January 29, 2024

TRB: 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள்; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

 

 தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் (TRBஇடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தநிலையில், தகுதிகள் மற்றும் விண்ணப்பிப்பது எப்படி என்பதை இப்போது பார்ப்போம்.தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசுப் பள்ளிகளில் 1766 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான நியமனத் தேர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விண்ணப்பப் பதிவு எப்போது தொடங்கும் உள்ளிட்ட தகவல்கள் அடங்கிய அறிவிப்பை விரைவில் வெளியிடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இடைநிலை ஆசிரியர் தேர்வு ஏப்ரல் 2024 இல் நடைபெறும்.

தகுதிகள்

கல்வி தகுதி

விண்ணப்பதாரர்கள் நிலையான கல்வியியல் பயிற்சியில் 2 ஆண்டு பட்டம் அல்லது தொடக்கக் கல்வியில் 4 ஆண்டு இளங்கலை டிப்ளமோ பெற்றிருக்க வேண்டும்.

வயது தகுதி

குறைந்தபட்ச வயது 18 ஆண்டுகள்அதிகபட்ச வயது வரம்பு 57 ஆண்டுகளாகும்.

விண்ணப்பிப்பது எப்படி?

விண்ணப்ப தேதிகள் அறிவிப்பு PDF உடன் வெளியிடப்படும். விண்ணப்பங்கள் பிப்ரவரி 2024 இல் தொடங்கும். இணையதளத்தில் விண்ணப்பங்கள் வெளிவந்த பிறகு விண்ணப்பிக்க நீங்கள் பின்பற்ற வேண்டியவை இங்கே.

அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் செல்லவும்https://trb.tn.gov.in/

TN TRB ஆட்சேர்ப்பு விருப்பத்தை பூர்த்தி செய்து அதை கிளிக் செய்யவும்.

விண்ணப்பப் படிவத்தை கிளிக் செய்துபதிவு என்பதைக் கிளிக் செய்யவும்.

பெயர்தொடர்பு எண்மின்னஞ்சல் .டி போன்ற விவரங்களை நிரப்புவதன் மூலம் பதிவு செய்யவும்.

உங்கள் பதிவு .டி மற்றும் கடவுச்சொல்லுடன் உள்நுழைந்துகல்விச் சான்றிதழ்கள்சாதிச் சான்றிதழ் போன்ற தேவையான ஆவணங்களை இணைக்கவும்.

தேவையான கட்டணத்தைச் செலுத்திசமர்ப்பி பொத்தானைக் கிளிக் செய்யவும்.

விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பிரிண்ட் எடுத்துக் கொள்ளவும்.

விண்ணப்பக் கட்டணம்

பொதுப் பிரிவினர் ரூபாய் 600 செலுத்த வேண்டும். எஸ்.சிஎஸ்.டி மற்றும் மாற்றுத்திறனாளிகள் விண்ணப்பதாரர்கள் ரூ.300 செலுத்த வேண்டும். இதை டெபிட் கார்டுகிரெடிட் கார்டுநெட் பேங்கிங் அல்லது UPI மூலம் செலுத்தலாம்.

🔻🔻🔻


January 27, 2024

NLC ஆணையத்தில் Voucher First Aid Training அறிவிப்பு வெளியீடு – முழு விவரங்களுடன் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 

NLC India ஆனது Voucher First Aid Training குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

Voucher First Aid Training:

NLC India ஆனது புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது அதன் அதிகாரபூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Voucher First Aid Training நடத்தப்படுவது குறித்து அறிவிப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளது. 11 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சிக்கு மொத்தம் 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இப்பயிற்சிக்கு ரூ.8850/- Course Fee ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இப்பயிற்சிக்கான கட்டணத்தை ஆன்லைன் மூலம் 06.02.2024ம் தேதி முதல் 07.02.2024ம் தேதிக்குள் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 04.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻

தமிழக அரசில் Consultant வேலைவாய்ப்பு 2024 – தேர்வு கிடையாது || சம்பளம்: ரூ.2,00,000/-

 

Tamil Nadu Fibrenet Corporation Limited ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் General Manager, Deputy Manager, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

General Manager, Deputy Manager, Consultant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 14 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech / M.Sc / Diploma / MBA என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதின் 25 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.2,00,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மட்டுமே Skill Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

🔻🔻🔻

SBI Card நிறுவனத்தில் வேலை வேண்டுமா? அப்போ உடனே விண்ணப்பியுங்கள்!

