Agri Info

Adding Green to your Life

September 12, 2023

Tongue Cleaning Benefits: நாக்கு சுத்தம் ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்துக்கு பாதுகாப்பு! எப்படி தெரியுமா?

September 12, 2023 0

 

வாய்வழி சுகாதாரத்தில் நாக்கை துடைப்பது வாய்வழி ஆரோக்கியத்துக்கும் ஒட்டுமொத்த உடல் நலனுக்கும் நன்மமை தருகிறது. நாக்கு சுத்துப்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளளாம்.

மனித உடல்களில் இருக்கும் வலுவான தசையாக நாக்கு உள்ளது. உடலில் உள்ள உடலின் மற்ற பாகங்களை போல், வாயி வழியிலும் பாதிப்பை ஏற்படுத்தாத பாக்டீரியாக்கள் நிறைந்திருக்கும். ஆனாலும் வாய்வழி சுகாதாரத்தை சரியாக கடைப்பிடிக்காவிட்டால் அந்த பாக்டீரியாக்கள் வாய் வழியாக உங்கள் செரிமான மற்றும் சுவாச குழாய்களுக்குள் நுழைந்து சில உடல் நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

வாய்வழி சுகாதாரத்தில் பல்துலக்குவது எவ்வளவு முக்கியமோஅதே அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நாக்கை சுத்தப்படுத்துவது உள்ளது.

நாக்கை சுத்தப்படுத்தும் முறையும் அவ்வாறு செய்வதால் கிடைக்கும் நன்மையும் பார்க்கலாம்

நாக்கை சுத்தப்படுத்த டங் ஸ்கிராப்பர் அல்லது கிளீனரை பயன்படுத்தலாம். இவை நாக்கின் மேற்பரப்பை சுத்தம் செய்கிறது. அங்கிருக்கும் பாக்டீரியா, அழுக்குகள், இறந்த செல்கள் மற்றும் நாக்கில் சேரும் உணவு துகள்கள் போன்றவற்றை அகற்றுகிறது.

மென்மையாகவும், நெகிழ்வு தன்மையுடனும் இருக்கும் ட்ங் ஸ்கிராப்பர், பிளாஸ்டிக் அல்லது உலோகத்தில் U- வடிவத்தில் இருக்கும்.

டங் ஸ்கிராப்பர் பயன்படுத்துவது எப்படி?

மெட்டல் அல்லது பிளாஸ்டிக் ஸ்கிராப்பரை வாங்கி வழக்காக பல் துலக்கிய பிறகு உங்கள் நாக்கை நீட்டி, ஸ்கிராப்பரை மெதுவாக நாக்கின் பின்புறத்தில் வைக்க வேண்டும். பின் ஸ்கிராப்பரை நாக்கின் மேற்பரப்பில் லேசாக அழுத்தி, அதை உங்கள் நாக்கின் நுனியை நோக்கி இழுக்க வேண்டும்.

இந்த முறையை 3 முதல் 5 தடவை மறுபடியும் இழுத்து, ஒட்டு மொத்த நாக்கின் பரப்பிலும் இவ்வாறு செய்ய வேண்டும். ஒவ்வொரு முறை ஸ்க்ராப் செய்த பிறகு உங்கள் வாய் மற்றும் நாக்கு ஸ்கிராப்பரை தண்ணீரில் கழுவவேண்டும்.

இதை ஒரு பழக்கமாகவே நாள்தோறும் அல்லது இரண்டு நாள்களுக்கு ஒரு முறை கடைப்பிடிக்க வேண்டும். ஸ்கிராப்பரை பயன்படுத்திய பிறகு அதில் பாக்டீரியா வளர்வதை தடுக்க நன்கு கழுவி, ஈரம் இல்லாமல் காய வைத்து விட வேண்டும்.

நாக்கை சுத்தப்படுத்துவதால் பாதிப்பை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் நீக்கப்படுகிறது

வாய் வழி ஆரோக்கியத்துக்கு முக்கியமாக இருந்து வரும் நாக்கை சுத்தப்படுத்துவது தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், இறந்த செல்கள் மற்றும் நாக்கின் மேற்பரப்பில் குவிந்துள்ள உணவு துகள்களை திறம்பட அகற்றுகிறது. இவற்றை நீக்காமல் குவிய விட்டோமானால் நாக்கில் நிறமாற்றம் ஏற்படுவதுடன். வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தலாம். அத்துடன் வாய்வழி சுகாதார பாதிப்புகளையும் ஏற்படுத்தலாம்.

சுவை உணர்திறனை மேம்படுத்தும்

நாக்கை ஒழுங்காக சுத்தம் செய்வதை பின்பற்றுவதன் மூலம் சுவை உணர்திறன் அதிகரிக்கும். எந்த வகையான சுவையாக இருந்தாலும் நான்கு பிரித்து பார்க்க உணர வைக்கும்.

நாக்கின் தோற்றம் அழகாகும்

நாக்கில் அதிகப்படியான குப்பைகள் குவிவதால் அது வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக தோற்றமளிக்கும். ஸ்கிராப் செய்வதன் மூலம் இந்த பாக்டீரியாக்கள் உருவாவதை தடுக்கலாம்.

ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியமும் நலம் பெறும்

வாய் வழியில் பாக்டீரியாக்கள் பிற உடல் பாகங்களில் பரவுவது நாக்கை துடைப்பதால் தடுக்கப்படுகிறது. இதனால் ஈறு பாதிப்படைவது, துவாரங்கள் ஏற்படுவது போன்ற வாய்மூலமாக ஏற்படும் நோய் பாதிப்புகள் தடுக்கப்படுகிறது.

வாய் துர்நாற்றம் ஏற்படுவதை தவிர்க்கலாம்

பிரஷ் செய்த பின்னர் நாக்கை சுத்தம் செய்யும் பழக்கத்தை கடைப்பிடித்து வந்தால், வாயில் துர்நாற்றம் ஏற்படுவதை முற்றிலுமாக தடுக்கலாம்.

