Agri Info

Adding Green to your Life

February 6, 2024

ICFRE இந்திய வனவியல் கவுன்சிலில் Senior Research Fellow வேலை – தேர்வு கிடையாது || நேர்காணல் மட்டுமே!

February 06, 2024 0

 

இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆனது Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICFRE காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.42,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICFRE தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 12.02.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


🔻🔻🔻

February 5, 2024

6th to 10th Tamil Test Series PDF Collection (Lesson Wise Test)

February 05, 2024 0

 

6th to 10th Tamil Test Series PDF Collection

(Lesson Wise Test)

Test

STD

Lessons

Download Link

Test 1 Questions

10th

1 to 3

Download PDF

Asnwer key

Download PDF

Test 2 Questions

10th

4 to 6

Download PDF

Asnwer key

Download PDF

Test 3 Questions

10th

7 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 4 Questions

10th

1 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 5 Questions

9th

1 to 3

Download PDF

Asnwer key

Download PDF

Test 6 Questions

9th

4 to 6

Download PDF

Asnwer key

Download PDF

Test 7 Questions

9th

7 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 8 Questions

9th

1 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 9 Questions

9th & 10th

Full Test

Download PDF

Asnwer key

Download PDF

Test 10 Questions

8th

1 to 3

Download PDF

Asnwer key

Download PDF

Test 11 Questions

8th

4 to 6

Download PDF

Asnwer key

Download PDF

Test 12 Questions

8th

7 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 13 Questions

8th

1 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 14 Questions

8th to 10th

Full Test

Download PDF

Asnwer key

Download PDF

Test 15 Questions

7th

1 to 3

Download PDF

Asnwer key

Download PDF

Test 16 Questions

7th

4 to 6

Download PDF

Asnwer key

Download PDF

Test 17

7th

7 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 18

7th

1 to 9

Download PDF

Asnwer key

Download PDF

Test 19

Update Soon

Update Soon

Update Soon

6 to 10th Tamil Test Series PDF Collection

அடுத்த தேர்விற்கான PDF டவுன்லோட் செய்ய நாளை இதே லிங்க் வந்து பார்க்கவும் – 2 நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்யப்படும்


இரவில் எந்த நேரத்தில் உணவு அருந்த வேண்டும் தெரியுமா..? மருத்துவர் தரும் விளக்கம்..!

February 05, 2024 0

 நாம் அனைவரையும் இரவில் நமக்கு தோன்றும் நேரத்தில் சாப்பிடும் பழக்கத்தை வைத்திருப்போம். ஆனால் இரவு உணவிற்கு சிறந்த நேரம் எது? என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். இரவில் சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும் என்பதை விட முக்கியமானது சரியான உணவை சரியான அளவில் சாப்பிட வேண்டும் என்பது.

நாம் செய்யும் சில இரவு உணவு தவறுகளைப் புரிந்துகொள்வது அவசியமான ஒன்றாகும். இதுகுறித்து ஊட்டச்சத்து நிபுணர் லீமா மகாஜன் கூறிய விளக்கத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.

லீமா மகாஜன் கூற்றுப்படி, இரவு உணவுக்குப் பிறகு ஸ்நாக்ஸ் வகைகள் சாப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும் என்றும், இரவு உணவு உண்ட உடனே படுக்கைக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்துகிறார்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் பலரும் இரவு உணவில் கார்போஹைட்ரேட்டுகளை தவிர்த்து விடுகின்றனர் கார்போஹைட்ரேட்டுகள் கொழுப்பை அதிகரிக்கும் என்று நினைத்து மக்கள் பொதுவாக கார்போஹைட்ரேட்டு நிறைந்த உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கிறார்கள். மதிய உணவு அல்லது இரவு உணவை தவிர்த்தல் அல்லது பகலில் குறைந்த அளவில் சாப்பிடுவது போன்ற காரணங்களினால் ஒரு சிலர் ஒரு நாளில் உட்கொள்ள வேண்டிய மொத்த கலோரிகளை எடுத்து கொள்ள தவறவிடுகின்றனர். இதனால் கலோரி பற்றாக்குறை ஏற்படுவதாக அவர் எச்சரிக்கிறார்.

தூங்குவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன் இரவு உணவு அருந்துவது சிறந்தது என்று மகாஜன் தெரிவித்துள்ளார். இப்படி சாப்பிடுவதால் இரைப்பை ரிஃப்ளக்ஸ் ஏற்படுவதைத் தடுக்க முடியும் என்று கூறியுள்ளார். அதாவது வயிற்றின் அமிலம் உணவுக்குழாயில் சென்று, அதனால் உண்டாகும் அசௌகரியம் மற்றும் உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்க முடியும் என்கிறார்.