 Assistant Manager பணிக்கு என SBI Card நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 22.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

SBI Card காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Assistant Manager பணிக்கென பல்வேறு பணியிடங்கள் SBI Card நிறுவனத்தில் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Assistant Manager கல்வி தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Graduate Degree முடித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Assistant Manager முன்னனுபவம்:  

Assistant Manager பணிக்கு 02 வருடங்கள் முதல் 06 வருடங்கள் வரை பணிக்கு தொடர்புடைய துறைகளில் அனுபவம் உள்ளவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

SBI Card தேர்வு முறை:

இந்த SBI Card நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SBI Card விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் 22.03.2024 அன்றுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

Ford India நிறுவனத்தில் அருமையான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 Ford India நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் NA VOR Analyst பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு Degree தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ford India காலியிடங்கள்:

NA VOR Analyst பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Ford India நிறுவனத்தில் காலியாக உள்ளது.

NA VOR Analyst கல்வி:

இந்த Ford India நிறுவன பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.

NA VOR Analyst அனுபவ காலம்:  

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 03 ஆண்டுகள் முதல் 05 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

NA VOR Analyst மாத ஊதியம்:

NA VOR Analyst பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் விண்ணப்பதாரர்கள் Ford India நிறுவன விதிமுறைப்படி மாத ஊதியமாக பெறுவார்கள்.

Ford India தேர்வு செய்யும் விதம்:

இந்த Ford India நிறுவன பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல், திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Ford India விண்ணப்பிக்கும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 29.01.2023 அன்றுக்குள் பதிவு செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.


🔻🔻🔻

Wipro நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள் || சூப்பர் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதிங்க!

 Wipro நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Domain Consultant பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Domain Consultant பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Domain Consultant கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Domain Consultant ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Engineering முடித்து விட்டு வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான TCS நிறுவன வேலைவாய்ப்பு!

 Tata Consultancy Services (TCS) நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் IT Asset Management பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு Engineering தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


TCS பணியிடங்கள்:

TCS நிறுவனத்தில் IT Asset Management பணிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

IT Asset Management கல்வி விவரம்:

IT Asset Management பணிக்கு பணி சார்ந்த Engineering பாடப்பிரிவில் Bachelor’s Degree-யை (BE) அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி வாரியங்களில் படித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

IT Asset Management அனுபவ விவரம்:

விண்ணப்பதாரர்கள் 06 வருடங்கள் முதல் 08 வருடங்கள் வரை பணிக்கு சம்மந்தப்பட்ட துறைகளில் அனுபவம் உள்ளவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

IT Asset Management பணியமர்த்தப்படும் இடம்:

இந்த TCS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.

TCS தேர்வு செய்யும் முறை:

IT Asset Management பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Interview, Written Test, Technical Test மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

TCS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 31.03.2024 என்ற கடைசி நாளுக்குள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.


🔻🔻🔻

சென்னை DRDO – CVRDE நிறுவனத்தில் 60 காலியிடங்கள் – ITI தேர்ச்சி பெற்றவர்களுக்கான சூப்பர் வாய்ப்பு!

 DRDO – CVRDE நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் IT Apprentices பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென, மொத்தமாக 60 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

DRDO – CVRDE காலியிடங்கள்:

DRDO – CVRDE நிறுவனத்தில் IT Apprentices பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 60 பணியிடங்கள் பின்வருமாறு பிரிக்கப்பட்டுள்ளது.

Carpenter – 02 பணியிடங்கள்

Computer Operator & Programming Assistant – 08 பணியிடங்கள்

Draughtsman – 04 பணியிடங்கள்

Electrician – 06 பணியிடங்கள்

Electronics – 04 பணியிடங்கள்

Fitter – 15 பணியிடங்கள்

Machinist – 10 பணியிடங்கள்

Mechanic – 03 பணியிடங்கள்

Turner – 05 பணியிடங்கள்

Welder – 03 பணியிடங்கள்

IT Apprentices கல்வி:

IT Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் ITI தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

IT Apprentices வயது:

01.12.2023 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 27 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள், PWBD – 10 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.

