January 24, 2024

குளிர்காலத்தில் கை, கால் விரல்கள் வீங்குகிறதா..? இதற்கு என்ன காரணம் தெரியுமா..?

 

குளிர்காலம் வந்தாலே பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் வரிசைகட்டி வந்துவிடும். இந்த சமயத்தில் சூடான சாக்லேட் காஃபி குடிக்கும் போது நமக்கு கதகதப்பு கிடைத்தாலும் கடுமையான குளிர் காரணமாக நமது கை மற்றும் கால் விரல்களில் வீக்கம் ஏற்படுகின்றன. குளிர்காலத்தில் சுவாசப் பிரச்சனைகள், மூட்டு வலி, தசை வலி, பனிக்கடுப்பு போன்ற பொதுவான உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்படுவோம். ஆனால் கை மற்றும் கால் விரல்களில் வரும் வீக்கம் சில்பிளைன்ஸ் என்று அழைக்கப்படும் குளிர் கொப்புளத்தை உண்டாக்குகின்றன.

நாளங்களை பாதிக்கிறது. இதன் காரணமாக சருமத்தில், முக்கியமாக கை, கால் விரல்கள், காதுகள், மூக்கில் சிறியதாக சிவப்பு அல்லது நீல நிறத்தில் அரிப்பு ஏற்படுகிறது.

குளிர்கால கொப்புளங்களின் அறிகுறிகள்

வீக்கம்: கொப்புளம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி வீக்கம் உருவாகிறது. இதனால் பாதிக்கப்பட்ட இடத்தை தொடும்போது மென்மையாக இருக்கும்.

சருமம் நிறம் மாறுதல்: பாதிக்கப்பட்ட பகுதிகள் சிவப்பு அல்லது நீல நிறத்தில் மாறும். சருமத்தில் ஏற்படும் வீக்கம் காரணமாகவே இப்படி தோலின் நிறம் மாறுகிறது.

அரிப்பு மற்றும் எரிச்சல்: குளிர்கால கொப்புளம் கடுமையான அரிப்பு மற்றும் எரிச்சலைத் தரும். இதனால் தினசரி பணிகளில் ஈடுபடுவது சிரமமாக இருக்கும்.

கொப்புளம் அல்லது புண்: தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்தால் அல்லது தொடர்ச்சியாக குளிர் நேரத்தில் வெளியே சென்று வந்தால் கொப்புளம் அல்லது புண் உருவாகும். இது வலியை ஏற்படுத்துவதோடு தொற்றை அதிகரிக்கும்.

News18

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

கதகதப்பு: குளிர்காலத்தில் நிறைய உடைகள் அணிந்து உடலை சூடாக வைத்திருங்கள். கைகள், கால்கள், காது, மூக்கு ஆகியவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். சாக்ஸ், கிளவுஸ், தொப்பி, ஸ்வெட்டர் அணிந்துகொண்டு வெளியே செல்லுங்கள்.

திடீர் வெப்பநிலை மாற்றத்தை தவிர்க்கவும்: கொஞ்சம் கொஞ்சமாக உடலின் பகுதிகளை கதகதப்பாக்குங்கள். அப்போதுதான் ரத்த நாளங்களில் சுருக்கம் ஏற்படுவது தடுக்கப்படுவதோடு குளிர் கொப்புளம் வருவதும் தடுக்கப்படுகிறது.

கதகதப்பான அறை: நீங்கள் வசிக்கும் வீடு, பணியிடம் போன்றவை கதகதப்பாக இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். குளிர்காலத்தில் அறைக்குள் சரியான வெப்பநிலை நிலவுவதற்கு வசதியாக ஹீட்டரை பயன்படுத்தலாம்.

குளிர் மற்றும் ஈரம் உடலில் படக்கூடாது: ஈரமான மற்றும் குளிரான இடங்களில் அதிக நேரம் செலவழிக்காதீர்கள். குளிரான பகுதியில் இருக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டால் உடலில் ஈரம் படுவதை தவிர்க்கவும்; நேரம் கிடைக்கும் போது வெப்பமாக பகுதியில் ஓய்வெடுங்கள்.

