Agri Info

Adding Green to your Life

February 3, 2024

Army Public School வேலைவாய்ப்பு 2024 – உடனே விண்ணப்பிக்க..!

February 03, 2024 0

 ராணுவ பொதுப் பள்ளியில் காலியாக உள்ள Principal பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.  விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே விண்ணப்பிக்க தேவையான அனைத்து தகுதி விவரங்களையும் கீழே அறிந்து உடனே இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

APS காலிப்பணியிடங்கள்:

Principal பதவிக்கு என 33 பணியிடங்கள் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் MDS  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் 14 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது, 01.05.2024 தேதியின் படி, அதிகபட்சம் 60 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

AWES வழிகாட்டுதல்களின்படி, ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

 விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து acds.careers@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf




🔻🔻🔻

February 2, 2024

SAIL நிறுவனத்தில் ரூ.1,00,000/- மாத ஊதியத்தில் வேலை ரெடி – நேர்காணல் மட்டுமே!

February 02, 2024 0

 Steel Authority of India Limited-ல் (SAIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Doctor (GDMO) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.

SAIL காலியிடங்கள்:

SAIL நிறுவனத்தில் Doctor (GDMO) பணிக்கென 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Doctor (GDMO) கல்வி விவரம்:  

இப்பணிக்கு அரசு அல்லது MCI அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

SAIL வயது விவரம்:

Doctor (GDMO) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.02.2024 அன்றைய நாளின் படி, 69 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.

Doctor (GDMO) ஊதிய விவரம்:  

இந்த SAIL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

SAIL தேர்வு செய்யும் விதம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Doctor (GDMO) விண்ணப்பிக்கும் விதம்:

Doctor (GDMO) பணிக்கென 16.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு ஜார்கண்டில் உள்ள SAIL நிறுவன அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் புதிய வேலை – சம்பளம்: ரூ.50,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

February 02, 2024 0

 Guest Faculty (Applied Psychology) பணிக்கென தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள விண்ணப்பதாரர்கள் உடேன விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

CUTN காலிப்பணியிடங்கள்:

Guest Faculty (Applied Psychology) பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) காலியாக உள்ளது.

Guest Faculty கல்வி:  

இந்த CUTN பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் applied Psychology பாடப்பிரிவில் Master Degree அல்லது Ph.D Degree தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

விண்ணப்பதாரர்கள் NET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவராக இருப்பது கூடுதல் சிறப்பாக கருதப்படும்.

Guest Faculty வயது:

Guest Faculty (Applied Psychology) பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 70 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Guest Faculty மாத ஊதியம்:  

இந்த CUTN பல்கலைக்கழக பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

CUTN தேர்வு முறை:

Guest Faculty (Applied Psychology) பணிக்கு தகுதியான நபர்கள் 12.02.2024 அன்று நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

CUTN விண்ணப்பிக்கும் முறை:

இந்த CUTN பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து hodpsychology@cutn.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 08.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

சென்னையில் ரூ.80,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க !

February 02, 2024 0

 ICMR கீழ் இயங்கி வரும் காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIRT) ஏற்பட்டுள்ள Project Research Scientist II (Medical), Project Research Scientist II (Medical) (Survey Monitors), Project Technical Support II (Laboratory Technician), Project Technical Support I (Health Assistant) ஆகிய பணியிடத்தை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள இப்பணிக்கு சரியான நபர்கள் 12.02.2024 மற்றும் 13.02.2024 ஆகிய தேதிகளில்  நடைபெற உள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் தவறாது Interview-ல் கலந்து கொண்டு பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.

காசநோய்க்கான தேசிய ஆராய்ச்சி நிறுவன காலிப்பணியிடங்கள்:

Project Research Scientist II (Medical), Project Research Scientist II (Medical) (Survey Monitors), Project Technical Support II (Laboratory Technician), Project Technical Support I (Health Assistant), Project Data Entry Operator Grade B, Senior Project Assistant (UDC) மற்றும் Project Multi-Tasking Staff (Helper) பதவிக்கு என மொத்தம் 32 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் 10th + Diploma (MLT/DMLT)/ 12th in Science + Diploma (MLT/DMLT) + Five Years Experience in relevant subject /field/ MBBS with MPH/PhD/ முடித்தவராக இருக்க வேண்டும்.

வயது வரம்பு:

பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 25 முதல் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு  பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ18,000/- முதல் ரூ.80,000/- மாத சம்பளமாக பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR-NIRT தேர்வு செய்யும் விதம்:

மேற்கண்ட பணிக்கு தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் 12.02.2024 மற்றும் 13.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள  நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ICMR-NIRT விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த NIRT நிறுவன பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டு உள்ள இணைப்பில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும்.

Download Notification Link



🔻🔻🔻

தமிழக மாநகராட்சி, நகராட்சிகளில் வேலைவாய்ப்பு – 1933 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!

February 02, 2024 0

 தமிழகத்தில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் காலியாக உள்ள 1933 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு குறித்த முழு விவரங்களை இங்கு காண்போம்.

