Agri Info

Adding Green to your Life

February 11, 2024

VOC துறைமுகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ரூ.2,60,000/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

February 11, 2024 0
VOC துறைமுகத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – ரூ.2,60,000/- ஊதியம் || உடனே விண்ணப்பியுங்கள்!

வ.உ.சிதம்பரனார் துறைமுக கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Secretary பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Secretary பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகவும் தகுதியானவர்களுக்கு ரூ.1,00,000/- முதல் ரூ.2,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.03.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

 

KVK நிறுவனத்தில் 12ம் வகுப்பு முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

February 11, 2024 0

 அரியலூர் மாவட்ட Creed Krishi Vigyan Kendra நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. SMS (Animal Science), Stenographer ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கொடுக்கப்பட்டுள்ள கால நேரத்திற்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

KVK பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, SMS (Animal Science), Stenographer ஆகிய பணிகளுக்கு தலா 01 பணியிடம் வீதம் மொத்தமாக 02 பணியிடங்கள் Creed KVK Ariyalur நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Stenographer / SMS கல்வி விவரம்:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

SMS (Animal Science) – Veterinary Science, Animal Science பாடப்பிரிவில் Master Degree

Stenographer – 12ம் வகுப்பு

Stenographer / SMS வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Stenographer / SMS சம்பள விவரம்:

இந்த Creed KVK நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Matrix Level – 4 / 10 என்ற ஊதிய அளவுகளின் படி மாத சம்பளம் பெறுவார்கள்.

KVK  தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

KVK  விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Creed KVK நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பு வெளியான 20 நாளுக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.



🔻🔻🔻

ESIC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – சம்பளம்: ரூ.1,13,434/- || நேர்காணல் மட்டுமே!

February 11, 2024 0

 

ESIC நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு வேலை – சம்பளம்: ரூ.1,13,434/- || நேர்காணல் மட்டுமே!

தொழிலாளர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தில் (ESIC) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. Junior Residents, Senior Residents ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 20 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.


ESIC காலியிடங்கள்:

ESIC நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

  • Junior Residents – 10 பணியிடங்கள்
  • Senior Residents – 10 பணியிடங்கள்
Jr / Sr Residents கல்வி விவரம்:

இப்பணிகளுக்கான நேர்காணலில் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS, MD, DNB, PG Diploma, MS, MDS ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள இயலும்.

Jr / Sr Residents வயது விவரம்:

21.02.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Junior Residents – அதிகபட்சம் 30 வயது
  • Senior Residents – அதிகபட்சம் 45 வயது
  • Jr / Sr Residents சம்பள விவரம்:

    இந்த ESIC நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் ரூ.67,700/- முதல் ரூ.1,13,434/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

    ESIC தேர்வு செய்யும் முறை:

    இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் 21.02.2024 அன்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

    ESIC விண்ணப்பிக்கும் வழிமுறை:

    இந்த ESIC நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து நேர்காணலுக்கு வரும் போது நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

    Download Notification PDF 1


🔻🔻🔻

தமிழக அரசில் 33 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

February 11, 2024 0

 

தமிழக அரசில் 33 காலியிடங்கள் – சம்பளம்: ரூ.40,000/- || விண்ணப்பிக்க தவறிவிடாதீர்கள்!

தமிழக அரசின் நாகப்பட்டினம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்ட நலவாழ்வு சங்கங்களில் (DHS) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Microbiologist, Ayush Doctor, Dispenser, Therapeutic Assistant, Multipurpose Worker, Cemonc Security Guard போன்ற பல்வேறு பணியிடங்கள் காலியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கென மொத்தமாக 30 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

தமிழக அரசு பணியிடங்கள்:

மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் (DHS) Microbiologist, Ayush Doctor, Dispenser, Therapeutic Assistant, Multipurpose Worker, Cemonc Security Guard, Hospital Worker, Social Worker, Physiotherapist, Security, Counselor, Sanitary Worker, Speech Therapist, OT Assistant, Radiographer, Lab Technician, Health Inspector, ANM ஆகிய பணிகளுக்கென மொத்தமாக 33 பணியிடங்கள் காலியாக உள்ளது.

