Agri Info

Adding Green to your Life

October 18, 2023

தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

October 18, 2023 0

 

தமிழகத்தில் அக்.28 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள வேலையில்லா இளைஞர்களுக்காக வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்.28 ஆம் தேதி புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

வேலைவாய்ப்பு முகாம்

தமிழகத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் வருகிற அக். 28 ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு நடைபெற இருக்கிறது. இந்த முகாம் ஆலங்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற இருக்கிறது.

இதில் 150க்கு மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்கவுள்ளனர். மேலும் அயல்நாட்டு வேலைவாய்ப்பிற்கான பதிவு வழிகாட்டல், சுயதொழில், வங்கிக்கடன் உதவிகள் மற்றும் அரசின் திட்டங்கள் குறித்து பிரத்யேக அரங்கம் அமைத்து ஆலோசனை வழங்கப்பட இருக்கிறது. அத்துடன் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இந்த முகாமில் 8 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை மற்றும் ஐடிடி, டிப்ளமோ, பிஇ, நர்சிங் படிப்பு படித்த அனைவரும் கலந்து கொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ளவிருப்பவர்கள் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை, பாஸ்போட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் நேரில் வர வேண்டும். வேலை தேடும் இளைஞர்கள் (Tamil Nadu Private Job Portal) www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளம் மூலம் பதிவு செய்யலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.69,920/- ஊதியத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

October 18, 2023 0

 

ரூ.69,920/- ஊதியத்தில் Assistant Manager காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க ||முழு விவரங்களுடன்!

TNUIFSL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager, Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TNUIFSL காலிப்பணியிடங்கள்:

Assistant Manager, Officer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA/CMA, MBA, ME/M.Tech என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TNUIFSL வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 மற்றும் 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Manager ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.69,920/- ஊதியம் வழங்கப்படும்.

TNUIFSL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 06.11.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news



பெற்றோர் செய்யும் 4 தவறுகள்.. சில குழந்தைகள் அம்மா அப்பாவை சார்ந்தே இருக்க காரணம் இதுதான்..!

October 18, 2023 0

 குழந்தைகள் எப்போதுமே பெற்றோர்கள் அல்லது பெரியவர்கள் யாராவது ஒருவரைச் சார்ந்தே இருக்கும் குறிப்பாக. குழந்தைப்பருவம் முதல் டாட்லர் என்று கூறும் பருவம் வரை, பெரும்பாலும் அம்மாவைச் சார்ந்து தான் குழந்தைகள் இயங்கும். ஆனால் ஒரு கட்டத்திற்கு பிறகு தானாக செயல்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் பெற்றோரையோ அல்லது வேறு யாரையும் சார்ந்து இருக்கக்கூடாது.

குழந்தைகள் வளர்ந்த பிறகு, குறிப்பாக, 2-3 ஆண்டுகளுக்குப்பிறகு, எல்லா விஷயத்துக்குமே மற்றவரை இன்னொருவரை சார்ந்து இருப்பது என்பது பிரச்னைக்குரிய அறிகுறியாகும். ஏன் குழந்தைகள் மற்றவர்களை சார்ந்து இருக்கிறார்கள் என்பதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்கிறார்கள் என்பது தான்!

குறிப்பாக, பெற்றோர்கள் செய்யும் இந்த நான்கு தவறுகள் தான் குழந்தைகள் அப்பா அம்மாவை சார்ந்தே இருக்கிறது. அவை என்னவென்று இங்கே பார்க்கலாம்.

குழந்தைகளை பொத்தி பொத்தி பாதுகாப்பது :

ஒரு அம்மாவாக அல்லது அப்பாவாக குழந்தைகளை பாதுகாப்பாக வளர்க்க வேண்டும் என்பது முக்கியம் தான்; ஆனால் குழந்தைக்கு எப்போதும் ஏதாவது ஆகிவிடுமோ, பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற அதீதமான ஒரு பாதுகாப்பு உணர்வு அவர்களை பொத்தி பொத்தி வளர்ப்பதாக முடியும். நீங்கள் அந்த அளவுக்கு ஓவர் ப்ரொடக்ட்திவாக இருக்கும் பொழுது, ஒரு சின்ன விஷயம் வேண்டும் என்றால் கூட குழந்தை உங்களைத்தான் தேடி வரும். தானாக எதையாவது கற்றுக் கொள்வதற்கோ அல்லது கடினமான சூழ்நிலைகளை கையாள்வதற்கு, முடிவு எடுப்பதற்கு குழந்தைக்கு தெரியாமல் போகும்.

