Agri Info

Adding Green to your Life

December 15, 2023

எடை இழப்பு முதல் செரிமானம் வரை: வெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் ஏகப்பட்ட நன்மைகள்!!

December 15, 2023 0

 

 தினமும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், ஒவ்வொருவரும் தண்ணீரை வெவ்வேறு வழிகளில் உட்கொள்கிறார்கள். சிலருக்கு தேன் கலந்த தண்ணீரைக் குடிக்க பிடிக்கும், இன்னும் சிலருக்கு எலுமிச்சை சேர்த்து தண்ணீர் குடிக்க பிடிக்கும். இது தவிர, மக்கள் விரும்பி சாப்பிடும் பல வகையான பானங்கள் உள்ளன. பல வித உடல் நல பயன்களுக்காக மக்கள் தாண்ணீர் குடிப்பது வழக்கம். இது தவிர, அனைத்து மருத்துவர்களும், நிபுணர்களும் சூடான நீரைக் குடிக்க அறிவுறுத்துகிறார்கள்.

வெந்நீர் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் (Health Benefits of Drinking Warm Water)

ஆயுர்வேதத்தில், தினமும் காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரை உட்கொள்வது சிறந்ததாக கருதப்படுகிறது. ஆனால் இதை உட்கொள்வதால் ஏற்படும் பின்விளைவுகள் பற்றியும் குறிப்பிட்ட தகவல்களும் கொடுக்கப்பட்டுள்ளன. வெந்நீரின் நன்மைகள் மற்றும் 21 நாட்களுக்கு வெந்நீரை தொடர்ந்து குடிப்பதால் ஏற்படும் நல்ல விளைவுகள் பற்றி இந்த பதிவில் காணலாம். இது தவிர, வெந்நீரை எப்போது குடிக்கக் கூடாது? இதைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

எடை இழப்பு (Weight Loss)

எடை இழப்புக்கானபல வழிகளை பற்றி நாம் தினமும் கேள்விப்படுகிறோம். ஜிம் செல்வது, பல வித உணவு கட்டுப்பாடுகளை மெற்கொள்வது என நாம் பல வித முயற்சிகளை எடுக்கிறோம். ஆனால் மிக எளிய இயற்கையான வழிகளிலும் உடல் எடையை குறைக்கலாம். அதில் வெந்நீர் உட்கொள்வதும் ஒன்று. இதனால் எந்த வித பக்க விளைவுகளும் ஏற்படாது. வெந்நீர் மூலம் உடல் எடையை குறைப்பதால் எந்த செலவும் இல்லாமல் உடல் ஆரோக்கியத்தையும் எளிதாக பராமரித்து, உடல் எடையையும் குறைக்க முடியும்.

ஆயுர்வேதத்தில் மட்டுமல்ல, நவீன ஆய்வுகளிலும், வெந்நீரை உட்கொள்வது உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. குளிர்ந்த நீரைக் குடிப்பதை விட வெந்நீரைக் குடிப்பது அதிக பலன் தருவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. A குழுவிற்கு சாதாரண நீரும், B குழுவிற்கு வெந்நீரும் கொடுக்கப்பட்டபோது. ​​வெந்நீர் அருந்தியவர்களின் வளர்சிதை மாற்றம் சிறப்பாக இருப்பது ஆய்வில் காணப்பட்டது. தினமும் 2 லிட்டர் வெந்நீரை உட்கொள்வது அவர்களது உடலுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இது அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க உதவியாக இருந்தது.

வெந்நீர் 3 வழிகளில் உடல் எடையை குறைக்க உதவுகிறது

- உணவை ஜீரணிக்க (Digestion) உதவுகிறது - சூடான நீரை உட்கொள்வதால் உணவை எளிதில் ஜீரணிக்க முடியும்.

- வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது - உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க சூடான நீர் உதவுகிறது.
- பசியைக் குறைக்கிறது - உணவு உண்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன் வெந்நீரைக் குடிப்பது உங்களுக்கு நன்மை பயக்கும்.

எவ்வளவு வெந்நீர் அருந்துவது சரியானது?