IT Apprentices ஊக்கத்தொகை:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.7,700/- முதல் ரூ.8,050/- வரை மாத ஊக்கத்தொகையாக பெறுவார்கள்.

DRDO – CVRDE தேர்வு செய்யும் விதம்:

IT Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview / Screening Test மற்றும் Document Verification மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DRDO – CVRDE விண்ணப்பிக்கும் விதம்:

இந்த DRDO – CVRDE நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் https://rac.gov.in என்ற இணைப்பில் இப்பணிக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 21 நாட்களுக்குள் Online-ல் சமர்ப்பிக்க வேண்டும்.

🔻🔻🔻

January 24, 2024

சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்று புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் உள்ள வித்தியாசம் என்ன?

 உலகில் அதிகமானோரை தாக்கும் புற்றுநோய்களில் ஐந்தாம் இடத்தில் வயிற்றுப் புற்றுநோய் உள்ளது. அதுமட்டுமின்றி புற்றுநோய் இறப்புகளில் மூன்றாம் இடத்தில் வயிற்றுப் புற்றுநோய் உள்ளது. பொதுவாக வயிற்றுப் புற்றுநோய், வயிற்றின் மென்படலத்தில் உருவாகத் தொடங்கும்.

இந்த புற்றுநோய் குறித்து மக்களிடம் முறையான விழிப்புணர்வு இருந்தால், இந்நோயை ஆரம்பகட்டத்திலேயே குணப்படுத்திவிடலாம். வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை, வயிற்று வலி போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். அதெல்லாம் சரி, நமக்கு வந்திருப்பது வெறும் வயிற்று வலியா அல்லது புற்றுநோயா என்பதை எப்படி தெரிந்து கொள்வது?

வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் : 

ஊறுகாய், பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, உடல் பருமன், புகைபிடிக்கும் பழக்கம், குடிப்பழக்கம், குடும்பத்தில் வேறு யாருக்காவது இதற்கு முன் வயிற்றுப் புற்றுநோய் வந்திருப்பது போன்றவை இந்த கேன்சருக்கான ஆபத்து காரணிகளாகும். சில சமயங்களில் ஹெலிகோபேக்டர் பைலோரி பாக்டீரியா புற்றுநோய் அல்லாத அல்சர் நோயை உருவாக்கக் கூடும். நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம், அடிவயிற்றில் வலி, குமட்டல், பசியின்மை போன்றவை வயிற்றுப் புற்றுநோயின் ஆரம்ப அறிகுறிகளாகும். செரிமானமின்மைக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது.

வயிற்றுப் புற்றுநோய்க்கு இதுதான் அறிகுறி என குறிப்பிட்டு எதையும் கூற முடியாது. ஆகையால் மேற்கூறிய அறிகுறிகள் யாருக்காவது இருந்தால், அவர்கள் மருத்துவமனை சென்று எண்டோஸ்கோபி உதவியுடன் தனக்கு புற்றுநோய் இருக்கிறதா என்பதை கண்டறிந்துவிடலாம். வயிற்றுப் புற்றுநோய் முற்றிய பின் உடல் எடையிழப்பு, மஞ்சள் காமாலை, ரத்த வாந்தி, மூச்சுவிடுவதில் சிரமம், கருப்பு நிறத்தில் மலம் வெளியேறுவது போன்ற அறிகுறிகள் ஏற்படும். இதை வைத்து நமக்கு வந்திருப்பது வயிற்றுப் புற்றுநோய் என்பதை ஓரளவு கணிக்க முடியும். எனினும் ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக் கொண்டால் மட்டுமே இதை எளிதாக குணபடுத்த முடியும் என்பதையும் நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

சாதாரண வயிற்று வலிக்கும் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகளுக்கும் எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது?