தமிழக அரசு அறிவிப்பு:

மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மற்றும் சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் அகற்றும் வாரியத்தில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இங்கு காலியாக உள்ள 1,933 பணியிடங்கள் இன சுழற்சி அடிப்படையில் நேரடி நியமனம் மூலம் நிரப்ப விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் உதவிப் பொறியாளர், இளநிலை பொறியாளர் பணிக்கான இடங்கள் நிரப்பப்பட உள்ளது. இப்பணிகளுக்கு பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை கல்வித் தகுதியாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்துத் தேர்வு, நேர்காணல் உள்ளிட்ட தேர்வு முறைகள் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். அவை அனைத்தும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு துறையில் வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆர்வமுள்ளவர்கள் https://tnmaws.ucanapply.com என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் பிப்.9 முதல் மார்ச் 12 வரை விண்ணப்பிக்கலாம். இதற்கான எழுத்துத் தேர்வு ஜூன் 29 மற்றும் 30ல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




🔻🔻🔻

ECHS கோயம்புத்தூர் வேலைவாய்ப்பு 2024 – ரூ.75,000/- ஊதியத்தில் சூப்பர் வாய்ப்பு!

February 02, 2024 0

 முன்னாள் ராணுவ வீரர்களின் பங்களிப்பு சுகாதாரத் திட்டத்தில் தற்போது வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில்  DEO, Clerk, Medical Officer பதவிக்கு காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் இப்பதிவின்  வாயிலாக உங்கள் பதிவுகளை எளிமையாக செய்து கொள்ளலாம்.

ECHS கோயம்புத்தூர் காலிப்பணியிடங்கள்:

Officer-In-Charge – 2 பணியிடங்கள்
Gynaecologist – 1 பணியிடம்
Radiologist – 1 பணியிடம்
Medical Specialist – 1 பணியிடம்
Medical Officer – 5 பணியிடங்கள்
Physiotherapist – 1 பணியிடம்
Radiographer – 2 பணியிடங்கள்
Nursing Assistant – 1 பணியிடம்
Lab Technicain – 1 பணியிடம்
Dental Officer 3
Data Entry Operator – 1 பணியிடம்
Clerk – 1 பணியிடம்
Chowkidar – 2 பணியிடங்கள்
Female Attendant – 1 பணியிடம்
Safaiwala – 2 பணியிடங்கள்
கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 8th, B.Pharm, B.Sc, D.Pharm, Diploma, DMLT, Literate, MBBS, MD, MS, Nursing தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Officer-In-Charge – ரூ.75,000 per month
Gynaecologist – ரூ.1,00,000 per month
Radiologist – ரூ.1,00,000 per month
Medical Specialist – ரூ.1,00,000 per month
Medical Officer – ரூ.75,000 per month
Physiotherapist – ரூ.28,100 per month
Radiographer – ரூ.28,100 per month
Nursing Assistant – ரூ.28,100 per month
Lab Technician – ரூ.28,100 per month
Dental Officer – ரூ.75,000 per month
Data Entry Operator – ரூ.16,800 per month
Clerk – ரூ.19,700 per month
Chowkidar – ரூ.16,800 per month
Female Attendant – ரூ.16,800 per month
Safaiwala – ரூ.16,800 per month

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 16.02.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻

சென்னை TCS ஐ.டி நிறுவனத்தில் காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

February 02, 2024 0

 சென்னையில் உள்ள TATA கன்சல்டன்சி சர்வீசஸ் லிமிடெட் (TCS) நிறுவனத்தில் காலியாக உள்ள ETL Testing பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து  B.E   படித்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

3 முதல் 12 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ளவர்கள்  கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு 30.03.2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf




🔻🔻🔻

February 1, 2024

அடிக்கடி சாப்ட் டிரிங்ஸ் குடித்தால் என்னவாகும் தெரியுமா? அதன் விளைவுகளை தெரிந்து கொள்ளுங்கள்

February 01, 2024 0

 இன்றைய துரிதமான உலகில் உணவுப் பழக்கம் மற்றும் தூக்கம் போன்றவை மோசமானதாக இருக்கிறது. குறிப்பாக இளம் தலைமுறையினர் இந்த பழக்கங்களை முறையாக பின்பற்றுவதில்லை. ஆரோக்கியமான உணவுகளை தவிர்ப்பது, சரியான நேரத்திற்கு தூங்காமல் இருப்பது என்று பல தவறுகளை செய்கின்றனர். பெரும்பாலான சமயங்களில் கார்பனேடட் பானங்கள் அல்லது காஃபின் பானங்கள் போன்றவற்றை அருந்துகின்றனர். இது தங்களுக்கு உடனடி ஆற்றலை தருவதாக இளைஞர்கள் கருதுகின்றனர். இது ஓரளவுக்கு உண்மை என்றாலும், நீண்ட கால அடிப்படையில் இது நன்மையை தராது.

கார்பனேடட் பானங்களை அருந்துவதன் மூலமாக நம் உடலில் என்னென்ன பின்விளைவுகள் ஏற்படுகின்றன என்பது குறித்து அண்மையில் வெளியான ஆய்வு முடிவுகள் நமக்கு அதிர்ச்சி அளிப்பதாக அமைந்துள்ளன.

News18

அதிக காஃபின் கொண்ட பானம் ஒன்றை அருந்தும்போது அதன் பாதிப்புகள் சில நிமிடங்கள் தொடங்கி, பல நாட்கள் வரையிலும் கூட நீடிக்கும். சராசரியாக ஒரு 500 மில்லி கொண்ட குளிர்பானத்தில் 160-200 mg அளவில் காஃபின் அளவு இருக்கும். இது நாம் அருந்துகின்ற ஒரு கப் காஃபியை காட்டிலும் கூடுதலாகும்.

நாம் அருந்திய 10 நிமிடத்தில் இந்த காஃபின் நமது ரத்த நாளங்களில் ஊடுருவும். இதனால் ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு அதிகரிக்கும். பானம் அருந்திய அடுத்த 15 முதல் 45 நிமிடங்களில் ரத்த நாளங்களில் காஃபின் அளவு மிகுதியாக இருக்கும். அத்தகைய சூழலில் நம்முடைய எச்சரிக்கை உணர்வு மற்றும் சிந்தனைத் திறன் அதிகரிக்கும்.

