Agri Info

Adding Green to your Life

December 3, 2023

மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் BIS இந்திய தரநிலைகள் பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

December 03, 2023 0

 

மாதம் ரூ.1,50,000/- சம்பளத்தில் BIS இந்திய தரநிலைகள் பணியகத்தில் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இந்திய தரநிலைகள் பணியகத்தில் (BIS) காலியாக உள்ள Management Executives (ME) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. கீழே குறிப்பிடப்பட்டுள்ளபடி தேவையான தகுதி மற்றும் அனுபவம் உள்ளவர்கள் தங்களின் பதிவுகளை 16.12.2023 க்குள் மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


 BIS காலிப்பணியிடங்கள்:

Management Executives (ME) பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 45 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Engineering Graduate with MBA (Finance/ Marketing/HR/ General) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யபப்டும் தேர்வர்க்கு மாதம் ரூ.1.5 லட்சம் வழங்கப்பட உள்ளது.

BIS தேர்வு செயல் முறை:

விண்ணப்பிக்கும் நபர்கள் முதலில் Shortlisting செய்யப்பட்டு பின்னர் நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 16.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


🔻🔻🔻

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே…!

December 03, 2023 0
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக (TNAU) வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.31,000/- || நேர்காணல் மட்டுமே…!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Senior Research Fellow பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாக உள்ளது. இப்பதவிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் மூலம் அனைத்து விவரங்களையும் அறிந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TNAU காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

பல்கலைக்கழக கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc. Horticulture / Bio-Technolog தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Senior Research Fellow பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். நேர்காணல் ஆனது 08.12.2023 அன்று நடைபெற உள்ளது.

  • நேர்காணல் நடைபெறும் இடம்: The Special Officer Palmyrah & Banana Research Station, VOC Agrl. College and Res. Institute, Killikulam
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை நேர்காணலின் போது சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification

TNPSC AAO / AHO General Study Materials

December 03, 2023 0

TNPSC AAO/AHO Study Materials 2022

December 03, 2023 0

Unit -I - Agronomic principles, practices and meteorology

Unit-II – Farming system, Dry Farming and Agro-Forestry

Unit-III - Soils and Fertility Management 

Unit-IV- Horticultural Crop Cultivation Techniques

Unit-V - Breeding and Seed Production

Unit-VI - Plant Protection Principles and Practices

Unit-VII- Livestock, Poultry Management, Artificial Insemination and Calf Rearing 

Unit-VIII -Farm Machinery, Post Harvest Technology and Energy and Environment

Unit IX - Commercial Agriculture

Unit X – Agricultural Extension Agricultural Economics and Digital Agriculture

தேர்வு ஏதுமில்லை... ரயில்வே துறையில் 1104 காலியிடங்கள்

December 03, 2023 0

 பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன், கார்பென்டர், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உள்ள 1104 தொழில்பழகுனர் (Apprentices) பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை தென்கிழக்கு பிராந்திய (North Eastern Railway, Gorakhpur) ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 1104

இதற்கான, விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பிக்க விரும்புவோர், தங்கள் விண்ணப்பபங்களை எதிர்வரும் டிசம்பர் 24ம் தேதிக்குள் (24.12.2023) சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



கல்விக்கான தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தொடர்புடைய வர்த்தகத்தில்(Trade) ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நியமனத்தில் இடஒதுக்கீட்டுப் முறை பின்பற்றப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுதியான ஆவணங்களை பதிவேற்றம் செய்து சலுகையினை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயதுக்கான தகுதி: வயதுக்கான தகுதி: விண்ணப்பிக்க விரும்புவோர் 25.11.2023 அன்று 15 வயது பூர்த்தியடைந்தவராகவும், 24 வயது பூர்த்தியடையாதவராகவும் இருக்க வேண்டும்.

இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும். நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், மகளிர் ஆகிய பிரிவினருக்கு விண்ணப்பிக்க கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்படும் முறை: 10ம் வகுப்பு மற்றும் ஐடிஐ கல்வியில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் உத்தேச இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். எழுத்து, வாய்மொழி போன்ற எந்தவித தேர்வும் நடத்தப்படாது. எனவே, ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது விண்ணப்பபதாரர் கல்வி தொடர்பான அனைத்து விபரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.

