Agri Info

Adding Green to your Life

October 5, 2023

தேனி ஊர் காவல் படை பணிக்கு ஆட்கள் தேர்வு.. எப்படி அப்ளை பண்ண வேண்டும்?

October 05, 2023 0

 தேனி மாவட்டத்தில் சமூக சேவையில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் ஊர்க்காவல்படை பணியில் சேர்ந்து பணி செய்வதற்கான வழிமுறைகள் மற்றும் விண்ணப்பம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஊர்க்காவல் படை :

காவல்துறையில் பணியில் சேர வேண்டும் என ஆர்வத்துடன் உள்ள இளைஞர்களுக்கு தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார் . தேனி மாவட்டத்தில் ஊர்க்காவல் படையில் காலி பணியிடங்கள் உள்ளதால் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியான இளைஞர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

காலிப் பணியிடம் :-

தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 41 ஆண்கள் மற்றும் 02 பெண்கள் காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரும் விண்ணப்பம் அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள், தேனி மாவட்ட

காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல்படை அலுவலகத்தில் 05.10.2023 & 06.10.2023 ஆகிய இரண்டு நாட்களில் வழங்கப்படும் விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து வரும் 11.10.2023-க்குள் கீழ்கண்ட முகவரிக்கு தபால் அல்லது பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும் எனவும், பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து பின்னர் அறிவிக்கப்படும் நாளில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர்.

அவ்வாறு பணியமர்த்தப்படுபவர்களுக்கு

ஒரு மாதத்தில் 05 நாட்கள் பணி வழங்கப்படும். இந்த 05 நாட்கள் பணிக்கு நாளொன்றுக்கு ரூபாய் 560 வீதம் ஊதியமாக ரூபாய் 2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் உமேஷ் டோங்கரே தெரிவித்துள்ளார்.

அலுவலக முகவரி :-

வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் - முதல் தளம், தேனி, தேனி மாவட்டம்-625531. என்ற முகவரிக்கு விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால், பதிவுத்தபால் மூலம் அனுப்ப கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது .


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

எச்சரிக்கை..! அதிகம் சாப்பிட்டால் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் காய்கறிகள்..

October 05, 2023 0

 டயட் சார்ந்த உணவுகளுக்கும், உடல் எடை குறைக்கவும், உடல் ஆரோக்கியத்திற்கும் காய்கறிகளே பெரும்பாலும் பரிந்துரைக்கப்படுகிறது. ஆனால் சில காய்கறிகளை நாம் அதிகமாக சாப்பிடும் போது நம் உடலுக்கு பிரச்சனைகள் உண்டாகிறது. அப்படியான சில காய்கறிகளை பற்றி தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

குடை மிளகாய் : குடை மிளகாய், உருளைக் கிழங்கு, கத்தரிக்காய் போன்ற காய்கறிகள் உடலுக்கு அழற்சியை உருவாக்கும் என பல ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். நைட்ஷேட் காய்கறிகள் என அழைக்கப்படும் இதை அதிகமாக சாப்பிடும் போது இதய நோய், புற்றுநோய், நீரிழிவு நோய் ஆகியவை வருவதற்கு அதிக வாய்ப்புள்ளது. ஆனால் இது தொடர்பாக நடந்து வரும் ஆய்வு இன்னும் முழுமையடையவில்லை. இந்த நைட்ஷேட் காய்கறிகளை சாப்பிடும் போது உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் ஏற்படவில்லை என்றால் தொடர்ந்து சாப்பிடுங்கள்.

ப்ரோகோலி : டயட் சார்ந்த உணவுகளில் முக்கியமாக இடம்பெரும் ப்ரோகோலி மிகவும் சத்துள்ள காய்கறியாக கருதப்படுகிறது. ஆனால் இதை அதிகமாக சாப்பிடுவதால் வயிறு உப்பசம் ஏற்படும் ஆபத்து அதிகமுள்ளது.

பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் (கிளைக்கோஸ்) : ப்ரோகோலி போல் இந்த பிரஸ்ஸல் ஸ்ப்ரொட்ஸ் காய்கறியும் வாயுவை உண்டாக்க கூடியது. இதற்கு காரணம் இந்த காய்கறியில் அதிகளவு ரஃபினோஸ் மற்றும் சல்பேட் இருக்கிறது. இது காரத்தன்மையையும் அதிகரிக்கிறது.

பாட்டிலில் அடைத்து விற்கப்படும் காய்கறிகள் : இந்தக் காய்கறிகளில் அதிகளவு உப்பு மற்றும் சுவையூட்டிகள் இருப்பதால், உங்கள் செரிமானத்திற்கு இடையூறு விளைவிப்பதோடு வயிற்றுப் பிரச்சனைகளையும் உண்டாக்கும். மேலும் இதில் சோடியம் அளவு அதிகப்படியாக இருக்கும். இது நிச்சயம் உங்கள் உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும்.

செலரி : செலரியை சாதாரணமாக மென்று சாப்பிட்டால் உடலில் உள்ள கலோரிகளை குறைக்கலாம் என்று கூறினாலும் இதில் எந்த ஊட்டச்சத்துகளும் கிடையாது. மேலும் இதில் 68 வகையான பூச்சிக்கொல்லிகளின் எச்சம் இருப்பதாக ஆய்வுகள் கூறுகிறது.

சோளம் : பலரும் விரும்பி சாப்பிடும் சோளத்தில் மரபணு மாற்றம் செய்யபட்டதன் காரணமாக, அதை சாப்பிடும்போது நம் உடலுக்கு பரிட்சியம் இல்லாத புரதம் கிடைக்கிறது. இது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும்.

கத்தரிக்காய் : இதன் சுவைக்காகவே இறைச்சி உணவுகளுக்கு மாற்றாக அனைவராலும் விரும்பப்படுகிறது கத்தரிக்காய். ஆனால் இதிலிருக்கும் சுவைதான் பிரச்சனையே. இது நம் உடலில் கொழுப்பு, கலோரி மற்றும் சோடியம் அளவை அதிகரிக்கிறது.

உருளைக் கிழங்கு : உருளைக் கிழங்கில் அதிகளவு பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி இருந்தாலும், இதன் தோலை சீவி, உப்பு சேர்த்து வறுத்தே நாம் சாப்பிடுகிறோம். இதன் காரணமாக இதிலுள்ள சத்துக்கள் எல்லாம் நமக்கு கிடைப்பதில்லை.