அதிக சூடான நீரைக் குடிப்பதைத் தவிர்க்க வேண்டும். நன்மைகளுடன், பொருட்களை தவறாக உட்கொள்வதும் தீங்கு விளைவிக்கும். 54 முதல் 70 டிகிரி வரையிலான வெப்பநிலையுடன் சூடான நீரை குடிப்பது ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இந்த வகை நீர் மூளைக்கும் நல்லது என்று கருதப்படுகிறது.

மன அழுத்தத்தை போக்கவும் உதவுகிறது

வெந்நீர் மன அழுத்தத்தைக் (Blood Pressure) குறைப்பதற்கும் உதவியாகக் கருதப்படுகிறது. மன அழுத்தம் உள்ளவர்கள் எந்த மருந்தையும் உட்கொள்வதற்குப் பதிலாக, முதலில் ஆழ்ந்த மூச்சை எடுத்து பின்னர் வெதுவெதுப்பான நீரைக் குடிப்பது நல்லது. இது உங்களை மிகவும் நன்றாக உணர வைக்கும்.

சோம்பு தண்ணீரும் நன்மை பயக்கும்

சோம்பு தண்ணீரும் உங்களை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் உணர மிகவும் உதவியாக இருக்கும். சோம்பை தண்ணீரில் கலந்து கொதிக்கவைத்து, வடிகட்டியின் உதவியுடன் வடிகட்டி தண்ணீரை உட்கொள்ளவும்.

🔻 🔻 🔻 

SAIL நிறுவனத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

December 15, 2023 0

 

SAIL நிறுவனத்தில் Lab Technician காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || நேர்காணல் மட்டுமே!

Steel Authority of India Limited எனப்படும் SAIL நிறுவனம் ஆனது Proficiency Training of Pharmacist, Lab Technician பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன

SAIL காலிப்பணியிடங்கள்:

Proficiency Training of Pharmacist, Lab Technician பணிக்கென காலியாக உள்ள 13 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Lab Technician கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 12ம் வகுப்பு / Diploma / Degree / DMLT / B.Sc. தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 30 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Lab Technician ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.17,000/- முதல் ரூ.20,000/- வரை ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SAIL தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 28.12.2023 ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

சென்னை Cognizant நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பரான வேலைவாய்ப்பு!

December 15, 2023 0

 

சென்னை Cognizant நிறுவனத்தில் வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான சூப்பரான வேலைவாய்ப்பு!

Manager (Projects) பணிக்கென Cognizant நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Cognizant காலிப்பணியிடங்கள்:

Manager (Projects) பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Manager கல்வி தகுதி:

இந்த Cognizant நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் BE, B.Sc, M.Sc, MCA ஆகிய டிகிரிகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

Manager பிற தகுதி:
  • SFDC Dev & Customization
  • ANSI SQL
  • Core Java
Manager பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

Cognizant தேர்வு முறை:

Manager (Projects) பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், திறன் தேர்வு, எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Cognizant விண்ணப்பிக்கும் முறை:

இந்த Cognizant நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

December 15, 2023 0

 

Air India நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Visual Engineers பணிக்கென காலியாக பல்வேறு பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Air India காலிப்பணியிடங்கள்:

Air India வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Visual Engineers பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Visual Engineers கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s / Master’s degree in Computer Science, Statistics, Mathematics தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Air India வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Visual Engineers ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Air India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Air India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

December 15, 2023 0

 

ஆவின் நிறுவனத்தில் மாதம் ரூ.43,000/- ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மதுரை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது Veterinary Consultant பணியிடங்களுக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10.01.2024 அன்று நடைபெற உள்ள வாக்-இன்-இன்டர்வியூவில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

ஆவின் காலிப்பணியிடங்கள்:

Veterinary Consultant பதவிக்கு என 1 பணியிடம் காலியாக உள்ளது.