மாவட்ட நலவாழ்வு சங்க கல்வி விவரம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 08ம் வகுப்பு, 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, Diploma, B.Sc, BA, MSW, BSM, D. Pharm, MBBS, Post Graduate Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மாவட்ட நலவாழ்வு சங்க வயது விவரம்:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும். கூடுதல் தகவலை அறிவிப்பில் காணவும்.

மாவட்ட நலவாழ்வு சங்க ஊதிய விவரம்:
  • இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.8,500/- முதல் ரூ.40,000/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.
  • மேலும் Dispenser பணிக்கு ரூ.750/- என்றும், Multipurpose Worker பணிக்கு ரூ.300/- என்றும் ஒரு நாளுக்கான ஊதியமாக வழங்கப்படும்.
DHS தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

DHS விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த மாவட்ட நலவாழ்வு சங்கம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் தபால் செய்ய வேண்டும்.

  • Microbiologist – 22.02.2024
  • மற்ற பணிகள் – 17.02.2024
Download Notification PDF 1
Download Application From PDF 1
Download Notification PDF 2
Download Application Form PDF 2



🔻🔻🔻

February 10, 2024

பனங்கிழங்கு சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குதா..? எங்க பார்த்தாலும் வாங்கிடுங்க..!

February 10, 2024 0

 கிராமங்கள் வழியே பயணம் செய்யும்போது இந்த பனங்கிழங்கை காணாமல் கடக்க முடியாது. குறிப்பாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரைதான் பனங்கிழங்கு சீசன். பனங்காயை மண்ணில் புதைத்து அது குருத்தாக வளரத்தொடங்கும்போது பிடுங்கிவிடுவார்கள். அவ்வாறு பிடுங்கப்படும் பனை மரத்தின் வேர்களைதான் பனங்கிழங்காக நாம் சாப்பிடுகிறோம். இந்த பனங்கிழங்குகள் வெறும் சுவையை மட்டும் தருவதல்ல.. எண்ணற்ற நன்மைகளையும் உள்ளடக்கியுள்ளன. அவை என்னென்ன என்பதை இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

நார்ச்சத்து நிறைந்தது : பனங்கிழங்கு நார்ச்சத்துக்கு மூல ஆதாரமாக உள்ளது. குடல் அழற்சி, வயிற்று மந்தம், மலச்சிக்கல், செரிமானமின்மை போன்ற பிரச்சனைகளுக்கு பனங்கிழங்கு சிறந்தத உணவு.

கால்சியம் சத்து நிறைந்தது : தசை வளர்ச்சிக்கும், வலு பெறுவதற்கும் பனங்கிழங்கு மிகவும் நல்லது. எலும்புகளின் உறுதி தன்மைக்கும், பற்களின் ஆரோக்கியத்திற்கும் பனங்கிழங்கில் தக்க பலன்கள் கிடைக்கின்றன. இதனால் வயதான காலத்தில் ஏற்படும் எலும்பு தொடர்பான பிரச்சனைகள், எலும்புப்புரை, எலும்பு மஜ்ஜை, மூட்டு அழற்சி போன்ற பிரச்சனைகளை வராமல் தடுக்கிறது.

குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் : உணவில் உள்ள கார்போஹைட்ரேட் இரத்தத்தின் குளுக்கோஸ் அளவில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை பொறுத்து கிளைசமிக் இண்டெக்ஸ் கணக்கிடப்படுகிறது. அந்தவகையில் பனங்கிழங்கில் குறைவான கிளைசமிக் இண்டெக்ஸ் இருப்பதால் மெதுவாக செரிமானம் செய்து குளுக்கோஸ் அளவையும் மெதுவாகவே உயர்த்துகிறது. எனவேதான் இது சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்ததாக கருதப்படுகிறது.