கீரைகள் : மிகவும் ஆரோக்கியமான கார்கறிகளில் ஒன்றாக கருதப்படும் கீரைகளில் அதிகளவு விட்டமின் ஏ மறும் விட்டமின் கே உள்ளது. மேலும் இதில் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளும் உள்ளது. ஆனால் செயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட கீரைகளை உண்ணும் போது அதில் 50-க்கும் மேற்பட்ட பூச்சிக்கொல்லி மருந்துகளின் எச்சம் இருப்பதை மறந்து விடாதிர்கள்.

🔻 🔻 🔻 

தினமும் 3000 அடிகள் நடைபயிற்சி செய்வதால் சீராகும் இரத்த அழுத்தம்... புதிய ஆய்வில் தகவல்..!

October 05, 2023 0

 தினமும் 3000 அடிகள் நடைபயிற்சி மேற்கொள்வதால் இரத்த அழுத்தத்தில் ஏற்படக்கூடிய பாசிடிவான தாக்கங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் வெளியான தகவல்கள் குறித்து இப்போது பார்க்கலாம்.

நமது உடலில் இருக்கக்கூடிய உறுப்புகள் ஒவ்வொன்றும் மற்றொன்றுடன் தொடர்புடையவை. அந்த வகையில் பெரியவர்களில் ஆரோக்கியமான ரத்த அழுத்தத்தை பராமரிப்பது அவர்களை ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் போன்ற பிரச்சனைகளுக்கு எதிராக பாதுகாப்பு அளிக்கும். அன்றாடம் 3000 அடிகள் நடைப்பயிற்சியை இலக்காக கொள்ளும் பெரியவர்கள், அவர்களது ரத்த அழுத்தத்தை ஆரோக்கியமான அளவுகளில் பராமரிப்பார்கள் என்று ஒரு புதிய ஆய்வு கூறுகிறது.

ஜர்னல் ஆஃப் கார்டியோ வாஸ்குலர் டெவலப்மென்ட் அண்ட் திஸ் இஸ் திஸ் இஸ் வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆய்வில், தினந்தோறும் குறைந்தப்பட்ச அளவாக 3000 அடிகள் நடப்பது பெரியவர்களில் உயர் ரத்த அழுத்தத்தை குறைக்க உதவும் என்று கூறுகிறது. மிகவும் எளிமையான அதே நேரத்தில் பிரபலமான உடல் செயல்பாடுகளில் ஒன்றான அன்றாட நடைபயிற்சி பெரியவர்களுக்கு ஹைப்பர் டென்ஷன் சார்ந்த பலன்களை அளிக்குமா என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்காக ஆராய்ச்சியாளர்கள் 68 முதல் 78 வயது வரை இருக்கக்கூடிய பெரியவர்களில் கவனம் செலுத்தினர். இவர்கள் ஆய்வில் பங்கு கொள்வதற்கு முன்பு தினமும் சராசரியாக 4000 அடிகள் நடைபயிற்சியை மேற்கொண்டனர்.

தினமும் 3000 அடிகள் நடைப்பயிற்சி செய்வது பெரியவர்களில் ஏராளமான பலன்களை அளிக்கக்கூடும் என்று இந்த ஆய்வு மூலமாக தெரிய வந்தது. இந்த ஆய்வில் பங்கு கொண்ட பங்கேற்பாளர்களின் சிஸ்டாலிக் மற்றும் டயாஸ்டாலிக் ரத்த அழுத்தம் சராசரியாக முறையே 7 மற்றும் 4 புள்ளிகள் குறைந்தன. மேலும் ஏற்கனவே ஆன்டி ஹைப்பர் சென்சிட்டிவ் மருந்துகளை எடுத்து வந்த 21 பங்கேற்பாளர்களில் சிஸ்டாலிக் ரத்த அழுத்தத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது.

உடற்பயிற்சியானது மருந்துகளுடன் இணைந்து ஏராளமான பலன்களை அளிக்க கூடும் என்று இதற்கு முந்தைய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டது. நாம் எவ்வளவு உடற்பயிற்சியில் ஈடுபடுகிறோம் என்பது இங்கு மிகவும் அவசியமாக கருதப்படுகிறது.

கடந்த சில வருடங்களாக நடை பயிற்சி காரணமாக பெறக்கூடிய நன்மைகள் பல ஆய்வுகள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஆகஸ்ட் மாதத்தில் யுரோபியன் ஜர்னல் ஆஃப் கார்டியாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தினமும் 4000 அடிகள் நடப்பது எந்த ஒரு காரணத்திற்காக ஏற்படும் இறப்பின் அபாயத்தை குறைக்க உதவும் எனவும் மற்றும் 3 ஆயிரம் அடிகள் நடப்பது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. நமது வாழ்க்கை முறையில் நாம் செய்யக்கூடிய எளிமையான சில மாற்றங்கள் நமது உடல் ஆரோக்கியத்தில் நீண்ட கால நன்மைகளை தர கூடும் என்று இந்த ஆய்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

🔻 🔻 🔻 

உங்கள் சிறுநீரை வைத்தே சர்க்கரை நோயை கண்டறியலாம்... எப்படி தெரியுமா..?

October 05, 2023 0

 வீட்டில் ஒரு நபருக்கேனும் சர்க்கரை நோய் உண்டு என்ற அளவுக்கு இன்று மிக பரவலாக பலரை பாதித்திருக்கக் கூடிய பிரச்சினை இது. உலகெங்கிலும் ஆண்டுதோறும் ஒன்றரை கோடி மக்கள் சர்க்கரை பாதிப்பு காரணமாக உயிரிழந்து வருகின்றனர். குறிப்பாக, அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக் கூடிய நோயின் வரிசையில் இது 9ஆம் இடத்தில் இருக்கிறது என்று உலக சுகாதார ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது.

சர்க்கரை நோயில் இரண்டு வகை உண்டு. டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு என்று வகைப்படுத்தப்படுகிறது. நமது நோய் எதிர்ப்பு சக்தியே நம் உடலை தாக்கி, இன்சுலின் சுரப்பு என்பதை முற்றிலுமாக தடை செய்கிறபோது, டைப் 1 நீரிழிவு ஏற்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கை குறைவு தான்.