மேலும் இதுகுறித்து விளக்கும் ஃபரிதாபாத், மெட்ரோ மருத்துவமனை HOD- உணவியல் நிபுணர், டிடி ராஷி தந்தியா, பெரும்பாலான மக்கள் இரவு 10-11 மணிக்குள் தூங்கும் முறையை பின்பற்றுகிறார்கள். இதை கருத்தில் கொண்டு, இரவு உணவு நேரம் 6-8 மணியளவில் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளார்.

6-8 மணியளவில் இரவு உணவை சாப்பிடுவதால், படுக்கை செல்வதற்கு முன் செரிமானத்திற்கு போதுமான நேரத்தை அனுமதிக்கிறது. உணவு நமது செரிமான அமைப்பில் ஒரு பயணத்தை மேற்கொள்கிறது, அது நம் வாயில் நுழையும் தருணத்திலிருந்து வயிற்றுக்கு வந்து இறுதியில் சிறுகுடலில் உறிஞ்சப்படும் வரை நடக்கும் நடைமுறையானது எளிதாக நடக்க வேண்டும் என்றால் நாம் சீக்கிரமாகவே சாப்பிடும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.

டாக்டர் டான்டியாவின் கூற்றுப்படி, நாம் சாப்பிடும் உணவு முழுமையாக செரிமானமாக சுமார் 1.5 - 2 மணிநேரம் ஆகும். உணவுகளை நமது குடல் உறிஞ்சி சத்துக்களை பிரிக்கும் செயல்முறையும் இதில் அடங்கும். தூக்கத்திற்கு 2-3 மணி நேரத்திற்கு முன் உணவை உட்கொள்வது செரிமான அமைப்பு அதன் செயல்பாடுகளை திறம்பட செயல்படுத்த தேவையான நேரத்தை வழங்குகிறது. நாம் 9 மணிக்கு மேல் சாப்பிட்டுவிட்டு உடனடியாக தூங்க செல்வதால், நமது உடலுக்கு போதுமான நேரம் இருக்காது, இதனால் அஜீரணம், அசௌகரியம் அல்லது தூக்கத்தை சீர்குலைக்க வழிவகுக்கும் என்று கூறினார்..

மேலும், செரிமானம் முழுமையாக நடைபெறவில்லை என்றால் நமது உடலில் ஊட்டச்சத்துக்களை சரியான முறையில் உறிஞ்சுவதும் தடைபடுகிறது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இரவு உணவுக்கும், தூக்கத்திற்கும் இடையே 2-3 மணிநேர இடைவெளியை கடைப்பிடிப்பது சிறந்தது என்று டாக்டர் டான்டியா விளக்கியுள்ளார்.

🔻 🔻 🔻 

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி வகுப்பு...

February 05, 2024 0

 புதுக்கோட்டை மாவட்டத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய இலவச பயிற்சி வகுப்பு…

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மூலமாக பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி. எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு. NTTF இன்ஸ்டிட்யூட்டில் வேலைவாய்ப்புடன் தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி ((Industrial மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Digital Manufacturing) வழங்கப்படவுள்ளது.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சிகளை வழங்கி வருகிறது. அதன் அடிப்படையில் பட்டயப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு வேலை வாய்ப்புடன் கூடிய தொழில்துறை சார்ந்த தானியங்கி திறன் மேம்பாட்டு பயிற்சி (Industrial Automation) மற்றும் எண்முறை உற்பத்தி துறையில் திறன் மேம்பாட்டு பயிற்சி (Digital Manufacturing) NTTF நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
இப்பயிற்சியில் சேர ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டப்படிப்பில் மெக்கானிக்கல் புரொடக்சன் டெக்னாலஜி, எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக் முடித்த 18 வயது முதல் 26 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால அளவு 6 மாதம் ஆகும். மேலும் தங்கி படிக்கும் வசதியும் இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் மாணாக்கர்களுக்கு தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனத்தால் (SSC and NSDC Approval அங்கீகரிக்கப்பட்ட தரச் சான்றிதழ் வழங்கப்படும்.
இப்பயிற்சியினை வெற்றிகரமாக முடிக்கும் பட்சத்தில் ஆரம்பகால மாதாந்திர ஊதியமாக பட்டயபடிப்பு முடித்தவர்களுக்கு ரூ.16,000/- முதல் ரூ.21,000/- வரை பெறலாம். பொறியியல் பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.21,000/- முதல் ரூ.25,000/- வரை பெறவாம். மேலும், புகழ்பெற்ற தனியார் தொழிற்சாலைகளில் வேலை வாய்ப்பு பெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இப்பயிற்சியினை பெற www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். இப்பயிற்சிக்கான கட்டணம் தாட்கோ வழங்கும்.

இது தொடர்பாக மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, பஞ்சாயத்து யூனியன் அலுவலக சாலை, புதுக்கோட்டை 04322-221487 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