Agri Info

Adding Green to your Life

October 17, 2023

இடது கை பழக்கம் உடையவரா நீங்கள்? அப்படியென்றால் உங்களிடம் இந்த திறமைகள் இருக்கும்!!

October 17, 2023 0

 ஒவ்வொரு நபரின் பழக்கவழக்கங்களும் மற்றொரு நபரிடமிருந்து வேறுபட்டவை. அதே நேரத்தில், அவரை கூட்டத்திலிருந்து வேறுபடுத்தவும் இது உதவுகிறது. நம்மில் பெரும்பாலானோர் வலது கை பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள். அதே நேரம் இடது கை பழக்கம் உடையவர்களிடம் சில விசேஷ திறமைகள் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

ஒருவருடைய இயல்பும் வாழ்க்கை முறையும் மற்றொருவரிடமிருந்து வேறுபட்டது. ஒருவர் மற்றவர்களிடம் எப்படிப் பேசுகிறார், பேசும்போது அவருடைய வெளிப்பாடுகள் என்ன, இவை அனைத்தும் அவரது ஆளுமையைப் பற்றிய பல விஷயங்களை வெளிப்படுத்துகின்றன. உங்களில் பலர் உங்கள் வாழ்க்கையின் ஒரு கட்டத்தில் இடது கை பழக்கம் உள்ளவர்களை சந்தித்திருக்கலாம்.

இடது கை பழக்கம் உடையவர்களாக இருப்பவர்கள் பெரும்பாலும் தங்கள் எல்லா வேலைகளுக்கும் இடது கையைப் பயன்படுத்துகிறார்கள். எழுதுவது, எதையாவது தூக்குவது, விளையாடுவது, சாப்பிடுவது என எல்லாவற்றுக்கும் இடது கையைப் பயன்படுத்துவதைக் காணலாம். அப்படிப்பட்டவர்களின் ஆளுமையை நாம் அறிந்து கொள்ளலாம்.

இடது கையைப் பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை எப்படி எதிர்கொள்வது என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியுமாம். அவர்கள் எதிர் வரும் ஒவ்வொரு சூழ்நிலைக்கும் மனதளவில் தயாராக இருக்கிறார்கள்.

படைப்பாற்றல்

இடது கை பழக்கம் உள்ளவர்களின் மூளை வலது கையில் ஆதிக்கம் செலுத்துகிறது. இதன் காரணமாக, அவர்கள் அறிவை எளிதில் பெறுகிறார்கள். படைப்பாற்றலும் அவர்களிடம் அதிகம் இருக்கும் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

போட்டிகள்

போட்டியைப் பொறுத்தவரை இவர்களின் திறன் மிகவும் நன்றாக இருக்கிறது. அவர்கள் டென்னிஸ் அல்லது கோல்ஃப் போன்ற விளையாட்டுகளை விளையாடினால், அவர்கள் எப்போதும் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

வாழ்க்கை மேம்பாடு

இடது கை பழக்கம் உடையவர்கள் தங்கள் வாழ்க்கையை எவ்வாறு சிறந்த முறையில் மேம்படுத்துவது என்பதைப் பற்றி தெரிந்து வைத்துள்ளார்கள். அவர்களின் பயணத்தில் நல்ல வாய்ப்புகளும் கிடைக்கும், அது அவர்களை எதிர்காலத்தில் பிரபலமாக்கும். அவர்களின் ஆளுமை கவர்ச்சியானது.

மல்டி டாஸ்க்

மல்டி டாஸ்க் எனப்படும் எல்லா வேலைகளையும் செய்து முடிப்பதில் இடது கை பழக்கம் உடையவர்கள் வல்லவர்கள். அவர்கள் தைரியமானவர்கள் மற்றும் சூழ்நிலைகளை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்கள்.

