கடந்த 20 ஆண்டுகளாக தனிநபர் வருமானம் அதிகரித்துள்ளது. அதுமட்டும் இல்லாமல் அர்பனைசேஷன் என்று கூறப்படும் நகரமயமாக்கலும் பெருகி வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் ஒரு சில பிரச்சனைகளும் அதே அளவுக்கு அதிகரித்துள்ளது. இதில் முக்கியமானது, குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் பருமன்!
உடல் பருமன் உலகமெங்கிலும் மிகப்பெரிய அச்சுறுத்தலையும் பல நோய்களுக்கு அடிப்படை காரணமாகவும் மாறி இருக்கும் நிலையில், இந்தியாவில் குழந்தைப் பருவ உடல் பருமன் நாடு முழுவதும் பரவியுள்ளது. கிட்டத்தட்ட 1.5 கோடி குழந்தைகள் ஒபீசிட்டியால் பாதிக்கப்பட்டுள்ளனர். சீனாவிற்கு அடுத்து உடல் பருமன் அதிகம் இருக்கும் குழந்தைகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் இருக்கிறது என்பது கவலைக்குரியதாக இருக்கிறது.
இந்திய மக்கள்தொகையில் 15% அதிக உடல் பருமன் உள்ள குழந்தைகள் என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதிக வருமானம் இருக்கும் குடும்பங்களில், குழந்தைகளை பாதிக்கக் கூடிய உடல் பருமன் 60% வரை அதிகரிக்கலாம் என்ற நிலையில் இருக்கிறது என்றும் கூறப்படுகிறது. குழந்தைப்பருவ உடல்பருமனுக்கு என்ன காரணங்கள், இதை தவிர்ப்பதற்கு என்ன செய்யலாம் என்பது பற்றி பெங்களூருவில் உள்ள காவேரி மருத்துவமனையில் சீனியர் நியோநாடாலஜிஸ்ட் ஆலோசகரான மருத்துவர் ஸ்ரீநாத் மனிகாண்டி பகிர்ந்தவை இங்கே.
குழந்தைகள் ஏன் உடல் பருமனால் அவதிப்படுகிறார்கள்?
உடல் பருமன் அல்லது அதிக எடை என்றாலே, நாம் சாப்பிட கூடிய உணவின் அளவுக்கும், செலவிடக்கூடிய கலோரிகளின் அளவுக்கும் இடையே ஏற்படக்கூடிய இம்பேலன்ஸ் அதாவது வேறுபாடுதான் காரணம். அதிகமாக சாப்பிட்டு, குறைவாக உடல் உழைப்பு அல்லது உடல் உழைப்பு இல்லாமல் போனால், கலோரிகள் அப்படியே இருப்பது உடல் எடையை அதிகரிக்கும், உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
குழந்தை பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் பருமனுக்கும் இதுதான் முக்கியமான காரணமாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். இந்தியர்களின் மரபான முறைப்படியே கொஞ்சம் பூசிய உடல் வாகு உள்ளது, எனவே இதனால் உடல் பருமன் ஏற்படக்கூடிய சாத்தியத்தையும் கொண்டிருக்கிறார்கள். இருப்பினும், சுற்றியிருக்கும் பல வித காரணங்கள் மற்றும் இடையூறுகளால் குழந்தைப் பருவத்தில் ஏற்படக்கூடிய உடல் பருமன் அதிகரித்திருக்கிறது.
பொருளாதார ரீதியான வளர்ச்சி மற்றும் முன்னேற்றம், பாரம்பரிய உணவு முறைகளில் இருந்து நவீன உணவுகளுக்கு நவீன உணவுகளை விரும்புமாறு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நவீன உணவுகளில் அதிக கொழுப்பு, உப்பு, சர்க்கரை ஆகியவை நிரம்பி இருக்கின்றன.
அதுமட்டுமில்லாமல் தொழில்நுட்ப வளர்ச்சியின் ஒரு அங்கமாக ஸ்மார்ட் ஃபோனில் உணவு டெலிவரி, உள்ளங்கையில் உலகம் என்பதெல்லாம் ஒரு பக்கம் சாதகமாக இருந்தாலும் மற்றொரு பக்கம் பெற்றோர்கள் மற்றும் குழந்தைகளுக்கு விதவிதமான உணவுகளை வீட்டிலேயே பெறக்கூடிய வசதியையும் வழங்கி இருக்கின்றன. எனவே ஆரோக்கியமான உணவுகளை எவ்வளவு சாப்பிடுகிறீர்கள் என்பது கேள்விக்குறியாகி இருக்கின்றது! அதிகமான கொழுப்பு, கலோரிகள் இருக்கும் உணவுகள் சுவையாகத்தான் இருக்கும், இதை சில நொடிகளில் ஆர்டர் செய்து, சில நிமிடங்களில் டெலிவரி பெற்று சாப்பிடும் பழக்கம் இந்தியா முழுவதுமே பழகி பரவியிருக்கிறது.