கால்நடை ஆலோசகர் கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் நான்கு சக்கர அல்லது இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

09.01.2024 தேதியின்படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

AAVIN சம்பள விவரம்:

மேற்கண்ட பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தமிழ்நாட்டில் வேலை தேடும் ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் முழு பயோடேட்டா மற்றும் தேவையான சுய சான்றொப்பமிட்ட ஆவணங்களுடன் (அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளபடி) அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் 10.01.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2023 Pdf


🔻🔻🔻

Indigo நிறுவனத்தில் காத்திருக்கும் Assistant Technical Officer வேலை – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்! Indigo நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Technical Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

December 15, 2023 0

 

Indigo நிறுவனத்தில் காத்திருக்கும் Assistant Technical Officer வேலை – டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்!

Indigo நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Assistant Technical Officer பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Indigo பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Technical Officer பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Indigo நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Assistant Technical Officer கல்வி விவரம்:

Assistant Technical Officer பணிக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Assistant Technical Officer அனுபவ விவரம்:

இந்த Indigo நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Assistant Technical Officer ஊதிய விவரம்:

Assistant Technical Officer பணிக்கு தகுதியான நபர்களுக்கு Indigo நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியம் கொடுக்கப்படும்.

Indigo தேர்வு செய்யும் முறை:

இந்த Indigo நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Indigo விண்ணப்பிக்கும் வழிமுறை:

Assistant Technical Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.

Download Notification & Application Link

அரசின் காப்பீட்டு நிறுவனத்தில் 300 உதவியாளர் காலியிடங்கள்

December 15, 2023 0

 ந்திய அரசின் பொதுக் காப்பீட்டு நிறுவனமான யுனைட்டெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் (United India Insurance) பல்வேறு காலியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.

இந்த ஆள்சேர்க்கை மூலம் கிட்டத்தட்ட 300 உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் கடைசி நேரம் வரை காலம் தாழ்த்தாமல் போதிய கால அவகாசம் இருக்கும் போதே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் பற்றிய விவரங்கள்: 300 உதவியாளர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. காலியிடங்கள் எண்ணிக்கை தற்காலிக மானது தான் என்றும், நிர்வாக காரணங்களினால் அதிகரிக்கவோ குறையவோ கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், விண்ணப்பிக்க உள்ள உள்ளூர்/பிராந்திய மொழியில் பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

காலியிடங்களுக்கான வயது வரம்பு, பதவி முன் அனுபவம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை தேர்வு அறிவிப்பில் (ரெக்ரூட்மெண்ட் நோட்டிஸ்) தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளன. விண்ணப்பதாரர்கள் ரெக்ரூட்மெண்ட் நோட்டிசை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

சம்பள அளவு: ஆரம்ப நிலை ஊதியமாக மாதம் ஒன்றுக்கு Rs.37,000/- வழங்கப்படும்.

வயது வரம்பு: இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், 30.09.2023 அன்று 21- 30 க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இடஒதுக்கீடு: இப்பதவிகளுக்கு, இந்திய அரசால் பின்பற்றப்படும் இடஒதுக்கீடு முறை பொருந்தும். எனவே, விண்ணப்பதாரர்கள் தகுந்த ஆவணங்களை சமர்ப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளிகளுக்கான 4% இடஒதுக்கீடு முறையும் பின்பற்றப்படும்.நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிறப்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றத் திறனாளிகள் 10 ஆண்டுகள் வரை சலுகை பெறலாம்

முக்கியமான நாட்கள்: இதற்கான விண்ணப்பங்கள் தற்போது பெறப்பட்டு வருகின்றன. ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை எதிர்வரும் 2024 ஜனவரி 16-ம் தேதி வரை செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுளளது. எழுத்துத் தேர்வின் அடிப்படையில் இறுதி தேர்வு பட்டியல் தயாரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 1000 ஆகும். பட்டியல்/ பழங்குடியினர் / மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 250 செலுத்த வேண்டும் . ஒருமுறை விண்ணப்ப கட்டணம் செலுத்தபட்டு விட்டால் எந்த ஒரு சூழ்நிலையிலும் திருப்பித்தரபடமாட்டாது. நிர்ணயிக்கப்பட்ட கட்டணமின்றி விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது என்றும் பூரணமாக நிராகரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\

