Agri Info

Adding Green to your Life

September 23, 2023

இந்தியாவில் முதலீடு செய்யும் ஃபாக்ஸ்கான் நிறுவனம்.. அதிகரிக்கும் வேலைவாய்ப்புகள்..

September 23, 2023 0

 இந்தியாவில் ஆப்பிள் ஐபோன்களை தயாரித்து வரும் ஃபாக்ஸ்கான் நிறுவனம், தொழில்நுட்ப உபகரணங்கள் தயாரிப்பில் முன்னணி நிறுவனமாக உள்ளது. தமிழ்நாட்டில் பெரிய தொழிற்சாலையைக் கொண்டுள்ள இந்நிறுவனம், இந்தியாவில் சந்தைப்படுத்தப்படும் ஐபோன்களின் பெரும்பங்கினை தயாரித்து வழங்குகிறது. இந்த சூழலில் நிறுவனம் அடுத்த ஆண்டு முதல் நாட்டில் தனது முதலீட்டை இரட்டிப்பாக்க முடிவு செய்துள்ளது.

ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள ஃபாக்ஸ்கான் ஐபோன் தொழிற்சாலையில் தற்போது 40 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்நாடகாவில் 600 மில்லியன் டாலர் அளவுக்கு நிறுவனம் முதலீடு செய்ய உள்ளது. இதில் இரண்டு தொழிற்சாலைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதில் ஒன்று ஐபோன் தயாரிக்கவும், மற்றொன்று மைக்ரோ சிப்கள் தயாரிக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

உலகின் புதிய உற்பத்தி மையமாக இந்தியா உருவாகும் என ஃபாக்ஸ்கான் நிறுவனத் தலைவர் யங் லியூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், உலகின் மிக முக்கியமான உற்பத்தி மையமாக மாறுவதற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் இந்தியாவில் பிரகாசமாக உள்ளதாக தெரிவித்தார். சீனாவை விட இந்தியாவில் விநியோகச் சுற்றுச்சூழல் அமைப்பு வேகமாக வளர்ச்சி அடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டத்தில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனம், இந்தியாவில் மின்சார வாகனங்களை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் ஆராய்ந்து வருவதாகக் கூறினார். இந்தியாவில் தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் மின்சார வாகன உற்பத்தி மையங்களை அமைக்க ஃபாக்ஸ்கான் நிறுவனம் பரீசிலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024 ஆம் ஆண்டில் நடைபெறும் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது முதலீடுகளை அதிகப்படுத்தி வரும் பாக்ஸ்கான் நிறுவனம், மொத்தமாக தமிழ்நாட்டில் ஐபோன் உற்பத்தியை செய்ய இருக்கிறது. இந்த நிறுவனம்தான் ஆப்பிள் நிறுவனத்திற்கு உதிரி பாகங்களையும் அனுப்பி வருகிறது.

சீனாவில் பாதி, சென்னையில் பாதி என்று செய்யப்பட்டு வந்த ஐபோன் உற்பத்தியை நிறுத்திவிட்டு மொத்தமாக சென்னையில் உற்பத்தியை செய்ய பாக்ஸ்கான் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சென்னையில் இனி அனைத்து ஐபோன் தயாரிப்பையும் மொத்தமாக செய்ய அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தற்போது கிடைத்த தகவல்கள் உறுதி செய்துள்ளன. இதேபோன்று நத்திங் நிறுவன ஸ்மார்ட்போன்களையும் ஃபாக்ஸ்கான் சென்னை உற்பத்தி ஆலை தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உற்பத்தி என்று வரும்போது இந்தியாவிற்கும் தைவானுக்கும் இடையில் ஒரு பரஸ்பர பந்தம் வளர்ந்து வருவதை தன்னால் உணர முடிவதாக ஃபாக்ஸ்கான் தலைவர் தெரிவித்துள்ளார். இந்தியாவில் மின்சார வாகனங்களின் மொத்த உற்பத்தியில் தமிழ்நாடு முன்னிலை வகித்து வருகிறது. ஏற்கனவே ஆட்டோமொபைல் சாதனங்களின் உற்பத்தியில் சென்னை இந்தியாவின் டெட்ராய்டு என்று அழைக்கப்படுகிறது. இதற்கிடையில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் இந்த புதிய அறிவிப்பு கூடுதல் வேலைவாய்ப்புகளை தமிழ்நாட்டில் உருவாக்கும் என்று கூறப்படுகிறது.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சமையலறையில் இருக்கும் இந்த பொருட்களே உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்

September 23, 2023 0

 பருவகாலம் வந்துவிட்டாலே நோய்த்தொற்றுகள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். பூச்சிகள் எண்ணிக்கை அதிகரிப்பதோடு அதனால் ஏற்படும் சுகாதார கேடுகளும் நோய்களை உண்டாக்கும். வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் சரி, கடுமையான நோய்களாக இருந்தாலும் சரி, நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடுவதற்கும், ஆன்ட்டிபயாடிக்குகள் எடுப்போம்.