ஆனால், மிக பெரும்பாலானோரை பாதிப்பது டைப் 2 நீரிழிவு ஆகும். நமது கனையம் முறையாக செயல்படாமல் இருப்பதால் போதுமான இன்சுலின் சுரக்காமல் இருப்பது அல்லது இன்சுலின் உற்பத்தியை தடுப்பது போன்ற பாதிப்புகளால் இது உருவாகிறது.

அடிக்கடி சிறுநீர் கழிப்பது டைப் 2 நீரிழிவு நோயின் அறிகுறியா..?

நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படக் கூடிய மிக பொதுவான அறிகுறி இதுவாகும். நம் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கின்றபோது, அதனை வடிகட்டி கூடுதல் குளுகோஸ்களை உறிஞ்சும் பணியை சிறுநீரகங்கள் மேற்கொள்ளும். ஆனால், அதனை சிறுநீரகங்கள் தக்க வைத்துக் கொள்ள முடியாதபோது சிறுநீர் வழியாக அதனை வெளித்தள்ளும். இதனால், நீடித்த தாகமும், அடிக்கடி கழிவறை செல்ல வேண்டிய நிர்பந்தமும் ஏற்படும்.

ஆரோக்கியமான மனிதர் எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்..?

24 மணி நேர சுற்றில் ஒரு நபர் 2 லிட்டர் தண்ணீர் குடித்தால் சுமார் 6 முதல் 8 முறை சிறுநீர் கழிக்கலாம். 10 முறை சிறுநீர் கழித்தாலும் ஒன்றும் பிரச்சினை கிடையாது. ஆனால், இதற்கு மேலும் சிறுநீர் கழிப்பது, அதிக தண்ணீர் அருந்துவது என்ற நிர்பந்தம் ஏற்பட்டால் அது சர்க்கரை நோய்க்கான அறிகுறி ஆகும்.

நீரிழிவு நோயாளி எத்தனை முறை சிறுநீர் கழிப்பார்.?

சராசரியாக 7 முதல் 10 முறைக்கு மேல் சிறுநீர் கழிப்பவர்களுக்கு சர்க்கரை நோய் இருக்க வாய்ப்பு உண்டு. ஆரம்ப கால கட்டத்தில் உள்ள சர்க்கரை நோயாளிகள் நாளொன்றுக்கு 3 லிட்டர் தண்ணீரும், மிகுந்த பாதிப்பை கொண்டவர்கள் 20 லிட்டர் வரையிலும் தண்ணீர் அருந்த வாய்ப்பு உண்டு. வாய் வறட்சி காரணமாக இந்த நிலை ஏற்படும்.

மற்ற அறிகுறிகள்

அதிக முறை சிறுநீர் கழிப்பதுடன், கீழ்கண்ட பிரச்சினைகளும் சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் ஆகும்.

  • வாய் வறட்சி
  • மிகுந்த சோர்வு
  • பார்வையில் பிரச்சினை
  • திடீர் எடை இழப்பு
  • சாப்பிடுவது மற்றும் தூங்கும் முறைகளில் மாற்றம்

பரிசோதனை அவசியம்

ரத்த பரிசோதனை செய்வதன் மூலமாக சர்க்கரை நோய் பாதிப்பை கண்டறியலாம். ரத்தத்தில் ஹெபிஏ 1சி என்ற அளவை பரிசோதித்து பார்த்தால், 3 மாத சராசரி சர்க்கரை அளவை தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலமாக சர்க்கரை நோய் தாக்கும் அபாயத்தை கண்டறியலாம்.

அபாயங்களை குறைப்பது எப்படி..?

ஆரோக்கியமான வாழ்வியல் மாற்றங்கள் மூலமாக இதை தடுக்கலாம். தினசரி உடற்பயிற்சி செய்தல், காய்கறிகளை அதிகமாக உட்கொள்ளுதல் போன்ற பழக்கங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். புகை பிடித்தல் மற்றும் மது அருந்தும் பழக்கத்தை கைவிட வேண்டும்.

🔻 🔻 🔻 

இயற்கையான முறையில் கெமிக்கல் பயன்படுத்தாமல் கொசுக்களை விரட்டும் அசத்தலான வழிகள்!!!

October 05, 2023 0

 பொதுவாக கொசுக்களிடம் இருந்து தப்பிப்பது என்பது ஒரு சவாலான காரியம் தான். எவ்வளவு தான் நாம் எச்சரிக்கையாக இருந்தாலும் கொசுக் கடியிலிருந்து நம்மால் தப்பிக்கவே முடியாது. கொசுக்கள் மூலமாக மலேரியா, டெங்கு போன்ற உயிரை பறிக்கும் ஏராளமான நோய்கள் பரவுகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

மழைக்காலம் வர இருப்பதால் கொசுக்களிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது அவசியமாகும். பெரும்பாலும் கொசுக்கள் மழைக்காலத்திலும் அல்லது குப்பைகள் அதிகமாக குவிந்து கிடக்கக்கூடிய பகுதிகளிலும் அதிகமாக காணப்படும். கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்பது அவசியம் தான். ஆனால் அதற்காக நமக்கு கேடு விளைவிக்க கூடிய கொசு விரட்டிகளை ஒருபோதும் பயன்படுத்தக் கூடாது. அவை கொசுக்களை விரட்டுவதுமட்டுமல்லாமல் நம் உடலுக்கும் ஏராளமான தீங்குகளை விளைவிக்கக்கூடும்.

எனவே முடிந்த அளவு இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டக்கூடிய முயற்சிகளில் ஈடுபடுவது அவசியம். கடைகளில் கிடைக்க கூடிய கமர்ஷியல் மஸ்கிடோ ரிப்பலன்டுகளில் தீங்கு விளைவிக்க கூடிய கெமிக்கல்கள் சேர்க்கப்படுகின்றன. ஆகவே கொசுக்களுக்கு பயந்து வேறு விதமான ஆபத்துகளில் நாம் மாட்டிக் கொள்ளக் கூடாது. பலருக்கு இயற்கையான கொசு விரட்டிகள் பற்றி தெரிவதே இல்லை. எனவே பாதுகாப்பான அதேசமயம் கொசுக்களை திறம்பட விரட்டக்கூடிய ஒரு சில இயற்கை கொசு விரட்டிகளை பற்றி இப்பொழுது பார்க்கலாம்.

