Agri Info

Adding Green to your Life

August 22, 2023

அரசு வேலை வாய்ப்பு; 12-ம் வகுப்பு, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

August 22, 2023 0

 பெரம்பலூர் மாவட்ட சமூக நலத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பாதுகாப்பு அலுவலர், சமூகப் பணியாளர் மற்றும் உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பாதுகாப்பு அலுவலர் (Protection Officer)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : Degree in Social Work/ Sociology/ Child Development/ Human Rights Public Administration/ Psychology/ Psychiatry/ Law/ Public Health/ Community Resource Management படித்திருக்க வேண்டும். மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.


சம்பளம்: ரூ. 27,804

சமூகப் பணியாளர் (Social Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.A in Social Work/ Sociology/ Social Sciences படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,536

உதவியாளர் (Outreach Worker)

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முன் அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 01.08.2023 அன்று 42 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 10,592

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2023/08/2023082191.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரி : District Child Protection Officer, District Child Protection Unit, No. 164, 2nd Floor, M.M Plaza, Trichy Main Road, Perambalur – 621212

விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3550a141f12de6341fba65b0ad0433500/uploads/2023/08/2023082191.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

திருச்சி தேசிய கல்லூரி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

August 22, 2023 0

 திருச்சியில் உள்ள தன்னாட்சி பெற்ற தேசிய கல்லூரியில் இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 30 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 09.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இளநிலை உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

பண்டகக் காப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆய்வக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 18

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பதிவறை எழுத்தர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

நூலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 32 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், பி.சி, எம்.பி.சி, பி.சி.எம் பிரிவினர் 34 வயது வரையிலும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி : செயலர், தேசியக் கல்லூரி (தன்னாட்சி), கருமண்டபம், திருச்சிராப்பள்ளி – 620001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 09.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

IOCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

August 22, 2023 0

 

IOCL நிறுவனத்தில் ரூ.3,40,000/- ஊதியத்தில் வேலை – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

Indian Oil Corporation Limited எனப்படும் IOCL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.3,40,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தோகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IOCL காலிப்பணியிடங்கள்:

IOCL வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அலல்து கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate Diploma / MBA / PGDM / PGPM தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IOCL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Director ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000/- முதல் ரூ.3,40,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IOCL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 24.08.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

SSC JHT வேலைவாய்ப்பு 2023 – 307 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

August 22, 2023 0

 

SSC JHT வேலைவாய்ப்பு 2023 – 307 காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.112400/-

Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 307 பணியிடங்களா காலியாக உள்ளன. இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் 22.08.2023 முதல் 12.09.2023 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

SSC காலிப்பணியிடங்கள்:

Junior Hindi Translator, Junior Translator மற்றும் Senior Hindi Translator பதவிக்கு என மொத்தம் 307 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

01.08.2023 தேதியின் படி, 18 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது விண்ணப்பிக்க விரும்புவோர் 02.08.1993 முதல் 01.08.2005 க்குள் பிறந்திருக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

JHT கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master‟s degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

SSC தேர்வுக்கான தேர்வு செயல் முறை:

விண்ணப்பதார்கள் கீழ்கண்ட படிகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

படி 1 : Paper- I – Computer Based Mode (Objective Type)
படி 2: Paper- II – Descriptive
படி 3: Document Verification (DV)

சம்பள விவரம்:
  • Junior Translation Officer(JTO)/ Junior Hindi Translator (JHT) – ரூ.35400- 112400
  • Senior Hindi Translator(SHT) – ரூ.44900- 142400
SSC விண்ணப்ப கட்டணம்:
  • GEN/OBC/EWS – ரூ.100/-
  • SC/ST/PWD/Ex-servicemen – விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட அனைத்து தகுதி விவரங்களையும் பூர்த்தி செய்யும் விண்ணப்பதாரர்கள் https://ssc.nic.in/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம்12.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

SSC பணிக்கான முக்கிய நாட்கள்:
ஆன்லைன் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான தேதிகள்:22.08.2023 to 12.09.2023
ஆன்லைன் விண்ணப்பங்களைப் பெறுவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்:12.09.2023 (2300 hours)
 கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி மற்றும் நேரம்:12.09.2023 (2300 hours)
‘விண்ணப்பப் படிவத் திருத்தத்திற்கான சாளரம்’ மற்றும் திருத்தக் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தும் தேதி:13.09.2023 to 14.09.2023 (2300 hours)
கணினி அடிப்படையிலான தேர்வு தேதி:October, 2023


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சப்ஜா விதைகள் தரும் அற்புத நன்மைகளை பற்றி தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!