News18

பானம் அருந்திய 30 முதல் 50 நிமிடங்களுக்குப் பிறகு நமது ரத்த நாளங்கள் காஃபினை முழுமையாக உறிஞ்சிக் கொள்ளும். அதனால் நம்முடைய ரத்த நாளங்களில் சர்க்கரை மிகுதியாக இருக்கும். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காஃபின் அளவுகள் குறையும் என்றாலும், அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் என்பது மறையாது.

தோராயமாக காஃபின் பானம் அருந்திய 5 முதல் 6 மணி நேரத்திற்குப் பிறகு, நமது உடல் அதில் பாதி அளவை மட்டுமே வெளியேற்றியிருக்கும். எனினும், நம்முடைய வயது மற்றும் உடல்நிலை போன்றவற்றின் அடிப்படையில் இது மாறும். இறுதியாக 12 மணி நேர முடிவில் காஃபின் தன்மை உடலில் இருந்து முற்றிலுமாக வெளியேறும்.

காஃபின் பானம் அருந்திய பிறகு 12 முதல் 24 மணி நேர இடைவெளிக்குள் உங்களுக்கு தலைவலி, எரிச்சல் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்னைகள் உருவாகலாம். காஃபின் பாதிப்புகள் முற்றிலுமாக நீங்குவதற்கு தோராயமாக 7 முதல் 12 நாட்கள் ஆகலாம். ஆக, அடுத்தமுறை காஃபின் பானம் அருந்துகின்ற எண்ணம் தோன்றும்போது ஒருமுறைக்கு பலமுறை யோசித்துக் கொள்ளுங்கள்.

🔻 🔻 🔻 

குளிர்காலத்தில் அதிகரிக்கும் காது வலி.. இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்க..!

February 01, 2024 0

 

குளிர்காலத்தில் வெப்பநிலை குறைந்து எங்கும் இதமான சூழலை ஏற்படுத்தினாலும், இந்த சமயத்தில் பலருக்கும் காது வலி என்ற தொந்தரவும் கூடவே சேர்ந்து வருகிறது. வெப்பநிலை குறைவதன் காரணமாக நமது உடலில் சாதாரண தொந்தரவு முதல் தொற்றுகள் வரை என பல்வேறு பிரச்சனைகள் வர ஆரம்பிக்கின்றன. ஆனால் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம் நமக்கு ஏற்படும் அசௌகர்யங்களை தவிர்க்க முடியும். அது என்னவென்று இப்போது பார்ப்போம்.

வெதுவெதுப்பை தரும் தொப்பி அணியுங்கள் : குளிர் காற்றிலிருந்து உங்கள் காதுகளை பாதுகாப்பதற்கான எளிய வழி தொப்பி அணிவது மட்டுமே. அதிக தரமுள்ள, உங்கள் காதுகாதுகளுக்கு நன்கு பொருந்தக்கூடிய, குளிர் காற்று உள்ளே செல்லாதவாறு தடுக்கக்கூடிய தொப்பியாக பார்த்து வாங்குங்கள். கம்பளி துணியாக இருந்தால் மிக நல்லது. குறைவான வெப்பநிலையில் காதுகளை மூடுவதன் மூலம் காது வலி ஏற்படுவதை தவிர்க்கலாம்.

மஃப்ளர்: தொப்பியுடன் சேர்த்து கூடுதல் பாதுகாப்பிற்கு மஃப்ளர் பயன்படுத்துங்கள். உங்கள் கழுத்தைச் சுற்றி மஃப்ளரை பயன்படுத்துவதால் நடுங்கும் குளிரிலிருந்து உங்கள் காதுகள் பாதுகாக்கப்படும். இந்த மஃப்ளர் உங்கள் காதுகளுக்கு தேவையான பாதுகாப்பை தருவதோடு உங்களை ஸ்டைலிஷாகவும் வெளிப்படுத்தும்.

உடனடி சிகிச்சை அவசியம் : குளிர்காலத்தில் வரக்கூடிய சளி மற்றும் சுவாசப் பிரச்சனைகள் காது வலியை அதிகப்படுத்திவிடும். மூக்கடைப்பு அல்லது மூக்கில் நீர் வடிந்தால், காதுகளுக்கு தொற்று பரவாமல் இருக்க உடனே சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் அறிகுறிகளை போக்க நன்றாக நீர் அருந்துங்கள், நன்றாக தூங்குங்கள். தேவைப்பட்டால் மருந்தகத்தில் மாத்திரை வாங்கி பயன்படுத்துங்கள்.

காதுகளை ஈரப்படுத்துங்கள் : குளிரான வெப்பநிலை நமது சருமத்தை வறண்டு போக வைக்கும். இதில் காதும் விதிவிலக்கல்ல. எண்ணெய் அல்லது மிதமான ஹைபோ அலர்ஜெனிக் லோஷன் காதுகளுக்கு தேவையான நீர்ச்சத்தை தருகிறது. வெளிப்புற காதில் வெடிப்பு ஏற்படுவதை தவிர்க்க, அப்பகுதிகளிலும் இந்த லோஷனை பயன்படுத்துங்கள். சருமத்தில் ஈரப்பதம் இருப்பதால் எரிச்சல் ஏற்படுவது குறைவதோடு காதுகளும் ஆரோக்கியம் பெறுகிறது.

