Agri Info

Adding Green to your Life

November 11, 2023

Sports Quota Recruitment-அஞ்சல் துறையில் 1,899 பணியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

November 11, 2023 0

 மாநில, தேசிய மற்றும் சர்வதேச நிலைகளில் சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை இந்திய தபால் துறை வெளியிட்டுள்ளது.

இந்த ஆள்சேர்க்கையின் மூலம் மொத்தம் 1,899 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள்:

அஞ்சல் உதவியாளர் (Postal Assistant) பதவியின் கீழ் 598 பணியிடங்களும் / அஞ்சல் பிரிப்பு உதவியாளர் (Sorting Assistant) பதவியின் கீழ் 142 பணியிடங்களும், தபால்காரர் (PostMan) பதவியின் கீழ் 585 பணியிடங்களும், மெயில்கார்டு (Mail gaurd) பதவியின் கீழ் 3 பணியிடங்களும் , பல்நோக்குப் பணியாளர் (Multi Tasking Staff) பதவியின் கீழ் 570 பணியிடங்களும் நிரப்பப்பட உள்ளன.

ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்திய அஞ்சல் துறை வெளியிட்ட தேர்வு அறிவிப்பில் (Recruitment Notification) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. அதனை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யலாம்.

இதற்கான விண்ணப்பங்களை https://dopsportsrecruitment.cept.gov.in/ அதிகாரப் இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 09-12-2023 ஆகும்.

யார் விண்ணப்பிக்கலாம்: கூடைப்பந்து,கால்பந்து, கைப்பந்து, கபடி, மல்யுத்தம் என பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறைப் பட்டியலில் உள்ள 63 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு போட்டிகளில் ஏதேனும் ஒன்றில் கலந்து கொண்டிருக்க வேண்டும்.

இந்திய நாட்டின் சார்பாக பன்னாட்டு போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை தேசிய விளையாட்டு கூட்டமைப்பு செயலாளரிடம் பெற்றிருக்க வேண்டும்.

தேசிய அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ், தேசிய விளையாட்டு கூட்டமைப்பு அல்லது மாநில விளையாட்டு அமைப்பு செயலாளரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தமிழக பல்கலைக்கழகம் சார்பாக கலந்து கொண்டதற்கான சான்றிதழ், கல்லூரி முதல்வர் , இயக்குநர் அல்லது பல்கலைக்கழகத்தின் விளையாட்டு பொறுப்புஅதிகாரியிடம் பெற்றிருக்க வேண்டும்.

பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டதற்கான சான்றிதழை, மாநில கல்வித் துறை இயக்குனரிடம் இருந்து பெற்றிருக்க வேண்டும்.

November 10, 2023

CBHFL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

November 10, 2023 0

 

CBHFL நிறுவனத்தில் ஜாக்பாட் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

CBHFL என்னும் Central Bank Home Finance Limited ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் IT Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 20.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

CBHFL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, IT Officer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் CBHFL நிறுவனத்தில் காலியாக உள்ளது.

IT Officer கல்வி விவரம்:

இந்த CBHFL நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் CS, IT, Electronics & Communication பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

CBHFL அனுபவ விவரம்:

IT Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணி சார்ந்த துறைகளில் குறைந்தது 15 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

IT Officer வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.10.2023 அன்றைய நாளின் படி, 62 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

CBHFL சம்பள விவரம்:

இந்த CBHFL நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

IT Officer தேர்வு செய்யும் முறை:

IT Officer பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBHFL விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த CBHFL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் (20.11.2023) தபால் செய்ய வேண்டும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Coffee Board-ல் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || B.Sc தேர்ச்சி போதும்!

November 10, 2023 0

 

Coffee Board-ல் ரூ.25,000/- மாத ஊதியத்தில் வேலை – நேர்காணல் மட்டுமே || B.Sc தேர்ச்சி போதும்!

