Agri Info

Adding Green to your Life

December 8, 2023

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

December 08, 2023 0

 

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் ரூ.29,500/- ஊதியத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி (CBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் BC Supervisor பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 15.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா காலியிடங்கள்:

CBI வங்கியில் காலியாக உள்ள BC Supervisor பணிக்கு என 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

BC Supervisor கல்வி:

BC Supervisor பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் Graduate Degree, BE, MCA, M.Sc, MBA ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

BC Supervisor வயது:

இந்த CBI வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 21 வயது முதல் 45 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

BC Supervisor மாத ஊதியம்:

BC Supervisor பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.23,500/- முதல் ரூ.29,500/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

CBI Bank தேர்வு செய்யும் விதம்:

இந்த CBI வங்கி பணிக்கு பொருத்தமான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

CBI Bank விண்ணப்பிக்கும் விதம்:

BC Supervisor பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 15.12.2023 என்பது இப்பணிக்கு விண்ணப்பிப்பதற்கான இறுதி நாள் ஆகும்.

Download Notification Link
Download Application Form Link


🔻🔻🔻

December 6, 2023

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு.. 232 காலியிடங்கள்: இளைஞர்களே மிஸ் பண்ணாதீங்க!

December 06, 2023 0

 இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நுட்ப பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் 13 உறுப்புக் கல்லூரிகள் மற்றும் திருநெல்வேலி, மதுரை, கோயம்பத்தூர் ஆகிய 3 மண்டல வளாகங்களில் (Regional Campus) காலியாக உள்ள உதவி பேராசிரியர், உதவி இயக்குனர் (Assistant Director), உதவி நூலகர் ( Assistant Librarian) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் உடனடியாக எதிர்வரும் 13ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்ற்ன .

காலியிடங்கள்  பற்றிய விவரங்கள்: 

காலியிடங்கள் எண்ணிக்கை : 232

கீழ்காணும் துறைகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்கள்: ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், சிவில் இன்ஜினியரிங், கணினியிய பொறியியல் (CSE),  தகவல் தொழில்நுட்பம், எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், கணிதம், மேலாண்மை அறிவியல்

உதவிப் பேராசிரியர் கல்வித் தகுதி: தொடர்புடைய துறைகளில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். அறிவியல் மற்றும் மனிதவியல் துறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர்,   தங்களது மேற்படிப்பில் 55 சதவீதத்திற்கும் குறையாது மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; பொறியியல்/தொழில்நுட்ப துறையின் கீழ் விண்ணப்பிக்க விரும்புவோர் தங்களது மேற்படிப்பில் 70%க்கும் குறையாது மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


மேலும், யுஜிசி (அல்லது) சிஎஸ்ஐஆர், அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் உதவி பேராசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்;

உதவி நூலகர் :  நூலகம் மற்றும் தகவல் அறிவியல், ஆவணப்படுத்துதல் அறிவியல் ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தேசிய அளவில் யுஜிசி-ஆல் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

உடற்கல்வி உதவி இயக்குனர் : உடற்கல்வி,  விளையாட்டு அறிவியல் ஆகியவற்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஒவ்வொரு காலியிடங்களுக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை பணியாளர் தேர்வு அறிவிப்பில் ( ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ் ) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்

முக்கியமான நாட்கள்:  இணையதளத்தில் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க : 13.12.2023 பிற்பகல் 5 மணி வரை.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்ப கட்டணம் ரூ.1,180ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர்  விண்ணப்பிக்க கட்டணமாக ரூ. 472 செலுத்த வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

www.annauniv.edu என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் பெறப்படும். ஒரு பதவிக்கும் கூடுதலாக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பபங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

Indigo Airlines-ல் வேலை தேடுபவரா? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

December 06, 2023 0

 

Indigo Airlines-ல் வேலை தேடுபவரா? உங்களுக்கான ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Indigo Airlines நிறுவனமானது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Technician பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Indigo Airlines காலிப்பணியிடங்கள்:

Indigo வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Technician பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Junior Technician கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Indigo Airlines வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு Indigo Airlines-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுவைப் பல்கலைக்கழகத்தில் Guest Faculty வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Indigo Airlines தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

December 06, 2023 0

 

TCS நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு || உடனே விண்ணப்பியுங்கள்!

TCS நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Business process services (FAO Transformation) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA / BBM / BBS / B.Com தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

TCS காலிப்பணியிடங்கள்:

TCS வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Business process services (FAO Transformation) பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

FAO Transformation கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BBA / BBM / BBS / B.Com தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

TCS வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

FAO Transformation முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 14 முதல் 18 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்ட விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

TCS ஊதிய விவரம்:

தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

FAO Transformation தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்!