தகுதி நிபந்தனைகள், ஆன்லைன் விண்ணப்ப படிவம் நிரப்புவதற்கான நடைமுறை, ஆள்சேர்ப்பு, நடைமுறை, தேர்வு மற்றும் சம்பளம் & அலவன்ஸ்கள் முதலியன பற்றிய விரிவான தகவலுக்கு uiic.co.in ஆள்சேர்ப்பு அறிவிப்பை பதிவிறக்கம் செய்து படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

விண்ணப்பங்கள், எதிர்வரும் 16ம் தேதிமுதல் uiic.co.in என்ற இணையதளம் மூலம் மட்டுமே ஏற்கப்படும். ஆப்லைன் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


December 14, 2023

Day 32 | Agriculture | Indian Economy - 9

December 14, 2023 0

Day 32 | Constitutional Bodies & Non-Constitutional Bodies

December 14, 2023 0

Day 32 | பொதுத்தமிழ் - தமிழ் அறிஞர்கள் | உரைநடை

December 14, 2023 0

Day 31 | Indian Polity | Centre - State Relation

December 14, 2023 0

Day 31 | Niti Aayog & Land Reforms | Indian Economy - 8

December 14, 2023 0

கல்லீரல் நோய்கள் களைய!

December 14, 2023 0

 

ம் உடலில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக மிகவும் முக்கிய பாகமாக கல்லீரலைக் கூறலாம்.

மிகவும் சென்ஸிட்டிவ்உறுப்பான கல்லீரல் நம் உடலில் செய்யும் வேலைகள் பற்பல. சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதில் கல்லீரல் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது. மேலும், புரத உற்பத்திக்கும் இது மிகவும் உதவிகரமாக உள்ளது. அதே நேரத்தில், கல்லீரலில் நோய் ஏற்பட்டால் அது உடலின் பல இயக்கங்களைப் பாதிக்கிறது. கல்லீரலில் ஏற்படும் நோய்க்கு கல்லீரல் நோய் என்று பெயர். இந்த நோய் ஏற்படுவதை உடல் நலக் குறைவு, வாந்தி, மயக்கம், களைப்பு, எடை குறைவு ஆகிய பல அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். 75%க்கும் மேற்பட்ட கல்லீரல் திசுக்கள் சேதமடையும் போது கல்லீரல் கடும் பாதிப்புக்கு உள்ளாகிறது.

கல்லீரல் முழுவதுமாக செயலிழந்தால் மாற்றுக் கல்லீரல் பொருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது.

கல்லீரல் பழுதடைந்துள்ளது என்பதை அறிய சில அறிகுறிகள்

உடலில் உள்ள உறுப்புகளில் கல்லீரல் மிகவும் முக்கியமான ஒரு உறுப்பு. ஒரு வேளை கல்லீரல் சரியாக இயங்காவிட்டால், உடனே அதற்கு சரியாக சிகிச்சையை மேற்கொள்ள வேண்டும். சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்கமாட்டோம்.

இந்த மாதிரி கல்லீரல் பாதிப்படைவதற்கு ஆல்கஹால் அதிகம் குடிப்பது, அதிகமான எண்ணெய் உள்ள உணவுகளை சாப்பிட்டு, அதனால் கல்லீரலில் கொழுப்புக்கள் அதிகம் சேர்ந்து பாதிப்பை ஏற்படுத்துகின்றன. மேலும் சரியான நேரத்தில் சாப்பிடாமல் இருந்தால், கல்லீரலில் கொழுப்புகள் தங்கிவிடும்.

வாய் துர்நாற்றம்

கல்லீரலானது சரியாக இயங்கவில்லையெனில், வாயிலிருந்து கடுமையான நாற்றம் வரும். ஏனெனில் அப்போது உடலில் அம்மோனியாவானது அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டிருக்கும்.