எந்நேரமும் காதை சுத்தப்படுத்தாதீர்கள் : காதுகளின் சுகாதாரத்தை பேணுவது அவசியம் என்றாலும், அதிகப்படியாக சுத்தம் செய்வதால் காதுகளில் இயற்கையாகவே உள்ள எண்ணெய் குறைந்து நமக்கு அசௌகர்யத்தை தருகிறது. காதுகளின் வெளிப்புறத்தை மென்மையாக சுத்தப்படுத்துங்கள். காதிற்குள் எந்தப் பொருளையும் நுழைத்து சுத்தம் செய்யாதீர்கள். அப்போதுதான் காதுகளுக்குள் இயற்கையாகவே இருக்கும் தடுப்பாண்களுக்கு எந்த சேதமும் ஏற்படாததோடு குளிர்காலத்தில் காது வலி வரும் ஆபத்தும் குறையும்.

குளிர்காலத்தில் இதுபோன்ற எளிமையான முறைகளை பின்பற்றுவதால் காதுகளுக்கு வரக்கூடிய ஆபத்தை குறைக்க முடியும். நாங்கள் கூறிய டிப்ஸ்களை பின்பற்றி எந்தவித காது வலியும் இன்றி குளிர்கால அழகை ரசியுங்கள்.


🔻 🔻 🔻 

உடலில் பசைபோல் ஒட்டிக்கொண்டிருக்கும் கொழுப்பை அடியோடு சுரண்டி எடுக்கும் 5 வழிகள்..!

February 01, 2024 0

 அவசர வாழ்க்கையில் செல்லும் இடங்களில் கிடைக்கும் உணவுகளையும், தின்பண்டங்களையும் எடுத்துக் சாப்பிடுவது நம்மிடத்தில் பரவலாகி வருகிறது. இது ஒருபுறம் இருக்க, ஓய்வின்றி இருந்த இடத்தில் உழைப்பு, போதிய உடற்பயிற்சி இல்லாதது போன்றவற்றால் நம் உடலில் தேவையற்ற கொழுப்பு தங்கி, பிரச்னைகளுக்கு வழிவகுக்கிறது.

இப்படி உடலுடன் பசை போல ஒட்டிப்பிடித்திருக்கும் கெட்டக் கொழுப்பு எனப்படும் எல்டிஎல் அளவைக் குறைத்தால் தான் நாம் ஆரோக்கியமாக வாழ முடியும். இல்லையென்றால் உடலுக்குச் செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். முக்கியமாக இதயத்திற்குச் செல்லும் ரத்தக் குழாயில் தடையை ஏற்படுத்தி, மாரடைப்புக்கு வழிவகுக்கிறது. இதனால் உயிர் போகும் அபாயம் அதிகம் என்கிறது மருத்துவம் குறிப்புகளும், அதன் வரலாறுகளும்!

சரி. இதை சீர்செய்ய ஏதேனும் வழிகள் இருக்கிறதா என்றால், உணவு கட்டுப்பாடு தான் முன்னிலையானதாக இருக்கும். எனவே, அதிகளவு தேவையில்லாத கொழுப்பு சேர்வதை எப்படி கண்டறிவது, அதன் வளர்ச்சியை எப்படி தடுப்பது என்பதை பார்க்கலாம்.

உடலில் உள்ள கெட்டக் கொழுப்பை அதாவது எல்டிஎல் அளவை கண்டுபிடிப்பது எப்படி? : உடலில் அதிகளவு கெட்டக் கொழுப்பு சேரும்போது எந்தவித அறிகுறிகளையும் அவை ஏற்படுத்துவதில்லை. இதன் காரணமாகத் தான் மருத்துவர்கள் ரத்தப் பரிசோதனையை மேற்கொள்ள கூறுகின்றனர். அப்படி செய்யும்போது ரத்தத்தில் சேர்ந்துள்ள சரியான நல்லக் கொழுப்பு (எச்.டி.எல் / HDL) மற்றும் கெட்டக் கொழுப்பின் அளவை எளிதாக தெரிந்து கொள்ள முடியும். அதன்படி நீங்கள் மேற்கொள்ள வேண்டிய பழக்கவழக்க மாற்றங்கள் குறித்து மருத்துவரை அணுகித் தெரிந்து கொள்ளலாம். நம் உடலில் கெட்டக் கொழுப்பு சேராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

வாழ்க்கைமுறை - பசிக்கும் போது சரியான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். பதப்படுத்தப்பட்ட உணவுகளை முடிந்தவரையில் தவிர்க்க வேண்டும். மேலும், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற பழக்கங்களை உடனே நிறுத்தி விடுங்கள்.

கொழுப்புள்ள உணவுகள் - கெட்டக் கொழுப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கும் பொரித்த உணவுகள் எடுத்துக் கொள்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். தினசரி உணவில் பொரித்த உணவுகளை சேர்த்துக் கொண்டால், அவை நம் உடலில் அநாவசிய கொழுப்பு சேர காரணமாகி விடும்.

உடற்பயிற்சி - தினமும் சில நிமிடங்களாவது உடற்பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது நம் இதயத்தை வலுவாக்கிறது. ரத்த நாளங்களை துடிப்புடன் செயல்படுத்துகிறது. அலுவலகம் மற்றும் வெளியே செல்லும்போது மாடிப் படிகளைப் பயன்படுத்துங்கள். மின்தூக்கிகளை தவிர்த்து வருவதே நம் ஆரோக்கிய வாழ்க்கை முறையில் முதல் படியாக இருக்கும்.