மாட்டு சாண புகை : முதலில் நாம் பார்க்க இருப்பது மாட்டு சாணம். மாட்டு சாணத்தை எரிப்பதன் மூலமாக வெளிவரக்கூடிய புகையானது ஈக்கள், கொசுக்கள் மற்றும் பிற பூச்சிகளை விரட்டுவதில் திறம்பட செயல்படுகிறது. இவற்றை ஒரு முறை எரிப்பது குறைந்தபட்சம் 8 முதல் 10 மணி நேரம் வரை புகையை வெளியேற்றும். எனவே செலவில்லாமல், இயற்கையான முறையில் கொசுக்களை விரட்டுவதற்கு மாட்டு சாணம் ஒரு அற்புதமான தீர்வாக அமைகிறது.

சிட்ரோனெல்லா எண்ணெய் : சிட்ரோனெல்லா எண்ணெயை நமது சருமத்தில் நேரடியாக தடவுவதும் கொசுக்களை விரட்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கும். ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு இந்த எண்ணெயை தடவுவது பயனளிக்கும்.

சாம்பிராணி புகை  : சாம்பிராணியை பயன்படுத்துவது பூச்சிகள் மற்றும் கொசுக்களை ஓட ஓட விரட்டுவதற்கு பெரிய அளவில் கை கொடுக்கும். அது மட்டுமல்லாமல் இந்த சாம்பிராணி புகை நமது உடலுக்கும் எந்த ஒரு தீங்கையும் ஏற்படுத்தாது.

யூகலிப்டஸ் எண்ணெய் :எலுமிச்சை யூகலிப்டஸ் எண்ணெயானது சிறந்த கொசு விரட்டியாக செயல்படுகிறது. ஆனால் இதனை பயன்படுத்துவதற்கு முன்பு வேறு ஏதேனும் கேரியர் எண்ணெயில் கலந்து அதன்பிறகே பயன்படுத்த வேண்டும். மேலும் நமது சருமத்தில் இதனை அப்ளை செய்வதற்கு முன்பு ஒரு முறை பேட்ச் டெஸ்ட் செய்து பார்ப்பதும் அவசியம்.

🔻 🔻 🔻 

October 4, 2023

காலில் இந்த அறிகுறி தெரிந்தால் உங்களுக்கு கொலஸ்ட்ரால் இருக்கலாம்.. உடனே டாக்டரை பாருங்க..!

October 04, 2023 0

 அதிக சர்க்கரை, உயர் ரத்த அழுத்தம் மற்றும் அதிக கொலஸ்ட்ரால் ஆகிய மூன்றுமே உயிர்க்கொல்லிகளாக கருதப்படுகிறது. இதில் குறிப்பாக அதிக கொலஸ்ட்ரால் என்பது இதய நோய்களுக்கான முக்கிய காரணியாக இருக்கின்றது.

உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பதை கண்டறிய பல அறிகுறிகள் உள்ளன. சமீபத்தில் உடற்பயிற்சி செய்யும் பொழுது கால்களில் குறிப்பிட்ட அறிகுறி தோன்றினால் அது அதிக கொலஸ்ட்ரால் இருப்பதைக் குறிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நல்ல கொலஸ்டிரால் மற்றும் கெட்ட கொலஸ்டிரால்

கொலஸ்டிராளில் நல்ல கொலஸ்டிரால், கெட்ட கொலஸ்டிரால் என்று இரு வகைகள் உள்ளன. நம் உடலிலேயே இவை உற்பத்தியாகும் மற்றும் உணவுகளின் மூலம் கிடைக்கும். எல்டிஎல் கொலஸ்ட்ரால், கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், ஹெச்டிஎல் கொலஸ்டிரால் நல்ல கொலஸ்டிரால் என்றும் கூறப்படுகிறது.

குறைவான அடர்த்தி கொண்ட லிப்போபுரோட்டீன் அதாவது LDL கொலஸ்ட்ரால் அதிகமாக இருப்பது நம்முடைய ஆரோக்கியத்திற்கு கேடு மற்றும் இதயத்திற்கும் பாதிப்பை விளைவிக்கும்.

கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாகும் போது ஆர்ட்டரிகளில் கொஞ்சம் கொஞ்சமாக கொழுப்பை சேகரித்து ரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்தும். நாட்கள் செல்ல செல்ல இது இதயத்தை இதயத்தில் இருந்து வெளிவரும், உட்செல்லும் ரத்த ஓட்டத்தை பாதிக்கும். இதனால் இதய பாதிப்பு ஏற்படும்.

உடற்பயிற்சி செய்தால் கால்களில் இந்த அறிகுறி தோன்றலாம்

கொலஸ்ட்ரால் அதிகமாக இருக்கிறது என்பதற்குப் பல அறிகுறிகள் உள்ளன. அதில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது தான் காலில் தோன்றக்கூடிய அறிகுறியாகும். கால்கள் மற்றும் பாதங்களில் கூட ஆர்ட்டரிகள் உள்ளன. எனவே உங்களுடைய உடலில் கொலஸ்ட்ரால் அதிகமாக இருந்தால் கால்களில் இருக்கும் ஆர்ட்டரிகளில் கொழுப்பு சேர்ந்து பெரிஃபெரல் ஆர்ட்டரி என்ற ஒரு நோய் உருவாகும்.

PAD என்று கூறப்படும் இந்த நோய், உங்கள் இடுப்புப் பகுதிகள், தொடை மற்றும் கெண்டைக்கால் தசைகளில் கிராம்ப்ஸ் என்ற தசைபிடிப்பு மற்றும் வலியை ஏற்படுத்தும். கால்களில் போதிய அளவுக்கு ரத்த ஓட்டம் சரியாக இல்லையென்றால் இந்த கிராம்ப் தோன்றும்.

மேலும், கொழுப்பு, ஆர்ட்டரிகளின் சுவர்களில் சேர்வதால், ரத்த ஓட்டம் தடைபடும். இந்த நிலைக்கு அதிரோக்ளோரோசிஸ் என்று பெயர். பெரிஃபெரல் நோய் என்பது, கால்களுக்கு இந்த ரத்த ஓட்டம் தடைபடுவதால் ஆர்ட்டரிகள் சுருங்குவதைக் குறிக்கிறது.

PAD என்றால் என்ன?

அமெரிக்க இதய அசொசியஷன் குறிப்பிட்டுள்ளபடி, உங்களுக்கு அதிக கொலஸ்டிரால் இருக்கும் போது, PAD நோய் எற்படும் அபாயம் உள்ளது. இதனால், உங்களுடைய இடுப்புப் பகுதி, தொடை மற்றும் கெண்டைக் கால் பகுதிகளில் வலி ஏற்படும். குறிப்பாக, உடற்பயிற்சி செய்யும் போது, நீண்ட தூரம் நடக்கும் போது, படிகள் ஏறும் போது, மேற்கூறிய பகுதிகளில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்படும்.

