Agri Info

Adding Green to your Life

October 27, 2023

திருச்சியில் தரைக்கடை அமைக்க விருப்பமா..? விண்ணப்பிக்க கடைசி நாள் எப்போது தெரியுமா?

October 27, 2023 0

 எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாவட்டம் வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் தரைக்கடைகள் அமைத்திட விரும்புவோர் வருகின்ற 30.10.2023 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என திருச்சி மாவட்டம் ஆட்சியர் பிரதீப் குமார் அறிவிப்பு.

திருச்சி மாவட்டம் மற்றும் கிழக்கு வட்டம், திருச்சி டவுன். வட்டாட்சியர் அலுவலகம் முன்புறமுள்ள டவுன் ஹால் மைதானத்தில் 2023 ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தரைக்கடைகள் அமைப்பது தொடர்பாக குற்றங்குறைகளற்ற திட்டவட்டமான ஒழுங்குமுறை உடைய தெளிவான நடைமுறைகள் சென்ற ஆண்டு பின்பற்றப்பட்டது போல் நடப்பு ஆண்டும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது ஒவ்வொரு வருடமும் நடைமுறையில் உள்ள திட்டமாகும்.

டவுன் ஹால் மைதானத்தில் பின்வரும் விவரப்படி அ. ஆ. இ பகுதி என பாகுபாடு செய்யப்பட்டு “அ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 37 தரைக்கடைகளும், “ஆ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 19 தரைக்கடைகளும் “இ” பகுதியில் 80 சதுர அடி கொண்ட 24 தரைக்கடைகளும் அமைத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கடை ஒவ்வொன்றும் அனுமதி வழங்கப்படும் நாளிலிருந்து தீபாவளி பண்டிகை முடிவுறும் வரை வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படும்.

‘அ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் - ரூ.7,000

‘ஆ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம் - ரூ.6,000

‘இ’ பிரிவு தரைக்கடை ஒன்றுக்கு அனுமதிக் கட்டணம்‌ - ரூ.5,000

தரைக்கடைகள் அமைக்க விரும்பும் நபர்கள் எந்தப் பிரிவு தரைக்கடை வேண்டுமோ அதைத் தங்கள் விண்ணப்பத்தில் குறிப்பிட்டு அதற்கான கட்டணத் தொகையை வருவாய் கோட்டாட்சியர், திருச்சிராப்பள்ளி (Revenue Divisional Officer, Tiruchirappalli ) என்ற பெயரில் வங்கி கேட்பு காசோலையாக (Demand Draft ) எடுத்து விண்ணப்பத்துடன் இணைத்து திருச்சிராப்பள்ளி வருவாய் கோட்டாட்சியர் அவர்களிடம் 30.10.2023 பிற்பகல் 05.45 மணிக்குள் சேர்க்க வேண்டும்.

தரைக்கடைகள் எண்ணிக்கையைவிட மனு செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் பட்சத்தில் குலுக்கல் முறையில் நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முதலில் ‘‘அ’’ பிரிவுக்கு குலுக்கல் முறையில் தேர்வு நடைபெறும். அதில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் “ஆ” பிரிவுடன் சேர்ந்து குலுக்கல் நடைபெறும். “ஆ” பிரிவில் இடம் கிடைக்காதவர்கள் விரும்பினால் “இ” பிரிவில் சேர்ந்து குலுக்கல் நடத்தப்படும்.

மேற்படி குலுக்கல் நகர வர்த்தக குழு பிரதிநிதிகள், மாவட்ட உபயோகிப்பாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சி, வருவாய் கோட்டாட்சியர் அவர்களால் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் 01.11.2023 அன்று காலை 11.00 மணிக்கு நடத்தப்படும் என திருச்சி மாவட்டம் ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

புது வீடு வாங்குற ஐடியா இருக்கா? அதுக்கு முன்னாடி உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

October 27, 2023 0

 “வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்” என்று சும்மா எல்லாம் சொல்லல. ஆம், வீடு வாங்குவது மற்றும் திருமணம் செய்வது என்பது நமக்கு மன அழுத்தம் தரக்கூடிய பலவிதமான பிரச்சனைகளை கொண்டு வரலாம்.

