Agri Info

Adding Green to your Life

October 14, 2023

எந்த தேர்வும் கிடையாது: அரசு போக்குவரத்துக் கழகத்தில் 335 காலியிடங்கள் - உடனே விண்ணப்பியுங்கள்

October 14, 2023 0

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் இயந்திரவியல் பாடங்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்ளுக்கு  ஒரு வருட  தொழில் பழகுநர் பயிற்சி  காலிப்பணியிடங்களுக்கான அறிவிக்கையை வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரம்:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சிபட்டயபடிப்பு தொழில் பழகுநர் பயிற்சிமொத்த காலியிடங்கள்
விழுப்புரம் மண்டலம்702696
கோயம்பத்தூர் மண்டலம்346296
நாகராக்கோயில் மண்டலம்301040
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்து222244
சேலம் மண்டலம்092029
எம்டிசி - சென்னை101727
தருமபுரி மண்டலம்022123
திருநெல்வேலி மண்டலம்070714
மொத்தம்150185335

 

பொறியியல் துறை அல்லாதோர் தொழில் பழகுநர் பயிற்சி

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம்பட்டப்படிப்பு தொழிற்பயிற்சி
நாகர்கோயில்20
அரசு விரைவு போக்குவரத்துக் கழகம்09
திருநெல்வேலி53
மொத்தம்82

 

கல்வி தகுதி:  பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி காலியிடத்திற்கு விண்ணப்பிக்க இயந்திரவியல், தானியியங்கிவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். பட்டயப்படிப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தொடர்புடைய துறைகளில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும். பொறியியல் துறை அல்லாதோர் பிரிவுக்கு பிஏ/பி எஸ்சி.,/ பி.காம்/ பிபிஏ/ பிசிஏ  ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

2019, 2020, 2021, 202,  2023 ஆகிய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்கள் மட்டுமே இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியம்:   ஒவ்வொரு துறைக்கும் குறிப்பிட்டுள்ளபடி கல்வி மற்றும் தொழில்நுட்ப தகுதியின் அடிப்படையில் குறைந்த பட்ச உதவித் தொகை நிர்ணயிக்கப்படும். அதன்படி, பட்டப்படிப்பு தொழில் பழகுநர் பயிற்சி பதவிக்கு மாத உதவித் தொகையாக ரூ. 9000 வழங்கப்படும். பட்டயப்படிப்பு காலியிடத்திற்கு மாத உதவித் தொகையாக ரூ. 8000 வழங்கப்படும். பொறியியல் துறை அல்லாதோர் பட்டபடிப்பு காலியிடத்திற்கு மாதம் ரூ. 9000 உதவித் தொகையாக வழங்கப்படும்.

தேர்வு முறை: இதற்கு எவ்வித எழுத்துத் தேர்வும் நடத்தப்படாது. அந்தந்த பதவிக்கு கோரப்பட்ட  குறைந்தபட்ச கல்வி தகுதியில் பெறப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? ஆன்லைன் மூலம்  மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும்.  https://boat-srp.com என்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் அக்டோபர்  10 வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்து கொள்ள இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 13, 2023

மாவுச்சத்து உணவுகளை சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்குமா..?

October 13, 2023 0

 நாம் ஆரோக்கியமாக வாழ இதய நலன் மிக அவசியமானது. இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் கொழுப்புகள் படியும் பட்சத்தில் அடைப்பு ஏற்பட்டு, அதனால் ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். பெரும்பாலும் கெட்ட கொழுப்பு எனப்படும் எல்டிஎல் வகை கொழுப்புகள் தான் மிக ஆபத்தானவை. அந்த வகையில் கொலஸ்ட்ரால் மிகுதியாக இருக்கும் நபர்கள் சிவப்பு இறைச்சி, நெய், வெண்ணெய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.

அதே சமயம், இந்தியர்கள் பெரும்பாலும் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்கின்ற மாவுச்சத்து உணவுகளாலும் கூட கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கலாம். இது எப்படி அதிகரிக்கிறது, இது எந்த வகையில் உடலுக்கு ஆபத்தானது? இதைத் தடுப்பது எப்படி என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

மாவுச்சத்து உணவுகளால் கொலஸ்ட்ரால் அதிகரிப்பது எப்படி? பொதுவாகவே இந்தியர்களுக்கு மரபு ரீதியாக ஹெச்டிஎல் என்னும் நல்ல கொலஸ்ட்ரால் அளவுகள் குறைவாகவே இருக்கும். அதே சமயம் மாவுச்சத்து உணவுகளை சாப்பிடுவதால் உடலில் டிரைகிளிசைரைடு என்னும் வகையிலான கொழுப்பு வகை அதிகரிக்கும். இதுதான் நம் உடலில் பின்பு கெட்ட கொழுப்பாக மாறுகிறது.

மாவுச்சத்து உணவால் இதயத்திற்கு பாதிப்பு உண்டா? மாவுச்சத்து உணவை சாப்பிடுவதால் உடல் பருமன் அதிகரிக்கும் என்றும், அதன் எதிரொலியாக கல்லீரல் கொழுப்பு அழற்சி நோய் மற்றும் இதய நோய் ஆகியவை ஏற்படும் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நம் உடலில் ஹெச்டிஎல் என்னும் நல்ல கொழுப்பு அளவுகள் அதிகரிக்கும்போது, அது எல்டிஎல் என்னும் கெட்ட கொழுப்புகளை அப்புறப்படுத்தி விடும். ஆனால், டிரைகிளிசைரைடு கொழுப்புகளை அது வெளியேற்றாது.

