சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர் விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தில் பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 148 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் நேர்முகத் தேர்வில் கொள்ளலாம்.
Duty Manager
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் 16 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 45,000
Duty Officer
காலியிடங்களின் எண்ணிக்கை : 8
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
மேலும் 12 வருட அனுபவம் இருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 32,200
Customer Service Executive
காலியிடங்களின் எண்ணிக்கை : 80
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,130 – 25,980
Utility Agent cum Ramp Driver
காலியிடங்களின் எண்ணிக்கை : 2
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
கனரக வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 20,130
Handyman
காலியிடங்களின் எண்ணிக்கை : 50
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம் : ரூ. 17,850
வயதுத் தகுதி: 28 வயதிற்குள் இருக்க வேண்டும். சில பணிகளுக்கு
55 வயது வரை விண்ணப்பிக்கலாம். SC/ST பிரிவினருக்கு
5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும்
வயது சலுகை உண்டு.
தேர்வு முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள்: 26.12.2023 முதல் 30.12.2023 வரை
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Office of the HRD Department,
Air India Unity Complex, Pallavaram Cantonment, Chennai - 600043
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://aiasl.in/resources/Advertisement%20-%20CHENNAI,%20MADURAI,%20TRICHY%20AND%20COIMBATORE%20-%20DEC%202023.pdf என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.