வீடு வாங்குவது அல்லது வீடு கட்டுவது என்பது பலரது கனவாக இருந்தாலும் அதனை பற்றிய முழு விவரமும் தெரியாமல் காலை விடுவது உங்களை மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு சேர்த்து விடலாம். உங்களுக்கு வீடு வாங்கும் எண்ணம் இருந்தால் உங்களிடம் நீங்கள் கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகள் என்ன என்பது பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

வீட்டை வாங்க வேண்டுமா? அல்லது வாடகைக்கு எடுக்க வேண்டுமா?

இது நீங்கள் முடிவு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்களில் ஒன்று. வீட்டை வாங்குவதற்கு முடிவு செய்வதற்கு முன்பு வாடகை வீடு மற்றும் சொந்த வீடு ஆகிய இரண்டிலும் உள்ள நன்மைகள் மற்றும் தீமைகளை ஒப்பிட்டு பாருங்கள். உங்களது வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார இலக்குகளுக்கு ஈடு கொடுக்க முடியும் அளவுக்கு ஒரு வீட்டை உங்களால் வாங்க முடியுமா என்பதை யோசிங்கள். மறுபுறம் ஒரு வீட்டை வாடகைக்கு எடுப்பது என்பது நீண்ட கால அர்ப்பணிப்பு கொண்ட பலவித நன்மைகளுடன் வருகிறது. ஆகவே ஒரு வீட்டை கட்டி அதை பராமரிப்பதற்கான பொறுப்புகள் முழுவதையும் ஏற்றுக்கொள்ள விரும்புகிறீர்களா அல்லது வாடகை கொடுப்பதோடு நிறுத்திக் கொள்ள விரும்புகிறீர்களா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.

அதற்கான பணத்தை உங்களால் புரட்ட முடியுமா?

வீடு வாங்குவதற்கு முன்பு நீங்கள் உங்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டிய மிக முக்கியமான கேள்வி இது. உங்களது வருமானம், சேமிப்பு மற்றும் கடன் ஆகிய பொருளாதார சூழ்நிலையின் அடிப்படையில் வீடு வாங்குவதற்கான பணத்தை உங்களால் புரட்ட முடியுமா என்பதை பொறுமையாக யோசித்துப் பாருங்கள். லோன் EMIகள், இன்சூரன்ஸ் மற்றும் பராமரிப்பு செலவுகளை ஏற்றுக் கொள்வதற்கான வருமானம் உங்களிடம் உள்ளதா என சிந்தியுங்கள். ஒருவேளை நீங்கள் ஹோம் லோன் மூலமாக வீடு வாங்க நினைத்தால் உங்களது கிரெடிட் ஸ்கோர், கடன் வழங்கும் நிறுவனத்தை அல்லது வங்கியை திருப்தி அடைய செய்யுமா என்பதை சரி பார்த்துக் கொள்ளுங்கள்.

டவுன் பேமெண்டிற்கு ஏதேனும் பணத்தை சேமித்து உள்ளீர்களா?

பெரும்பாலான கடன் வழங்குனர்கள் ஒரு வீட்டை கட்டுவதற்கோ அல்லது வாங்குவதற்கோ ஆக கூடிய டவுன் பேமெண்டை கடன் பெறுபவரே தர வேண்டும் என்று கூறுகிறார்கள். இது நீங்கள் வாங்க நினைக்கும் சொத்தின் விலையில் 20 சதவீதம் இருக்கும். ஆகவே டவுன் பேமெண்ட் செலுத்துவதற்கு உங்களிடம் போதுமான தொகை இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். டவுன் பேமெண்ட்டையும் கடனாக வாங்கி கொடுப்பது நல்ல யோசனையாக இருக்காது. எனவே லோன் வாங்குவதற்கு முன்பு டவுன் பேமெண்ட் தொகையை சேமிப்பு மூலமாக தயார் நிலையில் வைத்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது.

மேலும் நீங்கள் வாங்கப் போகும் புதிய வீட்டில் குறைந்தபட்சம் 5 முதல் 7 வருடங்கள் தங்கி இருப்பீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதனை மனதில் கொண்டே உங்களது எதிர்கால திட்டங்களை அமைத்துக் கொள்ளுங்கள்.

தயார் நிலையில் இருக்கக்கூடிய வீட்டை வாங்க வேண்டுமா அல்லது கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் வீட்டை வாங்க வேண்டுமா?