கால்களை பராமரியுங்கள்: உங்கள் கால்களை ஈரமின்றி வைத்திருங்கள். வெளியே செல்லும் போது தண்ணீர் புகாத காலனிகள் அல்லது ஷூக்களை அணியுங்கள். கால்கள் வறண்டு போகாமல் தடுக்க அவ்வப்போது மாய்ஸரைசர் பயன்படுத்துங்கள். இது குளிர் காலத்தில் கொப்புளம் வருவதை தடுக்கும்.

🔻 🔻 🔻 

தினமும் துளசி சாப்பிட்டு வந்தால் என்ன ஆகும் தெரியுமா..?

 ஆன்மீக ரீதியாகவும், ஆரோக்கிய ரீதியாகவும் நம்முடைய வாழ்க்கையில் இரண்டறக் கலந்திருப்பது துளசி ஆகும். பலருடைய வழிபாட்டு முறைகளில் துளசி முக்கிய இடத்தை பெறுகிறது. அதே சமயம், இதை ஒரு மூலிகை எனக் கருதி, உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக் கொள்பவர்களும் இருக்கின்றனர்.

துளசி நறுமனம் கொண்டது. அதே சமயம், சாப்பிடும்போது லேசான காரம் தென்படும். காலையில் எழுந்ததும் 4, 5 துளசி இலைகளை வாயில் மென்று விழுங்கும் பழக்கம் இன்றைக்கும் பலரிடம் உள்ளது. பல நூற்றாண்டுகளாகவே மருத்துவ குணங்களுக்காக பயன்படுத்தப்படும் துளசியில் என்னென்ன சத்துக்கள் உள்ளன என்பதை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

துளசியின் ஊட்டச்சத்துக்கள்

100 கிராம் அளவு துளசியில் 23 கலோரிகள் உள்ளன. அதுபோக 5.32 கிராம் மாவுச்சத்து, 1.6 கிராம் நார்ச்சத்து, 0.3 கிராம் சர்க்கரை சத்து, 2.2 கிராம் புரதம், 0.6 கிராம் கொழுப்புச்சத்து ஆகியவை உள்ளன.
இது மட்டுமல்லாமல் விட்டமின் சி, விட்டமின் ஏ, விட்டமின் கே, விட்டமின் பி-காம்ப்ளெக்ஸ், கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர், மேங்கனீஸ் ஆகிய சத்துக்களும் துளசியில் உள்ளன.

News18

ஆரோக்கிய நன்மைகள் :

1. துளசியில் ஆண்டி ஆக்ஸிடெண்ட் சத்துக்களும், அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களும் இருப்பதால் நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மேம்படுகிறது. இதனால் தொற்றுகள் தவிர்க்கப்படும்.

2. துளசி சாப்பிட்டால் ஸ்ட்ரெஸ் ஏற்படக் கூடிய கார்டிசோல் ஹார்மோன் அளவு குறையும். அழற்சிக்கு எதிரான தன்மையை கொண்டுள்ளது.

3. நுண்ணுயிர்களுக்கு எதிரான தன்மை கொண்ட துளசியை சாப்பிட்டால் சுவாசம் தொடர்புடைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

4. நம்முடைய செரிமானம் மேம்படும். வயிறு உப்புசம் அல்லது செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகள் தீரும்.
5. துளசி கொலஸ்ட்ரால் அளவுகளைக் குறைப்பதாகவும், இதய நலனை மேம்படுத்துவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சர்க்கரை நோயாளிகள், கர்ப்பிணிகள் துளசி சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் நிச்சயமாக துளசி சாப்பிடலாம். அது ரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த உதவும். அதேபோல, விட்டமின்கள் நிறைந்த துளசியை கர்ப்பிணி பெண்களும் எடுத்துக் கொள்ளலாம். எனினும் மிதமான அளவில் எடுத்துக் கொள்வது நல்லது.

News18

கட்டுக்கதைகள்…

அனைத்து வியாதிகளுக்குமான ஒரே தீர்வு துளசி எனக் குறிப்பிடுவது தவறு.