Click here for more Health Tip

Cardamom For Weight Loss: நறுமணம், சுவைக்கு மட்டுமல்ல..! உடல் எடை குறைக்கவும் உதவும் ஏலக்காய் - எப்படி தெரியுமா?

September 12, 2023 0

 

உணவில் நறுமணத்தையும், சுவையையும் அதிகரிக்கும் ஏலக்காய் உடல் எடையை கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது என்ற சொன்னால் நம்பமுடிகிறதா? எடையை குறைக்க ஏலக்காய் எப்படியெல்லாம் உதவுகிறது என்பதை பார்க்கலாம்.

மசாலா பொருள்களில் ஒன்றாக திகழும் ஏலக்காய் உணவில் உள்ள சுவையை மெருகேற்றவும். நறுமணத்தை அதிகரிக்கவும் செய்கிறது. இதேபோல் பல்வேறு மருத்துவ குணநலன்களையும் கொண்டதாக ஏலக்காய் உள்ளது. இருமல் பிரச்னை இருப்பவர்கள் ஏலக்காயை மென்று அதன் சாற்றை விழுங்கி வந்தால் இருமல் தாக்கமானது சற்று குறையும்.

உடல் ஆரோக்கியத்தை பேனி காக்கும் ஏலக்காயில் குறைவான கலோரிகள், அதிகமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. அத்துடன் உடலுக்கு தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைந்துள்ளன.

பல்வேறு நன்மைகள் தரும் ஏலக்காய் உடல் எடை குறைக்கவும் உதவுகிறது. ஏலக்காய் தரும் உடல் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

உடல் நச்சுக்களை நீக்குகிறது

உடலில் தேங்கிய இருக்கும் தேவையற்ற நச்சு பொருள்களை, கொழுப்புகளை நீக்கும் தன்மை ஏலாக்காய்க்கு உள்ளது. இதனால் எடை குறைப்பில் ஈடுபட்டுள்ள உடலின் பிற உறுப்புகளின் செயல்திறனை மேம்படுகிறது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்கும் ஏலக்காய், எடை குறைப்புக்கு மிகவும் உதவியாக உள்ளது.

செரிமானத்தை ஊக்குவித்தல்

ஏலக்காய் உணவில் உள்ள ஊட்டச்சத்துகளை நன்கு உறிஞ்சி, செரிமானத்தை சீராக்குகிறது. இதனால் செரிமான அமைப்பு நன்றாக செயல்பட்டு, வயிறு உப்புசம் ஆவது தடுக்கப்படுகிறது. அத்துடன் வாயு, மலச்சிக்கல் உள்பட வழக்கமான எடை இழப்புக்கு தடையாக இருக்கும் பிரச்னைகளை சரி செய்கிறது.

வளர்சிதை மாற்றத்துக்கு உதவுதல்

உடலின் வளர்சிதை மாற்றத்தை துரிதப்படுத்துவதன் மூலம் கொழுப்பு மற்றும் கலோரிகளை எரிக்க உதவுகிறது, இதன் விளைவாக எடை விரைவாக குறைகிறது

பசியை கட்டுப்படுத்துதல்

ஏலக்காய் எடுத்துக்கொள்வது வயிறு நீண்ட நேரம் நிரம்பியிருக்கும் உணர்வை தருகிறது. இதனால் வேறு உணவுகளை தேடி மனம் அலைபாயாமல் இருப்பதுடன், தேவையில்லாத உணவுகள் சாப்படுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது.


Rice: வயிற்று எரிச்சலைக் குறைக்கும் பழையசோறு… இத்தனை நன்மைகளா?

September 12, 2023 0

 

நாம் அனைவரும் அறிந்த பழையசோற்றின் நன்மைகளை இங்கு காண்போம்.

தற்போது ஒரு கலாசாரம் நம் இளைஞர்கள் மத்தியில் திரும்பி வருகிறது. பாரம்பரியம் திரும்புதல் என்பதுவே அது. பலர் பாரம்பரிய உணவுகளை கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டனர். அது ஒரு வகையில் உடல் ஆரோக்கியத்துக்கு நல்லதும் கூட. அதில் குறிப்பிடத்தகுந்த ஒரு விஷயம் என்னவென்றால், நிறைய இடங்களில் களி, புட்டு, பழையசோறுக்கென பிரத்யேக கடைகளைக் கூட, சிலர் திறக்க ஆரம்பித்துவிட்டனர். அத்தகைய சிறப்புமிக்க உணவுகளில் மிக முக்கியமானது, பழையசோறு. 

நமது அண்டை மாநிலமான கேரளாவில் அரிசி கஞ்சியிடன் கப்பைக்கிழங்கை உணவு தொட்டு உண்ணும் பழக்கம் இருந்து வருகிறது. அதுபோல், நம் தமிழ்நாட்டில் உழைக்கும் சாமானிய மக்களின் அமிர்தமாகத் திகழ்ந்த பழையசோறு, இன்று பலருக்கும் ஃபேவரைட்டாக மாறி இருப்பது உள்ளபடியே வரவேற்புக்குரியது.

பழைய சாதம் தயார் செய்வது எப்படி?: பாத்திரத்தில் வடித்த நன்கு வெந்த சாதத்தில், இரவில் நீர் மற்றும் தேவைப்பட்டால் மோர், உப்பு சேர்த்து வைத்துவிட்டால், காலையில் பழைய சாதம் தயார். அப்படி என்ன நடக்கிறது, இந்த பழைய சாதத்தில் என்றால், உடலுக்கு நன்மைதரும் பாக்டீரியாக்களின் மூலம் நல்ல எனர்ஜியான உணவாக பழைய சாதம் மாறிவிடுகிறது.