ஒரு பக்கம் உணவு பழக்கம் முற்றிலுமாக மாறி இருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் டிஜிட்டல் புரட்சி சோம்பேறித்தனமான ஒரு வாழ்க்கை முறையையும், உடல் உழைப்பு பெரிதாக தேவைப்படாது என்ற நிலையையும் ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த வளர்ச்சி ஒரு பக்கம் இருக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்தில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் உலகமே முடங்கியிருந்த நிலையில் உடல் உழைப்பு, உடற்பயிற்சி, கடைகளுக்கு சென்று வருவது, காலாற நடப்பது, என்று குறைந்தபட்ச செயல்பாடுகளை தடுத்து, வீட்டுக்குள்ளேயே முடக்கியது. இந்த சூழலும் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தி இருக்கிறது.
இவை அனைத்துமே குழந்தைகள் இளம் வயதிலேயே ஒபீசிட்டியால் பாதிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கின்றன.
குழந்தைப்பருவ உடல்பருமனால் ஏற்படக்கூடிய நோய்கள் மற்றும் உடல்நல பாதிப்புகள் :
பொதுவாகவே உடல்பருமன் பல விதமான வளர்சிதை மாற்ற நோய்களுக்குக் காரணமாக அமைகின்றது. குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்பட்டால், அவர்களுக்கு இளம் வளத்திலேயே மிகவும் தீவிரமான நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளன. குழந்தைப்பருவ உடல்பருமன் பின்வரும் நோய்கள் மற்றும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.
* டைப் 2 நீரிழிவு நோய்
* ஹைப்பர் டென்ஷன் மற்றும் மன நல பிரச்சனைகள்
* அதிக கொலஸ்டிரால் மற்றும் அதனால் ஏற்படும் இதய நோய் பாதிப்புகள்
* கல்லீரல் மற்றும் நுரையீரல் சிக்கல்கள்
* நடத்தை, நினைவாற்றல் சார்ந்த கோளாறுகள்
* ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்
* சில வகையான கேன்சர் ஆபத்து
உடல் பருமனாக இருக்கும் மூன்றில் இரண்டு குழந்தைகளுக்கு, அவர்கள் வளர்ந்த பின் வாழ்நாள் முழுவதும் ஏதேனும் நோயால் அவதிப்படும் அபாயம் இருக்கிறது.
குழந்தைப்பருவ உடல்பருமனை தடுப்பது எப்படி?
உலக சுகாதார மையத்தின் கூற்று படி, குழந்தைகளுக்கு ஏற்படும் உடல் பருமன், அவர்களுக்கான தனிப்பட்ட ஆரோக்கத்தை பாதிக்கிறது என்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக இது ஒரு பொது சுகாதார பிரச்சனையாக மாறி இருக்கிறது. எனவே, இதைத் தடுப்பது மிகவும் அவசியம். குழந்தைகள் உடல்பருமனால் பாதிக்கப்படாமல் இருக்க என்ன செய்யலாம்?
* உணவுப்பழக்கத்தை மாற்ற வேண்டும்
* அதிக பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரைகளை சாப்பிட வேண்டும்
* போதிய அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்
* மொபைல் பயன்பாட்டை, டிவி பார்க்கும் நேரத்தை குறைக்க வேண்டும்
* சாப்பிடும் போது உணவில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும்
* துரித உணவுகள், ரெடிமேட் உணவுகள் சாப்பிடுவதை குறைக்க வேண்டும்
* சர்க்கரை அதிகமுள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சர்க்கரை 21ஆம் நூற்றாண்டின் புகையிலை என்று கூறப்படுகிறது.
போதிய அளவுக்கு உடல் ரீதியாக ஆக்டிவாக இருப்பதை பெற்றோர்கள் உறுதிசெய்ய வேண்டும். விளையாடுவதற்கு ஊக்கப்படுத்த வேண்டும், அனுமதிக்க வேண்டும். கல்வி சார்ந்த அழுத்தம் இருந்தாலும், வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்ள பெற்றோர்கள் தரப்பில் இருந்து முயற்சி தேவை. தினசரி 1 மணி நேரமாவது குழந்தைகள் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு பெற்றோரும் உதாரணமாக இருப்பது அவசியம். பெற்றோர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறை, உணவுப்பழக்கத்தைப் பின்பற்றினால், குழந்தைகள் அதை எளிதாக பழக்கப்படுத்திக் கொள்ள முடியும்.
குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவுப்பழக்கம் என்பது, 6 முதல் 12 மாதங்களுக்குள் தொடங்க வேண்டும். இளம் வயதில் தொடங்கினால் தான் குழந்தை எல்லா உணவுகளையும் சாப்பிடுவார்கள். வயதான பின்பு புதிய உணவை பழக்கப்படுத்துவது கடினமாக இருக்கும்.
September 10, 2023
குழந்தைகளிடையே அதிகரிக்கும் உடல் பருமன்... என்ன காரணம்..? எப்படி தவிர்ப்பது..? மருத்துவரின் விளக்கம்..!
