Agri Info

Adding Green to your Life

September 8, 2023

8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்: ஈரோடு மாவட்ட சமூக நலத்துறையில் வேலை!

September 08, 2023 0

 ஈரோடு மாவட்டத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படும் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் செப்டம்பர் 15ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

காலிப்பணியிடங்கள் விவரம்:

பதவி: தகவல் தொழில்நுட்ப பணியாளர் 

அங்கீகரிக்கபட்ட பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் அல்லது கணினிப் பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கணினி படிப்பில் முதுகலை பட்டம்  பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அனுபவம்:  குறைந்தது 3 ஆண்டுகள் அரசு, அரசு அல்லாத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட நிர்வாக அமைப்பில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான, பணி அனுபவம் உள்ளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் ஈரோடு மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

ஊதியம்: ரூ. 18,000/-

பதவி - வழக்குப் பணியாளர் (Case Worker); 

சமூகப் பணியில் இளங்கலை பட்டம் (Bachelor's Degree in Social Work) பெற்றிருக்க வேண்டும்.

உளவியல் ஆலோசகர்(Counselling Psychology) (அல்லது) மேலாண்மை வளர்ச்சியில் (Development Management) பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்கும் வகையில் அரசு மற்றும் அரசு சாராத திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் அமைக்கப்பட்ட ஒரு நிர்வாகத்தில் 1 வருட முன் அனுபவம் உடையவராகவும்,

உளவியல் ஆலோசனையில் ஒரு நிறுவனத்திலோ அல்லது வெளிப் பணிகளிலோ குறைந்த பட்சம் 1 வருட அனுவபம் உடையவராகவும் இருக்க வேண்டும்.

வயது 35க்குள் இருக்க வேண்டும். உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். மாத ஊதியம் ரூ.15,000/ஆகும்.

 பதவி:  பன்முக உதவியாளர் (Multi Purpose Helper)  

8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும். ஏதாவது அலுவலகத்தில் பணிபுரிந்த அனுபவம் உடையவராக இருக்க வேண்டும்.  உள்ளூரைச் சார்ந்த பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.6,400/- ஆகும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பங்கள் பூர்த்திசெய்யப்பட்ட தொடர்புடைய இணைப்புகள்/ஆவணங்களுடன் முறையாகச் சான்றொப்பமிடப்பட்டு செப்டம்பர்  15 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் . விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி,  மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், மாவட்ட ஆட்சியரகம், 6வது தளம், ஈரோடு - 638 011  ஆகும் . மேற்கண்ட தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் சுருக்கமாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்துடன் அசல் சான்றிதழ்களை அனுப்பக்கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்.. புதுக்கோட்டையில் அரசு வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

September 08, 2023 0

 புதுக்கோட்டை மாவட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தகுதியுள்ளோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா. மெர்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், புதுக்கோட்டை சுகாதார மாவட்ட துணை இயக்குனர் அலுவலகத்தில் தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் பணியிடத்துக்கு எம்.சி.ஏ., பிஇ, பிடெக் முடித்த 45 வயதுக்குட்பட்ட ஓராண்டு பணி அனுபவம் கொண்டோர் விண்ணப்பிக்கலாம். மாதம் ஊதியம் ரூ.16,500 வழங்கப்படும்.

ஆதனக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார கணக்கு உதவியாளர் பணியிடத்துக்கு பிகாம் மற்றும் டேலி முடித்த 35 வயதுக்குள்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ. 16 ஆயிரம் வழங்கப்படும்.

திருவரங்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடமாடும் மருத்துவ குழு ஓட்டுநர் பணியிடத்துக்கு 8ஆம் வகுப்பு முடித்த 45 வயதுகுட்பட்ட 2 ஆண்டுகள் பணி அனுபவம் கொண்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.13 ஆயிரத்து 500 வழங்கப்படும். இப்பணியிடங்களுக்கு புதுக்கோட்டை அல்லது அறந்தாங்கி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரியில் கதிர்பட பதிவாளர் பணியிடத்துக்கு பிஎஸ்ஸி ரேடியாலஜி முடித்த 45 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.13,500 வழங்கப்படும். அறுவை சிகிச்சை பிரிவு உதவியாளர் பணியிடத்துக்கு 45 வயதுக்குட்பட்ட தொடர்புடைய கல்வி பயின்றோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.11,200 வழங்கப்படும்.

சுகாதார பணியாளர், பல்நோக்கு பணியாளர் மற்றும் பாதுகாவலர் பணியிடங்களுக்கு 8ஆம் வகுப்பு முடித்த 45 வயதுக்குட்பட்டோர் விண்ணப்பிக்கலாம். மாத ஊதியம் ரூ.8,500 வழங்கப்படும்.

இந்த வேலைக்கான விண்ணப்பங்களை நீங்கள் pudukkottai.nic.in. என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை செப்டம்பர் 12ஆம் தேதிக்குள் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது தபால் வழியாகவோ சமர்பிக்கலாம். முற்றிலும் தற்காலிகமான பணியிடங்கள் என்பதால் எந்த வகையிலும் பணி நிரந்தரம் கோர முடியாது.

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மாரடைப்பு வர என்ன காரணம்? தப்பிக்கும் வழிகள் என்ன? நிபுணரின் விளக்கம்..!

September 08, 2023 0

 அண்மைக்காலமாக மாரடைப்பு மற்றும் இருதய நோய்கள் மிகவும் பொதுவானதாகவும், மக்களை அச்சுறுத்துவதாகவும் மாறிவிட்டது. வயதானவர்களுக்கு மட்டுமே மாரடைப்பு வரும் என நினைத்துக்கொண்டிருந்த காலம் மலையேறிவிட்டது. மிக இளம் வயதினர் கூட மாரைப்பால் இறந்து வருகின்றனர்.

