Agri Info

Adding Green to your Life

November 17, 2023

PGIMER பல்கலைக்கழகத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

November 17, 2023 0

 

PGIMER பல்கலைக்கழகத்தில் Diploma / Degree முடித்தவர்களுக்கு வேலை – உடனே விண்ணப்பியுங்கள்!

PGIMER பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை புதிதாக வெளியிட்டுள்ளது. இதில் Lab Technician cum Field Assistant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER பணியிடங்கள்:

PGIMER பல்கலைக்கழகத்தில் Lab Technician cum Field Assistant பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே காலியாக உள்ளது.

Lab Technician cum Field Assistant கல்வி தகுதி:

Lab Technician cum Field Assistant பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் 12ம் வகுப்பு + MLT அல்லது DMLT அல்லது B.Sc தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

Lab Technician cum Field Assistant வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருப்பது அவசியமானது ஆகும்.

Lab Technician cum Field Assistant ஊதியம்:

இந்த PGIMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் ICMR / PGIMER நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

PGIMER தேர்வு முறை:

28.11.2023 அன்று மாலை 3.30 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்முகத் தேர்வு மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

PGIMER விண்ணப்பிக்கும் முறை:

Lab Technician cum Field Assistant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து ohsc.pgimer@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 27.11.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இவைதான் நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகள்: உஷார் மக்களே!!

November 17, 2023 0

 Diabetes Symptoms: நீரிழிவு நோய், அதாவது சர்க்கரை நோய் என்பது வாழ்க்கை முறை தொடர்பான பிரச்சனை. குறிப்பாக உயர் இரத்த சர்க்கரை மக்களுக்கு பெரிய பிரச்சனைகளை உருவாக்குகிறது.

இது ஒருவரின் உடலில் இன்சுலின் அளவு குறையும் நிலையாகும். ஆனால் ஒருவருக்கு சர்க்கரை நோய் இருப்பதை எப்படி கண்டறிவது? 

எந்தவொரு நோய் அல்லது பிரச்சனைக்கான சிகிச்சையையும் அறிந்து கொள்ள, அதன் அறிகுறிகள் மற்றும் அந்த நோயைக் கண்டறிவது பற்றி அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 

நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறிகளில், ஒரு நபரின் இரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. இது ஒரு முக்கிய அறிகுறியாகும். இதன் மூலம் அந்த நபர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

பல நேரங்களில் நீரிழிவு நோயின் (Diabetes) ஆரம்ப அறிகுறிகள் மிகவும் லேசானவையாக இருக்கின்றன. இவை எளிதில் கவனிக்கப்படாமல் போககலாம். இது குறிப்பாக டைப் 2 நீரிழிவு நோயில் நிகழ்கிறது. 

நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு, அது அவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் வரை பல நேரங்களில் மக்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது பற்றியே தெரிவதில்லை. 

டைப்-1 நீரிழிவு நோயில், அறிகுறிகள் பொதுவாக ஆரம்பத்தில் தோன்றும். ஒருவர் டைப்-1 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தால், சில நாட்கள் அல்லது வாரங்களில் அறிகுறிகள் தோன்றத் தொடங்கும். 

சில சமயம் நீரிழிவு நோயின் அறிகுறிகளும் மிகவும் தீவிரமாகவும் இருக்கலாம். அவற்றை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம்.

இரண்டு வகையான நீரிழிவு நோய்களிலும் சில ஒத்த அறிகுறிகள் காணப்படுகின்றன. முதலில் டைப்-1 மற்றும் டைப்-2 நீரிழிவு நோய் இரண்டிலும் காணப்படும் ஒரே மாதிரியான அறிகுறிகளைப் பற்றி தெரிந்து கொள்வோம்.

பசி மற்றும் சோர்வு :

நாம் எந்த உணவை சாப்பிட்டாலும், நமது உடல் அதை குளுக்கோஸாக மாற்றுகிறது. இதனால் உடல் செல்கள் அதை ஆற்றலாகப் பயன்படுத்த முடிகின்றது. ஆனால் குளுக்கோஸை ஆற்றலாக மாற்ற செல்களுக்கு இன்சுலின் தேவைப்படுகிறது. உடல் இன்சுலினை குறைவாக உற்பத்தி செய்தாலோ அல்லது இல்லாமலோ இருந்தால், குளுக்கோஸ் அதை அடையாது. இதனால் உடலுக்கு எந்த சக்தியும் கிடைக்காது. இதன் காரணமாக, வழக்கத்தை விட அதிக பசி மற்றும் சோர்வான உணர்வு ஏற்படுகின்றது.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்:

ஒரு சாதாரண நபர் 24 மணி நேரத்தில் 4 முதல் 7 முறை சிறுநீர் கழிப்பார். ஆனால் நீரிழிவு நோயாளிகள் இதை விட அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். பொதுவாக, சிறுநீரகத்தின் வழியாக குளுக்கோஸ் செல்லும் போது, ​​உடல் அதை உறிஞ்சிவிடும். ஆனால் சர்க்கரை நோயால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கும்போது, ​​சிறுநீரகங்களால் அந்த குளுக்கோஸை முழுமையாகப் பயன்படுத்த முடிவதில்லை. இதன் காரணமாக உடல் அதிக அளவு சிறுநீரை உற்பத்தி செய்கிறது. இதனால் தான் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வருகிறது. அதிக சிறுநீர் கழிப்பதால், தாகமும் அதிகமாக இருக்கும். பிறகு எவ்வளவு தண்ணீர் குடிக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக சிறுநீர் கழிக்கத் தோன்றும்.

வறண்ட வாய் மற்றும் தோல் அரிப்பு:

உங்கள் உடல் சிறுநீர் தயாரிக்க திரவத்தைப் பயன்படுத்துகிறது. அத்தகைய சூழ்நிலையில், உடலின் மற்ற செயல்பாடுகளுக்கு மாய்ஸ்சரைசர் பற்றாக்குறை ஏற்படுகிறது. இதன் காரணமாக உடல் நீரிழப்புக்கு ஆளாகி, வாயில் வறட்சி ஏற்படுகின்றது. வறண்ட சருமம் காரணமாக தோல் அரிப்பு தொடங்குகிறது.

மங்கலான பார்வை:

மங்கலான பார்வையும் நீரிழிவு நோயின் முக்கிய அறிகுறியாகும். உடலில் திரவ அளவில் ஏற்படும் மாற்றத்தால் கண்களின் லென்ஸின் வீக்கம் ஏற்படலாம். இதன் காரணமாக, லென்ஸ்களின் வடிவம் மாறுகிறது. இதனால் கண்களுக்கு கவனம் செலுத்துவதில் சிரமம் ஏர்படுகின்றது.

டைப்-2 நீரிழிவு நோயின் அறிகுறிகள் (Type-2 Diabetest Symptoms)

நீண்ட நேரம் குளுக்கோஸ் அளவு அதிகமாக இருக்கும் போது, ​​இந்த அறிகுறிகள் காணப்படுகின்றன:

ஈஸ்ட் தொற்று:

நீரிழிவு நோயால்பாதிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்படலாம். ஈஸ்ட் குளுக்கோஸில் செழிக்கிறது. அதிக குளுக்கோஸ் இருக்கும்போது அவை வேகமாக வளரும். ஈஸ்ட் தொற்று தோல் மற்றும் மூட்டுகளில் சூடான மற்றும் ஈரமான பகுதிகளில் ஏற்படுகிறது. உடலில் இந்த இடங்களில் ஈஸ்ட் தொற்று ஏற்படுகிறது

- விரல்கள் மற்றும் கட்டைவிரல் இடையே
- மார்பகத்தின் கீழ்
- பிறப்புறுப்புகள் மற்றும் அவற்றை சுற்றி

காயங்கள் அல்லது வெட்டுக்கள் மெதுவாக குணமாகுதல்:

நீடித்த உயர் குளுக்கோஸ் அளவுகள் இரத்த ஓட்டத்தை பாதிக்கின்றன. இதன் காரணமாக, நரம்புகள் சேதமடைகின்றன. ஆகையால் காயங்கள் ஆறுவதில் அதிக நேரம் எடுக்கின்றது. நரம்புகள் பாதிக்கப்படுவதால் கால்களில் வலி அல்லது உணர்வின்மை பிரச்சினையும் ஏற்படுகிறது.

டைப்-1 நீரிழிவு நோயின் அறிகுறிகள் (Type-1 Diabetes Symptoms)

திடீர் எடை இழப்பு :

உங்கள் உடலால் உணவில் இருந்து ஆற்றலை உருவாக்க முடியவில்லை என்றால், அது தசைகள் மற்றும் உடல் கொழுப்பிலிருந்து ஆற்றலை உருவாக்கத் தொடங்குகிறது. டைப்-1 நீரிழிவு நோயால், உங்கள் உணவுப் பழக்கத்தில் எந்த மாற்றமும் செய்யாவிட்டாலும் உங்கள் எடை குறையத் தொடங்குகிறது.