Coffee Board ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Young Professional பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

Coffee Board காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Young Professional பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Young Professional கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் B.Sc / M.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Coffee Board வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 20 என்றும் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Young Professional ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Coffee Board தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (28.11.2023, 29.11.2023, 30.11.2023) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப் படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் rcrsdiphu@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். அறிவிப்பு வெளியான 15 நாளுக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SECI நிறுவனத்தில் ரூ.2,80,000/- மாத சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 10, 2023 0

 

SECI நிறுவனத்தில் ரூ.2,80,000/- மாத சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Solar Energy Corporation of India (SECI) நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் General Manager பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.11.2023 அன்று முதல் ஆன்லைனில் பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

SECI காலிப்பணியிடங்கள்:
General Manager பணிக்கு என 04 பணியிடங்கள் SECI நிறுவனத்தில் காலியாக உள்ளது.

General Manager கல்வி தகுதி:

இந்த SECI நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree, Post Graduate Degree, {Post Graduate Diploma, MBA, PGDBM, PGDM, LLM, LLB தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

General Manager வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களின் வயது வரம்பானது அதிகபட்சம் 50 என SECI நிறுவனத்தால் முடிவு செய்யப்பட்டுள்ளது.

General Manager மாத ஊதியம்:

General Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1,20,000/- முதல் ரூ.2,80,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

SECI தேர்வு முறை:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SECI விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWBD – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • மற்ற நபர்கள் – ரூ.1,000/-
SECI விண்ணப்பிக்கும் முறை:

இந்த SECI நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 15.11.2023 அன்று முதல் 14.12.2023 அன்று வரை https://www.seci.co.in/page/careers என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

தேசிய அனல் மின் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,00,000/- மாத சம்பளம்!

November 10, 2023 0

 

தேசிய அனல் மின் நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கு வேலை – ரூ.1,00,000/- மாத சம்பளம்!

தேசிய அனல் மின் நிறுவனம் (NTPC) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Geologist பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 23.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தேசிய அனல் மின் நிறுவனம் காலிப்பணியிடங்கள்:

NTPC நிறுவனத்தில் காலியாக உள்ள Geologist பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Geologist கல்வி:

Geologist பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் Geology, Geophysics, Geoscience பாடப்பிரிவில் Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

NTPC வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Geologist சம்பளம்:

இந்த NTPC நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் ரூ.1,00,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

NTPC தேர்வு செய்யும் விதம்:

Geologist பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Screening, Shortlisting, Selection Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Geologist விண்ணப்ப கட்டணம்:
  • SC / ST / PWBD / EXSM / Female – விண்ணப்ப கட்டணம் கிடையாது
  • General / EWS / OBC – ரூ.300/-
NTPC விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் https://careers.ntpc.co.in/recruitment/ என்ற இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். 23.11.2023 என்ற இறுதி நாளுக்குப் பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.160000/- சம்பளம்!

November 10, 2023 0

 

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – மாதம் ரூ.160000/- சம்பளம்!

ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (எச்ஏஎல்) ஆசியாவின் முதன்மையான ஏரோநாட்டிக்கல் வளாகமாகும். இங்கு காலியாக உள்ள Senior Medical Officer (Physician) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, ஒரு பணியிடம் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 15.12.2023 க்குள் இதற்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

HAL காலிப்பணியிடங்கள்:

Senior Medical Officer (Physician) பதவிக்கு 1 பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து MBBS முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். மருத்துவ கவுன்சில் பதிவு செய்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

30.09.2023 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்சம் 45 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

HAL சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் ஊழியருக்கு அதிகபட்சமாக மாதம் ஒன்றுக்கு ரூ.50000 – 160000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் 15.12.2023 அன்றுக்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Download Notification 2023 Pdf



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

மன அமைதி இல்லாமல் தவிக்கிறீர்களா..? இந்த விஷயங்களை இன்றே செய்யுங்கள்..!