ஆனால் அடிக்கடி  நமக்கு ஆன்ட்டிபயாடிக்குகள் எடுப்பது நல்லதல்ல. அதற்கு பதிலாக உணவுகள் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும் வழிகளை சொல்கிறோம். உங்கள் சமையலறையில் உள்ள 6 இயற்கை நுண்ணுயிர் எதிர்ப்பிகள் உங்களை இந்த பருவக்காலத்தில் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

பூண்டு: பல நூற்றாண்டுகளாக, பூண்டு அதன் சமையல் பண்பிற்காக மட்டுமல்ல, அதன் சக்திவாய்ந்த மருத்துவ குணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. இதிலுள்ள அல்லிசின்   ஒரு சக்திவாய்ந்த நுண்ணுயிர் எதிர்ப்பி கலவையாகும். இது உணவுகளுக்கு சுவையை சேர்ப்பது மட்டுமல்லாமல் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடுகிறது.

இஞ்சி: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் உணவுகளில் இஞ்சி முக்கியமானது. இஞ்சியில் செரிமானத்திற்கு உதவும் மற்றும் நோய்த்தொற்று கிருமிகளுக்கு எதிராக ஒரு பாதுகாப்பு தடையை உருவாக்கும் ஒட்டுண்ணி எதிர்ப்பு கலவைகள் உள்ளன. இஞ்சியை சமையலில் சேர்ப்பதோடு சான்றாகவும்,  டீயில் போட்டும் குடிக்கலாம்.

பப்பாளி: ருசியான வெப்பமண்டலப் பழமான இது உங்கள் சுவை மொட்டுகளுக்கு ஒரு விருந்து மட்டுமல்ல உங்கள் ஆரோக்கியத்திற்கு ஒரு வரம். வைட்டமின் சி நிறைந்த பப்பாளி உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் பப்பாளியில் உள்ள பப்பேன் போன்ற நொதிகள் உங்கள் செரிமான கூட்டாளிகள், ஒட்டுண்ணிகளை எதிர்த்துப் போராடும், குடல் ஆரோக்கியத்தை ஆதரிக்கும் மற்றும் செரிமானத்திற்கு உதவுகிறது.

பூசணி விதைகள்: பூசணி விதைகளின் அளவை வைத்து அதன் சக்தியை குறைத்து மதிப்பிடாதீர்கள், அவை ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன மற்றும் ஒட்டுண்ணிகளை உண்மையில் முடக்கக்கூடிய ஒரு அமினோ அமிலத்தைக் கொண்டிருக்கின்றன. வறுத்த பூசணி விதைகளை சிற்றுண்டி அல்லது சாலடுகள் மற்றும் தயிர் ஓடு சேர்த்து சாப்பிடலாம்.

தேங்காய்:  தேங்காய் இயற்கையின் உண்மையான பரிசு. தேங்காயில் உள்ள நடுத்தர சங்கிலி கொழுப்பு அமிலங்கள் ஒட்டுண்ணிகளுக்கு எதிராக செயல்பட்டு , குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் தொற்றுநோய்களுக்கு எதிராக இயற்கையான தடையாக செயல்படுகிறது. சமையலுக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்தவும், நீரேற்றத்திற்காக தேங்காய் தண்ணீர், இளநீர், தேங்காய்ப்பால் குடிக்கலாம்.

மஞ்சள்: கோல்டன் ஹீலிங் மசாலா என்று அழைக்கப்படும் மஞ்சள் புண்களை ஆற்றும் பண்புகளுக்காக மஅறியப்படுகிறது. மஞ்சளில் உள்ள செயலில் உள்ள சேர்மமான குர்குமின், ஒட்டுண்ணி எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்துகிறது. குழம்புகள், கறிகள், சூப்கள், மஞ்சள் தண்ணீர்,  மஞ்சள் பால் போன்ற வகைகளில் மஞ்சளை எடுத்துக்கொள்ளலாம்.


இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிப்பது எப்படி..? டிப்ஸ் இதோ...

September 23, 2023 0

 ஒவ்வொரு மனிதருக்கும் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் ஆனது சரியான அளவில் இருக்க வேண்டியது மிகவும் அவசியமாகும். ஹீமோகுளோபின் அளவுக்கதிகமாகவோ அல்லது மிகவும் குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு அதுவே காரணமாக அமைந்து விடும். நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்சிஜனை உடல் முழுவதும் கடத்தி செல்லும் முக்கியமான பணியை ஹீமோகுளோபின் செய்கிறது. ஹீமோகுளோபின் குறைபாடு குறிப்பாக பெண்களுக்காக அதிகம் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மாதவிடாய் காலங்களில் போது ஏற்படும் இரத்தப்போக்கு இதற்கு முக்கிய காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இரும்புச்சத்து அதிகம் நிறைந்த உணவுப் பொருட்களான கல்லீரல், பச்சை காய்கறிகள், இறைச்சி ஆகியவற்றை தினசரி உணவில் சேர்த்து வந்தால் இவை உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உதவுகிறது.

குறிப்பாக வைட்டமின் சி நமது உடலில் சரியான அளவில் இருந்தால் தான் நாம் உண்ணும் உணவில் உள்ள இரும்புச்சத்தை முழுவதுமாக நம் உடல் கிரகித்துக் கொள்ளும். எனவே உடலின் இரும்புச்சத்தை அதிகரிப்பதற்கு முதலில் நாம் வைட்டமின் சி நமது ரத்தத்தில் சரியான அளவு இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். நம் உண்ணும் உணவில் அதிக அளவு வைட்டமின் சி நிறைந்திருக்கும் உணவுகளை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

வெளிரிய தோள், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஹீமோகுளோபின் குறைவாக உள்ளதற்கான அறிகுறிகள் ஆகும். ஒரு வேலை உங்களுக்கு இது போன்ற பிரச்சினைகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது.