பழைய சாதத்தில் இருக்கும் சத்துக்கள் என்ன?: இந்த பழைய சாதத்தில் கிடைக்கும் இரும்புச்சத்து, வடித்த சாதத்தில் இருக்கும் இரும்புச்சத்தினைவிட 25 விழுக்காடு அதிகம். புரதச்சத்து, பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் பெருமளவு பழைய சாதத்தில் உள்ளன. வைட்டமின் பி6, பி12 போன்ற சத்துக்களும் அதிகம் கிடைக்கும்.

பழைய சாதத்தின் கால இடைவெளி: பழைய சாதத்தை நீருற்றிய 12 மணி நேரத்துக்குள் சாப்பிட்டுவிட்டால், உடலுக்கு இந்த சத்துக்கள் கிடைத்துவிடும். அதிக நேரம் கழித்துச் சாப்பிட்டால் ஒவ்வாமைகூட ஏற்படலாம்.

பழைய சாதமும் பயன்களும்:

  • பெருங்குடல் அழற்சி, குடற்புண், வயிற்றுப்பொருமல் ஆகியவற்றுக்கு, பழைய சாதம் அருமருந்து.
  • செரிமானத்துக்கு நார்ச்சத்து அவசியம். பழைய சாதத்தில் நார்ச்சத்து அதிகம் என்பதால் எளிதில் உடலில் செரிமானம் ஆகும்.
  • பழைய சாதத்தில் இருந்து கிடைக்கும் நீர் தலைக்கு தேய்த்து குளிக்கும்போது இயற்கை கண்டிசனராகப் பயன்படுகிறது. இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்கள் முடியின் வளர்ச்சிக்குப் பயன்படுகின்றன.
  • பழைய சோற்றில் கிடைக்கும் செலீனியம், மக்னீசியம் நம் உடல் எலும்புகளை வலுப்படுத்தும்.
  • பழையசோற்றில் இருந்து கிடைக்கும், நீர் ஆகாரம் உடல் சூட்டைக்குறைத்து வயிற்று எரிச்சலைக் குறைக்கும். 
  • பழைய சாதத்தில் வைட்டமின் பி இருப்பதால், வயிற்றில் உண்டாகும் அல்சர் என்னும் புண்களை ஆற்றுப்படுத்தும்

தமிழ்நாடு, தேசம் மற்றும் உலகம், பொழுதுபோக்கு, விளையாட்டு, லைஃப்ஸ்டைல், ஜோதிடம், புகைப்பட கேலரி, வேலைவாய்ப்பு, சமீபத்திய செய்திகள் என அனைத்தையும் இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்து கொள்ளலாம்



Don't Skip Breakfast : காலை உணவு கட்டாயம் சாப்பிடாவிட்டால் இத்தனை தீமைகளா? - நிபுணர்கள் அறிவுறுத்துவது என்ன?

September 12, 2023 0

 

காலை உணவின் முக்கியத்துவம் என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

நாம் என்ன உணவை சாப்பிடுகிறோமோ அதுதான் நாம். நம் உடல் நலனை காப்பதும் அதுவே. குறிப்பாக நாம் காலை உணவை மட்டும் தவிர்க்கவே கூடாது. கட்டாயம் எடுத்துக்கொள்ள வேண்டும்.

நம் பரபரப்பான வாழ்க்கையில் நாம் சரியான நேரத்தில் உணவு எடுத்துக்கொள்வதை தவிர்க்கிறோம். காலை உணவை தவிர்ப்பது உடலுக்கு நல்லது கிடையாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக காலை உணவை தவிர்ப்பதை நாம் செய்யவே கூடாது என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள்.

உங்கள் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது

மூளையின் இயக்கத்துக்கு சத்தான காலை உணவு உதவுகிறது. அது உணர்வுகள், மனநிலை, எதிர்பார்ப்புகள், நடவடிக்கைகள், முடிவெடுக்கும் திறன் மற்றும் அறிவாற்றல் ஆகிய அனைத்தையும் கட்டுப்படுத்த உதவுகிறது.

உங்களை பலமிக்கவராக வைக்கிறது

மாவுச்சத்து அதிகம் உள்ள உணவுப்பொருட்களை காலை உணவாக எடுத்துக்கொள்வது மிக முக்கியமானது. ஒரு நாள் முழுவதும் ஒருவர் இயங்குவதற்கு தேவையான வலுவைக்கொடுக்க காலை உணவே உதவுகிறது.

பசியின்றி நீண்ட நேரம் இருக்க உதவுகிறது

காலையில் நீங்கள் புரதம் மற்றும் நார்ச்த்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உங்களை நாள் முழுவதும் பசியை கட்டுப்படுத்த உதவுகிறது. காலையிலேயே நீங்கள் முட்டை, ஓட்ஸ், சீஸ் மற்றும் பழங்கள் சாப்பிடுவது உங்களை நீண்ட நேரம் பசியின்றி இருக்க உதவுகிறது. எனவே நீங்கள் உங்கள் காலை வேலைகளை செய்ய முடிகிறது.

ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த நிலையாக வைத்திருக்க உதவுகிறது

உயர் நார்ச்சத்து மற்றும் மாவுச்சத்து, சர்க்கரையாக மாற்றும் செயல்திறனை குறைக்கிறது. உணவில் உள்ள மெக்னீசியம் உடலில் சரியான அளவு குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் சுரப்பை அதிகரிக்கிறது.

இதயத்தை காக்கிறது

நீங்கள் காலை உணவை உட்கொள்ளவில்லையென்றால், கலோரி அதிகமுள்ள சிற்றுண்டி, கொழுப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமுள்ள உணவுகளை உட்கொள்ளும்போது உங்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.

உடல் எடையை பராமரிக்க உதவுகிறது

நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந் உணவுகள் உங்களுக்கு வயிறு நிறைந்த உணர்வை கொடுக்கிறது. தேவையற்ற சிற்றுண்டிகள் உட்கொள்வதை தடுக்கிறது. அது உங்கள் உடல் உடை பராமரிப்பில் உதவுகிறது.