மருந்துகள் - ரத்தத்தில் உள்ள கெட்டக் கொழுப்பின் அளவை பரிசோதனை வாயிலாக தெரிந்துகொண்டு, அப்படி அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி குறுகிய காலத்திற்கு மருந்துகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதிலும் பெரிய பிரச்னைகள் இருந்தால், மருத்துவர் அறிவுரைப்பட ரத்த நாளங்களில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை சிறிய அறுவை சிகிச்சை வாயிலாக நீக்குவது நல்லது.


🔻 🔻 🔻 

இஞ்சி தண்ணீர் vs இஞ்சி தேநீர்.. நம் ஆரோக்கியத்திற்கு சிறந்தது எது.?

February 01, 2024 0

 நம்முடைய இந்திய சமையலறையில் கண்டிப்பாக இருக்கும் மற்றும் அதிகம் பயன்படுத்தப்படும் பிரபலமான பொருள் இஞ்சி. உணவின் சுவையை அதிகரிப்பதில் இருந்து ஸ்ட்ராங்கான டீ-யை தயாரிப்பது வரை பல வழிகளில் இஞ்சி நமது டயட்டில் ஒரு அங்கமாக இருக்கிறது. நாம் சாப்பிடும் உணவுகளின் சுவையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல், நம்முடைய ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இஞ்சி இருக்கிறது. எனவே தான் பாலரும் தங்கள் டயட்டில் பல வழிகளில் இஞ்சியை சேர்த்து கொள்கிறார்கள்.


சிலர் இஞ்சி தரும் ஆரோக்கிய நன்மைகளை பெறுவதற்காக அதை தேநீராக தயாரித்து குடிப்பார்கள் சிலர் இஞ்சி தண்ணீரை குடிப்பார்கள். இருப்பினும் இந்த இரண்டில் நம்முடைய ஆரோக்கியத்திற்கு எது சிறந்தது என்ற கேள்வி பலரின் மனதில் அடிக்கடி எழுகிறது. இஞ்சி தண்ணீர் , இஞ்சி தேநீர் இரண்டில் எது ஆரோக்கியத்திற்கு சிறந்தது? பார்க்கலாம் வாருங்கள்…


இஞ்சி டீ: குளிர்காலம் அல்லது கோடை காலம் என எதுவாக இருந்தாலும் பலர் இஞ்சி டீ குடிக்க விரும்புகிறார்கள். பச்சை தேயிலையுடன் ஒப்பிடும் போது இஞ்சி டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்திருக்கிறது. இந்த கலவை பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதே சமயம் இஞ்சி டீ-யானது வாத தோஷத்தை பாதிக்க கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

ஆயுர்வேதத்தின்படி வாத தோஷம் என்பது உடலின் அனைத்து உயிரியல் செயல்பாடுகளையும் கட்டுப்படுத்தும் இயக்கத்தின் ஆற்றல் என குறிப்பிடப்படுகிறது. மேலும் இது காற்று மற்றும் விண்வெளி கூறுகளை குறிக்கும். இஞ்சி டீ-யை அதிகம் பருகுவதால் வாதத்தின் அளவு அதிகரிக்கலாம். உடலில் வாதத்தின் அளவு அதிகரிப்பது வாயு, உப்புசம் மற்றும் பதட்டம் போன்ற விரும்பத்தகாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

உலர்ந்த இஞ்சி தண்ணீர்: இஞ்சி டீ வாதத்தை தூண்டி தேவையற்ற சில விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் இருக்கும் நிலையில், உலர்ந்த இஞ்சி தண்ணீர் சிறந்ததாக இருக்கும். உலர்ந்த இஞ்சித் தூலாய் பயன்படுத்தி காய்ச்சப்படும் இந்த பானம் நம்முடைய செரிமான அமைப்பை மேம்படுத்துகிறது மற்றும் உப்புசத்தை போக்க உதவுகிறது. தவிர உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு உலர் இஞ்சி தண்ணீர் மிக பயனுள்ளதாக இருக்கும். மேலும் இது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது மற்றும் நொறுக்கு தீனிகளை சாப்பிட வேண்டும் என்ற ஏக்கத்தை குறைக்கிறது.


ஃபிரெஷ்ஷான இஞ்சி தண்ணீர்: உலர் இஞ்சி தண்ணீர் பல நன்மைகளை தரும் அதே நேரம் ஃபிரெஷ்ஷான இஞ்சிகொண்டு தயாரிக்கப்படும் தண்ணீரானது சளி அல்லது இருமலால் பாதிக்கப்பட்டிருந்தால் நிவாரணம் அளிக்க பெரிதும் உதவும். அதுமட்டுமின்றி நம்முடைய இதய ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் நன்மை பயக்கும். இஞ்சியில் gingerols நிறைந்திருக்கிறது. எனவே ஃபிரெஷ்ஷான இஞ்சியை கொண்டு தயாரிக்கப்படும் இஞ்சி தண்ணீர் ரத்த நாளங்களைநன்கு திறக்க உதவி பிளட் சர்குலேஷனை ஊக்குவிக்கிறது மற்றும் ரத்த அழுத்தத்தையும் குறைக்கிறது.

எது சிறந்தது.? இஞ்சி தண்ணீர் மற்றும் இஞ்சி டீ இரண்டுமே நமக்கு எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளை தருகிறது. உங்கள் உடலின் தேவைகளைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப இஞ்சி தண்ணீர் அல்லது இஞ்சி டீ-யை தேர்ந்தெடுப்பது முக்கியமானது. உலர் இஞ்சி தண்ணீர் வாயு மற்றும் உப்புசம் போன்ற வாத தோஷம் தொடர்பான பிரச்சினைகளை சமாளிக்க உதவும் அதே நேரம், ஃபிரெஷ்ஷான இஞ்சி நீர் சளி தொந்தரவுகளை நீக்குகிறது மற்றும் ரத்த சுழற்சியை மேம்படுத்த உதவுகிறது.