ஃபாலிக் எனப்படும் வைட்டமின் பி9 ஆனது இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை உற்பத்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது இந்த சிவப்பு அணுக்கள் சரியாக இருந்தால் தான் ஹீமோகுளோபின் அளவு சரியாக இருக்கும். இதற்கு பச்சை காய்கறிகளையும், பருப்பு வகைகளையும் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உடலில் உள்ள இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வைட்டமின் பி12 இறைச்சிகள் மற்றும் பால் பொருட்களில் அதிகம் காணப்படுகிறது எனவே இறைச்சியையும் பால் பொருட்களையும் நமது தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சமையலின் போது கனமான அடி பகுதியை கொண்ட இரும்பு பாத்திரங்களை பயன்படுத்துவதும் உணவில் உள்ள இரும்பு சத்தின் அளவை அதிகரிக்க உதவும்.

மேலும் சில சமயங்களில் எந்த வகை உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை விட என்னென்ன விதமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதும் மிகவும் முக்கியமானது. குறிப்பாக உடலின் இரும்புச்சத்து கிரகிப்பு தன்மையை குறைக்கும் தன்மை கொண்ட உணவுகளை நாம் அதிக அளவில் எடுத்துக் கொள்ளக் கூடாது உதாரணத்திற்கு டீ, காபி மற்றும் கால்சியம் அதிகமாக உள்ள உணவுப் பொருட்களை தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.

Click here for more Health Tip

இந்த 4 ஊட்டச்சத்துகள் பெண்களுக்கு மிகவும் அவசியம்.. என்னென்ன தெரியுமா..?

September 23, 2023 0

 முன்பெல்லாம் ஒரு லிஸ்ட் உடன் மளிகை கடைக்கு சென்று தேவையான பொருட்களை வாங்கி வந்த காலமெல்லாம் மலையேறி போயாச்சு. தற்போது சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்து, அங்கு கண்ணுக்கு தென்படும் சாப்பிட தூண்டக்கூடிய அதிக சர்க்கரை, உப்பு, கொழுப்பு சேர்க்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்கி குவித்து வீடு திரும்புகிறோம். ஆனால் இவை அனைத்தும் நம் உடலுக்கு நல்லதா என்ற கேள்வியை கேட்க தவறிவிடுகிறோம். பெரும்பாலான நபர்கள் அதிக கலோரிகள் நிறைந்த குறைவான ஊட்டச்சத்துக்கள் கொண்ட உணவுகளை சாப்பிட்டு வருகிறோம். நாள்போக்கில் இது ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கே சீர்குலைவை ஏற்படுத்தி விடும்.

நாள் முழுவதும் எதையாவது சாப்பிடுகிறோம். ஆனால் தேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக்கொள்ள தவறிவிடுகிறோம். குறிப்பாக பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களில் காணப்படும் ஊட்டச்சத்துக்களை நாம் பெறுவதில்லை. அதிலும் பெரும்பாலான பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்புச்சத்து முழுமையாக கிடைப்பதில்லை. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களின் முக்கியத்துவத்தை முதலில் நாம் புரிந்து கொள்ளலாம்.

கால்சியம் : நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் சத்து மிகவும் அவசியம். பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 1,000 mg கால்சியம் தேவைப்படுகிறது. இது 3 கிளாஸ் பாலில் காணப்படும் கால்சியம் சத்து. ஆனால் பெரும்பாலான பெண்கள் தற்போது வெஜிடேரியன் அல்லது வெஜன் டயட்டை பின்பற்றுவதால் பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை தவிர்த்து விடுகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு கால்சியம் குறைபாடு எளிதாக ஏற்படுகிறது.

இரும்புச்சத்து : நமது செல்கள் மற்றும் திசுக்களுக்கு ஆக்சிஜன் சரியான முறையில் கொண்டு சேர்ப்பதற்கு இரும்பு சத்து மிகவும் அவசியம். பிரீமெனோபாஸ் கட்டத்தில் இருக்கக்கூடிய பெண்கள் ஒவ்வொரு மாதமும் தங்களது மாதவிடாய் சுழற்சியின் போது இரும்புச்சத்தை இழந்து வருகின்றனர். இந்த இழப்பை ஈடுக்கட்டுவதற்கு அவர்கள் போதுமான இரும்புச்சத்தை உட்கொள்வது அவசியம்.

நார்ச்சத்து : நார்ச்சத்து அதிகமாக இருக்கக்கூடிய உணவுகள் குறைந்த கலோரிகளை கொண்டிருப்பதால் அவற்றை சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. இதனால் இது உடல் எடையை கட்டுப்படுத்துவதற்கு கை கொடுக்கிறது. ஒரு சில நார்ச்சத்து நிறைந்த உணவுகள் செரிமான அமைப்பில் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்க உதவுகிறது. இந்த நல்ல பாக்டீரியாக்கள் ஒன்றிணைந்து செரிமான அமைப்பில் நுழையக்கூடிய கெட்ட பாக்டீரியாக்களை எதிர்த்து போராடுகின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்களை அன்றாட உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலமாக நமக்கு போதுமான நார்ச்சத்து கிடைக்கும்.