ஊட்ச்சத்து உட்கொள்வதை அதிகரிக்கிறது

ஆய்வுகளின்படி, முட்டை, பழங்கள், கீரைகள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகிய ஊட்டச்சத்து நிறைந் உணவு வகைகளை உட்கொள்வது, உங்களின் உடல் ஆரோக்கியத்துக்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்க உதவுகிறது

சீஸ், தயிர் போன்றவற்றை உட்கொள்ளும்போது அது உடலின் நோய் எதிர்ப்புத்திறனை அதிகரிக்க உதவுகிறது. இது சர்க்கரை நோய், இதய நோய் மற்றும் வீக்கத்தை குறைக்க உதவுகிறது.


Weight Loss Snacks : ஸ்னாக்ஸே எடை குறைக்க உதவினால், எவ்ளோ ஜாலி? – இதோ அந்த சிற்றுண்டிகள்!

September 12, 2023 0

 

Weight Loss Snacks : உடல் எடையை குறைக்க உதவும் சிற்றுண்டி வகைகளை இங்கு தெரிந்துகொள்ளுங்கள். இவற்றையெல்லாம் செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

சிற்றுண்டிகள் சாப்பிடுவது, கலோரிகள் நிறைந்தும், ஆரோக்கியத்துக்கு குந்தகம் விளைவிப்பதுமாக கருதப்படுகிறது. அடிக்கடி ஸ்னாக்ஸ் சாப்பிடுவதால் உடலில் அபிரிமிதான கொழுப்பு சேர்ந்துவிடுவதாக கருதப்படுகிறது. இதனால் உடல் பருமன் அதிகரிக்கிறது. உடல் எடை கூடி ஆரோக்கியமின்மை ஏற்படுகிறது.

அதற்காகவே இங்கு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபிக்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அவை என்ன என்று தெரிந்துகொள்ளுங்கள்.

கேரட் சிப்ஸ்

கேரட்களை சிப்ஸ் வடிவில் சன்னமாக நறுக்கி வறுக்காமல் பேக்கிங் செய்து சாப்பிடுவது உங்களின் ஸ்னாக் பசியையும் போக்கும் ஆரோக்கியத்தையும் அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி உடலுக்கு ஆற்றலையும் வழங்கி, நோய் எதிர்ப்பு சக்தியையும் வழங்கும்.

ஆப்பிள் மற்றும் நட்ஸ் பட்டர்

ஆப்பிளில் நட்ஸ் பட்டர் சேர்த்து சாப்பிடுவது உடலுக்கு ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது. அதிக ஊட்டச்சத்துடன், நார்ச்சத்து நிறைந்த, கலோரிகள் குறைந்த ஒரு ஆரோக்கியமான ஸ்னாக். அதில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. இதை உடற்பயிற்சிக்கு முன்னரும், பின்னரும் எடுத்துக்கொள்ளலாம்.

கடாயில் வறுத்த காட்டேஜ் சீஸ்

பன்னீர் புர்ஜி, இதில் புரதச்சத்து அதிகமுள்ளதுடன், நல்ல ஒரு ஸ்னாக்ஸாக உள்ளது.

கீரை ஸ்மூத்தி

கீரை ஸ்முத்தியில் கீரைகளை வைத்து செய்யப்படும் ஸ்மூத்தி, ஊட்டச்சத்து மிகுந்த பானம் என்பதுடன், ஆரோக்கியம், கொழுப்பு, மாவுச்சத்து மற்றும் புரதச்சத்து நிறைந்தது.

சியா விதைகள் புட்டிங்

சியா விதைகளில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதில் ஆன்ட் ஆக்ஸிடன்ட்கள், ஒமேகா – 3 ஃபேட்டி ஆசிட்கள் மற்றும் தாவரத்தை அடிப்படையாகக் கொண்ட புரதம் ஆகியவற்றை கொண்டது. இது செரிமானத்தை அதிகரித்து, வயிறு நிறைந்த திருப்தியை அளித்து, பசியை குறைக்கிறது.

கிரீக் யோகட் கார்ஃபாய்ட்

கிரீக் யோகட் அதிக புரதம் நிறைந்த ஒரு சிற்றுண்டி, அது ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. அது பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது. அதில் பழங்கள், நட்ஸ்கள் ஆகியவற்றை சேர்த்துக்கொள்ளலாம். நட்ஸ்கள் ஊட்டச்சத்து நிறைந்தது. ஒரு சிறந்த சிற்றுண்டியாகும்.

அவகோடா டோஸ்ட்

அவகோடா, இதயத்தை பராமரிக்கும் மோனோசாச்சுரேடட் ஃபேட்டி ஆசிட்கள் அடங்கியது. ஃபேட்டி ஆசிட்கள் பசியை தாமதமாக்கி, அதிகம் உட்கொள்வதை கட்டுப்படுத்தி எடை குறைப்புக்கு உதவுகிறது.

சிக்கன் சாலட்

சமைத்த சிக்கன், ஆலிவ் எண்ணெய், நட்ஸ், கீரைகள் மற்றும் விதைகள் நிறைந்த சாலட் கலோரிகள் குறைந்தது. அதில் ஃபைபர், புரதம் அதிகம் உள்ளது. இதை மாலைநேர சிற்றுண்டியாக்கிக்கொள்ளலாம்.

வறுத்த கடலை

எண்ணெயில்லாமல் வறுத்த கடலை ஊட்டச்சத்தும், ஆரோக்கியமும் நிறைந்த ஒரு நல்ல சிற்றுண்டியாகும்.

குயினோவா சாட்

குயினோவாவை வேகவைத்து அதில் சாட் செய்து சாப்பிடலாம். சீமைத்திணை தான் குயினோவா என்று அழைக்கப்படுகிறது. மாலை நேர சிற்றுண்டியாக இதை எடுத்துக்கொண்டால், இதில் அதிகம் ஊட்டச்சத்து உள்ளது. சுவையும் அதிகம் உள்ளது. இதில் வைட்டமின்கள், மினரல்கள், தாவர பொருட்கள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. எனவே எடைகுறைப்புக்கு உதவும் ஒரு தானியமாகும்.