🔻 🔻 🔻 

இதயத்தில் அடைப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவும் 5 காய்கறிகள்..!

February 01, 2024 0

 இன்றைய காலத்தில் இளம் வயதினர் கூட இதய நோய்களால் அதிகமாக பாதிக்கப்படுவதை பார்த்து வருகிறோம். இதற்கு முக்கிய கரணம் நமது வாழ்க்கைமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்றுதான் கூற வேண்டும்.

காய்கறிகள் அதிகமாக கொண்ட சரிவிகித உணவுப் பழக்கத்தை பின்பற்றினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். நம் இதய நலனிற்கு உதவி செய்யும் 5 காய்கறிகள் பற்றிதான் இப்போது பார்க்கப் போகிறோம்.

இதயத்தில் ஏற்படும் அடைப்புகளை மருத்துவ சிகிச்சையால் மட்டுமே குணப்படுத்த முடியும். இதய அடைப்புகளை சரி செய்யாவிட்டால் பெருந்தமனித் தடிப்பு நோய் உருவாகும் வாய்ப்புள்ளது. இந்நிலையில் சரிவிகித டயட்டில் ஒரு பகுதியாக இருக்கும் காய்கறிகள் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவியாக இருக்கிறது. சில குறிப்பிட்ட காய்கறிகளில் கரையக்கூடிய நார்ச்சத்து அதிகம் உள்ளது.

இவை இதய நோய் தாக்கும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. கரையக்கூடிய நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்க உதவி செய்வதாக பல ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக பேண வேண்டுமென்றால் இந்த 5 காய்கறிகளை உங்கள் டயட்டில் அவசியம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

பச்சை இலை காய்கறிகள் :  உங்கள் இதயத்திற்கு சிறந்த நண்பனாக இருக்கிறது பச்சை இலை காய்கறிகள். கீரை, காலே, ஸ்விஸ் சார்டு (பெரும்பாளைக் கீரை) போன்றவற்றில் அதிகளவு வைட்டமின், தாதுக்கள் மற்றும் ஆண்டி ஆக்ஸிடெண்ட் உள்ளது. இவை உங்கள் உடலில் உள்ள ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நலனை மேம்படுத்துகிறது.

ப்ரக்கோலி : மரம் போன்ற வடிவில் சிறியதாக இருக்கும் ப்ரக்கோலி, நம் இதயத்திற்கு உற்ற தோழனாக இருக்கிறது. ப்ரக்கோலியில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடெண்ட், வைட்டமின், நார்ச்சத்து ஆகியவை நிறம்பியுள்ளது. இதிலுள்ள சல்ஃபோரபீன் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டது.


தக்காளி : இதயத்திற்கு நன்மை செய்யும் லைகோபீன் என்ற ஆண்டி ஆக்ஸிடெண்ட் தக்காளியில் அதிகமுள்ளது. இவை உங்கள் ரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வரும் ஆபத்தை குறைக்கிறது.

அவகேடோ : ஊட்டச்சத்து அதிகமுள்ள அவகேடோவில் இதயத்திற்கு நன்மை செய்யும் நிறைவுற்ற கொழுப்புகள் நிரம்பியுள்ளது. மேலும் இதிலுள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை ஒழுங்குப்படுத்த உதவுகிறது.


குடை மிளகாய் : குடை மிளகாயில் நார்ச்சத்து, வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ அதிகமுள்ளது. இவை இதயத்தில் ஏற்படும் குறைபாட்டை குறைக்க உதவுவதோடு இதய நலனையும் மேம்படுத்துகிறது.

மருத்துவ சிகிச்சை அவசியம் : உங்கள் டயட்டில் காய்கறிகளை சேர்ப்பது இதய நலனை மேம்படுத்தும் என்றாலும் புகையிலை, மதுப்பழக்கம் போன்றவற்றை கைவிடுவதும், சரிவிகித டயட்டை பின்பற்றுவதும், மன அழுத்தம் இல்லாமல் வாழ்வதும், சீரான உடற்பயிற்சியும் அவசியமாகும். இதயத்தில் அடைப்பு அல்லது வேறு எந்தப் பிரச்சனை இருந்தாலும் உடனடியாக மருத்துவரை சந்தித்து சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.

உங்கள் உடல்நிலையை பொறுத்து உங்களுக்கு தேவையான சிகிச்சை, மருந்துகள், வாழ்க்கைமுறை மாற்றங்கள் ஆகியவற்றை அவர் பரிந்துரைப்பார். சில அரிதான சமயங்களில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என பரிந்துரைக்கவும் வாய்ப்புள்ளது.


🔻 🔻 🔻 

குளிர்காலத்தில் மாரடைப்பு அதிகம் தாக்குவதற்கு என்ன காரணம் தெரியுமா..?

February 01, 2024 0

 அனைத்து தரப்பினருக்குமே குளிர்காலம் பிரச்சனை தரக்கூடியதகவே இருக்கிறது. அதுவும் இதயப் பிரச்சனை உள்ளவர்கள் இந்த சமயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் குளிர்காலத்தில்தான் மாரடைப்பு மற்றும் பக்கவாத சம்பவங்கள் அதிகமாக ஏற்படுகின்றன.

