Agri Info

Adding Green to your Life

February 1, 2024

நீங்க எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டுமா..? அப்போ இந்த 7 வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

February 01, 2024 0

 ஒரு மனிதர் உடல் அளவில் எந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருக்க விரும்புகிறாரோ அதே அளவிற்கு அவரது மன ஆரோக்கியமும் இன்றியமையாதது ஆகும். மனதளவிலும், உடலளவிலும் ஒருவர் ஆரோக்கியமாக இருக்கும் பொழுது அது அவர்களது வாழ்விலும் அவர்களது செயல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஒருவர் மகிழ்ச்சியாக இருக்க என்னென்ன வழிகளை பின்பற்ற வேண்டும் என்று இந்த பதிவில் பார்ப்போம்.

ஆன்மீகத்தை கைக்கொள்ளுங்கள்: ஆன்மீக வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு மனதளவில் மிகப் பெரும் நன்மைகள் ஏற்படும். முக்கியமாக வாழ்வில் கடினமான சூழல்கள் ஏற்பட்டாலும் அவற்றை ஏற்றுக் கொண்டு அவற்றிலிருந்து எவ்வாறு பக்குவமாக வெளிவருவது போன்றவை ஆன்மீக வாழ்வில் இருப்பவர்களுக்கு இயற்கையாகவே கைவந்த கலையாக இருக்கும். யோகாசனம், தியானம் ஆகியவற்றின் மூலம் நீங்கள் பெரும் மன அமைதியானது சவாலான சூழல்களில் சிறப்பாக செயல்பட உதவும்.

சமூகத் தொடர்புகள்: மனிதர்கள் தனியாக இருப்பதற்கு படைக்கப்படவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். சிலருக்கு தனியாக இருந்தால்தான் ஒரு புத்துணர்ச்சி ஏற்பட்டது போலவே இருக்கும் ஆனாலும் கூட எப்போதுமே தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளாமல் தனிமையில் இருந்து வெளிவந்து மற்றவர்களோடு தொடர்பு ஏற்படுத்திக் கொண்டு அவர்களோடு பழகுவது மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். அது குடும்பமும், நண்பர்களும் அல்லது வேறு யாராக இருந்தாலும் கூட உங்களது மனதில் உள்ள வெற்றியை அவர்களோடு பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சிக்கு வழிவகுக்கும்.

நன்றி உணர்வை வளர்த்துக் கொள்ளுங்கள்: உங்கள் வாழ்வில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். உங்களுக்கு ஏற்பட்ட நன்மைகள் ஏற்பட போகின்ற நன்மைகள் தற்போது உங்களுக்கு வசதி ஆகியவற்றிற்கு மனதார கடவுளுக்கு நன்றி சொல்லுங்கள். இது வாழ்வின் மீது ஒரு பிடிமானத்தை ஏற்படுத்துவதோடு நேர்மறை எண்ணத்தை வளர்க்கும்.


சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்ளுங்கள்: இன்று நவீன யுகத்தில் அதிலும் இணையம் வளர்ந்து விட்ட இந்த காலகட்டத்தில் சமூக வலைத்தளங்களில் இருந்து முற்றிலுமாக வெளிவருவது என்பது முடியாத காரியம் ஆகும். ஆனாலும் கூட நீண்ட நேரம் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதை குறைத்துக் கொள்வதன் மூலம் நமது மனதை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும்.

நிகழ்காலத்தில் வாழ பழக வேண்டும்: மனிதர்களின் பெரும்பாலானோர் கடந்த கால நிகழ்வுகளையும் எதிர்காலத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதையும் மனதில் வைத்து பயந்து கொண்டே நிகழ்காலத்தை அனுபவிக்க தவறி விடுகின்றனர். நாம் எப்போதுமே நிகழ்காலத்தில் முழுமையாக வாழ பழகிக் கொள்ள வேண்டும். தற்போது நடக்கும் விஷயங்களில் கவனம் செலுத்தி அவற்றை முழுமையாக அனுபவித்து ஏற்றுக் கொள்வது மனதை பக்குவப்படுத்தும்.

போதைப் பொருட்கள் பயன்படுத்துவது தவிர்க்க வேண்டும்: வாழ்வில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பும் ஒருவர் போதை பொருட்கள் பயன்படுத்துவதை அறவே தவிர்க்க வேண்டும். உடலளவிலும் மனதளவிலும் பிரச்சனைகளை ஏற்படுத்துவதை தாண்டி போதைப்பொருட்களை பயன்படுத்துவது என்பது நீண்ட கால அடிப்படையில் சரி செய்யவே முடியாத சேதத்தை உண்டாக்கி விடும். குறிப்பாக இளம் வயதினர் தற்போது போதை பொருட்களை அதிகம் பயன்படுத்துகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


சரியான வாழ்க்கை முறையை பின்பற்ற வேண்டும்: ஒரு மனிதர் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் எனில் முடிந்த அளவு தன்னுடைய வாழ்க்கை முறையை ஆரோக்கியமாக மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதும் ஒரு நாளைக்கு குறைந்தது எட்டு மணி நேரம் தூங்குவதும் தினசரி உடற்பயிற்சி செய்வதும் இன்றி அமையாத ஒன்றாகும். இவற்றை தொடர்ந்து செய்து வருவதின் மூலம் மன அழுத்தத்தில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமாக வாழ முடியும்.