Bone Health: எலும்பு ஆரோக்கியத்துக்கு உதவும் 8 அற்புதமான ஊட்டச்சத்துக்கள்!

September 12, 2023 0

 

கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை ஆஸ்டியோபோரோசிஸைத் தடுப்பதோடு தொடர்புடைய மிகவும் பொதுவான ஊட்டச்சத்துக்கள் ஆகும்.

ஆரோக்கியமான எலும்புகளை பராமரிப்பதில் முக்கிய ஊட்டச்சத்துக்கள் இந்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. உடற்பயிற்சி, சீரான உணவை உண்ணுங்கள் இதெல்லாம் எலும்புக்கு வலிமை சேர்க்கும். எலும்பு ஆரோக்கியத்திற்கு இந்த ஊட்டச்சத்துக்களை சேர்க்கவும்.

கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை ஆஸ்டியோபோரோசிஸைத் தடுப்பதோடு தொடர்புடைய மிகவும் பொதுவான ஊட்டச்சத்துக்கள் ஆகும். ஆனால் வலுவான எலும்புகளை உருவாக்குவதற்கும் பராமரிப்பதற்கும் பங்களிக்கும் பிற ஊட்டச்சத்துக்களின் முழு வரிசையும் உள்ளது! ஆஸ்டியோபோரோசிஸ் ஊட்டச்சத்தின் குறைவாக அறியப்பட்ட சில ஹீரோக்கள் இங்கே" என்று ஊட்டச்சத்து நிபுணர் லவ்னீத் பத்ரா தனது சமீபத்திய இன்ஸ்டாகிராம் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மெக்னீசியம்: இது எலும்பு மேட்ரிக்ஸில் இணைக்கப்பட்டுள்ளது மற்றும் எலும்பு வலிமைக்கு பங்களிக்கும் என்று கருதப்படுகிறது.

பொட்டாசியம்: சிறுநீரக கால்சியம் தக்கவைப்பை ஊக்குவிக்கிறது மற்றும் அமில-கார சமநிலையை பராமரிப்பதன் மூலம் எலும்பு இழப்பிலிருந்து பாதுகாக்கிறது.

வைட்டமின் சி: பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள ஒரு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றி ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைத்து எலும்பு அப்சர்ப்ஷனைத் தடுக்கலாம்.

பாஸ்பரஸ்: வளர்ச்சி காலங்களில் எலும்பு உருவாவதற்கு பாஸ்பரஸின் போதுமான உட்கொள்ளல் அவசியம். ஏனெனில் குறைந்த சீரம் பாஸ்பேட் அளவு எலும்பின் உருவாக்கத்தைக் கட்டுப்படுத்துகிறது. கூடுதலாக, குறைந்த சீரம் பாஸ்பரஸ் அளவை ஊட்டச்சத்து குறைபாட்டின் குறிகாட்டியாகக் கருதலாம், இது ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு முறிவுக்கான ஆபத்து காரணி.

துத்தநாகம்: 200-க்கும் மேற்பட்ட நொதிகளின் கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் மற்றும் கொலாஜன் மற்றும் எலும்பு கனிமமயமாக்கலின் சாதாரண தொகுப்புக்கு அவசியம்.

வைட்டமின் பி 12: டி.என்.ஏ தொகுப்புக்கு அவசியம், ஆஸ்டியோபிளாஸ்ட் செயல்பாடு மற்றும் எலும்பு உருவாக்கத்தைத் தூண்டக்கூடும். வளர்சிதை மாற்ற பாதைகளில் பி 12 உடன் இணைக்கப்பட்ட பிற பி வைட்டமின்களில் ஃபோலேட் மற்றும் வைட்டமின் பி 6 ஆகியவை அடங்கும்.

புரதம்: புரத உட்கொள்ளல் கால்சியத்தை உறிஞ்சுவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை சாதகமாக பாதிக்கும், மேலும் வளர்ச்சி காரணி 1 (ஐ.ஜி.எஃப் -1) போன்ற இன்சுலின் அதிகரித்த சுரப்பு மற்றும் ஒல்லியான உடல் நிறை. புரத உட்கொள்ளல் கால்சியத்தை உறிஞ்சுவதன் மூலம் எலும்பு ஆரோக்கியத்தை சாதகமாக பாதிக்கும், மேலும் வளர்ச்சி காரணி 1 (ஐ.ஜி.எஃப் -1) போன்ற இன்சுலின் அதிகரித்த சுரப்பு மற்றும் ஒல்லியான உடல் நிறை.

Badness of Coffee : காலையில் காஃபியுடன் விழிப்பவரா? அச்சச்சோ இத்தனை ஆபத்துக்கள் அதில் உள்ளதா?

September 12, 2023 0

 

Badness of Coffee : காலையில் காஃபியுடன் உங்கள் நாளை துவங்குவீர்கள் என்றால், அந்த பழக்கத்தை உடனடியாக தூக்கி எறிந்துவிடுங்கள். ஆரோக்கியமான வழியில், கஃபைன் இல்லாமல் உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வழிகளை தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் காஃபி குடிப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது கிடையாது. ஏசியன் விளையாட்டு மருத்துவ ஆராய்ச்சி பத்திரிகையில் 2022ம் ஆண்டு வெளியான ஆய்வறிக்கையில், கலந்துகொண்ட பங்கேற்பாளர்களை வைத்து பார்க்கும்போது, அவர்களுக்கு காலையல் காஃபி குடித்தவுடன் பயம், பதற்றம் அதிகரிப்பது பதிவு செய்யப்பட்டது. காஃபி இல்லாமல் உங்கள் நாளை எனர்ஜியுடன் துவங்கும் வழிகள்.