கோடை காலத்தை விட குளிர்காலத்தில் வரக்கூடிய மாரடைப்பு உயிருக்கே ஆபத்தாக முடியும் என ஆய்வுகள் கூறுகின்றன. அதேப்போல் குளிர்கால காலை நேரத்தில் மாரடைப்பு மற்றும் ஆஞ்சினா நெஞ்சு வலியும் அதிகமாக இருக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

குளிர்காலத்தில் குறைவான வெப்பநிலை இருப்பதால் சளி, இருமல், காய்ச்சல் போன்ற பொதுவான தொற்றுகள் அதிகமாக காணப்படும். ஏற்கனவே இதயப் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த தொற்றுகளும் ஒன்றாக வரும் போது நிலைமை மோசமாகிறது. குளிர்காலத்தில் உடலுக்கு தேவையான ரத்தத்தை விநியோகிக்கவும் உடலை வெப்பமாக வைத்துக்கொள்ளவும் நம்முடைய இதயம் வழக்கத்தை விட அதிகமாக வேலை செய்கிறது.

News18

இந்தப் பருவத்தில் எங்கும் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் நம்முடைய ரத்த நாளங்கள் சுருங்கி இதய தசைகளுக்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்தின் அளவு குறைகிறது. இதன் காரணமாக ரத்த உறைந்து, உடலில் ரத்த அழுத்தமும் கொலஸ்ட்ரால் அளவும் அதிகரிக்கிறது. உடலில் ஏற்படும் இந்த மாற்றங்கள் காரணமாகவே குளிர்காலத்தில் நெஞ்சு வலியும் மாரடைப்பும், இதயம் சம்மந்தமான நோய்களும் அதிகமாக வருகின்றன.

இதுபோன்ற ஆபத்தைக் குறைக்கவும் குளிர்காலத்தில் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும். குளிரான சூழ்நியையை தாங்க முடியாதவர்கள் வெதுவெதுப்பை தரும் ஆடைகளை அவசியம் அணிந்திருக்க வேண்டும். வீட்டின் உள்ளேயே உடலை வெதுவெதுப்பாக வைத்துக்கொள்ள யோகா, ஏரோபிக்ஸ், தியானம் போன்ற பயிற்சிகளில் ஈடுபட வேண்டும்.

வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு நிறைந்த உணவுகள் ஆகியவற்றை தவிர்த்து குளிர்காலத்தில் ஆரோக்கியமான டயட்டை பின்பற்ற வேண்டும். இதன் மூலம் இதய பிரச்சனைகளை ஓரளவிற்கு தடுக்க முடியும். உங்கள் ரத்த சர்க்கரை அளவு, ரத்த அழுத்தம், சிறுநீரக பிரச்சனை, ரத்தக்குழாய் தொடர்பான பிரச்சனைகளை அடிக்கடி பரிசோதனை செய்யுங்கள். ஏனென்றால் இவைதான் இதயப் பிரச்சனைகளை தீவிரமாக்கக் கூடியவை. இதய நோயாளிகள் அதிக வேலைப்பளுவை தவிர்க்கவும்.

சிகரெட் பழக்கம், குடிப்பழக்கம் ஆகியவற்றை கைவிட்டு வாழ்க்கைமுறையில் சில மாற்றங்களை செய்வதன் மூலம் இதயப் பிரச்சனைகள் வரும் ஆபத்தைக் குறைக்கலாம். குளிர்காலத்தில் உணவை கொஞ்சம் சூடாக சாப்பிடுங்கள். அப்போதுதான் உடலுக்கு தேவையான வெதுவெதுப்பு கிடைப்பதோடு ரத்த ஓட்டமும் சீராக இருக்கும்.

முக்கியமாக, இதய நோயாளிகள் குளிர்காலத்தில் உங்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை கூடுமானவரை தவிர்க்கவும். மேலே கூறிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முறையாக பின்பற்றினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க முடிவதோடு குளிர்காலத்தில் வரக்கூடிய இதயம் சம்மந்தமான பிரச்சனைகளையும் குறைக்கலாம்.

🔻 🔻 🔻 

கழிவறையில் செல்ஃபோன் பயன்படுத்தினால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இளைஞர்களே உஷார்..!

February 01, 2024 0

 கழிவறை என்பது பொது சுகாதாரத்தில் முதன்மையானதாக இருக்கிறது. மனித இனத்தின் நாகரீக வளர்ச்சியில் கழிவறை பெரும் இடத்தை பெற்றுள்ளது. நகரங்கள் வளர்ச்சி காலத்தில் வீட்டிற்கு ஒரு கழிவறை என்று வெளியில் கட்டப்பட்டு வந்தது. அதே தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுகாதார வளர்ச்சியில் ஒரு வீட்டிற்கு உள்ளேயே இரண்டு கழிவறை வரை கட்டிக்கொள்கின்றனர். கழிவறை சுகாதாரத்திற்கான ஆராய்ச்சிகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்துகொண்டு செல்கின்றனர். இருப்பினும் வளர்ச்சியுடன் சில துரிதமான பழக்கங்களும் ஒட்டிக்கொள்கின்றன.