உடலமைப்பில் கட்டுமஸ்தானவர்கள் மற்றும் விளையாட்டு உள்ளிட்ட பிற உடல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு இதய பாதிப்பு மற்றும் மாரடைப்பு ஏற்படாது என்று பலரும் கருதிக்கொண்டிருக்கிறோம். அந்த எண்ணம் தவறானது. விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் மாரடைப்பால் இறந்து வருவதை செய்திகளில் நீங்கள் அறிந்திருக்கலாம். ஆரோக்கியமானவர்களாக நீங்கள் நினைப்பவர்களுக்கு இதய நோய் பாதிப்பு இருப்பதைக்கூட பார்த்திருக்க வாய்ப்புகள் உண்டு. இதற்கு காரணம் என்ன? என்பது தான் மிகப்பெரிய கேள்வியாக பலருக்கும் இருக்கிறது.

இது குறித்து சர் கங்காராம் மருத்துவமனையின் இன்டர்நேஷ்னல் கார்டியாலஜிஸ்ட் மற்றும் எலக்ட்ரோபிசியாலஜிஸ்ட்டாக இருக்கும் மருத்துவர் டாக்டர் அமன் மகிஜா பேசும்போது, மாரடைப்பு (Heart Attack) மற்றும் திடீர் இதய பாதிப்பு (Cardiac Arrest) என்பது ஒன்றுக்கொன்று மாற்றாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் எனத் தெரிவித்துள்ளார். தமனிகளில் ஏற்படும் அடைப்பு காரணமாக ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுவதாக தெரிவித்துள்ள அவர், ஒரு நபருக்கு திடீர் மார்பு வலி, வியர்வை, படபடப்பு மற்றும் பதட்டம் ஆகியவை ஏற்படும் என விளக்கம் அளித்துள்ளார். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணிகள் இதற்குக் காரணமாக இருக்கிறது என்று டாக்டர் அமன் மகிஜா கூறியுள்ளார்.

இதய நோய்க்கான காரணங்கள்:

இருதய நோய்களுக்கான முதன்மை காரணம் ஆரோக்கியமற்ற, செயலற்ற, சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை. உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோய் ஆபத்து உள்ளவர்கள், எந்த செயல்பாடும் இல்லாத வாழ்க்கை முறையில் இருந்தால் அவர்களுக்கு திடீரென மாரடைப்பு ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புகையிலை, மது, சிகரெட் பழக்கம் உள்ளவர்களுக்கு இதயம் நோய்கள் வருவதற்கு முக்கிய காரணம்.

உயர் ரத்த அழுத்தம் மற்றும் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு ஆகியவையும் இதய நோய்கள் வருவதற்கான காரணங்கள் என கூறும் மருத்துவர்கள், பரம்பரையாக இதய நோய் வருவதற்கும் சாத்தியம் உள்ளதாக கூறுகின்றனர். ஒழுங்கற்ற இதயத்துடிப்பு, அர்ரித்மியா, கரோனரி இதயநோய் உள்ளிட்டவை பிற இதய நோய்களாகும்.

இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கும் வழிகள் :

பரம்பரை இருதய நோய் ஆபத்து இருப்பவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை மேற்கொண்டால் இதய நோய் பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.
ரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த வாரத்துக்கு மூன்று அல்லது 4 முறை மிதமான மற்றும் தீவிரமான உடற்பயிற்சிகளை செய்யலாம். குறைந்தபட்சம் 40 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்யுங்கள்.
குடிப்பழக்கம், புகைபிடித்தல், அதிக நேரம் வேலை செய்தல், சரியான நேரத்தில் தூங்காமல் இருப்பது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை பின்பற்றுபவராக இருந்தால் கூட மன அழுத்தம் ஏற்பட்டு இதய நோய் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
ஆரோக்கியமான உணவு முறையை பின்பற்ற வேண்டும். உப்பு மற்றும் சர்க்கரை பயன்பாட்டை சமச்சீராக பயன்படுத்திக் கொள்வது நல்லது.
குறிப்பிட்ட கால இடைவெளியில் இதயம் சார்ந்த முழு உடல் பரிசோதனைகளை செய்து கொள்ளுங்கள். இதன் மூலம் இதயம் உள்ளிட்ட பாதிப்புகளை முன்கூட்டியே கணித்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்.

இதய நோய் பாதிப்பு இருப்பவர்கள் மூச்சுத் திணறல் மற்றும் சோர்வு, தலைவலி, மார்பு வலி போன்ற அறிகுறிகள் வந்தால் அலட்சியமாக இருக்கக்கூடாது. இவை திடீர் மாரடைப்புக்கான அறிகுறியாகவும் இருக்கலாம். இதுகுறித்து மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்றுக்கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

சோடாவிற்கு பதிலாக கல்லீரல் பாதுகாக்கும் இந்த 5 பானங்களை குடிக்கலாமே..!

September 08, 2023 0

 

கோலா, கோக் , போன்ற கார்பனேட்டட் பானங்கள் சில சமயத்தில் தாகம், சக்கரைத் தேவை, செரிமானத்திற்கு குடிப்பதுண்டு. இது தற்காலிகமாக இந்த தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்யும். ஆனால் நீண்ட காலம் குடிக்கும்போது  இதய நோய், நீரிழிவு, எடை அதிகரிப்பு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும். கல்லீரல் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் அதிகம் ஏற்படுத்தும். ஆனால் அதற்கு பதிலாக கல்லீரல் ஆரோக்கியத்தை மேப்படுத்தக்  குடிக்கக்கூடிய பானங்களை சொல்கிறோம்.

திராட்சை சாறு: இனிப்பு, பிரெஷான திராட்சைகள் ஊட்டச்சத்துக்களின் களஞ்சியமாகும். குறிப்பாக ரெஸ்வெராட்ரோல் எனும் ஊட்டச்சத்து பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குவதாக அறியப்படுகிறது. பல ஆய்வுகளின்படி, இந்த ஊட்டச்சத்து உடலில் ஆக்ஸிஜனேற்ற அளவை அதிகரிக்கும். வீக்கத்தை குறைக்கும் மற்றும் இயற்கையாகவே கல்லீரலில் இருந்து நச்சுகளை சுத்தப்படுத்தும்.