கொலஸ்டிரால் மூலம் PAD ஏற்படும் அபாயம் இருப்பவர்களுக்கு, கால்களில் வலி, வீக்கம், மரத்து போகும் உணர்வு, காயங்கள் ஆறாமல் இருப்பது, பலவீனம், கால்களில் நிறம் மாறுதல், முடி கொட்டுவது, நகங்கள் உடைவது, கைகளில் வலி மற்றும் பிடிப்பு ஆகியவை ஏற்படலாம். நீண்ட நேரம் கால்களுக்கு வேலை கொடுத்தால் தீவிரமான வலி ஏற்படலாம். அதே போல கைகளும் மறத்துப் போகலாம். கால்களின் சரும நிறம் மாறக்கூடும். சிலருக்கு, விறைப்புத்தன்மை குறைபாடும் உண்டாகும்.

கொலஸ்டிரால் அதிகரிக்காமல், நோய் வராமல் தவிர்ப்பது எப்படி?

உடல் நல்ல ஆரோக்கியமாக இருந்தாலும் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது மிகமிக அவசியமாகும்.

கொலஸ்ட்ராலை குறைப்பதற்கு ஆரோக்கியமாக உணவுகளை சாப்பிடுவது மிக மிக முக்கியம். கொழுப்பு, எண்ணெயில் பொறித்த உணவுகள், வறுத்த உணவுகள், குளிர்பானங்கள் ஆகியவற்றை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். நார் சத்து நிறைந்த உணவுகள், முழு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் கீரை வகைகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

உணவுக் கட்டுப்பாடு என்பதைத் தவிர்த்து உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். உடற்பயிற்சி செய்யும் பொழுது ரத்த ஓட்டம் சீராகி தசைகள் மற்றும் எலும்புகள் வலுப்படும். இதன் மூலம் பல உள்ளிட்ட நோய்கள் வராமல் தடுக்க முடியும். அதிக கொலஸ்ட்ரால் இருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வதும் அவசியம்.

🔻 🔻 🔻 

நெட்டிசன்கள் மத்தியில் பிரபலமாகும் புதிய ஹெல்த் ட்ரெண்ட் "சைலன்ட் வாக்கிங்'.. நன்மைகள் என்ன..?

October 04, 2023 0

 பெருந்தொற்றுக்கு பிறகு உடல் நலனை பாதுகாத்து கொள்வது குறைத்த அக்கறை மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளதால் வேறு எந்த ஒர்கவுட்ஸ்களை செய்ய நேரம் இல்லாவிட்டாலும், பலர் தினசரி வாக்கிங் செல்லும் பழக்கத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

நீங்களும் ரெகுலராக வாக்கிங் செல்லும் நபர் என்றால் சமீப வாரங்களாக புதிய ஹெல்த் ட்ரெண்டாகி வரும் சைலன்ட் வாக்கிங் பற்றி நீங்கள் இங்கே தெரிந்து கொள்வது அவசியம். உடலை ஃபிட்டாக வைத்து கொள்வதில் வாக்கிங் முக்கிய பங்கு வகிக்கிறது. வாக்கிங் செல்பவர்களின் பலரும் காதில் ஹெட்ஃபோன் அல்லது இயர் ஃபோனை மாட்டி கொண்டு தங்களுக்கு பிடித்த மியூசிக் அல்லது பாடல்கள் அல்லது வேறு சிலவற்றை காதால் கேட்டு மகிழ்ந்து கொண்டே வாக்கிங் செல்கிறார்கள்.

இன்னும் சிலர் நண்பர்கள் அல்லது லைஃப் பார்ட்னரை வாக்கிங் மேட்-ஆக கூட சேர்த்து அரட்டை அடித்து கொண்டே வாக்கிங் செல்வார்கள். ஆனால் ஹெட்ஃபோன் போன்ற டிவைஸ் அல்லது கம்பெனி சேர்த்து பேசி கொண்டே நடப்பது உள்ளிட்ட எதுவுமே இல்லாமல் ஒருவர் நடைபயிற்சியில் மட்டுமே முழுக்கவனம் செலுத்தி தனியாக நடப்பதே சைலன்ட் வாக்கிங் ஆகும். இந்த லேட்டஸ்ட் ஹெல்த் ட்ரெண்ட் TikTok-ல் வைரலாகி வருகிறது. பேசாமலோ அல்லது பிடித்த இசையை கேட்காமலோ அமைதியாக நடப்பது, மன ஆரோக்கியம் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும் என கூறப்படுகிறது. சைலன்ட் வாக்கிங் செல்லும் போது மூச்சு பயிற்சியை போலவே உங்களது சுவாசத்தை ஆழ்ந்து கவனிப்பது, கடல், நீர் மற்றும் பறவைகளின் சத்தங்களைக் கேட்பது உங்களை மேலும் உற்சாகப்படுத்தும்.

சைலன்ட் வாக்கிங் செல்வதால் கிடைக்கும் நன்மைகள்: ஸ்ட்ரஸ் ரிலீஸ்: இசையை கேட்காமல் அல்லது பேசாமல் நடப்பது அமைதியான உணர்வை தருகிறது. இந்த அமைதி மூலம் ஸ்ட்ரஸ் ஹார்மோன் என குறிப்பிடப்படும் கார்டிசோலின் அளவு குறைகிறது மற்றும் பதற்றம் தணிகிறது. இதன் மூலம் மனஅழுத்தம் கணிசமாக குறைகிறது.

எமோஷ்னல் கன்ட்ரோல்: உங்களது தினசரி வாக்கிங்-ஐ கவனச்சிதறல் அற்ற சைலன்ட் வாக்கிங்-ஆக மாற்றுவது உங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதில் பெரிதும் உதவுகிறது. எதிர்பாரா விஷயங்களை அல்லது கடினமான சூழலை கையாளும் போது சட்டென்று முடிவெடுக்காமல் ஆசுவாசமாக இருப்பது நம்முள் எழும் உணர்ச்சிகளை புரிந்து கொண்டு அதனை மிகவும் திறம்பட கையாள சைலன்ட் வாக்கிங் உதவும்.