பயிற்சி காலம்: ஓராண்டு.

அரசு அறிவித்த நெறிமுறைகளின் படி, பயிற்சி பெறுபவர்களுக்கு மாதாந்திர ஊதியம் அளிக்கப்படும்.

விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அதற்கான முகவரி https://ner.indianrailways.gov.in/ விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய கடைசி நாள் 24/12/2023 பிற்பகல் 05 மணி வரை. விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டயாமாகும். ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும். ஆள்சேர்க்கை அறிவிக்கையை பதிவிறக்கம் செய்ய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்

ஏன் அப்ரண்டிஸ் பணிகள் முக்கியத்துவம் பெறுகிறது:

இந்திய ரயில்வே குறிப்பிட்ட பிரிவுகளில் பழகுனர் சட்டத்துக்கு உட்பட்டு 1963 ஆகஸ்ட் முதல் விண்ணப்பதாரர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. விண்ணப்பதாரர்களின் கல்வித் தகுதியின் அடிப்படையில் எந்தவித போட்டி அல்லது தேர்வு இன்றி பழகுனர்களாக எடுத்துக் கொள்ளப்படுகின்றனர்.
இத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு ரயில்வே பயிற்சி மட்டுமே அளித்து வந்த போதிலும், ஆட்சேர்ப்பு நடைபெறும் முதல் நிலைக்காக அறிவிக்கப்பட்ட காலியிடங்களில் ( Level - 1 recruitment notification முந்தைய Gr. 'D' category posts (Grade Pay - Rs.1800/-)) 20 சதவீத இடங்களை அப்ரெண்டிஸ்களுக்காக இந்திய ரயில்வே ஒதுக்கீடு செய்துவருகிறது.

எனவே, பயிற்சியை முடித்தவர்கள் நிரந்தர பணிகளில் சேர்க்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமுள்ளன


🔻🔻🔻

8-ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மாதம் ரூ.15,000 சம்பளத்தில் வேலைவாய்ப்பு.. உடனே விண்ணப்பிக்கவும்.!!

December 03, 2023 0

 நீலகிரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகுகளில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணியிடங்கள்: 2

கல்வி தகுதி: 8ம் வகுப்பு

வயது வரம்பு: 18 முதல் 37 வரை

சம்பளம்: ரூ.15,700 - 50,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-12-2023

இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

கூடுதல் விவரங்களுக்கு: https://nilgiris.nic.in/notice_category/recruitment/



🔻🔻🔻

December 2, 2023

Day 20 | Planning Commission | Indian Economy - 7

December 02, 2023 0

Day 20 | State Executives-Governor, Chief Minister COM | Polity

December 02, 2023 0

Day 20 | பொதுத்தமிழ் சொல் இலக்கணம் - இலக்கியவகைச் சொற்கள்

December 02, 2023 0

மத்திய ஆயுத போலீஸ் படையில் ஆட்கள் சேர்ப்புக்கான தேர்வுத் தேதிகள் அறிவிப்பு

December 02, 2023 0

  மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சி.ஏ.பி.எஃப்) கான்ஸ்டபிள் (ஜி.டி), எஸ்.எஸ்.எஃப் மற்றும் ரைபிள்மேன் (ஜி.டி) அசாம் ரைபிள்ஸ் ஆகியவைகளுக்கு 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அறிவிப்பை மத்திய பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படை (பி.எஸ்.எஃப்), மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்), மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எஃப்), இந்தோ திபெத்திய எல்லை போலீஸ் (ஐ.டி.பி.பி), சஷஸ்திர சீமா பால் (எஸ்.எஸ்.பி), தலைமைச் செயலக பாதுகாப்புப் படை (எஸ்.எஸ்.எஃப்) மற்றும் அசாம் ரைபிள்ஸ் (ஏ.ஆர்) ஆகியவற்றில் கான்ஸ்டபிள் (பொது கடமை) பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான கணினி அடிப்படையிலான போட்டித் தேர்வை நடத்துவதற்கான அறிவிப்பு 2023, நவ. 24-ம் தேதி வெளியிட்டிருந்தது.