குமட்டல் மற்றும் வாந்தி:

உடல் கொழுப்பை எரிப்பதன் மூலம் ஆற்றலை உருவாக்கும் போது, ​​அது கீட்டோன்களை உருவாக்குகிறது. இந்தச் செயல்பாட்டில் கீட்டோன்கள் உங்கள் இரத்தத்தில் ஆபத்தான நிலைக்கு அதிகரிக்கின்றன. இந்த உயிருக்கு ஆபத்தான நிலை நீரிழிவு கெட்டோஅசிடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது.

கர்ப்பகால நீரிழிவு நோயின் அறிகுறிகள்

பொதுவாக கர்ப்ப காலத்தில் அதிக இரத்த சர்க்கரையின் (Sugar Level) அறிகுறிகள் காணப்படுவதில்லை. தெளிவாகக் காணக்கூடிய அறிகுறிகளில், முதன்மையானது சாதாரண மற்றும் அதிகப்படியான சிறுநீர் கழிப்பது மற்றும் அதிக தாகம் ஆகியவை ஆகும்.

பின்வரும் சோதனைகள் மூலம் இரத்த சர்க்கரை கண்டறியப்படுகிறது

- கடந்த 2-3 மாத சர்க்கரை அளவை HbA1C சோதனை மூலம் கண்டறியலாம்.
- ரேண்டம் இரத்த சர்க்கரை சோதனை - இதற்கு ஃபாஸ்டிங், அதாவது சாப்பிடாமல் எட்டுக்க வேண்டிய தேவை இல்லை.
- ஃபாஸ்டிங் இரத்த சர்க்கரை சோதனை - உணவு உட்கொண்ட 6-8 மணிநேரத்திற்கு பிறகு இதை எடுப்பது அவசியம்.


🔻 🔻 🔻 

முதுமையிலும் இளமையாக இருக்கணுமா... 'இந்த' 5 உணவுகளுக்கு குட்பை சொல்லுங்க..!

November 17, 2023 0

 

முதுமையை நம்மால் தடுத்து நிறுத்த முடியாவிட்டாலும், சருமத்தில் ஏற்படும் அறிகுறிகளை நாம் கண்டிப்பாக குறைக்கலாம் அல்லது தாமதப்படுத்தலாம்.

இளமையாக இருக்க நாம் உண்ணும் உணவு சிறப்பானதாக, ஆரோகியமானதாக இருக்க வேண்டும், அதோடு, இளமையிலேயே முதுமையை வரவழைக்கும் உணவுகளை முதலில் உங்கள் டயட்டில் இருந்து முதலில் அப்புறப்படுத்த வேண்டும். நீண்ட காலம் இளைமையோடு இருக்க விரும்பினால், சருமத்தில் ஏற்படும் சுருக்கங்களையும், முதுமை தோற்றத்தையும் விரைவில் ஏற்படுத்தக் கூடிய சில உணவுகளை நிச்சயம் கை விட வேண்டும்.

உங்கள் வயதை வேகமாக்கும் 5 உணவுகள் இங்கே:

1. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை

அதிகப்படியான சர்க்கரை நுகர்வு, குறிப்பாக சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை, முதுமையை வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கும். அதிக சர்க்கரை உட்கொள்வது, முதுமையை வராஅமல் தடுக்கும், கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்தும், இதனால் தோல் சுருக்கங்கள் மற்றும் தொய்வு ஏற்படும். எனவே, உங்கள் உணவில் சர்க்கரையின் பயன்பாட்டைக் கட்டுப்படுத்துங்கள் மற்றும் தேன் மற்றும் வெல்லம் பயன்படுத்துங்கள். எனினும், இதுவும் மிதமான அளவு பயன்படுத்தப்பட வேண்டும். சர்க்கரைக்கு (Sugar) ஆரோக்கியமான மாற்றுகளுடன் மாற்று உணவுகளான, பழங்கள், பேரீச்சம்பழம் மற்றும் திராட்சை போன்ற இயற்கையான இனிப்பு உணவுகளை உட்கொள்வதே சிறந்த நடைமுறையாகும்.