இந்த கேள்விக்கான முடிவு பல காரணிகளை சார்ந்திருக்கலாம். முதலாவதாக பொருளாதாரம் அடங்கும். தயார் நிலையில் இருக்கக்கூடிய வீட்டை காட்டிலும் கட்டுமானம் நடந்து கொண்டிருக்கும் இடத்தில் பொருளாதார செலவு குறைவாக இருக்கலாம். உடனடியாக குடியேற நினைக்கும் நபர்களுக்கு ஏற்கனவே தயார் நிலையில் உள்ள வீட்டை வாங்குவது நல்ல சாய்ஸாக இருக்கும்.

வீட்டின் உரிமையாளராக மாற தயாராக உள்ளீர்களா?

வீட்டு உரிமையாளர் என்பது வெறுமனே பொருளாதாரத்தோடு நின்று விடுவது அல்ல. வீட்டை பராமரிப்பது மற்றும் பழுது பார்ப்பது, சொத்து தொடர்பான வரிகளை செலுத்துவது, கார்பரேஷன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை பின்பற்றுவது போன்ற பல விஷயங்களும் இதில் அடங்கும். இதுபோன்ற கூடுதல் செலவுகளை ஏற்கக்கூடிய அளவுக்கு உங்களிடம் பொருளாதாரம் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

இறுதியாக ஒரு வீட்டை வாங்க வேண்டுமா? வேண்டாமா? என்பது உங்களது பொருளாதார சூழ்நிலை, இலக்குகள் மற்றும் சொந்த விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் நீங்கள் எடுக்கும் முடிவாகும். நீங்கள் எடுக்கப் போகும் முடிவுகளுக்கு இந்த கேள்விகள் நிச்சயமாக உதவியாக இருக்கும்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

கிராமப்புறங்களில் நல்ல லாபம் கொடுக்கும் பிஸினஸ் ஐடியாக்கள்… இதையும் கொஞ்சம் பாருங்க…

October 27, 2023 0

 கிராமப்புறங்களுக்கு ஏற்பட லாபத்தை அள்ளித் தரும் சில பிஸ்னஸ் ஐடியாக்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்.

டீ ஷாப் : டீ யை விரும்பாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆட்கள் அதிகம் கூடும் இடங்களில் டீக்கடை வைத்தால் லாபத்தை அள்ளலாம்.

சில்லறை விற்பனை கடை : கிராமப் புறங்களில் மக்கள் மொத்தமாக பொருட்களை வாங்குவதை காட்டிலும் சில்லறைகளில் வாங்குவதற்கே அதிக ஆர்வம் காட்டுவார்கள். சிறிய மளிகை கடைகள், வெற்றிலை பாக்கு மிட்டாய் கடைகள் கணிசமான லாபம் கொடுக்கும்.

பால் விற்பனை – பால் அத்தியாவசிய தேவை என்பதால் இந்த பிஸ்னஸை கவனத்துடன் பார்ப்பவர்களுக்கு லாபம் நிச்சயம். இந்த வேலைக்கு அதிக உழைப்பை கொட்ட வேண்டியது ஏற்படலாம்.

மாவு மில் – இந்த பிஸ்னஸிற்கு முதலீடு அதிகம் தேவை. ஒரு முறை முதலீடு செய்து விட்டால் அதிலிலிருந்து கணிசமான லாபம் தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும். இதுவும் அத்தியாவசிய தேவை கொண்ட பொருள் என்பதால் கவனத்துடன் வேலை பார்த்தால் லாபம் உறுதி.

மெடிக்கல் ஷாப் – சிட்டி முதல் கிராமம் வரை லாபம் கொடுக்கும் பிஸ்னஸ்களில் இதுவும் ஒன்று. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே தான் வருமே தவிர குறையாது.

கோழி பண்ணை – கிராமங்களில் அதிக இடம் உடையவர்கள் இந்த பிஸ்னஸை முயற்சிக்கலாம். கொஞ்சம் முன் அனுபவம் அவசியம். சரியான நபர்களை வேலைக்கு வைத்து பார்க்கும் போது லாபத்தை அள்ளலாம்.

