உங்கள் குழந்தை மிகவும் மரியாதையற்றவராக உள்ளாரா?
பெரும்பாலான பெற்றோருக்கு, மரியாதையற்ற குழந்தைகள் எப்போதும் சவாலானவர்கள்தான். அதீத துன்பங்களை தருபவர்கள். உறவில் மரியாதை என்பது, அடிப்படையான விஷயம். பெற்றோர் – குழந்தைகள் உறவில் மரியாதை கட்டாயம் இருக்க வேண்டும்.
குழந்தை எப்போது மரியாதையின்றி நடந்துகொண்டாலும், அதற்கு குடும்பத்தில் உள்ள பல்வேறு பிரச்னைகள் காரணமாக உள்ளன. இதற்கு புரிதல், பொறுமை, ஆக்கப்பூர்வமான உத்திகள் ஆகியவை தேவை. பெற்றோர் – குழந்தைகள் ஆரோக்கியமான உறவில், மரியாதை என்பது மிகவும் அவசியமான ஒன்று.
வீட்டில் நடைபெறும் உரையாடலில் பிரதிபலிக்கும்
வீட்டில் உரையாடல எவ்வாறு நடைபெறுகிறது என்று பாருங்கள். உரையாடலுக்கு திறந்தவெளி இருக்கிறதா? பரஸ்பர புரிதல் உள்ளதா? என்பதெல்லாம் கேள்விக்குறி. திறந்த மனதுடனான உரையாடலை ஊக்குவிக்க வேண்டும். குழந்தைகளை குறித்து எந்த முன்முடிவும் இல்லாத உரையாடல் எப்போதும், குழந்தைகளை திறந்த மனதுடன் பேசுவதற்கு இடமளிக்கும். பரஸ்பர மரியாதையை வளர்த்தெடுக்கும்.
தெளிவான மற்றும் பொறுப்புள்ள எல்லைகளை வகுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். உங்கள் குழந்தைகளுடன் நீங்கள் நட்புறவில் இருப்பது, அவர்களுக்கு உங்களை அவர்கள் விரும்பும் வகையில் எப்படி வேண்டுமானாலும் பேசுவதற்கு கொடுத்துள்ள அதிகாரம் அல்ல. எல்லைகளை தொடர்ந்து ஏற்படுத்துவதில், குழந்தைகள் பிரச்னைகளை புரிந்துகொள்வதற்கு உதவுகிறது. மேலும் விதிகளை மதிப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
மரியாதையான நடத்தைகளுக்கு உதாராணமாக இருங்கள்
குழந்தைகள் வீட்டில் உள்ள பழக்கவழங்களில் தாங்கள் உள்வாங்குவனவற்றையே கற்றுக்கொள்கிறார்கள். எனவே நீங்கள் உரையாடும்போதும், நடந்துகொள்ளும்போதும், மரியாதையான பழக்கவழக்கங்களையே பின்பற்றுங்கள். குழந்தைகளுக்கு உதாரணமாக இருங்கள். அனுதாபம் காட்டுங்கள், நன்றாக கவனியுங்கள், மற்றவர்கள் மற்றும் அவர்களுடனான உங்கள் உரையாடல்கள் எப்போதும் கருத்தில்கொள்ளுங்கள்.
மற்றவர்களிடம் உங்கள் குழந்தைகள் நடந்துகொள்ளும் விதத்தால் ஏற்படும் பாதிப்புகளை அவர்கள் புரிந்துகொள்ள ஊக்கப்படுத்தி, அனுதாபம், அடுத்தவர்களின் மனநிலை ஆகியவற்றை அவர்கள் தெரிந்துகொள்ள உதவி செய்யுங்கள். புரிதலை அதிகப்படுத்தும் உரையாடல்களை நிகழ்த்துங்கள். மற்றவர்களின் உணர்வுகள் மற்றும் பார்வைகள் ஆகியவற்றை கருத்தில்கொண்டு அவர்கள் நடக்க வேண்டும் என்பதை ஊக்குவியுங்கள்.
அதிகாரம் செய்யும் பழக்கத்தை தவிருங்கள்
ஒரு நடுநிலையான பெற்றோராக இருங்கள். அதிகம் அதிகாரம் எடுத்துக்கொண்டவர்களாகவும் இருக்கக்கூடாது. அதற்காக மிகுந்த இடமும் கொடுத்துவிடக்கூடாது. அதிக அதிகாரம் நிறைந்த பெற்றோராக இருப்பது, மனக்கசப்பு மற்றும் கலகத்தை ஏற்படுத்தும். மாறாக பரஸ்பர மரியாதை மற்றும் புரிதல் அடிப்படையிலான உறவை வளர்த்தெடுங்கள்.
உங்கள் குழந்தைகளின் நடத்தை பிடிக்கவில்லையென்றாலும், அவர்களின் உணர்வுகளை மதியுங்கள். அவர்களின் உணர்வுகளை மதித்து, அது புரிதல் மற்றும் நம்பிக்கையை வளர்த்தெடுக்க உதவிபுரியுங்கள். மரியாதையான உரையாடல்கள் அதிகரிப்பதற்கு வழியமைத்துகொடுக்க வேண்டும்.
பிரச்னைகளின் வேரை ஆராயுங்கள்
உங்கள் குழந்தையின் மரியாதையற்ற நடவடிக்கைகளுக்கான காரணங்களை புரிந்துகொள்ளுங்கள். அது விரக்தி, சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம், அவர்கள் வயதையொத்த நண்பர்களின் பாதிப்பு மற்றும் கேட்கப்படாத உணர்வுகளே அதற்கான காரணங்களாக இருந்திருக்கலாம். எனவே பிரச்னைக்கான காரணம் என்ன என்பதை நீங்கள் முழுமையாக அறிந்துகொண்டால், நீங்கள் அந்த பிரச்னை களையும் வழியை எளிதாக கண்டுபிடிக்கலாம்.
மரியாதை குறித்த உரையாடல்களை அமைதியாகவும் அதே நேரத்தில் ஆழமாகவும் அவர்களுக்கு எடுத்து கூறுங்கள். உங்கள் குழந்தைகளை இதுபோன்ற உரையாடல்களில் ஈடுபடுத்துங்கள். அப்போதுதான் அவர்களின் தரப்பில் உள்ள பிரச்னைகளை புரிந்துகொண்டு நீங்கள் இருவரும் சேர்ந்து தீர்வுகளை கண்டுபிடிக்கலாம்.
ஒரு மரியாதையான பெற்றோர் மற்றும் குழந்தை உறவை வளர்ப்பதற்கு நம்பிக்கையான சூழலை உருவாக்குவது, அனுதாபம் கற்றுக்கொடுப்பது, ஆரோக்கியமான மற்றும் மரியாதை நிறைந்த உரையாடல்களை குடும்பம் மற்றும் குடும்பம் கடந்து உருவாக்குவேண்டும். இவற்றையெல்லாம் செய்யும்போதே குழந்தைகளிடம் மரியாதை, சுயமரியாதை, தன்னப்பிக்கை, தன்னடக்கம் உள்ளிட்ட பல்வேறு நற்குணங்களும் வளர்கின்றன.
🔻 🔻 🔻