Agri Info

Adding Green to your Life

September 2, 2023

தினசரி 4000 அடிகள் நடந்தால் ஹார்ட் அட்டாக் வருவதை தடுக்கலாம்..!

September 02, 2023 0

 ஒருவர் உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு தினமும் எத்தனை அடிகள் நடக்க வேண்டும் என்பது குறித்து யூரோப்பியன் ஜர்னல் ஆஃப் பிரிவென்டிவ் கார்டியாலஜி ஒரு புதிய ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. அதன்படி தினமும் 3967 அடிகள் நடப்பது நமது உடல் ஆரோக்கியத்திற்கு எக்கச்சக்கமான பலன்களை தரும் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நமக்கு நீண்ட ஆயுளை தருவது முதல் இதய நோய் சார்ந்த இறப்புகளை குறைப்பது வரையிலான பலன்கள் இதிலிருந்து நமக்கு கிடைக்கிறது..

தினமும் 4000 படிகள் (ஸ்டெப்ஸ்) நடப்பதன் மூலமாக இறப்பு விகிதம் 15 சதவீதமாக குறைவதாகவும், அதே நேரத்தில் இதய நோய் காரணமாக ஏற்படும் இறப்பு விகிதம் 7 சதவீதம் குறைவதாகவும் இந்த ஆய்வு மூலமாக தெரியவந்துள்ளது. இந்த நடைபயிற்சியை மேற்கொள்வதற்கு குறிப்பிட்ட விதிகள் எதுவும் கிடையாது. ஒருவர் தினமும் குறைந்தபட்சமாக 4000 முதல் 7000 படிகள் வரை தாராளமாக நடக்கலாம்.

4000 படிகள் நடக்க ஆரம்பித்த நபர்கள் அதனை படிப்படியாக அதிகரிப்பது சிறந்தது. இளைஞர்களை பொருத்தவரை ஒரு நாளைக்கு 10,000 படிகள் வரை கூட நடக்கலாம். காலை நேரத்தில் 4000 முதல் 5000 படி கொண்ட பிரிஸ்கான ஒரு மார்னிங் வாக் சென்று விட்டால் மீதம் இருக்கும் படிகளை நாளின் மீதம் இருக்கக்கூடிய நேரத்தில் முடித்து விடலாம்.

நடை பயிற்சி செல்வது உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வது மட்டுமல்லாமல் உடல் எடையை குறைப்பது, நீரழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது, செரிமானத்தை மேம்படுத்துவது, இதய நோய்கள் ஏற்படும் அபாயத்தை குறைப்பது போன்ற நன்மைகளை வழங்குகிறது. இதற்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது!​ ஒருவரால் முடிந்தவரை தினமும் 15,000 முதல் 20,000 அடிகள் வரை கூட நடக்கலாம். ஆனால் உடலை வருத்தி கொண்டு எதையும் செய்யக்கூடாது. ஒருவரால் எவ்வளவு முடியுமோ அந்த அளவோடு நிறுத்திக் கொள்வது நல்லது.

​நடை பயிற்சி செய்வதற்கு சரியான நேரம் எது?​ நடப்பதற்கு குறிப்பிட்ட நேரம் எதுவும் கிடையாது. காலை நேரத்தில் நடப்பது சுத்தமான மற்றும் மாசுபாடு குறைந்த காற்றை சாவாசிக்க உதவும். அதே நேரத்தில் மாலை நேரத்தில் அல்லது இரவு உணவுக்கு பிறகு நடப்பது ஒருவரை ரிலாக்ஸாக வைக்க உதவும் மற்றும் செரிமானத்தை மேம்படுத்தி, சர்க்கரை அளவுகளை குறைக்க உதவும். நடைபயிற்சிக்கான நேரம் என்பது ஒருவரின் வேலை, வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் மற்றும் பிற காரணிகள் பொறுத்து அமையும்.

​நடப்பதற்கு ஏதேனும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமா?​ காது கேட்பதில் சிக்கல் மற்றும் கண் பார்வையில் பிரச்சனைகள் கொண்ட வயதானவர்கள் போதுமான வெளிச்சம் இருக்கும் பொழுது மற்றும் டிராஃபிக் இல்லாத பகுதியில் நடப்பதை உறுதி செய்ய வேண்டும். நிதானமாக நிற்க முடியாத நபர்கள் நடக்கும்போது வாக்கிங் ஸ்டிக் அல்லது பிற ஆதரவை பெறுவதன் மூலம் தடுக்கி விழுவதை தவிர்க்கலாம். இதயம் சார்ந்த பிரச்சனைகள் இருக்கக்கூடிய நபர்கள் அதிகப்படியான உணவு சாப்பிட்ட உடன் நடப்பது, கீழ்மட்டத்தில் இருந்து மேல் மட்டத்திற்கு நடப்பது நெஞ்சு வலியை ஏற்படுத்தலாம். எனவே இவ்வாறு செய்வதை தவிர்க்க வேண்டும். நடப்பதற்கு முன்னரும், நடந்த பின்னரும் 5 முதல் 8 நிமிடங்கள் வார்ம்-அப் செய்வது நல்லது. ஹைப்போ கிளைசிமியா கொண்ட நபர்கள் நடப்பதற்கு முன்பு லேசான ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட்டுவிட்டு நடக்கலாம்.