Diabetes control tips: கசப்பான பாகற்காய் சாப்பிடுவது சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்துமா? இந்த தவறை செய்யாதீர்கள், சர்க்கரை உடனே உயரும் என்கின்றனர் நிபுணர்கள்
நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, பலர் தங்கள் வழக்கமான உணவில் பாகற்காய், பாகற்காய் போன்ற கசப்பான காய்கறிகளை வைக்க முயற்சி செய்கிறார்கள். பாகற்காய் சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பது முற்றிலும் உண்மையல்ல.
பொதுவாக, பல ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் நீரிழிவு நோயில் பாகற்காய் சாப்பிடுவது கிளைசெமிக் கட்டுப்பாட்டை பராமரிக்கிறது என்று கூறுகிறார்கள். பாகற்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைக்கவும், சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தவும் உதவுகிறது. பாகற்காயில் கலோரிகள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதால், இது நீரிழிவு மற்றும் எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், கசப்புக்காயை அதிக அளவில் அல்லது சரியான முறையில் சாப்பிடுவது எதிர் விளைவை ஏற்படுத்தும்
டெல்லி உட்சுரப்பியல் நிபுணர் டாக்டர். சஞ்சய் கல்ரா கூறுகையில், "நீரிழிவு நோயாளிகள் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று, நீங்கள் உண்ணும் உணவு எப்படி சமைக்கப்படுகிறது, நீங்கள் பச்சையாக சாப்பிட்டால் அவை உடலில் வேறுபட்ட விளைவை ஏற்படுத்தும், மறுபுறம், நீங்கள் அவற்றை சமைத்தால், அவை வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். விஷயங்கள் "சமைக்கும் முறையைப் பொறுத்தது. வெல்லம் சரியாக சமைக்கப்படாவிட்டால், அது நல்லதை விட தீங்கு விளைவிக்கும்.
நாம் எண்ணெய் அல்லது நெய்யில் வறுக்கும் காய்கறிகள் இரத்த சர்க்கரை அளவை அதிகரிக்கின்றன. பாகற்காய் வறுக்கப்படுவது மசாலாப் பொருட்களை உள்ளடக்கியது, எண்ணெய் அல்லது நெய் மட்டுமல்ல. இந்த எண்ணெய் காரமான கசப்பு பூசணிகள் நல்லதை விட தீமையையே அதிகம் செய்கின்றன.
டாக்டர். பாகற்காயை எண்ணெயில் பொரிப்பதற்குப் பதிலாக, பாகற்காய் சமைத்துச் சாப்பிடலாம் என்கிறார் சஞ்சய் கல்ரா. ஸ்டஃப்டு கரேலாவை சிறிது எண்ணெய் மற்றும் மசாலா சேர்த்து சாப்பிடலாம், இது மிகவும் ஆரோக்கியமானது. வெல்லம் சாலட் அல்லது சூப் கூட சாப்பிடலாம். சர்க்கரை நோய் இருந்தால் வெல்லம் சாறு குடிக்கவும்.
மைதா கலந்த உணவுப்பொருள்கள் சாப்பிடுவதை நிறுத்தினால் உடலில் இத்தனை மாற்றங்கள் நடக்குமா..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!
இன்றைக்கு நாம் சாப்பிடக்கூடிய 80 சதவீத உணவுகளில் மைதா நிச்சயம் இடம் பெற்றிருக்கும். ரொட்டி, பிஸ்கட், புரோட்டா , பேக்கரி திண்பண்டங்கள் என அனைத்திலும் மைதா தான் பிரதானப் பொருளாக உள்ளது. ஆனால் இதை தொடர்ச்சியாக நாம் சாப்பிட்டு வரும் போது உடல் ஆரோக்கியத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. எனவே தான் இதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். குறிப்பாக ஊட்டச்சத்து நிபுணரான நூபுர் பாட்டீலின் கூற்றுப்படி, நீங்கள் ஒரு மாதத்திற்கு மைதாவை முழுவதுமாக கைவிடும்போது, உங்கள் உடலில் பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது என்கிறார். இதோ என்னென்ன பலன்கள்? என்பது குறித்து இங்கே விரிவாக தெரிந்துக் கொள்வோம்.
மேம்பட்ட செரிமானம்: பொதுவாகவே சுத்திகரிக்கப்பட்ட மாவில் பெரும்பாலும் நார்ச்சத்துக்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாக காணப்படும். இதனால் செரிமானப் பிரச்சனை ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இதே போன்று மைதாவிலும் நன்கு சுத்திகரிக்கப்பட்ட மைதா மூலம் தயார் செய்யப்படும் உணவுப்பொருள்களை சாப்பிடும் போது செரிமானம் ஆகாமல் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். எனவே தான் ஒருமாத காலத்திற்காவது இதை நீங்கள் உணவு முறையில் தவிர்க்கும் போது செரிமான பிரச்சனையின்றி வாழ முடியும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
இரத்த சர்க்கரை அளவை சீராக்குதல்: மைதா போன்ற சுத்திகரிக்கப்பட்ட மாவை உணவில் சேர்த்துக்கொள்ளும் போது இது உடலில் விரைவாக குளுக்கோஸாக மாற்றப்படுகிறது. இதனால் உடலில் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்க வழிவகுக்கிறது. எனவே மைதாவை தவிர்ப்பதால்,இரத்த சர்க்கரை அளவை உறுதிப்படுத்தவும், இன்சுலின் எதிர்ப்பின் அபாயத்தைக் குறைக்கவும் உதவும்.
