேலைவாய்ப்பு சந்தையில் பெங்களூரு நகரத்தின் பங்கு மட்டுமே 16 சதவிகிதமாகும். 9 மற்றும் 7.5 சதவிகிதங்களைப் பெற்று இதற்கடுத்த இடங்களை டெல்லியும் மும்பையும் பிடித்துள்ளது.

அதேசமயத்தில், ஜெய்பூர், சூரத், இந்தூர் போன்ற நகரங்களில் இன்ஃப்ளூயன்சர் மார்கெட்டிங் பதவிகளுக்கு குறைவான வேலைவாய்ப்புகளே நிலவுகிறது. இந்நகரங்கள் யாவும் ஒரு சதவிகிதத்திற்கும் குறைவான பங்களிப்பையே கொண்டுள்ளன.

ஐடி நிறுவனங்களின் மையமாகவும் பல ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இருப்பதாலும் பெங்களூரு நகரம் இதில் முதலிடத்தில் இருப்பது ஒன்றும் ஆச்சர்யம் இல்லை. இதில் நாம் முக்கியமாக பார்க்க வேண்டியது என்னவென்றால், இங்குள்ள நிறுவனங்கள் பலவும் தங்களது வாடிக்கையாளர்களை அதிகரிக்கவும், தங்களது பிராண்டை மக்கள் மனதில் நிலை நிறுத்தவும் அனுபவமும் திறமையும் மிக்க இன்ஃப்ளூயன்சர்களை வேலைக்கு எடுக்கிறார்கள்.

இன்றைய டிஜிட்டல் காலத்தில், வாடிக்கையார்களோடு உரையாடவும் அவர்களை தொடர்பு கொள்ளவும் டிஜிட்டல் தளங்களையே பல நிறுவனங்களும் நம்பியிருக்கின்றன. உண்மையில், இதுவரை நிறுவனங்கள் நுழைய முடியாத இடங்களில் எல்லாம் தங்கள் படைப்புத் திறனை வெளிப்படுத்தி, மிகப்பெரிய தாக்கத்தை இந்த இன்ஃப்ளூயன்சர்கள் ஏற்படுத்துகிறார்கள். இதுவே வேலைவாய்ப்புச் சந்தையில் எதிரொலிக்கிறது.

யாருடைய உதவியும் இல்லாமல் உங்களுடைய முயற்சியினால் வெற்றிகரமான இன்ஃப்ளூயன்சராகவோ அல்லது கண்டண்ட் கிரியேட்டராகவோ நீங்களும் ஆகலாம். எனினும், இதுபோன்ற வேலைகளுக்கு தொழில்முறையாக செய்து வருபவர்களே பெரிய நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கின்றன என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். கண்டண்ட் கிரியேட்டர்களின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருவதால், எதிர்காலத்திலும் இந்தப் போக்கு தொடரக்கூடும்

இன்று பலரும் இணைய சேவையை பயன்படுத்துகிறார்கள். சாதாரண ஊசி முதல் டிவி, பிரிட்ஜ் வரை வீட்டில் அமர்ந்தபடியே ஆன்லைனில் எளிதாக வாங்குகிறார்கள். ஆகவே இன்ஃப்ளூயன்சர்களை பயன்படுத்தி தங்களுக்கான வாடிக்கையாளர்களை பெற்றுக் கொள்ளலாம் என பல தொழில் நிறுவனங்கள் நினைக்கின்றன.

இதன் காரணமாக அனுபவமும் மக்களை எளிதில் ஈர்க்கக்கூடிய திறமையுள்ள கண்டண்ட் கிரியேட்டர்களுக்கும் இன்ஃப்ளூயென்சர்களுக்குமான தேவை அதிகரித்துள்ளது. நீங்களும் திறமையான கண்டன்ட் கிரியேட்டராகவோ அல்லது இன்ஃப்ளூயென்சராகவோ இருந்தால், உங்கள் வீட்டில் இனி பண மழை கொட்டுவதற்கான காலம் கனிந்துவிட்டது என்றே சொல்லலாம்.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சொந்தமாக தொழில் தொடங்க திட்டமா? குறைந்த முதலீட்டில் ஸ்மார்ட் பிசினஸ் ஐடியா..!

August 18, 2023 0

சொந்தமாக தொழில் தொடங்க வேண்டுமென்று எல்லாருடைய மனதிலும் ஒரு கனவு இருக்கும். ஆனால், பலராலும் அதை நிறைவேற்ற முடியாது. நாம் தொழில் செய்தால் லாபம் ஈட்டமுடியுமா என சிலர் தயங்குவார்கள். அதனால்தான் உங்களுக்கு பிடித்த, உங்களுக்கு தெரிந்த, உங்களுக்கு ஆர்வம் இருக்கும் தொழிலில் ஈடுபடுங்கள் என்று கூறுகிறோம். உங்களுக்கு நன்றாக சமைக்க வருமென்றால், டிபன் சேவை தொழில் உங்களுக்கு சிறந்த லாபத்தை தரக்கூடியதாக இருக்கும். இதற்கு குறைவான முதலீடே தேவைப்படும். வீட்டிலிருந்தே கூட இந்த தொழிலை வெற்றிகரமாக நடத்தலாம்.

டிபன் சேவை என்றால் என்ன?