சீரான உணவு அளவு என்ன ? நாம் சாப்பிடும் உணவில் பெரும்பாலும் 20 சதவீதம் அளவுக்குத்தான் புரதம் இருக்கும். எஞ்சியுள்ள 80 சதவீத அளவுள்ள உணவில் 40 சதவீதம் மாவுச்சத்து கொண்ட உணவுகளையும், 40 சதவீதம் கொழுப்புகள் கொண்ட உணவையும் சாப்பிட்டுக் கொள்ளலாம்.

நல்ல கொழுப்பு எதில் கிடைக்கும்? முதல் கெட்ட கொழுப்புகளை குறைக்க வேண்டும் என்றால் ஏற்கனவே சமையலுக்கு பயன்படுத்தப்பட்ட எண்ணெயை மீண்டும் பயன்படுத்தக் கூடாது. அதே சமயம், நட்ஸ், விதைகள், மீன் போன்றவற்றை எடுத்துக் கொண்டால் நமக்கான நல்ல கொழுப்புகள் அதிகரிக்கும். உதாரணத்திற்கு பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு போன்றவற்றில் இருந்து நல்ல கொழுப்புகள் கிடைக்கும்.

சராசரி கொலஸ்ட்ரால் அளவுகள் என்ன? நம் உடலில் மொத்த கொலஸ்ட்ரால் அளவு 200 mg/dL என்ற அளவிலும், கெட்ட கொழுப்புகள் 100 mg/dL என்ற அளவிலும், நல்ல கொழுப்புகள் 60 mg/dL என்ற அளவிலும் இருந்தால் இதய நலனுக்கு அது சிறந்ததாகும். ரத்தப் பரிசோதனை செய்து கொள்வதன் மூலமாக கொலஸ்ட்ரால் அளவுகளை தெரிந்து கொள்ளலாம்.


🔻 🔻 🔻 

அதிக பசியை கட்டுப்படுத்தி சர்க்கரை அளவை குறைக்க உதவும் ஸ்மூத்தி பானங்கள்.. நீரிழிவு நோயாளிகள் அவசியம் தெரிஞ்சுக்கோங்க..!

October 13, 2023 0

 மனம் நிறைய ஆசை இருந்தாலும், வயிறு நிறைய பசி இருந்தாலும் நினைத்ததை சாப்பிட முடியாமல் தவிப்பவர்களில் நீரிழிவு நோயாளிகள் முக்கியமானவர்கள். அதிலும், ஜூஸ் மற்றும் ஸ்மூத்திகள் என்றால் எல்லோருக்கும் பிரியமானதாக இருக்கும். ஆனால், என்ன செய்வது, அவற்றை அருந்தினால் ரத்த சர்க்கரை அளவு அதிகரித்து விடுமோ என்ற அச்சத்தில் ஒதுக்கி வைக்க நேரிடும்.

பொதுவாக நாம் உண்ணும் உணவில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றம் செய்கின்ற இன்சுலினை சர்க்கரை நோயாளிகளின் கனையம் சுரக்காமல் போவதால் தான் இந்தப் பிரச்சினை வருகிறது. ரத்த சர்க்கரையை சமநிலையில் வைத்திருக்க உதவும் அந்த ஹார்மோன் சுரக்காத நிலையில், வயிற்றுக்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டியுள்ளது.

அதிலும் இதய நோய்கள், உடல் பருமன், ஆரோக்கியமற்ற கொலஸ்ட்ரால் என பல நோய்களுக்கு சர்க்கரை நோய் அடித்தளமாக அமைவதால் நாமே உணவுக் கட்டுப்பாடுகளை அதிகரித்துக் கொள்ள வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுவோம். இத்தகைய நிலையில், சர்க்கரை நோயாளிகளும் விரும்பி சாப்பிடத்தக்க வகையில் 5 விதமான ஸ்மூத்திகளை இங்கே பட்டியலிட்டுள்ளோம்.

பெர்ரி - வாழைப்பழம் - காலிஃபிளவர் ஸ்மூத்தி : சர்க்கரை நோயாளிகள் ஊட்டச்சத்து மிகுந்த காய்கறிகள் மற்றும் பழங்களை சாப்பிட்டால் ரத்த சர்க்கரை பெருமளவுக்கு உயராது. அந்த வகையில் காலிஃபிளவர் மற்றும் வாழைப்பழம், பெர்ரி பழம் ஆகியவற்றை சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து அருந்தலாம்.

அன்னாசிப்பழம் - திராட்சை ஸ்மூத்தி : அன்னாசிப்பழம் மற்றும் திராட்சையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இது நம் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து மற்றும் மினரல்கள் ஆகியவற்றை வழங்கும். அன்னாசி - திராட்சை ஸ்மூத்தி அருந்தினால் உடலுக்கு புதுமையான உத்வேகம் கிடைக்கும்.