2. வறுத்த உணவுகள்

பெரும்பாலும் வறுத்த உணவுகளில் ட்ரான்ஸ் கொழுப்புகள் காணப்படுகின்றன. அவை ஆரோக்கியம் மற்றும் சருமத்தில் தீங்கு விளைவிக்கும் விளைவுகளுக்கு பெயர் பெற்றவை. அவை கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், அவை உடலில் வீக்கத்தையும் ஊக்குவிக்கின்றன. இது வயதானதை ஊக்குவிக்கிறது. எனவே முடிந்தவரை நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும். ஆனால், உங்களுக்குப் பிடித்த வறுத்த உணவுகளை நீங்கள் எப்போதாவது சாப்பிடுவது தவறில்லை. தினமும் சாப்பிடுவது நிச்சயம் நல்லதல்ல. வறுத்த உணவுகளை, வீட்டிலேயே ஃபிரஷ்ஷாகச் செய்வது சிறந்தது.


3. காஃபின் உள்ள உணவுகள்

காஃபின் பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது என்பது உண்மைதான். ஆனால் அதிக அளவு உங்கள் சருமத்தை மோசமாகப் பாதித்து, உங்களை முதுமையின் வாயிலுக்கு இட்டுச் செல்லும். பியாலிஸ்டாக் மருத்துவ பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், காஃபின் கொலாஜன் அளவை பாதிக்கிறது. இது சருமத்தை அதன் நெகிழ்ச்சித்தன்மையை இழக்கச் செய்கிறது மற்றும் வயதான அறிகுறிகளைக் காட்டுகிறது. எனவே, காபி அல்லது டீயை வரம்பிற்குள் குடிக்கவும் அல்லது மூலிகை தேநீர், ஸ்மூத்திஸ் மற்றும் இளநீர் போன்ற பிற ஆரோக்கியமான பானங்களை அருந்தவும்.

4. பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள்

பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், தொத்திறைச்சிகள், பெப்பரோனிஸ் மற்றும் ஹாட் டாக் போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் பெரும்பாலும் அதிக அளவு சோடியம், சல்பைட் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளைக் கொண்டிருக்கின்றன. இந்த இறைச்சிகளை அதிகமாக உட்கொள்வது சருமத்தை வறண்டதாக ஆக்கி, கொலாஜனை பலவீனப்படுத்தலாம். இது தோல் அழற்சிக்கு வழிவகுக்கும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை அதிகமாக சாப்பிடுவதை நிறுத்துங்கள்.

5. மதுபானம்

மிதமான அளவில் மது அருந்துதல் சில ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டிருக்கலாம், அதிகப்படியான மது அருந்துதல் உங்களை வேகமாக முதுமை அடையச் செய்யும். ஆல்கஹால் உடலை நீரிழப்புக்கு உட்படுத்துகிறது. என்றைக்கோ ஒரு முறை, பார்டி போன்ற நேரங்களில் மிதமாக குடிக்கவும், ஒரு வழக்கமாக அல்ல. மிதமான குடிப்பழக்கம் குறித்த நிபுணரின் வழிகாட்டுதல்களை பின்பற்றவும். எனினும், மதுவை முற்றிலும் தவிர்ப்பது பல நன்மைகளை தரும் என்பதை மறுக்க முடியாது.

உங்களை வேகமாக வயதாக்கும் உணவுகளைத் தவிர்த்து, உங்கள் சருமம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பேண ஆரோக்கியமாக சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொள்வது நல்லது

🔻 🔻 🔻 

MISSION I'MPOSSIBLE | Day 5 | National Income | Indian Economy - 2 |

November 17, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 5 | தமிழ் அறிஞர்கள் - பாரதியார், பாரதிதாசன், கவிமணி |

November 17, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 5 | Fundamental Rights | Part - 1 | Indian Polity - 4A

November 17, 2023 0

November 16, 2023

சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் Office Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 16, 2023 0

 சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியாவில் Office Assistant வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.20,000/- || விண்ணப்பிக்கலாம் வாங்க!

Faculty மற்றும் Office Assistant ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த வங்கி பணிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பேங்க் ஆஃப் இந்தியா காலிப்பணியிடங்கள்:

Faculty மற்றும் Office Assistant பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

Faculty – Post-graduate viz. MSW/ MA in Rural Development/MA in Sociology/Psychology/BSc (Agri.)/BA with B.Ed

Office Assistant – BSW/BA/B.Com with computer knowledge.