Also read this

 நடைப்பயிற்சியை சுவாரசியமாக்கும் வழிகள்

இரவில் வாக்கிங் போவது உடலில் என்ன மாற்றத்தை ஏற்படுத்தும்....

அதிகாலை நடைப்பயிற்சி ஏன் அவசியம்?

ஒரு நாளைக்கு 10,000 ஸ்டெப்ஸ் நடப்பது சரிதான்.. ஆனால் இப்படி நடந்தால் பலன் இல்லை - விளக்கும் மருத்துவர்...

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

September 1, 2023

TNPSC - Examination Schedule 2023 - 2024

September 01, 2023 0

மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

September 01, 2023 0

 

மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Incubation Manager / CEO மற்றும் Lab Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.09.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TANUVAS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Incubation Manager / CEO மற்றும் Lab Assistant பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.V.Sc. and A.H. and MBA/ B.Sc./ B.Tech. in life sciences / biological science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
  • Incubation Manager / CEO – ரூ.100,000/-
  • Lab Assistant – ரூ.20,000/-
  • TANUVAS தேர்வு செயல் முறை:

    மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நெல்லையில் யூபிஎஸ்சி இலவச மாதிரி தேர்வு.. எப்போது தெரியுமா?

September 01, 2023 0

 நெல்லையில்செப்.3ல் யூபிஎஸ்சிக்கு இலவச மாதிரி தேர்வு நெல்லை மாவட்ட நூலகத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி யூபிஎஸ்சிக்கு இலவச மாதிரி தேர்வு நடைபெற உள்ளது.

யூபிஎஸ்சி போட்டி தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகத்தில் செப்டம்பர் 3ல் தொடங்குகிறது.

திருநெல்வேலி மாவட்ட நூலக அலுவலர் மீனாட்சி சுந்தரம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் மூலம் யூபிஎஸ்சி முதல் நிலை பயிற்சிக்கான உதவித்தொகை பெறும் தேர்வு செப்டம்பர் 10 (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.


இந்த தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு திருநெல்வேலி மாவட்ட மைய நூலகமும் திருநெல்வேலி சிவராஜவேல் ஐஏஎஸ் பயிற்சி நிறுவனமும் இணைந்துசெப்டம்பர் 3 (ஞாயிற்றுக்கிழமை) மாவட்ட மையம் நூலகத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை நடத்துகிறது. இந்த இலவச தேர்வை எழுத விரும்புவர்கள் 9626252500, 9626253300 ஆகிய கைபேசி எண்கள் மூலம் பதிவு செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 31, 2023

இந்த உணவுகளில் கூட இரும்புச்சத்து இருக்கா..? இது தெரியாம போச்சே..!

August 31, 2023 0

 இன்று பெரும்பாலான நபர்களில் இரும்பு சத்து குறைபாடு காணப்படுகிறது. அதிகப்படியான சோர்வு, அதிகரித்த இதயத்துடிப்பு, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இரும்பு சத்து குறைபாட்டை குறிக்கிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக ரத்த சோகை ஏற்படலாம்.

இரும்புச்சத்து நமது இரத்தம் மூலமாக தசைகள் மற்றும் மூளைக்கு ஆக்ஸிஜன் கொண்டு செல்லும் முக்கியமான பணியை வகிக்கிறது. இதன் காரணமாக இது நமது உடல் நலம் மற்றும் மனநலம் ஆகிய இரண்டிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளது. மேலும் ஆரோக்கியமான நோய் எதிர்ப்பு அமைப்பு, சீரான வெப்பநிலை, செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சுதல் போன்றவற்றிலும் இரும்புச்சத்து செயல்புரிகிறது. இந்த பதிவில் இரும்பு சத்து குறைபாட்டை தவிர்ப்பதற்கு நமது உணவில் என்னென்ன மாதிரியான உணவுகளை சேர்க்க வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

மாட்டிறைச்சி : மாட்டிறைச்சியில் இரும்பு சத்து அதிகமாக இருப்பதை தவிர வைட்டமின் B12, சிங்க் மற்றும் செலினியம் போன்ற ஊட்டச்சத்துக்களும் காணப்படுகின்றன.

கோழியின் தொடைப்பகுதி : மாட்டிறைச்சியைப் போலவே கோழிக்கறியிலும் இரும்பு சத்து அதிக அளவில் காணப்படுகிறது. குறிப்பாக கோழியின் தொடை பகுதியில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.