December 06, 2023 0

 

இந்திய ராணுவத்தில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு – Degree தேர்ச்சி போதும்!

குறுகிய கால இராணுவ சேவை (SSC) பிரிவின் கீழ் வரும் Military Nursing Service (Nurse) பணிக்கு என ஏற்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பை இந்திய இராணுவம் (Indian Army) ஆனது சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு Nursing தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் 11.12.2023 அன்று முதல் பெறப்படவுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் சிறிதும் தாமதிக்காமல் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்திய இராணுவ காலியிடங்கள்:

Military Nursing Service (Nurse) பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் இந்திய இராணுவத்தில் காலியாக உள்ளது.

Nurse கல்வி விவரம்:

இப்பணிக்கு அரசு அல்லது INC-ஆல் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் Nursing பாடப்பிரிவில் B.Sc, PB B.Sc, M.Sc ஆகிய பட்டங்களில் ஏதேனும் ஒன்றை பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது.

Nurse வயது விவரம்:
  • இந்த இராணுவ துறை சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21 வயது முதல் 35 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர்கள் 25.12.1988 அன்று முதல் 26.12.2002 அன்றுக்குள் பிறந்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.
Nurse ஊதிய விவரம்:

Nursing பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படும் நபர்களுக்கு MNS விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Indian Army தேர்வு செய்யும் முறை:
  1. Computer Based Examination
  2. Interview
  3. Medical Examination
Indian Army விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 11.12.2023 அன்று முதல் 26.12.2023 அன்று வரை இப்பதிவின் இறுதியில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கு என கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

TN TRB ஆசிரியர் பணிக்கு 2580+ காலியிடங்கள் – சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!

December 06, 2023 0

 

TN TRB ஆசிரியர் பணிக்கு 2580+ காலியிடங்கள் – சற்றுமுன் வெளியான புதிய அறிவிப்பு!

தமிழ்நாடு ஆசிரியர் பணியாளர் தேர்வாணையம் (TNTRB) ஆனது Graduate Teacher / Block Resource Teacher Educator பணிகளுக்கு என 2023-2024 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள TN TRB GT / BRTE 2023 தேர்வு குறித்த அறிக்கை ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது 07.12.2023 அன்றில் இருந்து 13.12.2023 அன்று வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கால நீட்டிப்பானது மிக்ஜாம் புயல் மற்றும் மழையின் காரணமாக சென்னை உயர்நீதிமன்ற இடைக்கால தீர்ப்பாயத்தின் படி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வு விண்ணப்பிக்க தேவையான முழு தகவலும் பின்வருமாறு தரப்பட்டுள்ளது.

பணியிடங்கள்:

TN TRB GT / BRTE 2023 தேர்வு மூலம் Graduate Teacher மற்றும் Block Resource Teacher Educator பணிகளுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள 2582 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

TN TRB GT / BRTE 2023 தேர்வு விவரங்கள்:

Graduate Degree + Diploma, Graduate Degree + B.Ed, 12ம் வகுப்பு + B.El.Ed, 12ம் வகுப்பு + BA / B.Sc.Ed / B.A.Ed ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு கல்வி வாரியங்களில் முடித்தவர்கள் இத்தேர்வில் கலந்து கொள்ளலாம்.

இத்தேர்வுக்கு 01.07.2023 அன்றைய தேதியின் படி, அதிகபட்ச வயதானது 53 வயது முதல் 58 வயதுக்குள் உள்ள நபர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

TN TRB GT / BRTE 2023 தேர்வு மூலம் தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.36,400/- முதல் ரூ.1,15,700/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தேர்வு நடைபெறும் முறை:
  1. Compulsory Tamil Language Eligibility Test
  2. Written Examination
  3. Certificate Verification
விண்ணப்பிக்கும் முறை:

இந்த ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் https://trb1.ucanapply.com/apply_now என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification Link
Online Application Link


🔻🔻🔻

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

December 06, 2023 0

 

TNUSRB SI 2023 தேர்வர்களின் கவனத்திற்கு – நேர்காணலுக்கான பட்டியல் வெளியீடு!

தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் (TNUSRB) ஆனது TNUSRB SI 2023 தேர்வின் மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு (Viva Voce) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்கள் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.