🔻 🔻 🔻 

மாதம் ரூ.18,000/- சம்பளத்துடன் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

October 17, 2023 0

 

மாதம் ரூ.18,000/- சம்பளத்துடன் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (The Steel Authority of India Limited (SAIL)) காலியாக உள்ள Coach பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது. தகுதியானவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி வேலைவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இந்திய ஸ்டீல் ஆணைய காலிப்பணியிடங்கள்:

Coach பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

SAIL வயது வரம்பு:

16.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 64 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

தேசிய விளையாட்டு நிறுவனம் (NIS), இந்திய விளையாட்டு ஆணையத்தால் (SA) வழங்கப்பட்டுள்ள வில்வித்தை பயிற்சியில் டிப்ளமோ அல்லது வில்வித்தையில் ஆறு வார சான்றிதழ் படிப்பு உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.18,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30/10/2023 அன்று நடைபெற உள்ளது.

SAIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 30/10/2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

  Download Notification 2023 Pdf

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TMB வங்கி Probationary Clerks வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

October 17, 2023 0

 

TMB வங்கி Probationary Clerks வேலைவாய்ப்பு 2023 – 72 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட், (TMB) Probationary Clerks பதவிக்கு இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பிப்பதற்கு முன், விண்ணப்பதாரர்கள் அனைத்து வழிமுறைகளையும் கவனமாகப் படித்து, பதவிக்கான அனைத்து தகுதித் தகுதிகளையும் அவர்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய வேண்டும். அதன் பின் ஆர்வமுள்ளவர்கள் 16.10.2023 முதல் 06.11.2023 வரை ஆன்லைனில் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

TMB வங்கி காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் Probationary Clerks பதவிக்கு என மொத்தம் 72 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும்.

TMB வங்கி ஆட்சேர்ப்பு 2023 வயது வரம்பு:

Graduate விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; 31.08.2023 இன் படி Post-graduates 26 ஆண்டுகள். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) இரண்டு ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி Clerk சம்பளம்:
ComponentPer YearPer Month
Salary3,24,000.0027,000.00
Other Allowance (25% of salary)81,000.006,750.00
Gross4,05,000.0033,750.00
NPS Bank Contribution (14% of salary)45,360.003,780.00
Gratuity (6% of salary)19,440.001,620.00
Medical Insurance20,016.001,668.00
Fixed CTC4,89,816.0040,818.00
Variable Pay (Based on performance appraisal (payable annually) – at present maximum 40% of salary)1,29,600.0010,800.00
CTC6,19,416.0051,618.00
தேர்வு செயல்முறை:

எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட்டு தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.

TMB வங்கி பணிக்கான விண்ணப்ப கட்டணம்:

Probationary Clerk பதவிக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும்முறை:

https://ibpsonline.ibps.in/tmblposep23/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் இப்பணிக்கு வரும் 06.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification for Recruitment of Probationary Clerks
Apply Online – Click Here

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 15, 2023

TNPSC CESE 2023; தமிழ்நாடு அரசில் 368 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் உடனே விண்ணபிங்க!

October 15, 2023 0

 தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த தேர்வு மூலம் மொத்தம் 368 பணியிடங்கள் நிரப்பட உள்ளன.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, ஊரக வளர்ச்சி துறை, மின்சார வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த பொறியியல் பணிகள் தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பொறியியல் சார்ந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 11.11.2023க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Principal, Industrial Training Institute/ Assistant Director of Training

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: A degree in any branch of Engineering or Technology படித்திருக்க வேண்டும். மேலும் 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

சம்பளம் : ரூ. 56,100 – 2,05,700

Assistant Engineer (Civil) (Water Resources Department, PWD)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering or Civil and Structural Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Rural Development and Panchayat Raj Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Highways Department)

காலியிடங்களின் எண்ணிக்கை: 53

கல்வித் தகுதி: Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Agricultural Engineering)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: B.E. (Agriculture) or B. Tech (Agricultural Engineering) or B.Sc., (Agricultural Engineering) (or) B.E. (Mechanical) (or) B.E. (Civil) (or) B.Tech (Automobile Engineering) or B.E. (Production Engineering) or B.E.(Industrial Engineering) (or) B.E (Civil and Structural Engineering) or B.E (Mechanical and Production Engineering)படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Director of Industrial Safety and Health

