Agri Info

Adding Green to your Life

November 21, 2023

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!

November 21, 2023 0

 

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.1,44,200/- சம்பளத்தில் வேலை!

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆனது Professor, Assistant & Associate Professor பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு 15 பணியிடங்கள் காலியாக உள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் மாதம் ரூ.57,700 முதல் ரூ.144,200 வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடமால் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Diploma / ITI முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Reliance நிறுவன வேலைவாய்ப்பு!

November 21, 2023 0

 

Diploma / ITI முடித்தவரா நீங்கள்? இதோ உங்களுக்கான Reliance நிறுவன வேலைவாய்ப்பு!

Field Executive பணிக்கு என Reliance நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு Diploma, ITI தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Reliance பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Field Executive பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் Reliance நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Field Executive கல்வி விவரம்:

Field Executive பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் Chemical Engineering பாடப்பிரிவில் Diploma, ITI, B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Reliance முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 02 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Field Executive ஊதிய விவரம்:

இந்த Reliance நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Reliance தேர்வு செய்யும் முறை:

Field Executive பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Field Executive விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை HCL நிறுவனத்தில் Consultant வேலை – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

November 21, 2023 0


சென்னை HCL நிறுவனத்தில் Consultant வேலை – B.Tech முடித்தவர்கள் விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

சென்னையில் அமைந்துள்ள HCL நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கான விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்கப்பட்டு வருகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

HCL காலிப்பணியிடங்கள்:

HCL நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Consultant கல்வி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.Tech பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்.

Consultant பணியமர்த்தப்படும் இடம்:

Consultant பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் சென்னையில் உள்ள HCL நிறுவனத்தில் பணியமர்த்தப்படுவார்கள்.

Consultant அனுபவம்:

இந்த HCL நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் 4.5 ஆண்டுகள் முதல் 08 ஆண்டுகள் வரை அனுபவம் உள்ளவராக இருப்பின் கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

HCL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு தகுதியான நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

HCL விண்ணப்பிக்கும் விதம்:

Consultant பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Link
🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

November 20, 2023

MISSION I'MPOSSIBLE | Day 8 | பொதுத்தமிழ் | இலக்கணம் | பாடத்திட்டம் விரிவுரை

November 20, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 8 | Indian National Movement | National Renaissance

November 20, 2023 0

MISSION I'MPOSSIBLE | Day 8 | Percentage Part - 1 | Aptitude & Mental Ability

November 20, 2023 0

40 பிளஸ்...தொப்பை கொழுப்பு பாடாய் படுத்துதா? இப்படி செய்தால் உடல் பருமன் ஓடிப்போகும்

November 20, 2023 0

 Weight Loss Tips: உடல் எடை அதிகரிப்பது பலருக்கும் பொதுவாக உள்ள பிரச்சனையாக உள்ளது. உடல் பருமன் பெண்களை அதிகமாகவும், வேகமாகவும் ஆட்கொள்கிறது. அதுவும், 40 வயதை கடந்த பெண்களுக்கு உடல் எடையை குறைப்பதென்பது பெரிய சவாலாகவே உள்ளது. 40 வயதிற்குள், பெண்கள் பெரும்பாலும் வீடு மற்றும் அலுவலக வேலைகளில் பிஸியாகி விடுவார்கள். இதனால் உடற்பயிற்சியில் குறைந்த கவனம்தான் செலுத்துகிறார்கள். பல நேரங்களில், ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால் பெண்களின் எடை அதிகரிக்கிறது. இதனுடன், வாழ்க்கை முறை மாற்றங்கள், ஹார்மோன் சமநிலை மற்றும் ப்ரிமெனோபாஸ் அறிகுறிகளால், தொப்பை கொழுப்பு வேகமாக அதிகரிக்கத் தொடங்குகிறது. வயிற்றில் உள்ள கொழுப்பால் பெண்களால் பல ஆடைகள் அணிய முடிவதில்லை, அவர்களின் தன்னம்பிக்கையும் குறைகிறது. தொடர்ந்து எடை அதிகரிப்பதால், பல நோய்களின் அபாயமும் அதிகரிக்கிறது. 