TNUSRB SI 2023 நேர்காணல்:

TNUSRB ஆணையத்தின் வலைதள பக்கத்தில் 2023ம் ஆண்டில் Sub Inspector பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்கள் குறித்த அறிவிப்பானது 05.05.2023 அன்று வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து இப்பணிக்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு முதல் நிலையான எழுத்து தேர்வானது 26.08.2023, 27.08.2023 ஆகிய தேதிகளில் நடத்தப்பட்டு முடிவுகளும் வெளியிடப்பட்டது. இந்நிலையில் 07.11.2023 அன்று நடைபெற்ற இரண்டாம் நிலையான Document Verification / Physical Test மூலம் தேர்வு செய்யப்பட்ட நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மூன்றாம் நிலையான நேர்காணலுக்கு (Viva Voce) தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களின் பட்டியலை தேர்வர்கள் இன்று முதல் (06.12.2023) பெற்று கொள்ளலாம். இப்பட்டியலை TNUSRB-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.tnusrb.tn.gov.in/ மூலம் எளிமையாக ஆன்லைனில் பெற்றுக்கொள்ளலாம். மேலும் தேர்வு செய்யப்பட்ட நபர்களுக்கு நேர்காணலுக்கான அழைப்பானது விரைவில் TNUSRB ஆணையம் மூலம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Download TNUSRB Viva Voice List 1
Download TNUSRB Viva Voice List 2
Download TNUSRB Viva Voice List 3
Download TNUSRB Viva Voice List 4
Download TNUSRB Viva Voice List 5
Download TNUSRB Viva Voice List 6

Wipro நிறுவனத்தில் Developer ஆக வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

December 06, 2023 0

 

Wipro நிறுவனத்தில் Developer ஆக வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Developer பணிக்கு என ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் Online மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் Developer பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

Developer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

Developer ஊதியம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் Wipro நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் பெறுவார்கள்.

Developer தேர்வு முறை:

Developer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் முறை:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Form Link

🔻🔻🔻

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ஒரு நாளுக்கு ரூ.1,000/- ஊதியம்!

December 06, 2023 0

 

புதுவைப் பல்கலைக்கழகத்தில் பணிபுரிய வாய்ப்பு – ஒரு நாளுக்கு ரூ.1,000/- ஊதியம்!

Guest Faculty பணிக்கு என புதுவைப் பல்கலைக்கழகத்தில் (Pondicherry University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான விண்ணப்பங்கள் 14.12.2023 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

புதுவைப் பல்கலைக்கழக காலியிடங்கள்:

புதுவைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Guest Faculty பணிக்கு என 02 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Guest Faculty கல்வி:

Guest Faculty பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் UGC விதிமுறைக்குட்பட்ட கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

Guest Faculty வயது:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Guest Faculty மாத சம்பளம்:

இந்த புதுவைப் பல்கலைக்கழக பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ஒரு நாளுக்கு ரூ.1000/- விதம் ஒரு மாதத்திற்கு ரூ.25,000/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

Pondicherry University தேர்வு செய்யும் விதம்:

Guest Faculty பணிக்கு தகுதியான நபர்கள் 18.12.2023 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள்.

Pondicherry University விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்தை pucc.pdy@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 14.12.2023 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification Link 1
Download Notification Link 2


🔻🔻🔻

சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு

December 06, 2023 0

 

சென்னை Tidel Park-ல் காத்திருக்கும் சூப்பரான வேலை – Engineering முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை Tidel Park-ல் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Executive Director பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Chennai Tidel Park காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Executive Director பணிக்கு என 01 பணியிடம் மட்டுமே Chennai Tidel Park-ல் காலியாக உள்ளது.

Executive Director கல்வி:

Executive Director பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் Civil Engineering, Mechanical Engineering, Electrical Engineering பாடப்பிரிவில் BE, B.Tech Degree அல்லது MBA முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Executive Director வயது:

01.07.2023 அன்றைய நாளின் படி, விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 40 வயது எனவும், அதிகபட்சம் 50 வயது எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

Executive Director மாத ஊதியம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Executive Director தேர்வு செய்யும் விதம்:

Executive Director பணிக்கு தகுதியான நபர்கள் Shortlist, Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Executive Director விண்ணப்பிக்கும் விதம்:

விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து hr@tidelpark.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (13.12.2023) அனுப்ப வேண்டும்.

Download Notification & Application Form Link

Day 24 | Time & Work | Aptitude & Mental Ability

December 06, 2023 0

Day 24 | Gandhian Era - 2 | Indian National Movement

December 06, 2023 0

Day 24 | தமிழ் அறிஞர்கள் | தமிழ் மொழியின் சிறப்பு

December 06, 2023 0