November 10, 2023 0

 டலை கொஞ்சம் கூட அசைக்காமல் நாம் ஓரிடத்தில் அமர்ந்து கொண்டாலும், நம் மனம் மட்டும் ஏழேழு திசைகளுக்கும் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அத்தகைய மனதிற்கு அவ்வபோது சிந்தனைகளில் இருந்து விடுதலை கொடுக்க வேண்டும். குறிப்பாக மனதை ஆக்கிரமித்துள்ள தேவையற்ற சிந்தனைகளை ஒதுக்கித் தள்ள வேண்டும்.

அதிலும், இன்றைக்கு நம்மில் பெரும்பாலானவர்களின் மனம் முழுவதும் டிஜிட்டல் சாதனங்களில் மூழ்கிக் கிடக்கிறது. அதேபோல அலுவலக வேலை ரீதியாகவும் நம் மனம் மிகுந்த குழப்பம் அடைகிறது. இவற்றில் இருந்து விடுதலை பெற்று, மனதை அமைதியாக வைத்துக் கொள்வது எப்படி என்பதை இப்போது பார்க்கலாம்.

எல்லைகளை நிர்ணயம் செய்யுங்கள் 

நம்முடைய பணி நேரம் என்ன, டிஜிட்டல் சாதனங்களில் இருந்து விடுதலை பெறுவது எப்படி என்பதை நாமே திட்டமிட்டுக் கொள்ள வேண்டும். குறிப்பாக ஸ்மார்ட் ஃபோன்களில் மூழ்கிவிடாமல், தேவைக்கு மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொள்ளுதல் அவசியம். உங்கள் ஸ்மார்ட் வாட்சை கூட அதிக நேரம் பயன்படுத்தக் கூடாது.

ஒவ்வொரு நாளும் எந்த நேரத்தில், எவ்வளவு நேரத்திற்கு டிவி, ஃபோன் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை பொழுதுபோக்கிற்காக பயன்படுத்துவது என்பதை திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.

டிஜிட்டல் நச்சு வெளியேற்ற காலம்

ஒரு நாளின் குறிப்பிட்ட பொழுதில் டிஜிட்டல் சாதனங்களின் பக்கமே திரும்பிப் பார்ப்பதில்லை என்ற வரையறையை நிர்ணயம் செய்து கொள்ளுங்கள். விடுமுறை நாட்களில் இணைய உலகம், டிஜிட்டல் சாதனங்கள் என்று மூழ்கிக் கிடக்காமல் அன்றைய தினம் குடும்பத்தினருடன் நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

சமூக வலைதள நேரம்

தினசரி அல்லது வாராந்திர அடிப்படையில் சமூக வலைதளங்களை எவ்வளவு நேரம் பயன்படுத்துவது என்று திட்டமிட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குள் எதிர்மறை சிந்தனைகளை தூண்டும் பதிவர்களை பின் தொடர வேண்டாம் மற்றும் நோட்டிஃபிகேஷன்களை மியூட் செய்து கொள்ளலாம்.

பயனுள்ள நடவடிக்கைகள்

டிஜிட்டல் சாதங்களின் பயன்பாடு நமக்கு ஆரோக்கியமற்றதாகும். அதை குறைத்துக் கொண்டு ஆரோக்கியம் தரும் நடவடிக்கைகளில் நம்மை, நாம் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். மனதிற்குப் பிடித்த பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபடலாம்.

தியானம் செய்யலாம்

மனதை அவ்வப்போது ஒருநிலைப்படுத்திக் கொள்ள வேண்டும். தியானம் செய்வது சிறப்பான பலனை தரக் கூடும். கற்பனை உலகை விட்டு வெளிவந்த, எதார்த்த உலகின் மீது உங்கள் கவனத்தை திசை திருப்புங்கள்.