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Degree in Mechanical or Electrical or Chemical or Textile Technology or Industrial Engineering or Production Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Industries)

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Bachelor of Engineering or Bachelor of Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Electrical) (PWD)

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: Degree in Electrical Engineering or Electronics and Communication Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Senior Officer (Technical)

காலியிடங்களின் எண்ணிக்கை: 8

கல்வித் தகுதி: Degree in B.E., / B.Tech., /AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 56,100- 1,77,500

Assistant Engineer (Electrical) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 36

கல்வித் தகுதி: Degree in Electrical and Electronics Engineering / Electronics and Communication Engineering / Instrumentation Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Civil) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 5

கல்வித் தகுதி: Degree in Civil Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Mechanical) TANGEDCO

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

கல்வித் தகுதி: Degree in Mechanical Engineering or A pass in AMIE படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 39,800 – 1,26,500

Assistant Engineer (Civil) (Tamil Nadu Urban Habitat Development Board)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer Tamil Nadu Pollution Control Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 49

கல்வித் தகுதி: Bachelor’s Degree in Civil Engineering or Chemical Engineering or Environmental Engineering and Master’s Degree in Environmental Engineering / Chemical Engineering / M.Tech. Environmental Science and Technology awarded by Anna University/M.Tech. Petroleum Refining and Petrochemicals awarded by Anna University/ M.E. Environmental Management awarded by Anna University படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Civil) Tamil Nadu Water Supply and Drainage Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 78

கல்வித் தகுதி: Degree in Engineering (Civil) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Assistant Engineer (Mechanical) Tamil Nadu Water Supply and Drainage Board

காலியிடங்களின் எண்ணிக்கை: 20

கல்வித் தகுதி: Degree in Engineering (Mechanical) படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700- 1,38,500

Manager - Engineering (TNCMPFL)

காலியிடங்களின் எண்ணிக்கை: 7

கல்வித் தகுதி: Degree in Electrical & Electronics / Electronics & Instrumentation /Electrical & Instrumentation / Electronics and Communication / Automobile / Mechanical Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

Manager – Civil (TNCMPFL)

காலியிடங்களின் எண்ணிக்கை: 1

கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 37,700 – 1,19,500

Assistant Engineer(Civil) Tamil Nadu Adi Dravidar Housing & Development Corporation Limited

காலியிடங்களின் எண்ணிக்கை: 25

கல்வித் தகுதி: Bachelor Degree in Civil Engineering படித்திருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 36,400- 1,34,200

வயதுத் தகுதி: 01.07.2023 அன்று 32 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பதவிகளுக்கு 37 வயது வரையிலும் விண்ணப்பிக்கலாம். SC, SC(A), ST, MBC(V), MBC  DNC, MBC, BC and BCM பிரிவுகளுக்கு வயது வரம்பு கிடையாது.

தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். சில பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது.

எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பாடப்பிரிவுகளில் இருந்து வினாக்கள் இடம்பெறும். இதில் 200 வினாக்கள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

இரண்டாம் தாள் இரண்டு பிரிவுகளாக நடைபெறும். முதல் பிரிவு தமிழ் மொழித் தகுதித் தேர்வு. இதில் 100 வினாக்கள் 150 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். இந்த தேர்வில் 60 மதிப்பெண்கள் எடுப்பது கட்டாயம். இல்லையென்றால் பிற தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. இது தகுதித் தேர்வு மட்டுமே. இந்த மதிப்பெண்கள் மொத்த மதிப்பெண்களில் சேர்த்துக் கொள்ளப்படாது.