August 22, 2023 0

 கடுகு சிறுத்தாலும் அதன் காரம் குறையாது என்று சொல்வார்கள். அதுபோலத்தான் சப்ஜா விதைகளும். பார்ப்பதற்கு மிகச் சிறிய அளவில் இருந்தாலும், இதன் மூலமாக நம் உடல் ஆரோக்கியத்திற்கு கிடைக்கும் பலன்கள் பல. சப்ஜா விதைகளை நேரடியாக சாப்பிடுவதை காட்டிலும், ஊற வைத்து எடுத்துக் கொண்டால் அதன் பலன்கள் இன்னும் சிறப்பாக அமையும்.

சப்ஜா விதைகளில் ஒமேகா 3 பேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து நல்ல கொழுப்புச்சத்தை கொடுக்கும். இதனால் நம் இதய ஆரோக்கியம் மேம்படும் மற்றும் உயர் ரத்த அழுத்தம் குறையும். பழங்கால மருத்துவத்தில் முக்கியத்துவம்.

இந்தியர்களின் ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவம் ஆகிய இரண்டிலும் சப்ஜா விதைகளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. பார்ப்பதற்கு எள்ளு விதைகளைப் போல உள்ள சப்ஜா விதைகளில் என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இப்போது பார்க்கலாம்.

மினரல்கள் நிறைந்தது : நம் எலும்புகள் ஆரோக்கியமாகவும், வலுவாகவும் இருப்பதற்கு கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் மிகவும் அவசியமானவை. அனேக மக்களுக்கு தினசரி சாப்பிடும் உணவில் இருந்து இந்த மினரல்கள் போதுமான அளவுக்கு கிடைப்பதில்லை. ஆனால் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் அபரிமிதமாக அடங்கிய சப்ஜா விதைகளை தினசரி எடுத்துக் கொண்டால் அதன் பற்றாக்குறையை நாம் நிவர்த்தி செய்ய முடியும்.

நார்ச்சத்துகளின் சொர்க்கம் : நம் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், குடல் நலனுக்கும் இன்றியமையாத தேவையாக உள்ள நார்ச்சத்து சப்ஜா விதைகளில் இருந்து கிடைக்கிறது. குறிப்பாக சப்ஜா விதைகளை எடுத்துக் கொண்டால் நமக்கு வயிறு நிரம்பிய உணர்வு ஏற்பட்டு பசி கட்டுப்படுத்தப்படுகிறது. இதனால் மிகுதியான உணவு சாப்பிடும் பழக்கம் குறைகிறது. ஆக உடல் எடையை குறைக்க வேண்டும் என்று விரும்பும் நபர்கள் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்ளலாம்.

ரத்த சர்க்கரை கட்டுப்படும் : சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தவறாமல் சப்ஜா விதைகளை எடுத்துக் கொள்ளலாம். இது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது. குறிப்பாக சாப்பிட்டபின் ரத்தத்தில் துரிதமாக அதிகரிக்கின்ற சர்க்கரையை 17% சதவீதம் வரையில் குறைக்கின்ற ஆற்றல் சப்ஜா விதைகளுக்கு உண்டு.

தாவர சத்துக்கள் : தாவர வகை உணவுகளில் இருந்து மட்டுமே கிடைக்கக்கூடிய பாலிபினால்ஸ், ஃபிளவோனாய்ட்ஸ் ஆகியவை சப்ஜா விதைகளில் கிடைக்கும். அழற்சிக்கு எதிரான பண்புகளும், புற்றுநோயை தடுக்கக்கூடிய தன்மையும் சப்ஜா விதைகளில் உண்டு.