40 வயதில் தொப்பையை குறைக்கும் வழிகள்

40 வயதுக்கு மேற்பட்ட வயது வரம்பில் பெண்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல வித மாற்றங்களை அனுபவிக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் 40 வயதுக்கு மேல் உள்ள பெண்கள் உடல் எடையை குறைக்கவும், தொப்பையை (Belly Fat) கட்டுப்படுத்தவும் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இந்த முறைகளைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நார்ச்சத்து அவசியம் 

40 வயதிற்கு பிறகு உடல் எடையை குறைப்பது மற்றும் தொப்பையை குறைப்பது மிகவும் கடினம். அத்தகைய சூழ்நிலையில், உணவில் நார்ச்சத்து உட்கொள்வதன் மூலம் பசியைக் குறைக்கலாம். நார்ச்சத்து தண்ணீரை உறிஞ்சி செரிமானத்தை குறைக்கிறது. ஓட்ஸ், பீன்ஸ், பருப்பு வகைகள், பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்து அதன் மூலம் நார்ச்சத்தை சேர்க்கலாம். 

பதப்படுத்தப்பட்ட இறைச்சி

பதப்படுத்தப்பட்ட இறைச்சி உடலுக்கு தீங்கு விளைவிக்கும். இதில் கலோரி அதிகமாக இருப்பதால் இது தொப்பை கொழுப்பை அதிகரிக்கிறது. அதன் வழக்கமான நுகர்வு பல நோய்களின் அபாயத்தையும் அதிகரிக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், அவற்றை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். இது எடையை (Weight Loss) அதிகரிக்கிறது.

பழங்கள் மற்றும் காய்கறிகள்

தொப்பையை குறைக்க, பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வது மிக அவசியமாகும். இதில் கலோரிகள் குறைவாகவும் ஆண்டிஆக்சிடெண்டுகள் அதிகமாகவும் உள்ளது. இவற்றை உட்கொள்வதால் தொப்பை குறைவது மட்டுமின்றி பல நோய்களும் குணமாகும்.

உடற்பயிற்சி

தொப்பையை குறைக்க உடற்பயிற்சி செய்வது மிகவும் அவசியம். தொப்பையை குறைப்பதிலும், தசைகளை வளர்ப்பதிலும் உடற்பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு நாளைக்கு குறைந்தது 30 நிமிடங்களாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும். வழக்கமான உடற்பயிற்சி எலும்புகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கும்.

பதற்றம்

மன அழுத்தம் கார்டிசோல் ஹார்மோனின் வெளியீட்டிற்கு வழிவகுக்கும். இது அடிவயிற்றில் கொழுப்பு சேமிப்பை ஊக்குவிக்கும். இது தொப்பை கொழுப்பை அதிகரிக்க வழிவகுக்கிறது. அத்தகைய சூழ்நிலையில், மன அழுத்தம் இல்லாமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மன அழுத்தத்தை சமாளிக்க தினமும் யோகா, தியானம் மற்றும் உடற்பயிற்சியும் செய்யலாம்.

சரியான உறக்கம்

குறைவான தூக்கம் பல நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது. ஆகையால் இரவில் 7 முதல் 8 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். குறைவான தூக்கம் காரணமாக மன அழுத்தம் அதிகரித்து எரிச்சலும் ஏற்படும். தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோன் கார்டிசோலின் அதிகப்படியான உற்பத்திக்கு வழிவகுக்கிறது, இது தொப்பை கொழுப்பை அதிகரிக்கிறது.

40 வயதில் தொப்பையை குறைக்க இந்த முறைகளை பின்பற்றலாம். இருப்பினும், இந்த முறைகளைப் பின்பற்றுவதற்கு முன், மருத்துவரை அணுகவும்.