News18

அத்தகைய சூழ்நிலையில் நேரடியாக உங்களிடம் ஓடிவந்து என்ன செய்வது என்று குழந்தைகள் கேட்கும். அதுமட்டுமில்லாமல், இது என்ன ஒரு சிக்கலில் மாட்டிக் கொண்டால் அது என்ன என்று புரிந்து கொள்வதற்குள்ளேயே பெற்றோரிடம் ஓடி வந்து அழத் துவங்கி விடுவார்கள். எந்த விஷயமாக இருந்தாலும் சரி, ஆதரவாக, துணையாக பெற்றோர் இருப்பது மிகவும் நல்லதாக இருந்தாலும், குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய பிரச்சனைகள், தங்களுடைய சூழலை தானாகவே கையாள வேண்டும் என்பதை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம்.

எல்லைகள் இல்லாமல் போவது :

எல்லா விஷயத்திற்கும் எல்லா உறவுகளுக்குமே எல்லைகள் தேவை. இந்த எல்லையைத் தாண்டி மற்றவருடைய விஷயங்களில் தானாக தலையிடக் கூடாது என்பது மிகவும் முக்கியம். அந்த விதத்தில், பெற்றோர்கள் பலவீனமான எல்லைகளை வைத்திருக்கும் பொழுது குழந்தைகள் தங்களை தாங்களே வளர்த்துக் கொள்ள மிகவும் சிரமப்படுவார்கள்.

உதாரணமாக, குழந்தைகள் செய்ய வேண்டிய சின்ன விஷயத்தை கூட, ‘நீ இதை செய்ய வேண்டும், என்னிடம் கொடுக்கக் கூடாது’ என்று ஒரு வரைமுறை இல்லாமல் பெற்றோர்கள் எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கும் பொழுது அது சுயமாக குழந்தைகள் இயங்குவதற்கு மிகப்பெரிய தடையாக அமைகிறது! எனவே பெற்றோரைச் சார்ந்து தான் ஒரு குழந்தை முழுக்க முழுக்க இயங்கும்.

குழந்தை பெற்றோரின் ஒப்புதலையும் அங்கீகரிப்பையும் எப்போதும் எதிர்பார்க்கும் :  

குழந்தைகளை பாராட்டுவது அவசியம் தான்! குழந்தைகள் சின்ன சின்ன விஷயங்களை முயற்சி செய்தால் கூட நிச்சயமாக அவர்களை பாராட்ட வேண்டும், அது அவர்களுக்கு மிகப்பெரிய ஊக்கமாக அமையும். ஆனால், குழந்தைகள் தாமாக வந்து தான் செய்யும் ஒவ்வொரு விஷயமும் சரியா இது அம்மாவுக்கு ஓகே வா, அப்பாவிற்கு இது சரியாக இருக்கிறதா என்று அங்கீகாரமும் ஒப்புதலும் கேட்கும் பொழுது அம்மா அப்பாவை சார்ந்து இருக்கும் நிலையை ஏற்படுத்தும்.

அவர்களைக் கேட்காமல் எந்த ஒரு விஷயத்தையுமே குழந்தைகளால் செய்யவே முடியாது என்ற ஒரு நிலை ஏற்பட்டு விடும். இது அவர்களுடைய தன்னம்பிக்கையை மிகப்பெரிய அளவில் பாதித்து, தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்தாது. குழந்தைகள் நன்றாக ரேன்க் வாங்கவில்லை, போட்டியில் வெற்றி பெற வில்லை அல்லது அவர்களுக்கு பிடித்ததை கூட அவர்களால் சரியாக செய்ய முடியவில்லை என்றால் அது பெரிய விஷயம் இல்லை என்பதை குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.

News18

சார்ந்து இருப்பதை கவனிக்காமல் இருப்பது:

ஏதாவது ஒரு சிக்கல் நடக்கும் பொழுது அல்லது வீட்டில் சூழல் சரியில்லாதபோது குழந்தைகள் பெற்றோரை சார்ந்தே இருப்பது இயல்பானதுதான். அதேபோல குழந்தைக்கு உடல் நல பிரச்சனை இருந்தால் அம்மாவிடம் தான் முழுவதுமாக இருக்கும்; சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட அம்மாவிடம் அனுமதி கேட்கும். ஆனால் பொதுவாக எல்லாவற்றுக்குமே இதுபோல பெற்றோரின் அனுமதியை, அவர்களை சார்ந்து நடப்பதை பெற்றோர்கள் கவனித்தாலும் குழந்தைதானே அதற்கு என்ன தெரிந்துவிடப் போகிறது என்று அதனை இயல்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

பெற்றோர்கள் அந்த குறிப்பிட்ட சூழலை சரியாக புரிந்து கொள்ள முடியாமல் அல்லது தாமதப்படுத்துவதால், குழந்தைகள் அதையே வழக்கமாக்கிக் கொள்கிறார்கள். இது குழந்தைகளின் ஆளுமைத்தன்மையை பெரிதாக பாதிக்கிறது. எந்த அளவுக்கு சார்ந்து இருப்பது நல்லது, எவற்றிலெல்லாம் குழந்தைகள் தனியாக இயங்க வேண்டும் என்பதை பெற்றோர்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். இதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் குழந்தை நல மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறலாம்.