இதுவொன்றும் பெரிய சிக்கலான தொழில் அல்ல; மிகவும் எளிமையான தொழில்தான். வீட்டைவிட்டு வெளியூரில் வசிப்பவர்களுக்கு, தனியாக தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களுக்கும் சுவையான, சத்தான, பிரெஷான உணவை நீங்கள் வழங்கலாம். பெரும்பாலும் வேலைக்குச் செல்பவர்களும் மாணவர்களும் தான் உங்களின் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். உங்கள் டிபன் தொழில் வெற்றிகரமாக செல்ல வேண்டுமென்றால், சத்தான வீட்டுச் சமையலை நீங்கள் கொடுக்க வேண்டியது அவசியம்.

எப்படி தொடங்குவது?

உங்கள் வீட்டிலிருந்தே டிபன் சேவை அல்லது டப்பாவாலா தொழிலை தொடங்க விரும்பினால், சமைப்பதற்கும் டிபன்களை மொத்தமாக அடுக்கி வைப்பதற்கும் போதுமான இடவசதி இருக்க வேண்டும். சாதாரணமாக நம் வீட்டு சமையலறையில் 20 முதல் 30 பேருக்கு உண்டான உணவுகளை தயார் செய்யலாம். நாளடைவில் உங்கள் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 40-க்கும் மேல் இருந்தால், உங்கள் வீட்டிற்கு அருகாமையிலேயே ஒரு இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும்.

மார்கெட்டிங்:

டப்பாவாலா அல்லது டிபன் சேவை தொழில்கள் வாய்வழி விளம்பரத்தின் மூலம்தான் பெரும்பாலும் பிரபலமடையும். உங்கள் உணவைப் பற்றி மக்கள் நல்லவிதமாக கூறினால், உங்களுக்கு வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உங்கள் தொழில் குறித்து சமூக ஊடகத்திலும் விளம்பரம் செய்யலாம். உள்ளூர் அளவில் இருக்கும் சிறிய தொழில்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

உங்கள் டிபன் சேவை தொழிலுக்கென்று தனியாக வலைதளம் தொடங்கலாம். அல்லது, உங்கள் உணவின் புகைபடங்களை இன்ஸ்டாகிராம் அல்லது ஃபேஸ்புக்கில் பதிவிடலாம். இதனால் உங்களின் டிபன் தொழில் குறித்து பலருக்கும் தெரிய வரும். கூகுளில் விளம்பரங்கள் செய்வதாலும் உங்கள் தொழில் பெருகும். இன்றைய காலத்தில் பெண்கள் மட்டுமல்லாமல், ஆண்களும் கூட இந்த டிபன் சேவை தொழிலை திறம்பட நடத்தி வருகிறார்கள்.

முதலீடு:.

வழக்கமான சாப்பாடு என்பது கொஞ்சம் சாதம், சப்பாத்தி, கொஞ்சம் பருப்பு கடையல், கொஞ்சம் கூட்டு சில சமயங்களில் சாலட். இதைதான் நீங்கள் டிபனில் கொடுக்கப் போகிறீர்கள். செலவை கணக்கிடுவதற்கு முன்பு இதை நன்றாக தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள். ஆரம்ப முதலீடுகளுக்கும் அதற்குப் பிறகான பணத் தேவைகளுக்கும் உங்கள் கைகளில் இருந்துதான் செலவழிக்க வேண்டியிருக்கும். சமையல் பாத்திரங்கள், அடுப்புகள் மற்றும் பிற பொருட்கள் வாங்க எப்படியும் தோராயமாக ரூ.20,000 முதல் ரூ.30,000 வரை செலவாகும். வாடிக்கையாளர்கள் அதிகமானால் உங்களுக்கு வரக்கூடிய வருமானமும் அதிகரிக்கும்.

உணவு மற்றும் பாதுகாப்பு உரிமம்:

உங்கள் டிபன் தொழில் நல்லபடியாக சென்று கொண்டிருந்தால் தான், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம்(FSSAI) உங்களுக்கு உணவு மற்றும் பாதுகாப்பு உரிமத்தை வழங்கும். எனினும், வருடத்திற்கு ரூ.12 லட்சம் அல்லது அதற்கு மேலும் வருமானம் ஈட்டக் கூடிய நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த உரிமம் தேவைப்படும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 17, 2023

தினசரி குளிர்பானம் அருந்தினால் கல்லீரல் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு - ஆய்வில் அதிர்ச்சி தகவல்..!

August 17, 2023 0

 கோடை காலம் வந்துவிட்டால் நம் மனம் குளிர்ச்சியான பானங்களை தேடுவது இயல்பானது தான். அதே சமயம் தினசரி மிகுந்த குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் பலருக்கு இருக்கிறது. டீ அல்லது காஃபி போன்ற பானங்களை தவிர்க்க முடியாத சூழல் போலவே குளிர்பானங்களை தவிர்க்க முடியாத நிலையில் பலர் உள்ளனர்.