கடற் சிற்பிகள் : கடற் சிற்பிகளை நமது அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதற்கு பல காரணங்கள் உள்ளது. இவற்றில் அதிக அளவு புரதச்சத்து இருப்பதோடு குறைந்த கலோரிகள் மற்றும் அதிகளவு ஒமேகா-3 கொழுப்பு அமிலஙச காணப்படுகிறது. இது தவிர இவற்றில் இரும்பு சத்து ஏராளமாக உள்ளது. கடற் சிப்பிகள் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன், ஆண்மை தன்மையை மேம்படுத்த உதவக்கூடிய டெஸ்டாஸ்டரான் உற்பத்தியை அதிகப்படுத்துகிறது.

உலர்ந்த ஆப்ரிக்காட் பழங்கள் : அரை கப் உலர்ந்த ஆப்ரிகாட் பழங்களில் 160 க்கும் குறைவான கலோரிகள் உள்ளன. இவற்றில் போதுமான அளவு வைட்டமின் C இருப்பது இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது.

பருப்பு வகைகள் : அரை கப் வேக வைத்த பருப்பில் போதுமான அளவு புரதச்சத்தும், 3mg இரும்பு சத்தும் காணப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பருப்புகளில் நார்ச்சத்து அதிகம் காணப்படுவதால் இது செரிமான ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது.

தண்டுக்கீரை விதைகள் : இந்த தண்டிக்கீரை விதைகளில் எக்கச்சக்கமான இரும்பு சத்து தவிர மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்கள் காணப்படுகிறது.

ஹெம்ப் கவிதைகள் : சைவ உணவு உண்பவர்களுக்கு இந்த விதைகள் ஒரு அற்புதமான ஊட்டச்சத்து மூலமாக அமைகிறது. இரும்பு சத்து அதிகம் கொண்ட இந்த விதைகளில் ஆரோக்கியமான கொழுப்பு சத்துக்களும் பெருமளவில் அடங்கியுள்ளது. அதிக கலோரி கொண்ட ஹெம்ப் விதைகளில் புரோட்டின், நார்ச்சத்து மற்றும் 9 அத்தியாவசிய அமினோ அமிலங்களும் உள்ளன.

சியா விதைகள் : சியா விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் இரும்பு சத்து அதிக அளவில் காணப்படுகிறது. மேலும் கால்சியம், மெக்னீசியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற நம் உடலுக்கு மிகவும் முக்கியமான தாதுக்களும் காணப்படுகின்றன.

முந்திரிப் பருப்பு : முழுக்க முழுக்க நல்ல கொழுப்புகளால் ஆன 1/4 கப் முந்திரி பருப்புகளில் 2mg இரும்புச்சத்து காணப்படுகிறது.

பீன்ஸ் : நார்ச்சத்து மற்றும் ஃபோலேட் அதிக அளவில் காணப்படும் பீன்ஸில் 2 முதல் 4mg இரும்புச்சத்து உள்ளது.

பூசணி விதைகள் : 1/4 கப் பூசணி விதைகளில் முழுக்க முழுக்க கால்சியம், புரோட்டின், சிங்க் மற்றும் 4.5mg இரும்பு சத்து காணப்படுகிறது.

டார்க் சாக்லேட் : டார்ச் சாக்லேட்டில் இரும்பு சத்து அதிகமாக இருந்தாலும் இதனை அதிக அளவில் சாப்பிட கூடாது. அதிக கலோரிகள் கொண்ட டார்க் சாக்லேட் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.

இந்த உணவுகளை நமது அன்றாட உணவில் சேர்த்து கொள்வதன் மூலமாக நம் தினசரி வழக்கத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் இரும்புச்சத்து குறைபாட்டில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

அஜீரணம், வாயு போன்ற வயிற்று பிரச்சனைகளை தீர்க்கும் 5 சிறந்த பானங்கள்

August 31, 2023 0

 இரவு கொஞ்சம் அதிகமாக சாப்பிட்டாலோ அல்லது கொழுப்பு நிறைந்த உணவுகளை உண்டாலோ காலையில் பெரும்பாலானோர் சந்திக்கும் ஒரு சிக்கல் அஜீரணம் மற்றும் வயிறு உப்பசம் அல்லது வீக்கம். வாயு பிரச்சனையால் கூட இது போன்ற உணர்வுகள் ஏற்படும். இது போன்ற சந்தர்ப்பங்களில் நமக்கு கைகொடுக்க உதவும் 5 காலை பானங்களை தான் இப்பொது சொல்ல இருக்கிறோம்.

சீரகத் தண்ணீர் : ஆன்டிஆக்ஸிடன்ட்களால் செறிவூட்டப்பட்டசீரகத் தண்ணீர் நச்சுகளை வெளியேற்றவும், செரிமான மண்டலத்தை சரி செய்யவும் உதவுகிறது. கூடுதலாக, இது உங்கள் குடலை குளிர்ச்சியாக வைத்திருக்கவும், வீக்கம், அமிலத்தன்மை மற்றும் வாயு பிரச்னைகைத்  தடுக்கவும் உதவும் கார்மினேடிவ் விளைவுகளைக் கொண்டுள்ளது.