இதை எப்படி சரி செய்யலாம்?

  1. குழந்தைகள் தன்னிச்சையாக இயங்குவதை பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும்

  2. அந்தந்த வயது சார்ந்த முடிவுகளை குழந்தைகள் எடுக்க அனுமதிக்க வேண்டும்

  3. குழந்தைகளுக்கான எல்லைகளை வரையறுக்க வேண்டும்

  4. குழந்தை சுயமாகக் கற்றுக்கொள்ள வாய்ப்புகள் வழங்க வேண்டும்

  5. வெளிப்புற பாராட்டுக்கள் மட்டுமல்லாமல், குழந்தை சுயத்தை வளர்க்க உதவி செய்ய வேண்டும்

News18

இதை சரி செய்யவில்லை என்றால் என்னென்ன பிரச்சனைகள் ஏறபடும்?

  • உணர்வு ரீதியாக தான் என்ன நினைக்கிறோம், உணர்கிறோம் என்பது சரியா தவறா என்று அனுமதி கேட்பார்கள்

  • தனியாக எதையும் செய்யும் அல்லது முடிவெடுக்கும் திறனை இழப்பார்கள்

  • யாரும் இல்லாமை இவர்களால் எந்த வேலையையும் செய்ய முடியாது

  • தன்னம்பிக்கை மிகவும் குறைவாகும்

  • நிராகரிப்பை ஏற்றுக் கொள்ள முடியாது

  • தனக்கென்று அடையாளம் இல்லாமல் போகும்

உங்கள் இதயத்தைப் பாதுகாக்க இந்த 6 பழங்கங்களை கடைபிடிங்க..!

October 18, 2023 0

 அதிக கொலஸ்ட்ராலை குறைப்பது எப்படி? கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பதற்கான வழி இருந்தால் சொல்லுங்கள்? போன்ற கேள்விகளை இன்று அடிக்கடி நாம் கடந்து போக வேண்டி உள்ளது. அந்த அளவுக்கு கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக விஸ்பரூபம் எடுத்துள்ளது. பெரும்பாலான நபர்கள் கெட்ட அல்லது அதிக கொலஸ்ட்ராலை குறைப்பதில் கவனம் செலுத்துகின்றனர்.

ஆனால் நல்ல கொலஸ்ட்ராலை முற்றிலுமாக தவிர்த்து விடுகின்றனர். கெட்ட கொலஸ்ட்ரால் இதயத்திற்கு எவ்வளவு கேடு விளைவிக்குமோ, நல்ல கொலஸ்ட்ரால் இதயத்திற்கு அவ்வளவு நன்மை தரக்கூடியதாக அமையும் என்பது பலருக்கு தெரிவதில்லை.

கொலஸ்ட்ரால் என்பது கொரோனரி தமனிகளில் படிந்து இருக்கக்கூடிய பிளேக் போன்ற ஒரு பொருளாகும். இது ஆக்ஸிஜன் நிறைந்த இரத்தம் இதய தசைகளுக்கு செல்வதை தடுக்கிறது. நமது செல்களில் காணப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளே கொலஸ்ட்ரால். கொலஸ்ட்ரால் என்றாலே அது கெட்டது தான் என்ற முடிவுக்கு பலர் வந்து விடுகின்றனர். ஆனால் உண்மையில் இரண்டு வகையான கொலஸ்ட்ரால் உள்ளன - ஒன்று நல்ல கொலஸ்ட்ரால் (HDL) மற்றொன்று கெட்ட கொலஸ்ட்ரால் (LDL).

ஹை டென்சிட்டி லிப்போ புரோட்டீன் அல்லது HDL தமனிகளில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலை வெளியேற்றுவதற்கு உதவக்கூடியது நல்ல கொலஸ்ட்ரால் ஆகும். அதுவே லோ டென்சிட்டி லிப்போ புரோட்டீன் அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் என்பது தமனிகளில் அடைப்பை ஏற்படுத்தக்கூடிய மெழுகு போன்ற பொருள். இவை இதயத்திற்கு செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தை தடுத்து, ஹார்ட் அட்டாக் போன்ற மோசமான உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தும் சைலன்ட் கில்லர். கெட்ட கொலஸ்ட்ராலை குறைப்பது எவ்வளவு முக்கியமோ, நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிப்பதும் சமமாக முக்கியமானதாக கருதப்படுகிறது.

நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் சில வழிகள்:-

ஆரோக்கியமான உணவு: கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதில் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. அன்சாச்சுரேட்டட் ஃபேட், ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், உணவு நார்ச்சத்து மற்றும் பலவற்றை அன்றாட உணவில் சேர்ப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்க உதவும் ஆரோக்கியமான வழிகள்.