குறிப்பாக ஆண்களைக் காட்டிலும் பெண்களே குளிர்பானங்களை மிக அதிகமாக அருந்துகின்றனர் என்று தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அமெரிக்காவில் உள்ள இந்திய ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆராய்ச்சியில், வாடிக்கையாக குளிர்பானங்கள் அருந்தும் பெண்களுக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. நீடித்த கல்லீரல் அழற்சியால் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள பிரிகாம் மற்றும் மகளிர் மருத்துவமனை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில், மெனோபாஸ் அடைந்த 98,786 பேர் பங்கேற்றனர். மகளிர் ஆரோக்கிய முயற்சி என்ற திட்டத்தின் கீழ் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் தேவைப்படும் இதய நோய், மார்பக நோய் மற்றும் மலக்குடல் புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கும் நோக்கில் இந்த ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.

தினசரி ஒருமுறை அல்லது அதற்கு மேற்பட்ட முறை குளிர்பானம் அருந்தும் பெண்களில் 6.8 சதவீதம் பேருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு 85 சதவீதம் அதிகரித்துள்ளது என்று தெரியவந்தது. மேலும் நீடித்த கல்லீரல் அழற்சியால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கான அபாயம் 68 சதவீதம் அதிகரித்துள்ளது என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.

செயற்கை சர்க்கரை சேர்க்கப்பட்ட குளிர்பானங்களை மாதத்திற்கு மூன்று முறைக்கும் குறைவாக அருந்துகின்ற சாதாரண மக்களிடம் ஒப்பிட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து ஆய்வில் பங்கேற்ற முன்னணி ஆய்வாளர், “லாங்காங் ஜஹோ கூறுகையில், “எங்களுக்கு தெரிந்தவரையில், செயற்கை குளிர்பானங்கள் பயன்பாடு மற்றும் கல்லீரல் பாதிப்பு காரணமாக ஏற்படும் உயிரிழப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முதலாவது ஆய்வு இதுதான்” என்று தெரிவித்தார்.

ஃபைப்ரோசிஸ், சிரோசிஸ், நீடித்த கல்லீரல் அழற்சி போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறித்து மருத்துவ ஆய்வு மற்றும் ஏற்பட்ட உயிரிழப்புகளின் மூலமாக தகவல்கள் உறுதி செய்யப்பட்டன என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். கல்லீரல் பாதிப்பு தொடர்பாக இன்னும் விரிவான ஆய்வுகள் தேவைப்படுவதாகவும் அவர்களுக்கு கூறினர்.

தங்கள் ஆய்வு முடிவுகள் உறுதி செய்யப்படும் பட்சத்தில், கல்லீரல் பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை குறைக்க முடியும் என்றும் அவர் கூறினார். தற்போது ஆய்வக பரிசோதனை அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என்றும், இன்னும் விரிவான ஆய்வுகளை மேற்கொள்கின்ற போது கல்லீரல் நோய் தொடர்பான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள முடியும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

Click here to join whatsapp group for daily health tip

Click here for more Health Tip

படுத்த உடனே தூங்கிடணுமா..? அப்போ இந்த டிப்ஸை நீங்க கண்டிப்பா ஃபாலோ பண்ணனும்..!

August 17, 2023 0

 தூக்கம் என்பது நம்மில் பலரால் அலட்சியமாக கருதப்படும், எனினும் நமது வாழ்க்கையில் மிக முக்கியமான பங்கு வகிக்கக்கூடிய ஒன்று. நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இரவு தூக்கம் என்பது மிகவும் அவசியமானதாக கருதப்படுகிறது.

நமது மூளையின் ஆரோக்கியம் முதல் நமது உடல் உறுப்புகளின் ஆரோக்கியம் வரை தூக்கத்திற்கு முக்கிய பங்கு உண்டு. நல்ல இரவு தூக்கத்தை தொடர்ந்து பெற்று வரும் பொழுது நமது ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படுவதை நீங்கள் கண்டிப்பாக உணர்வீர்கள். எந்த ஒரு மன அழுத்தமும் இல்லாமல் ரிலாக்ஸாக இருப்பதற்கு தரமான தூக்கம் உதவுகிறது. நாம் நல்ல ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும் பொழுது நமது உடலில் இருக்கக்கூடிய உள்ளுறுப்புகள் வழக்கத்தை விட சுறுசுறுப்பாக செயல்பட தொடங்கும்.

ஆனால் நாம் போதுமான நேரம் தூங்க விட்டாலோ அல்லது இரவு நேரத்தில் அடிக்கடி வேண்டும் விழித்துக்கொள்ள நேர்ந்தாலோ நமது உறுப்புகளின் சீரமைப்பு செயல்முறையில் சிக்கல் ஏற்படுகிறது. இது நமது ஆற்றல் அளவுகளை பாதிப்பதோடு மட்டுமல்லாமல், நோய் எதிர்ப்பு சக்தியையும் குறைக்கிறது. ஆகவே இத்தனை நன்மைகள் தரக்கூடிய தரமான தூக்கத்தை பெறுவதற்கு உதவும் ஒரு சில பழக்க வழக்கங்கள் குறித்து இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

குறிப்பிட்ட நேரத்தில் படுக்கைக்கு செல்வதும், எழுவதும் : நன்றாக தூங்கும் பழக்கமுடைய ஒரு நபர் தினமும் இரவு ஒரே நேரத்தில் படுத்து, காலை ஒரே நேரத்தில் எழுவார். இதில் வார இறுதி நாட்களும் அடங்கும். குறைவான நேர தூக்கம் உடல் ஆரோக்கியத்திற்கு எந்த அளவு கெடுதலோ அதே அளவு அதிகப்படியான தூக்கமும் நமது ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கலாம். வார இறுதி நாட்களில் நீங்கள் அதிக நேரம் தூங்கினாலோ அல்லது வழக்கத்தை விட வேறு நேரத்தில் தூங்க சென்றாலோ அது உங்களது தூக்க சுழற்சியை பாதித்து தூக்கத்தின் தரத்தை மோசமாக்கும்.