குடல் நலனுக்கு நல்லது : சப்ஜா விதைகளில் புரோபயாட்டிக் சத்துக்கள் மிகுதியாக உள்ளன. குடலுக்கு நன்மை கிடைக்கும் நல்ல பாக்டீரியா இதன் மூலமாக கிடைக்கிறது. குடலில் அழற்சி மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை தீர்க்கிறது.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

காலை எழுந்தவுடன் இஞ்சி-மஞ்சள் தண்ணீரை குடிப்பதால் இத்தனை நன்மைகளா..?

August 22, 2023 0

 நம்மில் பெரும்பாலானோர் காலை எழுந்தவுடன் பல் தேய்த்து விட்டு முதல் வேலையாக காஃபி அல்லது டீ குடித்து விட்டு நாளை தொடங்குகிறோம். ஒரு சில காலை நேரத்தில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் பச்சை தண்ணீர் அல்லது வெதுவெதுப்பான நீரை பருகுகிறார்கள்.நாம் காலை எழுந்தவுடன் குடிக்கும் பானம் நம் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா.! ஆம், நாம் காலையில் ஆரோக்கியம் நிறைந்த ஒன்றை பருகினால் அது நம் உடலில் நேர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். இதனால் தான் நிபுணர்கள் காலை எழுந்தவுடன் நம்முடைய ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்த உதவும் இஞ்சி மற்றும் மஞ்சள் தண்ணீரை குடிக்க பரிந்துரைக்கிறார்கள்

ஏனென்றால் மஞ்சள் (raw turmeric) மற்றும் இஞ்சி இரண்டிலுமே இயற்கையாகவே ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் ஊட்டச்சத்துக்கள் நிரம்பி உள்ளன. இந்த இரண்டும் கலந்த ஆரோக்கியமான நீரை காலையில் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.

அழற்சி எதிர்ப்பு பண்புகள்:

இஞ்சியில் உள்ள Gingerol மற்றும் மஞ்சளில் உள்ள குர்குமின் (curcumin) உள்ளிட்டவை மிகவும் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு சேர்மங்கள் ஆகும். காலை எழுந்க்வுடன் இஞ்சி மற்றும் மஞ்சள் அடங்கிய பானத்தை குடிப்பது உடலில் ஏற்படும் அழற்சிகளை குறைக்க உதவும். மூட்டுவலி போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவரணம் அளிப்பதோடு ஒட்டுமொத்த மூட்டு ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.

சிறந்த செரிமானம்:

சிறந்த செரிமானத்திற்கு தேவையான நொதிகள் சுரப்பதை ஊக்குவிப்பதன் மூலமும் குமட்டலை குறைப்பதன் மூலமும் செரிமான ஆரோக்கியத்தில் இஞ்சி குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. அதே நேரம் மஞ்சளானது செரிமான மண்டலத்தை அமைதிப்படுத்தி தணிப்பதன் மூலம் நல்ல செரிமான ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. எனவே இஞ்சி மற்றும் மஞ்சள் கலந்த பானத்தை குடிப்பது செரிமான கோளாறுகளை எளிதாக போக்க உதவுகிறது.

நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்:

இஞ்சி மற்றும் மஞ்சளில் நிறைந்திருக்கும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் நம் உடலை ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரஸிலிருந்து பாதுகாக்க, நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுகின்றன. எனவே காலை எழுந்தவுடன் இஞ்சி-மஞ்சள் பானம் குடிப்பது நோயெதிர்ப்பு அமைப்பை வலுவாக்குவதோடு, தொற்றுகளுக்கு எதிர்க்க சிறந்த பாதுகாப்பையும் வழங்கும்.

ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்:

இஞ்சி மற்றும் மஞ்சள் ஆகிய 2 பொருட்களுமே நம்முடைய ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என கூறப்படுகிறது. குறிப்பாக இஞ்சி ரத்த நாளங்களை விரிவுபடுத்த உதவும். மறுபக்கம் கொலஸ்ட்ரால் லெவலை குறைப்பதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது மஞ்சள்.

உடல் எடையை நிர்வகிக்க...