கருவளையம் மற்றும் சோர்வான கண்கள்

கல்லீரல் சரியாக இயங்காலிட்டால், சருமத்தில் பாதிப்பு மற்றும் சோர்வு போன்றவை ஏற்படும். அதிலும் குறிப்பாக கண்களைச் சுற்றி கருவளையங்கள் ஏற்பட்டு,
சுருக்கங்களோடு காணப்படும்.

செரிமானப் பிரச்னை

கல்லீரலில் கொழுப்பானது அதிகம் சேர்ந்திருந்தால், தண்ணீர் கூட சரியாக வெளியேறாமல் இருக்கும். இத்தகைய பிரச்னை உடலில் தெரிந்தால், அது கல்லீரல்
பழுதடைந்துள்ளதற்கான அறிகுறியாகும்.

வெளுத்த சருமம்

கல்லீரலில் பாதிப்பு இருந்தால், சில சமயங்களில் சருமத்தில் உள்ள நிறமிகள் நிறமிழந்து, சருமத் தோலானது திட்டுதிட்டாக ஆங்காங்கு வெள்ளையாக காணப்படும்.

அடர்ந்த நிற சிறுநீர் மற்றும் கழிவுகள்

உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அடர்ந்த நிறத்தில் இருக்கும். இந்த மாதிரி எப்போதாவது ஏற்பட்டால், அதற்கு உடலில் வறட்சி என்று அர்த்தம். ஆனால், தொடர்ச்சியாக இருந்தால், அது கல்லீரல் பழுதடைந்ததற்கான அறிகுறியாகும்.

மஞ்சள் நிற கண்கள்

கண்ணில் உள்ள வெள்ளை பகுதி மஞ்சள் நிறத்தில் காணப்பட்டால், அது மஞ்சள் காமாலையாக இருக்கலாம். அதாவது கல்லீரலில் தொற்றுநோய் ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கேற்ப முறையான சிகிச்சை செய்ய வேண்டும்.

வாய் கசப்பு

கல்லீரலில் பைல் என்னும் நொதியானது உற்பத்தி செய்யப்படும். அந்த பைல் நொதி தான் கசப்பான சுவையை ஏற்படுத்துகிறது. எனவே வாயில் அதிக கசப்பு இருந்தால், கல்லீரலில் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.

வயிறு வீக்கம்

கல்லீரலானது பெரும் பாதிப்பிற்கு ஆளாகியிருந்தால், அவை வயிற்றின் அடிப்பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்தும்.

கல்லீரலுக்கு ஏற்படும் பிரச்னைகளை குணப்படுத்த சில வழிகள்

நெல்லிக்காய்

வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரம்

சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள்

தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

ஆளி விதைகள்

இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம்

கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.

கீரை, கேரட் ஜூஸ்

அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.

அவகேடோ மற்றும் வால்நட்ஸ்

கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள

நச்சுக்களை வெளியேற்றும் ஆப்பிள், காய்கறிகள்

கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

க்ரீன் டீ

இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்னைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

பால் நெருஞ்சில் விதை (Milk Thistle Seeds)

பால் நெருஞ்சில் என்று அழைக்கப்படும் மூலிகை பலவிதமான ஈரல் நோய்களைக் குணப்படுத்த வல்லது. வைரல் ஹெப்பாடிட்டிஸ், கைரோசிஸ், ஆல்கஹாலிக் ஹெப்பாடிட்டிஸ் உள்ளிட்ட பலவற்றிற்கும் அருமையான மருந்தாக இம்மூலிகை விளங்குகிறது. தினமும் இருமுறை 900 மில்லிகிராம் அளவில் இந்த மூலிகையை சாப்பாட்டின் போது எடுத்துக் கொள்வது நல்லது.

🔻 🔻 🔻 

பேரீச்சம் பழத்தின் நன்மைகள்!

December 14, 2023 0

 பேரிச்சம்பழத்தில் குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற இயற்கையான சர்க்கரைகள் உள்ளன.