புரோட்டீன் நிறைந்தது : உடல் செல்களுக்கு புரோட்டீன் மிகவும் அவசியம். அதேசமயம் என்சைம், ஹார்மோன்கள் போன்ற உடலில் முக்கிய கெமிக்கல்களை உற்பத்தி செய்வதற்கும் புரோட்டீன் அவசியம். எனவே உங்களுக்கு புரோட்டீன் பற்றாக்குறை இருந்தால் பனங்கிழங்கு சிறந்த ஆதாரமாக இருக்கும்.

செரிமானம் : பனங்கிழங்கு உணவு செரிமானத்திற்கு தேவைப்படும் என்சைமை உற்பத்தி செய்வதால் செரிமானம் சீராக இருக்கும். அதோடு உணவின் ஊட்டச்சத்து உறிஞ்சலும் வேகமாக இருக்கும்.

வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கும் : பனங்கிழங்கில் இருக்கும் புரதச்சத்து ஒட்டுமொத்த உடல் இயக்கத்திற்கும் அத்தியாவசிய தேவையாக உள்ளது.அதாவது உடலின் செல்களை பராமரிப்பது, உறுப்புகளை பழுது நீக்கம் செய்வது, சருமத்தை புத்துணர்ச்சியாக்குவது, எலும்பு வளர்ச்சியை ஊக்குவிப்பது, தசை வளர்ச்சியை மேம்படுத்துவது என அனைத்தையும் செய்வதற்கு புரோட்டீன் முக்கிய பங்காற்றுகிறது. அது பனங்கிழங்கில் நிறைவாக இருப்பதால் வளர்ச்சிதை மாற்றத்தில் எந்த இடையூறும் இருப்பதில்லை.

இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது : உங்களுக்கு அனீமியா எனப்படும் இரும்புச்சத்து குறைபாடு இருக்கிறது எனில் பனங்கிழங்கு சிறந்த உணவாக இருக்கும். இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் உடல் சோர்வு, கவனமின்மை, குமட்டல், தலைவலி மற்றும் வயிற்று தொந்தரவுகள் இருக்கிறது எனில் இவை அத்தனைக்கும் பனங்கிழங்கில் பலன் கிடைக்கும். இது சிவப்பு இரத்த செல்களை பராமரித்து உடலுக்கு தேவையான இரும்புச்சத்தை அளிக்கிறது. இதனால் உடலின் இரத்த ஓட்டம் சீராகிறது. இதனால் உறுப்புகளுக்கு தேவையான ஆக்ஸிஜனும் கிடைக்கிறது.

உடல் எடை குறைப்பு : ஒரு சில உணவுகள் மட்டுமே அதிக ஊட்டச்சத்தும் குறைவான கலோரியும் கொண்டிருக்கும். அந்த வகையில் பனங்கிழங்கு மிகச்சிறந்த உணவு. எனவே நீங்கள் உடல் எடையை குறைக்கும் முயற்சியில் இருக்கிறீர்கள் எனில் பனங்கிழங்கு நல்ல டயட் உணவாக இருக்கும். நார்ச்சத்து நிறைந்த உணவு என்பதால் நீண்ட நேரம் பசி இல்லாமல் வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இதனால் தேவையற்ற க்ரேவிக்ஸை தவிர்க்கலாம்.