பீச் ஸ்மூத்தி : கொடைக்கானல், ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் விளையக்கூடிய பீச் பழமானது நல்லதொரு ஸ்நாக்ஸ் போல அமையும். இதில் கால்சியம் சத்து நிறைவாக உள்ளது. இந்த ஸ்மூத்தியை எடுத்துக் கொண்டால் உடல் எடை பெருமளவில் குறையும். அதேபோல தயிர் மற்றும் பால் போன்றவை பிடிக்காத நிலையில் நம் உடலுக்கு எலெக்ட்ரோலைட் சத்து கிடைக்க இளநீர் அருந்தலாம்.

க்ரீன் ஸ்மூத்தி :பச்சை நிறத்தில் அமைகின்ற ஸ்மூத்தி பார்த்தவுடன் நம் சுவை உணர்வை தூண்டும். அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாலக்கீரை மற்றும் அவகோடா பழம் ஆகியவற்றுடன் பாதாம் பட்டர் சேர்த்து ஸ்மூத்தி தயாரிக்கலாம்.

கடலை பட்டர் ஓட்மீல் ஸ்மூத்தி : மிகுதியான புரதம் மற்றும் நார்ச்சத்து நிரம்பிய ஸ்மூத்தியை விரும்பும் நபர் என்றால் இந்த கடலை பட்டர் ஓட்மீல் ஸ்மூத்தி எடுத்துக் கொள்ளலாம். அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு இது நல்லதொரு சத்துமிக்க உணவாக அமையும்.


🔻 🔻 🔻 

வளரும் டீன் ஏஜ் பெண்களுக்கு எந்த மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்..? பெற்றோர்களுக்கான டிப்ஸ்..!

October 13, 2023 0

 உங்கள் குழந்தப்பருவத்திலும் வளர் இளம் பருவத்திலும் என்ன விதமான உணவுகளை சாப்பிடுகிறீர்களோ, அது உங்கள் உடல்நலத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை உருவாக்கும். பதின் பருவ குழந்தைகள், குறிப்பாக சிறுமிகளுக்கும் இது பொருந்தும். இந்த வயதில் உள்ள சிறுமிகள் தங்கள் உடல்நிலையில் பல மாறுதல்களை எதிர்கொள்வார்கள். இந்த சமயத்தில்தான் அவர்களுக்கு ஊட்டச்சத்து மிகுந்த உணவுகள் அதிகம் தேவைப்படும்.

வளர் இளம் குழந்தைகள், குறிப்பாக டீனேஜ் பெண்கள் என்ன மாதிரியான உணவுகளை இந்த வயதில் அவசியம் சாப்பிட வேண்டும் என்பது குறித்து நமக்கு விளக்குகிறர் ஊட்டச்சத்து நிபுணர் ஷாலினி சுதாகர். இளம் பெண்களின் பருவமடையும் காலம் எந்தவித சிக்கல் இல்லாமல் இருக்கவும், அவர்களின் ஆரோக்கியமான ஹார்மோன் வளர்ச்சிக்கும், வாழ்க்கை முழுவதும் தொந்தரவு தராத வகையில் மாதவிடாய் செயல்பாட்டிற்கும் உதவி செய்யக் கூடிய மூன்று முக்கியமான விசேஷ உணவுகளை ஷாலினி பரிந்துரைக்கிறார்.

முருங்கை பொடி: பெண்களின் ஹீமோகுளோபின் மற்றும் ஹார்மோன் ஆரோக்கியத்திற்கு இரும்புச் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது. தினமும் எந்த வகையிலாவது ஒரு டீ ஸ்பூன் முருங்கை பொடியை வளர் இளம் பெண்கள் சாப்பிட வேண்டும்.

ஆளி விதைகள்: கால்சியம், இரும்புச்சத்து, மாக்னீசியம், வைட்டமின் சி, இ மற்றும் கே என பல ஊட்டச்சத்துகள் ஆளி விதைகளில் உள்ளது. அனைத்து வயதினருக்கும் ஆரோக்கியமான ஹார்மோன் சுரப்பதற்கு இது மிகவும் அவசியமாகும்.

2 உலர்ந்த அத்திப்பழம்: பல ஊட்டசத்துகள் அடங்கிய இந்தப் பழத்தை நாம் பெரும்பாலும் தவிர்த்தே வருகிறோம். அத்திப் பழத்தில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் அதிகளவு உள்ளது. இது நமது ரத்தத்தை சுத்திகரிக்கும். அதுமட்டுமின்று நம்முடைய ஹீமோகுளோபினையும் அதிகப்படுத்தும். வளர் இளம் பெண்களின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் தேவையான மூன்று வகையான உணவுகளை பரிந்துரைக்கிறார் மகப்பேறு மருத்துவர் டாக்டர்.சுரபி சித்தார்தா.