கவனத்தை மேம்படுத்துகிறது: ஒரு நபர் முழு கவனத்துடன் ஒரு நேரத்தில் ஒரு விஷயத்தில் கவனம் செலுத்துவது அவரது செயல்திறன் மற்றும் மன அமைதி மற்றும் மனத்தெளிவை மேம்படுத்த உதவுகிறது. வேறு விஷயங்களில் கவனம் சிதறிவிடாமல் நடைபயிற்சியில் மட்டுமே முழு கவனத்தையும் குவிக்க சைலன்ட் வாக்கிங் உதவுகிறது. அமைதியாக நடப்பது உங்களை தற்போதைய தருணத்தில் வைக்கிறது. சைலன்ட் வாக்கிங் செல்வது கடந்த கால நிகழ்வுகள் அல்லது தேவையற்ற வேறு விஷயங்களை பற்றி சிந்திக்காமல் நிகழ்காலத்தில் உங்கள் மனதின் எண்ணங்களை வைத்திருக்க தூண்டுவதன் மூலம் உங்களது கவனம் செலுத்தும் திறனை அதிகரிக்கிறது.

தூக்க தரம் மேம்படும்: சைலன்ட் வாக்கிங் செல்வது மனதை அமைதியாக மற்றும் தெளிவாக வைப்பதோடு தூக்கத்தின் தரத்தையும் மேம்படுத்துகிறது. மனதை அமைதியாக வைத்து கொண்டு வாக்கிங் செல்வது மனஅழுத்தத்தை குறைக்கிறது. இதன் மூலம் ஒட்டுமொத்தமாக ஒருவர் மனதளவில் மிக நிதானமாக இருக்க முடியும் என்பதால் நல்வாழ்வு அதிகரித்து கூடவே தூக்கத்தின் தரமும் அதிகரிக்கிறது.

மனநிறைவு அதிகரிக்கும்: silent perambulation மூலம் சுய விழிப்புணர்வு ஊக்குவிக்கப்படுகிறது. மனம் அமைதியாக இருந்தால் உங்களுக்கும் தோன்றும் எண்ணங்களையும், உணர்வுகளையும் தடையின்றி சுயபரிசோதனை செய்யலாம். இதன் மூலம் உங்களை நீங்களே சரியாக புரிந்து கொள்வதும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்துவதும் எளிதில் வசப்படும்.

🔻 🔻 🔻 

டெங்கு கொசு எப்போது கடிக்கும்..? எப்படி கண்டறிவது..? அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

October 04, 2023 0

 மழைக்காலம் தொடங்கிவிட்டது! மழைக்காலம் என்பது புத்துணர்ச்சி ஊட்டும் காலமாக இருந்தாலும் நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் காலமாகவும் மாறியிருக்கிறது. டெங்கு சிக்கன் குனியா உள்ளிட்ட நோய்கள், தேங்கியிருக்கும் மழைநீரில் பெருகும் கொசுக்களால் அதிவேகமாக பரவுகின்றன. ஏடிஸ் என்று கூறப்படும் ஒரு கொசு வகை இரவில் தான் கடிக்கும் என்ற தகவல் பரவி வருகிறது. இது எவ்வளவு உண்மை, இந்த ஏடிஸ் கொசுவால் டெங்கு பரவுகிறதா என்பதைப் பற்றி பார்க்கலாம்.

டெங்கு வைரசை சுமந்து செல்லும் கொசு ஒரு நபரை கடித்து, மற்றவரை கடிக்கும் பொழுது அது டெங்கு வைரஸ் காய்ச்சலை மிகச்சுலபமாக பரப்பி விடுகிறது. இந்த வைரஸில் நான்கு வகையான சீரோடைப்புகள் உள்ளன. இவை DEN-1, DEN-2, DEN-3, மற்றும் DEN-4 ஆகும். நாடு முழுவதும், கடந்த சில வாரங்களாக பதிவாகி இருக்கும் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பருவநிலை எப்போது எப்படி மாறும் என்று தெரியாத சூழல், திடீரென்று அதிக மழை, என்று அனைத்துமே இதற்கு முக்கிய காரணங்களாக கூறப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், புதிதாக பரவி வரும் பல விதமான வைரஸ்களும் டெங்கு தொற்றை தீவிரமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

டெங்கு கொசு இரவில் கடிக்குமா?

பொதுவாக இரவு நேரத்தில் அதிகமாக கொசுக்கடியை பலரும் பார்த்திருக்கலாம். எனவே இரவு நேரத்தில் மட்டும் தான் கொசுக்கள் கடிக்கும் பகல்நேரத்தில் கொசுக்கள் கடிக்காது என்ற ஒரு தவறான நம்பிக்கை பலரிடமும் காணப்படுகிறது. பகல் நேரத்தில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா போன்ற தொற்றுகளை எந்த அளவுக்கு ஒரு கொசுவால் ஒரு நபரிடமிருந்து மற்ற நபருக்கு பாதிப்பை ஏற்படுத்த முடியுமோ, அதே அளவுக்கு இரவு நேரத்திலும் தீவிரமான டெங்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும். சூரிய அஸ்தமனமான 2 மணி நேரம் பின்பும், அஸ்தமனத்திற்கு சில மணி நேரங்கள் முன்பு வரை கொசுக்கள் சுறுசுறுப்பாக இயங்கி வரும். ஆனால் சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு ஒரு மனிதனை கொசு கடிப்பது என்பது மிகவும் அரிதான செயல் என்று கூறப்படுகிறது.

அதேப்போல ஒரு நபரை கொசு எந்த இடத்தில் கிடைக்கிறது என்பதுகூட டெங்கு காய்ச்சலுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதையும் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இதை பற்றி வெளியான அறிக்கையின்படி டெங்கு வைரஸை சுமந்து செல்லும் கொசுக்கள், பெரும்பாலும் கை முட்டி மற்றும் கால் முட்டி (ankle and elbow) ஆகிய பகுதிகளில் தான் கடிக்கிறது என்று வெளியாகியிருக்கிறது. சின்னதாக கடித்தால் கூட, நோய் தொற்று ஏற்பட்டு அதற்கான அறிகுறிகள் தோன்றிவிடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் : 

டெங்கு கொசு கடித்த 4 நாட்கள் முதல் 10 நாட்களுக்குள் தொற்று உடலில் பரவி அறிகுறிகளை தோற்றுவிக்கும். இந்த அறிகுறிகள் எப்போது வேண்டுமானாலும் ஏற்படலாம் மற்றும் ஒவ்வொரு நபருக்கும் ஏற்படக்கூடிய டெங்கு தொற்றின் அறிகுறிகள் மாறுபடும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். டெங்கு தொற்றால் பாதிக்கப்பட்ட நபரின் வயது, அவருக்கு ஏற்கனவே இருக்கும் உடல் நல பாதிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் அறிகுறிகள் மாறுபடும். பொதுவான அறிகுறிகளாக, காய்ச்சல், எலும்பு வலி & அசௌகரியம், தசை வலி, உடல் அசதி’, கண்கள் சிவந்து போதல், வாந்தி, மயக்கம் உள்ளிட்டவை கூறப்படுகிறது.