எடையை குறைக்கும் முயற்ச்சியில் இருப்பவர்களுக்கு பல சாத்தியமான நன்மைகளை அளிக்கிறது மஞ்சள். இதிலிருக்கும் குர்குமின் என்ற கலவை வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதன் மூலமும், அழற்சியை குறைப்பதன் மூலமும் எடை இழப்பு முயற்சிக்கு கணிசமாக உதவும். அதே நேரம் பசியை கட்டுப்படுத்த இஞ்சி உதவும். எனவே காலை நேரம் இந்த 2 முக்கிய மசாலா பொருட்கள் கலந்த பானத்தை குடிப்பது வெயிட் லாஸ் முயற்சிக்கு பெரிதும் உதவ கூடும்.

இஞ்சி-மஞ்சள் பானத்தை தயாரிக்க தேவையான பொருட்கள்:

  • வெதுவெதுப்பான தண்ணீர் - 1 கப்
  • துருவிய புதிய இஞ்சி அல்லது இஞ்சி பவுடர் - 1/2 டீஸ்பூன்
  • மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
  • பிளாக் பெப்பர் - ஒரு பின்ச்
  • தேன் அல்லது எலுமிச்சை

செய்முறை:

முதலில் 1 கப் தண்ணீரை கொதிக்க வைக்கவும். அடுப்பில் இருந்து இறக்கி தண்ணீரின் வெப்பநிலை வெதுவெதுப்பாக மாறியதும் அதில் துருவிய இஞ்சி அல்லது இஞ்சி பவுடரை சேர்க்கவும். பின் எடுத்து வைத்திருக்கும் மஞ்சள் தூள் மற்றும் பிளாக் பெப்பரை சேர்க்கவும். பின்பு இவற்றை வெதுவெதுப்பான தண்ணீரில் நன்கு மிக்ஸ் செய்து கொள்ளுங்கள். சுவைக்காக தேவைப்பட்டால் சிறிதளவு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து கொள்ளுங்கள். மேற்கண்ட நன்மைகளை பெற காலையில் வெறும் வயிற்றில் இந்த பானத்தை குடிக்கவும். இந்த பானத்தில் கூடுதலாக இலவங்கப்பட்டையை சேர்த்து கொள்வது எடை இழப்புக்கு கணிசமாக உதவும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


August 20, 2023

ஒரு துண்டு வெல்லம் இத்தனை பிரச்சனைகளுக்கு உதவுமா..? உணவு சாப்பிட்ட பிறகு தினமும் சாப்பிடுங்க..!

August 20, 2023 0

 முன்னோர்களின் வாழ்க்கைமுறையில் தினமும் ஒரு கிளாஸ் தண்ணீரில் வெல்லம் கலந்து குடித்துவிட்டுதான் நாளை தொடங்குவார்கள் என்ற பேச்சு உண்டு. காரணம் இப்படி குடிப்பது அன்றைய நாள் முழுவதும் செரிமான அமைப்பை சீராக வைத்துக்கொள்ளுமாம். அப்படி வெல்லம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் பண்புகளை கொண்டுள்ளது. அதாவது இரும்பு, பாஸ்பரஸ், கால்சியம் போன்ற சத்துக்கள் மற்றும் பல வைட்டமின்கள் வெல்லத்தில் உள்ளன. எனவே சாப்பிட்ட பிறகு வெல்லம் சாப்பிடுவது கூடுதல் நல்லது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். அப்படி உணவுக்கு பின் வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துகொள்வோம்.

செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது: வெல்லம் செரிமானத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். உணவிற்கு பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது. வாயு, வீக்கம், அஜீரணம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருகிறது.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது : உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது ஆற்றலை அதிகரிக்கும். இதனை உட்கொள்வதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

எலும்புகளை வலுவாக்கும்: உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிட்டால் எலும்புகள் வலுவடையும். வெல்லத்தில் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற பல வகையான சத்துக்கள் போதுமான அளவில் காணப்படுகின்றன. இது எலும்புகளை வலுப்படுத்த வேலை செய்கிறது.

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும்: இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வெல்லம் ஒரு மருந்து. வெல்லம் சாப்பிடுவதன் மூலம் உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம்..

உடல் எடையை குறைக்க உதவும் : வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவது உடல் எடையை குறைக்க உதவுகிறது. உணவுக்குப் பிறகு வெல்லம் சாப்பிடுவது செரிமானத்திற்கு உதவுகிறது. இதன் காரணமாக எடையை எளிதாக குறைக்கலாம்.