எண்ணெய் மில் – தேங்காய், எள், கடலை உள்ளிட்ட கிராமங்களில் விளையும் பொருட்கள் எண்ணெயாக மாற்றப்படுகின்றன. எண்ணெய் மில் இல்லாத இடத்தில் இதனை ஆரம்பிக்கலாம்.

சிப்ஸ் தொழில் – அதிகம் கவனம் பெறாத அதே சமயம் லாபத்தை அள்ளிக் கொடுக்கும் தொழிலில் இதுவும் ஒன்று. உங்கள் மாஸ்டரிக் கைப் பக்குவம் சூப்பர் என்றால் பணம் குவிவது உறுதி.

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 25, 2023

Chennai Mega Private Job Fair 2023: சென்னையில் 15 ஆயிரம் இடங்களுக்கு முகாம்...!

October 25, 2023 0

 சென்னை மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை இணைந்து நடத்தும், இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 15 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

எப்போது முகாம்...!

மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி துறை சார்பில், டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னை சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் சாலை, அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி,

சென்னை. 600 015.

என்ற இடத்தில் நடக்கும் முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை பூர்த்தி செய்யும் முனைப்பில் உள்ளன.

8 முதல் பி.இ., வரை

இந்த முகாமில் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான நபர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கவுள்ளனர்.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

ஊதியம்

சென்னை மற்றும் காஞ்சிபுரம் பகுதியில் உள்ள Cube Enterprises, Channelplay, DELPHI TVS TECHNOLOGIES PVT LTD ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை பெறுவர்.

மெகா தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Trichy Special Private Job Fair 2023: திருச்சியில் 10 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு...!

October 25, 2023 0

 திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும், இந்த மெகா வேலைவாய்ப்பு முகாமில், 150க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, 10 ஆயிரம் காலிப்பணியிடங்களுக்கு தகுதியான நபர்களை தேர்வு செய்கிறது.

எப்போது முகாம்...!

டாக்டர் கலைஞர் நுாற்றாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் இணைந்து, ஸ்ரீ தனலெட்சுமி ஸ்ரீனிவாசன் தொழில் நுட்ப கல்லூரியில் காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெற உள்ளது.

முகாமில் பங்கு பெறும் முன்னணி நிறுவனங்கள், தங்கள் நிறுவனத்தின் பல்வேறு துறைகளில், காலியாக உள்ள பணியிடங்களை பூர்த்தி செய்கிறது.

10 முதல் பி.இ., வரை

இந்த முகாமில் பத்தாம் வகுப்பு படித்தவர்கள் முதல் பட்டப்படிப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, நர்ஸிங், பார்மஸி மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்களும் பங்கேற்கலாம்.

முகாமில் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் பங்கேற்கலாம்.

ப்ளீஸ் மறக்காதீங்க...!

பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்விச் சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்கள் மற்றும் கயவிவரக் குறிப்புடன் (Bio-Data) ஆகியவற்றை நேர்காணலின்போது, உடன் எடுத்து செல்ல வேண்டும்.

முகாமில் 150க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியான 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட நபர்களை தேர்வு செய்து பணி ஆணை வழங்கவுள்ளனர்.

வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைதேடும் இளைஞர்களும் இம்முகாமில் கலந்து கொள்ள எவ்வித கட்டணமும் செலுத்த தேவை இல்லை.

ஊதியம்

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை ஆகிய இடங்களில் உள்ள Cube Enterprises, WHEELS INDIA LTD, Jai Nidhi Automation, DELPHI TVS TECHNOLOGIES PVT LTD ஆகிய நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியம் குறைந்தபட்சம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை வழங்கப்படும். பணி திறனை பொறுத்து கூடுதல் ஊதியம் பெறவும் வாய்ப்புள்ளது.

சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் பற்றிய விவரங்கள் அறிய கீழே உள்ள லிங்க்கை க்ளிக் பண்ணுங்க ப்ளீஸ்...