கால்சியம் நிறைந்த உணவுகள்: வளர் இளம் பெண்களின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியம். தினமும் இவர்களை பால், தயிர், சீஸ் போன்ற கால்சியம் நிறைந்த உணவுகளை சாப்பிட சொல்லுங்கள். லாக்டோஸ் ஒவ்வாமை அல்லது ஏதாவது டயட் கட்டுப்பாடு இருந்தால் கால்சியம் அதிகமுள்ள பச்சை இலை காய்கறிகளான காலே, ப்ரோகோலி போன்றவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

இரும்புச் சத்து நிறைந்த உணவுகள்: நம் ரத்தம் ஆரோக்கியமாக இருப்பதற்கும் ஒட்டுமொத்த உடல் ஆற்றலுக்கும் இரும்புச் சத்து மிகவும் அவசியமாகும். லீன் புரொட்டீன் கொண்ட இறைச்சி உணவுகள், மீன், பீன்ஸ், பருப்புகள், வலுவூட்டப்பட்ட தானியங்கள் ஆகியவற்றை சாப்பிடுவது நல்லது. இரும்புச் சத்து உணவுகளோடு சேர்த்து வைட்டமின் சி அதிகமுள்ள சிட்ரஸ் பழங்களையும் சாப்பிடும் போது நம் உடலுக்கு இரும்புச் சத்து அதிகமாக கிடைக்கிறது.

முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து: நம் உடல் எடையை சீராக பராமபரிப்பதற்கும் செரிமான ஆரோக்கியத்திற்கும் நார்ச்சத்து மிகவும் உதவுகிறது. முழு கோதுமை பிரெட், சிவப்பரிசி, குயினா, ஓட்ஸ், பருப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளும் போது வளர் இளம் பருவ பெண்களுக்கு தேவையான வைட்டமின்களும் மினரல்களும் கிடைக்கின்றன.

🔻 🔻 🔻 

மாரடைப்பின் போது 'இசிஜி' நார்மலாக இருக்குமா..? மருத்துவர்கள் தரும் விளக்கம்..!

October 13, 2023 0

பிரபல இதயவியல் மருத்துவர் கவுரவ் காந்தி மாரடைப்பில் மரணமடைந்த செய்தி பலரையும் அதிர்ச்சியடைச் செய்துள்ளது. செவ்வாய் அன்று அதிகாலை இரண்டு மணிக்கு நெஞ்சு வலிப்பது போல் இருக்கிறது எனக் கூறியுள்ளார். இசிஜி எடுத்துப் பார்த்த போது எல்லாம் நார்மலாகவே இருந்துள்ளது. சரி, ஏதாவது அசிடிட்டி பிரச்சனையாக இருக்கலாம் என நினைத்த மருத்துவர், அதற்குரிய மருந்தை மட்டும் எடுத்துள்ளார்.

மருத்துவமனையில் சிறிது நேரம் இருந்துவிட்டு வீட்டிற்கு திரும்பிய கவுரவ், சரியாக காலை 6 மணிக்கு கழிவறையில் மயங்கி விழுந்து இறந்து போனார். இவரது இறப்பு பலருக்கு அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் கிளப்பியுள்ளது. மாரடைப்பின் போது இசிஜி நார்மலாக இருக்குமா என்பதே இப்போது பலரது கேள்வியாக உள்ளது.

மாரடைப்பின் போது கூட இசிஜி நார்மலாக இருக்குமா?

ஆமாம், அப்படியிருக்க வாய்ப்புள்ளது. திடீரென மாரடைப்பு வந்துள்ளதாக மருத்துவமணைக்கு வரும் 70 சதவிகிதத்தினருக்கு ஆரம்பத்திலேயே இசிஜி நார்மலாக இருக்காது. ஆனால் 30 சதவிகிதத்தினருக்கு இசிஜி நார்மலாகவே காண்பிக்கும். அவர்களும் நமக்கு ஆபத்து ஏதும் இல்லை என வீட்டிற்கு சென்றுவிடுவார்கள். ஆனால் அப்படி உடனடியாக செல்லக் கூடாது.

ரத்த நாளங்களில் அடைப்பு இருப்பவர்களுக்கோ அல்லது மாரடைப்பு வந்துள்ள நோயாளிகளுக்கோ முதல் முறை இசிஜி எடுக்கும் போது நார்மலாகவே இருக்கும். ஒவ்வொரு 15-30 நிமிட இடைவெளியில் இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு தொடர்ந்து அவர்களுக்கு இசிஜி எடுக்க வேண்டும். மேலும் சில பரிசோதனைகளான எக்கோ, ரத்தம் போன்றவற்றிலும் நார்மலாக இருந்தால், ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்தால் மட்டும் உண்மையான நிலவரம் தெரியும் என்கிறார் மருத்துவர் வினோத் குமார்.

மாரடைப்பின் போது, இதயத்திற்கு செல்ல வேண்டிய ரத்தம் குறைகிறது அல்லது முழுவதும் தடைபடுகிறது. கரோனரி தமனியில் ரத்தம் உறைவதாலேயே இவ்வாறு அடைப்பு ஏற்படுகிறது. இதயத்தின் மின்சார செயல்பாட்டை கணக்கிட உதவும் பரிசோதனையே இசிஜி (ஏலக்ட்ரோகார்டியோகிராம்). இதன் மூலம் மாரடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் கண்டறிய முடியும். எனினும் சில சமயங்களில் மாரடைப்பின் போது கூட இசிஜி எந்த எச்சரிக்கையும் தெரிவிக்காது என்கிறார் மனிபால் மருத்துவமனையின் இதயவியல் மருத்துவர் தீக்ஸித் கார்க்.