மெக்னீசியம் : மெக்னீசியம் தாது நம் உடம்பில் ஏற்படக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட செயல்பாடுகளுக்கு பொறுப்பேற்கிறது என்பது நம்மில் பலருக்கு தெரியாது. மெக்னீசியம் நோய் எதிர்ப்பு அமைப்பு முதல் நரம்பு மண்டலம் வரை ஆதரவு அளிக்கிறது. பச்சை இலை காய்கறிகள், நட்ஸ், பீன்ஸ் மற்றும் முழு தானியங்களில் மெக்னீசியம் சத்து நிறைந்துள்ளது.

வைட்டமின் D : பெரும்பாலான நபர்கள் ஆரோக்கியமான எலும்புகளுக்கு கால்சியம் மட்டுமே போதுமானது என்று நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால் ஆரோக்கியமான எலும்புகளுக்கு வைட்டமின் D சத்தும் அவசியம். ஏனெனில் நம் உணவில் இருக்கக்கூடிய கால்சியம் சத்தை உறிஞ்சுவதற்கு இந்த ஊட்டச்சத்து உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் தசைகள் சரியான முறையில் இயங்குவதற்கும், நோய் எதிர்ப்பு அமைப்பின் செயல்பாட்டை ஊக்குவிப்பதற்கும் வைட்டமின் D உதவுகிறது. முட்டை மற்றும் பால் சார்ந்த பொருட்களில் வைட்டமின் D காணப்படுகிறது. இது தவிர நமது சருமத்தை சூரிய வெளிச்சத்திற்கு வெளிப்படுத்தும் பொழுது நமது உடல் இயற்கையாகவே வைட்டமின் D சத்தை உற்பத்தி செய்கிறது.

பொட்டாசியம் : நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகள் மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக பராமரிப்பதற்கு பொட்டாசியம் உதவுகிறது. உணவில் இருந்து ஆற்றலை உற்பத்தி செய்யும் கெமிக்கல் ரியாக்ஷன்களுக்கு பொட்டாசியம் ஆதரவளிக்கிறது. பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கும் நபர்களுக்கு பொட்டாசியம் குறைபாடு காணப்படும்.

உடல் நலனை கருதி உணவு உண்ணுதல் : ஓட்ஸ், பருப்பு வகைகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம் நிறைந்த உணவுகளை சாப்பிடவும். நார்ச்சத்து மற்றும் பொட்டாசியத்தின் சிறந்த மூலமாக பழங்கள் மற்றும் காய்கறிகள் திகழ்கிறது. ஆப்பிள், சிட்ரஸ் பழங்கள், வெங்காயம், உருளைக்கிழங்கு, ப்ராக்கோலி, முட்டைகோஸ், கேரட், முளைகட்டிய பயிர்கள் போன்றவற்றை அன்றாட உணவுகளில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

உடல் ஆரோக்கியத்தை கவனித்துக் கொண்டாலே உங்கள் வெளிப்புற தோற்றமும், சருமமும் அழகாக மாறும். அதற்காக நீங்கள் தனியாக பணமோ, நேரமோ செலவு செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படாது. சருமத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை உடல் ஆரோக்கியத்திற்கு கொடுக்கும் பொழுது உங்களுக்கு டூ இன் ஒன் பெனிஃபிட் கிடைக்கும்.

சப்ளிமெண்டுகள் : உணவின் மூலமாக அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய என்னால் முடியாது என்று சொல்லக்கூடிய நபர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பெயரில் சப்ளிமெண்ட்டுகளை தினமும் சாப்பிடலாம். இவ்வாறு செய்வது ஊட்டச்சத்து குறைபாடு தவிர்ப்பதற்கு உதவும். ஆனால் முடிந்தவரை உங்களது ஊட்டச்சத்துக்களை உணவின் மூலமாக பெறுவதற்கு முயற்சி செய்யுங்கள்.


குறைவான மாவுச்சத்து, குறைவான கொழுப்பு உணவுகளுக்கு இடையே உள்ள வேறுபாடு என்ன..? எது நல்லது..?

September 23, 2023 0

 உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் உணவுப் பழக்கத்தை முறைப்படுத்த வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. காலை முதல் இரவு வரையில் உணவுகளை முறைப்படுத்தி எடுத்துக் கொள்ளும் அதே சமயத்தில், நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைப்பதையும் உறுதி செய்தாக வேண்டும். எந்த உணவை சாப்பிடுவது, எதை தவிர்ப்பது என்ற தடுமாற்றம் ஏற்படும்.

குறிப்பாக மிகுதியான உடல் எடைக்கு வித்திடுவதாகக் கருதப்படும் மாவுச்சத்து உணவுகள் மற்றும் கொழுப்பு உணவுகளை குறைப்பது குறித்துதான் குழப்பமே வரும். இதில் எந்த உணவை குறைத்தால் உடல் எடை குறைப்பு முயற்சிக்கு உதவியாக அமையும் என்பதுதான் நம் முன்னால் எழுகின்ற கேள்வியாகும்.

குறை மாவுச்சத்து உணவுமுறை : மாவுச்சத்து உணவுகளை குறைத்துக் கொள்ளும் முறைக்கு பெயர் கீட்டோ டயட் திட்டமாகும். மேலும் இதை அட்கின் டயட் திட்டம் என்றும் கூறுவார்கள். இந்த உணவு முறையில் மிகுதியான கொழுப்பு உணவுகளையும், புரத உணவுகளை மிதமான அளவிலும் எடுத்துக் கொள்ள வேண்டும். கொழுப்புகளை ஆற்றலாக மாற்றும் கீடோசிஸ் முறைக்கு உடலை தயார் படுத்த இவ்வாறு செய்கின்றனர்.