உடல் செயல்பாடு: உடல் செயல்பாடுகள் மிகக் குறைந்த அளவில் இருக்கக்கூடிய, உட்கார்ந்த வாழ்க்கை முறை கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாவதற்கான ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அதாவது HDL அளவை அதிகரிப்பதற்கு உடற்பயிற்சி ஒரு அற்புதமான வழியாகும். கலோரிகளை எரிப்பது கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு உதவும். அதுமட்டுமல்லாமல் தினமும் 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்வது நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகரிப்பதற்கும் உதவக் கூடும்.

உடல் எடை மேலாண்மை: உடலில் உள்ள நல்ல கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பதற்கு நமது உடல் எடையை சரியான முறையில் மெயின்டைன் செய்வது அவசியம். உடல் பருவனாக இருப்பது அதிக கொலஸ்ட்ராலை ஏற்படுத்தி அதன் காரணமாக ஹார்ட் அட்டாக் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கும். எனவே தொப்பை கொழுப்பை குறைத்து உடல் எடையை சீராக பராமரிப்பது மிக மிக முக்கியம்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும்: புகை பிடிப்பது நல்ல கொலஸ்ட்ரால் அளவை குறைத்து வேறு சில உடல் நல பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கும். எனவே உங்களுக்கு புகை பிடிக்கும் பழக்கம் இருந்தால் அதனை உடனடியாக கைவிடுவது உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.

மது அருந்துவதை குறைக்கவும்: மது அருந்துவது ட்ரை கிளிசரைடுகள் மற்றும் கொலஸ்ட்ராலை உடைப்பதற்கு வழிவகுக்கும். எனவே மது அருந்துவதை குறைப்பது கெட்ட கொலஸ்ட்ரால் உடலில் படிவதையும் குறைக்கும்.

புரோட்டீன் நிறைந்த உணவு, நார்ச்சத்து மிகுந்த உணவு மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை ஆகியவற்றை ஒன்று சேர பின்பற்றுவது நல்ல கொலஸ்ட்ரால் அளவுகளை இயற்கையான முறையில் அதிகரிக்க உதவும் வழிகள். நம் உடலில் நல்ல கொலஸ்ட்ரால் இருப்பது நமது இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

🔻 🔻 🔻 

October 17, 2023

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

October 17, 2023 0

 

JIPMER நிறுவனத்தில் மாதம் ரூ.60,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ஜிப்மர் தடுப்பு மற்றும் சமூக மருத்துவத் துறையில் ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் பதவிக்கு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் 26.10.2023 அன்றுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Junior Medical Officer பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

Officer வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களையும் அறிந்து கொள்ளலாம்.

கல்வித் தகுதி:
  • MCI அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/கல்லூரியில் இருந்து MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • ஒரு பெரிய அரசாங்கத்தில் மருத்துவம்/குழந்தை மருத்துவம் பிரிவில் ஜூனியர் ரெசிடென்டாக ஓராண்டு அனுபவம் இருக்க வேண்டும்.
  • மருத்துவ ஆராய்ச்சி முறைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு ஆலோசனை வழங்குவதில் அனுபவம் இருக்க வேண்டும்.
  • கணினி பயன்பாடுகள் மற்றும் புள்ளிவிவர மென்பொருள் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஆங்கிலம் மற்றும் தமிழில் புலமை வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்:

ஒப்பந்த அடிப்படையில் ஜூனியர் மெடிக்கல் ஆபீசர் பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஜிப்மர் மருத்துவமனை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மேற்கண்ட பணிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.10.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.95,910/- ஊதியத்தில் Supervisor வேலைவாய்ப்பு – 110+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

October 17, 2023 0

 

ரூ.95,910/- ஊதியத்தில் Supervisor வேலைவாய்ப்பு – 110+ காலிப்பணியிடங்கள் || முழு விவரங்களுடன்!

இந்திய ரூபாய் அச்சகத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் Supervisor, Artist, Secretariat Asst, Jr Technician பணிக்கென காலியாக உள்ள 117 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு / Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CNP பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Supervisor, Artist, Secretariat Asst, Jr Technician பணிக்கென மொத்தம் 117 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Supervisor கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree / Master Degree / Diploma / ITI from NCVT/ SCVT தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Supervisor ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.18,780/- முதல் ரூ.95,910/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

CNP தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு / Typing Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 18.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Exim வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ. 63840/- வரை சம்பளம் || விண்ணப்பிக்க நவம்பர் 11 கடைசி நாள்!

October 17, 2023 0

 Exim வங்கியில் காத்திருக்கும் புதிய வேலைவாய்ப்பு 2023 – ரூ. 63840/- வரை சம்பளம் || விண்ணப்பிக்க நவம்பர் 10 கடைசி நாள்!

