Agri Info

Adding Green to your Life

October 23, 2023

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணி : 368 காலியிடங்கள் அறிவிப்பு

October 23, 2023 0

 ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  நவம்பர் 11-ம் தேதிக்கு (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 368

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

News18

News18

News18

News18

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆட்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான தேதிகள்: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வானது  2024 ஜனவரி மாத 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இருப்பினும், தாட்கோ நிறுவனத்தின்உதவி பொறியியாளர் (கட்டடவியல்) பதவிக்கு மட்டும் நேர்முக தேர்வு இல்லாமல் வெறும் எழுத்துத் தேர்வில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு நடைபெறும்  எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் விண்ணப்பதாரர் இளநிலைப் பட்டம் பெற்ற பாடத்திட்டத்தில் இருந்து 300 கேள்விகள் இடம்பெறும். தாள்- II இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி -அ- வில் கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வும் (10ம் வகுப்புத் தரம்) பகுதி -ஆ- வில் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) கேள்விகளும் இடம்பெறும்.

விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

விண்ணப்பம் செய்வது எப்படி? இணையவழி விண்ணப்பத்தை 11.11.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ , tnpscexams .in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பே கிளிக் செய்யலாம் .


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு

October 23, 2023 0

 திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக செயல்பட உள்ள சகி -ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் (Saini-One Stop Centre) மையத்தின் நிர்வாகி, மூத்த ஆலோசகர் , தகவல் தொழில்நுட்ப பணியாளர். வழக்குப் பணியாளர்-1(மற்றும்)2 பாதுகாவலர்-1(மற்றும்)2 பல்நோக்கு உதவியாளர்- 1(மற்றும்)2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன

திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் என 3 பணியிடங்களும், பழனி அரசு மருத்துவமனை சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி மூத்த ஆலோசகர் - தகவல் தொழில்நுட்ப பணியாளர் வழக்குப் பணியாளர் -1(மூன்று பணியிடம் ), வழக்குப் பணியானார் 2(மூன்று பணியிடம் ), பாதுகாவலர்-1(மற்றும்)2. பல்நோக்கு உதவியாளர் -1(மற்றும்}2 ஆகிய பணியிடங்கள் என 13 பணியிடங்களும் என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மைய நிர்வாகி பதவிக்கு ரூ.30,000, மூத்த ஆலோசகர் பதவிக்கு ரூ 20.000, தகவல் தொழில்நுட்ப பணியான ருக்கு ரூ 18,000, வேழக்குப் பணியாளர் - 10)2 பணியிடத்திற்கு ரூ.15,000, பாதுகாவலர்-1(மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ .10,000. பல்நோக்கு உதவியாளர் – 1மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ 5400 என்ற வகையில் மாதந்தோறும் ஒப்பந்த ஊதியம் வழங்கப்படும்.

இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தாவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணை தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை \“மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் . சமூக நலன் மற்றும் மகளி | உசிமைத்துறை. அறை எண் 89 (தரைதனம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் திண்டுக்கல் மாவட்டம் 624004\” என்ற முகவரிக்கு வரும் 30.10.2023-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 22, 2023

எந்த தேர்வும் இல்லை... பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்... வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு

October 22, 2023 0

 தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:

1. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.

2. வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. தொகுப்பு ஊதியம்: ரூ. 12,000/-

4. முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர்அமைப்பு  தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.

5. இருப்பிடம்: விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .

6. பாலினம்:பெண்கள் மட்டும்

7. மொத்த காலியிடங்கள் : 2

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்-25.10.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101, தூத்துக்குடி மாவட்டம்.

பொது நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ எதிர்வரும் 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை thoothukudi.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 21, 2023

அதிகமாக ஏப்பம் விடுவது கூட புற்றுநோய் அறிகுறியா..? உடனே செக் பண்ணுங்க..!

October 21, 2023 0

 ஏப்பம் விடுவது சாதாரன உடலியல் செயல்பாடு. வயிற்றில் நிரம்பியுள்ள காற்றை வாய் வழியாக வெளியேற்றுவதே ஏப்பம் விடுதல். செரிமானம் நடைபெறும் போது, நம் உடலில் இருக்கும் தேவையற்ற காற்று வெளியேறுகிறது. இந்தக் காற்றில் ஆக்சிஜன், கார்பன் டை ஆக்சைட், நைட்ரஜன் ஆகியவை கலந்திருக்கும்.

எனினும், வழக்கத்தை விட அதிகமான ஏப்பம் உங்களுக்கு வந்தாலோ அல்லது ஒழுங்காக சாப்பிட முடியாமல் இருந்தாலோ அதை நாம் கொஞ்சம் தீவிரமான பிரச்சனையாக கருத வேண்டும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருசில நேரங்களில் இது புற்றுநோயாக கூட இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஏப்பம் எதனால் ஏற்படுகிறது?