பலன்கள் : குறைவான மாவுச்சத்து உணவு முறையை கடைப்பிடிப்பதால் உடலில் உள்ள கிளைகோஜன் மற்றும் நீர்ச்சத்து ஆகியவை குறையத் தொடங்கும் நிலையில், உடல் எடை வேக, வேகமாக குறையத் தொடங்கும். பசி உணர்வு வெகுவாகக் கட்டுப்படுகிறது என்று இதை பின்பற்றும் மக்கள் தெரிவிக்கின்றனர். நாள் முழுவதும் ஆற்றல் கிடைக்கிறது என்றும், சோர்வு ஏற்படுவதில்லை என்றும் கூறுகின்றனர்.

எதிர்மறை விளைவுகள் : நமக்கான உணவுப் பட்டியல் சுருங்கும். காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டியிருக்கும். உடலில் கீட்டோ அளவுகள் அதிகரிக்கும்போது சிலருக்கு காய்ச்சல் போன்ற உணர்வு ஏற்படலாம். மாவுச்சத்து உணவை குறைத்துக் கொள்ளும் பழக்கத்தை நீண்டகாலம் கடைப்பிடிப்பது மிகவும் சவாலானதாக இருக்கும்.

குறைகொழுப்பு உணவு முறை : கொழுப்புள்ள உணவுகளை குறைத்துக் கொண்டு, மாவுச்சத்து உணவுகள் மற்றும் புரத உணவுகளை எடுத்துக் கொள்ளும் முறையாகும். கலோரிகளை மிகுதியாக கொண்ட கொழுப்பு உணவுகளை தவிர்ப்பதன் மூலமாக கலோரிகளை குறைப்பது இதன் நோக்கமாகும்.

பலன்கள் : செறிவூட்டப்பட்ட கொழுப்பு வகைகளை நாம் தவிர்ப்பதால் இதய நலனுக்கு இது உகந்தது. கொழுப்பு அல்லாத பிரிவில் நிறைய உணவுகள் இருப்பதால், சாப்பிடுவதற்கு நிறைய வகைகள் கிடைக்கும். பெரும்பாலும் இந்த வகை உணவுகளில் நார்ச்சத்து மற்றும் அத்தியாவசியமான புரதச்சத்து போன்றவை கிடைக்கும்.

எதிர்மறை விளைவுகள் : குறைவான கொழுப்பு உணவுகளை சாப்பிடும் நிலையில், சிலருக்கு உடனுக்குடன் பசி ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர். கொழுப்பை குறைக்கிறோம் என்ற எண்ணத்தில் சிலர் மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வார்கள். அது உடல் எடை குறைப்பு முயற்சிக்கு தடையாக அமையும். உங்கள் உடலுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆரோக்கியமான கொழுப்பு வகைகள் கிடைக்காமல் போகும்.


Click here for more Health Tip

 Click here to join whatsapp group for daily health tip

September 21, 2023

ஃப்ரெஷர்ஸ் அலெர்ட்.. சாஃப்ட்வேர் துறையில் வேலை தாமதமாகலாம்

September 21, 2023 0

 இறுதியாண்டு கம்ப்யூட்டர் படிப்புகளை மேற்கொள்பவர்கள், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ போன்ற பிரபல ஐடி நிறுவனங்களில் ஃப்ரெஷர்களாக சேர தயாராகி வருகின்றனர். இந்த நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புதியவர்களை நியமிக்கின்றன. இந்த மென்பொருள் வேலைகளுக்கான போட்டியும் அதிகமாக உள்ளது.

ஆனால், ஃப்ரெஷர்களுக்கு அவ்வளவு எளிதாக வேலை கிடைக்காது. டிசிஎஸ், இன்ஃபோசிஸ், விப்ரோ, டெக் மஹிந்திரா, அக்சென்ச்சர் மற்றும் பிற முன்னணி தொழில்நுட்ப ஜாம்பவான்கள் அமெரிக்காவில் நடந்து வரும் மந்தநிலை அச்சம் மற்றும் பலவீனமான ஒப்பந்த பைப்லைன் காரணமாக 2024 நிதியாண்டில் (FY24) புதிய பணியமர்த்தலைக் குறைக்க வாய்ப்புள்ளது.

பணியாளர் நிறுவனமான டீம்லீஸ் டிஜிட்டல், புதிய பட்டதாரி பணியமர்த்தலில் ஆண்டுக்கு ஆண்டு 30 சதவீதம் சரிவைக் கணித்துள்ளது. இதையடுத்து ஐடி நிறுவனங்கள் புதிய ஆட்களை பணியமர்த்துவதை குறைத்து வருவதாக செய்திகள் வருகின்றன.

மறுபுறம், 2022 மற்றும் 2023 பேட்ச்களின் பட்டதாரிகள் பல மென்பொருள் நிறுவனங்களிடமிருந்து கேம்பஸ் மற்றும் ஆஃப் கேம்பஸ் இன்டர்வியூவில் ஃப்ரெஷர்களாக ஆஃபர் லெட்டர்களைப் பெற்றுள்ளனர். ஆனால் அவர்கள் வேலையில் சேர முடியாமல் தொடர்ந்து தாமதங்களை எதிர்கொள்கிறார்கள்.