எடை மேலாண்மை: சுத்திகரிக்கப்பட்ட உணவுப்பொருள்களில் கலோரிகள் அதிகளவில் இருப்பதால் உடல் எடையை அதிகரிக்க செய்கிறது. நீங்கள் உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில் இருந்தால் பிஸ்கட், புரோட்டோ போன்ற மைதா கலந்த பொருள்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கவும். இதற்கு மாற்றாக சிறு தானியத்தில் தயாரிக்கப்பட்ட உணவுப்பொருள்கள் சாப்பிடுவதை வழக்கமாக வைத்து கொள்ளுங்கள்.
அதிக ஆற்றல் வழங்குதல்: சுத்திகரிக்கப்பட்ட மாவில் கார்போஹட்ரேட்டுகள் அதிகளவில் இருக்கும். இவற்றை நீங்கள் உட்கொள்ளும் போது உடலில் ஆற்றலை செயலிழக்கச் செய்கிறது. எனவே தான் மைதா போன்ற பொருள்களை தவிர்க்க வேண்டும் என்கிறார்கள்.
அதிகரித்த ஊட்டச்சத்து உட்கொள்ளல்: சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக தினை (ஜோவர், பஜ்ரா, ராகி, முதலியன) மற்றும் பிற ஆரோக்கியமான மாற்றுகளைப் பயன்படுத்துவதன் மூலம், நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை நீங்கள் உட்கொள்ளலாம்.
வீக்கத்தைக் குறைத்தல்: சுத்திகரிக்கப்பட்ட மாவு உடலில் வீக்கத்திற்கு பங்களிக்கும். அதே நேரத்தில் தினை உள்ளிட்ட முழு உணவுகள் நிறைந்த உணவு ஒட்டுமொத்த வீக்கத்தைக் குறைக்க உதவும்.
மைதாவைத் தவிர்க்கும் போது, இது போன்ற பல நன்மைகள் உங்களுக்கு ஏற்படும். எனவே ஒருமாத காலத்திற்கு மட்டுமில்லாது, வாழ்நாள் முழுவதும் சுத்திகரிக்கப்பட்ட மாவுக்குப் பதிலாக பாதாம் மாவு, தேங்காய் மாவு, ஓட்ஸ் மாவு, கினோவா மாவு, கொண்டைக்கடலை மாவு, தினை மாவு அல்லது பழுப்பு அரிசி மாவு ஆகியவற்றைப் பயன்படுத்தப் பரிந்துரைக்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பாட்டீல். இது உணவில் பலவிதமான மாற்று உணவுகளைச் சேர்த்துக்கொள்வது, சுத்திகரிக்கப்பட்ட மாவு மீதான உங்கள் நம்பிக்கையை குறைக்கும் அதே வேளையில் பலவிதமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் சுவைகளை வழங்க முடியும் என்கிறார்.
September 9, 2023
மன வலிமை அதிகம் உள்ள பெண்கள் இதையெல்லாம் செய்ய மாட்டார்களாம்.. நீங்க எப்படி..?
ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு குணாதிசயம் உள்ளது. சில பெண்கள் மிகவும் தைரியமாக இருப்பார்கள், சிலர் மிகவும் உணர்ச்சி வசப்படுபவர்களாக இருப்பார். சிலர், மனதில் இருப்பதை வெளியே காட்டிக்கொள்ள மாட்டார்கள். ஒரு சிலர் எதை பற்றியும் கவலைப்பட மாட்டார்கள். எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், பெண்களுக்கு மன வலிமை மிகவும் இன்றியமையாதது. Mentally Strong என்று கூறப்படும் பெண்கள் எதை வேண்டுமானாலும் தாங்கிக்கொள்ளும் திறன் கொண்டவர்கள். அதே போல, மன வலிமை அதிகமுள்ள பெண்களுக்கென்று பிரத்யேகமான குணங்கள், பண்புகள் உள்ளன. மனவலிமை அதிகமுள்ள பெண்கள் இதை எல்லாம் கட்டாயமாக செய்ய மாட்டார்கள்.
தன்னைத் தானே நொந்து கொள்வது, தன் மீது கழிவிரக்கம் கொள்வது :
அச்சோ இப்படி நடந்து போச்சு, உங்களைப் பார்த்தால் கஷ்டமாக இருக்கிறது, சாரி என்று மற்றவரிடம் கூறுவது வேறு, தன்னை தானே நொந்து கொண்டு தனக்கு மன்னிப்பு தெரிவித்துக் கொள்வது என்பது வேறு. மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்கள் எப்பொழுதுமே தன் மீது பரிதாபப்பட்டுக் கொள்ள மாட்டார்கள். எதிர்பார்த்த ஒரு விஷயம் தவறாகப் போனால் அல்லது எதிர்பார்த்த முடிவுகளை தரவில்லை என்றால் கூட அதனால் அது பெரிய அளவில் பாதிக்காது. சரி இப்படி நடந்துவிட்டது, பரவாயில்லை என்று அடுத்த வேலையை பார்க்க சென்றுவிடுவார்கள்.