இதய ஆரோக்கியம் : பனங்கிழங்கு ஒமேகா-3 ஃபேட்டி ஆசிடிற்கு சிறந்த மூலமாக இருப்பதால் நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் உணவாக இருக்கிறது. இதனால் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைவும் கணிசமாக குறைக்கிறது. ஒமேகா-3 இருந்தாலே நோய் அழற்சி பிரச்சனைகளுக்கும் பலன் தரும். எனவே இயற்கையான முறையில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு பனங்கிழங்கு சிறந்ததாக உள்ளது. பொட்டாசியம் தேவையையும் பனங்கிழங்கு பூர்த்தி செய்வதால் இரத்தக்குழாய் அடைப்பையும் தடுக்கிறது. இதனால் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பாதிப்புகள் வராமல் தடுக்க பனங்கிழங்கு உதவுகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி : நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் பனங்கிழங்கு நல்ல பலன் அளிக்கிறது. விட்டமின் சி நிறைந்திருப்பதால் நோய் தொற்றுகளை எதிர்த்துப்போராட உதவும் வெள்ளை இரத்த செல்களை அதிகரிக்கச் செய்கிறது. விட்டமின் ஏ இருப்பதால் ஆண்டி ஆக்ஸிடண்ட் கிடைக்கிறது. எனவே நோய் எதிர்ப்பு சக்தி வேண்டுமெனில் பனங்கிழங்கை தாராளமாக சாப்பிடலாம்.

புற்றுநோயை தடுக்கிறது : இயற்கையான முறையில் ஆண்டி ஆக்ஸிடண்டை அள்ளித்தரும் பனங்கிழங்கு புற்றுநோய் செல்களுக்கு எதிராகவும் போராட உதவுகிறது. விட்டமின் சி, விட்டமின் ஏ, அமினோ ஆசிட், புரோட்டீன் என அனைத்தும் ஒன்று சேர கிடைப்பது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்க உதவுகிறது.

🔻 🔻 🔻 

உங்கள் உணவில் தினமும் புதினா இலையை ஏன் சேர்க்க வேண்டும்..? 6 காரணங்கள் இதோ..

February 10, 2024 0

 இந்திய சமையலறையில் நீக்கமற நிறைந்திருக்கும் புதினா இலையிலிருந்து நமக்கு கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியே இந்தக் கட்டுரையில் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

ஆரோக்கியத்தை பலப்படுத்தும் புதினா இலை : புத்துணர்ச்சியான நறுமணமும் சுவையும் கொண்ட புதினா இலையில் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடிய பல நன்மைகள் உள்ளது. ஆனால் நாம் வெறும் சுவைக்காக மட்டுமே புதினா இலையை சமையலில் பயன்படுத்துகிறோம். இனிமேல் அந்த தவறை செய்யாதீர்கள். ஏனென்றால் புதினா இலை முழுதுமே பல சத்துக்கள் உள்ளது. நன் அன்றாட உணவில் புதினா இலையை சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்தே இந்தக் கட்டுரையில் பார்க்கப் போகிறோம்.

ஊட்டச்சத்து : நம் உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பல ஊட்டச்சத்துகள் புதினா இலையில் இருக்கின்றன. நமது கண் பார்வைக்கு முக்கியமாக தேவைப்படும் வைட்டமின் ஏ, நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்தும் ஆண்டி ஆக்ஸிடெண்ட்டான வைட்டமின் சி, இரும்புச்சத்து, மாக்னீசியம், ஃபோலேட் போன்ற நம் மெடபாலிக் செயல்பாடுகளுக்கும் திசுக்களின் வளர்ச்சிக்கும் உதவக்கூடிய பல ஊட்டச்சத்துகள் புதினா இலையில் உள்ளன.

செரிமானத்திற்கு உதவுகிறது : நமது வயிறுகளுக்கு இதமளிக்கக் கூடிய புதினா இலை, செரிமான தொந்தரவுகளை போக்குகிறது. குறிப்பாக குடல் அழற்சி நோயுள்ளவர்கள் புதினா இலையை உணவில் சேர்த்துக் கொண்டால் மிகவும் நல்லது. புதினா இலையிலிருந்து தயாரிக்க கூடிய பெப்பர்மிண்ட் ஆயில், குடல் அழற்சி நோயின் அறிகுறிகளை குணப்படுத்த உதவுகிறது. இயற்கையாகவே புதினா இலையில் குளிர்ச்சி தன்மை உள்ளதால் கோடை காலத்திற்கு இது மிகவும் உதவியாக இருக்கும். லெமன் ஜூஸில் சிறிதளவு புதினா சேர்த்து குடிப்பது அல்லது புதினா டீ உங்களை புத்துணர்ச்சி அடையச் செய்யும்.