சாதாரணமாக நமக்கு ஏற்படும் வயிற்று வலி அஜீரணக் கோளாறு காரணமாக வரக்கூடும். இவை சீக்கிரமாகவே சரியாகிவிடும். ஆனால் வயிற்றுப் புற்றுநோயின் அறிகுறிகள் கடுமையான வலியை ஏற்படுத்துவதோடு சீக்கிரம் குணமாகாது. மேலும் காரணமில்லாத எடையிழப்பு, தொடர்ச்சியான குமட்டல் மற்றும் ரத்தத்துடன் வாந்தி மற்றும் கருப்பு நிறத்தில் மலம் வெளியேறும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாகவும் அதே சமயத்தில் கடுமையாகவும் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை செய்துகொள்வது நல்லது. எனினும், இந்த அறிகுறிகள் இருந்தால் அது புற்றுநோய் தான் என்ற முடிவிற்கு வந்துவிடக்கூடாது. முறையான பரிசோதனை மூலம் மட்டுமே இதனை கண்டறிய முடியும்.

வயிற்றுப் புற்றுநோய் வராமல் தடுக்கும் வழிமுறைகள் :

உங்கள் டயட்டில் பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் போன்றவற்றை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுங்கள். சீரான உடற்பயிற்சி செய்து உங்கள் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தளவு தவிர்க்கப் பாருங்கள். உங்கள் குடும்பத்தில் இதற்கு முன் யாருக்காவது வயிற்றுப் புற்றுநோய் வந்திருந்தால், இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன செய்ய வேண்டும் என மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள்.

வயிற்றுப் புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால் கீமோதெரபி, ரேடியோதெரபி, அறுவை சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படுகிறது. வயிற்றுக்குள் மட்டும் புற்றுநோய் இருந்தால் அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். அதுவே மற்ற உறுப்புகளுக்கும் பரவி விட்டால் கீமோதெரபி அல்லது ரேடியோதெரபி சிகிச்சை பரிந்துரைக்கப்படும். சில சமயங்களில் நோயின் தீவிரத்தை குறைப்பதற்காக அறுவை சிகிச்சைக்கு முன்பு கீமோதெரபி செய்யப்படுவதும் உண்டு.

🔻 🔻 🔻 

சிறுநீரக கல் முதல் யூரிக் அமில பிரச்னை வரை... வாழைப்பூவின் மருத்துவ பலன்கள் இதோ!

 பூ ஒன்றை வாரம் ஒருமுறையாவது சமைத்து சாப்பிடலாம் என்று சொன்னால், சட்டென்று பூவை எப்படி சமைப்பது என்ற கேள்வி நம் மனதில் எழக் கூடும். ஆனால், அது வாழைப்பூ என்று உங்களுக்கு நினைவூட்டினால் போதும், அதில் எத்தனை ரகமான உணவுகளை செய்ய முடியும் என்று பெரிய பட்டியலே போட்டு விடுவீர்கள்.

அதிலும் வாழைப்பூ வடை என்றால் தமிழர்களுக்கு கொள்ளை பிரியம். அதனை முருங்கை கீரையுடன் சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடுபவர்களும் உண்டு. தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழைப்பூ சிறந்த உணவாக இருக்கிறது.

மேற்கு வங்கம், பீகார் போன்ற மாநிலங்களில் வாழைப்பூவில் பக்கோடா செய்து சாப்பிடுகின்றனர். இன்னும் பல மாநிலங்களில் வாழைப்பூ சூப் அருந்தும் வழக்கம் இருக்கிறது.

News18

எண்ணற்ற பலன்கள் : 

பொதுவாக பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை வாழைப்பூவில் நிறைவாக கிடைக்கின்றன. இவை அனைத்துமே நம் உடல் நலனுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பவை. அதுபோக வாழைப்பூவை சாப்பிடுவதால் சிறுநீரகக் கல் பிரச்னை மற்றும் யூரிக் அமில பிரச்னையை தீர்க்க உதவும் என்று குறிப்பிடுகின்றனர். பிற பலன்களை விரிவாகப் பார்க்கலாம்.