அகில இந்திய அளவில் Export Import Bank of India (Exim Bank) வங்கியில் காலியாக உள்ள Management Trainee (MT) பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21.10.2023 முதல் 10.11.2023 வரை இப்பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

Exim வங்கி காலிப்பணியிடங்கள்:
  • Management Trainee (MT) (Banking Operations) – 35 பணியிடங்கள்
  • Management Trainee (MT) (Digital Technology) – 7 பணியிடங்கள்
  • Management Trainee (MT) (Rajbhasha) – 2 பணியிடங்கள்
  • Management Trainee (MT) (Administration) – 1 பணியிடம்

என மொத்தம் 45 பணியிடங்கள் காலியாக உள்ளன.

MT பதவிக்கான கல்வி தகுதி:

எக்ஸிம் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் இருந்து MBA/PGDBA/ B.E/B. Tech Degree in Computer Science/ Information Technology/ Electronics/ Master’s degree ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

Export Import Bank of India ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-10-2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் குறைந்தபட்சம் வயது 21 முதல் அதிகபட்ச வயது 25 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • பொது மற்றும் OBC விண்ணப்பதாரர்கள்: ரூ. 600/-
  • SC/ ST/ PWD/ EWS மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள்: ரூ. 100/-

பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

தேர்வு செயல் முறை:
  1. Online Test
  2. Interview
சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.36000 – 1490 – 46430 -1740 – 499910 – 1990 – 63840/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் Exim Bank அதிகாரப்பூர்வ இணையதளமான eximbankindia.in இல் ஆன்லைனில் 21.10.2023 முதல் 10.11.2023 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2023 Pdf
Apply Online Starts on 21.10.2023

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டீ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுமா..? ஆயுர்வேத நிபுணர் கூறும் நன்மைகளும்... தீமைகளும்...

October 17, 2023 0

 நம் நாட்டில் பலருக்கு டீ குடிக்கவில்லை என்றால் அன்றைய நாளே நகராது. அப்படிப்பட்ட டீ பிரியர்கள் இருக்கும் இன்றைய நிலையில், டீ குடிப்பது உண்மையாகவே ஆரோக்கியமானதா என்றால் முழுவதுமாக ஆம் என்று சொல்லி விட முடியாது.

நம்முடைய நாட்டில் மட்டும் டீக்கென்று தனி மரியாதை உண்டு. காபி பிரியர்கள் போல இந்த டீக்கு அடிமையான தனி கூட்டமே உண்டு. இதை வெறும் பானமாக இல்லாமல் இந்தியர்களின் வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாகவே மாறி இருக்கிறது. டீயை பொறுத்தவரை அதன் முக்கிய சிறப்பே நாம் விரும்பும் சுவைக்கு ஏற்றார் போல விதம் விதமாக தயாரிக்க முடியும் என்பது தான்.

சாதாரண டீ, எலுமிச்சை டீ, பிளாக் டீ, ஏலக்காய் டீ, தந்தூரி டீ போன்ற பலவிதமான வகைகளில் தயாரிக்க முடியும். இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை அல்லது ஒரு நாளைக்கு குறைந்தது மூன்று நான்கு முறையாவது டீ குடித்தே ஆக வேண்டும் என்று இருப்பவர்களும் உண்டு. ஆனால் இப்படி அடிக்கடி டீ குடிப்பது உடலுக்கு ஆரோக்கியமானது இல்லை! டீ குடிப்பதால் இருக்கும் நன்மைகள் போல, தீமைகள் உள்ளன.


பிரபல ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் டிம்பிள் ஜன்க்டா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தேநீரைப் பற்றி ஒரு பெரும் விழிப்புணர்வு ஏற்படும் அளவுக்கு பதிவிட்டு இருக்கிறார்.

News18

டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்:

டாக்டர் டிம்பிளின் இன்ஸ்டாகிராம் பதிவில், டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் தேநீரில் உள்ள பாலிபெனால்ஸ் எனும் வேதி பொருள் சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்துவதில் மிகவும் உதவியாக இருக்கிறது. மேலும் சரியான செரிமானத்திற்கும் கார்டியோவாஸ்குலர் என்ற நோய் ஏற்படுாமல் தடுக்கவும் உதவுகிறது. உடல் எடையை சரியான அளவில் வைத்து கொள்ளவும் உதவுகிறது.