வாழ்க்கையில் தொடர்ந்து பல பிரச்சனை சந்தித்தாலும், என்றாவது ஒருநாள் நேரம் ஒதுக்கி நன்றாக அழுது விட்டு, அழுத சுவடே தெரியாமல் அடுத்து என்ன செய்யவேண்டும் என்று உற்சாகப்படுத்திக்கொண்டு விடுவார்கள். மன உறுதியும், மன வலிமையும் அதிகம் இருப்பது என்பது குறை சொல்லாத ஒரு வாழ்க்கை வாழ்வதாக அர்த்தம் ஆகாது. வாழ்க்கை இவ்வளவு சவாலாக இருந்தாலுமே அதை எதிர்கொள்வதற்கான வலிமையை தானே உருவாக்கிக் கொள்வதை குறிக்கிறது
எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது :
‘நான் நீண்ட நாட்களாக ஒரு நாவல் எழுத வேண்டும் என்று முயற்சி செய்து வருகிறேன்; அதற்கான கதாபாத்திரங்கள், கதை ஓட்டம், தொடக்கம் முடிவு என்று எல்லாமே ஓரளவுக்கு என் மனதில் இருக்கிறது. ஆனால் நான் கம்ப்யூட்டர் முன்பு அமர்ந்து ஒரு வார்த்தை அல்லது வாக்கியத்தை டைப் செய்ய முயற்சிக்கும் போது அது கச்சிதமாக வரவில்லை. மனதில் இருக்கும் கதாபாத்திரம் எழுத்தில் கொண்டு வர முடியவில்லை. கதை நான் நினைக்கும் போக்கில் செல்லவில்லை!’ இது ஒரு உதாரணம். இவ்வாறு எல்லாவற்றையுமே பெர்பெக்ட் ஆக ஒரே ஒரு சிறிய பிழை கூட இல்லாமல் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்களை தாங்களே மிகப்பெரிய அழுத்தத்திற்கு உள்ளாக்கி கொள்கிறார்கள்.
மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்கள் எல்லாமே கச்சிதமாக இருக்க வேண்டும் என்று எப்பொழுதுமே எதிர்பார்க்க மாட்டார்கள். முதலில் ஒரு வேலையைத் தொடங்கலாம் அது கச்சிதமாக இல்லை என்றால் அதை அடுத்து மேம்படுத்திக்கொள்ளலாம் என்று ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறிச் செல்வார்கள். எதார்த்தமாக என்ன செய்ய முடியும், எது சாத்தியம் என்பதை புரிந்து கொண்டு நடப்பது எளிதாக இருக்கும்.
தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது :
மன வலிமை அதிகமாக இருக்கும் பெண்களுக்கான போட்டியாளர் அவர் மட்டும் தான். அவர் வேறு யாரையுமே ஒரு தன்னுடைய போட்டியாளராக நினைக்கவே மாட்டார்! தனிப்பட்ட விஷயங்களிலும் சரி, குடும்பத்திலும் சரி, தொழில்முறை ரீதியாகவும் அவர் நேற்று எப்படி இருந்தார், இன்று எப்படி இருக்கிறார், நாளை எப்படி இருப்பார் அவருடைய அடுத்த இலக்கு என்ன என்று தன்னுடைய ஒவ்வொரு கட்டத்திலும் அடுத்து நிலைக்கு செல்ல வேண்டும் என்று தன்னை ஒப்பிட்டு பார்த்துக் கொள்வார்; மற்றவர்களுடன் எப்பொழுதுமே சேரவே மாட்டார்.
இன்னொரு பெண்ணின், உங்கள் தோழி அல்லது உங்களுக்கு தெரிந்தவரின் வாழ்வில் என்ன நடக்கிறது என்பதை சமூக வலைதளங்கள் வழியாக நீங்கள் மிகச் சுலபமாக தெரிந்து கொள்ளலாம்! ஒருவர் என்ன வாங்குகிறார், என்ன சாப்பிடுகிறார் என்பது முதல் எந்த ஊருக்கு சுற்றுலாவுக்கு செல்கிறார் என்பது வரை எல்லாமே சமூக வலைத்தளங்களில் பகிரப்படுகிறது. அதை பார்த்து,
- என்னால் ஏன் அந்த இடத்திற்கு செல்ல முடியவில்லை?
- நான் இவ்வளவு அழகாக இல்லை?
- என்னுடைய வேலை ஏன் இப்படி இருக்கிறது?
- என்னிடம் என்ன தவறு?
- என்னால் ஏன் நிறைய பயணம் செய்ய முடியவில்லை?