இரண்டாம் பிரிவில், பொது அறிவில் 100 வினாக்கள் கேட்கப்படும். இதில் பொது அறிவில் 75 வினாக்களும், கணிதப்பகுதியில் 25 வினாக்களும் இடம்பெறும். இதற்கான கால அளவு 3 மணி நேரம்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தேர்வுக் கட்டணம் : ரூ. 200, இருப்பினும் SC, SC(A), ST, MBC(V), MBC - DNC, MBC, BC, BCM மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 11.11.2023

இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/23_2023_CESE_TAM.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

October 15, 2023 0

 

தூத்துக்குடி மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை வேலை வாய்ப்பு; டிகிரி முடித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

தமிழக அரசின் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் (TNSRLM) தூத்துக்குடி மாவட்டத்தில் வட்டார ஒருங்கிணைப்பாளர் (Block Coordinator) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். தகுதியுள்ளவர்கள் 25.10.2023 க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். 2 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 12,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கீழ்கண்ட தங்கள் சுயவிவரக் குறிப்பு அடங்கிய விண்ணப்பத்தினை தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி: இணை இயக்குனர்/ திட்ட இயக்குனர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம், தூத்துக்குடி – 628101.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 25.10.2023

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://cdn.s3waas.gov.in/s3019d385eb67632a7e958e23f24bd07d7/uploads/2023/10/2023101275.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 14, 2023

ISRO வெளியிட்ட புதிய அறிவிப்பு 2023 – Scientist / Engineer பணிக்கு ரூ.1,77,500 ஊதியம் || பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்!

October 14, 2023 0

சென்னை பில்டர் காபி தொழில் தொடங்க ₹3.75 லட்சம் வரை மானியம் - அரசு அறிவிப்பு

October 14, 2023 0

 தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியின சார்ந்தவர்கள் பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பாரம்பரியமான பில்டர் காபி நிலையம் அமைத்திட மானியத்துடன் கூடிய கடனுதவி பெற ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி,  இத்தொழிலை தொடங்க காலி இடமோ அல்லது கட்டிடங்கள் வைத்திருப்பவர்களுக்கு பில்டர் காபி நிலையம் அமைக்கவும், தொழில் முனைவோர்கள் அல்லது அவர்களின் ஊழியர்களுக்கு தேவையான பயிற்சியும், உரிமையாளர் கட்டணம் (Franchise Fees) ரூ.2.00 இலட்சம் முற்றிலுமாக விலக்கு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விற்பனை செய்ய வாங்கும் பொருட்களுக்கு 5% வரை சிறப்பு தள்ளுபடி வழங்கப்படும் என்றும்,   மாதாந்திர பில்லிங் மென்பொருள் கட்டணம் விலக்கு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தொழிலினை செய்ய திட்ட அறிக்கை தயார் செய்ய இலவச ஆலோசனைகள்பில்டர் காபி நிறுவனத்தின் மூலம் அளிக்கப்படும்.

தாட்கோ தொழில்முனைவோர் அறிவிப்பு

18 முதல் 40 வயதுக்குட்பட்ட ஆதிதிராவிடர்கள் மற்றும் பழங்குடியினர்கள் தாட்கோ மூலம் மானியத்துடன் கூடிய கடனுதவி பெற புகைப்படம் மற்றும் குறிப்பிட்ட சான்றுகளுடன் www.tahdco.com என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இத்தொழிலுக்கு ரூ.6.50 இலட்சம் முதல் ரூ.7.50 இலட்சம் வரை திட்டத்தொகையினை நிர்ணயித்து இதற்குரிய மானியமாக ஆதிதிராவிடர்களுக்கு 30% அல்லது அதிகபட்சம் ரூ.2.25 இலட்சம் எனவும் பழங்குடியினருக்கு 50% அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 இலட்சம் வரை வழங்கப்படும். பயனாளி 5% முதல் 10% சொந்த முதலீடு வங்கியில் செலுத்தி எஞ்சிய தொகை வங்கி கடனுதவி பெற்றுக் கொள்ளலாம் என்றும்  கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news