 துளசி சாப்பிட்டால் மருத்துவ சிகிச்சை தேவையில்லை எனக் கூறுவதும் பொய்யான தகவல் ஆகும். அடிப்படையான ஆரோக்கிய பலன்களை துளசி தரக் கூடியதாகும். எனினும் மிகுதியாக சாப்பிட்டால் அலர்ஜி, வயிறு சார்ந்த இதர பிரச்சனைகள் போன்றவை உருவாகலாம்.தினசரி துளசி சாப்பிடுவதாக இருந்தால் அது உங்கள் உடலில் ஏற்படுத்தக் கூடிய மாற்றங்களை கண்காணிக்க வேண்டும் மற்றும் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது.

🔻 🔻 🔻 

பெண்கள் சர்க்கரை சாப்பிடுவதை நிறுத்தினால் இத்தனை நன்மைகள் கிடைக்குதா..? அவசியம் டிரை பண்ணுங்க..!

 நீரிழிவு அல்லது சர்க்கரை நோய் குறித்து மக்களுக்கு நாளுக்கு, நாள் விழிப்புணர்வு அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், டீ, காஃபி போன்றவற்றில் நாம் சேர்த்துக் கொள்ளும் சீனி எனப்படும் வெள்ளை நிற கிறிஸ்டல் சர்க்கரையை பார்த்தாலே மக்களுக்கு அலர்ஜி ஏற்பட்டு விடுகிறது.

ஆனால், இந்த சீனி என்பது மட்டுமே சர்க்கரை அல்ல. நாம் சாப்பிடும் ஒவ்வொரு உணவுப் பொருளிலும் மாவுச்சத்து என்னும் வகையிலான சர்க்கரை சத்து இருக்கத்தான் செய்கிறது. பழங்கள், காய்கறிகள், பால் பொருட்கள் என எதுவானாலும் அதில் சர்க்கரை சத்து உண்டு.

அதிக சர்க்கரையால் ஏற்படும் பாதிப்புகள்

அளவுக்கு அதிகமான சர்க்கரை சத்து நம் உடலில் ஏற்படும்போது அதனால் ஹர்மோன் சமநிலை பாதிப்பு அடையக் கூடும். குறிப்பாக இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஏற்படும் மற்றும் அழற்சி உண்டாகும். பெண்களைப் பொருத்தவரையில் மாதவிலக்கு காலத்தில் வயிற்றுப்பிடிப்பு, உப்புசம் மற்றும் எண்ண தடுமாற்றம் போன்ற பிரச்சனைகள் உண்டாகலாம்.

ஆனால், சர்க்கரையை மட்டும் குறைத்துக் கொண்டால் இதற்கெல்லாம் தீர்வு கிடைத்துவிடும் என்று சொல்லிவிட முடியாது. சீரான ஊட்டச்சத்து கொண்ட உணவுதான் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

ஊட்டச்சத்து உணவுகள்

முழு தானியங்கள், மெல்லிய புரதம், வெவ்வேறு வகையான பழங்கள், பருப்புகள் போன்றவற்றை எடுத்துக் கொள்வதன் மூலமாக உடலுக்கு தேவையான அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் மினரல்கள் கிடைக்கும். மேலும் ஹார்மோன் சமநிலை தவறுகின்ற பிரச்சனையை தவிர்க்கலாம்.

சர்க்கரையால் அழற்சி ஏற்படும்

சர்க்கரையால் ஏற்படும் விளைவுகள் குறித்து, ஊட்டச்சத்து நிபுணர் பிரேர்னா திரிவேதி கூறுகையில், “சர்க்கரையால் ஏற்படும் ஹார்மோன் பிரச்சனைகளில் பிரதானமானது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை ஆகும். இன்சுலின் உற்பத்தி குறைவதால் நம் உடலில் சர்க்கரை தன்மை அதிகரிக்க கூடும். இதனால் கூடுதல் இன்சுலினை பெருக்க உடல் முற்படும். அதனால் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தி ஆகும்.

இந்த ஆண்ட்ரோஜன் ஆண்களுக்கான ஹார்மோன் ஆகும். இதனால் மாதவிலக்கு தடைபடும் அல்லது சீரற்ற வகையில் மாதவிலக்கு ஏற்படும் மற்றும் பரு உண்டாகும். அதேபோல சர்க்கரையால் ஏற்படுகின்ற அழற்சி காரணமாக மாதவிலக்கு கால வயிற்றுப்பிடிப்பு கடுமையாக இருக்கும்’’ என்று தெரிவித்தார்.