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரூ.90,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க

October 25, 2023 0

 

ரூ.90,000/- சம்பளத்தில் இந்திய ஸ்டீல் ஆணைய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்தியாவின் முன்னணி எஃகு தயாரிப்பு நிறுவனமான இந்திய ஸ்டீல் ஆணையத்தில் (The Steel Authority of India Limited (SAIL)) காலியாக உள்ள Specialist மற்றும் GDMO பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 8 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியானவர்கள் இப்பணிக்கு நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இந்திய ஸ்டீல் ஆணைய காலிப்பணியிடங்கள்:
  • Specialist – 2 பணியிடங்கள்
  • GDMO – 6 பணியிடங்கள்

என மொத்தம் 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

SAIL வயது வரம்பு:

23.10.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 69 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:
  • Specialist – MBBS with MD/MS/DNB / MBBS with PG Diploma
  • GDMO – MBBS
  • சம்பள விவரம்:
  • Specialist – ரூ.1,60,000/-
  • GDMO – ரூ.90,000/-
தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 06.11.2023 அன்று நடைபெற உள்ளது.

SAIL விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 06.11.2023 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

 Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CEL சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Assistant Manager வேலை – சம்பளம்: ரூ.1,60,000/- || முழு விவரங்களுடன்!

October 25, 2023 0

 

CEL சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்டில் Assistant Manager வேலை – சம்பளம்: ரூ.1,60,000/- || முழு விவரங்களுடன்!

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Assistant Manager, Accounts Officer, Deputy Engineer (Civil) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Assistant Manager, Accounts Officer, Deputy Engineer (Civil) பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் CA / ICWA / MBA/ BE / B. Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 30 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.40,000/- முதல் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகார்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 26.10.2023ம் தேதிக்குள் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:
  • E-2 Assistant Manager – Rs.50000-3%-160000/-
  • E1 – Deputy Engineer / Officer – Rs..40000-3%-140000/-
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களின் பயோடேட்டா, மற்றும் அனைத்து சான்றிதழ்களையும் இணைத்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு 26.10.2023 க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் Project Assistant வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

October 25, 2023 0

 

PGIMER ஆணையத்தில் Project Assistant வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆணையம் ஆனது Senior Resident பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

Project Assistant, Lab Attendant பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Assistant கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Master’s Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

PGIMER வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Assistant ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து recruitmentmanpowerplpgimer@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு 11.11.2023ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

TN TRB Graduate Teachers வேலைவாய்ப்பு 2023 – 2222 காலிப்பணியிடங்கள் || ரூ.115700/- வரை ஊதியம்!

October 25, 2023 0

 

TN TRB Graduate Teachers வேலைவாய்ப்பு 2023 – 2222 காலிப்பணியிடங்கள் || ரூ.115700/- வரை ஊதியம்!

2023- 2024 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பணிக்கான நேரடி ஆட்சேர்ப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு ஆன்லைன் முறையில் விண்ணப்பங்கள் 30.11.2023 அன்று மாலை 5.00 மணி வரை மட்டுமே செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள தகுதி விவரங்களை சரிபார்த்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TN TRB BRTE காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துணைப் பணிக்கான சிறப்பு விதிகளில் சேர்க்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வி மற்றும் பிற துறைகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் / தொகுதி வள ஆசிரியர் கல்வியாளர்கள் (BRTE) பதவிக்கு என மொத்தம் 2222 பணியிடங்கள் காலியாக உள்ளன.

  • Directorate of School Education – 2171 பணியிடங்கள்
  • Directorate of MBC/DNC Welfare – 23 பணியிடங்கள்
  • Directorate of Adi- Dravidar Welfare – 16 பணியிடங்கள்
  • Directorate for Welfare of the Differently Abled – 12 பணியிடங்கள்
Graduate Teacher வயது வரம்பு:

இத்தேர்வுக்கான நேரடி ஆட்சேர்ப்பு மூலம் நியமனம் செய்வதற்கான பொதுப் பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் நாளான 2023 அன்று 53 வயதாக இருக்க வேண்டும்.

மேலும் பட்டியல் சாதிகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பு முஸ்லிம்கள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், MBC/DNC மற்றும் DW ஆகிய அனைத்து சாதிகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கான அதிகபட்ச வயது வரம்பு ஆட்சேர்ப்பு ஆண்டின் ஜூலை முதல் தேதியின்படி 58 வயதாக இருக்க வேண்டும்.