வாய் சுகாதாரம் : புத்துணர்ச்சியான சுவாசத்திற்கும் தீங்கிழைக்கும் பாக்டீரியாவை அழிப்பதற்கும் புதினா இலை உதவியாக இருக்கிறது. சிறிதளவு புதினா இலையை வாயில் போட்டு மெல்லுவதால், ஈறுகள் மற்றும் பற்களின் அரோக்கியம் பலம் பெறுகிறது.

ஒவ்வாமையை போக்குகிறது : புதினா இலையில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒவ்வாமையை போக்குவதிலும் ஆஸ்துமா பிரச்சனைகளை சரி செய்வதிலும் உதவியாக இருக்கிறது. புதினா இலையின் நறுமணத்தை நாம் சுவாசிக்கும் போது அலர்ஜி அறிகுறிகளிலிருந்து நிவாரணம் கிடைக்கும்.

சரும ஆரோக்கியம் : புதினாவில் உள்ள ஆண்டி ஆக்ஸிடெண்ட் பண்புகள் சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. மேலும் ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் எரிச்சலிருந்தும் சருமத்தை புதினா இலை காக்கிறது. அழகுக்கலை பொருட்களில் புதினா இலையை சேர்த்துக்கொள்வதால் உங்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கிறது.

புதினா இலையை டயட்டில் சேர்ப்பது எப்படி? புதினா சட்னி, புதினா டீ என பல உணவுகளை நாம் புதினா இலையிலிருந்து தயாரிக்கலாம். சாலட் செய்வதாக இருந்தால் அதில் கொஞ்சம் புதினா இலையை சேர்ப்பது சுவையை அதிகரிக்கும். உங்கள் டெசர்டின் சுவை மற்றும் நறுமணத்தை அதிகப்படுத்த சிறிதளவு புதினா இலையை சேர்க்கவும். நம் உணவிற்கு சுவையை அதிகரிப்பதோடு நம்முடைய ஒட்டுமொத்த உடல்நலத்திற்கும் ஆரோக்கியம் தரும் மகத்துவம் புதினா இலையில் உள்ளது.


🔻 🔻 🔻 

வாரத்தில் ஒரு முறையேனும் மத்தி மீன் சாப்பிடனும்.. ஏன் தெரியுமா..?

February 10, 2024 0

மீன் பற்றி தெரிந்தவர்களுக்கு மத்தி மீன் பற்றி சொல்லவே தேவையில்லை. பட்ஜெட் விலையில் கிடைத்தாலும் அதனால் கிடைக்கும் நன்மைகளுக்கு அளவில்லை. அதனால்தான் வாரம் ஒரு முறையேனும் மத்தி மீன் வாங்கி சமைக்க சொல்வார்கள். சிலர் அதன் குறைந்த விலையை கண்டு குறைத்து மதிப்பிடுவார்கள். சிலர் அதில் முள் அதிகமாக இருக்கும் என்பதால் அதை பெரும்பாலும் வாங்க மாட்டார்கள். அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கிட்டா இனிமேல் தேடிப்போய் மத்தி மீன் வாங்குவீங்க.. அப்படி என்னதான் நன்மைகள் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா..? அப்போ மேலும் படிங்க.. 

மத்தி மீனில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்ன..? மத்தி மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் டி, கால்சியம், புரோட்டீன், நல்ல கொழுப்பு, ஃபோலேட், விட்டமின் பி12, செலினியம், பாஸ்பரஸ் போன்ற நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சரி இவற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : வாரம் ஒரு முறையேனும் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். வயதான காலத்தில் இதய நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.

இரத்த ஓட்டம் அதிகரிக்கும் : அழற்சி பண்புகளுக்கு எதிராக போராடுவதால் இரத்த உறைதல் பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது. இதனால் மற்ற உறுப்புகளுக்கும் சீரான இரத்த ஓட்டம் கிடைக்கிறது.