மாரடைப்பின் போது ஏன் சில சமயங்களில் இசிஜி நார்மலாக இருக்கிறது என்பதற்கான காரணங்களை விளக்குகிறார் டாக்டர்.கார்க்

நேரம்:

மாரடைப்பின் ஆரம்பகட்டத்தில் தான் பெரும்பாலும் இசிஜி எடுக்கப்படுகிறது. அப்போது இதயத்தில் ஏற்படும் மாற்றங்களை இசிஜி-யால் முழுதும் கண்டறிய முடியாது. இதயத்தில் ஏற்படும் மின்சார மாற்றங்கள் இசிஜி-யில் தெளிவாக தெரிய கூடுதல் நேரம் எடுக்கும்.

இடம்:

மாரடைப்பின் போது இதயத்தின் எந்த பகுதி பாதிக்கப்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க, இசிஜி-யை சரியான இடத்தில் பொறுத்த வேண்டும். இல்லாவிட்டால், அடைப்பு ஏற்பட்டுள்ள இடத்தின் மாறுதல்களை இசிஜி குறைவாகவே காண்பிக்கும்.

அமைதியான மாரடைப்பு:

சில மாரடைப்புகள் எந்த அறிகுறியும் இல்லாமல் அமைதியாக தாக்கும். அந்த சமயத்தில் தனக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது என்பது கூட நோயாளிக்கு தெரியாது. இதுபோன்ற சமயங்களில் இசிஜி நார்மலாகவே இருக்கும்.

கரோனரி தமனியின் துணை நாளங்கள்

சில அரிதான சமயங்களில், ரத்த நாளங்களில் அடைப்பு இருக்கும் நபருக்கு, அதற்கு மாற்றாக இன்னொரு நாளங்கள் வழியாக ரத்தம் செல்லும். இதனையே துணை நாளம் என அழைக்கப்படுகிறது. மாரடைப்பின் போது பாதிக்கப்பட்ட இதயத்திற்கு இதன் வழியாக ரத்தம் செல்கிறது. இதுபோன்ற சமயங்களிலும், மாரடைப்பு இருந்தும் கூட இசிஜி எடுக்கும் போது நார்மலாகவே இருக்கும்.

உங்களுடைய மூன்று தமனிகளில் அடைப்பு ஏற்பட்டிருந்தாலும் இசிஜி நார்மலாகவே இருக்கும். மாரடைப்பு வரும் என இசிஜி-யால் வெறும் 33% மட்டுமே கணிக்க முடியும். ஆகவே ஒருமுறை மட்டும் இசிஜி எடுக்காதீர்கள். இரண்டு மணி நேரத்திற்குள் நான்கைந்து முறை எடுத்தால் மட்டுமே, உங்களுக்கு இதயத்தில் பிரச்சனை உள்ளதா என மருத்துவரால் ஒரு முடிவுக்கு வர முடியும்.


🔻 🔻 🔻 

அதிகரிக்கும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த உதவும் சில வழிமுறைகள்

October 13, 2023 0

 

கொலஸ்ட்ரால் என்பது இரத்தத்தில் காணப்படும் ஒரு வகை கொழுப்பு மற்றும் உடலின் இயல்பான செயல்பாட்டிற்கு அவசியம். இருப்பினும், இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் இருந்தால் அது இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். கொலஸ்ட்ரால் கல்லீரலில் தயாரிக்கப்படுகிறது மற்றும் சில உணவுகளிலும் காணப்படுகிறது, குறிப்பாக நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகமாக இருந்தால் அதனை மருந்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வீட்டு வைத்தியம் உட்பட அதிக கொழுப்பைக் குறைக்க பல வழிகள் உள்ளன. இந்த பகுதியில், அதிக கொலஸ்ட்ராலுக்கு சில பயனுள்ள வீட்டு வைத்தியம் பற்றி தெரிந்துக் கொள்ளலாம்.

அதிக கொழுப்பை குறைக்க வீட்டு வைத்தியம்

உணவுமுறை

உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்துவதில் உணவுமுறை முக்கியப் பங்கு வகிக்கிறது. சில உணவுகள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவுகின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்ற நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகள், குடலில் உள்ள கொழுப்பினை உறிஞ்சுதல் மூலம் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். சிவப்பு இறைச்சி, வெண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் போன்ற நிறைவுற்ற மற்றும் டிரான்ஸ் கொழுப்புகள் அதிகம் உள்ள உணவுகள் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கலாம். மெலிந்த புரதங்கள், கொட்டைகள் மற்றும் விதைகள் போன்ற ஆரோக்கியமானதை சாப்பிடுவதன் மூலமாக  இந்த உணவுகளை மாற்றிவிட முடியும்.

 உடற்பயிற்சி

ஹை கொலஸ்ட்ரால் அளவை குறைக்க வழக்கமான உடற்பயிற்சி இன்றியமையாததாகும். உடற்பயிற்சி இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும், இதய வலிமையை அதிகரிக்கவும், அதிகப்படியான கொழுப்பை எரிக்கவும் உதவுகிறது, இது கொலஸ்ட்ரால் அளவு குறைவதற்கு வழிவகுக்கும். வாரத்தின் பெரும்பாலான நாட்களில் குறைந்தது 30 நிமிடங்கள் மிதமான உடற்பயிற்சியை மேற்கொள்ளுங்கள்.