இது போன்ற மேற்கூறிய கேள்விகளுடன் மிக எளிதாக ஒப்பிட்டு பார்த்துக் கொள்ளும் அளவுக்கு ஒரு மிகப்பெரிய போட்டித் தன்மை நிறைந்த சமூகத்தில் தான் வாழ்ந்து வருகிறோம். பள்ளி, கல்லூரிகளில் நன்றாக படித்த சில பெண்கள் வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்துக் கொள்ளலாம். ஒரு சிலர் இதற்கு எதிர்மாறாக மிகப்பெரிய தொழிலதிபராக அல்லது வெற்றிகரமான வணிகம் செய்து வருபவராக இருக்கலாம். வாழ்வில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு முன்னுரிமை இருக்கிறது. எனவே, உங்களுடைய வளர்ச்சி, உங்களுக்கு என்ன தேவை, என்பதை மட்டுமே நீங்கள் ஒப்பிட்டு பார்த்து உங்களை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
தன்னைத் தானே தாழ்வாக நினைப்பது :
எவ்வளவு மோசமான சூழலிலும், மன வலிமை நிறைந்த பெண் தன்னை தாழ்வாக நினைக்க மாட்டார். எதிர்மறையான எண்ணங்கள் தோன்றினாலும், அதைக் கடந்து வரும் வலிமை பெண்களுக்கு இருக்கிறது. உங்கள் இன்னர் வாய்ஸ் என்று கூறப்படும் மனதில் குரலில் எதிர்மறையான சிந்தனையை நிறுத்த நீங்கள் பயறிசி செய்யலாம்.
- உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளலாம்
- உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்யலாம்
- நீங்கள் எவ்வளவு அழகாக இருக்கிறீர்கள் என்பதை கண்ணாடியின் முன்பு கூறிப் பார்க்கலாம்
- மற்றவர்களை மட்டம் தட்ட மாட்டார்கள்
மன வலிமை அதிகம் இருக்கும் பெண்கள் எப்பொழுதும் மற்றவர்களை குறிப்பாக பிற பெண்களை மட்டம் தட்டியோ இழிவாகவோ பேச மாட்டார்கள். ஒருவரை தாழ்த்திப் பேசினால் தன்னை உயர்த்திக் காட்டி கொள்ள முடியாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மற்றவர்களின் வெற்றியைக் கொண்டாடுவார்கள், பொறாமைப் பட மாட்டார்கள்.
எப்போதும் மற்றவர்களுக்கு பிடித்த மாதிரி நடக்க மாட்டார்கள் :
எல்லோருக்கும் எப்போதுமே அனைவரையும் பிடித்துவிடாது அல்லது பிடிக்கும் சூழல் இருக்காது. உறுதியான பெண்கள், எல்லா சூழ்நிலைகளிலும் மற்றவர்களுக்கு பிடித்தவாறு செய்து, தன்னை பொருட்படுத்தாமல் இருக்க மாட்டார்கள். People Pleasing என்பதைத் தவிர்த்து விடுவார்கள்.
திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரிக்க என்ன காரணம்..? மருத்துவர் தரும் விளக்கம்..!
இந்தியாவில் இதய நோயால் ஏற்படும் மரணம் சமீப ஆண்டுகளாக தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. உலகெங்கிலும் உள்ள மக்களை விட இந்தியர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பே இதய நோய் தாக்குவது நம் உடல் ஆரோக்கியம் பற்றிய அச்சத்தை மேலும் அதிகரித்து உள்ளது.
இந்தியாவில் குறிப்பாக 30 முதல் 69 வயதுக்குட்பட்டவர்களிடையே மாரடைப்பு பாதிப்பு ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து கொண்டே வருகிறது. இதனிடையே எதிர்நீச்சல் சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகர் மாரிமுத்து இன்று காலை திடீர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். இது திரைத்துறை மட்டுமன்றி மக்களிடையேயும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இவர் பரியேறும் பெருமாள் , ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார். 56 வயதே ஆன இவர் காலையில் திடீரென மாரடைப்பால் இறந்தது பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
பல பிரபலங்கள் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்பது சாதாரண மக்களாகிய நம் மனதில் ஒரு கேள்வியை எழுப்புகிறது. மாரடைப்பைக் கணிக்க முடியுமா.? என்பது தான் அது..இது குறித்து கூறும் பிரபல இதய நிபுணர் டாக்டர் அங்கூர் பதர்பேகர், ஆரம்ப கட்டத்தில் மாரடைப்பை கண்டறிவது மக்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். இருப்பினும், மார்பு வலியுடன் கூடிய அதிக வியர்வை நாம் காணக்கூடிய பொதுவான அறிகுறியாகும். அதிக வியர்வை, மூச்சுத் திணறல், அசௌகரியம் போன்றவற்றுடன் தொடர்புடைய மார்பு வலி பல நேரங்களில் தீவிர இதய கோளாறுகள் இருப்பதற்கான அறிகுறியாகும்.