இரத்த சோகையில் பலன் தரும் : வெல்லத்தை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் இரத்த சோகை ஏற்படாது. இரத்த சோகை நோயாளிகளுக்கு வெல்லம் சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும். வெல்லத்தில் இரும்புச்சத்து மற்றும் பாஸ்பரஸ் இருப்பதால் உடலில் இரத்தத்தை அதிகரிக்கும். உடலில் ரத்தம் குறைவாக இருப்பவர்கள் கண்டிப்பாக வெல்லம் சாப்பிட வேண்டும்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சிறுதானிய உணவு சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறதா..?ஆய்வில் வெளியான தகவல்..!

August 20, 2023 0

 சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக நீரழிவு நோயாளிகள் அரிசிக்கு பதிலாக குயினோவாவை எடுத்துக்கொண்டால், உணவுக்கு பிந்தைய ரத்த சர்க்கரையின் அளவை குறைக்க உதவுவது கண்டறியப்பட்டுள்ளது.

நீரழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதில் உணவு மிக முக்கிய பங்காற்றுகிறது. குறிப்பாக அரிசி, கோதுமை போன்ற உணவுக்கு பதிலாக குளூட்டன் ஃப்ரீ மற்றும் புரதச்சத்து, நார்ச்சத்து, 9 வகையான அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து ஆகியவை நிறைந்த குயினோவாவை எடுத்துக்கொள்வது உடலில் உருவாகும் நோய்களை குறைக்கவும், தடுக்கும் உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் அரிசி, கோதுமை மற்றும் பிற தானியங்களை விட குயினோவாவை உட்கொண்டால், ரத்தத்தில் உணவுக்கு பிறகான சர்க்கரையின் அளவு குறைவதாகவும், நீரழிவு நோய் இல்லாதவர்களுக்கு அது வருவதற்கான சாத்தியத்தை குறைப்பதாகவும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு மூலமாக தெரிய வந்துள்ளது.

65 வயதிற்கும் மேற்பட்ட 9 நீரழிவு நோயாளிகளுக்கு 4 வாரத்திற்கு வழக்கமான உணவுடன் குயினோவாவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வில் சர்க்கரை நோயாளிகள் குயினோவாவை சாப்பிட ஆரம்பித்த பிறகு ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு கணிசமான அளவிற்கு குறைந்துள்ளதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளன. குறைந்த கார்போஹைட்ரேட்டுகளைக் கொண்ட குயினோவாவை உட்கொண்டதால், பங்கேற்பாளர்களின் எடை, உடல் நிறை குறியீட்டெண் (BMI) மற்றும் இடுப்பு சுற்றளவு ஆகியவை குறைந்துள்ளதையும் ஆராய்ச்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சாமை, வரகு, தினை போன்ற சிறுதானிய வகையைச் சேர்ந்த குயினோவா, தாவர புரதம் மற்றும் நார்ச்சத்துக்கான நல்ல ஆதாரமாகக் கருதப்படுகிறது. ஒரு கப் சமைத்த குயினோவாவில் சுமார் 8 கிராம் புரதம், 5 கிராம் நார்ச்சத்து உள்ளதாக ஹார்வர்ட் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நீரிழிவு நோய்க்கான ஃபோர்டிஸ் சி-டிஓசி மையத்தின் தலைவர் டாக்டர் அனூப் மிஸ்ரா கூறுகையில், குயினோவாவை நீரழிவு நோய் ஏற்படுவதற்கான அபாய கட்டத்தில் இருப்பவர்களும் மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களும் உட்கொள்ளலாம். இதில் அதிக புரதம் மற்றும் நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. குயினோவாவில் உள்ள பினாலிக் அமிலங்கள் உணவுக்கு பிந்தைய ரத்த குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது” என தெரிவித்துள்ளார்.