தேவையான நடவடிக்கைகள்

மனதை எப்படியெல்லாம் அமைதியாக வைத்துக் கொள்வது என்று பட்டியல் போட்டு செயல்பட வேண்டும். உதாரணத்திற்கு ஸ்ட்ரெஸ் அளவை குறைப்பது குறித்து கவனம் செலுத்துவதுடன், ஆழ்ந்த உறக்கம், நல்ல தொடர்புகள் போன்றவற்றில் கவனம் செலுத்தலாம்.

🔻 🔻 🔻 

உயிருக்கே ஆபத்தாகும் பக்கவாதம்.. அபாயத்தை குறைக்க உதவும் 7 முக்கிய குறிப்புகள்..!

November 10, 2023 0

 இந்தியாவில் சமீப காலங்களில் பக்கவாதம் ஏற்படுவது 100 விழுக்காடு வரை அதிகரித்துள்ளதாக சில பகுப்பாய்வு முடிவுகள் வெளிப்படுத்தி இருக்கின்றன. உண்மையில், பக்கவாதம் இப்போது நாட்டில் இறப்புக்கான இரண்டாவது முக்கிய காரணியாக உள்ளது.

ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சத்து 85 ஆயிரம் மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இது ஒவ்வொரு 40 வினாடிகளுக்கும் கிட்டத்தட்ட ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதை காட்டுகிறது. மேலும், ஒவ்வொரு நான்கு நிமிடங்களுக்கு ஒருவர் பக்கவாதம் ஏற்பட்டு மரணிக்கிறார் என்ற தகவலும் நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பக்கவாதம் தடுப்பு மற்றும் மறுவாழ்வு ஆகியவற்றில் பாரம்பரிய மருத்துவம் பாராட்டுக்குரிய முன்னேற்றங்களைச் செய்திருந்தாலும், இயற்கையான முறைகளை மேம்படுத்தினால் இந்தியாவில் ஏற்படும் பக்கவாத பாதிப்புகளை கணிசமாக குறைக்கலாம் என கூறப்படுகிறது.

வாழ்க்கை முறையில் நல்ல மாற்றங்களை சீராக செயல்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிப்பது பக்கவாதம் ஏற்படுவதைத் தவிர்க்க உதவும்.

News18

பக்கவாதம் எப்படி ஏற்படுகிறது?

மூளைக்கு ஆக்ஸிஜன் மற்றும் ரத்தத்தை வழங்குவதற்குப் பொறுப்பான ரத்த நாளங்கள் தடுக்கப்பட்டால் அல்லது ரத்தம் செல்வதில் ஏதேனும் குளறுபடிகள் ஏற்பட்டால் பக்கவாதம் ஏற்படுகிறது. இது மூளையின் ரத்தம் மற்றும் ஆக்ஸிஜன் குறைபாட்டிற்கு வழிவகுக்கும். இதனால் மூளையின் செல்களில் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு அவை அழிந்து போகும்.

2 வகையான பக்கவாதம் உள்ளன. அவை கீழே வருமாறு…

இஸ்கிமிக் பக்கவாதம்: ரத்த உறைவு காரணமாக இது ஏற்படுகிறது. கிட்டத்தட்ட 80 விழுக்காடு பக்கவாத நோயாளிகள் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.

ரத்தக்கசிவு பக்கவாதம்: இந்த வகை மூளையில் அல்லது அதற்கு அருகில் உள்ள ரத்தக் குழாய் வெடிக்கும்போது ஏற்படுகிறது.

பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இயற்கையாக குறைப்பது எப்படி?

ஜிண்டால் நேச்சர்க்யூர் இன்ஸ்டிடியூட் உதவி தலைமை மருத்துவ அலுவலர் ஸ்ரீகாந்த் எச்.எஸ், பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதற்கான சில இயற்கை வழிகளைப் பகிர்ந்து கொண்டார்:

ஆரோக்கியமான எடை: பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைப்பதில் எடையை பராமரிப்பது முக்கியம். அதிக எடை மற்றும் உடல் பருமன் இரண்டும் பக்கவாதத்திற்கான முதன்மை ஆபத்து காரணிகளாக அமைகின்றன. மேலும் அவை உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு போன்ற பிற நோய்களுடன் தொடர்பு கொண்டுள்ளதால், உயிருக்கு ஆபத்தாக அமைகின்றன.