இளஞ்சிவப்பு உப்பு நீர்: இஞ்சியை தண்ணீரில் கொதிக்க வைத்து வடிகட்டி பிங்க் சால்ட் எனப்படும் இளஞ்சிவப்பு உப்பு, மற்றும் சிறிது தேன் சேர்த்து குடிக்கும்போது உத்து உங்கள் வயிற்றில் உள்ள கழிவுகளை வெளியேற்றி உங்கள் நாளை புத்துணர்வுடன் தொடங்க வலி வகுக்கும். இரத்த சர்க்கரை பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் பானங்களில் தேன் சேர்ப்பதை தவிர்க்கலாம்.

மஞ்சள் தேநீர்: மஞ்சள் பழங்காலத்திலிருந்தே பாரம்பரிய மருத்துவ நடைமுறையின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது. மஞ்சள், இஞ்சி, கருப்பு மிளகு, சிறிது தேன் ஆகியவற்றை வெதுவெதுப்பான நீரில் கலந்து பருகலாம். இதுவும் அஜீரணம் சார்ந்த பிரச்சனைகளை தீர்த்து வயிற்றுக்கு தீர்வு அளிக்கும்.

வெள்ளரிக்காய்-புதினா நீர் : வெள்ளரிக்காய், புதினா மற்றும் எலுமிச்சையுடன்   தண்ணீரை சேர்த்து ஒரு பாட்டில் தயார் செய்து நாள் முழுவதும் பருகவும். புதினா வயிற்றை தணிக்கும் அதே வேளையில், வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை உடலில் சேமித்து வைக்கப்பட்டுள்ள அதிகப்படியான நச்சுக்களை வெளியேற்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்களை வழங்குகிறது.

இஞ்சி எலுமிச்சை தேநீர்: இந்தியாவில் தேநீர் மிகவும் பிரபலமான பானங்களில் ஒன்றாகும். அதில் பால் சேர்க்காமல் இஞ்சி, தேன் மற்றும் எலுமிச்சை ஆகியவற்றை கலந்து குடிக்கும்போதுவயிற்றில் உள்ள அமிலத்தன்மை மற்றும் அஜீரணம் உள்ளிட்ட குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாறும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

August 30, 2023

சீக்கிரமா உடல் எடையை குறைக்க நினைத்தால் உங்களுக்கு இந்த 6 ஆபத்துகள் வரலாம்..!

August 30, 2023 0

 இன்றைய காலத்தில் எதிலும் விரைவான முடிவை எதிர்பார்க்கிறார்கள். உடல் எடை அதிகரிக்க வேண்டுமென்றாலும் அல்லது அதை குறைக்க வேண்டுமென்றாலும், அடுத்த நொடியே அவர்கள் நினைத்தபடி நடக்க வேண்டும். பலரது எதிர்பார்ப்பும் இப்படித்தான் இருக்கிறது. தொடர்ச்சியான உடற்பயிற்சி அல்லது ஒரு நாளைக்கு 800 கலோரிகளுக்கும் குறைவாக உணவை எடுத்துக் கொண்டால் விரைவாக உடல் எடையை குறைக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஆனால் இப்படி உடல் எடையை வேகமாக குறைப்பதால், உங்கள் உடல்நலனில் பல மோசமான விளைவுகள் ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? உங்கள் உடல் கலோரிகளை எரிக்கும் அளவை விட நீங்கள் குறைவான கலோரிகளை உட்கொண்டால், உங்கள் உடல் க்ளைக்கோஜென் ஆற்றலை பயன்படுத்த தொடங்குகிறது. உங்கள் உடலில் உள்ள இந்த க்ளைக்கோஜென் தண்ணீரோடு நெருங்கிய தொடர்புடையது. இந்த ஆற்றல் வீணாகும் போது, உங்கள் உடலில் நீரின் அளவும் குறையத் தொடங்குகிறது.

உங்களுடைய உடல் எடை வேகமாக குறைவதால் ஏற்படக்கூடிய 6 பக்க விளைவுகள் :

தசைகள் சுருங்கிப் போதல் : உடலில் உள்ள கொழுப்பு குறைவதற்கும் உடல் எடை குறைவதற்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. குறைவான கலோரி கொண்ட உணவுகளை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு, உங்களின் எடையும் வேகமாக குறைந்தால், உங்கள் தசைகள் சுருங்கிப் போவதே முக்கிய காரணமாகும்.

மெடபாலிஸம் குறைதல்: குறிப்பிட்ட அளவிற்குப் பிறகு, குறைவான கலோரி உணவுகள் மற்றும் தசைகள் சுருங்கிப் போவதால் நம் உடல் கொஞ்சம் கொஞ்சமாக மெடபாலிஸத்தை குறைக்கிறது.

