Agri Info

Adding Green to your Life

February 10, 2024

150 க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் மெகா வேலைவாய்ப்பு முகாம்

February 10, 2024 0

 விழுப்புரம் மாவட்டத்தில் சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 13.02.2024 நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 2023-2024ஆம் ஆண்டில் தமிழ்நாடு முழுவதும் 100 சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அந்த வகையில்,விழுப்புரம் மாவட்டத்தற்கு நான்கு மாபெரும் சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்திட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் மூன்று மாபெரும் சிறப்பு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில்,நான்காம் நிகழ்வாக 13.02.2024 (செவ்வாய்க்கிழமை) விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

இம்முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.

இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150ற்கும் மேற்பட்ட முன்னனி தனியார் வேலையளிக்கும் நிறுவனங்கள் தங்களின் காலிப்பணியிடங்களுக்கு தேவையான பணியாளர்களை தேர்வுசெய்யவுள்ளனர்.

இம்முகாமில் 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு 12 ஆம் வகுப்பு, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித்தகுதியினை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம்.
வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலைநாடுநர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்றஇணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

வேலைவாய்ப்பு முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய,விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது (04146-226417), 9499055906 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டது கூடுதல் விவரங்களை பெற்றுக் கொள்ளலாம்.

எனவே விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வேலை தேடும் இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ள நபர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி, முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பழனி தகவல் தெரிவித்துள்ளார்.


ரூ.66,080/- ,சம்பளத்தில் JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 10, 2024 0

 Project Technical Support III / II, Project Nurse III, Project Research Scientist I, Data Entry Operator, Project Technician III பணியிடங்களை நிரப்ப JIPMER பல்கலைக்கழகத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பானது சமீபத்தில் வெளியானது. இதற்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் தகுதியானவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

JIPMER பல்கலைக்கழக வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Project Technical Support III / II, Project Nurse III, Project Research Scientist I, Data Entry Operator, Project Technician III பதவிக்கு என 9 பணியிடங்கள் காலியாக உள்ளன.
  • அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் MSW, Master Degree, M.Sc, B.Sc, Ph.D, Diploma ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை படித்தவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 28 முதல் 35 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ  அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.23,600/- முதல் ரூ.66,080/- வரை மாத சம்பளமாக வழங்கபப்ட் உள்ளது.
  • விண்ணப்பிக்கும் வழிமுறை:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து wootnbc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.02.2024) அனுப்ப வேண்டும். இதற்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் இன்றே தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    JIPMER தேர்வு செய்யும் முறை:

    இந்த JIPMER பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 18.02.2024 அன்று நடைபெறவுள்ள Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    JIPMER விண்ணப்பிக்கும் வழிமுறை:

    இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை தேவையான ஆவணங்களின் நகலுடன் இணைத்து wootnbc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு கடைசி நாளுக்குள் (10.02.2024) அனுப்ப வேண்டும்.



🔻🔻🔻

கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட்டில் மாதம் ரூ.44000/- சம்பளத்தில் வேலை – தேர்வு கிடையாது!

February 10, 2024 0

 கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட். (CBSL), ஆனது Deputy Manager-Company Secretary பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். எனவே தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் 20.02.2024 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

CBSL காலிப்பணியிடங்கள்:

கனரா வங்கி செக்யூரிடீஸ் லிமிடெட்டில் (CBSL) Deputy Manager-Company Secretary பதவிக்கு என ஒரு பணியிடம்  காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 50 % மதிப்பெண்களுடன் ஏதாவது ஒரு துறையில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கனரா வங்கி வயது வரம்பு:

31.01.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

Deputy Manager-Company Secretary பதவிக்கு என தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31800-1300(4), 37000-1400-(5), -44000 (Pay scale 31800-44000) + D.A,/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.