ஓராண்டுக்கு முன்பே வேலை தருவதாக உறுதியளித்த பிறகும், சிலருக்கு வேலையில் சேரும் தேதிகள் குறித்த தகவல் இன்னும் தெளிவாக தெரியவில்லை. மற்றவர்களுக்கு, இரண்டு முதல் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை சேரும் தேதி மாற்றப்படுகிறது.

சில சந்தர்ப்பங்களில் வேலை வாய்ப்புகள் முற்றிலுமாக திரும்பப் பெறப்பட்டுள்ளன. இது தொழில்நுட்ப களத்தில் புதியவர்களை நிச்சயமற்ற நிலையில் வைத்துள்ளது. நேசென்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி எம்ப்ளாய்ஸ் செனட்டின் தலைவர் ஹர்பிரீத் சிங் சலுஜா, கடந்த இரண்டு பேட்ச்களில் ஆன்போர்டிங் தாமதம் பற்றி பேசுகையில், வணிகம் மந்தமாக இருந்தால், புதிய பட்டதாரிகளுக்கு ஏன் இவ்வளவு சலுகை கடிதங்களை வழங்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதோடு ஊழியர் சங்கம் 20,000-25,000 மாணவர்களிடமிருந்து புகார்களைப் பெற்றுள்ளது என்றும் கூறினார்.


Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SBI வங்கியில் மாதம் ரூ.48,000 சம்பளத்தில் வேலை..! உடனே அப்ளை பண்ணுங்க

September 21, 2023 0

 பாரத ஸ்டேட் வங்கி (SBI) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. வங்கித் துறையில் வேலை தேடுபவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

107 கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர் மற்றும் ஆர்மர் பணிகளுக்கான ஆட்சேர்ப்பு தற்போது நடந்து வருகிறது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அக்டோபர் 5, 2023. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இந்தப் பணிகளுக்கான ஆள்சேர்ப்பு நடந்து வருகிறது.

பணியிடங்கள்

கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர் - 89

ஆர்மர் - 18

தகுதி

கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர் - 12ம் வகுப்பு, பட்டதாரி

ஆர்மர் - 12 ஆம் வகுப்பு

வயது வரம்பு

கட்டுப்பாட்டு அறை ஆபரேட்டர் - 20 முதல் 35 வயது

ஆர்மர் - 20 முதல் 45 வயது

இடஒதுக்கீட்டு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வு முறை

ஆன்லைன் டெஸ்ட்

நேர்காணல்

சம்பளம்

மாதம் ரூ 17,900- 47,920

வேலை செய்யும் இடம்

இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் தொடங்கும் தேதி: 06/09/2023

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: அக்டோபர் 5, 2023

ஆன்லைன் தேர்வு தேதி: நவம்பர்/டிசம்பர் 2023

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

September 17, 2023

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

September 17, 2023 0

 

பாரதியார் பல்கலைக்கழகத்தில் ரூ.25,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Guest Faculty பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை பாரதியார் பல்கலைக்கழகமானது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master degree, Ph.D., / NET /SLET தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Guest Faculty பணிக்கென காலியாக உள்ள 6 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master degree, Ph.D., / NET /SLET தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து bucuic2020@buc.edu.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 18.09.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

September 17, 2023 0

 

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் லிமிடெட் ஆனது Driver cum Conductor பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென மொத்தம் 685 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் Written Test, Practical Test, Interview Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:

Driver cum Conductor பணிக்கென காலியாக உள்ள 685 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழில் எழுதவும், படிக்கவும் , பேசவும் தெரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

24 வயது பூர்த்தியான மற்றும் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பதாரர்கள் Written Test, Practical Test, Interview Test மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 18.9.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TVS Motor நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

September 17, 2023 0

 

TVS Motor நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

TVS Motor நிறுவனம் ஆனது அதன் காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பினை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Senior Software Engineer – Automotive HMI பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்கள் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TVSM காலிப்பணியிடங்கள்:

Senior Software Engineer – Automotive HMI பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Senior Software Engineer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / BTech / M.Tech தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

TVSM வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Software Engineer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 2 முதல் 5 ஆண்டு வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TVSM ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு TVSM-ன் நிபந்தனைகளின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Senior Software Engineer தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் அல்லது Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஓராண்டு படிக்க வைத்து வேலை கொடுக்கும் ஐடிபிஐ வங்கி- ரூ.6.50 லட்சம் வரை சம்பளம் - இளைஞர்களே அப்ளை பண்ணுங்க!

September 17, 2023 0

 

மத்திய அரசின் தொழில் வளர்ச்சி வங்கியான  ஐடிபிஐ வங்கி லிமிடெட் (இந்தியத் தொழில் மேம்பாட்டு வங்கி) இளநிலை உதவி மேலாளர் (Junior Assistant Manager) காலிப்பணியடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த ஆள்சேர்க்கை மூலம் சுமார் 600 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள இளைஞர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள்: 600 

 பணி விபரங்கள்:  

 முக்கியமான நாட்கள்:

செப்டம்பர் 15 முதல் 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே  அனுப்பப்பட வேண்டும்.