தூங்குவதற்கான சூழல் : நாம் படுத்து உறங்கக்கூடிய அறை, சத்தம் இல்லாமல், இருட்டாகவும், ஓய்வு தரக்கூடிய மற்றும் அதே நேரத்தில் நமக்கு சௌகரியமான வெப்ப நிலையில் இருக்க வேண்டும். படுக்கை அறையில் டிவி, கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் போன்ற எலக்ட்ரானிக் சாதனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். படுக்கைக்கு சென்றவுடன் 10 முதல் 20 நிமிடங்களில் ஒருவர் தூங்கி விட வேண்டும். நீங்கள் படுத்து உறங்கும் மெத்தை உங்களுக்கு சௌகரியமானதாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இல்லையெனில் உங்களுக்கு ஏற்படக்கூடிய கழுத்து வலி அல்லது முதுகு வலியால் நீங்கள் நடு இரவில் விழித்துக் கொள்ளலாம்.

விரைவில் செரிமானம் ஆகக்கூடிய இரவு உணவு : தரமான தூக்கம் பெறக்கூடிய நபர்கள் பெரும்பாலும் அதிக கலோரி கொண்ட உணவு, மது, புகைப்பிடித்தல், அல்லது காஃபின் போன்றவற்றை இரவு நேரத்தில் தவிர்த்து விடுவார்கள். ஏனெனில் இது போன்ற விஷயங்கள் நமது உடல் மற்றும் மனதிற்கு ஓய்வு தருவதற்கு பதிலாக இரவு முழுவதும் அதிகப்படியான நேரம் வேலை செய்ய வழிவகுக்கும். இதனால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும்.

மன அழுத்தத்தில் இருந்து விடுபடுதல் : பகல் நேரத்தில் ஏற்படும் மன அழுத்தம், இரவு நேரத்தில் நீங்கள் நன்றாக தூங்கி எழுந்து, அடுத்த நாள் காலை விழிக்கும் பொழுது ஓரளவு உங்களுக்கு நிவாரணம் கிடைத்திருக்க வேண்டும். இது நிகழாவிடில் உங்களுக்கு பிரச்சனை தான். மன அழுத்தத்தில் இருப்பவர்கள் படுக்கைக்கு செல்வதற்கு முன்பு உணவு சாப்பிட்டபின் ஒரு சிறிய நடைபயிற்சிக்கு செல்லலாம் அல்லது புத்தகம் வாசிப்பது போன்றவற்றை செய்யலாம்.

தினமும் தியானம் செய்தல் : தூக்கம் தொடர்பான பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு பெரும்பாலும் ஆழ்ந்த மற்றும் இடைவிடாத யோசனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில் தியானம் செய்வது நல்ல தூக்கம் பெறுவதற்கு உதவும். ஓய்வு தரக்கூடிய நுட்பமான தியானம் தூக்கமின்மையை போக்கி, மனதிற்கு அமைதியை தருகிறது.

காலை உணவை தவிர்க்கக்கூடாது : நம்மில் பெரும்பாலானவர்கள் வழக்கமாக செய்யக்கூடிய ஒரு தவறு காலை உணவை தவிர்ப்பது. ஆரோக்கியமான காலை உணவை சாப்பிடாவிட்டால் நாம் ஏராளமான உடல்நல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். காலை உணவை தவிர்ப்பவர்கள் தூங்குவதற்கு அதிக நேரம் எடுத்துக் கொள்வதாகவும், இவர்களிடத்தில் மனச்சோர்வு அதிகப்படியாக இருப்பதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது.

பகல் நேரத்தில் அதிக நேரம் தூங்காமல் இருப்பது : பகல் நேரத்தில் உங்களுக்கு ஓய்வு தேவைப்பட்டால் 15 முதல் 20 நிமிடங்கள் மட்டும் சிறிய தூக்கம் எடுத்துக் கொள்ளலாம். நீண்ட நேரம் பகலில் தூங்குவதை முற்றிலுமாக தவிர்க்கவும். ஒருவேளை நீங்கள் 9 மணி நேரத்திற்கும் அதிகமாக தூங்கிய பிறகும் காலை எழும்பொழுது ஃபிரஷ்ஷாக இல்லாவிட்டால் இதற்கு பின்னணியில் ஏதேனும் மருத்துவ ரீதியான காரணங்கள் இருக்கலாம். எனவே இதனை தெரிந்து கொள்ள நீங்கள் மருத்துவரை அணுக வேண்டும்.


Click here to join whatsapp group for daily health tip

Click here for more Health Tip

உடலில் உள்ள கெட்ட கழிவுகளை வெளியேற்றி சுத்தம் செய்ய இந்த 9 டிப்ஸ் டிரை பண்ணுங்க..!