ஹார்வர்ட் டிஹெச் சான் ஸ்கூல் ஆஃப் பப்ளிக் ஹெல்த் நடத்தி ஆய்வு முடிவுகளின் படி, குயினோவா உட்பட அனைத்து வகையான முழு தானியங்களும், மரணத்திற்கான அபாயத்தைக் குறைக்க உதவும் என்பதை சுட்டிக்காட்டியுளது. தினந்தோறும் 70 கிராம் அளவிற்கு முழு தானியங்களை உட்கொள்ளும் நபர்களுக்கு, முழு தானியம் உட்கொள்ளாத நபர்களை விட மரணத்திற்கான அபாயம் 22 சதவீதம் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக இருதய நோயால் இறக்கும் அபாயம் 23 சதவீதமும், புற்றுநோயால் இறக்கும் அபாயம் 20 சதவீதமும் குறைவாக இருப்பது தெரிய வந்துள்ளது.

குயினோவாவை சமைப்பது எப்படி?

  • சாமை, தினை, வரகு போன்ற பிற சிறு தானியங்களைப் போலவே குயினோவாவையும் கொதிக்கும் தண்ணீரைப் பயன்படுத்தி சமைத்து சாப்பிடலாம். கூடுதல் சுவையை விரும்புவோர் குயினோவாவுடன் மசாலா மற்றும் மூலிகைகளைக் கலந்து வெரைட்டி ரைஸ் போலவும் சமைக்கலாம்.
  • பால் அல்லது தண்ணீரில் சமைத்த குயினோவாவை பழங்கள் மற்றும் நட்ஸ் வகைகள் சேர்த்து காலை உணவாக உட்கொள்ளலாம்.
  • வேகவைக்கப்பட்ட குயினோவாவை சத்தான காய்கறிகள் கலந்த சாலட்டில் சேர்த்தும் சாப்பிடலாம்.
  • சோளத்தை பாப் செய்து பாப் கார்ன் தயாரிப்பது போலவே குயினோவாவையும் வறுத்து சாப்பிடலாம்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இண்டர்வியூவ்ல ஜெயிக்கனுமா? இந்த 3 டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க… வேலை நிச்சயம்!

August 20, 2023 0

 தன்னுடைய கேரியரில், வில்லியம் வேண்டெர்ப்ளூமென் என்பவர் இதுவரை 30,000-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை நேர்காணல் செய்துள்ளார். தற்போது Vanderbloemen என்ற தேடுதல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கிறார் வில்லியம். ஒரு வேலைக்கு நீங்கள் முழு தகுதியுடையவராக இருந்தாலும், இந்த வேலைக்கு இவர் சரிபட்டு வரமாட்டார் என உங்களை கூறுவதற்கு மனிதவள துறை அதிகாரிகளுக்கு பல வழிகள் உள்ளதாக இவர் கூறுகிறார்.

நேர்காணல் செய்பவரின் கவனத்தை நம் பக்கம் திருப்ப வேண்டுமென்றால், நட்பானவராகவும், தன்னம்பிக்கைமிக்கவராகவும், தொழில்முறை சார்ந்த அணுகுமுறையை கடைபிடிப்பவராகவும் உங்களை அவர்கள் முன் காண்பித்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும் என்றும் தனது நேர்காணல் அணுபவத்தை பகிர்ந்து கொள்கிறார்.

வேலைக்கான நேர்காணலின் போது மனிதவள துறை அதிகாரியை எப்படி ஈர்க்க வேண்டும் என மூன்று டிப்ஸ்களை நமக்கு தருகிறார் வில்லியம் அளித்துள்ளார்.

சரியான உடையை அணியுங்கள் :

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு பலரும் வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சூழல் ஏற்பட்டுள்ளதால், அலுவலக மீட்டிங் கூட இப்போதெல்லாம் ஆன்லைனில்தான் நடக்கிறது. இதனால் பலரும், வீட்டில் தானே இருக்கிறோம் என சாதாரண உடையை அணிகிறார்கள். ஆனால் உங்களுக்கான நேர்காணல் வீடியோ கால் மூலம் நடைபெற்றாலும், சாதாரண உடையை அணியாதீர்கள்.