குழந்தைகளுக்கு தைராய்டு பிரச்சனை.. கண்டறிவது எப்படி..?

February 01, 2024 0

 கழுத்தில் சிறியதாக இருக்கும் ஆனால் மிக முக்கிய சுரப்பியான தைராய்டு சுரப்பி பாதிக்கப்படும் போது குழந்தைகளுக்கு தைராய்டு கோளாறுகள் ஏற்படுகின்றன. வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும் இந்த தைராய்டு சுரப்பி குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு காரணமான ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.

தைராய்டு கோளாறுகள் பெரியவர்களை விட குழந்தைகளை குறைந்த அளவே பாதித்தாலும், ஆரம்பத்திலேயே இதன் அறிகுறிகளை கண்டறிவது அவசியமாகும். தைராய்டு கோளாறுகளில் ஹைபோ தைராய்டிஸம் மற்றும் ஹைபர் தைராய்டிஸம் என இரண்டு வகைகள் உள்ளது. பிறப்பிலேயே வரும் ஹைபோ தைராய்டிஸத்தை முறையாக குணப்படுத்தாவிட்டால் மனநல குறைபாடு ஏற்படுவதற்கு காரணமாக அமையக்கூடும்.

குழந்தை பிறந்தவுடன் தேவையான பரிசோதனை செய்வதன் மூலம் ஆரம்பத்திலேயே இதற்கான சிகிச்சை எடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். குழந்தைகளிடத்தில் ஹைபர் தைராய்டிஸம் பாதிப்பு அரிதாக இருந்தாலும், உடல் எடை இழப்பு, எரிச்சல், வேகமான வளர்ச்சி போன்றவை இதன் அறிகுறிகளாகும்.

News18

தைராய்டு கோளாறுகள் கவலைக்குரிய விஷயம் என்றாலும் முறையான சிகிச்சை எடுப்பதன் மூலம் இதை எளிதாக குணப்படுத்த முடியும். அடிக்கடி பரிசோதனை மற்றும் குழந்தை நல மருத்துவரின் அறிவுரையை ஒழுங்காக பின்பற்றுவது மட்டுமே இப்போதைய தேவை.

தைராய்டு செயல்பாடுகளை கவனமாக கண்காணிப்பது, மருந்து மாத்திரைகள் மூலம் சரி செய்வது, முக்கியமான சிக்கல்களுக்கு முன்னுரிமை கொடுப்பது போன்றவை பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படும் சிகிச்சையாகும். குழந்தைகளின் வளர்ச்சி, அறிவாற்றல், ஒட்டுமொத்த ஆரோக்கியம் போன்றவற்றை கவனமாக கண்காணிக்க வேண்டும்.

News18

ஊட்டச்சத்துமிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது மிகவும் முக்கியம். தைராய்டு செயல்பாடு சரியாக இருப்பதை உறுதி செய்ய உணவில் அயோடின் அளவு எவ்வுளவு சேர்க்கிறோம் என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

இதன் அறிகுறிகள் மற்றும் இதற்கான சிகிச்சை திட்டங்கள் குறித்து பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். குழந்தைகளின் நிலை குறித்து புரிந்துகொள்ள, அவர்களிடம் வயதுகேற்ற உரையாடல்களை அவ்வப்போது பெற்றோர்கள் நிகழ்த்த வேண்டும்.

குழந்தைகளிடத்தில் தைராய்டு பிரச்னைகள் இருப்பதை எப்படி கண்டறிவது?

நடத்தையில் மாற்றம்: குழந்தைகளின் மனநிலை திடீரென மாறுகிறதா, எரிச்சல் அடைகிறார்களா அல்லது பதட்டம் அடைகிறார்களா என்பதை கவனியுங்கள்.

உடல் எடையில் மாற்றம்: எந்தவித காரணமும் இன்றி குறிப்பிடத்தகுந்த அளவு உடலின் எடை அதிகரித்தாலோ அல்லது குறைந்தாலோ, தைராய்டு பிரச்னையின் அறிகுறியாகும்.

சோர்வு: ஒழுங்காக தூங்கினாலும் காரணமேயில்லாமல் சோர்வாக, களைப்பாக உணர்வது.

மலம் கழிப்பதில் மாற்றம்: மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்றவை தைராய்டு சுரப்பி ஒழுங்காக செயல்படவில்லை என்பதற்கான அறிகுறியாகும்.