August 17, 2023 0

 இன்றைய உணவுகள் உடலில் நச்சுக்களை தேக்கி வைப்பதாலேயே பல நோய்கள், உபாதைகளை அனுபவிக்கிறோம். உணவின் மூலமாகவே அவ்வப்போது அவற்றை வெளியேற்றிவிடுவது அவசியம். அந்த வகையில் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி சுத்தம் செய்ய உதவும் சில டிப்ஸ் உங்களுக்காக...

எலுமிச்சை நீர் : வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வெறும் வயிற்றில் குடிப்பது உடலில் உள்ள நச்சுக்களை அடியோடு வெளியேற்ற உதவும்.

தூக்கம் : நம் உடலின் கழிவுகளை வெளியேற்ற தூக்கத்தை விட சிறந்த வழி எதுவும் இல்லை. ஏனெனில் இரவில் தான் நம் உடலானது கழிவுகளை வெளியேற்றி உடலை சுத்தம் செய்யும் வேலைகளை செய்யும். அந்த சமயத்தில் நாம் உடலுக்கு முழு ஓய்வு கொடுக்க வேண்டுமெனில் தூக்கம்தான் ஒரே வழி. எனவேதான் இரவு தூக்கம் அவசியம் என்கிறனர். இரவு சரியான துக்கமில்லை எனில் வரும் தொந்தரவுகளுக்கும் இதுவே காரணம்.

குடல் ஆரோக்கியத்திற்கு ஏற்ற உணவுகள் : காய்கறிகள், பீன் வகைகள், முளைக்கட்டிய பயறு வகைகள், பருப்பு வகைகள், பழழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுங்கள். அது உங்கள் குடல் இயக்கத்தை சீராக்கி நச்சுக்களை வெளியேற்ற உதவும்.

உடற்பயிற்சி : ஏரோபிக்ஸ் , ஸூம்பா போன்ற உங்களுக்கு விருப்பமான உடற்பயிற்சிகளை செய்தாலே ஃபீல் குட் ஹார்மோன்கள் சுரக்கும். அவை உங்கள் ஆற்றலை அதிகரித்து நச்சுக்களை வெளியேற்ற உதவும்.


தியானம் மற்றும் மூச்சு பயிற்சி : மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்வது உங்களை மனதளவிலும் உடலளவிலும் அமைதியடையச் செய்கிறது. இது உங்களை புத்துணர்ச்சியாக்குகிறது.

காலை குளியல் : காலையில் சீக்கிரமே குளிப்பது உங்கள் உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவும். அதோடு உடல் கழிவுகளும் நீங்கி சுத்தமாக உணர்வீர்கள்.

தண்ணீர் அதிகமாக அருந்துங்கள் : இது எளிமையான அதேசமயம் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்று. உடலுக்கு தேவையான அளவு தண்ணீர் குடிப்பது உடலின் கழிவுகளை எளிதில் வெளியேற்ற உதவும். உடலுக்கு தண்ணீரை விட சிறந்த நச்சு நீக்கி வேறு எதுவும் இருக்க முடியாது.

உங்களுக்கான தனிமை நேரம் : உங்களுக்கான நேரத்தை ஒதுக்குவது என்பதும் மிகவும் அவசியம். இது உங்கள் மன ஆரோக்கியத்தையும், உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்க அவசியம்.

Click here to join whatsapp group for daily health tip

Click here for more Health Tip


August 16, 2023

புதுக்கோட்டையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு.. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு..

August 16, 2023 0

 புதுக்கோட்டையில் இலவச பயிற்சியுடன் கூடிய வேலைவாய்ப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, "தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழக (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது.

அதன் அடிப்படையில் பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தகவல் தொழில்நுட்பம் சம்பந்தப்பட்ட பயிற்சியான SAP. Data Analytics. Artificial Intelligence. Cloud Computing, Digital Marketing மேலும் Animation சம்பந்தப்பட்ட பயிற்சியான Multimedia & Animation, 2D, 3D மற்றும் Advanced Level Tally ERP 9 போன்ற பயிற்சிகளை முன்னனி பயிற்சி நிறுவனங்கள் முலம் பயிற்சி வழங்கி வேலைவாய்ப்பு பெற்று தர வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பயிற்சியினை பெற பன்னிரெண்டாம் வகுப்பு மற்றும் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக ரூ.15,000/- முதல் ரூ.25,000/- வரை பெறலாம். பின்னர் திறமைக்கேற்றவாறு பதவி உயர்வின் அடிப்படையில் ஊதிய உயர்வும் பெறலாம். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளலாம்" என  தெரிவித்துள்ளார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

அறநிலையத் துறை வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

August 16, 2023 0

 

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, நாமக்கல் அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் தொடங்க உள்ள அர்ச்சகர் பயிற்சி பள்ளிக்கு ஆசிரியர், விடுதி காப்பாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 9 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.08.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

தமிழ் ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் முதுகலைப் பட்டம் மற்றும் பி.டி அல்லது பி.எட் படித்திருக்க வேண்டும். மேலும் 5 ஆண்டு அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

ஆகம ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு வேத ஆகம பாடசாலையில் ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். அல்லது 5 ஆண்டுகள் அர்ச்சகராக பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும். மற்றும் 4 ஆண்டு படிப்பிற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

விடுதிக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 20,600 – 65,500

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

சமையலர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும். உணவு தயாரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

தூய்மை பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 11,600 – 36,800

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தில் அறிவிப்புக்கு கீழே உள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில், நாமக்கல் – 637001.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.08.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் https://namakkalanjaneyar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 15, 2023

கல்லீரலை சுத்தம் செய்து ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள்..!