🔻 🔻 🔻 

இளநீர் எந்த நேரத்தில் குடிக்க வேண்டும்? நிபுணர்கள் அட்வைஸ்

November 20, 2023 0

 இளநீர் உடலுக்கு மிகவும் நல்லது என்று நமக்கு தெரியும். இந்நிலையில் இளநீரை எப்போது குடிக்க வேண்டும் என்ற குழப்பம் ஏற்படும். இந்நிலையில் காலை 10 மணிக்கு, இளநீர் குடித்தால் உடல் எடை சீராக வைத்துகொள்ள உதவும்.

இது சருமத்திற்கு தேவையான நீர் சத்தை கொடுக்கிறது. பாக்ட்ரீயா தொற்றில் இருந்து நம்மை காப்பாற்ற உதவும். ஒரு கப் இளநீரில் 45 கலோரிகள் இருக்கும். உங்களுக்கு, சோடா அல்லது சுகர் அதிகமாக உள்ள குளிர் பானங்களுக்கு பதிலாக இளநீர் இருக்கும்.

இளநீர் குடித்தால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். மாலையைவிட காலையில் இளநீர் குடிப்பது நல்லது. உடல் பயிற்சி செய்தவுடன், இயற்கையான முறையில் எலக்ட்ரோலைட்டை உடல் பெறுவதற்கு உதவியாக இருக்கும்.

இதில் அதிக அளவு பொட்டாஷியம் உள்ளதால், சிறுநீரக பிரச்சனை இருப்போர் மற்றும் இதை எடுத்து கொள்ள வேண்டாம். சில நேரங்களில், இளநீர் தூங்குவதற்கு முன்பு குடித்தால், நல்ல தூக்கம் சிலருக்கு வருவதாக கூறப்படுகிறது.


🔻 🔻 🔻 

இலவச தையல் பயிற்சி: நவம்பர் 30 க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

November 20, 2023 0

 

இலவச தையல் பயிற்சி: நவம்பர் 30 க்குள் பெண்கள் விண்ணப்பிக்கலாம்

சிதம்பரம் ரோட்டரி சங்கமும், டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளையும் இணைந்து பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்களின் முன்னேற்றத்துக்காக 6 மாத இலவச தையல் பயிற்சியை நடத்த உள்ளன.

இதில் பங்கேற்க சிதம்பரம், சுற்றுவட்டார கிராமங்களைச் சாா்ந்த பெண்கள், எட்டாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தோச்சி பெற்ற அல்லது தோல்வுயுற்றவா்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியோா், 45 வயதுக்குட்பட்டவா்கள், ஆதரவற்றோா், விதவைகள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பங்களை வடக்கு வீதியில் கண்ணா எலும்பு சிறப்பு மருத்துவமனை எதிரில் மற்றும் இமேஜ் டைலா்ஸ் மாடியில் உள்ள ஸ்ரீமாருதி தையல் பயிற்சி நிலையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

 விண்ணப்பிக்க கடைசி நாள் நவம்பா் 30-ஆம் தேதியாகும். மேலும் இது தொடா்பான விளக்கங்களைப் பெற 9715874617, 9842333268, 9944944061 ஆகிய கைப்பேசி எண்களில் தொடா்புகொள்ளலாம் என்று சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவா் அரிதனராஜ், முன்னாள் தலைவா் இ.மஹபூப் உசேன் மற்றும் டாக்டா் சபாநாயகா் நினைவு அறக்கட்டளைத் தலைவா் பேராசிரியா் நடனசபாபதி ஆகியோா் தெரிவித்தனா்.