காலையில் காஃபி குடிப்பதால் ஏற்படும் பிரச்னைகள்

காஃபி ஒருவரை சுறுசுறுப்புடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. அதனால்தான் பெரும்பாலானோர் அதை உபயோகிக்கிறார்கள். அது மூளையில் அடினோசின் என்ற வேதிப்பொருளின் நலன்களை தடுத்து, அட்ரினலைன் வெளியேற்றத்தை அதிகரிக்கிறது. அந்த ஹார்மோன் அதிகப்படியான எனர்ஜியுடன் தொடர்புடையது. இந்த பாதிப்புகள், பயம், பதற்றம் ஆகியவற்றை நீங்கள் வழக்கமாக கெபைஃன் எடுத்துக்கொள்ளும்போது ஏற்படுத்துகிறது.

மன அழுத்த ஹார்மோன்கள் உற்பத்தியை அதிகரிக்கிறது

அதிகம் காஃபி எடுத்துக்கொள்ளும்போது, கார்டிசால் என்ற மனஅழுத்த ஹார்மோன்கள் உற்பத்தி அதிகமாகிறது. எனவே கஃபைன் இல்லாத ஹார்மோன்களை சமப்படுத்தும் எனர்ஜி பானங்களை தேர்ந்தெடுப்பது சிறந்தது.

தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது

அதிகளவிலான கஃபைன் பொருட்களை உட்கொள்வது, தூக்கமின்மையை ஏற்படுத்துகிறது. அதிகம் கஃபைன் எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.

ஒரு சிலர் சோர்வடைந்துவிடுவார்கள். அவர்களுக்கு காஃபி ஒரு சிறந்த பானமாக நினைக்கிறார்கள். ஆனால், அதற்கு மாற்றாக சில உள்ளன.

ஆரோக்கிமான காலை உணவு

நல்ல காலை உணவு அல்லது பழங்கள், நட்ஸ்களை உங்கள் முதல் உணவாக எடுத்துக்கொள்வது மிக முக்கியமானது. உங்கள் காலை உணவில் கட்டாயம் மாவுச்சத்து, புரதம் மற்றும் நார்ச்சத்துக்கள் அடங்கியதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். இதுபோல் இருப்பது உங்கள் உடலில் ரத்தச்சர்க்கரை அளவை சீராக்க உதவுகிறது. முட்டைகள், பிரட் டோஸ்ட், அவல், இட்லி சாம்பார், தோசை, சட்னி மற்றும் பால் ஆகியவற்றில் ஏதாவது உங்களுக்கு பிடித்ததை எடுத்துக்கொள்ளலாம்.

நீர்ச்சத்தை அதிகரிக்கும் வழிகள்

தண்ணீர் சிறந்தது. அதில் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து எடுத்துக்கொண்டீர்கள் என்றால், அது உங்கள் உடலுக்கு தேவையான எலக்ட்ரோலைட்களை பெறுவதற்கு உதவுகிறது.

காலையில் நடப்பது

காலை சூரிய ஒளியில் சிறிய நடை செல்வது நல்லது. கண்ணாடிகள் மற்றும் குளிர் கண்ணாடிகள் அணியாமல் சூரிய ஒளி உங்கள் கண்கள் மீது படுவது உங்கள் உடலை உள்ளிருந்து உறுதிப்படுத்தி, உங்களுக்கு தேவையான எனர்ஜியை அளிக்கிறது.

வழக்கமான உடற்பயிற்சி

உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக்கிக்கொள்வது நல்லது. ஒரு மிதமான உடற்பயிற்சியை தினமும் அரை மணி நேரம் செய்ய வேண்டும். எல்லா நாட்களும் செய்வது நல்லது.

மனஅழுத்தத்தை கையாள்வது

உங்கள் உற்சாகத்தை குறைப்பது அல்லது அதிகரிப்பதில் மனஅழுத்தம் முக்கிய பங்கு வகிக்கிறது. யோகா, தியானம் செய்யுங்கள். இயற்கையுடன் இணைந்திருங்கள். உங்களால் காஃபியை விட முடியவில்லையென்றால், காஃபி குடித்த அரை மணி நேரத்தில் காலை உணவை உட்கொண்டுவிடுங்கள் அது உங்கள் உடலில் ரத்தச்சர்க்கரை அளவை பராமரிக்க உதவும்.


Greens and Vegetables : ஆரோக்கியம் தரும் பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகள்! அன்றாட உணவில் சேர்ப்பது எப்படி?

September 12, 2023 0

 

Green Vegetables : பச்சை காய்கறி மற்றும் கீரைகளை உணவில் சேர்த்துக்கொள்வது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

பச்சை காய்கறிகள், கீரைகளை பெரும்பாலானோர் விரும்ப மாட்டார்கள். ஆனால் அவை உங்கள் உடல் ஆரோக்கியத்துக்கு முக்கியமானவை. எனவே அவை சேர்த்து செய்யப்படும் சில எளிமையான ரெசிபிக்களை நாங்கள் உங்களுக்கு கொடுத்துள்ளோம். அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து ஆரோக்கியம் பெறுங்கள்.

ஸ்மூத்திகள்

பச்சை காய்கறிகள் மற்றும் கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள சுவையாக ஸ்மத்திகள் ஒரு வழியாகும். பச்சை கீரைகள் மற்றும் காலே போன்றவற்றை பழங்களுடன் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக்கொள்ளுங்கள். அதில் சில நட்ஸ்களை சேர்த்துக்கொள்ளுங்கள்.

சுவையான ரேப்களை தயார் செய்யுங்கள்

பேக் செய்யப்பட்ட சிக்கன், மீன், உங்களுக்கு விருப்பமான காய்கறிகள், லெட்யூஸ், காலே போன்ற கீரைகளின் சாஸ்களை சேர்த்து, ரொட்டியில் வைத்து ஒரு நல்ல ரேப்களை தயார் செய்துகொள்ளுங்கள். அது உங்கள் பார்ட்டிகளுக்கு நல்ல ஸ்டாட்டர்களாக இருக்கும்.

ஓட்ஸ் கலந்து பசுமை உணவு செய்வது எப்படி?