கிரீன் டீ: க்ரீன் டீயில் கேடசின் எனப்படும் பாலிஃபீனால் உள்ளது. இது சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளுக்கு பெயர் பெற்றது. க்ரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கல்லீரல் நொதிகளின் அளவைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. புத்துணர்ச்சியையும் வழங்கும்.

காபி: கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்த காபி சிறந்த பானங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. உணவு உயிர்வேதியியல் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, இந்த பானத்தில் ஆக்ஸிஜனேற்ற குளுதாதயோன் உள்ளது, இது உடலில் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கும்.

பீட்ரூட் அதன் பரந்த அளவிலான ஊட்டச்சத்துக்கள் காரணமாக பெரும்பாலும் ஒரு சூப்பர்ஃபுட் என்று கருதப்படுகிறது. இது நைட்ரேட்டுகள் மற்றும் பீட்டாலைன்கள் எனப்படும் ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற சேதம் மற்றும் கல்லீரலின் வீக்கத்தைக் குறைக்க உதவும்

எலுமிச்சை சாறு : கல்லீரலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவும் பல சிட்ரஸ் பழங்களில் எலுமிச்சையும் ஒன்றாகும். அவற்றில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. அவை பல கல்லீரல் நோய்களைத் தடுக்க உதவும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

மாரடைப்பு வருவதை ஒரு மாதத்திற்கு முன்பே எச்சரிக்கும் அறிகுறிகள்.. இதை எப்படி கண்டறிவது..? மருத்துவ விளக்கம்..!

September 08, 2023 0

 கார்டியோவாஸ்குலர் நோய்கள் எனப்படும் CVDs உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணமாகும். ஆண்டுதோறும் சுமார் 17.9 மில்லியன் மக்கள் இதற்குப் பலியாகி வருவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இதில் ஐந்தில் நான்கு இறப்புகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக நிகழ்கின்றன. சைலன்ட் கில்லர் எனப்படும் மாரடைப்பு, முன்பெல்லாம் 50 வயதிற்கு மேற்பட்டவர்களை அதிகம் பாதித்த இந்த நோய் தற்போது வயது வித்தியாசமின்றி பலருக்கும் ஏற்படுகிறது. இதய தசையின் குறிப்பிட்ட பகுதிக்கு போதுமான ரத்தம் கிடைக்காத போது ஹார்ட் அட்டாக் ஏற்படுகிறது.

ஹார்ட் அட்டாக் எனப்படும் மாரடைப்பு திடீரென ஏற்பட்டு ஒருவரைத் தீவிரமான நிலைக்குத் தள்ளுகிறது என்று நம்மில் பெரும்பாலானோர் நம்புகிறோம். ஆனால் உண்மையில் ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சில மணி நேரங்கள் முன்போ, சில நாட்கள் அல்லது சில வாரங்கள் முன்போ சில எச்சரிக்கை அறிகுறிகள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியுமா.! எனவே ஹார்ட் அட்டாக் ஏற்படுவதைத் தவிர்க்க முன்பே வெளிப்படும். அதன் சில முக்கிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருப்பது மிக்பெரிய ஆபத்திலிருந்து ஒருவரைக் காப்பாற்றும். ஹார்ட் அட்டாக் நிகழ்வதற்கு முன் ஏற்பட்ட அறிகுறிகள் தொடர்பான ஆய்வு ஒன்று பாதிக்கப்பட்ட சுமார் 50 பெண்களிடையே நடத்தப்பட்டது.

பெண்களுக்கான மாரடைப்பு: பாலினங்களுக்கு இடையில் ஹார்ட் அட்டாக் பாகுபாடு காட்டாது என்றாலும் நிபுணர்களின் கூற்றுப்படி, பெண்களுக்கு ஏற்படும் மாரடைப்பு ஆண்களுக்கு ஏற்படுவதை விட சில வேறுபட்ட அறிகுறிகளை கொண்டிருக்க கூடும். ஹார்ட் அட்டாக்கிலிருந்து தப்பி பிழைத்த பெண்களைக் கொண்டு ஹார்வர்ட் ஹெல்த் சர்வே ஒன்றை மேற்கொண்டது. ஆய்வை தொடர்ந்து வெளியிடப்பட்ட அறிக்கை மாரடைப்பு திடீரென்று நிகழும் என்ற கட்டுக்கதையைப் பொய்யாக்குகிறது.


புறக்கணிக்கக் கூடாத பொதுவான அறிகுறிகள்: சர்வேயில் பங்கேற்ற சுமார் 95% பெண்கள் தங்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கு சுமார் 1 மாதத்திற்கு முன்பே சில சகஜமற்ற உணர்வுகளை அனுபவித்ததாகக் கூறி இருக்கிறார்கள். இதன்படி ஹார்ட் அட்டாக் ஏற்படும் என்பது உணர்த்திய 2 பொதுவான அறிகுறிகளாக இதுவரை அனுபவிக்காத அளவு சோர்வு மற்றும் தூக்கமின்மை இருந்திருக்கிறது. இவை தவிர மூச்சுத் திணறல், பலவீனம், அதிக வியர்வை, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஆகியவை ஹார்ட் அட்டாக்கின்போது ஏற்படும் சில முக்கிய அறிகுறிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆய்வின் மூலம் தெரிய வருவது என்ன : இதுவரை இல்லாத அதீத சோர்வு, தூக்கம் என்பது பிரச்சனை இல்லாமல் இருந்து திடீரென தூங்குவதில் சிக்கல் மற்றும் தொந்தரவு ஏற்படுவது அல்லது மூச்சுத் திணறல் போன்றவை ஏற்பட்டால் அது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம். இதுபோன்ற அறிகுறிகளை அனுபவிக்கத் துவங்கிய உடனே நிபுணர்களைக் கலந்தாலோசிப்பது மற்றும் உரியப் பரிசோதனைகளை மேற்கொள்வது ஹார்ட் அட்டாக்கில் இருந்து தப்பிக்கப் பெண்களுக்கு உதவும்.