வயது வரம்பு:

விண்ணப்பிக்கும் இறுதி தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது 22 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தனிப்பட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள் மற்றும் இது சம்பந்தமாக வங்கியின் முடிவே இறுதியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பள விவரம்:

Faculty – ரூ.20,000

Office Assistant – ரூ.12,000/-

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை கொடுக்கப்பட்ட வடிவத்தில் 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

SBI Clerk வேலைவாய்ப்பு 2023 – 8773 Junior Associate காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47920/-

November 16, 2023 0

 SBI Clerk வேலைவாய்ப்பு 2023 – 8773 Junior Associate காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47920/-

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI கிளார்க் ஆட்சேர்ப்பு 2023 அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் எஸ்பிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளமான sbi.co.in மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆன்லைன் வசதி 17.11.2023 முதல் 07.12.2023 வரை அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://www.sbi.co.in/ இல் செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SBI காலிப்பணியிடங்கள்:

Junior Associate (Customer Support & Sales) in Clerical Cadre பதவிக்கு என இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் 8773 பணியிடங்கள் காலியாக உள்ளன.

Clerk கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு அல்லது மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட சமமான தகுதி பெற்றவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

பட்டப்படிப்பின் இறுதியாண்டு/ செமஸ்டரில் இருப்பவர்களும், தற்காலிகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டால், 31.12.2023 அன்று அல்லது அதற்கு முன் பட்டப்படிப்புத் தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான சான்றை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு தற்காலிகமாக விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

01.04.2023 தேதியின்படி 20 வயதுக்குக் குறையாமலும் 28 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும், அதாவது விண்ணப்பதாரர்கள் 02.04.1995 முதல் 01.04.2003க்குள் பிறந்திருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 5 ஆண்டுகள், ஓபிசிக்கு 3 ஆண்டுகள், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் என வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.

Junior Associate சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17900-47920/- வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

1. Preliminary Examination
2. Main Examination

தமிழகத்தில் தேர்வு மையம்:

சென்னை, கோவை, கடலூர், ஈரோடு, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், ராமநாதபுரம், சேலம், தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, வேலூர், விருதுநகர்

விண்ணப்ப கட்டணம்:

SC/ ST/ PwBD/ ESM/DESM – கட்டணம் கிடையாது
General/ OBC/ EWS – Rs 750/-

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 17.11.2023 முதல் https://www.sbi.co.in/ இன் தற்போதைய வேலை வாய்ப்புகள் பிரிவின் கீழ் உள்ள SBI இணையதளத்தில் உள்ள இணைப்பின் மூலம் மட்டுமே ஆன்லைனில் 07.12.2023 வரை விண்ணப்பிக்க வேண்டும். வேறு எந்த விதமான விண்ணப்பமும் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification 2023 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Assistant Manager வேலை – உடனே விரையுங்கள்!

November 16, 2023 0

 ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் Assistant Manager வேலை – உடனே விரையுங்கள்!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Assistant Manager/ Executive/ Trainee பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

ரெப்கோ ஹோம் காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Assistant Manager/ Executive/ Trainee பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Executive கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்கோ ஹோம் வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Executive ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.16,100/- ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Screening Test மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து personnel@repcohome.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.11.2023ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

November 16, 2023 0

 

வங்கியில் வேலை தேடுபவரா நீங்கள்? CSB வங்கியில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

CSB வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Sr. Officer பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


CSB Bank காலிப்பணியிடங்கள்:

CSB வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Sr. Officer பணிக்கென காலியாக உள்ள 3 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Sr. Officer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

CSB Bank வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Sr. Officer முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட துறையில் 1 முதல் 5 ஆண்டுகள் வரை பணிபுரிந்த முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

CSB Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு CSB Bank-ன் நிபந்தனைகளின் படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Sr. Officer தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல், Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.03.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

MISSION I'MPOSSIBLE | Day 4 | இலக்கியம் 3 | அறநூல்கள் 2, திருக்குறள் கேள்வி,பண்பு |

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 4 | Union & Its Territories, Citizenship | Indian Polity 3

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 4 | Nature of Indian Economy | Indian Economy 1

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 3 | Simplification Part - 2 | Aptitude & Mental Ability

November 16, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 3 | Salient Features & Preamble | Indian Polity 2 | G4

November 16, 2023 0