நீங்கள் வேகமாக சாபிடும்போதோ அல்லது ஏதாவது குடிக்கும் போதோ காற்று உடலுக்குள் போய்விடும் அல்லது குளிர்பானங்கள் அருந்தும் பழக்கம் உங்களுக்கு இருந்தாலோ அல்லது புகைபிடிக்கும் பழக்கம் மற்றும் நிறைய சூயிங்கம் சுவைக்கும் பழக்கம் இருந்தால் ஏப்பம் அடிக்கடி வரும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மேலும் ஏப்பம் விடும்போது சத்தமும் வயிற்று வலியும் வரும்.

News18

ஏப்பம் விடுவது புற்றுநோய்க்கான அறிகுறியா?

வெறுமனே ஏப்பம் விடுவது மட்டுமே புற்றுநோயின் அறிகுறி ஆகாது. இவற்றோடு வலியும் வீக்கமும் இருந்தால் தான் அது குறிப்பிட்ட இரைப்பை குடல் புற்றுநோயாக இருப்பதற்கான வாய்புள்ளது என பல அய்வுகள் தெரிவிக்கின்றன.

பல வகையான புற்றுநோய்கள் ஒருவரின் செரிமானப் பாதையை தடுக்கிறது. இதன் காரணமாக அவருக்கு வாய்வுத் தொல்லையும் அஜீரணக் கோளாறும் ஏற்படுகிறது. அதிகமாக ஏப்பம் விடுவதும் இதில் அடங்கும்.

மற்ற அறிகுறிகள்

-காரணமில்லாமல் உடல் எடை குறைதல்
- நாள்பட்ட காய்ச்சல்
- ரத்தக்கசிவு
- அடிவயிற்றில் வலி
- வயிற்றுப்போக்கு
- மலச்சிக்கல்

எந்த வகையான புற்றுநோய்க்கு ஏப்பம் அறிகுறியாக இருக்கும்?

கீழ்கண்ட புற்றுநோய்கள் முற்றிய தருவாயில் இருக்கும் நபர்களுக்கு அடிக்கடி ஏப்பம் வரும்:

  1. வயிறு அல்லது இரைப்பை புற்றுநோய்

  2. உணவுகுழாய் புற்றுநோய்

  3. கணைய புற்றுநோய்

அஜீரணம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் இருப்பவர்களுக்கு கூடுதலாக ஏப்பம் விடும் பழக்கமும் இருக்கும். இந்த அறிகுறிகள் இருக்கும் நபர்கள் உணவுக்குழாய் அல்லது கணைய புற்றுநோயால் பாதிக்கபட்டிருப்பார்கள். மேலும் எச். பைலோரி தொற்றினால் நாள்பட்ட வீக்கம் உண்டாகி அல்சரையும் இரைப்பை புற்றுநோயையும் உருவாக்கும். எச். பைலோரி இருக்கும் நபர்களில் 10 சதவிகிதத்தினருக்கு வயிற்றுப் புண் நோயும் 1-3 சதவிகித நபர்களுக்கு இரைப்பை புற்றுநோயும் ஏற்படுகிறது.

ஏப்பம் விடுவதை எப்படி தவிர்ப்பது?

ஏப்பம் எதனால் ஏற்படுகிறது என சரியான காரணத்தை தெரிந்து கொண்டால் இதை தடுக்க முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. ஏப்பம் விடுவது தீவிரமான பிரச்சனையாக இல்லாதபட்சத்தில் நமது வாழ்க்கைமுறையை மாற்றினாலே போதுமானது. அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது…

  • சாப்பிட்டதும் சிறிய நடை செல்லுங்கள். குறிப்பாக இரவில் -

  • சாப்பிட்டதும் கட்டாயம் இதை கடைபிடியுங்கள்.

  • கார்பனேட்டட் குளிர்பானங்கள் அருந்தும் பழக்கத்தை நிறுத்துங்கள். அதேப்போல் சூயிங்கம்மையும் அடிக்கடி சுவைக்காதீர்கள்.

  • எதையும் மெதுவாக சாப்பிடுங்கள், குடியுங்கள்

  • புகைபிடிப்பதை நிறுத்துங்கள்

  • புற்றுநோய் காரணமாக அதிகப்படியான ஏப்பம் வந்தால் கிழ்கண்ட

  • சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம்.

  • கீமோதெரபி

  • அறுவை சிகிச்சை

  • கதிர்வீச்சு சிகிச்சை

  • மருந்துகள் 🔻 🔻 

Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு!

October 21, 2023 0

 

Degree முடித்துவிட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான BOBCAPS நிறுவன வேலைவாய்ப்பு!

IT Programmer பணிக்கென BOBCAPS நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

BOBCAPS பணியிடங்கள்:

BOBCAPS நிறுவனத்தில் காலியாக உள்ள IT Programmer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

IT Programmer கல்வி விவரம்:

IT Programmer பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Computer Science, Computer Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IT Programmer அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் 04 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

IT Programmer சம்பள விவரம்:

இந்த BOBCAPS நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

BOBCAPS தேர்வு முறை:

IT Programmer பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

BOBCAPS விண்ணப்பிக்கும் முறை:

இந்த BOBCAPS நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை careers@bobcaps.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 25.10.2023 அன்றுக்குள் வந்து சேருமாறு அனுப்ப வேண்டும்.