தேநீரில் சுவையூட்டும் மணமூட்டும் பொருட்களான ஏலக்காய், கிராம்பு, லவங்கப்பட்டை, கருப்பு மிளகு ஆகியவை இயற்கையாகவே மனித உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். இவற்றை தேநீர் தயாரித்து கலந்து குடிக்கும் போது அவை பாக்டீரியாக்களை கொல்வதோடு மட்டுமல்லாமல், உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

டீ குடிப்பதால் ஏற்படும் கெடுதல்கள்:

டீயில் கலக்கப்படும் அதிகப்படியான சர்க்கரை உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். காபியை விட, தேநீரில் சர்க்கரை தூக்கலாக குடிப்பது பலருக்கும் பிடிக்கும். அதிக சர்க்கரை ஆபத்தானது என்பது அனைவருக்கும் தெரிந்தது தான்! ஒத்து, ரத்தத்தில் கலக்கும் போது உடல் சக்தியை முழுவதுமாக உறிஞ்சுவதுடன் மேலும் டீ குடிக்க வேண்டும் என்று ஆவலையும் உண்டாக்குகிறது. இது கிட்டத்தட்ட அடிமையாவது போன்ற மனநிலையை உண்டாக்கும்.

இதனால் நீங்கள் எப்போதெல்லாம் மன அழுத்தத்துடனும் சோர்வாகவோ, தலைவலி அல்லது சக்தி குறைவாக இருப்பதாக உணர்கிறேர்களோ அப்பொழுதெல்லாம் டீ குடித்தால் சரியாகிவிடும் என்ற எண்ணம் இயற்கையாகவே உங்களுக்கு ஏற்பட்டு விடும்.


டீ பற்றிய கசப்பான உண்மை:

தேநீர் தயாரிக்க தரம் குறைந்த தேயிலைகளை பயன்படுத்தும் போது, டானின்ஸ்கள் என்னும் வேதிப்பொருளை அதிக அளவில் வெளியிடுகிறது. இவை வயிற்றில் அமிலம் சுரப்பதை அதிகரித்து அசிடிட்டிக்கு வழிவகுக்கிறது.


🔻 🔻 🔻 

நம் வாழ்வையே மாற்றக்கூடிய 7 ஜப்பானிய தத்துவங்கள்.. இதை பின்பற்றினால் மகிழ்ச்சியான வாழ்க்கை உறுதி..!

October 17, 2023 0

 ஜப்பான் தன்னுடைய பாரம்பரியத்திற்கும் தனித்துவமான தத்துவங்களுக்கும் மிகவும் பெயர் போன ஒரு நாடாகும். அதிலும் குறிப்பாக சில ஜப்பானிய தத்துவங்களை நாம் சரியாகப் புரிந்து கொண்டு நம் வாழ்வில் செயல்படுத்தினால் அதனால் நம்முடைய வாழ்க்கையையே நம்மால் சிறப்பாக மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். சரியாக சிந்திப்பதற்கும் தனிப்பட்ட வளர்ச்சிக்கும் வாழ்வில் நாம் முன்னேறுவதற்கும் இந்த ஜப்பானிய தத்துவங்கள் வழிகாட்டியாக உள்ளன. பல காலத்திற்கு முன் கூறப்பட்ட இத்தத்துவங்கள் இப்போதும், இன்றைய நவீன வாழ்விற்கும் உகந்ததாக உள்ளன. அந்த வகையில் நம் வாழ்வை மாற்றி அமைக்கும் வல்லமை படைத்த 7 ஜப்பானிய தத்துவங்களை பற்றி இப்போது பார்ப்போம்.

இகிகாய் :

இகிகாய் என கூறப்படும் இந்த ஜப்பானிய தத்துவம் “ஒரு கருப்பொருள் இருப்பதற்கான காரணம்” அல்லது “காலையில் கண் விழிப்பதற்கான காரணம்” என இரு பொருள் தருகிறது. இத்தத்துவம் 4 கருப்பொருட்களை குறிக்கிறது. நீங்கள் எதை விரும்புகிறீர்கள், நீங்கள் எதில் சிறப்பாக இருக்கிறீர்கள், இந்த உலகத்திற்கு என்ன தேவை, உங்களுக்கு அதனால் என்ன கிடைக்கும் என்ற நான்கு கருப்பொருட்களையும் இந்த தத்துவம் உள்ளடக்கியுள்ளது.

உங்களுக்குள் உள்ள இகிகாய்கையை கண்டறிவது என்பது உங்களுடைய திறமை, ஆர்வம், அதை கொண்டு சமுதாயத்திற்கு நீங்கள் என்ன செய்ய முடியும், மற்றும் அதனால் உங்களது நிதி நிலைமையை எவ்வாறு உயர்த்திக் கொள்ள முடியும் என்பதனை பொறுத்தது. 

எனவே இந்த இகிகாய் தத்துவத்தை பின்பற்ற வேண்டும் எனில் நீங்கள் உண்மையாகவே நீங்கள் எதை நேசிக்கிறீர்கள் என்பதை கண்டறிய வேண்டும். உங்களுக்குள் இயற்கையாக இருக்கும் திறமையை கண்டறிய வேண்டும். அதனைக் கொண்டு நாம் எவ்வாறு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்பதையும், அதன் மூலம் எவ்வாறு நம் நிதிநிலைமையை வலுவாக்க முடியும் என்பதையும் நாம் கண்டறிய வேண்டும்.