கரையத்தக்க நார்ச்சத்து மற்றும் கரையா நார்ச்சத்து ஆகிய இரண்டு வகை நார்ச்சத்துக்கள் இதில் உண்டு. இவை நம் மெடபாலிச நடவடிக்கையை ஊக்குவிப்பவை. அதேபோல செரிமான சக்தியை மேம்படுத்தும். தேவையற்ற கழிவுகளை மலம் வழியாக வெளியேற்றும்.

News18

பொட்டாசியம், கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் இ போன்ற சத்துக்கள் இருப்பதால் மூட்டு வலி குறையும் மற்றும் எலும்புகளின் அடர்த்தி மேம்படும்.

எலும்புகளுக்கு மத்தியில் சிதைவு ஏற்பட்டால் அதில் யூரிக் அமிலம் தங்கும். அழற்சிக்கு எதிரான பண்புகள் கொண்ட வாழைப்பூ சாப்பிட்டால் இதில் இருந்து தீர்வு கிடைக்கும் மற்றும் வலி இருக்காது.

வாழைப்பூ பொரியல் செய்யும் முறை: 

வாழைப்பூவில் உள்ள வெள்ளை நிற வெளிப்புறத் தோல் மற்றும் நரம்புகளை நீக்கி, சிறு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அதை தண்ணீரில் வேக வைத்து வடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

மற்றொரு கடாயில் 50 மில்லி அளவுக்கு எண்ணெய் ஊற்றி, அது காய்ந்ததும் கடுகு, உளுந்தம்பருப்பு சேர்த்து பொறிக்கவும்.

News18

பிறகு வர மிளகாய் 5, 6 துண்டுகளை எண்ணெயில் வதக்கவும். அதனுடன் கறிவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம். விரும்பினால் சிறிதளவு சீரகம் சேர்த்துக் கொள்ளலாம்.

பிறகு நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும். ஏற்கனவே வேக வைத்த வாழைப்பூ சேர்த்து வதக்கவும்.

மஞ்சள் தூள், உப்பு ஆகியவை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்கவும். தண்ணீர் வற்றிய பிறகு கீழே இறக்கி பரிமாறலாம்.

🔻 🔻 🔻 

8 வாரத்துக்கு தொடர்ந்து சீரக தண்ணீரை இப்படி குடிங்க.. எவ்வளவு கொலஸ்ட்ரால் இருந்தாலும் குறைஞ்சிடும்..!

 அதிகப்படியான கொலஸ்ட்ரால் உட்பட பல்வேறு விதமான உடல்நலக் கோளாறுகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு சீரக தண்ணீர் பாரம்பரியமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரவு முழுவதும் சீரகத்தை தண்ணீரில் ஊற வைப்பதன் மூலம் பெறப்படும் தண்ணீர் சீரக தண்ணீர் என்று அழைக்கப்படுகிறது. மறுநாள் காலை தண்ணீரை வடிகட்டி அதனை வெறும் வயிற்றில் குடிக்க பரிந்துரைக்கப்படுகிறது. ஆன்டி ஆக்சிடன்ட்கள் மற்றும் பிற கெமிக்கல்கள் நிறைந்த இந்த சீரக தண்ணீர் கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு பெயர் போனது.

சீரக விதைகளில் காணப்படும் ஃபிளவனாய்டுகள் மற்றும் LDL அல்லது கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு உதவுவதாக ஒரு சில ஆய்வுகள் கூறுகின்றன. கூடுதலாக சீரக விதைகளில் உள்ள நார்ச்சத்து கொலஸ்ட்ராலுடன் ஒட்டிக் கொள்வதன் மூலமாக கொலஸ்ட்ரால் ரத்த ஓட்டத்திற்குள் நுழைவதை தடுக்கிறது.

தொடர்ந்து 8 வாரங்களுக்கு வெறும் வயிற்றில் இந்த சீரக தண்ணீரை குடித்து வரும் நபர்களுக்கு டிரைகிளிசரைடு அளவுகள் மற்றும் LDL கொலஸ்ட்ரால் குறைவதாக ஒரு ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு ஆய்வில், சீரகத் தண்ணீர் அதிக கொலஸ்ட்ரால் கொண்ட நீரழிவு நோயாளிகளின் நிலைமையை மேம்படுத்தியதாக கூறுகிறது.