BRTE கல்வி தகுதி:

Graduation and 2-year Diploma in Elementary Education (or) Graduation with at least 50% marks and Bachelor in Education (B.Ed.); (or) Graduation with at least 45% marks and Bachelor in Education (B.Ed.), in accordance with the NCTE (Recognition Norms and Procedure) Regulations issued from time to time in this regard (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4-year Bachelor in Elementary Education (B.El.Ed.) (or) Higher Secondary (or its equivalent) with at least 50% marks and 4- year B.A./B.Sc.Ed. or B.A.Ed./B.Sc.Ed (or) Graduation with at least 50% marks and B.Ed., (Special Education); and Must have obtained a degree or its equivalent with such Subjects or Languages in respect of which recruitment is made.

தேர்வு செயல் முறை:

A. Compulsory Tamil Language Eligibility Test
B. Written Examination
C. Certificate Verification

சம்பள விவரம்:

Graduate Teachers / Block Resource Teacher Educators (BRTE) பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ,36400 – 115700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Teacher தேர்வு கட்டணம்:
  • SC, SCA, ST and differently abled persons – ரூ.300/-
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.600/-
விண்ணப்பிக்கும் முறை:

இந்த தமிழக அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் https://www.trb.tn.gov.in. என்ற ஆன்லைன் முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.’

Download Notification 2023 Pdf
Apply Online


October 23, 2023

டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஒருங்கிணைந்த பொறியியல் பணி : 368 காலியிடங்கள் அறிவிப்பு

October 23, 2023 0

 ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான காலிபணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் எதிர்வரும்  நவம்பர் 11-ம் தேதிக்கு (11.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை: 368

தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறை, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை என மொத்த 19 பதவி வகைமையின் கீழ் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.  ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன.

News18

News18

News18

News18

எனவே, விண்ணப்பிக்க விரும்புவோர், ஆட்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்து கவனமாக வாசிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான தேதிகள்: 

ஆன்லைன் எழுத்துத் தேர்வானது  2024 ஜனவரி மாத 6,7 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், தகுதி பெறும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இருப்பினும், தாட்கோ நிறுவனத்தின்உதவி பொறியியாளர் (கட்டடவியல்) பதவிக்கு மட்டும் நேர்முக தேர்வு இல்லாமல் வெறும் எழுத்துத் தேர்வில் மட்டுமே சேர்க்கை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 450 மதிப்பெண்களுக்கு நடைபெறும்  எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களைக் கொண்டது. தாள் I-ல் விண்ணப்பதாரர் இளநிலைப் பட்டம் பெற்ற பாடத்திட்டத்தில் இருந்து 300 கேள்விகள் இடம்பெறும். தாள்- II இரண்டு பகுதிகளைக் கொண்டது. பகுதி -அ- வில் கட்டாய தமிழ்மொழி தகுதித் தேர்வும் (10ம் வகுப்புத் தரம்) பகுதி -ஆ- வில் பொது அறிவு (பட்டப்படிப்புத் தரம்) கேள்விகளும் இடம்பெறும்.

விண்ணப்பக் கட்டணம் : பதிவுக் கட்டணம் : ரூ.150/ மற்றும் தேர்வுக் கட்டணம் : ரூ 200/

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியினர், பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதரவற்ற விதவைகள் பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. ஏனையோர் 1.07.2023 அன்று, 32 வயதினை பூர்த்தி அடைந்திருக்க கூடாது.

விண்ணப்பம் செய்வது எப்படி? இணையவழி விண்ணப்பத்தை 11.11.2023 அன்று இரவு 11.59 மணி வரை விண்ணப்பிக்க இயலும், பின்னர் அச்சேவை நிறுத்தப்படும். விண்ணப்பதாரர்கள் www.tnpsc.gov.in/ , tnpscexams .in ஆகிய இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். ஆள்சேர்க்கை அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பே கிளிக் செய்யலாம் .