கூர்மையான கண் பார்வை : வயது செல்ல செல்ல உண்டாகும் பார்வை குறைபாடு பிரச்சனைகளுக்கு மத்தி மீன் சிறந்த மருந்தாக இருக்கிறது.

புற்றுநோயை தவிர்க்க உதவுகிறது : புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் பண்புகள் மத்தி மீனில் இருப்பதால் எதிர்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.

எலும்புகளுக்கு ஆரோக்கியம் : மத்தி மீனில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. இதனால் வயதான போது வரும் மூட்டு வலி பிரச்சனைகளுக்கும் பலனளிக்கிறது.

நோய் எதிர்ப்ப்ய் சக்தி அதிகரிக்கிறது : மத்தி மீனில் விட்டமின் டி நிறைவாக இருப்பதால் உணவுகளின் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்ச உதவுகிறது. இதனால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைத்துவிடுகிறது.

சரும ஆரோக்கியம் : தொடர்ச்சியாக மத்தி மீன் சாப்பிட்டு வர ஹெல்தியான மற்றும் பளபளக்கும் சருமத்தை பெறுவீர்கள். இதை நீங்களே கண்கூட உணரலாம்.

நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது : மத்தி மீனில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதச்சத்து இருப்பதால் உணவில் உள்ள இரத்த சர்க்கரை அளவை மெதுவாக உறிஞ்சுகிறது. இதனால் இன்சுலின் தட்டுப்பாடும் குறைகிறது.

ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது : ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் ஆண்டி ஆக்ஸிடண்டிற்கு பஞ்சமே இருக்காது.

முழுமையாக உணர வைக்கும் : அதிக புரதம் மற்றும் குறைவான கொழுப்பு இருப்பதால் நிறைவாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசியே எடுக்காது. ஃபுட் க்ரேவிங் இருக்காது. இதனால் எளிதில் உடல் எடையும் குறையும்.


🔻 🔻 🔻 

தமிழகத்தில் உள்ள IOB வங்கியில் வேலை – சம்பளம்: ரூ.12,000/-

February 10, 2024 0

 இந்தியன் ஓவர்சீஸ் வங்கியால் நிறுவப்பட்ட அறக்கட்டளையான “SNEHA” தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் 14 கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனங்களை (RSETIs) நடத்தி வருகிறது. இந்த அறக்கட்டளைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நிறுவப்பட்ட RSETI அலுவலக உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து  அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IOB காலிப்பணியிடங்கள்:

அலுவலக உதவியாளர்  பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

தகுதி விவரங்கள்:

• கணினி அறிவுடன் பட்டதாரியாக இருக்க வேண்டும்
• கரூர் மாவட்டத்தில் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
• அடிப்படைக் கணக்கியல் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
•  உள்ளூர் மொழியில் சரளமாக பேச மற்றும் எழுத தெரிந்திருக்க வேண்டும்.
• ஆங்கிலம் / இந்தியில் சரளமாக இருப்பது கூடுதல் தகுதி
• MS Office (MS-Word, MS-Excel மற்றும் MS-Power point), Tally & Internet ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராக இருக்க வேண்டும்.
• உள்ளூர் மொழியில் தட்டச்சு செய்யும் திறன் அவசியம், ஆங்கிலத்தில் தட்டச்சு திறன் கூடுதல் நன்மை என தெரிவிக்கப்படுள்ளது.

தேர்வு செயல் முறை:

(i) Written Test
(ii) Personal Interview

Office Assistant வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 22 முதல் அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகார்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.12,000/-ஊதியம் வழங்கப்பட உள்ளது.

IOB விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து INDIAN OVERSEAS BANK Regional Office 12/1, A. P T. Road, Park Road-Sathy Road Jn Erode-638 003. என்ற முகவரிக்கு அறிவிப்பு வெளியான 15 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

இந்திய அரசு நிறுவன வேலைவாய்ப்பு 2024 – ரூ.78,000/- மாத ஊதியம்!