பூண்டு

பூண்டு கொழுப்பைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளது. கல்லீரலில் கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைக்க உதவும் அல்லிசின் என்ற கலவை உள்ளது. இது குடலில் கொலஸ்ட்ரால் உறிஞ்சப்படுவதைக் குறைக்கவும் உதவுகிறது. நீங்கள் பூண்டை பச்சையாகவோ, சமைத்ததாகவோ அல்லது உங்களுக்கு பிடித்தவாறோ சாப்பிடலாம்..

ஆப்பிள் சைடர் வினிகர்

ஆப்பிள் சைடர் வினிகரில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் அசிட்டிக் அமிலம் உள்ளது, இது கல்லீரலில் உள்ள கொலஸ்ட்ரால் உற்பத்தியைக் குறைக்க உதவுகிறது. குடலில் கொலஸ்ட்ரால் உருவாவதை குறைக்கவும் உதவுகிறது. ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சைடர் வினிகரை ஒரு கிளாஸ் தண்ணீரில் கலந்து தினமும் குடிக்கவும்.

ஆளிவிதைகள்

ஆளிவிதையில் நார்ச்சத்து மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகமாக உள்ளது. இவை இரண்டும் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும். உங்கள் காலை உணவு, தானியங்கள் அல்லது தயிர் மீது ஆளிவிதையை தூவி விட்டு சேர்த்து சாப்பிடலாம். அதனால் உங்கள் உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவுக் குறையும்.

க்ரீன் டீ

க்ரீன் டீயில் கேட்டசின்கள் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன. உங்கள் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க தினமும் க்ரீன் டீ குடியுங்கள்.

பருப்பு வகைகள்

கொட்டைகள் ஆரோக்கியமான கொழுப்புகள், நார்ச்சத்து மற்றும் தாவர ஸ்டெரால்களை கொண்டுள்ளது.  இவை அனைத்தும் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும். பாதாம், அக்ரூட் பருப்புகள் மற்றும் பிஸ்தா ஆகியவை கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

சிவப்பு ஈஸ்ட் அரிசி

சிவப்பு ஈஸ்ட் அரிசி ஒரு இயற்கையான உணவு. இது பாரம்பரிய சீன மருத்துவத்தில் பல நூற்றாண்டுகளாக கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கப் பயன்படுத்தப்படுகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் லோவாஸ்டாடின் மருந்தைப் போன்ற மோனாகோலின் கே என்ற கலவை இதில் உள்ளது. இருப்பினும், சிவப்பு ஈஸ்ட் அரிசி மற்ற மருந்துகளுடன் தொடர்பு கொள்ளலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும், எனவே அதை எடுத்துக்கொள்வதற்கு முன் உங்கள் மருத்துவரிடம் அவசியம் ஆலோசனை பெற வேண்டும்.

ஹை கொலஸ்ட்ரால் அளவு இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். இருப்பினும், மருந்து, வாழ்க்கை முறை மாற்றங்கள் மற்றும் வீட்டு வைத்தியம் உட்பட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க பல வழிகள் உள்ளன. இந்த வீட்டு வைத்தியங்களை உங்கள் அன்றாட வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.

இருப்பினும், புதிய வீட்டு வைத்தியங்களைத் தொடங்குவதற்கு முன், உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை மேர்க்கொளவது அவசியம். குறிப்பாக நீங்கள் தற்போது மருந்து எடுத்துக்கொண்டால் அல்லது ஏதேனும் அடிப்படை உடல்நலப் பிரச்சினைகள் இருந்தால் அவசியமாக உங்களின் மருத்துவரிடம் தகுந்த ஆலோசனைகளை பெற்று அதன் பிறகு எடுத்துக் கொளவது நல்லது.


🔻 🔻 🔻 

ஒரே இடத்தில் 9 மணி நேரத்திற்கும் மேல் உட்கார்ந்தே இருக்கிறீர்களா..? உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளதாம்..!

October 13, 2023 0

 ஒரே இடத்தில் எந்தவித உடல் உழைப்பும் இல்லாமல் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் பல உடல்நல பிரச்சனைகள் வருமென ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக 9 மணி நேரத்திற்கு மேல் அமர்ந்தே வேலை பார்பவர்களின் மூளையில் பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள். இதனால் நம் உடலுக்கும், மனதிற்கும் ஏற்படக் கூடிய பாதிப்புகளை இந்தக் கட்டுரையில் விரிவாக பார்ப்போம்

ரத்த ஓட்டம் குறைகிறது: நீண்ட நேரம் உட்கார்ந்தே இருப்பதால் மூளை உள்பட உடல் முழுவதும் ரத்த ஓட்டம் குறைய தொடங்குகிறது. இதன் காரணமாக மூளை செல்களுக்கு செல்லக்கூடிய அத்தியாவசியமான ஊட்டச்சத்துகள் மற்றும் ஆக்சிஜன் தடைபடுகிறது. இதனால் உங்களின் அறிவாற்றல் செயல்பாட்டில் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

சிந்தனை தேக்கம் (பிரெயின் ஃபாக்): நீண்ட நேரத்தில் ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் போது, உங்கள் மனம் சோர்வடைந்து சிந்தனை தேக்கம் உருவாகும். இப்படி எந்த வேலையும் செய்யாமல் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருந்தால், உங்களால் எதிலும் முழு கவனம் செலுத்த முடியாது, தெளிவாக யோசிக்க முடியாது.