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் பணிபுரிய ஒரு வாய்ப்பு

October 23, 2023 0

 திண்டுக்கல் மாவட்ட சமூக நல அலுவலகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வரும் திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக செயல்பட உள்ள சகி -ஒருங்கிணைந்த சேவை மையத்திலும் (Saini-One Stop Centre) மையத்தின் நிர்வாகி, மூத்த ஆலோசகர் , தகவல் தொழில்நுட்ப பணியாளர். வழக்குப் பணியாளர்-1(மற்றும்)2 பாதுகாவலர்-1(மற்றும்)2 பல்நோக்கு உதவியாளர்- 1(மற்றும்)2 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன

திண்டுக்கல் சகி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் வழக்குப் பணியாளர் பாதுகாவலர், பல்நோக்கு உதவியாளர் என 3 பணியிடங்களும், பழனி அரசு மருத்துவமனை சகி-ஒருங்கிணைந்த சேவை மையத்தில் மைய நிர்வாகி மூத்த ஆலோசகர் - தகவல் தொழில்நுட்ப பணியாளர் வழக்குப் பணியாளர் -1(மூன்று பணியிடம் ), வழக்குப் பணியானார் 2(மூன்று பணியிடம் ), பாதுகாவலர்-1(மற்றும்)2. பல்நோக்கு உதவியாளர் -1(மற்றும்}2 ஆகிய பணியிடங்கள் என 13 பணியிடங்களும் என மொத்தம் 16 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன.

மைய நிர்வாகி பதவிக்கு ரூ.30,000, மூத்த ஆலோசகர் பதவிக்கு ரூ 20.000, தகவல் தொழில்நுட்ப பணியான ருக்கு ரூ 18,000, வேழக்குப் பணியாளர் - 10)2 பணியிடத்திற்கு ரூ.15,000, பாதுகாவலர்-1(மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ .10,000. பல்நோக்கு உதவியாளர் – 1மற்றும்)2 பணியிடத்திற்கு ரூ 5400 என்ற வகையில் மாதந்தோறும் ஒப்பந்த ஊதியம் வழங்கப்படும்.

இப்பதவிக்கான விண்ணப்பம் மற்றும் கல்வித்தகுதி உள்ளிட்ட தாவல்களை திண்டுக்கல் மாவட்ட dindigul.nic.in என்ற இணை தளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை \“மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம் . சமூக நலன் மற்றும் மகளி | உசிமைத்துறை. அறை எண் 89 (தரைதனம்), மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகம் திண்டுக்கல் மாவட்டம் 624004\” என்ற முகவரிக்கு வரும் 30.10.2023-ஆம் தேதி மாலை 05.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

October 22, 2023

எந்த தேர்வும் இல்லை... பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்... வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைவாய்ப்பு

October 22, 2023 0

 தூத்துக்குடி மாவட்டம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகிற்குட்பட்ட வட்டாரங்களில் காலியாக உள்ள வட்டார ஒருங்கிணைப்பாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான ஆள்சேர்க்கை அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் எதிர்வரும் 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் கல்வித்தகுதி விவரம்:

1. கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பாடத்தில் பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். இவர்கள் ஆறு மாத காலம் கணினி பயிற்சி (MS Office) பெற்றிருக்க வேண்டும்.

2. வயது: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்.

3. தொகுப்பு ஊதியம்: ரூ. 12,000/-

4. முன் அனுபவம்: குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் மகளிர்அமைப்பு  தொடர்பான பணிகளில் முன் அனுபவம் பெற்று பணியாற்றி இருக்க வேண்டும்.

5. இருப்பிடம்: விண்ணப்பதாரர் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும் .

6. பாலினம்:பெண்கள் மட்டும்

7. மொத்த காலியிடங்கள் : 2

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய கடைசி நாள்-25.10.2023

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: அல்லது இணை இயக்குநர் / திட்ட இயக்குநர், தமிழ்நாடு ஊரக வாழ்வாதர இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், இரண்டாவது தளம், கோரம்பள்ளம் 628101, தூத்துக்குடி மாவட்டம்.

பொது நிபந்தனைகள்:

விண்ணப்பதாரர்கள் கல்வித் தகுதி, சாதிச்சான்று, கணினி பயிற்சி பெற்றத்தற்கான சான்று மற்றும் முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு நகல் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

விண்ணப்ப படிவத்தில் உள்ள விபரங்கள் முழுமையாக பூர்த்தி செய்து அனுப்பப்பட வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

தகுதியில்லாத மற்றும் காலங்கடந்து பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் உரிய சான்றுகளின் நகல்களுடன் நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலமாகவோ எதிர்வரும் 25ம் தேதி மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பப் படிவத்தை thoothukudi.nic.in என்ற இணையத்தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.




🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news