ஊட்டச்சத்து குறைபாடு : குறைவான கலோரி கொண்ட உணவுகளை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளும் போது ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. குறைவான கலோரிகளை எடுப்பதால், ஃபோலேட், இரும்புச்சத்து, விட்டமின் பி12 போன்ற சத்துகளும் உங்களுக்கு குறைவாக கிடைக்கின்றன. இதன் காரணமாக முடி உதிர்வு, நோய் எதிர்ப்பு சக்தி குறைதல், அதிகப்படியான சோர்வு ஆகியவை ஏற்படும்.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு : திடீரென்று உங்கள் கலோரிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ளும் சர்க்கரை அலவையும் குறைக்கும் போது, நம்முடைய ஹார்மோனில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் அதிகமாக சாப்பிட வேண்டும் என்ற தேவை நமக்கு அதிகரிக்கிரது.

பித்தப்பை கற்கள்: நாம் உண்ணும் கொழுப்பு நிறைந்த உணவுகளை கரைக்க உதவும் செரிமானச் சாறுகளை பித்தப்பைகளே சுரக்கின்றன. நீங்கள் நிறைய உணவுகளை சாப்பிடாத போது, உங்களுடைய பித்தப்பையில் செரிமானச் சாறுகள் காலியாகாமல் அப்படியே தேங்கிவிடுகின்றன. இது நாளடைவில் பித்தப்பை கற்களாக உருவாகின்றன. ஆகையால் வேகமாக உடல் எடையை குறைப்பதால் என்னென்ன மோசமான விளைவுகள் ஏற்படுகிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

நீர்ச்சத்து குறைதல்: உடல் எடை வேகமாக குறையும் போது, உடலில் உள்ள நீரின் அளவும் குறைவாகவே இருக்கும். இதனால் உங்கள் உடலில் கடுமையான நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுகிரது.

உங்கல் உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவெடுத்துள்ளீர்களா? அப்படியென்றால் அதை நீண்டகால நோக்கில் செயல்படுத்துங்கள். உங்கள் வாழ்க்கைமுறையில் போதுமான மாற்றங்களை கொண்டு வாருங்கள். உடல் எடை குறைக்க விரும்புகிறவர்கள் சில அடிப்படையான விஷயங்களை மனதில் வைத்திருக்க வேண்டும். அது என்னவென்றால்,

  • லீன் புரொட்டீனை உட்கொள்ளுங்கள்
  • சர்க்கரை மற்றும் மாவுச்சத்து நிறைந்த உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக் கொள்ளுங்கள்.
  • நன்றாக தூங்குங்கள்
  • மன அழுத்தத்தை குறையுங்கள்
  • உடலை வலுப்படுத்தக் கூடிய தீவிர உடற்பயிற்சி செய்யுங்கள்
  • நீண்டகால நோக்கில் ஒரு பழக்கத்தை சரிவிகிதமாக கடைபிடிப்பதன் மூலமே உடல் எடையை வெற்றிகரமாக குறைக்க முடியும். ஆகையால் உடனடி எடை குறைப்பை உண்டாக்கும் டயட்டிற்கு இன்றே முடிவுரை எழுதுங்கள்.-


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

தூக்கம் முதல் மன அழுத்தம் வரை... தினமும் தூங்குவதற்கு முன் கால்களுக்கு மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்..!

August 30, 2023 0

 ஒவ்வொரு நாள் இரவும் நாள் முழுவதும் ஓடியாடி வேலை செய்ததால் ஏற்படும் களைப்பு, சோர்வு நம்மை மிகவும் வாட்டும். உடல் வலி தீர யாராவது மசாஜ் செய்து விட மாட்டார்களா என்று ஏங்குவோர் பலர்.. மசாஜ் செய்வது நம் ஆரோக்கியத்திற்கு நல்லது என்பதை நாம் அறிவோம்.

பொதுவாக தலையில் எண்ணெய்யை கொண்டு செய்யும் ஹெட் மசாஜால் கிடைக்கும் நன்மைகள் நமக்கு தெரிந்ததே. ஆனால் இரவு நேரத்தில் உள்ளங்காலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா..? ஆயிலை கொண்டு Foot Massage செய்து கொள்வதன் மூலம் கால் வலி நீங்குவதுடன் நம்முடைய ஆரோக்கியத்திற்கும் பல வழிகளில் நன்மைகளை தரும். உள்ளங்காலில் ஆயில் மசாஜ் செய்வதால் உடலுக்கும் மனதுக்கும் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்...

கால் ஆரோக்கியம்: அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆல்டர்நேட்டிவ் மெடிசின் கூற்றுப்படடி, தினமும் இரவு நேரத்தில் பாதத்தை ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பாதங்களில் ரத்த ஓட்டம் மற்றும் நெகிழ்வுத்தன்மை (flexibility) சிறப்பாக இருக்கும்.இந்த பழக்கம் plantar fasciitis மற்றும் flat feet போன்ற கால் தொடர்பான நோய்களை தடுக்கும்.