Download Notification Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ICSI Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

October 21, 2023 0

 

ICSI Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

ICSI – ஸ்மார்ட் அரசாங்கத்திற்கான தேசிய நிறுவனம் ஆனது Junior Consultant, Consultant & Senior Consultant ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 31.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ICSI காலிப்பணியிடங்கள்:
  • Junior Consultant – 4 பணியிடங்கள்
  • Consultant – 4 பணியிடங்கள்
  • Senior Consultant – 1 பணியிடம்
கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Master Degree in Economics/Statistics/Commerce/MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

அனுபவ விவரம்:

10+ ஆண்டுகள் தொழில்முறை அனுபவம் உள்ளவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பள விவரம் (ஆண்டுக்கு):
  • Junior Consultant – 6.50 LPA to 7.00 LPA
  • Consultant – upto 14.00 LPA
  • Senior Consultant – upto 20.00 LPA
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://www.icsi.in/recruitmentcrc/ என்ற இணைய முகவரியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 31.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 20, 2023

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

October 20, 2023 0
பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – சம்பளம்: ரூ.32,000/- || நேர்காணல் மட்டுமே!

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது Research Assistant, Field Investigator பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


பாண்டிச்சேரி பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Research Assistant, Field Investigator பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Research Assistant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post graduate / M.Phil./ Ph.D.தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Research Assistant ஊதிய விவரம்:

தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.32,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.10.2023ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

October 20, 2023 0

 

டிப்ளமோ தேர்ச்சி பெற்றவரா நீங்கள்? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

Mishra Dhatu Nigam Limited எனப்படும் MIDHANI ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Operative Trainee, Senior Operative Trainee பணிக்கென காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI / Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MIDHANI காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Operative Trainee, Senior Operative Trainee பணிக்கென காலியாக உள்ள 54 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Trainee கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு, ITI / Diploma தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

MIDHANI வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Trainee ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.21,900/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MIDHANI தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 01.11.2023ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

October 20, 2023 0

 

HCL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க தவறாதீர்கள் || முழு விவரங்களுடன்!

தனியார் நிறுவனங்களில் முன்னணி வகிக்கும் HCL Tech நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் BE/B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

HCL Tech காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Technical Specialist பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.

Technical Specialist கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

HCL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Technical Specialist முன் அனுபவம்:

2.5 முதல் 5 ஆண்டுகள் சம்பந்தப்பட்ட துறையில் பணி புரிந்த முன் அனுபவம் கொண்டவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

HCL ஊதிய விவரம்:

தேர்வு செய்யபடும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Technical Specialist தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாள் முடிவதற்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 19, 2023

TNPSC Analyst வேலைவாய்ப்பு 2023 – ரூ. 1,15,700/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

October 19, 2023 0

 

TNPSC Analyst வேலைவாய்ப்பு 2023 – ரூ. 1,15,700/- சம்பளம் || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

இளநிலை ஆய்வாளர் பதவிக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஆனது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த தமிழக அரசு பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால், தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNPSC வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Analyst in the Drugs Testing Laboratory பதவிக்கு என 7 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்ச வயது வரம்பு 18 ஆகும். SCs, SC(A)s, STs, MBC விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு கிடையாது. மற்ற விண்ணப்பத்தார்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Graduate in Pharmacy or Chemistry or Pharmaceutical Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Computer Based Test (CBT) மற்றும் Certificate Verification மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • Junior Analyst பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ரூ.36,400 – 1,15,700/- வரை ஊதியம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 20.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பள விவரம்:

Junior Analyst – ரூ.36,400 – 1,15,700/-

TNPSC Analyst விண்ணப்பிக்க கட்டணம்:

ஒரு முறை பதிவு கட்டணம் ரூ. 150/- (5 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்). ஏற்கனவே பதிவு செய்துள்ள விண்ணப்பதாரர்கள் மீண்டும் பதிவு செய்யத் தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 20.10.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf
Apply Online



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 18, 2023

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் Accounts Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,09,200/- || விண்ணப்பித்து பயனடையவும்!

October 18, 2023 0

 

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் Accounts Officer வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: 2,09,200/- || விண்ணப்பித்து பயனடையவும்!

Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை Central Pollution Control Board (CPCB) ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 11 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

CPCB காலிப்பணியிடங்கள்:

Senior Administrative Officer, Accounts Officer, Assistant Accounts Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 11 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Accounts Officer கல்வி தகுதி:

மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CPCB வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 56 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Accounts Officer ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.35,400/- முதல் ரூ.2,09,200/- வரை ஊதியம் வழங்கப்படும்.

CPCB தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.11.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news