மன அழுத்தம், கவலையை அதிகரிக்கிறது: சோம்பேறித்தனமான நடத்தைக்கும் மனச்சோர்வு, கவலைகள் போன்ற மனநல பிரச்சனைகளுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது. ஒரே இடத்தில் அமராமல் நடப்பது, ஓடுவது எதையாவது செய்து கொண்டிருப்பது என தொடர்ந்து நம் உடல் இயக்கத்திலேயே இருந்தால், நம் மனதை உற்சாகப்படுத்தக் கூடிய செரொடோனின் மற்றும் எண்டோர்பின் தூண்டப்பட்டு நமது மனநிலையை ஒழுங்குப்படுத்தும்.

நினைவுகளை பாதிக்கிறது: நீண்ட நேரத்திற்கு உட்கார்ந்தே இருக்கும் போது, நம்முடைய அறிவாற்றல் குறைவதாகவும் நினைவுகள் பாதிக்கப்படுவதாகவும் சில ஆய்வுகள் கூறுகின்றன. நம் மூளையின் ஆரோக்கியத்தையும் உங்கள் வயதுக்கேற்ற அறிவாற்றலையும் சீராக வைத்திருக்க வேண்டுமென்றால் சுறுசுறுப்பாக இருக்க வேண்டியது அவசியமாகும்.


மூளையின் கட்டமைப்பை மாற்றுகிறது: நம் மூளையின் கட்டமைப்பு மாற்றமடைவதற்கும் நீண்ட நேரம் ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்திருப்பதற்கும் நெருங்கிய தொடர்புள்ளது. சோம்பேறித்தனமான நடத்தையின் காரணமாக நம் மூளையில் நினைவுகளை சேமித்து வைக்கும் பகுதியான டெம்போரல் மடலின் அடர்த்தி குறையத் தொடங்கும் என ஆய்வுகள் கூறுகின்றன.

மன அழுத்தம் அதிகரிக்கும்: எந்த வேலையும் செய்யாமல் ஒரே இடத்தில் நீண்ட நேரத்திற்கு அமர்ந்திருந்தால், உங்களின் மன அழுத்தம் அதிகரித்து உங்களின் உடல் ஆரோக்கியத்திற்கும் மூளைக்கும் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்.

உடல் பருமன், மெடபாலிக் பிரச்சனைகள்: சோம்பேறித்தனமாக உட்கார்ந்தே இருப்பதுதான் நம் உடல் பருமனுக்கும் இன்சுலின் எதிர்ப்பு, டைப்-2 டயாபடீஸ் போன்ற மெட்டபாலிக் பிரச்சனைகளுக்கும் முக்கிய காரணமாக இருக்கிறது. இவை நம் மூளையை மறைமுகமாக பாதிக்கிறது. இதன் காரணமாக அறிவாற்றல் குறைகிறது; அல்சைமர் போன்ற நரம்புச் சிதைவு நோய் ஏற்படவும் அதிக வாய்ப்புள்ளது.

நாற்காலியிலோ, காரிலோ அல்லது தொலைகாட்சியின் முன்போ இப்படி நீண்ட நேரம் அமர்ந்திருந்தால், அது உங்கள் உடல்நலத்திற்கு மிகப்பெரிய தீங்கை விளைவிக்கும். ஆகவே அரை மணி நேரத்திற்கு ஒருமுறை நிற்பது, நடப்பது என உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளுங்கள்.


🔻 🔻 🔻 

October 12, 2023

இந்துசமய அறநிலையத் துறையில் வேலைவாய்ப்பு... ரூ. 50,000 வரை சம்பளம்... முழு விவரம்..

October 12, 2023 0

 தமிழ்நாட்டில் உள்ள இந்து திருக்கோயில்களை இந்து சமய அறநிலையத் துறை நிர்வகித்து வருகிறது. அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் 46,020  திருக்கோயில்கள் உள்ளன. இந்த திருக்கோயில்களில் ஏற்படும் காலிப்பணியிடங்களுக்கு அவ்வப்போது ஆட்சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

அந்த வகையில்,  திருச்சி நகரிலிருந்து 15 கி.மீ தொலைவில் அமைந்துள்ள  சமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான சேர்க்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுளளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 25.10.2023 மாலை 05.45 மணி வரை ஆகும்.