சிலர் நம் முகம் மட்டும் தானே தெரியப் போகிறது என நினைத்து, இடுப்பிற்கு கீழ் ஷார்ட்ஸ் போன்ற உடையை தயவுசெய்து அணியாதீர்கள். ஏனென்றால், நேர்காணலுக்கான உடையை அணிந்துள்ளீர்களா என்பதை பார்க்க, சில சமயங்களில் உங்களை எழுந்து நிற்கக் கூட சொல்வார்கள். இதெல்லாம் அதிகப்பிரசங்கித்தனமாக உங்களுக்கு தோன்றலாம். ஆனால், வேலை கிடைக்க வேண்டுமென்றால், நாம் தான் சரியான உடையை அணிந்திருக்க வேண்டும். கிடைத்த வாய்ப்பை நாமே நாசமாக்கி கொள்ளக்கூடாது அல்லவா. ஆகையால் நேர்காணலுக்கு ஏற்ற சரியான உடையை அணியுங்கள்.

நேர்காணல் செல்லும் நிறுவனத்தைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்ளுங்கள் : 

பலரும் நேர்காணல் செல்லும் போது, தாங்கள் விண்ணப்பித்த வேலைக்கு தொடர்பான பல தகவல்களையும் தெரிந்துகொண்டு அதற்கு சம்மந்தமான கேள்விகள் ஏதும் கேட்டால் பதிலளிக்க தயாராக இருப்பார்கள். ஆனால் ஒருசிலர் மட்டுமே நேர்காணல் செல்லும் நிறுவனங்களின் விவரங்களையும், சமீபத்தில் அந்த நிறுவனத்தில் நடந்த மாற்றங்கள் குறித்த தகவல்களையும் சேகரித்து வைத்திருப்பார்கள். இன்னும் சிலரோ நேர்காணல் செய்பவரின் விவரங்களை கூட தெரிந்து வைத்திருப்பார்கள்.

நேர்காணல் தொடங்கிய முதல் 5-10 நிமிடங்களில், இந்த நிறுவனம் குறித்து நீங்கள் பல தகவல்களை சேகரித்து வைத்துள்ளீர்கள் என்பதை மனிதவள துறை அதிகாரிகளுக்கு உணர்த்திவிட்டால், நீங்கள் அப்போதே பாதி கிணறை தாண்டிவிட்டீர்கள் என்று அர்த்தம். இன்றைய வேலைவாய்ப்புச் சந்தை மிகவும் போட்டி நிறைந்தது. புதிதாக சிந்திப்பவர்களும் எதையும் ஆர்வமாக கற்றுக்கொள்பவர்களுமே இங்கு வெற்றியடைகிறார்கள்

சம்பளம் குறித்து எப்போது கேட்க வேண்டும்?

நேர்காணல் தொடங்கிய ஒரு சில நிமிடங்களிலேயே உங்களின் சம்பளம் குறித்து கேட்காதீர்கள். அப்படி கேட்டால், அது மிகப்பெரிய தவறாகப் போய்விடும். இந்த தவறை பல விண்ணப்பதாரர்கள் செய்கிறார்கள். இப்படி கேட்பதால் உங்களை பணத்தாசை பிடித்தவர் என நேர்காணல் செய்பவர் நினைத்துக்கொள்ள வாய்ப்புள்ளது. அவர்களே சம்பளம் குறித்து பேசும் வரை எதுவும் கேட்காதீர்கள். ஆனால், இரண்டாவது அல்லது மூன்றாவது கட்ட நேர்காணலின் போது கூட உங்களின் சம்பளம் குறித்து யாரும் பேசவில்லை என்றால், நேர்காணலின் முடிவில் அதைப்பற்றி மென்மையாக கேளுங்கள்.

சம்பளத்திற்காக தான் அனைவருமே வேலைக்குச் செல்கிறார்கள். ஆனாலும், அது குறித்து நேர்காணலில் நீங்கள் அதிகமாக பேசாமல் இருந்தால், உங்களுக்குதான் பல வகையிலும் நல்லது. நேர்காணலின் போது சம்பளத்தைப் பற்றி பேசுவதற்குப் பதிலாக அந்த நிறுவனத்தின் நோக்கம், இலக்குகள், அங்குள்ள பணியிடத்தின் கலாச்சாரம் போன்றவை குறித்து நீங்கள் அதிகமாக ஆர்வம் காட்டினால், உங்கள் பதிலில் ஈர்க்கப்பட்டு அதிக சம்பளத்தில் உங்களை தேர்வு செய்யக் கூட வாய்ப்புள்ளது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news