வெப்பநிலை அலர்ஜி: குழந்தைகளை பாதிக்காத வகையில் குளிரான அல்லது சூடான வெப்பநிலை இருந்தாலும் கூட, அவர்களால் அதை சமாளிக்க முடியவில்லை என்றால் தைராய்டு பிரச்னையின் அறிகுறியாகும்.

சருமம் மற்றும் தலைமுடியில் மாற்றம்: வறண்ட சருமம், முடி உதிர்வு அல்லது முடியின் அடர்த்தியில் மாற்றம் போன்றைவை தைராய்டு பிரச்னைகளோடு தொடர்புடையவை.

வளர்ச்சியில் தாமதம்: குழந்தைகள் வளர்வதில், பருவம் அடைவதில் அல்லது வேறு ஏதாவது வளர்ச்சி மைல்கல்லில் மாற்றம் இருக்கிறதா என்பதை கண்காணியுங்கள்.

தைராய்டு கோளாறுகளுக்கான பரிசோதனை:

இந்த அறிகுறிகள் குழந்தைகளிடத்தில் தொடர்ச்சியாகவோ அல்லது கவலைக்குரியதாகவோ காணப்பட்டால் உடனடியாக பெற்றோர்கள் மருத்துவர்களிடம் ஆலோசனை கேட்க வேண்டும். தைராய்டு செயல்பாடு டெஸ்ட், ரத்த பரிசோதனை, தைராய்டு ஹார்மோன் (T3, T4) மற்றும் தைராய்டை தூண்டும் ஹார்மோனின் அளவை கணக்கிடுதல் போன்ற பரிசோதனைகளை குழந்தை நல மருத்துவர் பரிந்துரைப்பார். சில சமயங்களில் தைராய்டு சுரப்பியின் ஸ்ட்ரக்ட்சரை மதிப்பிட அல்ட்ரா சவுண்ட் சிகிச்சை பரிந்துரைக்கப்படும்.

🔻🔻🔻

NLC Jobs; என்.எல்.சி. வேலை வாய்ப்பு; டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் தகுதிக்கு 632 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

February 01, 2024 0

  

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் டிப்ளமோடிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 632 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 31 கடைசி தேதியாகும்.

Graduate Apprentices

காலியிடங்களின் எண்ணிக்கை: 314

Mechanical Engineering - 75

Electrical Engineering - 78

Civil Engineering – 27

Instrumentation Engineering - 15

Chemical Engineering - 9

Mining Engineering – 44

Computer Science and Engineering - 47

Electronics & Communication Engineering – 5

Pharmacist - 14

கல்வித் தகுதி2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பார்மசி பணியிடங்களுக்கு பி.பார்ம் படித்திருக்க வேண்டும்

உதவித் தொகை; ரூ. 15,028

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 318

Mechanical Engineering - 95

Electrical Engineering - 94

Civil Engineering - 49

Instrumentation Engineering - 9

Mining Engineering - 25

Computer Science and Engineering - 38

Electronics & Communication Engineering - 8

கல்வித் தகுதி: 2019/ 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 12,524

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 31.01.2024 க்குள் www.nlcindia.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து PRINT எடுத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பப் படிவத்தினை 06.02.2024 க்குள் கீழ்கண்ட முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும்.

முகவரிThe General Manager, Learning and Development Centre, N.L.C India Limited. Neyveli – 607 803.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/NETADVERT%20-GAT%20&TAT-2023-24.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.




🔻🔻🔻

ரயில்வே வேலை வாய்ப்பு; 2860 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, ஐ.டி.ஐ தகுதி; உடனே விண்ணப்பிங்க!

February 01, 2024 0

ரயில்வேயில் வேலை பார்க்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு அருமையான வாய்ப்பு தெற்கு ரயில்வேயில் .டி. மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 2860 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. விருப்பமுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட பணிமனைகளில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.02.2024

காலியிடங்களின் விவரம்

Fitter, Turner, Welder, Welder (G&E), Machinist, Electrician, Painter, Electronic Mechanic, Carpenter, Wireman, Plumber, Diesel Mechanic, COPA உள்ளிட்ட பல்வேறு பயிற்சி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மண்டலம் மற்றும் பிரிவு வாரியான காலியிடங்களைத் தெரிந்துக் கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் .டி. முடித்திருக்க வேண்டும்அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். சில பணியிடங்களுக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும்.

ஊக்கத்தொகை : ரூ. 6000 - 7000

வயது தகுதி: 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறைஇந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://iroams.com/RRCSRApprentice24/recruitmentIndex என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 28.02.2024

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100. ஆனால் SC / ST / PwBD / பெண்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

மேலும்விவரங்களுக்கு

https://iroams.com/RRCSRApprentice24/notifications/CW_PONMALAI_ACTAPP_Notification_2024.pdf இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