August 15, 2023 0

 

கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் அவசியம். கல்லீரல் நமது உடலின் மிகப்பெரிய உள் உறுப்பு ஆகும். கல்லீரல் பித்தத்தை உற்பத்தி செய்வது தொடங்கி உடலில் 500 க்கும் மேற்பட்ட வேலைகளை செய்கிறது. இது வயிற்றில் செரிமானத்தின் போது உற்பத்தி செய்யப்படும் நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவுகிறது. உடலுக்குத் தேவையான சில புரதங்கள், கொலஸ்ட்ரால், ஹார்மோன்கள் உள்ளிட்ட பல முக்கியமான பொருட்களை கல்லீரல் உருவாக்குகிறது.



இப்போதெல்லாம் கல்லீரலைச் சுத்தப்படுத்துவதாகச் சொல்லப்படும் லிவர் டிடாக்ஸ் என்ற பெயரில் பல விஷயங்கள் சந்தையில் வந்துவிட்டன.ஆனால் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் பல ஆய்வுகளில் லிவர் டிடாக்ஸால் குறிப்பிடத்தக்க பலன் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கிறது. கல்லீரல் நச்சுத்தன்மையை விட கல்லீரலை வலுப்படுத்துவது மிகவும் முக்கியம், இதற்கு ஆரோக்கியமான உணவை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம்.

ஆரோக்கியமான உணவை சாப்பிட்டால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும், அது தானாகவே உள்ளே இருக்கும் அழுக்குகளை நீக்கிவிடும் என்று ஹார்வர்ட் மருத்துவ இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. அதனால்தான் கல்லீரலை சுத்தம் செய்ய கூடுதல் முயற்சி தேவையில்லை, மாறாக கல்லீரலை நாம் தினசரி சாப்பிடும் உணவுப் பொருட்களிலிருந்தே சுத்தம் செய்துவிடலாம்.

1. பழங்கள் - கல்லீரலின் வலிமைக்கு பழங்கள்மிகவும் நன்மை பயக்கும். தினமும் சில பழங்களை சாப்பிட்டு வந்தால், கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும், அதன் காரணமாக கல்லீரல் தொடர்ந்து சுத்தம் செய்யப்படும். பழங்களில், புளூ பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, குருதிநெல்லி, திராட்சைப்பழம் போன்றவை அதிக நன்மை பயக்கும்.


2. முழு தானியங்கள் - முழு தானியங்கள் ஆரோக்கியத்தின் பொக்கிஷம். முழு தானிய உணவுகள் நார்ச்சத்துகளின் புதையல் ஆகும். ஹார்வர்ட் ஹெல்த் படி, சில நார்ச்சத்து நிறைந்த உணவுகள் புற்றுநோய் செல்களைத் தடுக்கும் திறன் கொண்டவை. அமெரிக்க உணவுமுறை வழிகாட்டுதல்களின்படி, தினமும் ஒரு கப் முழு தானியங்களை உட்கொள்வதன் மூலம் பல நோய்களைத் தவிர்க்கலாம்.


3. பச்சை இலைக் காய்கறிகள் - கல்லீரலை ஆரோக்கியமாக்க பச்சை இலைக் காய்கறிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கல்லீரலை பலப்படுத்தும் பச்சை இலைக் காய்கறிகளில் பல வகையான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் காணப்படுகின்றன. இந்த காய்கறிகள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இதன் காரணமாக, உடலில் ஃப்ரீ ரேடிக்கல்களின் பற்றாக்குறை உள்ளது, இதன் காரணமாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் குறைகிறது. இது கல்லீரலில் அழுத்தத்தை குறைக்கிறது மற்றும் கல்லீரலை பலப்படுத்துகிறது.


4. பாதாம் - பாதாம் மூளைக்கு மட்டுமல்ல கல்லீரலுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பாதாமில் பல வகையான ஆக்ஸிஜனேற்றங்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன, அவை கல்லீரலை ஆரோக்கியமாக்குகின்றன. பாதாமில் உள்ள பாலிசாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் கல்லீரல், சிறுநீரகம், மூளை மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக்குகின்றன.


5. ஏரோபிக் உடற்பயிற்சி - ஹார்வர்ட் ஹெல்த் படி, கல்லீரலை வலுப்படுத்த உடற்பயிற்சியும் அவசியம். ஏரோபிக் உடற்பயிற்சி கல்லீரலுக்கு மிகவும் நன்மை பயக்கும். ஏரோபிக் உடற்பயிற்சியில் வேகமான நடைபயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் மற்றும் அதிக உடல் செயல்பாடு ஆகியவை அடங்கும்.




 Click here to join whatsapp group for daily health tip


Click here for more Health Tip

உங்களுக்கு அடிக்கடி கழுத்து வலி வருகிறதா..? அப்படியென்றால் உங்கள் தலையணை கூட பிரச்சனையாக இருக்கலாம்..!