ஆனால் மக்களோ அசிடிட்டி அல்லது தசை வலியாக இருக்கலாம் என்று நினைத்து புறக்கணிக்கிறார்கள். இதுபோன்ற அறிகுறிகளை உணர்ந்தால், உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று ECG செய்து மருத்துவ கவனிப்பை பெறுவது மிகவும் அவசியம்.
சில நேரங்களில் அதிகப்படியான களைப்பு மற்றும் சோர்வும் கூட மாரடைப்பிற்கான அறிகுறிகளாகும். எனவே இயல்பாக இல்லாத எந்த அறிகுறிகளும் எப்போதும் மருத்துவர்கள் மூலம் பரிசோதிக்கப்பட வேண்டும். இதய ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க மாதந்தோறும் ECG டெஸ்ட் செய்து கொள்வது நல்லது.
அதே போல இளைஞர்கள் தங்களுக்கு எற்படும் இடது பக்க நெஞ்சு வலி மாரடைப்பு காரணமாக இருக்கும் என்று நினைப்பதில்லை. அறிகுறிகள் முற்றிய பிறகு மருத்துவமனைகளுக்கு வருகிறார்கள். எனவே சிறிது சிறிதாக அடைப்புகள் அதிகரிக்கின்றன. கடுமையான எந்த அடைப்பும் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும். இதய கோளாறு அல்லது உயர் ரத்த அழுத்தத்திற்கு முன்கூட்டியே சிகிச்சை அளிக்காவிட்டால் அது மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்கிறார்.
அடல்ட் கார்டியாலஜி நிபுணரான டாக்டர் ஜெய்தீப் மேனன் கூறுகையில், பெரும்பாலான நபர்களுக்கு மாரடைப்பின் உண்மையான வலிக்கு முன் ஒரு புரோட்ரோம் உள்ளது. இது வாயு வெடிப்பு, குடல் இயக்கத்திற்கான தூண்டுதல், குமட்டல், அமைதியின்மை, சோர்வு போன்றவையாக உள்ளது.
இது மாரடைப்பு நிகழ்வு ஏற்படுவதற்கு சில மணிநேரங்கள் அல்லது நாட்களுக்கு முன்னதாக ஏற்படலாம். குறிப்பாக இதய நோய்க்கான ஆபத்து உள்ள நபர்களில் அறிகுறிகள் எதுவும் தொடர்ந்து இருக்காது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. வெப்பம் மற்றும் குளிர் ஆகியவை உச்சத்தில் இருக்கும் போது கடும் இதய கோளாறு பாதிப்புகளும் நாட்டில் அதிகரிக்கிறது. மாரடைப்பால் ஏற்படும் இறப்பைத் தடுக்க, அவசர CCU கவனிப்பு தேவை என்றார். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம், புகைபிடிக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், குடும்ப உறுப்பினர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டிருந்தால் ஒருவர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
மாதம் ரூ.1 லட்சம் ஊதியத்தில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
Incubation Manager / CEO மற்றும் Lab Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் 29.09.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்கவும் மாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
TANUVAS காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Incubation Manager / CEO மற்றும் Lab Assistant பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கல்வி தகுதி:
TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் B.V.Sc. and A.H. and MBA/ B.Sc./ B.Tech. in life sciences / biological science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பள விவரம்:
- Incubation Manager / CEO – ரூ.100,000/-
- Lab Assistant – ரூ.20,000/-
TANUVAS தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 29.09.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
Download Notification 2023 Pdf
Click here for latest employment news
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.25,000/- ஊதியம்!
அண்ணா பல்கலைக்கழகத்தில் புதிய வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.25,000/- ஊதியம்!
சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Teaching Fellow பணிகளுக்கென மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அண்ணா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:
அண்ணா பல்கலைக்கழக ஆணையத்தில் தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Teaching Fellow பணிகளுக்கென மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Anna University கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.E, B.Tech, M.E. / M.Tech, Ms பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
அண்ணா பல்கலைக்கழக ஊதிய விவரம்:
தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.25,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்கள் Written Test / Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Anna University விண்ணப்பிக்கும் முறை:
திறமையுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் இறுதி நாளுக்குள் (15.09.2023) அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification PDF
Click here for latest employment news
Gandhigram Rural Institute திண்டுக்கல் ஆட்சேர்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!
Gandhigram Rural Institute திண்டுக்கல் ஆட்சேர்ப்பு 2023 – நேர்காணல் மட்டுமே!
Gandhigram Rural Institute ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் Guest/ Part Time Teachers பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 14.09.2023, 15.09.2023, 19.09.2023, 20.09.2023, 21.09.2023 அன்று நடைபெறும் நேர்காணல் சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Gandhigram Rural Institute காலிப்பணியிடங்கள்:
Gandhigram Rural Institute தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Guest/ Part Time Teachers பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Gandhigram Rural Institute கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Master degree, PG Degree, Ph.d, MA, M.E. / M.Tech, Msc, MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Gandhigram Rural Institute ஊதிய விவரம்:
தேர்வாகும் நபர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gandhigram Rural Institute தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியான நபர்கள் Walk-in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Gandhigram Rural Institute விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க திறமையுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் படி விண்ணப்ப படிவம் பெற்று ,பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி 14.09.2023, 15.09.2023, 19.09.2023, 20.09.2023, 21.09.2023 அன்று நடைபெறும் Walk-in Interview கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link
Click here for latest employment news
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.31,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு- மாதம் ரூ.31,000/- ஊதியம்|| நேர்காணல் மட்டுமே!