வங்கி பணிக்கான தேர்வு செயல் முறை:

மேற்கூறிய பணிகளுக்கு விண்ணப்பதாரர்கள் குறுகிய பட்டியல் மற்றும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.canmoney.in என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனை வரும் 20.02.2024 க்குள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

தமிழக மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ரூ.20,000/- ஊதியத்தில் வேலை – 08ம் / 10ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

February 10, 2024 0

 தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS, Tiruvallur District) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Office Assistant, Multipurpose Worker, Dispensers போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 19.02.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு பணியிடங்கள்:

திருவள்ளூர் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Refrigeration Mechanic – 01 பணியிடம்
  • Assistant Cum Data Entry Operator – 02 பணியிடம்
  • Office Assistant – 01 பணியிடம்
  • Multipurpose Worker – 13 பணியிடங்கள்
  • Dispensers – 01 பணியிடம்
  • Lab Technician (Grade III) – 01 பணியிடம்

DHS பணிகளுக்கான கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற பள்ளி / கல்வி நிலையங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

  • Refrigeration Mechanic – ITI
  • Assistant Cum Data Entry Operator – Graduate Degree
  • Office Assistant – 10ம் வகுப்பு
  • Multipurpose Worker – 08ம் வகுப்பு
  • Dispensers – D.Pharm
  • Lab Technician (Grade III) – DMLT

DHS பணிகளுக்கான வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Refrigeration Mechanic – அதிகபட்சம் 45 வயது
  • Assistant Cum Data Entry Operator / Dispensers – அதிகபட்சம் 35 வயது
  • Office Assistant / Multipurpose Worker – அதிகபட்சம் 40 வயது
  • Lab Technician (Grade III) – அறிவிப்பில் காணவும்

DHS ஊதிய விவரம்:

  • Refrigeration Mechanic பணிக்கு ரூ.20,000/- என்றும்,
  • Assistant Cum Data Entry Operator பணிக்கு ரூ.15,000/- என்றும்,
  • Office Assistant பணிக்கு ரூ.10,000/- என்றும்,
  • Multipurpose Worker பணிக்கு ரூ.300/- (ஒரு நாளுக்கு) என்றும்,
  • Dispensers பணிக்கு ரூ.750/- (ஒரு நாளுக்கு) என்றும்,
  • Lab Technician (Grade III) பணிக்கு ரூ.13,000/- என்றும் ஊதியமாக வழங்கப்படும்.

DHS தேர்வு செய்யும் முறை:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 19.02.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.


🔻🔻🔻

IIT Madras-ல் புதிய வேலைவாய்ப்பு 2024 – கல்வி தகுதி, வயது வரம்பு குறித்த முழு விவரங்களுடன்!

February 10, 2024 0
IIT Madras ஆனது Chief Security Officer, Assistant Registrar, Sports Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / Masters Degree /  Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்

IIT Madras காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Chief Security Officer, Assistant Registrar, Sports Officer மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 64 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / Masters Degree /  Diploma தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIT Madras வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 27, 32, 45 மற்றும் 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Madras தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / Skill Test / Trade Test / Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 12.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

February 9, 2024

ஒரு நாளைக்கு ரூ.750 சம்பளம்: தேசிய ஊரக நலவாழ்வு மையத்தில் எக்கச்சக்க காலியிடங்கள்

February 09, 2024 0

 

திருவள்ளுர் மாவட்டத்தில் செயல்படும் மாவட்ட நல சங்கத்தின் (District Health Society) கட்டுப்பாட்டில் உள்ள - தேசிய ஊரக நலவாழ்வு குழுமம் மையத்தில் (National Health Mission) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு, எதிர்வரும் பிப்ரவரி மாதம் 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு (19.02.2024) கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

காலியிடங்கள் விவரங்கள்:

பதவியின் பெயர்: Refrigeration Mechanic

பதவியிடங்களின் எண்ணிக்கை: 1

வயது வரம்பு : 45 வயது வரை

மாத தொகுப்பூதியம் : ரூ. 20 ஆயிரம்தகுதி:  Certificate Course in ITI

Refrigeration Mechanic மற்றும் Air
Conditioning தொடர்புடைய துறைகளில் ஐடிஐ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் ; ஓராண்டு பணி முன்னனுபவம் இருத்தல் வேண்டும்;

பதவியின் பெயர்: Assistant cum Data Entry Operator

பதவியிடங்களின் எண்ணிக்கை : 2

வயது வரம்பு : 35 வயது வரை;

மாத தொகுப்பூதியம்: ரூ. 15 ஆயிரம்

தகுதி: கணினி அறிவு கொண்டிருத்தல் வேண்டும்; ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருத்தல் வேண்டும்

3. பதவியின் பெயர் : Office Assistant

பதவியிடங்களின் எண்ணிக்கை : 1

வயது வரம்பு: 40 வயது வரை

மாத தொகுப்பூதியம்: ரூ. 10  ஆயிரம்

கல்வித் தகுதி: 10ம் வகுப்புத் தேர்ச்சி

4. பதவியின் பெயர்: Multipurpose Worker

பதவியிடங்களின் எண்ணிக்கை : 13

வயது வரம்பு : 40 வயது வரை

மாத தொகுப்பூதியம் : நாளொன்றுக்கு ரூ. 300

தகுதி: 8ம் வகுப்புத் தேர்ச்சி

5.  பதவியின் பெயர் : Dispensers

வயது வரம்பு : 35 வயது வரை

பதவியிடங்களின் எண்ணிக்கை : 1

மாத தொகுப்பூதியம்: நாளொன்றுக்கு ரூ. 750

தகுதி: மருந்தியியல் துறையில் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பம் அனுப்பட வேண்டிய முகவரி:-

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதார பணிகள் மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதார பணிகள் அலுவலகம்,
54/5 சூரி தெரு,
திருவள்ளூர் மாவட்டம்:  602 001.
தொலைபேசி எண்: 044-27661562

நிபந்தனைகள்:-

1. இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
2. எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
3. பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்புதல் கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
4.விண்ணப்பங்கள் நேரிலோ / விரைவு தபால் (Speed Post) மூலமாக வரவேற்கப்படுகின்றன.
5. திருவள்ளுர் மாவட்ட இணையதள முகவரி https// tiruvallur.nic.in விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Amazon சென்னை நிறுவனத்தில் வேலை – டிகிரி தேர்ச்சி போதும்..!

February 09, 2024 0

 அமேசான் நிறுவனம் தற்போது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Sr. Software Development Engineer, CDS (Core Device Software) I பணிக்கு காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தனியார் துறை வேலைவாய்ப்பிற்கு தேவையான தகவல் அனைத்தையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

அமேசான் காலிப்பணியிடங்கள்:

அமேசான் நிறுவனத்தில் இருந்து வெளியாகியுள்ள அறிவிப்பில்Sr. Software Development Engineer, CDS (Core Device Software)  பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமேசான் கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம்  அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in computer science  அல்லது அதற்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் 1 ஆண்டு கால முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அமேசான் விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF



🔻🔻🔻

TN TRB இடைநிலை ஆசிரியர் வேலைவாய்ப்பு 2024 – 1760+ காலியிடங்கள் || அதிகாரப்பூர்வ வெளியீடு!

February 09, 2024 0

 

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் (TN TRB) அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் 2024 ஆம் ஆண்டுக்கென நடைபெறவுள்ள TN TRB SGT தேர்வுக்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு மூலம் இடைநிலை ஆசிரியர் (SGT) பணிக்கென ஒதுக்கப்பட்டுள்ள 1768  காலியிடங்கள் பூர்த்தி செய்யப்பட உள்ளது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 14.02.2024 அன்று முதல் இணையவழி வாயிலாக பெறப்பட உள்ளது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் பெறவும்.