வாபி-சாபி : 

வாபி-சாவி எனப்படும் இந்த பண்டைய கால தத்துவமானது ஒழுங்கற்ற தன்மையில் உள்ள அழகை கண்டறிவதை ஊக்குவிக்கிறது. உடைந்த பொருட்களிலும் பழையவற்றிலும் அனைத்திலும் ஓர் கலைநயம் மிக்க அழகு உள்ளது என்பதை உணர்ந்து அவற்றை முழுமையாக ஏற்றுக் கொள்வதை இத்தத்துவம் விளக்குகிறது. குறிப்பாக இன்றைய கால இளைஞர்கள் அனைத்திலும் மிகவும் சிறப்பாக இருக்க வேண்டும் என்று அதிகம் மெனக்கெடுகிறார்கள். இந்த வாபி-சாபி என்பது ஒரு பொருள் அல்லது ஒருவர் எப்படி இருந்தாலும் அவை இயற்கையானது என்பதை உணர்ந்து கொண்டு, அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துகிறது.

உங்கள் வாழ்க்கையிலும் நீங்கள் வாபி-சாபி சாவியை கொண்டு வர வேண்டும் எனில், ஒழுங்கற்ற தன்மைகளை ஏற்றுக் கொள்ள கற்று கொள்ள வேண்டும் உங்களுக்குள் உள்ள குறைபாடுகளையும் உங்களை சுற்றியுள்ள உலகில் இருக்கும் குறைபாடுகளையும் முழுமையாக ஏற்றுக் கொள்வதன் மூலம் உங்கள் வாழ்வில் தத்துவத்தை நீங்கள் கடைப்பிடிக்க முடியும். குறிப்பாக பொருட்களும் மனிதர்களும் காலம் கடக்க கடக்க அவர்கள் ஏற்படும் குறைபாடுகளை கண்டு அவர்களை குற்றம் சொல்லாமலும், ஒதுக்காமல் முழுமையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். நிகழ் காலத்தில் எவ்வாறு முழுமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பது என்பதை கற்றுக் கொள்ள வேண்டும்.

கைசென் : 

கைசென் என்பதற்கு தொடர்ச்சியான முன்னேற்றம் என்று பொருள். நீங்கள் செய்யும் செயலில் நீங்கள் மேற்கொள்ளும் சிறிய அளவிலான முயற்சி மற்றும் மாற்றங்கள் கூட வாழ்வில் முன்னேற உதவும் என்ற உண்மையை இது உணர்த்துகிறது. நாம் செய்யும் செயல்களில் நாம் மேற்கொள்ளும் மிக மிகச் சிறிய அளவிலான நேர்மறை மாற்றங்கள் கூட ஒட்டுமொத்த நிகழ்வையே மாற்றி அமைக்க வல்லமை கொண்டது என்பதை இது கூறுகிறது.

News18

கைசெனை உங்கள் வாழ்வில் நீங்கள் கடைப்பிடிக்க முதலில் சிறிய அளவிலான குறிக்கோள்களை மனதில் கொண்டு அவற்றை நோக்கி வேலை செய்ய வேண்டும். அதன் பிறகு பெரிய குறிக்கோள்களை மனதில் வைத்து அதனை நோக்கி முன்னேற வேண்டும். உங்களது உடல் நலனை பேணிக்காப்பது, புதிய விஷயங்களை கற்றுக் கொள்வது அல்லது உறவுகளை மேம்படுத்துவது போன்ற அனைத்து விஷயங்களுக்கும் இந்த கைசென் உதவும்.

ஷின்ரின்–யோகு : 

ஷின்ரின்-யோகு எனும் தத்துவமானது ஆங்கிலத்தில் “ஃபாரஸ்ட் பாத்திங்” என பொருள் படுகிறது. அதாவது ஒரு மனிதர் எப்போதும் இயற்கையுடன் ஒன்றி இருந்து அதனை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதையும், அதிலிருந்து நம்மை குணப்படுத்திக் கொள்ளும் கலையை கற்றுக் கொள்ள வேண்டும் என்பதையும் தத்துவம் கூறுகிறது. இதன் மூலம் மன அழுத்தம் குறைவது, மனநலனில் மேம்பாடு மற்றும் நமது ஒட்டுமொத்த இயக்கத்திலும் நேர்மறையான மாற்றங்கள் காணப்படும்.

News18

ஷின்ரின்-யோகு உங்கள் வாழ்வில் நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடிந்த அளவு இயற்கையான சூழலில் நேரத்தை செலவிட வேண்டும். காடுகளில் தனியாக இருப்பது அல்லது மரம், செடி, கொடிகள் நிறைந்த பூங்காவிற்கு செல்வது ஆகியவையும், அனைத்தையும் உன்னிப்பாக கவனிப்பது, சத்தங்கள், காட்சிகள். வாசனைகள் போன்ற அனைத்தையும் கவனித்து உள்வாங்கிக் கொள்வது போன்ற அனைத்தும் இதில் அடங்கும்.