ஹார்ட் அட்டாக் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்: ஒருவருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தவுடன் உடனடியாக ஆம்புலன்ஸுக்கு கால் செய்து விட்டு, அது வரும் வரையிலான நேரத்திற்குள் ஆஸ்பிரின் மாத்திரையைப் பாதிக்கப்பட்டவருக்குக் கொடுக்கலாம். ஆஸ்பிரின் எதற்கு என்றால் இதயத்திற்கான ரத்த ஓட்டத்தை மேம்படுத்த உதவுகிறது. மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற பிறகு ஹார்ட் அட்டாக்கின் தீவிரத்தைப் பொறுத்து இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் ஏற்பட்டிருக்கும் அடைப்பின் அளவை பொறுத்து அதனைக் கரைக்க மருந்துகளை பயன்படுவதுவோ அல்லது அறுவை சிகிச்சை செய்யவோ நிபுணர்கள் முடிவெடுப்பார்கள்.

ஆரோக்கியமான மற்றும் சீரான டயட், தினமும் தவறாமல் நடைப்பயிற்சி செல்வது அல்லது ஒர்கவுட்செய்வது, உடல் ரீதியாகச் சுறுசுறுப்பாக இருப்பது, எடையைக் கட்டுக்குள் வைத்திருப்பது, சரியான நேரத்தில் தூங்கிச் சரியான நேரத்தில் எழுவது, புகை & மது போன்ற ஆரோக்கியமற்ற பழக்கங்களைத் தவிர்ப்பது ஹார்ட் அட்டாக் ஏற்படுவதற்கான அபாயங்களைக் குறைக்கும்.



Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

September 7, 2023

தினமும் காலை எழுந்ததும் இந்த 5 விஷயங்களை செஞ்சா உடல் எடையை சீக்கிரமே குறைச்சிடலாம்..!

September 07, 2023 0

 இன்றைய நவீன யுகத்தில் எடை குறைப்பு என்பது மிகப்பெரும் சவாலாகி வருகிறது எடையை குறைக்க விரும்பும் ஒவ்வொருவரும் என்னென்னவோ வழிமுறைகளை பின்பற்றுகின்றனர் ஆனால் அனைத்தும் கை கொடுக்கின்றதா என்று கேட்டால் இல்லை என்பதே பதிலாக இருக்கும். 

எந்தளவிற்கு உணவு பழக்கங்களை கட்டுப்படுத்தினாலும், குறிப்பிட்ட வகை உடற்பயிற்சிகளையும் மேற்கொண்டாலும் சிலரால் எடையை குறைக்கவே முடிவதில்லை. அதற்கு முக்கிய காரணம் நமது வாழ்க்கை முறையில் மாற்றத்தை கொண்டு வராதது தான். காலையில் எழுந்ததும் இந்த ஐந்து விஷயங்களை மட்டும் தொடர்ந்து செய்து வந்தால் போதும் உங்களது எடையை மிக எளிதாக குறைக்கலாம்.

காலையில் சுடு தண்ணீர் குடிக்க வேண்டும் : காலையில் எழுந்ததும் ஒரு டம்ளர் சுடு தண்ணீர் குடிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவுவதுடன் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது. நம்முடைய கலாச்சாரங்களில் இந்த சுடு தண்ணீர் குடிப்பது என்பது ஒரு எழுதப்படாத விதியாகவே இருந்து வந்துள்ளது.

யோகாசனம் பழகுதல் : காலையில் யோகாசனம் செய்வது உடல் எடையை குறைப்பதற்கு உதவும். உதாரணத்திற்கு சூரிய நமஸ்காரத்தை சரியான நேரத்தில் செய்யும்போது கிட்டத்தட்ட 13.91 கலோரிகளை குறைக்க உதவுகிறது. இதை தினமும் அரை மணி நேரம் தொடர்ந்து செய்து வர 278-280 கலோரிகளை எரிக்க உதவுகிறது இது ஒரு மணி நேரம் கார்டியோ பயிற்சி செய்வதை விட சிறந்த முடிவுகளை தருகிறது என்று ஊட்டச்சத்து நிபுணரும், பாலக் நோட்ஸ் இன் நிறுவனருமான பாலக் மிதா தெரிவித்துள்ளார்.

புரதங்கள் நிறைந்த காலை உணவு : காலை உணவு எடுத்து கொள்ளும்போது புரதங்கள் அதிக அளவு சேர்த்து கொள்வது நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடும், சக்தியுடனும் இருக்க உதவும். புரதங்கள் நிறைந்த காலை உணவிற்கு முட்டைகள், முளைகட்டிய பயறு வகைகள் ஆகியவற்றை தேர்ந்தெடுத்துக் உண்ணலாம்.


சரியான தூக்கம் : இரவில் சீக்கிரமாக உறங்க சென்று விட வேண்டும். அவ்வாறு செய்வதினால் வழக்கத்தை விட அதிக நேரம் தூங்க முடிவதுடன் உடலின் வளர்ச்சிதை மாற்றத்திற்கும், உடல் தன்னை ரீசார்ஜ் செய்து கொள்ளவும் மிகவும் உதவுகிறது. அது மட்டும் இல்லாமல் குறைவான நேரம் தூங்கினால், தூங்காத நேரத்தில் உடலை புத்துணர்ச்சியோடு வைக்க நாம் அதிக உணவுகளை எடுத்துக் கொள்கிறோம். இது உடலில் அதிக அளவுகள் கலோரிகள் சேர்ந்து எடை குறைப்பதற்கு தடையாக உள்ளது. எனவே குறைந்தபட்சம் எட்டு மணி நேர தூக்கமாவது அவசியம்.