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு சீரகம் எந்த அளவுக்கு உதவும் என்பதை நிரூபிப்பதற்கு இன்னும் பல்வேறு விதமான ஆய்வுகள் தேவைப்படுகிறது என்றாலும் கூட இது அனைவரும் முயற்சி செய்து பார்க்கக்கூடிய ஒரு சிறந்த வீட்டு வைத்தியமாக அமைகிறது.

News18

கொலஸ்ட்ரால் அளவுகளை குறைப்பதற்கு சீரக நீரை தயாரிப்பது எப்படி?

- ஒரு டீஸ்பூன் அளவு சீரக விதைகளை எடுத்துக் கொள்ளுங்கள். வீட்டில் இருக்கக்கூடிய டம்ளர்களில் பெரிய டம்ளர் ஒன்றை எடுத்து, அதில் தண்ணீரை நிரப்பி சீரகத்தை சேர்க்கவும். இதனை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளலாம்.

- மறுநாள் காலை சீரக விதைகளை வடிகட்டி நீக்கிவிட்டு கிடைத்த தண்ணீரை வெறும் வயிற்றில் பருகவும்.

- இவ்வாறு சீரகத் தண்ணீரை நீங்கள் தொடர்ந்து பல நாட்களுக்கு குடித்து வரலாம். எனினும் உங்களது உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன்பு மருத்துவரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.

கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நீங்கள் ஏதேனும் இயற்கையான வழிகளை முயற்சித்து பார்க்கலாம் என்ற திட்டத்தில் இருந்தால் இந்த சீரக தண்ணீர் உங்களுக்கு ஒரு அற்புதமான வழியாக அமையும். இதனை தயார் செய்வது எளிது, அதோடு மிகக் குறைந்த விலையில் மற்றும் பாதுகாப்பான முறையில் இதனை நாம் பெறலாம்.

News18

இப்பொழுது உங்களது நாளை சீரகத் தண்ணீருடன் துவங்குவதால் கிடைக்கக்கூடிய சில பலன்கள் குறித்து பார்க்கலாம்:

செரிமானத்தை மேம்படுத்துகிறது - செரிமானத்திற்கு அவசியமான திரவங்கள் மற்றும் என்சைம்களின் உற்பத்தி சீரக தண்ணீர் குடிப்பதால் மேம்படுத்தப்படுகிறது. இதன் காரணமாக செரிமானம் சிறந்த முறையில் நடைபெறுகிறது. மேலும் மலச்சிக்கல், வாயு பிரச்சனை மற்றும் வயிற்று உப்புசம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் பெறலாம்.

உடல் எடையை குறைக்க உதவுகிறது - வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி, கொழுப்பு எரிப்பதை மேம்படுத்துவதால் சீரக தண்ணீர் உடல் எடை குறைவதற்கு வழி வகுக்கிறது.

ரத்த சர்க்கரை அளவுகளை பராமரிக்க உதவுகிறது - நீரிழிவுநோயாளிகள் சீரகத் தண்ணீரை தொடர்ந்து குடித்து வரும் பொழுது அவர்களது ரத்த சர்க்கரை அளவுகள் சீராவதை கவனிக்கலாம்.

ஆன்டி இன்ஃப்ளமேட்டரி பண்புகள் - சீரகத் தண்ணீரில் இருக்கக்கூடிய வீக்க எதிர்ப்பு பொருட்கள் உடல் முழுவதும் ஏற்படக்கூடிய வீக்கத்தை எதிர்த்து போராடுகின்றன. இது பல்வேறு விதமான நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.

எச்சரிக்கை: இந்த வீட்டு வைத்தியம் ஒரு பரிந்துரையாகவும் மற்றும் குறிப்பாக மட்டுமே ஒருவர் கருத வேண்டும். நீண்ட கால அறிகுறிகளை ஒருபோதும் அலட்சியமாக கருத வேண்டாம். உங்களது உணவில் எந்த ஒரு மாற்றத்தை செய்வதற்கு முன்பும் மருத்துவரின் ஆலோசனையை பெற்றிடுங்கள்.


🔻 🔻 🔻