அவை ரத்தத்தில் உறிஞ்சப்பட்டவுடன் ஆற்றல் விநியோகத்தை அதிகரிக்கின்றன. அதனால் சோர்வு நீங்க அதிக நேரம் எடுக்காது. வருடம் முழுவதும் பேரீச்சம்பழம் சாப்பிடுவது இந்தப் பலனைத் தரும். எனவே நீங்கள் சோர்வாக உணர்ந்தால், ஒன்றிரண்டு பேரீச்சம்பழம் சாப்பிட மறக்காதீர்கள்.

பேரீச்சம்பழத்தில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொள்வது உடலில் உள்ள எல்டிஎல் அல்லது கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது. இதன் விளைவாக, திடீர் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து குறைகிறது. மேலும் இதில் உள்ள பொட்டாசியம் மற்ற அனைத்து இதய நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. பல்வேறு காரணங்களால் உடல் எடை குறைய ஆரம்பித்தவர்கள் பேரீச்சம்பழம் சாப்பிட ஆரம்பிக்க வேண்டும். ஏனெனில் இந்தப் பழத்தில் உள்ள கலோரிகள், உடல் செயலிழப்பைத் தடுத்து எடை அதிகரிப்பதில் சிறப்புப் பங்கு வகிக்கிறது.

பேரீச்சம்பழத்தில் வைட்டமின்கள் மற்றும் பொட்டாசியம் நிறைந்துள்ளது. இது நரம்பு மண்டலத்தின் செயல்திறனை அதிகரிப்பதன் மூலம் ஒட்டு மொத்த மூளை சக்தியை அதிகரிப்பதில் சிறப்புப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பழம் புத்திசாலித்தனம் மற்றும் செறிவு அதிகரிக்க உதவுகிறது.

பேரீச்சம்பழத்தில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் எலும்புகளை பலப்படுத்துகிறது. வயதான காலத்தில் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களால் பாதிக்கப்படு
பவர்களுக்கு பேரீச்சம்பழம் நன்றாக வேலை செய்கிறது. இதன் விளைவாக, அவர்கள் ஆண்டு முழுவதும் பேரீச்சம்பழத்தை தவறாமல் சாப்பிட வேண்டும்.

பேரீச்சம்பழத்தில் இயற்கையான ஆன்டி- ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது பல நோய்களைத் தடுப்பதோடு, உடல் அமைப்பிலும் சிறப்புப் பங்கு வகிக்கிறது. அதுமட்டுமின்றி, இந்தப் பழத்தில் பல பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. பேரீச்சம்பழம் சாப்பிடுவது தொற்று அபாயத்தையும் கணிசமாகக் குறைக்கிறது.

உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும்போது இந்த வகையான நோய்களின் நிகழ்வு அதிகரிக்கிறது. எனவே இந்த மினரல் உடலில் குறைபாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தப் பழத்தில் இரும்புச்சத்து அதிகம். எனவே ரத்தசோகை போன்ற நோய்களைத் தடுப்பதில் இது சிறப்புப் பங்கு வகிக்கிறது.



🔻 🔻 🔻 

இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் இவ்வளவு ஆபத்தா?

December 14, 2023 0

 காதுகளில் இருக்கும் அழுக்கை வெளியேற்ற பலரும் பல்வேறு வழிகளை கையாளும் நிலையில் பலர் கையாள்வது இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வதுதான்.

ஆனால் இயர் பட்ஸ் வைத்து சுத்தம் செய்வது ஆபத்தை விளைவிக்கும் என்று கூறப்படுகிறது.

காதுகளில் இயர் பட்ஸ் பயன்படுத்தினால் காதில் காயம் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் அதுமட்டுமின்றி செவித்தன்மை பாதிக்கவும் வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.


சாப்பிடும் உணவின் சுவை அறிவதற்கு காதில் நடுப்பகுதியில் செல்லும் நரம்பு இயர் பட்ஸ் பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்டு சுவையை அறிய முடியாத நிலை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.


எனவே குச்சி, ஹேர்பின் ஆகியவற்றை காதுக்குள் பயன்படுத்தக் கூடாது என்பது போலவே இயர் பட்ஸ்-ஐயும் பயன்படுத்தக் கூடாது என்று கூறப்படுகிறது.


🔻 🔻 🔻