இதை சரியாக பயிற்சி செய்யும்போது ஸ்ட்ரெஸ் ஹார்மோன்கள் குறைவாக சுரக்கின்றன. மேலும் நமது கற்பனைத் திறனும் அதிகரிக்கிறது. இவற்றைத் தவிர மனதிற்கு அமைதியான ஒரு சூழலை உண்டாக்கி தருகிறது. இதனால் நமது உடல் மற்றும் மனம் என இரண்டிலுமே சம நிலையான தன்மையும் நாம் ஏற்படுத்திக் கொள்ள முடியும்.

கிண்ட்சுகி : 

கிண்ட்சுகி எனும் இந்த வார்த்தையானது உடைந்த மண்பாண்டங்களை தங்கம், வெள்ளி அல்லது பிளாட்டினம் கலந்த பொடிகளுடன் சேர்த்து சரி செய்யும் ஒரு கலையை குறிக்கிறது. அதாவது உடைந்த விஷயங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் முன்னிலும் சிறப்பாக அவற்றை எவ்வாறு சரி செய்வது என்பதையும், அதனை எவ்வாறு நாம் பயன்படுத்திக் கொள்வது என்பதையும் இத்தத்துவம் கூறுகிறது. இதன் மூலம் வாழ்வில் நமக்கு இருக்கும் ஒழுங்கற்ற தன்மைகள் மற்றும் நமது காயங்கள் கூட நமது அழகுக்கும் மனவலிமைக்கும் காரணமாக இருக்கும் என்பதை இது குறிக்கிறது.

News18

உங்கள் வாழ்வில் இத்தத்துவத்தை பயன்படுத்திக் கொள்ள, முதலில் உங்களது கடந்த கால அனுபவங்களை நன்றாக சிந்தித்து எடை போட்டு பார்த்துக்கொள்ள வேண்டும். அதில் நீங்கள் செய்த தவறுகள் மற்றும் உங்களுக்கு ஏற்பட்ட காயங்களை நினைத்து வருந்துவதற்கு பதிலாக, உங்கள் வாழ்வில் அவற்றின் தனித்தன்மையை நினைத்து நீங்கள் பெருமைப்பட வேண்டும். அதனை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் பட்சத்தில் அதுவே உங்களது பலமாக மாறி உங்களது வாழ்வை முன்னேற்ற உதவும்.

மோனோ நோ அவேர் : 

இந்த வார்த்தை நிலையற்ற தன்மையின் அழகை குறிக்கிறது. இதன் மூலம் வாழ்வில் நடக்கும் அனைத்து சம்பவங்களையும் முழுமையாக ஏற்றுக் கொண்டு அவற்றை அனுபவிக்க வேண்டும் என்பதையும், அனைத்துமே மாறக்கூடியது என்பதையும் நாம் உணர வேண்டும். இத்தத்துவத்தை உங்கள் வாழ்வில் கடைப்பிடிக்க முதலில் நிகழ் காலத்தில் முழுமையாக மனதை செலுத்தி வாழ கற்றுக்கொள்ள வேண்டும்.

News18

சூரிய அஸ்தமனத்தை ரசிப்பது, பூக்களின் அழகை கண்டு மகிழ்ச்சியடைவது, நமக்கு பிடித்தவர்களின் சந்தோஷத்தை பார்த்து நாமும் மகிழ்ச்சி அடைவது போன்ற பல்வேறு விஷயங்களை பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இதன் காரணமாக நமது வாழ்வை நன்றி உணர்வுடனும் முழுமையாகவும் வாழ முடியும்.

ஓமோடெனாஷி : 

ஒமோடெனாஷி என்னும் இந்த தத்துவமானது சுயநலமின்றி மற்றவர்களுக்கு உதவக்கூடிய தன்மையை உணர்த்துகிறது. முழு மனதோடு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி மற்றவர்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதனை இது உணர்த்துகிறது. இத்தத்துவம் மூலம் உங்கள் வாழ்வில் நீங்கள் மாற்றத்தை கொண்டு வர முதலில் சுயநலமற்ற தன்மையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் மற்றவர்களுடன் பழகும் போது அன்பாகவும் பண்பாகவும் எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி பழக வேண்டும். இதன் மூலம் உறவுகளில் முன்னேற்றம் ஏற்படுவது மட்டுமல்லாமல் மற்றவர்களுக்கு உதவுவதனால் கிடைக்கும் அளப்பரிய சந்தோஷத்தையும் நீங்கள் உணர்வீர்கள்.

🔻 🔻 🔻