Tamil Nadu Agricultural University ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Young Professional, Teaching Assistant பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் நேர்காணல் சென்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tamil Nadu Agricultural University காலிப்பணியிடங்கள்:
Tamil Nadu Agricultural University ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Young Professional, Teaching Assistant பணிகளுக்கென 02 காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Agricultural University வயது வரம்பு:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது 25 முதல் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் வயது வரம்பில் அளிக்கப்பட்டுள்ள தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamil Nadu Agricultural University கல்வித் தகுதி:
விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் Degree முடித்திருக்க வேண்டும்.
Tamil Nadu Agricultural University ஊதிய விவரம் :
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
Tamil Nadu Agricultural University தேர்வு செய்யப்படும் முறை :
விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Walk in Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Tamil Nadu Agricultural University விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு 08.9.2023, 13.9.2023 அன்று நடைபெறும் Walk in interview சென்று பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
Click here for latest employment news
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – Project officer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 27,500/-
IIT மெட்ராஸ் வேலைவாய்ப்பு 2023 – Project officer காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ. 27,500/-
தமிழ்நாட்டில் உள்ள Project officer பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை இந்திய தொழில்நுட்பக் கழகம் மெட்ராஸ் தற்போது வெளியிட்டுள்ளது. இப்பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 28.09.2023 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IIT Madras காலிப்பணியிடங்கள்:
Project officer பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.
கல்வி தகுதி:
ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் M.Tech in Aerospace/Mechanical/Computer Science ஆகியவற்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
IIT Madras தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Test/ Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
Project officer பதவிக்கு விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.27,500/- முதல் ரூ.1,00,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் ஐஐடி மெட்ராஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளமான iitm.ac.in இல் ஆன்லைனில் 28.09.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
Download Notification 2023 Pdf
Click here for latest employment news
IIT Madras-ல் Project Engineer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.90,000 || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
IIT Madras-ல் Project Engineer காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.90,000 || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!
ஐஐடி மெட்ராஸ் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Project Engineer பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
IIT Madras காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Engineer பணிக்கென 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Engineer கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE/B. Tech or M.E/M. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Project Engineer ஊதிய விவரம்:
தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.30,000/- முதல் ரூ.90,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:
விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 27.09.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
Apply Online
Click here for latest employment news
IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 490 காலிப்பணியிடங்கள்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
IOCL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு – 490 காலிப்பணியிடங்கள்|| விண்ணப்பிக்க நாளை இறுதி நாள்!
Indian Oil Corporation Limited ஆனது முன்னதாக வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Apprentices Training பணிக்கென 490 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் நாளை 10.09.2023 இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு விவரம்:
- Indian Oil Corporation Limited ஆனது முன்னதாக வெளியிட்டுள்ள அறிவிப்பில் Apprentices Training பணிக்கென 490 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பதிவு செய்யும் நபர்களின் வயதானது 18 முதல் 24 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், மேலும் பல்கலைக்கழகத்தில் Graduate பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாதம் ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் Online Test, Certificate Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை :
பதிவு செய்ய ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Apply Online Link
Click here for latest employment news
BrahMos Aerospace-ல் ரூ.1,71,070/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
BrahMos Aerospace-ல் ரூ.1,71,070/- ஊதியத்தில் வேலை – தேர்வு எழுத தேவையில்லை || நேர்காணல் மட்டுமே!
BrahMos Aerospace Private Limited ஆனது Systems Engineer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,71,070/- வரை மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Systems Engineer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 28 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.60,000/- முதல் ரூ.1,71,070/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 10.09.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
Download Notification PDF
Click here for latest employment news
TNJFU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.45,000/- சம்பளம்!
TNJFU பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு 2023- மாதம் ரூ.45,000/- சம்பளம்!
Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries பல்கலைக்கழகமானது தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Professor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
TNJFU காலிப்பணியிடங்கள்:
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆனது தற்போது வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில் Assistant Professor பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
Tamil Nadu Dr.J.Jayalalithaa Fisheries University கல்வி தகுதி:
பணிபுரிய ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் MBA, Ph.D பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Assistant Professor ஊதிய விவரம்:
தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.40,000/- முதல் ரூ.45,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
TNJFU தேர்வு செய்யப்படும் முறை:
தகுதியுள்ள நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
TNJFU விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான நபர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து , தேவையான ஆவணங்களுடன் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரி மூலம் இறுதி நாளுக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Download Notification & Application Form Link
Click here for latest employment news