அடிப்படை நிபந்தனைகள்:

பெங்களூரில் இயங்கும் மணிப்பால் கல்வி சேவைகள் பிரைவேட் லிமிடெட் , கிரேட்டர் நொய்டாவில் Nitte ஆகிய கல்வி நிறுவனங்களுடன் இணைந்து ஐடிபிஐ வங்கி, வங்கியியல் மற்றும் நிதியியல் துறையில்  1 ஆண்டு முதுகலை டிப்ளமோ சான்றிதழ் படிப்பை வழங்கி வருகிறது. 9 மாதங்கள் பாடக்கல்வி வாயிலாகவும், 3 மாதங்கள் பயிற்சி வகுப்பாகவும் இருக்கும்.

இந்த முதுகலை படிப்புச் சான்றிதழ் பெற்றவர்கள், அவசியங்கள் அடிப்படையில் இளநிலை உதவி மேலாளர் பணிக்கு நியமிக்கப்படுவார்கள் (Recruitment of Junior Assistant Manager through Admissions to IDBI Bank PGDBF)

ஆண்டு பயிற்சிக் கட்டணம் ரூ. 3 லட்சம் வரை. ஒரேபடியாக இல்லாமல், ஓராண்டிற்குள் தவனை முறையில் செலுத்திக் கொள்ளலாம்.

மாணாக்கர்களுக்கு கல்வி உதவித் தொகையும் அளிக்கப்படுகிறது . 6 மாத பயிற்சி காலத்திற்கு மாதம் ரூ, 5000-ம், இரண்டு மாத பயிற்றுனர் காலத்திற்கு மாதம் ரூ. 15,000-ம் வழங்கப்படும். பயிற்சிக் காலத்திற்க்கு பின்பு நியமிக்கப்படும் இளநிலை உதவி மேலாளர் பதவிக்கு ஆண்டுக்கு ரூ. 6.5 லட்சம் வரை ஊதியமாக வழங்கப்படும்.

கல்வித் தகுதி:  இதற்குவிண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழக மானியக் குழுவால்  அங்கீகரிக்கப்பட்ட உயர்க்கல்வி நிறுவனங்களில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 31.08.2023 அன்று 20-25-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.

எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.1000ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள், ரூ.200 ஐ விண்ணப்பிக்க கட்டணமாக செலுத்த வேண்டும். ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.1000 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும் .

விண்ணப்பம் செய்வது எப்படி?

ஆன்லைன் மூலமாக 15.09.2023 முதல் 30.09.2023  இரவு மணி 11.59 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம். விண்ணப்பங்கள் மற்றும் இதர விவரங்களை அறிவதற்கான இணையதளம் https://www.idbibank.in/  ஆகும்.


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

புதுச்சேரியில் மாபெரும் வேலைவாய்ப்புமுகாம்.. 600க்கும் மேற்பட்டோருக்கு கிடைத்தது வேலை!

September 17, 2023 0

 புதுச்சேரியில் நடைபெற்ற மாபெரும் வேலைவாய்ப்பு முகாமால் 600க்கும் மேற்பட்டோருக்கு வேலை கிடைத்துள்ளது.

வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீன் தயாள்உபத்தியாய கிராமின் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் மாநில அளவில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது. நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் இணைந்து இந்த திட்டம் சார்பில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நேர்காணல் மூலம் முதல் கட்டமாக 600க்கும் மேற்பட்ட நபர்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி ஆணை கடிதமும் வழங்கப்பட்டது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் புதுச்சேரி மற்றும் சென்னை சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக்செய்க


 Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரிசர்வ் வங்கியில் 450 உதவியாளர் காலிப்பணியிடங்கள்: சென்னையிலும் வேலை.. உடனே அப்ளை பண்ணுங்க!

September 17, 2023 0

 நாட்டின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தனது அலுவலகங்களில் காலியாக உள்ள 450 உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிக்கையை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் எண்ணிக்கை: 450 உதவியாளர் பதவி

இதில், பொதுப் பிரிவினருக்கு 241 இடங்களும் , ஓபிசி பிரிவினருக்கு 71 இடங்களும், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவைச் சேர்ந்தவருக்கு 37 இடங்களும் , 48 இடங்கள் பட்டியல் இனத்தை சேர்ந்தவருக்கும், 64 இடங்கள் பட்டியல் பழங்குடியினருக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னையில் உள்ள ஆர்பிஐ அலுவலகத்தில் மட்டும் 13 இடங்கள் நிரப்பப்பட உள்ளது.

கல்வித் தகுதி : இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர், ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கத் தகுதி: 01‐09‐2023  அன்று, விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 20 ஆகவும், அதிகபட்ச வயது 28 ஆகவும் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி, வயது வரம்பில் தளர்வுகள் உண்டு. அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 15 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்.

தேர்வுமுறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: 

Sr. No.வகைகட்டணம்தொகை *
1.பட்டியல்/பழங்குடியினர்/ மாற்றுத் திறனாளி வகுப்பினர்அறிவிப்புக் கட்டணம்ரூ.50/-
2.பொதுப் பிரிவினர் / இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் / பொருளாதார ரீதியாக பின்தங்கியவகுப்பினர் (EWS)விண்ணப்பக் கட்டணம் + அறிவிப்புக் கட்டணம்ரூ.600/-
3.ஆர்பிஐ பணியாளர்கள்விலக்குவிலக்கு

விண்ணப்பதாரர்கள் www.rbi.org.in.  மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அக்டோபர் 04, 2023.

வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், பதவிகளின் விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.

 Click here for latest employment news

உடல் எடையை குறைக்கனுமா..? 7 நாட்களுக்கான டயட் பிளான் பட்டியல்..!