பணியிடத்தின் பெயர்ஊதிய விகிதம்காலிப் பணியிடங்களின் எண்ணிக்கைகல்வித் தகுதி
காவலர்15,900-50,40025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்
காவலர் (தொகுப்பூதியம்)10,00025தமிழில் எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கீழ்காணும் நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டும்:

விண்ணப்பதாரர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்;

விண்ணப்பதாரர் 01.07.2023-ம் தேதி அன்று, 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 45 வயது மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்;

ஒன்றுக்கும் மேற்பட்ட பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், அந்தந்த பதவிக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்;

விண்ணப்பத்துடன் முகவரிச் சான்று, பிறந்தநாள் குறித்த சான்று, சாதிச் சான்று நகல், கல்வித் தகுதிக்கான சான்றிதல்களின் நகல், அரசு மருத்துவரிடமிருந்த பெறப்பட்ட உடற்தகுதி சான்றிதழ், குற்றவழக்கு ஏதும் இல்லை என்பதற்கான காவல்துறை சான்றிதழ், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை போன்ற பிற ஆவணங்களையும் சேர்த்து அனுப்பப்பட வேண்டும்;

திருக்கோயிலால் வெளியிடப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பப் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதர நிபந்தனைகளை திருக்கோயில் அலுவல கத்திலும் அல்லது www.tnhrce.gov.in மற்றும் samayapurammariamman.hrce.tn.gov.in என்ற இணையதளங்களிலும் அறிந்து கொள்ளலாம். மேலும் விண்ணப்பங்களை மேற்படி இணையதளங்களில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன் அஞ்சல் உறையில், விண்ணப்பிக்கும் பதவியைத் தெளிவாக குறிப்பிட்டு உதவி ஆணையர்/செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், மண்ணச்சநல்லூர் வட்டம்,   திருச்சிராப்பள்ளி மாவட்டம், 621- 112. தொலைபேசி எண் : 04312670460 என்ற முகவரிக்கு நேரிலோ அஞ்சல் மூலமாகவோ அனுப்ப வேண்டும். மேலும் ரூ.25/- மதிப்புள்ள தபால் தலை ஒட்டி அனுப்ப வேண்டும். வேலைவாய்ப்பு அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்தஇணைப்பைக் கிளிக் செய்ய வேண்டும்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மீம்ஸ் கிரியேட்டரா நீங்க? மாவட்ட ஊரக வளர்ச்சி துறையில் சூப்பர் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!

October 12, 2023 0

அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் பல்வேறு காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  இந்த காலிப்பணியிடங்கள் வெளியாதார முறையில் (Out Sourcing) நியமனம் செய்யப்பட உள்ளதாகவும், முற்றிலும் தற்காலிகமானது என்றும்,  தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலியிடம்: மொத்தம் 6 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

திடக்கழிவு மேலாண்மை & சுகாதாரம்  (Solid Waste Management & Sanitation Expert) :

பணியிடங்கள் :  2

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

திரவக்கழிவு மேலாண்மை (Liquid Waste Management Expert)

பணியிடம் : 1

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

இந்த இரண்டு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், இளங்கலை சுற்றுச்சூழல் பொறியியல் பட்டம் / பொறியியல் (Civil ) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், 1- 2 பணி அனுபவம் இருத்தல் வேண்டும்.

திட்டமிடுதல், ஒருங்கிணைத்தல் மற்றும் கண்காணித்தல் (Planning, Convergence & Monitoring) : 

பணியிடம்:  1;

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் மத்திய அல்லது மாநில அரசால் இணைக்கப்பட்ட / அங்கீகரிக்கப்பட்ட ஏதாவது பல்கலைகழகத்தில் B.Tech/MBA/MSc. பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தகவல், கல்வி மற்றும் தொடர்பு (IEC Consultants) :

பணியிடங்கள் - 2;

மாதாந்திர ஊதியம் - ரூ. 35,000

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், புகழ்பெற்ற/ அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் மக்கள் தொடர்பு / ஊடக பிரிவில் முதுகலை பட்டம் அல்லது அதற்கு சமமான பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும் 2,3 வருட பணி அனுபவம் இருத்தல் வேண்டும். அரசாங்க அதிகாரிகள், கல்வியார்கள், சமூக ஊடகங்களில் செல்வாக்கு உள்ளவர்களுடன் தொடர்பு கொள்வது. தேவைப்படும் சூழலில் பணிபுரியும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். கணினியில் MS Word, Power Point. Adobe Photoshop தெரிந்திருக்க வேண்டும்.

வீடியோ தயாரித்தல், மீம் தயாரித்தல், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் உருவாக்குதல் போன்றவற்றில் அனுபவம் உள்ளவர்களாக இருத்தல் வேண்டும்.

தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முன்மாதிரியாக எழுதும் நிறன். ஒருயொருக்கொருவருடன் தொடர்பு கொள்ளுதல், விளக்கவுரை அளிக்கும் திறன், தமிழ் கலாச்சரங்களை புரிந்துகொள்ளுதல் ஆகியவை பெற்றிருத்தல் வேண்டும். இப்பனிக்கு மாத ஊதியம் ரூ.25,000/- வழங்கப்படும்.

மேற்காணும் அனைத்துப் பணிகளுக்கும் வயது 30-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

சுயவிவரக் குறிப்புகளுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாகவோ இணை இயக்குனர்/திட்ட இயக்குனர்,  மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம் அரியலூர்  என்ற முகவரிக்கு 15.10.2023 -க்குள் அனுப்பி வைக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

பேற்படி பணிகள் மற்றும் இதர சந்தேகங்களை அலுவலக வேலை நாட்களில் அரியலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையில் நேரில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். ஆள்சேர்க்கை அறிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news