TN TRB SGT 2024 காலியிடங்கள்:

TN TRB SGT 2024 தேர்வுக்கென மொத்தமாக 1768 (தோராயமாக) பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN TRB SGT 2024 கல்வி தகுதி:

இடைநிலை ஆசிரியர் பணிக்கான இத்தேர்வில் அரசு அல்லது UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

TN TRB SGT 2024 வயது வரம்பு:
  • இந்த TN TRB SGT 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024 அன்றைய நாளின் படி, 53 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • SC / ST / BCM / BC / MBC / DNC / DW பிரிவினை சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
  • TN TRB SGT 2024 காலியிடங்கள்:

    TN TRB SGT 2024 தேர்வுக்கென மொத்தமாக 1768 (தோராயமாக) பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

    TN TRB SGT 2024 கல்வி தகுதி:

    இடைநிலை ஆசிரியர் பணிக்கான இத்தேர்வில் அரசு அல்லது UGC அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் 12ம் வகுப்பு + Diploma / B.EL.Ed, Graduate Degree + B.Ed தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

    TN TRB SGT 2024 வயது வரம்பு:
    • இந்த TN TRB SGT 2024 தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.07.2024 அன்றைய நாளின் படி, 53 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
    • SC / ST / BCM / BC / MBC / DNC / DW பிரிவினை சேர்ந்தவர்களுக்கு 05 ஆண்டுகள் வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பம் – முழு விவரம் உள்ளே!

February 09, 2024 0

 உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி அவர்கள் மாநில தகவல் ஆணையர் பதவி இடங்கள் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார்.

மாநில தகவல் ஆணையர்:

உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கேபிகே வாசுகி அவர்களின் தலைமையில் மாநில தகவல் ஆணையர் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலமாக மாநில தகவல் ஆணையத்துக்கான புதிதாக இரண்டு பணியிடங்கள் நிரப்பம் செய்யப்படவுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இயலியல், வெகுஜன ஓடம், ஆட்சி பணி போன்ற துறைகளில் அனுபவமும் புலமையும் கொண்ட நபர்கள் தகவல் ஆணையர் பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.

தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் பணியில் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது எட்டும் வரை இவற்றில் எது முன்னர் உள்ளதோ அந்த காலம் வரை பதவியில் இருக்கலாம். மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நீதிபதி கே பி கே வாசுகி, தலைவர், தெரிவுக் குழு, இரண்டாம் தளம், கத்தோலி மையம், ஆர்மீனியன் தெரு, பாரிமுனை, சென்னை 600001. என்ற முகவரியில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

TCS நிறுவனத்தில் காத்திருக்கும் Engineer வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 09, 2024 0

 TCS நிறுவனத்தில் இருந்து Azure Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தனியார் துறை பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் எங்கள் வலைப்பதிவின் மூலம் அறிந்து கொண்டு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

TCS நிறுவன காலிப்பணியிடங்கள்:

Azure Engineer பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

 Engineer கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் இருந்து Bachelor of Technology முடித்தவர்கள்   விண்ணப்பிக்கலாம்.

பணி அனுபவம்:

4 முதல் 10 ஆண்டுகள் வரை முன் பணி அனுபவம் உள்ள மாணவர்கள் TCS  பணியமர்த்தல் செயல்முறைக்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவர்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு  செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

TCS தனியார் துறையில் விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் 17.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online



🔻🔻🔻

Day 72 | Aptitude & Mental Ability | Alphanumeric Series

February 09, 2024 0

Day 72 | Geography | Part 11 | Transport & Tourism

February 09, 2024 0

Day 72 | Current Events | November 2023 | Part 1

February 09, 2024 0

Day 71 | Aptitude & Mental Ability | Dice & Puzzles

February 09, 2024 0

MISSION I'MPOSSIBLE | Day 71 | Geography | Part 10 | Agricultural Pattern

February 09, 2024 0