பணி விவரம், வயது வரம்பு, அத்தியாவசிய கல்வித் தகுதி, செலுத்த வேண்டிய கட்டணம், தேர்வுத் திட்டம், விண்ணப்பிக்கும் முறை போன்ற தகவல்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளன. இதற்காக விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் விண்ணப்பங்களை ssc.nic.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி டிச.31, 2023 ஆகும். ஆன்லைனில் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி அடுத்த மாதம் 01 ம் தேதியாகும்.

ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில், தேர்வர்கள் ஸ்கேன் செய்யப்பட்ட வண்ண பாஸ்போர்ட் அளவு புகைப்படத்தை பதிவேற்ற வேண்டும், அந்தப் புகைப்படம் தேர்வு தேதி அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு மிகாமல் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும். புகைப்படம் தொப்பி இல்லாமல் இருக்க வேண்டும், கண்ணாடி மற்றும் முகத்தின் முன் பார்வை தெரியும் வகையில் இருக்க வேண்டும்.

தென் மண்டலத்தில், கணினி அடிப்படையிலான தேர்வு 2024 –ம் ஆண்டு பிப்ரவரி - மார்ச் மாதங்களில் 21 தேர்வு மையங்கள், நகரங்களில் நடைபெறும். இத்தேர்வுகளுக்காக ஆந்திராவில் 10 மையங்கள்; தமிழகத்தில் 7 மையங்களும், புதுச்சேரியில் 1 மையமும், தெலங்கானாவில் 3 மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.


🔻🔻🔻

Click here for latest employment news

 Click here to join WhatsApp group for Daily employment news

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வி தகுதியை நிர்ணயம் செய்ய விதிகளில் திருத்தம் - உயர் நீதிமன்றம் உத்தரவு

December 02, 2023 0

 குரூப் 4 பணியிடங்களுக்கு குறைந்த பட்ச, அதிகபட்ச கல்வித் தகுதி நிர்ணயம் செய்யும் வகையில் விதிகளில் உரிய திருத்தங்கள் மேற்கொள்ள வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல விடுதிகளில் காலியாக இருந்த 135 சமையலர் பணியிடங்கள் அறிவிப்பு வெளியிடப்பட்டு, கடந்த 2022-ல் நிரப்பப்பட்டன. இதில், அதிக கல்வித் தகுதியுள்ளதாகக் கூறி சிலரும், அதிக வயதுள்ளதாகக் கூறி சிலரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

இதை எதிர்த்து சிலர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த தனி நீதிபதி அதிக கல்வி தகுதி இருப்பதாகக் கூறி பணி நீக்கம் செய்தது சரியல்ல எனக்கூறி, நீக்கம் செய்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதை எதிர்த்து ஆதிதிராவிடர் நல ஆணையர் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுப்ரமணியம், கலைமதி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

குரூப் 4 பணியிடங்களுக்கான கல்வித் தகுதியை நிர்ணயம் செய்யப்பட வேண்டியது அவசியம். குறைந்தபட்ச கல்வித் தகுதி கொண்டவர்களின் வாய்ப்பு அதிகபட்ச கல்வித் தகுதியுடையோரால் பறிபோகிறது. அதிக தகுதியுடையோரால் நிர்ணயிக்கப்பட்ட பணியை திறம்பட மேற்கொள்ள முடியவில்லை. இதை உயர் நீதிமன்ற நிர்வாகம் கூட எதிர்கொண்டுள்ளது. சமவாய்ப்பை மறுப்பது என்பது அடிப்படை உரிமையை மீறுவதாகும். போட்டித்தேர்வு முறைகளில் குறைந்தபட்ச கல்வித் தகுதியை கொண்டவர்களுக்கான வாய்ப்பு என்பது குறைவே. இவர்களுக்கான பணிகளும் மிக குறைவே. அரசியலமைப்பு சட்டம் எந்தவித பாகுபாடும் இன்றி அனைவருக்குமான வாய்ப்புகளை வழங்கியுள்ளது.