சூரிய ஒளியில் சிறிது நேரம் செலவழியுங்கள் : ஒரு நாளைக்கு சிறிது நேரம் ஆவது சூரிய ஒளி நம் மீது படுமாறு செய்ய வேண்டும். அது எப்படி சூரிய ஒளியினால் எடை குறையும் என்ற கேள்வி வரலாம். சூரிய ஒளி நம்முடைய சருமத்தின் மீது நேரடியாக விழும்போது அது தோலுக்கு அடியில் உள்ள கொழுப்புகளை சிதைத்து எடை குறைப்பிற்கு உதவுகிறது. மேலே கூறிய விஷயங்களை தொடர்ந்து கடைபிடித்து வர உடல் எடையை மிக எளிதாக குறைக்கலாம்.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

ஃபேட்டி லிவர் நோயின் ஆரம்பகால அறிகுறிகள் எப்படி இருக்கும்..? நிர்வகிக்கும் வழிகள் இதோ..!

September 07, 2023 0

 

கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவதால் ஏற்படக்கூடிய நோய் ஃபேட்டி லிவர் திசீஸ் (fatty liver disease) எனப்படும் கொழுப்பு கல்லீரல் நோயாகும். இந்த நோய் ஆரம்ப கட்டத்தில் இருக்கும் பொழுது, நமது ஆரோக்கியத்திற்கு எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதே நேரத்தில் எளிதாக குணப்படுத்தக்கூடிய ஒன்றாகவும் இருக்கும்.

எனினும், நோய் தீவிரமடைய தொடங்கும் பொழுது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு ஆரோக்கியமான திசுக்கள் சேதமடைந்த திசுக்களால் மாற்றப்பட்டு கல்லீரலின் செயல்பாட்டில் பின்னடைவு ஏற்படும். இதனால் கல்லீரல் மோசமான சேதத்திற்கு உள்ளாகி லிவர் செர்ஹோசிஸ் (liver cirrhosis) ஏற்பட வழிவகைக்கிறது. இந்த நிலை நீடிக்கும் பொழுது கல்லீரல் செயலிழப்பு அல்லது கல்லீரல் புற்றுநோய் உண்டாகலாம்.

ஃபேட்டி லிவர் என்பது அதிகப்படியான மதுபானங்கள் அருந்துவதால் ஏற்படக்கூடியதாகவோ அல்லது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உடற்பருமன், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட பிரச்சினைகளால் உண்டாகும் மது அல்லாத ஃபேட்டி லிவர் நோயாகவும் இருக்கலாம்.

உடற்பருமான நபர்கள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் அல்லது உயர் ரத்த அழுத்தம் கொண்ட நபர்களில் கல்லீரல் செல்களில் அதிகப்படியான கொழுப்பு படியும்போது அது வளர்சிதை மாற்றத்துடன் தொடர்புடைய MAFLD அல்லது ஹெப்பாடிக் ஸ்டியாடோசிஸ் -ஐ ஏற்படுத்தலாம். ஃபேட்டி லிவர் நோய் லிவர் செர்ஹோசிஸாக மாறிவிட்டால் அதனை குணப்படுத்தவே முடியாது. எனவே இதற்கான அறிகுறிகளை ஒருவர் கட்டாயமாக தெரிந்து வைத்துக் கொள்வது அவசியம். அவை என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்:

  • அடிவயிறு (Ascites) : கல்லீரல் நோய் தீவிரம் அடைவதை நமக்கு உணர்த்தக்கூடிய முக்கியமான அறிகுறிகளில் அடிவயிற்றில் ஏற்படும் வீக்கம் அடங்கும். அடி வயிற்றுப் பகுதியில் உள்ள அப்டாமினல் கேவிட்டியில் ஒருவித திரவம் சேகரிக்கப்படும். ஃபேட்டி லிவர் நோய் தீவிரமடைந்த கட்டத்தை எட்டும் பொழுது, கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு அங்குள்ள ரத்த நாளங்களில் அழுத்தம் அதிகரிக்கும். இதனால் அந்த திரவம் வெளியேற்றப்பட்டு, அடி வயிற்றில் வீக்கம் மற்றும் அசௌகரியம் ஏற்படும்.
  • கால்கள் மற்றும் கணுக்கால் பகுதி (Edema) : கல்லீரலுக்கு குடல் மற்றும் பிற பகுதிகளில் இருந்து ரத்தத்தை கொண்டு வரும் போர்டல் நரம்பில் அழுத்தம் அதிகரிக்கும் பொழுது அங்குள்ள திரவமானது திசுக்களை சூழ்ந்து கால்கள் மற்றும் கணுக்கால் பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும். இது எடிமா என்று அழைக்கப்படுகிறது.
  • பாதங்கள் : கொழுப்பு கல்லீரல் நோய் தீவிரமடைந்து விட்டால் கால்கள் மற்றும் கணக்கால் பகுதியில் ஏற்படும் வீக்கத்தை தவிர பாதங்களிலும் வீக்கம் ஏற்படலாம்.
  • கைகள் : போர்டல் நரம்பில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் பொழுது கைகள் உப்பி, வீக்கத்துடன் காணப்படும்.
  • நெஞ்சு பகுதி மற்றும் மார்பகங்கள் : ஆண்களில் ஃபேட்டி லிவர் நோய் மோசமடையும் போது, மார்பக திசுக்கள் பெரிதாகக் கூடிய கைனகோமாஸ்டியா (gynecomastia) ஏற்படலாம். இது ஹார்மோன் சமநிலையின்மையால் உண்டாகிறது. இதனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபாடு இழத்தல் மற்றும் மலட்டுத்தன்மை போன்றவை ஏற்படலாம்.
  • எனது உடல் உறுப்புகளில் ஏற்படக்கூடிய வீக்கம் ஃபேட்டி லிவர் நோயின் காரணமாக தான் ஏற்படுகிறது என்பதை நான் எவ்வாறு அறிந்து கொள்வது?