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சி

November 20, 2023 0

 

நிப்ட்-டீ பயிற்சி மையத்தில் இலவச சணல் பொருள் உற்பத்தி பயிற்சி

வேலை வாய்பற்ற இளைஞர், இளம்பெண்களுக்கு, சணல் பொருட்கள் உற்பத்தி பயிற்சி அளிக்க, நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் முடிவு செய்துள்ளது.திருப்பூர் நிப்ட்-டீ கல்லுாரி மற்றும், மத்திய, மாநில அரசு திட்டங்களில், இலவச பயிற்சி அளிக்கும் மையம், திருப்பூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் இயங்கி வருகிறது.

கடந்த, எட்டு ஆண்டுகளாக, 4,000 க்கும் அதிகமான இளைஞர், இளம்பெண்கள் பயிற்சி பெற்று பயனடைந்துள்ளனர்.தமிழக அரசின் திறன் மேம்பாட்டு கழகம், சணல் வாரியம் சார்பில், புதிய தொழில் பயிற்சிகள் விரைவில் துவங்க இருக்கிறது.

வேலை வாய்ப்பற்ற இளைஞர், இளம்பெண்கள், இல்லத்தரசிகள், இப்பயிற்சியில் பங்கேற்கலாம். குறிப்பாக, சணல் பொருட்கள் தயாரிப்பது குறித்து இலவசமாக பயிற்சி பெறலாம்.இதுகுறித்து நிப்ட்-டீ நிட்வேர் பேஷன் இன்ஸ்டிடியூட் மைய பொறுப்பாளர்கள் கூறியதாவது:இலவச குறுகியகால திறன் பயிற்சியில், தையல் பயிற்சியில், எட்டாம் வகுப்புக்கு மேல் பயின்ற, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம்.

சணல் பொருட்கள் தயாரிப்பு பயிற்சியில், 10ம் வகுப்புக்கு மேல்படித்த, 18 முதல், 35 வயதுக்கு உட்பட்டவர் பங்கேற்கலாம். இலவச பயிற்சி பெறுவோருக்கு, வேலை வாய்ப்பும் உறுதி செய்து கொடுக்கப்படும்.

முதலில், பயிற்சிக்கான சேர்க்கையை முடித்த பிறகே, பயிற்சி துவங்கும் நாள் அறிவிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு, 88707 25111 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

November 20, 2023 0

 

ONGC நிறுவனத்தில் மாதம் ரூ.38,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – தேர்வு கிடையாது!

ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant மற்றும் Surveyor பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த மத்திய அரசு பணிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் 27.11.2023 க்குள் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ONGC லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

Consultant மற்றும் Surveyor பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளது. அதாவது Consultant – 3 பணியிடங்கள் மற்றும் Surveyorபதவிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

 வயது வரம்பு:

30.11.2023 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 656 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தகுதி விவரங்கள்:
  • Consultant – நிலம் கையகப்படுத்தும் பணிகளில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் அனுபவம் பெற்ற ஓய்வு பெற்ற தாசில்தார். இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • Surveyor – நிலம் கையகப்படுத்தும் வேலைகளில் போதுமான அறிவு கொண்ட ஓய்வு பெற்ற சர்வேயர் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வு செயல் முறை:

    மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 30.11.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    சம்பள விவரம்:
    • Consultant : ரூ.38,000/-
    • Surveyor : ரூ.22,000/-
    விண்ணப்பிக்கும் முறை:

    ஆர்வமும் தகுதியும் உள்ள நபர்கள் தங்களின் முறையாகப் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை துணை ஆவணம்(கள்)/சான்றிதழ்(கள்)/சான்றிதழ்(கள்) உடன் 27.11.2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2023 Pdf



🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு 2023 – 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 20, 2023 0

 

IAF AFCAT வேலைவாய்ப்பு 2023 – 317 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

இந்திய விமானப்படைக்கு (IAF) ஜனவரி 2025 முதல் தொடங்கும் விமானப்படை பொது நுழைவுத்தேர்வு (AFCAT) 1/2024 தொகுதி படிப்புக்கு 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். IAF வேலைகளில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். எனவே ஆர்வமுள்ளவர்கள் afcat.cdac.in மேலும் கீழே உள்ள பிரிவில் நேரடி இணைப்பை வழங்கியுள்ளோம்.