September 17, 2023 0

 அசைவ உணவுகளில் மட்டுமே அதிகமான ஊட்டச்சத்துக்கள், புரதம் போன்றவை நிறைவாக உள்ளன என்ற கண்ணோட்டம் இருக்கிறது. இதை ஒருபக்கம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும், சைவ உணவுகள் இதற்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல. சைவ உணவுகளில் நம் உடலுக்கு தினசரி தேவையான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. சைவ உணவுகளை நம் நாவின் தேடலுக்கு ஏற்ப சுவையாக சமைத்து சாப்பிட்டு வந்தால் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். சைவ உணவுகளை சமைப்பதும் கூட எளிமையான வேலை தான்.

உடல் எடையை குறைக்கலாம் : தேர்வு செய்யப்படும் காய்கறி உணவுகளை சாப்பிட்டு வந்தால் நம் உடல் எடையை குறைக்க முடியும். அது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உடலிலும் உள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு இது உதவிகரமாக அமையும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான காய்கறி என்ற அளவில் 7 நாட்களுக்கு வெவ்வேறு காய்கறிகளை உட்கொண்டு நம் உடல் எடையை நாம் குறைக்கலாம்.

நாள் 1 : முதல் நாளில் கழிவுகளை வெளியேற்றும் எலுமிச்சை சாறு கலந்த நீரில் தொடங்கலாம். அதேபோல காலை உணவுக்கு தயிர், பெர்ரி பழம் மற்றும் தேன் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். திணை அரிசி சோறு, பீன்ஸ் சாலட் போன்றவற்றை மதிய உணவாக எடுத்துக் கொள்ளலாம். பகல் பொழுதில் பசி எடுத்தது என்றால் கேரட், வெள்ளரிக்காய் போன்றவற்றை சாப்பிட்டால் வயிறு நிறையும். இரவு உணவாக முழு தானிய கோதுமை ரொட்டி, சோயா தயிர் போன்றவற்றை சாப்பிடலாம்.

நாள் 2 : காலை உணவாக ஒரு கப் அளவு பொறி மற்றும் வேக வைத்த காய்கறிகள் கொஞ்சம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். மதிய உணவிற்கு கொண்டக்கடலை சாலட், பருப்பு போன்றவற்றை சாப்பிடலாம். பசி எடுக்கும்போது அதை தீர்ப்பதற்கு நட்ஸ் மற்றும் ஆப்பிள் ஆகியவை கை கொடுக்கும். இரவு சிவப்பு அரிசியுடன், காய்கறி சேர்த்து எடுத்துக் கொள்ளலாம்.

நாள் 3 : வழக்கம்போல காலையில் எலுமிச்சை சாறு நீர் அருந்தலாம். ஒரு மணி நேரம் கழித்து பழ ஸ்மூத்தி, கடலை பட்டர் ரொட்டி, மதிய உணவாக வறுக்கப்பட்ட காய்கறிகள், திணை சோறு ஆகியவற்றை சாப்பிடலாம். பசி எடுத்தால் தயிர் மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆகியவை கை கொடுக்கும். இரவில் நூடுல்ஸ், செர்ரி பழங்கள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 4 : காலையில் பல தானியங்கள் கலந்த ரொட்டி, காய்கறிகள், தயிர் ஆகியவற்றையும், மதியம் உருளைக்கிழங்கு, பீன்ஸ் சாலட் போன்றவற்றையும் சாப்பிடலாம். பசி நேரத்திற்கு வேர்கடலை பட்டர் எடுத்துக் கொள்ளலாம். இரவு ஊட்டி மிளகாய் கூட்டு மற்றும் திணை சோறு, காய்கறிகள் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 5 : காலையில் சியா விதை ஊற வைக்கப்பட்ட தண்ணீர் மற்றும் பல தானிய இட்லி, தேங்காய் சட்னி ஆகியவற்றை எடுத்துக் கொள்ளலாம். மதிய உணவாக ரசம் மற்றும் சிவப்பு அரிசி சோறு எடுத்துக் கொள்ளலாம். ஸ்நாக்ஸ் பட்டியலில் நட்ஸ், விதைகள், உலர் பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இரவில், முழு தானிய பிரெட், கிரில் செய்யப்பட்ட காளான் ஆகியவற்றை சாப்பிடலாம்.

நாள் 6 : காலை உணவாக அவகோடா பழம் மற்றும் அவித்த முட்டை ஆகியவற்றையும், மதிய உணவாக கொண்டக்கடலை மற்றும் சிவப்பு அரிசியுடன் வேக வைக்கப்பட்ட காய்கறிகள், பசி நேரத்திற்கு திராட்சை, பேரிக்காய் ஆகியவற்றையும் சாப்பிடலாம். இரவு சிவப்பு அரிசி சோறு, உருளைக்கிழங்கு, பீன்ஸ், சோளம் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நாள் 7 : காலையில் கழிவுகளை வெளியேற்றுவதற்கு இலவங்க பட்டை நீர் அருந்தலாம். காலையில் ஆப்பிள் பழமும், புதினா சட்னி மற்றும் இட்லி ஆகியவற்றையும் சாப்பிடலாம். மதியத்திற்கு பாலக்கீரை, காளான் சாலட் மற்றும் இரவு உணவாக காய்கறிகள், காலிஃபிளவர் ரைஸ் ஆகியவற்றை சாப்பிட்டுக் கொள்ளலாம்.