August 15, 2023 0

 எனக்கு இந்த மாதிரி தலையணை தான் வேண்டும் என ஒவ்வொருவருக்கும் விருப்பம் இருக்கும். சிலருக்கு உறுதியான தலையணையில் படுத்தால் தான் தூக்கம் வரும். வேறு சிலருக்கோ, மென்மையான, பஞ்சு போன்ற தலையணைகளை விரும்புவார்கள்.

எந்த தலையணையை வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், அவை உங்களுக்கு எந்த தொந்தரவையும் தராமல் இருக்க வேண்டும். குறிப்பாக தலையணை பயன்படுத்துகையில், உங்கள் தலையும் கழுத்தும், உங்களுடைய முதுகுதண்டோடு நேராக இருக்க வேண்டியது அவசியம். பலரும் போதுமான உயரம் வேண்டும் என்பதற்காக, பல தலையணைகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி வைத்திருப்பார்கள். இப்படியெல்லாம் அதிகமான தலையணைகளை பயன்படுத்தினால், உங்கள் தூக்கம் மட்டுமின்றி உடல்நலனும் பாதிக்கும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இரவில் தொடர்ந்து உங்களுக்கு கழுத்து வலி ஏற்பட்டால், உடனடியாக உங்கள் தலையணையை மாற்ற வேண்டும் என்பதற்கான அறிகுறியாகும்.

தூங்குவதற்கு எத்தனை தலையணைகள் வேண்டும்?

தூங்கும் போது ஒன்றா அல்லது இரண்டு தலையணை பயன்படுத்த வேண்டுமா என பல விவாதங்கள் நடைபெறுகிறது. இது நபருக்கு நபர் மாறுபடும். ஒரு சிலருக்கு கொஞ்சம் உயரமாக இருந்தால் நன்றாக இருக்கும். வேறு சிலருக்கோ தலையணை இல்லாமல் படுத்தால்தான் நன்றாக இருக்கும். பொதுவாக, ஒரு தலையணை பயன்படுத்துவதே நல்லது. அப்போதுதான் நீங்கள் தூங்கும் போது சுவாசமும் ரத்த ஓட்டமும் நன்றாக இருப்பதோடு காலையில் எழும்போது எந்த உடல் வலியும் இருக்காது. ஒருவேளை உங்களுக்கு தூக்கத்தில் மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் இருந்தால், இரண்டு தலையணைகளை பயன்படுத்துவது உங்களுக்கு வசதியாக இருக்கும்.

என்னுடைய தூங்கும் நிலையை பொறுத்து, எத்தைனை தலையணை தேவைப்படும்?

எத்தனை தலையணைகள் பயன்படுத்தலாம் என குழப்பமாக இருக்கிறதா? நீங்கள் எப்படி படுத்து தூங்குவீர்கள் என்பதை பொறுத்து இது மாறுபடும்? சாய்வாகவா அல்லது நேராகவா அல்லது குப்புற படுத்து தூங்குவீர்களா? இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமென்றால், நீங்கள் தூங்கும் நிலையை பொறுத்து தலையணையின் எண்ணிக்கையும் மாறுபடும்.

சாய்வாக சரிந்து படுப்பவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களுக்கு மிதமான, அதே சமயத்தில் கொஞ்சம் உறுதியான தலையணை பயன்படுத்தினால், உங்கள் கழுத்தும் தலையும் தோள்களோடு சீராக அமைந்திருக்கும். சாய்வாக படுப்பவர்களின் முழங்கால்கள் எப்போதும் ஒரு காலுக்கு மேல் இன்னொரு கால் சேர்ந்தார்ப் போல் இருக்கும். இவர்கள் தங்கள் கால்களுக்கு இடையே ஒரு தலையணையை பயன்படுத்தும் போது வசதியாக உணர்வார்கள். ஆகவே, சாய்வாக படுப்பவர்களுக்கு தூங்கும் போது இரு தலையணைகள் தேவைப்படும்.
நேராக படுத்து தூங்குபவரா? அப்படியென்றால் மிதமான உறுதித்தன்மை மற்றும் 3-5 இன்ச் தடிமன் கொண்ட ஒரு தலையணை உங்களுக்கு போதும். இந்தளவிற்கு உங்கள் தலையணை தடிமன் இல்லையென்றால், இதே உயரம் வரும் அளவிற்கு இரண்டு தலையணையை பயன்படுத்துங்கள். நேராக படுக்கும் போது இன்னும் வசதி குறைவாக உணர்கிறீர்கள் என்றால் பின்புறமாக முதுகிற்கு பக்கத்தில் உங்களுக்கு ஏற்ற வகையில் இன்னொரு தலையணையை வைத்துக் கொள்ளுங்கள்.
எப்போதும் குப்புற படுத்து தூங்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? உண்மையை சொல்ல வேண்டுமென்றால், இப்படி படுத்து தூங்கவே கூடாது. சரியான தலையணையை பயன்படுத்தவிட்டால், குப்புற படுத்து தூங்கும் போது அசௌகர்யமாக உணர்வதோடு காலையில் உடல் வலியோடு எழும்புவீர்கள். இப்படி குப்புற படுத்து தூங்குபவர்கள், மெலிதான தலையணையை பயன்படுத்துங்கள். இல்லாவிட்டால், தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது மிகவும் நல்லது. ஏனென்றால் குப்புற படுக்கும் போது உங்கள் வயிறு நேராக தரை மட்டத்தில் இருக்கிறது. இப்போது நீங்கள் தலையணை பயன்படுத்தினால் உங்கள் கழுத்து மட்டும் சற்று உயரமாக இருக்கும். இதனால் கழுத்து வலி வரக்கூடும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்கள் இப்படிதான் இருப்பார்கள்..!