பணி நீக்கம் செய்யப்பட்டவர்களில் அதிக கல்வித் தகுதியுடையோர் 4 வாரங்களுக்குள் மீண்டும் பணியில் சேர அனுமதிக்க வேண்டும். அதேநேரம், தமிழ்நாடு அடிப்படை பணிகள் சிறப்பு விதிகளின்படி அதிக வயதுடையோர் நியமனம் சட்டவிரோதம் என்பதால் சம்பந்தப் பட்டோர் பணியை தொடர முடியாது. குரூப் 4 பணியிடங்களில் மேற்கொள்ளப்படும் நியமனங்களுக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி மற்றும் அதிகபட்ச கல்வி தகுதியை நிர்ணயம் செய்யத் தேவையான விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் சம வாய்ப்பு என்பதை பாதுகாக்க முடியும், என நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

WII இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,51,100/- ஊதியம்!

December 02, 2023 0

 

WII இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2023 – ரூ.1,51,100/- ஊதியம்!

இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Grade – II, Section Officer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Deputation முறைப்படி தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விரைந்து விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

WII மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

இந்திய வனவிலங்கு நிறுவனத்தில் (WII) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Assistant Grade II – 03 பணியிடங்கள்
  • Section Officer – 02 பணியிடங்கள்
WII பணிக்கான தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் Pay Matrix Level – 02 / 06 என்ற ஊதிய அளவுகளின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 02 ஆண்டுகள் முதல் 03 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

WII வயது வரம்பு:

இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு கீழுள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.

WII ஊதியம்:
  • Assistant Grade II பணிக்கு ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை என்றும்
  • Section Officer பணிக்கு ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
WII தேர்வு முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் Interview (Deputation விதிமுறைப்படி) மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

WII விண்ணப்பிக்கும் முறை:

இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • Assistant Grade II – 15.12.2023
  • Section Officer – 30.12.2023

Download Notification & Application Form PDF 1


🔻🔻🔻

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

December 02, 2023 0

 

RITES ரயில் இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இரயில் இந்திய தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவைகள் (RITES) நிறுவனம் ஆனது Team Leader பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.12.2023 க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

RITES காலிப்பணியிடங்கள்:

Team Leader பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

25.12.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 55க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Leader கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Post Graduate in Civil Engineering or Graduate in Civil Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

RITES தேர்வு செயல் முறை:

மேற்கண்ட மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் அனுபவ அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.50,000 – 1,60,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 25.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf

Apply Online


🔻🔻🔻

மத்திய அரசின் Spices Board-ல் நேர்காணல் – Diploma / Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

December 02, 2023 0

 

மத்திய அரசின் Spices Board-ல் நேர்காணல் – Diploma / Degree முடித்தவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள Spices Board-ல் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் System Support Engineer Trainee பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு ஆர்வமுள்ள நபர்கள் தவறாது நேர்காணலில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

Spices Board பணியிடங்கள்:

Spices Board-ல் காலியாக உள்ள System Support Engineer Trainee பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

System Support Engineer Trainee கல்வி விவரம்:

System Support Engineer Trainee பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் BE, B.Tech, B.Sc, BCA, MCA, Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

System Support Engineer Trainee வயது விவரம்:

17.12.2023 அன்றைய தினத்தின் படி, இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

System Support Engineer Trainee ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்கள் ரூ.19,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Spices Board தேர்வு செய்யும் முறை:

System Support Engineer Trainee பணிக்கு பொருத்தமான நபர்கள் 17.12.2023 அன்று காலை 10.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள Walk-in Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

Spices Board விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலின் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form PDF


🔻🔻🔻

Indigo நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

December 02, 2023 0

 

Indigo நிறுவனத்தில் Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

இண்டிகோ நிறுவனத்தில் காலியாக உள்ள Consultant – Finance மற்றும் Assistant Manager – Finance (Accounts Payable) பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, இப்பணிக்கு அனுபவம் உள்ள நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இண்டிகோ நிறுவன காலிப்பணியிடங்கள்:

Consultant – Finance மற்றும் Assistant Manager – Finance (Accounts Payable) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் ஆங்கிலம் மற்றும் இந்தியில் முறையே சரளமான பேச தெரிந்திருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள இணைய முகவரி மூலம் உடனே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 1 Pdf

Download Notification 2 Pdf


🔻🔻🔻