மன அழுத்தத்தை போக்கும்: நீங்கள் மன அழுத்தம், கவலை மற்றும் பதற்றம் உள்ளிட்ட உணர்வுகளால் அவதிப்பட்டால் இரவு நேரத்தில் பாதங்களை ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் மனநிலை நன்றாக இருப்பதாக உணர்வீர்கள். இந்த மசாஜ் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் இயற்கை வலி நிவாரணயாக் செயல்படும் எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது.

ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது: உங்களுக்கு ஹை பிளட் பிரஷர் பிரச்சனை இருந்தால் நீங்கள் தினசரி இரவு நேரங்களில் எண்ணெய்யை பாதங்களில் மசாஜ் செய்து கொள்வது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது. வழக்கமான அடிப்படையில் இரவு நேரங்களில் Foot Massage செய்து கொள்வது ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் என்பது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

கால் வீக்கம் குறையும்: சில நேரங்களில் உள்ளங்காலின் நரம்புகளில் திரவம் குவிகிறது, குறிப்பாக கர்ப்ப காலத்தில் இந்த பிரச்சனை அதிகம் ஏற்படுகிறது. இந்த மசாஜ் செய்து கொள்வதன் மூலம் ரத்த ஓட்டம் மேம்படுவதால் இது போன்ற பிரச்சனைகள் நீங்குகிறது. அதிக அழுத்தம் கொடுக்காமல், வலியை ஏற்படுத்தாமல் காலில் வீங்கிய பகுதியில் மசாஜ் செய்வது அப்பகுதியில் இருக்கும் lymph fluid எனப்படும் நிணநீர் திரவத்தை வெளியே நகர்த்தி வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

மாதவிடாய்க்கு முந்தைய அறிகுறிகளில் இருந்து நிவாரணம்: மாதவிடாய் எதிர்கொள்ளும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு மாதமும் PMS எனப்படும் மாதவிடாய்க்கு முன் premenstrual syndrome ஏற்படுகிறது. உள்ளங்கால்களில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் பெண்கள் PMS-ன் தீவிர அறிகுறிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். மெனோபாசில் ஏற்படும் பிரச்சனைகளை போக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது. மாதவிடாயின் போது நீடிக்கும் ரத்தப்போக்கு, மனநிலை மாற்றம், ஹார்மோன் பிரச்னை போன்றவற்றால் தவிக்கும் பெண்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுபட இந்த மசாஜ் மிகவும் உதவிகரமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

தலைவலிக்கு நிவாரணம்: நீங்கள் அடிக்கடி தலைவலியுடன் போராடி வருகிறீர்களா..! உள்ளங்காலில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் இந்த பிரச்சனையை எளிதில் சமாளிக்கலாம். தவிர நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் இந்த மசாஜ் உதவுகிறது.

பார்வை திறன் மேம்படும்: நம் பாதங்கள் கண்களுடன் தொடர்புடைய நான்கு முக்கிய புள்ளிகளை கொண்டுள்ளன. எனவே நேரம் கிடைக்கும் போது பாதங்களை ஆயில் மசாஜ் செய்வது கண்பார்வை திறனை மேம்படுத்த உதவுகிறது.

சிறந்த தூக்கம்: நல்ல ஆரோக்கியத்திற்கு சிறந்த தூக்கம் அவசியமானதாக இருக்கிறது. எனவே, இரவில் தூங்க முடியாமல் நீங்கள் அவதிப்பட்டால் பாதங்களில் ஆயில் மசாஜ் செய்வதன் மூலம் ஆழ்ந்த மற்றும் நல்ல தூக்கத்தைப் பெறலாம்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்சு எரிச்சலாக இருக்கிறதா.? காரணம் இதுதான்... தவிர்க்கும் வழிகள் இதோ..!

August 30, 2023 0

 உணவு சாப்பிட்ட பிறகு நெஞ்சு எரிச்சலாக இருப்பது ஒருவித அசௌகரியத்தை உண்டாக்கும். இதற்கு acid reflux என்று பெயர். இதற்கு காரமான உணவு அல்லது ஏதேனும் புதிதாக சேர்க்கப்பட்ட உணவுப்பொருட்கள் என பல காரணங்கள் உள்ளன. எதுவாயினும் அதை சரி செய்ய வேண்டியது அவசியம். இல்லையெனில் அது நாள் முழுவதும் தொந்தரவாகவே இருக்கும். நீங்கள் எப்போதாவது அல்லாமல் அடிக்கடி இந்த பிரச்சனையால் அவஸ்தைப்படுகிறீர்கள் எனில் இதை கவனித்தில் கொள்வது அவசியம். ஏன் என்பதை இன்னும் விரிவாக பார்க்கலாம்.