2015 ஆம்ஆண்டு முதல், இந்தியாவின் தலைநகரான டெல்லியில் ஒவ்வொரு ஆண்டுமே அதிக அளவில் டெங்குக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை மூன்றாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு உள்ளது. மற்றும் ஒரு நபர் இறந்துள்ளார் என்பது பதிவாகி இருக்கிறது. யமுனை நதியில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் கடந்த ஜூலை மாதம் வெள்ளம் டெல்லியில் வருவது போன்ற ஒரு சூழல் ஏற்பட்டது. அதையடுத்து மழைக்காலத்துக்கு முன்பே ஏற்பட்ட தீவிரமான மழை ஆகியவை டெங்கு பாதிப்பை அதிகரித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

🔻 🔻 🔻 

உங்கள் இதயம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமா..? இந்த 6 பொருட்களை உங்கள் டயட்டில் சேருங்க!

October 04, 2023 0

சிறந்த உடல்நலமுடன் மகிழ்ச்சியாக இருக்க நம்முடைய இதயத்தின் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்க வேண்டும். முக்கிய உறுப்பான இதயம் 1 நிமிடத்திற்கு சராசரியாக 60 முதல் 100 முறை துடிக்கிறது. தவிர ஆண்டுக்கு சுமார் 1 மில்லியன் டன் ரத்தத்தை பம்ப் செய்கிறது.

அற்புதமான உறுப்பாக இருக்கும் இதயம் நம் உடலின் அனைத்து திசுக்களுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது. இப்படிப்பட்ட உறுப்பான இதயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சட்டென்று வெளியில் தெரியாத அறிகுறிகளை கொண்டு சைலன்ட் கில்லராக ஆளையே காலி செய்து விடுகின்றன. ஆரோக்கியமான உணவு, நல்ல மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றினால் மட்டுமே இதயம் சார்ந்த நோய்கள் வராமல் தவிர்த்து இதயத்தை வலுவாக, ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும். அந்த வகையில் நம்முடைய கிச்சனில் அன்றாடம் பயன்படுத்தும் சில மூலிகைகள் மற்றும் மசாலா பொருட்கள் இதை ஆரோக்கியத்தை பராமரிக்க உதவுகின்றன.

பிரபல ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா குறிப்பிடுகையில், நம் வழக்கமான டயட்டில் அற்புத மருத்துவ குணங்கள் கொண்ட மசாலாவை சேர்ப்பது இதய ஆரோக்கியத்தை பராமரிக்க உதவும் விவேகமான வழி என்கிறார் இதய நலனை பாதுகாக்க உதவும் மசாலாப் பொருட்களின் பட்டியலையும் ஷேர் செய்துள்ளார். அவை கீழே:

பூண்டு: அனைவரது வீடுகளிலும் தவறாமல் இருக்கும் பூண்டு இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. இதில் ஆக்டிவ் காம்பவுண்ட்டாக இருக்கும் Allicin-ஆனது lipid synthesis-ல் ஈடுபடும் என்சைம்களை தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. தவிர Allicin பிளேட்லெட் அக்ரிகேஷனை குறைக்கிறது. ஆக்ஸிடைஸ்ட் எரித்ரோசைட்ஸ் மற்றும் எல்டிஎல் ஆகியவற்றின் லிப்பிட் பெராக்ஸைடேஷனை தடுக்கிறது மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் ஸ்டேட்டஸை அதிகரிக்கிறது.

குர்குமின் (Curcumin): குர்குமின் என்பது முக்கிய மசாலாவான மஞ்சளில் உள்ள ஒரு ஆக்டிவ் காம்போனென்ட் ஆகும் மற்றும் இது மஞ்சள் மசாலாவிற்கு அதன் மஞ்சள் நிறத்தை கொடுக்கிறது. இதய ஆரோக்கியம் என்று வரும்போது குர்குமின் நம் ரத்த நாளங்களின் லைனிங்கான endothelium-ன் செயல்பாட்டை மேம்படுத்துகிறது. இதய நோயில் குறிப்பிடத்தகுந்த பங்கை கொண்டிருக்கும் inflammation மற்றும் ஆக்சிடேஷனை குறைக்க குர்குமின் உதவுகிறது.

கருப்பு மிளகு: நம்முடைய சமையல்களில் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் மசாலாப் பொருட்களில் ஒன்று, கருப்பு மிளகு. இது ஒரு சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இதில் காணப்படும் ஆக்டிவ் காம்போனென்ட்டான piperine, கெட்ட கொழுப்பை குறைக்க மற்றும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கின்றன. தவிர கருப்பு மிளகில் vanadium நிறைந்துள்ளது, இது மாரடைப்புக்கு பிறகு இதய செயல்பாட்டை மீட்டெடுப்பதில் கணிசமாக உதவுகிது.

இலவங்கப்பட்டை: இலவங்கப்பட்டையில் காணப்படும் ஆக்ட்டிவ் காம்போனென்ட்ஸ்களான cinnamaldehyde மற்றும் cinnamic acid உள்ளிட்டவை நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்யும் திறன் மற்றும் அதனுடன் தொடர்புடைய அழற்சி எதிர்ப்பு பண்புகளின் காரணமாக இதயத்திற்கான பாதுகாப்பு அதாவது கார்டியோ ப்ரோடெக்டிவ் என்று குறிப்பிடப்படுகின்றன.

தனியா: தனியா என்றழைக்கப்படும் கொத்தமல்லி விதைகள் குறிப்பிடத்தக்க ஹைப்போலிபிடெமிக் விளைவை (hypolipidemic action) கொண்டுள்ளன. hypolipidemic action என்பது ரத்த ஓட்டத்தில் லிப்பிட் அளவுகளை, குறிப்பாக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைட்ஸ்களை குறைக்கும் திறனை குறிக்கிறது. LDL கொலஸ்ட்ரால் லெவல் அதிகம் காணப்படுவது இதய நோய் அபாயத்திற்கு பங்களிக்கும் குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாகும்.