தினமும் உடற்பயிற்சி: ஆபத்தைக் குறைப்பதற்காக தினமும் சாதாரண உடற்பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. இது நம் உடலில் ஆரோக்கியமான எடையை கட்டுப்பாடுடன் வைத்திருக்க உதவுகிறது.

உணவில் கவனம்: சத்தான உணவை எடுத்துக்கொள்வது எடை நிர்வாகத்திற்கு பெரிதும் உதவுவது. அதுமட்டுமல்லாமல் பக்கவாதம் ஏற்படும் அபாயத்துடன் தொடர்புடைய பிற காரணிகளிலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

நல்ல தூக்கம்: வளர்ந்து வரும் வேலை அழுத்தங்கள், பொருளாதார நெருக்கடிகளை கருத்தில் கொள்ளாமல் நன்றாக எப்படி தூங்குவது என்பது குறித்து சிந்தியுங்கள். தூக்கத்தின் தரத்திற்கும், பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க தொடர்பை பல ஆய்வு முடிவுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. போதிய தூக்கமின்மை, சோர்வு, நினைவாற்றல் குறைபாடு, பதட்டம் மற்றும் மனச்சோர்வு போன்றவை பக்கவாதம் ஏற்படுவதற்கான தாக்கங்களையும் கொண்டுள்ளது.

புகைபிடிப்பதை கைவிடவும்: சிகரெட் புகையில் உள்ள நிகோடின் ரத்தத்தில் தீங்கு விளைவிக்கும் எமனாக செயல்படுகிறது. அதன் உறைவு தன்மையை புகைப்பிடிக்கும் பழக்கம் அதிகரிப்பதால் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை உடலில் வளர்க்கிறது. எனவே, புகைபிடிப்பதைத் தவிர்ப்பது பக்கவாதத்தின் அபாயத்தைக் குறைப்பதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கும் ஒரு முக்கியமான படியாகும்.

மன அழுத்தத்தைத் தவிர்க்கவும்: மன அழுத்த சூழ்நிலைகளுக்கு உங்களை வெளிப்படுத்துவது பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கும். போதிய ஓய்வு, நீட்டிக்கப்பட்ட வேலை நேரம், மன உளைச்சல் ஆகியன மன அழுத்தத்தை அதிகரிக்க பங்களிக்கின்றன. இவை அனைத்தும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்திற்கு பங்களிக்கும் என்பதை மறைந்துவிடாதீர்கள்.

நீரிழிவு நோயை நிர்வகிக்கவும்: நீரிழிவு நோய் பக்கவாதத்திற்கு குறிப்பிடத்தக்க ஆபத்து காரணியாக உள்ளது. உயர் ரத்த சர்க்கரை அளவு ரத்த நாளங்களில் சேதம் ஏற்படுத்துவதால், அதனை கட்டுக்குள் வைத்திருப்பதை உறுதி செய்யவும். எந்த ஒரு சூழலிலும் சுய மருத்துவம் செய்யாமல், தேவையானவற்றை மருத்துவரின் ஆலோசனைபடி அணுகுவது சிறந்ததாக இருக்கும்.


🔻 🔻 🔻 

பட்டாசு வெடிக்கும்போது தீக்காயம் ஏற்பட்டால் இந்த தவறை மட்டும் செய்திடாதீங்க!.. மருத்துவர் அட்வைஸ்!

November 10, 2023 0

 தீபாவளி பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால் உடனடியாக என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மருத்துவர் சுரேஷ்குமார் அறிவுரை வழங்கியுள்ளார்.