அதில் ஒன்றுதான் கழிவறையில் செல்போன் உபயோகிப்பது. கழிவறைக்கு செல்லும்போது செல்போனை எடுத்து செல்வது எனும் ஒரு புதிய பழக்கம் இளைஞர்கள் இடையே நிலவி வருகிறது. இளைஞர்கள் பெரும்பாலும் கழிவறையில் செல்போனை வைத்திருக்க விரும்புகின்றனர் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுக்கின்றன. காலைக் கடனை கழிக்கும்போது, செல்போனை கையில் வைத்திருப்பது பாக்ட்டீரியாவுக்கு தீனியாக அமையும். ஒரு தொலைபேசியின் திரையானது, ஒரு பொது கழிப்பறை இருக்கையை விட அழுக்காக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2022இல் சில விஞ்ஞானிகள் ‘டாய்லெட் ப்ளூம்’ பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒருவர் ஃபிளஷ் செய்யும்போது, கழிவறையில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் கூடாரம் வெடித்து துளிகள் மற்றும் துகள்களாக சிதறும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், ஒருவர் ஃபிளஷ் செய்யும்போது கழிவறையில், ஒரு டூத் பிரஷ் இருந்தால், மலத்தின் துகள்கள் அதனுள் ஒட்டிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

News18

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கழிப்பறையில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அதன் காரணமாக உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயில் அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. இது குத பிளவுகள் மற்றும் மலக்குடல் வீழ்ச்சிக்கு கூட வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

கழிப்பறை என்பது கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடம் என கூறப்படுகிறது. நாம் கழிப்பறை இருக்கையில் இருந்துக்கொண்டு செல்போனை ஸ்க்ரோல் செய்யும்போது, ​​நம் கைகளில் கிருமிகள் ஒற்றிக்கொள்ளும். அப்படியே கைகளை நம் வாய், கண்கள் மற்றும் மூக்கில் வைத்தால் அது பல அபாயங்களை உருவாகும்.

News18

ஒரு செல்போனின் திரையில் கிருமிகள், 28 நாட்கள் வாழலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஸ்மார்ட்போன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை கொண்டவை என்பது உறுதிசெய்யப்பட்ட உண்மையாகும். மேலும், சுகாதாரக் கண்ணோட்டத்தில், செல்போன் திரைகள் ‘டிஜிட்டல் யுகத்தின் கொசு’ என்றும், தொற்று நோய்களின் வாகனமாக இருக்கிறது என்றும் தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் டாக்டர் ஹக் ஹைடன் கூறியுள்ளார்.

கழிப்பறை இருக்கையில் பொதுவாகக் காணப்படும் கிருமிகள் ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் ஆகும். இவை பெரும்பாலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இக்கிருமிகளால் ஒருவர் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடும். மேலும், இது சரும பிரச்னைகளை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

கழிப்பறையை பயன்படுத்திய பிறகு நாம் அனைவரும் கை கழுவதைப் பின்பற்றுகிறோம், ஆனால் நம்மில் பலர் செல்போனை சுத்தப்படுத்துவதை தவிர்க்கிறோம். செல்போனை தினசரி ஒரு துணியால் சுத்தம் செய்யவேண்டும். செல்போனை கழிப்பறையில் பயன்படுத்துவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்துகொண்டு, இந்த பழக்கத்தில் இருந்து விடுப்பெறுங்கள்.

🔻 🔻 🔻 

உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதை ஆரம்பத்திலேயே காட்டும் 5 அறிகுறிகள்..!

February 01, 2024 0

 கொரோனா வைரஸ் தொற்று பரவல் தொடங்கிய நாளிலிருந்தே மக்கள் தங்களுடைய நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான விஷயங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். ஊட்டச்சத்து மிக்க உணவு, உடற்பயிற்சி, ஆழ்ந்த தூக்கம் என ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றி வருகின்றனர். இது நல்ல விஷயம் என்றாலும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து வருகிறது என்பதை தெரிந்துகொள்வதும் அவசியம். அந்த அறிகுறிகளை சுதாரித்துக்கொண்டு உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவியாக இருக்கும்.

மன அழுத்தம் அதிகரிக்கும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைவதற்கான முதல் அறிகுறி மன அழுத்தம். உங்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தை சந்திக்கிறீர்கள் எனில் அதை கவனத்தில் கொள்வது அவசியம். இல்லையெனில் இரத்ததின் வெள்ளை சிவப்பு அணுக்களை அழித்துவிடும். இதுதான் நோய்களை எதிர்த்து போராடும் ஆற்றல் கொண்டது.

தொடர் தொற்றுகள் : வெள்ளை சிவப்பு அணுக்கள் குறைந்துவிட்டது எனில் நோய் தொற்றால் எளிதில் பாதிக்கப்படுவீர்கள். காய்ச்சல், சளி அல்லது மற்ற பாக்டீரியல் தொற்றுகளை சந்திக்க நேரிடும்.

சோர்வு : நோய் எதிர்ப்பு சக்தி குறையக் குறைய உடலின் ஆற்றலும் குறையும். இதனால் எப்போதும் உடல் சோர்வாகவே இருக்கும். இரவு போதுமான தூக்கம் தூங்கியிருந்தாலும் பகலிலும் சோர்வாகவும், தூக்கம் கண்களில் இருந்துகொண்டே இருக்கும். தூங்கலாமா என உடல் ஏங்கும்.

காயங்கள் மெதுவாக ஆறும் : நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் உடலில் காயங்கள் ஆறுவது தாமதமாகும். அந்த இடத்தில் காயம் மறைந்து புதிய தோல் உருவாக நீண்ட நாட்கள் ஆகும்.


மூட்டு வலி : தொடர் மூட்டு வலிகளால் பாதிக்கப்படுகிறீர்கள் எனில் இதற்கும் உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி குறைவதுதான் காரணம். மூட்டு வலி நிலையை அடைகிறீர்கள் எனில் பிரச்னை தீவிரமாகிறது என்று அர்த்தம். எனவே இதை கவனிக்காமல் விடாதீர்கள்.


🔻 🔻 🔻