இரைப்பைஉணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் (GERD) : இதை நாள்பட்ட நிலையாக கருதுகின்றனர். இந்நிலையில் உணவு அமிலமானது மீண்டும் உணவுக்குழாய்க்கு திரும்புவதால் எரிச்சல் உணர்வு இருக்கிறது. இது பலருக்கும் உணவுக்கு பின் வரக்கூடிய பிரச்சனை. உணவு சாப்பிட்ட சில நிமிடங்களில் நெஞ்சில் எரிச்சலாக இருக்கும். பின் வாய் அல்லது தொண்டை வரை காரமான திரவம் வந்து செல்லும். இதனால் நெஞ்சு எரிச்சல் அதிகமாக இருக்கும். சில நேரங்களில் வாந்தி வரும் உணர்வு இருக்கும்.

ஹையாடல் குடலிறக்கம் : குடலிறக்க பிரச்சனையில் வயிறு நெஞ்சுக்குழிக்குள் உள்ள diaphragm தசைகளுக்கு அழுத்தம் கொடுக்கிறது. இதனால் ஒவ்வொரி உணவுக்கு பின்பும் நீங்கள் நெஞ்சு எரிச்சல் பிரச்சனையால் அவஸ்தைப்படுவீர்கள். இது வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது சிகிச்சைகள் மூலம் சரி செய்யக்கூடிய பிரச்சனைதான். சில பிரச்சனைகளில் அறுவை சிகிச்சைகூட செய்ய நேரலாம்.

அமிலம் மற்றும் காரம் நிறைந்த உணவுகள் : காரமான உணவுகள் பொதுவாகவே நெஞ்சு எரிச்சலை உண்டாக்கும். அதோடு சுவைக்காக அதில சேர்க்கப்படும் சில மசாலாக்கள் அல்லது உணவுப்பொருட்கள் ஆசிட் ரிஃப்ளெக்‌ஷனை உண்டாக்கலாம். இதை சரி செய்ய பால் அல்லது பால் சார்ந்த பொருட்களை சாப்பிடுவதன் மூலம் சற்று குறைக்கலாம்.

இந்த பிரச்சனையை சரி செய்ய என்ன செய்யலாம்..? மாத்திரையை காட்டிலும் வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்வது பக்கவிளைவுகளற்றது. அதோடு சில உடல் செயல்பாடுகள் மூலமும் உடனடி நிவாரணம் பெறலாம். அதேசமயம் நீங்கள் அடிக்கடி இந்த பிரச்சனையை அனுபவிக்கிறீர்கள் எனில் மருத்துவரை அணுகுவதே நல்லது.

உணவுக்கு பின் படுத்தல் : உணவு உண்ட பிறகு சாய்ந்து படுப்பது, தூங்குவது மிகவும் தவறு. இது செரிமான வேலையை பாதிக்கும். வயிற்று மந்தம் நெஞ்சு எரிச்சல் போன்ற பிரச்சனைகளை தரலாம்.

1000 அடிகளாவது நடக்கலாம் : உணவுக்கு பின் உடனே அல்லாமல் 5 நிமிடங்கள் கழித்து வாக்கிங் செல்லலாம். இதனால் பல நன்மைகள் அடங்கியுள்ளன. இது இரத்த சர்க்கரை அளவை சீராக்கும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. அதோடு உணவுக்கு பின் வரும் சோர்வு நீங்கி ஃபிரெஷாக உணர்வீர்கள்.

வஜ்ராசனா நிலை : உங்களால் நடக்க முடியவில்லை எனில் வஜ்ராசனா நிலையில் 5 நிமிடங்கள் அமரலாம். இதை உணவுக்கு பின் செய்ய வேண்டும். அதேசமயம் நல்ல ஹெவி மீல் எடுத்துக்கொண்ட பின் இதை செய்யக்கூடாது.

கவனிக்க வேண்டியவை : மேலே சொன்ன சில வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் உணவு முறை மாற்றங்கள் உங்களுக்கு பலன் தரவில்லை எனில் மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

நெல்லை அரசு இசைப்பள்ளியில் படித்தால் இவ்வளவு வேலை வாய்ப்புகளா?

August 30, 2023 0

 திருநெல்வேலி மாவட்டத்தில் கலை பண்பாட்டுத்துறை சார்பில் அரசு இசைப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி பெருமாள்புரம் பி.குடியிருப்பு பகுதியில் உள்ளது. இசைப்பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மிகத் திறமை வாய்ந்த கலை ஆசிரியர்களை கொண்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.

இப்பள்ளியில் குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட துறைகள் உள்ளன. இதற்கு கல்வி தகுதியாக குறைந்தபட்சம் ஏழாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

12 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும். இதற்காக இப்பள்ளி சார்பில் மாணவர்களுக்கு இலவச புத்தகம், கல்வி உதவித்தொகை, மிதிவண்டி, இலவச பஸ் பாஸ், ரயில் சலுகை கட்டணம் வசதி வழங்கப்படுகிறது.ஒரு வருடத்திற்கு பயிற்சி கட்டணமாக ரூபாய் 350 மட்டும் வசூலிக்கப்படுகிறது.

இதில் சிறப்பு அம்சம் என்னவென்றால் அனைத்து மாணவர்களுக்கும் ஊக்கத்தொகையாக மாதம் 400 ரூபாய் அரசு வழங்குகிறது.