நாம் எப்போது பழங்கள், நட்ஸ்கள் சேர்த்து இனிப்பான ஓட்ஸ் உணவை மட்டும எடுத்துக்கொள்வோம். ஆனால் கார ஓட்ஸ் உணவு கீரைகள், காலே வைத்து செய்வது எப்படி? இது ஒட்ஸ் உணவின் சுவையை மட்டும் அதிகரிக்காது. உங்கள் உணவுக்கு நிறமும், ஊட்டச்சத்தும் வழங்குகிறது.

இன்ப்ஃயூஸ்ட் வாட்டர் குடியுங்கள்

இது பச்சைக்காய்கறிகள், கீரைகளை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ள எளிமையான வழி. ஒரு பாட்டில் தண்ணீர் எடுத்து அதில் உங்களுக்கு பிடித்த மூலிகைகளை கலந்துவிடவேண்டும். புதினா, துளசி, ரோஸ்மேரி, வெள்ளரி, எலுமிச்சை என அனைத்தையும் அந்த தண்ணீரில் கலந்து ஒரு மணி நேரம் குளிர்சாதன பெட்டியில் வைத்துவிடவேண்டும். பின்னர் எடுத்து பருகி சுவை நிறைந்த இந்த தண்ணீரை குடித்து மகிழலாம்.

பெஸ்டோ சாஸ்

இந்த பெஸ்டோ சாஸை கீரைகள், துளசி, அருகுலா சேர்த்து தயார் செய்யுங்கள். இதை உங்கள் டோஸ்டில் ஸ்பிரெட் செய்து அல்லது எதற்காவது தொட்டுக்கொள்ள என்று உபயோகியுங்கள். இது உங்கள் உணவின் சுவையை அதிகரிக்கும் மற்றும் ஊட்டச்சத்துக்களை உயர்த்தும்.

பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளை உங்கள் உணவில் எளிதாக சேர்த்துக்கொள்ளும் வழி இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. பச்சை காய்கறிகளை பயன்படுத்தி நீங்கள், சாலட் செய்யலாம். இதை நீங்கள் பிரட் டோஸ்ட் அல்லது ஆம்லேட்டுடன் சேர்த்து சாப்பிட்டு மகிழலாம். இல்லாவிட்டால் முட்டையை அடித்து அதில் காய்கறிகளை சேர்த்து ஆம்லேட் செய்யலாம். இது சிறந்த காலை உணவு. உங்களுக்கு நாள் முழுமைக்கும் தேவையான எனர்ஜியை கொடுக்கிறது.

மதிய உணவில் சேர்க்க வேண்டியவை

பச்சை காய்கறிகள் உங்களுக்கு பிடிக்காது என்றால், உங்கள் முக்கிய உணவில் குயினோவா, சாதம், பாஸ்தாவில் சேர்த்து அவற்றின் சுவையை அதிகரியுங்கள்.

மாலை சிற்றுண்டியில் சேர்த்துக்கொள்வது எப்படி?

காய்கறிகள், கீரைகளை முக்கிய உணவுகளுடன் மட்டும்தான் சாப்பிட முடியுமா என்ன? கீரைகளை அலசி காயவைத்து, ஏர் ஃப்ரை அல்லது பேக் செய்யுங்கள். அதில் எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெயை சேருங்கள். உங்களுக்கு பிடித்த சீசனிங்குகளை தூவி இறக்கினால், அவை சுவையான மாலை நேர சிற்றுண்டியாக மாறிவிடும்.

இனிப்புகளில் சேர்ப்பது எப்படி?

பச்சை கீரை, காய்கறிகளை வைத்து நீங்கள் இனிப்பு செய்ய முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அவகோடா மவுஸே, கிவி பாப்சிகிள், கீரை ஸ்மூத்தி, கீரை ப்ரவுனி எல்லாம் செய்யலாம்.

Balanced Diet : இந்தியர்கள் சரிவிகித உணவை எடுப்பதில்லை – ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

September 12, 2023 0

 

Balanced Diet : மேலும், மிகவும் பயனளிக்கும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவையான அளவிற்கு இல்லாமல் இருப்பதும், (அதனால் தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கிடைப்பதில்லை)

சமீபத்திய லேன்செட் மருத்துவ ஆய்வுக் கட்டுரையில் இந்திய உணவில் சரிவிகித சத்தான உணவிற்கு பதிலாக, பால் பொருட்களின் அளவு தேவையின்றி மிக அதிகமாகவும், பழங்கள் மற்றும் காய்கறிகள் அதிகம் இருக்க வேண்டும் என இருந்தும், அவை குறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது.

இத்தகைய தவறான உணவு தேர்வுகளால், பெண்களும், கிராமப்புற மக்களும் அதிக பாதிப்புக்கு ஆளாகிறார்கள் என்பதும் ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.

எது சரிவிகித சத்தான உணவு?

முழு தானியங்கள் (Whole grains) – 32 சதவீதம்

தாவரப்புரதம் (பருப்புவகைகள்) – 23 சதவீதம்

பால் பொருட்கள் – 5 சதவீதம் என்று இருக்க வேண்டும்.

ஆனால், இந்திய உணவில், 25 சதவீதம் பால் பொருட்கள், 23 சதவீதம் தேவையற்ற கொழுப்புகள், 15 சதவீதம் முழுக் தானியங்கள் (உமி நீக்கப் படாதது), 4 சதவீதம் தாவரப்புரதம் என தவறான விகிதத்தில் உள்ளது.

மேலும், மிகவும் பயனளிக்கும் உணவுகளான பழங்கள் மற்றும் காய்கறிகள் தேவையான அளவிற்கு இல்லாமல் இருப்பதும், (அதனால் தேவையான அளவு நார்ச்சத்து, வைட்டமின் மற்றும் தாதுப்பொருட்கள் கிடைப்பதில்லை)

இதில் ஏழைகளைவிட பணக்காரர்கள் அதிகமாக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்வதும் தெரியவந்துள்ளது.