February 10, 2024 0

 இந்திய வனவிலங்கு நிறுவனம் (WII) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. Project Scientist III / II / I, Project Associate II / I, Accountant, Senior Project Associate போன்ற பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 25 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.


WII பணியிடங்கள்:

தற்போது வெளியான அறிவிப்பின் படி, Project Scientist III / II / I, Project Associate II / I, Accountant, Senior Project Associate, Principal Project Associate, Finance Assistant, Language or Copy Editor, Project Assistant ஆகிய பணிகளுக்கென 25 பணியிடங்கள் WII நிறுவனத்தில் காலியாக உள்ளது.

WII கல்வித் தகுதி:  

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree, Doctoral Degree, B.Tech, M.Tech, M.Sc, B.Com, M.Com ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவராக இருக்க வேண்டும்.

WII வயது வரம்பு:

Project Scientist III பணிக்கு 45 வயது எனவும்,

Project Scientist II / Senior Project Associate / Principal Project Associate பணிகளுக்கு 40 வயது எனவும்,

Finance Assistant பணிக்கு 50 வயது எனவும்,

மற்ற பணிகளுக்கு 35 வயது எனவும் அதிகபட்ச வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

WII சம்பளம்:  

இந்த WII நிறுவன பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ.20,000/- முதல் ரூ.78,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

WII தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

WII விண்ணப்ப கட்டணம்:

SC / ST / OBC / EWS / உடல் ஊனமுற்றவர்கள் – ரூ.100/-

மற்ற நபர்கள் – ரூ.500/-

WII விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த WII நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலுடன் இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 19.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

ரூ.75,000/- சம்பளத்தில் மத்திய அரசு வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

February 10, 2024 0

 தேசிய மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆனது Senior Resource Person (Finance) பதவிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. மத்திய அரசு துறையில் மாதம் ரூ.75,000/- க்கு மேல் சம்பள வாங்க விரும்பும், ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

NIELIT காலிப்பணியிடங்கள்:

Senior Resource Person (Finance) பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 62 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

NIELIT கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து Post Graduate Degree in Commerce தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தகவல் தொழில்நுட்ப நிறுவன சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.75,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு தகுதியனவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

மத்திய அரசு பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 22.02.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online


🔻🔻🔻

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு படித்தவர்களுக்கான அரசு வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 10, 2024 0

 புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காலியாக உள்ள DEO, Computer Operator, Security, & Attender பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆர்வமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள்  06/02/2024 முதல் 22/02/2024 வரை வரவேற்கப்படுகின்றன.மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காலிப்பணியிடங்கள்:

Chairside Attender – 10 பணியிடங்கள்
Computer Operator – 1 பணியிடம்
Data entry operator – 1 பணியிடம்
Sweepers & Scavengers – 10 பணியிடங்கள்
Attendant / Attender – 18 பணியிடங்கள்
Security Personnel – 05 பணியிடங்கள்
Department Secretaries – 04 பணியிடங்கள்

என மொத்தம் 49 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35 முதல் 45 க்குள் இருக்கவேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Chairside Attender – Diploma In Nursing
Computer Operator – Bachelor’s Degree in Computer Science with Typewriting Tamil and English
Data entry operator – Bachelor’s Degree in Computer Science with Typewriting Tamil and English
Sweepers & Scavengers – 8th
Attendant / Attender – 10th
Security Personnel – 8th
Department Secretaries – Bachelor’s Degree in Computer Science & Geography Science with Typewriting Tamil and English சம்பள விவரம்:

Chairside Attender – Rs.12,480/-

Computer Operator & Data entry operator -Rs.17,430/-

Sweepers & Scavengers & Attendant / Attender – Rs.12,480/-

Security Personnel & Department Secretaries – Rs.14,430/-

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் முதலில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து  22/02/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.



🔻🔻🔻