    மேலே கூறப்பட்ட உடல் உறுப்புகளில் ஏற்படும் வீக்கம் கல்லீரலில் உள்ள நோயின் காரணமாக ஏற்படலாம். இது தவிர இதயம் அல்லது சிறுநீரகத்தில் ஏற்படும் பிரச்சனைகள் காரணமாகவும் இதே போன்ற அறிகுறிகள் உண்டாகலாம். எனவே காரணமில்லாமல் திடீரென்று ஏற்படும் வீக்கம் குறித்து மருத்துவரை உடனடியாக அணுகுவது அவசியம். உங்களுக்கு வீக்கம் ஏற்படுவதற்கான காரணம் என்ன என்பதை ரத்த பரிசோதனை, இமேஜிங் மற்றும் உங்களின் மருத்துவ வரலாறு ஆகியவற்றின் அடிப்படையில் கண்டறிந்து அதற்கான சிகிச்சையை மருத்துவர் உங்களுக்கு அளிப்பார்.

  • ஃபேட்டி லிவர் நோயை எவ்வாறு நிர்வகிப்பது?

    ஆரம்பகால நோய் கண்டறிதல் மற்றும் அதன் பிறகான முறையான சிகிச்சை ஃபேட்டி லிவர் நோய் தீவிரமடைவதை தவிர்க்க உதவும். ஆரோக்கியமான உணவு, அன்றாட உடற்பயிற்சி மற்றும் மது அருந்துவதை தவிர்த்தல் போன்ற வாழ்க்கை முறை மாற்றங்களை மருத்துவர் உங்களுக்கு பரிந்துரைக்கலாம். ஃபேட்டி லிவர் நோய் தீவிரமடைந்து விட்டால் அதனை குணப்படுத்த முடியாது என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள் எனினும், இதனை நினைத்து பதட்டப்படாமல் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் நடந்து கொள்வது நோயை திறம்பட எதிர்த்து போராடுவதற்கு உதவும்.

  • Click here for more Health Tip

     Click here to join whatsapp group for daily health tip


புரண்டு புரண்டு படுப்பதிலேயே இரவு கழிகிறதா..? நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும் டிப்ஸ்..!

September 07, 2023 0

 அதிக வேலை நேரம், ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை அல்லது மனஅழுத்தம் உள்ளிட்ட பல காரணங்களால் நம்மில் பெரும்பாலோர் ஏதோ ஒரு கட்டத்தில் இரவு நிம்மதியாக தூங்க முடியாமல் தவித்திருப்போம். இரவு முழுவதும் புரண்டு புரண்டு படுத்து தூங்க முடியாமல் தவிப்பது அடுத்த நாளை உற்சாகமாக எதிர்கொள்ள பெரும் தடையாக இருக்கும்.

இரவு நன்கு தூங்காமல் விடுவதால் அடுத்த நாள் முழுவதும் உடல் சோர்வு, எரிச்சல் உணர்வு, தூக்க கலக்கம் உள்ளிட்ட பல பிரச்னைகளை எதிர்கொள்ள நேரிடுகிறது. ஆனால் நீண்ட மாதங்கள் இது போல இரவு தூங்க முடியாமல் அவதிப்பட்டால் அது இதய நோய், பக்கவாதம், நீரிழிவு நோய், உடல் பருமன் மற்றும் அல்சைமர் உள்ளிட்ட பல நோய்கள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

சுருக்கமாக சொன்னால் நல்ல இரவு தூக்கம் என்பதை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்றாகும். இரவு 7 - 8 மணி நேரம் இடையூறு இன்றி தூங்குவது அடுத்த நாளை உற்சாகமாக, புத்துணர்ச்சியுடன் எதிர்கொள்ள உதவும். நல்ல உடல் மற்றும் மனஆரோக்கியம், சுறுசுறுப்பு, சிறந்த உற்பத்தி திறனுக்கு முக்கியமான இரவு தூக்கத்தை எப்படி பெறுவது? இரவு தூங்க முடியாமல் அவஸ்தைப்படுபவரில் நீங்களும் ஒருவர் என்றால் உங்களுக்கான டிப்ஸ்களுக்கு தொடர்ந்து படியுங்கள்...

நல்ல தூக்கத்திற்கு உதவும் ப்ராப்பர் ரொட்டீன்: குழந்தைகள் மற்றும் சிறுவர்களை தூங்க வைக்க தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு பெற்றோர்கள் பழக்கப்படுத்தி வைத்திருப்பார்கள். அந்த நேரம் வந்ததும் தானாகவே குழந்தைகள் தூங்க செல்வதை அல்லது அவர்களது கண்களை தூக்கம் தழுவுவதை நாம் பார்த்திருப்போம். பெரியவர்களாகிய நமக்கும் இது பொருந்தும். நாமும் தினசரி இரவு குறிப்பிட்ட நேரத்திற்கு படுக்கைக்கு செல்வதை வழக்கமாக்கி கொள்வது நல்ல இரவு தூக்கத்திற்கு உதவும். என்ன வேலையாக இருந்தாலும் குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்க வேண்டும் என்பதை வழக்கமாக்கி கொண்டு அதனை சில நாட்களுக்கு பின்பற்றி பாருங்கள், நல்ல பலன் கிடைக்கும்.

நேர்மறை எண்ணங்கள்: ஒருநாள் முழுவதும் உங்கள் மனது பல எதிர்மறை விஷயங்களை யோசித்திருக்கலாம், ஆனால் படுக்கைக்கு செல்லும் முன்பும் இதனை கடைபிடிப்பது நிச்சயம் தூங்க விடாமல் இடையூறு ஏற்படுத்தும். எனவே அன்றைய நாளில் நடைபெற்ற மகிழ்ச்சியான தருணங்களை மட்டுமே நினைவில் வைத்து நேர்மறை எண்ணங்களோடு தூங்க செல்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அமைதியான இரவு தூக்கத்திற்கு உங்களது நேர்மறை எண்ணங்கள் காரணமாக மனதில் எழும் மகிழ்ச்சி கணிசமாக உதவும்.