IAF AFCAT காலிப்பணியிடங்கள்:
  • Flying Branch – 38 பணியிடங்கள்
  • Ground Duty (Technical) – 165 பணியிடங்கள்
  • Ground Duty (Non-Technical) – 114 பணியிடங்கள்

என மொத்தம் 317 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:
  • Flying Branch – Grade 12th with 50% Marks each in Physics and Maths & Graduation (60% marks)
  • Ground Duty (Technical) – Grade 12th with 50% Marks each in Physics and Maths & B.Tech (60% marks)
  • Ground Duty (Non-Technical) – Graduate (60% marks)
வயது வரம்பு:
  • Flying Branch – 20-24 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • Ground Duty (Technical) – 20-26 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பள விவரம்:

இதற்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.56100- 177500/- (Level-10) ஊதியம் வழங்கப்பட உள்ளது

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் Written Test, DV, மற்றும் Medical Test மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IAF AFCAT விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் https://afcat.cdac.in/AFCAT/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் 30.12.2023 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf 


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

Air India நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

November 20, 2023 0

 

Air India நிறுவனத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – டிகிரி படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம் ஆனது Cabin Crew (Female) மற்றும் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள பெண் விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Air India நிறுவன காலிப்பணியிடங்கள்:

Cabin Crew (Female) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Cabin Crew (Female) தகுதி விவரங்கள்:

அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக் கழகத்திலிருந்து குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் 12 ஆம் வகுப்பை படித்திருக்க வேண்டும். தற்போதைய இந்திய பாஸ்போர்ட், பான் கார்டு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்கும் இந்தியப் பெண்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். ஆங்கிலம் மற்றும் இந்தியில் சரளமாக பேச தெரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

புதியவர்களுக்கு 18-27 வயதுக்கு இடையிலும், அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விவரங்களுடன் நேர்காணலில் கலந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணல் ஆனது நவம்பர் 21ஆம் தேதி முதல் நவம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Download Notification 1  Pdf
Download Notification 2  Pdf

🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: 36,580/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

November 20, 2023 0

 

JIPMER பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: 36,580/- || உடனே விண்ணப்பிக்கலாம் வாங்க!

JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Junior Research Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 28.11.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Project Junior Research Fellow பணிக்கு என ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே JIPMER பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.

Project Junior Research Fellow வயது:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 30 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Project Junior Research Fellow சம்பளம்:

இப்பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.36,580/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Project Junior Research Fellow கல்வி:

Project Junior Research Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Master Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

JIPMER தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

JIPMER விண்ணப்பிக்கும் விதம்:

இந்த JIPMER பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் உள்ள Google Form-ஐ முழுமையாக பூர்த்தி செய்து 28.11.2023 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Form Link


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

November 20, 2023 0

 

CSB வங்கி வேலைவாய்ப்பு 2023 – Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு !

கத்தோலிக்க சிரியன் வங்கி (CSB Bank) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Officer – Liability Sales CA மற்றும் AM – Liability Sales பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பை தவறாது பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் வழிமுறை போன்றவை எளிமையாக அனைவருக்கும் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

CSB வங்கி காலிப்பணியிடங்கள்:

Sr. Officer – Liability Sales CA மற்றும் AM – Liability Sales ஆகிய பதவிகளுக்கு என மொத்தம் 13 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

முன்னனுபவம்:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் அதிகபட்சம் 5 முதல் 8 வருடம் வரை அனுபவம் உள்ளவராகவும் அல்லது அனுபவம் இல்லாதவராகவும் இருக்கலாம்.

CSB Bank ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செய்யும் விதம்:

விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் பதிவின் இறுதியில் உள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification 1  Pdf
Download Notification 2  Pdf


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news