இதுகுறித்து மாவட்ட அரசு இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியை செல்வ முத்துக்குமாரி கூறுகையில், "நிறைய மாணவர்கள் இசை பள்ளியில் படித்து முடித்துவிட்டு பரதநாட்டியம் கற்றுக் கொடுத்து வருகின்றனர். 1997 முதல் நெல்லை மாவட்டத்தில் இசைப்பள்ளி இயங்கிக் கொண்டிருக்கிறது. இசைப்பள்ளி ஆரம்பிக்கும் பொழுது குரல் இசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம் ஆகிய துறைகள் மட்டுமே இருந்தன. பின்னர் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு வயலின், மிருதங்கம் சேர்க்கப்பட்டன.

இங்கு நாதஸ்வரம் துறையில் படித்து முடித்த மாணவர்கள் இந்து அறநிலைத்துறை கோயில்களில் பணிபுரிகின்றனர். தேவாரம் துறையில் படித்து முடித்தவர்கள் ஓதுவாராக நிறைய கோயில்களில் பணிபுரிந்து வருகின்றனர். தவில், வயலின் உள்ளிட்ட துறைகளை முடித்த மாணவர்களுக்கு அரசு கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இங்குள்ள ஏழு துறைகளிலும் படித்து முடித்தவர்கள் கவர்மெண்ட் வேலைகளில் மட்டுமல்லாமல்அரசு தனியார் பள்ளிகளில் அதனை கற்றுக் கொடுக்கும்ஆசிரியராகவும் உள்ளனர். மேலும் நாட்டிய பள்ளி வைத்து தனியாகவும் அவர்கள் நடத்தி வருகின்றனர்" என அவர் தெரிவித்தார்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

August 23, 2023

காரைக்குடி சிக்ரி வேலை வாய்ப்பு; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

August 23, 2023 0

 தமிழ்நாட்டில், காரைக்குடியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனத்தின் சென்னை அலகில் திட்ட ஆராய்ச்சியாளர், திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் செயல்பட்டு வரும் ஒரு முதன்மையான நிறுவனமான, சிஎஸ்ஐஆர் – மத்திய மின் வேதியியல் ஆராய்ச்சி நிறுவனம் (சி.எஸ்.ஐ.ஆர் -சி.இ.சி.ஆர்.ஐ), காரைக்குடி, பலதரப்பட்ட ஆராய்ச்சி மற்றும் மேம்படுத்தலில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் சென்னை அலகில் திட்ட இணை உதவியாளர், திட்ட உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப சிறந்த கல்வியறிவு கொண்ட ஆர்வமுள்ள மற்றும் தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 13 பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

Project Scientist – II

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Ph.D in Chemistry/ Chemical Sciences/ Chemical Engineering/ Environmental Engineering /Energy Engineering படித்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 67,000

Senior Project Associate

காலியிடங்களின் எண்ணிக்கை: 2

கல்வித் தகுதி: Ph.D in Chemistry/ Physics/ Nanoscience/ Nanotechnology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 42,000

Project Associate –I

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: M.Sc in Chemistry/ Organic Chemistry/ Inorganic Chemistry படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000 – 31,000

Project Associate – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E/ B. Tech in Chemical Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 31,000

Project Associate – I

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E/B.Tech in Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 25,000

வயது தளர்வு: அரசு விதிகளின் படி SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பு தளர்வு உண்டு.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இந்த பணியிடங்களுக்கான நேர்காணல் 05.09.2023 மற்றும் 06.09.2023 ஆகிய தேதிகளில் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

நேர்காணல் நடைபெறும் இடம்: Director, CSIR-CECRI, Karaikudi

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.cecri.res.in/Opportunities.aspx என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்களைப் பெற https://www.cecri.res.in/Portals/0/Careers/PS-09-2023_AdvtCopy.pdf என்ற இணையதள பக்கத்தைப் பார்வையிடவும்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு இ-சேவை மைய வேலை வாய்ப்பு; பி.இ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

August 23, 2023 0

 தமிழ்நாடு மின் ஆளுமை முகமையில் மின் மாவட்ட மேலாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 8 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. காஞ்சிபுரம், நாமக்கல், நாகப்பட்டினம், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், வேலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இந்த பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.09.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

e-District Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 8

கல்வித் தகுதி : B.E. /BTech in (Computer Science/Computer Science and Engineering/Information Technology/ Information Communication Technology) or Any U.G. Degree followed by M.C.A. / MSc.,(Computer Science)/ MSc.,(IT)/ MSc., (Software Engineering) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 01.06.2023 அன்று 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 90 நிமிடங்கள்.

எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள் : 24.09.2023

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க http://www.tnega.tn.gov.in என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ. 250.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 11.09.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://tnega-edm.onlineregistrationform.org/TEGDOC/Advertisement_Notification.pdf என்ற இணையதள அறிவிப்பைப் பார்வையிடவும்.



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news