சர்க்கரையை குறைப்பது எப்படி?

மாதவிலக்கு காலத்தில் இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை பெண்களிடம் அதிகரிக்கும். ஆனால், அதற்கு இடமளிக்கும் பட்சத்தில் வலி மற்றும் இதர தொந்தரவுகள் அதிகரிக்கும். அதே சமயம், சர்க்கரை எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்ளலாம்.

* செயற்கையான சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவுகள் மற்றும் பானங்கள் எப்போதுமே ஆபத்தானவை தான். அதற்குப் பதிலாக முழு தானிய உணவுகள், நிறையூட்டப்படாத இயற்கையான உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்.

* வெல்லம், பேரீட்சை, நாட்டு சர்க்கரை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இனிப்புகளை சாப்பிட வேண்டும் என்ற வேட்கை அதிகரிக்கிற போது, மனதின் கவனத்தை திசை திருப்பும் வகையில் நடைபயிற்சி, அரட்டை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.



🔻 🔻 🔻 

இந்திய விமானப்படையில் சேர விருப்பமா..! இது தான் சரியான நேரம்..! தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தகவல்..!

 தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் இந்த விமான படையில் சேர விண்ணப்பிக்கலாம் ஆட்சியர் தீபக் ஜேக்கப் தகவல்.

இது குறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது, இந்திய விமானப்படை சார்பில், அக்னிபாத் திட்டத்தின் அக்னி வீர் வாயு ஆட்சேர்ப்பு தேர்விற்காக திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடமிருந்து 17.01.2024 முதல் 06.02.2024 வரை இணையவழியாக விண்ணப்பிப்பதற் கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியடைய விண்ணப்பதாரர்கள் agnipathvayu.cdac.in வாயிலாக விண்ணப்பிக்கலாம். அக்னிவீரர்களுக்கான இணைய வழித்தேர்வு மார்ச் மாதம் 17-ந்தேதி நடைபெறுகிறது.

2-1-2004 அல்லது அதற்குப் பிறகு பிறந்தவர்கள் மற்றும் 2-7- 2007 அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாக இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் கல்வித் தகுதி 12-ம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன், ஆங்கிலத்தில் 50 சதவீதம் மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோ மோட்டிவ், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர் மேசன் டெக்னாலஜி) மூன் றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50 சதவீத மதிப் பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உடல் தகுதியை பொறுத்தவரை ஆண்கள் 152.5 சென்டிமீட்டர் உயரமும், பெண்கள் 152 சென்டிமீட்டர் உயரமும் இருக்க வேண்டும். தேர்வானது எழுத்துத் தேர்வு, உடல் தகுதி தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை ஆகிய 3 நிலைகளை உடையது. இந்திய விமானப்படையில், 4 ஆண்டுகள் பணியாற்றலாம். இப்பணியாளர்களில் 25 சதவீதம் பேர் மட்டுமே அக்னிபாத் திட் டத்தின் கீழ் 4 ஆண்டுகள் பணி முடிந்தபிறகு 15 ஆண்டு காலத்திற்கு தொடர்ந்து பணிபுரிய அனுமதிக்கப்படுவார்கள்.

மேலும் தொடர்புக்கு 04362-237037 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக்கொள்கிறேன் என இவ்வாறு  அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


🔻🔻🔻

சைக்கிள் ஓட்டத் தெரியுமா? ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்பு

 தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில், அரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாக உள்ள ஜீப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பிட வரவேற்கப்படுகின்றன.

அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மிதிவண்டி ஓட்டத் தெரிந்திருக்க வேண்டும். அதேபோன்று,  ஜீப்பு ஓட்டுநர் பதவிக்கு 8ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். வாகனங்களை ஓட்டியமைக்கான முன்னனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

ஜீப்பு ஓட்டுநர், அலுவலக விண்ணப்பங்கள் உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதிகள், காலிப்பணியிட விவரம், இனச்சுழற்சி ஒதுக்கீடு மற்றும் விண்ணப்பப் படிவம் ஆகியவை  www.dharmapuri.nic.in என்ற இணையதளத்தில் இடம்பெற்றுள்ளது.