August 15, 2023 0

 சமூகத்தில் ஒரு சிலர் மிகவும் தனித்துவமாக, நேர்த்தியாக, பார்க்கும் போதே அதிசயிக்கும் விதமாக இருப்பார்கள். இவர்களைப் போல இருக்க வேண்டும் என்று ஒரு சில பெண்களைப் பார்க்கும் போது ஒரு ரோல் மாடலைப் போலக் காண்பார்கள். இவ்வாறு தனித்துவமாக இருக்கும் பெண்களுக்கு என்று ஒரு சில பிரத்யேகமான பழக்கங்கள் மற்றும் குணங்கள் இருக்கின்றன. குறிப்பாக, அதிக தன்னம்பிக்கை கொண்ட பெண்களுக்கு இவை பொதுவானதாகக் காணப்படுகின்றன. அவ்வாறு தன்னம்பிக்கையுடன் வலம் வரும் பெண்களிடம் காணப்படும் பழக்கங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

தன்னைத் தானே அறிந்து கொள்வது : உங்களைச் சுற்றி இருப்பதை புரிந்து கொள்வது எவ்வளவு முக்கியமோ, உங்களைப் புரிந்து கொள்வதும் அதே அளவுக்கு முக்கியம். நீங்கள் எதைப் பற்றி அதிகம் சிந்திக்கிறீர்கள், உங்கள் உணர்வுகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைப் பற்றி ஒரு எழுதலாம். அல்லது உங்களின் ஏற்ற இறக்கமான உணர்வுகளை பற்றி உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் பகிரலாம். இதன் மூலம் உங்களைப் பற்றி நீங்கள் நன்றாக புரிந்து கொள்ள உதவும். தன்னுடைய பலவீனங்களை அறிந்தவர்களுக்கு தன்னம்பிக்கை குறையாது.

பாசிடிவ்வாக நினைப்பது : எப்போதுமே நேர்மறையான உணர்வுகள், சிந்தனைகள் தோன்றாது. பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் எண்ணங்கள் நாணயத்தின் இரு பக்கம் போன்றது. ஆனால் அதிக தன்னம்பிக்கைக் கொண்ட பெண்களைப் பார்க்கும் போது, அவர்கள் சவாலான, சிக்கலான சூழ்நிலைகளைக் கூட, அதை எதிர்கொள்வது எப்படி என்று நேர்மறையாக சிந்திப்பார்கள்.
இலக்குகளை நிர்ணயித்து அதை அடைவார்கள் : பொதுவாகவே வாழ்வில் முன்னேறுவதற்கு நமக்கு என்று தனிப்பட்ட இலக்குகள் மற்றும் லட்சியங்கள் இருக்க வேண்டும். இலக்குகள் இல்லாமல் தோன்றியதையெல்லாம் செய்து கொண்டிருந்தால் ஒரு கட்டத்தில் குழப்பம் ஏற்படும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும் பெண்கள் சின்ன சின்னதாக இலக்குகளை நிர்ணயித்து அதை ஒவ்வொன்றாக அடைந்து நிதானமாக முன்னேறிச் செல்வார்கள். இதன் மூலம், மிகப்பெரிய விஷயங்களைக் கூட படிப்படியாக சாதிக்க முடியும்.

கனிவாக இருப்பார்கள், உதவி செய்ய தயங்க மாட்டார்கள் : தன்னம்பிக்கை அதிகரிப்பதற்கு நீங்கள் பொதுவாகவே அன்பாகவும் கனிவாகவும் இருக்க வேண்டும் மற்றும் மேலும் தயங்காமல் உங்களால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு செய்ய வேண்டும். இந்த இரண்டு பழக்கமுமே உங்களுடைய தன்னம்பிக்கையை பெரிய அளவில் அதிகரிக்கும். ஸெல்ப் கான்பிடன்ஸ் அதிகமாக இருக்கும் பெண்களிடம் இதை கண்கூடாக பார்க்கலாம்.

நேர்த்தியான, பொருத்தமான ஆடை அணுவது : ஆள் பாதி ஆடை பாதி என்ற பழமொழிக்கு ஏற்ப அதிகமான தன்னம்பிக்கை என்பது ஒருவருடைய தோற்றத்தில் வெளிப்படும். அதில் நாம் எந்த ஆடைகளை தேர்ந்தெடுக்கிறோம் என்பது மிக மிக முக்கியம். தன்னம்பிக்கை நிறைந்த பெண்கள் தங்களுக்கு பொருத்தமான ஆடைகளை நேர்த்தியாக அணிவார்கள். இது டிரெண்டில் இருக்கிறது, இதுதான் இப்போது ஸ்டைல் என்று பொருத்தமில்லாத ஆடைகளை தேர்வு செய்ய மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.