பொதுவாக, காய்கறிகள் மற்றும் பழங்கள் குறைவாகவும், பால்பொருட்கள், தேவையற்ற கொழுப்புகள் அதிகமாகவும் உணவில் இருப்பது தெரியவந்துள்ளது. கிராமப்புறங்களில், மாவுச்சத்து தேவைக்கு அதிகமாகவும், நகர்ப்புறங்களில், காய்கறிகள் மற்றும் பழங்கள், புரதச்சத்து அதிகமாகவும் உண்ணப்படுவது தெரிய வந்துள்ளது.

கிராமப்புறங்களில் முழு தானியங்களின் பயன்பாடு அதிகமாக இருப்பது நல்லது. பெண்கள் மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்வதும், ஆண்கள் விலங்கு புரதம் (Nonvegetarian protein) அதிகம் எடுத்துக்கொள்வதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

September 10, 2023

வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் ஒரு துண்டு வெல்லம்... இத்தனை நன்மைகள் கிடைக்குதாம்..!

September 10, 2023 0

 அனைவராலும் விரும்பி சாப்பிடப்படும் இயற்கை இனிப்பானான வெல்லம் பல்வேறு விதமான நிறங்களிலும், சுவைகளிலும் கிடைக்கிறது. குளிர்காலத்திற்கு ஏற்ற இந்த உணவுப் பொருட்களான தேநீர், இனிப்பு வகைகள், ரொட்டி, சாதம் மற்றும் பல்வேறு உணவுகளை தயாரிப்பதற்கும் வெல்லம் பயன்படுத்தப்படுகிறது. பொட்டாசியத்தின் இருப்பிடமாக கருதப்படும் வெல்லம் நமது உடலில் எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் வெல்லத்தில் வைட்டமின்கள் மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் காப்பர் போன்ற மினரல்களும் காணப்படுகிறது.

வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து சாப்பிடுவது குளிர்காலத்தில் ஆரோக்கியமான ஒரு வழியாக கருதப்படுகிறது. உடலில் இருக்கக்கூடிய நச்சுக்களை அகற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் ஆயுர்வேதம் இந்த அற்புதமான பானத்தை பரிந்துரை செய்கிறது. அதுமட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்க நினைக்கும் நபர்கள் மற்றும் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கும் வெல்லம் ஏராளமான நன்மைகளை தருகிறது. ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கும் வெல்லம் உதவுகிறது. இந்த பதிவில் வெதுவெதுப்பான நீரில் வெல்லம் கலந்து பருகுவதால் கிடைக்கக்கூடிய பலன்கள் குறித்து பார்க்கலாம்.

வெல்லம் தண்ணீர் தயாரிப்பது எப்படி? ஒரு கிளாஸ் தண்ணீரை பாத்திரத்தில் ஊற்றி அதனை சூடாக்கவும். அதில் ஒரு இன்ச் அளவு வெல்லம் சேர்க்கவும். வெல்லம் கரைந்ததும் அதனை வடிகட்டி ஆற வைக்கவும். தண்ணீர் வெதுவெதுப்பான பதத்திற்கு வந்தவுடன் அதனை பருகலாம். வெல்லம் தண்ணீரின் பயன்க

எலும்பு ஆரோக்கியம்: எலும்புகளை வலுவாக்கி, மூட்டு வலி மற்றும் எலும்பு சார்ந்த பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் தருவதற்கு உதவுகிறது. பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிக அளவில் காணப்படுவதால் வெல்லம் கலந்த வெதுவெதுப்பான நீர் உடலின் இரத்த அழுத்தத்தை சமநிலையில் பராமரிப்பதற்கு உதவுகிறது.

இரும்பு சத்து குறைபாட்டை சரி செய்கிறது: உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருந்தால் தினமும் வெல்லம் கலந்த வெதுவெதுப்பான நீர் பருகுவது உங்களுக்கு நன்மை அளிக்கும். இரும்புச்சத்து மற்றும் ஃபோலேட் நிறைந்த இந்த பானம் ரத்தத்தின் RBC எண்ணிக்கையை சரியான முறையில் பராமரிக்கிறது. இரும்புச்சத்து குறைபாடு உடைய கர்ப்பிணி பெண்கள் தாராளமாக வெல்லம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை பருகலாம்.

உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுகிறது: உடலை சுத்தப்படுத்தக் கூடிய பண்பு வெல்லத்திற்கு உண்டு. இது இயற்கையாகவே இரத்தம் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்கிறது. வெல்லம் கலந்த வெதுவெதுப்பான தண்ணீரை வழக்கமான முறையில் சரியான அளவில் பருகி வரும்பொழுது உங்கள் சருமம் பொலிவாகி, ஆரோக்கியமான சருமத்தை பெறலாம். அதோடு உடலில் நோய்களை ஏற்படுத்தக்கூடிய ஆபத்து நிறைந்த நச்சுக்களும் வெளியேற்றப்படும்.

எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது: வெல்லத்தில் பொட்டாசியம் சத்து அதிகமாக இருப்பதன் காரணமாக இது எலக்ட்ரோலைட் சமநிலையை பராமரிக்கிறது. உடல் எடையை குறைப்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். ஒருவேளை நீங்கள் எடை இழப்பு பயணத்தில் இருக்கிறீர்கள் என்றால் ஒரு நாள் விட்டு ஒரு நாள் அல்லது வாரத்திற்கு மூன்று நாள் இந்த பானத்தை பருகலாம்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: மெக்னீசியம், வைட்டமின் B1, B6 மற்றும் C போன்ற ஊட்டச்சத்துக்கள் மட்டுமல்லாமல் வெல்லத்தில் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் மினரல்களும் காணப்படுகிறது. எனவே அதிகாலையில் வெல்லம் கலந்த வெதுவெதுப்பான நீரை பருகுவது கட்டாயமாக உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.