தீபாவளி என்றாலே கொண்டாட்டம் கோலாகலம்தான். புத்தாடை , இனிப்பு, பட்டாசு என அனைத்து நிகழ்வுகளும் மகிழ்ச்சியின் வெளிப்பாடாக இருக்கும். இந்நிலையில், பட்டாசுகள் வெடிக்கும் போது என்னதான் கவனமாக இருந்தாலும் எதிர்பாராத விதமாக சில தீக்காயம் ஏற்படுவது வாடிக்கையாகி வருகிறது.

இந்த மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம். இது குறித்து மதுரை ராஜாஜி மருத்துவமனையின் ஒட்டுறுப்பு மற்றும் மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை துறை தலைவர் மருத்துவர் ப.சுரேஷ் குமார் நமது நியூஸ் 18 தமிழுக்கு சிறப்பு பேட்டியளித்துள்ளார்.

🔻 🔻 🔻 

உட்கார்ந்த இடத்திலேயே பல மணி நேரம் வேலையா..? இத்தனை மணி நேர உடற்பயிற்சி கட்டாயம் தேவை..!

November 10, 2023 0

 மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் வெறும் 22 நிமிடங்களில் ஈடுபடுவது, நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பதால் ஏற்படும் உடல்நல அபாயங்களைக் கணிசமாகக் குறைக்கும் என ஆய்வு முடிவுகள் கூறுகிறது. 

மக்கள் ஒவ்வொருவரும் தங்களின் பொருளாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்காகவே தங்களுக்குத் தெரிந்த பல்வேறு வேலைகளைச் செய்து வருகின்றனர். ஒரு சிலருக்கு நாள் முழுவதும் அலைந்து திரியும் வேலை என்றால், ஒரு சிலருக்கு பல மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை என்ற நிலை உள்ளது. இவ்வாறு 9 மணி நேரத்திற்கு மேலாக ஒருவர் ஒரே இடத்தில் நாற்காலியில் உட்கார்ந்தபடி பணிபுரியும் போது அவர்கள் பல உடல் நலப்பிரச்னைகளைச் சந்திக்க நேரிடும்.

குறிப்பாக NCBI-ன் தகவலின் படி, உட்கார்ந்த இடத்தில் வேலைப்பார்க்கும் போது டிமென்ஷியா, உடல் பருமன், இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படுகிறது. சில சமயங்களில் உயிரிழக்கும் அபாயம் கூட ஏற்படும் என்பதால் உடல் நலத்தைப் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்.

பலருக்கு அலுவலகப் பணிகளால் உடற்பயிற்சிகள் எதுவும் செய்ய முடியாது. இதுப்போன்ற சூழலில் நீங்கள் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்பது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டது.

கடந்த 2003 ஆம் ஆண்டு 2009 ஆம் வரை நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 11,989 பேர் பங்கேற்றார்கள். குறைந்தது 50 வயதுடைய ஸ்வீடன், நார்வே மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்தவர்கள் இதில் பங்கேற்றனர். ஆய்வின் போது இவர்கள் குறைந்தபட்சம் நான்கு நாட்கள் செயல்பாட்டைப் பதிவு செய்திருக்க வேண்டும். மேலும் மிதமான மற்றும் தீவிரமான உடல் செயல்பாடுகளில் ஈடுபடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதில் 5,963 பேர் 10.5 மணி நேரத்திற்கும் குறைவாக அமர்ந்து வேலை பார்த்துள்ளனர். மீதமுள்ள 6,042 பேர் 10.5 மணி நேரத்திற்கு அதிகமாக உட்கார்ந்த இடத்திலேயே வேலை பார்த்துள்ளனர். இதில் 5 ஆண்டு காலத்தில் 10 மணி நேரத்திற்கு அதிகமாக வேலை பார்த்தவர்களில் 805 பேர் உயிரிழந்தது ஆய்வுகள் வெளியாகியுள்ளது. இந்த ஆய்வின் முடிவுகள் தான் பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஸ்போர்ட்ஸ் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆய்வு கூறுவது என்ன?