ஆல்கஹால் & ஜங்க் ஃபுட்ஸ்களுக்கு நோ... இரவு தூங்க செல்வதற்கு முன்பு காரமான உணவு, ஜங்க் ஃபுட்ஸ், அதிகமாக சாப்பிடுவது மற்றும் மது குடிப்பது உள்ளிட்ட பழக்கங்கள் இருந்தால் முதலில் அதனை கட் செயுங்கள். அதே போல மாலை நேரத்தில் காஃபின் எடுப்பது கூட இரவு நிம்மதியாக தூங்குவதற்கு தடையாக இருக்கும் என்கிறார்கள் நிபுணர்கள். அதே போல இரவு நேரத்தில் சர்க்கரை அடங்கிய உணவுகள் மற்றும் பானங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை உருவாக்கும் energy surge மற்றும் subsequent collapse உங்கள் பயோலாஜிக்கல் கிளாக்-ஐ குழப்ப கூடும்.

மொபைல், டிவி, லேப்டாப்பிற்கும் நோ... தூங்க செல்வதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டிவி, கம்ப்யூட்டர், லேப்டாப் உள்ளிட்டவைற்ற பயன்படுத்துவது மற்றும் பார்ப்பதை தவிர்த்து விடுங்கள். குறிப்பாக கேஜெட்ஸ்கள் வெளியிடும் நீல ஒளி தூக்க ஹார்மோனான மெலடோனின் உற்பத்தியை தடுக்கிறது. எனவே இது போன்ற டிவைஸ்களை உங்கள் பெட்ரூமிற்கு வெளியே வைத்து விட்டு தூங்க செல்லுங்கள்.

வாசிப்பு பழக்கம்: படுக்கையில் படுத்து கொண்டு சிறிது நேரம் நல்ல புத்தகங்களை படிப்பது நேர்மறை எண்ணத்தை மனதில் விதைப்பதோடு, அமைதியான தூக்கத்திற்கும் வழிவகுக்கும். படுக்கையில் படுத்து கொண்டு மொபைலை பயன்படுத்துவதை விட புத்தகம் வாசிக்கும் பழக்கம் இரவு தூக்கத்திற்கு மிகவும் நல்லது. தூங்குவதற்கு முன் படுக்கையில் அமர்ந்தபடியோ அல்லது படுத்தபடியோ படிப்பது ஒட்டுமொத்த தூக்க தரத்தை மேம்படுத்துகிறது.

Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

வெறும் வயிற்றில் இதெல்லாம் சாப்பிட்டா அவ்வளவு தான்..முக்கியமாக நீரிழிவு நோயாளிகள் உஷார்..!

September 07, 2023 0

 ஒரு நாளைக்கு மூன்று வேளை அல்லது நான்கு வேளை என எத்தனை வேளை உணவு சாப்பிட்டாலும் காலை வேளையில் நாம் சாப்பிடக்கூடிய உணவுக்கு சிறப்பு முக்கியத்துவம் வழங்குவது அவசியம். நாம் இரவு உணவு சாப்பிட்ட பிறகு படுக்க சென்றவுடன், நமது உடலில் பல்வேறு விதமான சீரமைப்பு செயல்பாடுகள் நடைபெறும். காலை நாம் எழும்போது கிட்டத்தட்ட 7 முதல் 8 மணி நேரத்திற்கு நமது வயிறு காலியாக இருக்கும். காலியான இந்த வயிற்றுக்கு நம் கொடுக்கக் கூடிய உணவுகள் நேரடியாக நமது உடலால் உறிஞ்சப்படும். 

எனவே காலையில் ஆரோக்கியமான உணவை தேர்வு செய்வதில் அதிக அக்கறை காட்டுவது அவசியம். அந்த வகையில் நாம் காலையில் என்னென்ன மாதிரியான உணவுகளை சாப்பிட வேண்டும், எவற்றை தவிர்க்க வேண்டும் என்பது எப்பொழுதும் பலர் மனதில் இருந்து கொண்டே இருக்கும் ஒரு கேள்வி. இது குறித்த சில தகவல்களை இப்பொழுது பார்க்கலாம்.


எலுமிச்சை தண்ணீரில் தேன்: காலை நேரத்தில் தண்ணீருடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பருகுவதை தற்போது பலர் ஒரு பழக்கமாக கொண்டிருக்கின்றனர். இது கொழுப்பை எரிக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. எனினும், இவ்வாறு செய்வது முற்றிலும் தவறு. தேனில் சர்க்கரையை காட்டிலும் அதிக கலோரிகள் உள்ளது. மேலும் தேன் அதிக கிளைசிமிக் எண் கொண்டது. சுத்தமான தேனை கண்டுபிடிப்பது மிகவும் கடினம். பலர் சர்க்கரை தண்ணீரை தேன் என்ற பெயரில் சாப்பிட்டு வருகின்றனர். இது நமது ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரித்து நாள் முழுவதும் அதிகப்படியான உணவு சாப்பிட வழிவகுக்கும்.

சுத்தமான மற்றும் எந்த ஒரு பிரிசர்வேட்டிவ்களும் சேர்க்கப்படாத தேன் மிகவும் ஆரோக்கியமான இயற்கை இனிப்பானாக கருதப்படுகிறது. இது ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டின் மூலமாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் ஊட்டச்சத்து களஞ்சியமாகவும் கருதப்படுகிறது. எனினும் இதனை வெறும் வயிற்றில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.

டீ மற்றும் காபி: வெறும் வயிற்றில் டீ மற்றும் காபி குடிப்பது நமது வயிற்றில் இருக்கக்கூடிய அமிலங்களை தூண்டும். இதனால் செரிமான பிரச்சனைகள் உண்டாகலாம். டீ, காபி மற்றும் காஃபைன் நிறைந்த பானங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது பரிந்துரைக்கப்படவில்லை. பொதுவாக காலையில் நாம் எழுந்திருக்கும் பொழுதே மன அழுத்த ஹார்மோனான கார்ட்டிசால் அளவு அதிகமாக இருக்கும். இந்த சமயத்தில் நாம் காஃபைன் கலந்த பானங்களை பருகினால் மன அழுத்தம் இன்னும் அதிகமாகும். காலை எழுந்ததும் ஆரோக்கியமான உணவு சாப்பிட்டு விட்டு, 1 மணி நேரம் அல்லது 2 மணி நேரம் கழித்து காபி, டீ குடிக்கலாம்.