விண்ணப்பங்களை மேற்படி இணையதளத்தில் 10.01.2024-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 10.01.2024-ஆம் தேதி முதல் 30.01.2024-ஆம் தேதி வரை அலுவலக வேலை நேரத்தில் ஆணையாளர், ஊராட்சி ஒன்றியம் அரூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

🔻🔻🔻

கபாலீசுவரர் கோவில் வேலை வாய்ப்பு; 8-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள, சென்னை மயிலாப்பூர் அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயிலில் நூலகர், அலுவலக உதவியாளர், ஓட்டுநர் மற்றும் உதவி மின் பணியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 4 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்து சமயத்தை சேர்ந்தவர்களிடம் 

இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இந்த பணியிடங்கள் 

நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 27.01.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

நூலகர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் நூலக அறிவியலில் பட்டயம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 15,900 – 50,400

ஓட்டுநர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் 

இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் : ரூ. 18,500 – 58,600

உதவி மின் பணியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : மின்/ மின் கம்பி பணியாளர் பிரிவில் ஐ.டி.ஐ படித்திருக்க 

வேண்டும்.

சம்பளம் : ரூ. 16,600 – 52,400

வயதுத் தகுதி : விண்ணப்பதாரர் 01.07.2023 அன்று 18 வயது முதல் 45 வயதிற்குள்

 இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு 

அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php 

என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினைப் 

பிரிண்ட் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர், விண்ணப்பத்தினை 

பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களுடன் இணைத்து கீழ்கண்ட 

முகவரிக்கு நேரிலோ அல்லது தபாலிலோ அனுப்ப வேண்டும்.

முகவரி: இணை ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு கபாலீசுவரர் 

திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை - 4

விண்ணப்பிக்க கடைசி தேதி : 27.01.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://mylaikapaleeswarar.hrce.tn.gov.in/hrcehome/ajax/hppdf_view.php 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்வையிடவும்.



🔻🔻🔻

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; 22 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிங்க!

 

கடலூர் மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 22 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Programme Manager

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BAMS/BUMS/BHMS/BSMS/BNYS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Data Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Computer Application/ITI/Business Administration/B.Tech., (CS) or (IT/BCA/BBA/BSC-IT  படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 15,000

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : M.Sc., Psychology/M.Phil Clinical Psychology/M.A or M.Sc., Psychology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Block Entry Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Mathematics with Statistics/Statistics and one year PG Diploma in Computer applications படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,500

Programme cum Administrative Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 12,000

Physiotherapist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Bachelor Degree in Physiotherapy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 4

கல்வித் தகுதி : Diploma in GNM/BSc (Nursing) படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 18,000

Cleaner

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Lab Technician

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma in Medical Laboratory Technology படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,000

Multi Purpose Health Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் Multi- purpose Health Worker (Male) / Health Inspector / Sanitary inspector Course training படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Auxilliary Nurse

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Diploma course in Auxilliary Nurse and Midwifery படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 14,000

Multi Purpose Hospital Worker

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 8,500

Radiographer

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : Diploma in X-Ray Technician or Diploma in Radiography Technician 

படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 13,300

Psychologist

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : Post Graduate in Psychology/MSW or graduate in Psychology படித்திருக்க 

வேண்டும்.

சம்பளம்: ரூ. 23,000

Dental Surgeon

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : BDS படித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 34,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 

https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012267.pdf 

என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை 

பிரிண்ட் எடுத்து பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட 

முகவரியில் சமர்பிக்க வேண்டும்.

முகவரி: உறுப்பினர் செயலர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், 

மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் 

அலுவலகம், 05, பீச் ரோடு, கடலூர் - 607001

விண்ணப்பிக்க கடைசி தேதி : 08.02.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற 

https://cdn.s3waas.gov.in/s3a96b65a721e561e1e3de768ac819ffbb/uploads/2024/01/2024012267.pdf 

இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.

🔻🔻🔻