நோர்வேயின் ஆர்க்டிக் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான எட்வர்ட் சாகெல்வ் என்ற ஆய்வு ஆசிரியர் கருத்தின்படி, வேலை பளுவால் உங்களால் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைக்கவில்லை என்ற கவலை வேண்டாம். கொஞ்ச நேரம் உடல் உழைப்பு கூட கணிசமான பலன்களை உங்களுக்குத் தரக்கூடும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஒரு நாளைக்கு நீங்கள் 20 நிமிடங்கள் ஏதாவது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் போதுமானது. இதற்கென்று நீங்கள் ஜிம்மிற்குத் தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வேலைக்குச் செல்வதற்கு முன்னதாக நீங்கள் பேருந்து நிலையத்திற்கு நடந்து செல்லலாம். காலையில் சிறிய உடற்பயிற்சிகளை நீங்கள் மேற்கொள்ளலாம் என ஆய்வுகள் கூறுகிறது.

நீங்கள் பல மணி நேரம் உட்கார்ந்த இடத்திலேயே வேலை செய்தாலும், சிறிய அளவிலான உடற்பயிற்சிகள் உங்களது உடல் நலத்தைப் பாதுகாக்கும் மற்றும் இறப்பு விகிதத்தையும் கட்டுப்படுத்த உதவியாக இருக்கும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

அப்போது பேசிய அவர், தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பது இயல்பான ஒன்று. ஆனால் அதை பாதுகாப்பாக வெடிக்க வேண்டும் என கூறினார். எதிர்பாராத விதமாக பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால், பாதிக்கப்பட்ட பகுதியை தண்ணீரில் நன்கு கழுவ வேண்டும் என தெரிவித்த அவர், குழாயை திறந்து விட்டு, தண்ணீரில் காண்பிக்க வேண்டும். அதன் பிறகு முடிந்தால் லேசாக துடைத்து எண்ணெய் மட்டும் போட வேண்டும் என பேசினார்.

தொடர்ந்து உடனடியாக மருத்துவமனை சென்று மேற்சிகிச்சை பெற்று கொள்ள வேண்டும். ஆனால், கண்டிப்பாக, பட்டாசு விபத்து ஏற்பட்டு தீக்காயம் பட்டவுடன், கிருமி நாசினி, டெட்டால், டிஞ்சர் , மாவு உள்ளிட்டவைகளை தீ காயத்தில் போடக்கூடாது. இதனால் செப்டிக் ஆகக்கூடிய வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளார்.

🔻 🔻 🔻 


November 6, 2023

சென்னை ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 26 காலியிடங்கள் || ரூ.1,43,864/- மாத ஊதியம்!

November 06, 2023 0

 

சென்னை ESIC நிறுவனத்தில் நேர்காணல் – 26 காலியிடங்கள் || ரூ.1,43,864/- மாத ஊதியம்!

சென்னை ESIC நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Senior Resident பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு என 26 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இப்பணிக்கு ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன் பெறவும்.

ESIC காலிப்பணியிடங்கள்:

Senior Resident பணிக்கென 26 பணியிடங்கள் ESIC நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Senior Resident கல்வி தகுதி:

M.Sc (Medical), MD, MS, DNB பட்டத்தை அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.

Senior Resident வயது வரம்பு:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 45 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Senior Resident சம்பளம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Pay Matrix Level -11 படி, ரூ.67,700/- முதல் ரூ.1,43,864/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

ESIC தேர்வு செய்யும் விதம்:

Senior Resident பணிக்கு தகுதியான நபர்கள் 16.11.2023 மற்றும் 17.11.2023 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் 11.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

ESIC விண்ணப்ப கட்டணம்:

SC / ST / Women / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது

மற்ற நபர்கள் – ரூ.500/-

ESIC விண்ணப்பிக்கும் விதம்:

இந்த ESIC நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news