பழங்கள்: பிற உணவுகளை காட்டிலும் பழங்கள் விரைவாக செரிமானம் அடைந்து விடும் . இதனால் சாப்பிட்ட ஒரு மணி நேரத்திற்கு உள்ளாகவே நமக்கு மீண்டும் பசி எடுக்க ஆரம்பிக்கும். அது மட்டும் அல்லாமல் சிட்ரஸ் பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிடுவது அசிடிட்டி பிரச்சனையை உண்டாக்கலாம். எனவே சிட்ரஸ் நிறைந்த எலுமிச்சை, ஆரஞ்சு பழங்களை வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டாம்.

இனிப்பான காலை உணவு: இனிப்பு கலந்த காலை உணவை சாப்பிடுவது நமது ரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கலாம். இனிப்பான காலை உணவை சாப்பிட்டால் விரைவாக பசி எடுக்க தொடங்கி விடும். இதனால் உங்கள் ஆற்றல் அளவு குறையலாம். எனவே காலை நேரத்தில் புரோட்டீன் மற்றும் நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடுவது நல்லது.

நட்ஸ், அவகாடோ, நெய், விதைகள் போன்ற நல்ல கொழுப்பு அடங்கிய உணவுகளுடன் நாளை தொடங்குவது சிறப்பானதாக இருக்கும். இதனைத் தொடர்ந்து புரோட்டின் நிறைந்த காலை உணவை சாப்பிட வேண்டும். இது உங்கள் ரத்த சர்க்கரை அளவுகளை சீராக பராமரிப்பது மட்டுமல்லாமல் நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்த உதவும்.

நீரிழிவு நோய் இல்லாதவர்கள், ஆரோக்கியமான வளர்ச்சிதை மாற்றம் கொண்டவர்கள் மற்றும் இன்சுலின் எதிர்ப்பு பிரச்சனை இல்லாதவர்கள் கட்டாயமாக தங்களது காலை உணவில் தேன் மற்றும் பழங்கள் போன்ற ஆரோக்கியமான கார்போஹைட்ரேட்டுகளை சாப்பிடலாம். உங்கள் உடலின் தேவை என்ன என்பதை உணர்ந்து அதற்கு ஏற்றவாறு உணவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். அதே நேரத்தில் அதிகப்படியான சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் உணவுகளை காலை நேரத்தில் சாப்பிடுவது நல்லதல்ல என்பதையும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip


HDB Financial Services வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 – ஆண்டு வருமானம் ரூ.7,00,000/-

September 07, 2023 0

 

HDB Financial Services வங்கியில் Manager வேலைவாய்ப்பு 2023 – ஆண்டு வருமானம் ரூ.7,00,000/-

HDB Financial Services ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Deputy Manager பணிக்கென 01 காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

HDB Financial Services காலிப்பணியிடங்கள்:

HDB Financial Services நிறுவனம் வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Deputy Manager பணிக்கென 01 காலிப் பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

HDB Financial Services கல்வித் தகுதி:

பணிபுரிய விரும்பும் நபர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Graduate, Post graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

HDBF ஊதிய விவரம் :

பதிவு செய்யும் விண்ணப்பதாரர்களுக்கு ஆண்டு வருமானமாக ரூ. 7,00,000/- முதல் ரூ.8,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

HDB Financial Service தேர்வு செய்யப்படும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Interview / Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HDB Financial Service விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SBI CARD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

September 07, 2023 0

 

SBI CARD நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2023- ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் வாங்க!

SBI CARD நிறுவனம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்து முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. இவ்வாய்ப்பை பயன்படுத்தி விரைவாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

SBI CARD காலிப்பணியிடம் :

SBI CARD நிறுவனத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Senior Manager பணிக்கென பல்வேறு காலிப்பணியிடம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI CARD கல்வி தகுதி:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பாடப்பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI CARD ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும் .

SBI CARD தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான நபர்கள் Interview மற்றும் Written Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI CARD விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட இணையத்தள இணைப்பின் மூலம் தங்கள் விண்ணப்பத்தை online ல் பதிவு செய்து கொள்ளலாம். இறுதி நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification & Apply Online Link


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CMC பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

September 07, 2023 0

 

CMC பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023 – ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!

Christian Medical College ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Demonstrator, Junior Psychologist பணிகளுக்கென 02 காலிப் பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் விரைவாக விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Christian Medical College காலிப்பணியிடங்கள் :

Christian Medical College தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியான அறிவிப்பில் Demonstrator, Junior Psychologist பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Christian Medical College கல்வித்தகுதி :

இப்பணிக்கு விண்ணப்பிக்க அரசால் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் M.Sc, MA பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Christian Medical College ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு நிறுவன விதிமுறைப்படி மாதம் சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Christian Medical College தேர்வு செய்யப்படும் முறை:

பதிவு செய்யும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Christian Medical College விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification & Apply Online Link 


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TCIL டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.260,000/-

September 07, 2023 0

 

TCIL டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.260,000/-

தொலைத்தொடர்பு ஆலோசகர்கள் இந்தியா லிமிடெட் (TCIL) ஆனது General Manager (E7)/Joint General Manager (E6)/Deputy General Manager (E5) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த மத்திய அரசு பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 27.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TCIL காலிப்பணியிடங்கள்:

டெலிகம்யூனிகேஷன் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் இருந்து General Manager (E7)/Joint General Manager (E6)/Deputy General Manager (E5) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து பணிக்கு சம்மந்தப்பட்ட துறையில் இருந்து B.E./B.TECH தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

டெலிகம்யூனிகேஷன் வயது வரம்பு:

06.09.2023 தேதியின்படி அதிகபட்சம் 50 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:
  • General Manager – ரூ.1,00000-260,000/-
  • Joint General Manager – ரூ. 90,000-240,000/-
  • Deputy General Manager – ரூ.80,000-220,000/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்பங்களை ஆஃப்லைன் முறையில் மட்டுமே 27.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  Download Notification 2023 Pdf