இஞ்சி: இஞ்சியில் முக்கிய active ingredient-ஆக இருக்கும் மூலப்பொருள் ஜிஞ்சரால் ( gingerol). இது ரத்த நாளங்களை தளர்த்தவும் மற்றும் ரத்த ஓட்டத்தைத் தூண்ட, வலியைக் குறைக்க உதவுகிறது. தவிர இஞ்சி ஒரு ஆன்டி-இன்ஃப்ளமேட்ரி ஏஜென்ட்டாகவும் உள்ளது, அதாவது இதய நோயை எதிர்த்துப் போராடுவதில் இது பயனுள்ளதாக இருக்கும்.

🔻 🔻 🔻 

October 3, 2023

ரூ. 58,100 வரை சம்பளம்... 8ம் வகுப்பு பாஸ் போதும்.. அரசு அலுவலகத்தில் நிரந்தர வேலை

October 03, 2023 0

 திருப்பத்தூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் நிலையில் ஏற்பட்டுள்ள காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர்அலுவலக உதவியாளர்
மொத்த காலியிடங்கள்11
ஊதியம்ரூ. 15700 - 58,100 என்ற ஊதிய அட்டவணையில் அரசு நிர்ணயம் செய்யும் பிற படிகளுடன்
வயது வரம்புஇந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வயது 01.07.2023 அன்று 32-க்கு கீழ் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.எனவே, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள்.  பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் இரண்டாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
கல்வித் தகுதி8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பம் வந்த சேர வேண்டிய கடைசி நாள்31.10.2023 மாலை 5.45 மணி வரை
இதர தகுதிகள்மிதிவண்டி மற்றும் இருசக்கர மோட்டார் வாகனம் ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும்

நிபந்தனைகள் : 

1. விண்ணப்பதாரர்கள் கல்வித்தகுதி, சாதிச் சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

2. இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியுள்ள நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

3. விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்களை முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.

4. சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை-1 (10-4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

5. தகுதியில்லாக விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

6. காலம் கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்

7. எந்த ஒரு விண்ணப்பத்தையும் நிராகரிக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு உண்டு

8. அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் அலுவலக வேலை நாட்களில் ஒப்புகை சீட்டுடன் கூடிய பதிவஞ்சல் மூலமாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி), ஊரக வளர்ச்சி அலகு, மூன்றாவது தளம்(E-பிளாக்) மாவட்ட ஆட்சியரகம் திருப்பத்தூர்-635601 என்ற முகவரிக்கு 31.10.2023 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நேரில் கொண்டு வரப்படும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

தகுதியுள்ள விண்ணப்பத்தாரர்களுக்கு நேர்காணல் நடைபெறும் இடம் மற்றும் தேதி குறிந்த தகவல் பதிவஞ்சல் மூலமாக அனுப்பி வைக்கப்படும். அலுவலக உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்ப படிவம் திருப்பத்தூர் மாவட்டத்திற்கான https://www.tirupathur.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ. 55,000 வரை சம்பளம்.. திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் வேலைவாய்ப்பு

October 03, 2023 0

 வளரும் வட்டார திட்ட அலுவலர் பதவிக்கான (Aspirational Blocks Programme) வேலைவாய்ப்பு அறிவிப்பை திருநெல்வேலி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் அக்டோபர் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

பதவியின் பெயர்வளரும் வட்டார திட்ட அலுவலர்
காலியிடம்1
பணிக்கான இடம்திருநெல்வேலி, நாங்குநேரி
பனிக்காலம்பதவியேற்ற நாளிலிருந்து 12 மாதங்கள் (அல்லது) நவம்பர் 2024 வரை

தகுதிகள்:

தகுதியான கல்வி நிலையங்களில் முதுநிலை கல்வி பயின்றிருக்க வேண்டும்.

தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் செயல்பாடுகளை விளக்கம் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்

சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்.

திட்டங்களை நிர்வாகப்படுத்தும் திறன் பெற்றிருக்க வேண்டும். வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில் வேலை செய்திருக்க வேண்டும்.

ஆங்கிலம் மற்றும் தமிழில் தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சி தொடர்பாக உயர் கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்

ஊதியம்: ரூ.55,000/- (மாத ஊதியம்) (வரி பிடித்தம் பொருந்தும்)

வளரும் வட்டார திட்ட அலுவலருக்கான பணி மற்றும் கடமைகள் : 

1. வளரும் வட்டார திட்ட பகுதிகளின் வளர்ச்சிக்கான செயல்பாடுகளை வடிவமைப்பு செய்தல் மற்றும் திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல்.

2. திட்டங்களை செயல்படுத்துதல், சவால்களை கண்டறிதல், போன்றவைகளுக்காக தொடர்ச்சியாக களங்களை பார்வையிடல்

3. வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு தகவல்களை பகுப்பாய்வு செய்தல் மற்றும் ஆதாரங்கள் அடிப்படையில் பரிந்துரைகளை கூறுதல்

4. உள்ளூர் சமுக மக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிப் பட்டறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள், திறன் வளர்ச்சி பயிற்சிகள் செயல்படுத்துதல்.

5.சிக்கல்கள், சவால்கள் மற்றும் தேவை போன்றவற்றிக்காக மாநில மற்றும் NITI அளவில் இணைந்திருத்தல்.

6. மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட பிற பொறுப்புகள்.

விண்ணப்பங்களை மாவட்ட இணையதளமான https://tirunelveli.nic.in பதிவு செய்யவும். என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்




🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Indigo Airlines-ல் Consultant காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!🔻

October 03, 2023 0

 Indigo Airlines-ல் Consultant காலிப்பணியிடங்கள் – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || முழு விவரங்களுடன்!

Consultant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை Indigo Airlines தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Consultant பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் Junior Residents வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.39,100/-🔻

October 03, 2023 0

 PGIMER ஆணையத்தில் Junior Residents வேலை – நேர்காணல் மட்டுமே || சம்பளம்: ரூ.39,100/-

PGIMER ஆணையம் ஆனது Junior Residents பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

Junior Residents பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Residents கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

PGIMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Residents ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,600/- முதல் ரூ.39,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 11.10.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news