Agri Info

Adding Green to your Life

February 11, 2024

JIPMER ஆணையத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

February 11, 2024 0

 JIPMER ஆணையத்தில் Senior Research Fellow காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!

Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை JIPMER ஆனது அதன் அதிகாரப்பூர்வ தளத்தில் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு JIPMER-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

JIPMER காலிப்பணியிடங்கள்:

Senior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Senior Research Fellow கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc / M.Phil / PhD தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

JIPMER வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு JIPMER-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

JIPMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து jipmer.neuroresearch@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 16.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF



🔻🔻🔻

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 11, 2024 0

 மாதம் ரூ.43,000/- ஊதியத்தில் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
  • அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன், நான்கு சக்கர அல்லது இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    Download Notification 2024 Pdf

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் Project Associate வேலைவாய்ப்பு – சம்பளம்: ரூ.25,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

February 11, 2024 0

 பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆனது Project Associate – I பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 1 பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BDU காலிப்பணியிடங்கள்:

Project Associate – I பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Associate கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Post Graduate in Geography / Environmental Science தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

BDU வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Project Associate ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.25,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BDU தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து masilamani@bdu.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.23.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

February 11, 2024 0

 

அழகப்பா பல்கலைக்கழகத்தில் நேர்காணல் – டிகிரி முடித்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்பு!

அழகப்பா பல்கலைக்கழகத்தில் (Alagappa University) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Project Fellow பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளார்கள். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அழகப்பா பல்கலைக்கழக காலியிடங்கள்:

அழகப்பா பல்கலைக்கழகத்தில் (Alagappa University) Project Fellow பணிக்கென 02 பணியிடங்கள் காலியாக உள்ளது.

Project Fellow கல்வி விவரம்:

Project Fellow பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் M.Sc, M.Tech முடித்தவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Project Fellow வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணவும்.

Project Fellow ஊதிய விவரம்:

இந்த அழகப்பா பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் ரூ.10,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Alagappa University தேர்வு செய்யும் முறை:

23.02.2024 அன்று காலை 11.00 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் மூலம் இப்பணிக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Alagappa University விண்ணப்பிக்கும் வழிமுறை:

Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்பத்துடன் தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து sanjeevslab@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 21.02.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.

Download Notification PDF



🔻🔻🔻

அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

February 11, 2024 0

 


அழகப்பா பல்கலைக்கழகத்தில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.31,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

Junior Research Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Junior Research Fellow பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரப்பூர்வ முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 03.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF


🔻🔻🔻

தமிழ் மொழியிலும் எஸ்எஸ்சி கான்ஸ்டபிள் தேர்வு: மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு

February 11, 2024 0

 மத்திய ஆயுத போலீஸ் படைகளில் (சிஏபிஎஃப்) கான்ஸ்டபிள்களை சேர்ப்பதற்கான கான்ஸ்டபிள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக, மத்திய ஆயுத படைகளில் (CAPFs) காலியாக உள்ள காவலர் (பொதுப் பணி) மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையில் காலியாக உள்ள தலைமையாக காவல் படை மற்றும் ரைபிள் மேன்(பொதுப் பிரிவு) தேர்வு பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான இளைஞர்களை ஈர்க்கும் பணியாளர் தேர்வு ஆணையம் (எஸ்.எஸ்.சி) நடத்தும் முக்கிய தேர்வுகளில் கான்ஸ்டபிள் தேர்வும் ஒன்றாகும். இந்த ஆள்சேர்க்கையின் மூலம் 26146 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதற்கான, எழுத்துத் தேர்வு நாடு முழுவதும் 128 நகரங்களில் சுமார் 48 லட்சம் பேருக்கு 2024 பிப்ரவரி 20 முதல் மார்ச் 7 வரை தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கான்ஸ்டபிள் தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் தவிர 13 பிராந்திய மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மத்திய ஆயுத போலீஸ் படைகளில் உள்ளூர் இளைஞர்களின் பங்களிப்பை அதிகரிக்கவும், பிராந்திய மொழிகளை ஊக்குவிக்கவும் இந்த வரலாற்று முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த முடிவின் படி, கான்ஸ்டபிள் தேர்வு வினாத்தாள்கள் இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்துடன் கூடுதலாக அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தமிழ், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி மற்றும் கொங்கனி மொழிகளில் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

பல்லாவரத்தில் பிப்.17 மெகா வேலைவாய்ப்பு முகாம்: 150-க்கு மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன

February 11, 2024 0

 பல்லாவரம்: பல்லாவரத்தில் வேலைவாய்ப்பு அற்ற இளைஞர்களுக்கு உதவும் பொருட்டு வரும் 17-ம் தேதி மெகா வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இதில் பங்கேற்று பலன் அடையலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வேலை வாய்ப்பற்றவர்களுக்கு வாய்ப்பை வழங்கும் நோக்கில் மாவட்ட வாரியாக வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்லாவரம் வேல்ஸ் கல்வி நிறுவனத்தில் வரும் 17-ம் தேதி (சனிக்கிழமை) மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் நடத்தும் சிறப்பு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இம்முகாம் காலை 9.00 மணி முதல் மதியம் 3.00 மணி வரை நடைபெறவுள்ளது.இம்முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளைச் சார்ந்த 150-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் வேலை அளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இந்த நிறுவனங்களில் சுமார் 15 ஆயிரம் காலி பணியிடங்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இம்முகாமில் 8,10,12-ம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பட்டப் படிப்பு, பொறியியல், செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி போன்ற அனைத்து விதமான கல்வித் தகுதியை உடையவர்களும் கலந்துகொண்டு பயன்பெறலாம். வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ள விருப்பமுள்ள வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுபவர்களும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவுசெய்யுமாறு தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 4 மெகா வேலைவாய்ப்பு முகாம், 22 சிறிய அளவிலான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றுள்ளன. இதில் 81 ஆயிரத்து 291 பேர் பங்கேற்றுள்ளனர். இதில் 10,321 பேர் வேலை வாய்ப்பை பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

சேலத்தில் பிப்.16-ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

February 11, 2024 0

 சேலம்: சேலத்தில் வரும் 16-ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது, என மாவட்ட ஆட்சியர் பிருந்தா தேவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் ஆகியவை நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் வரும் 16-ம் தேதி சேலம் கோரி மேட்டில் அமைந்துள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ளது. இம்முகாமில் 100-க்கும் மேற்பட்ட முன்னணி வேலையளிக்கும் நிறுவனங்கள் பங்கேற்று 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு பணியாளர்களைத் தேர்வு செய்யவுள்ளன.இம்முகாமில் அனைத்து விதமான கல்வித் தகுதி உள்ளவர்களும் கலந்துகொள்ளலாம். முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலையளிக்கும் நிறுவனங்களும், வேலை நாடுநர்களும் tnprivatejobs.tn.gov.in என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு jobfairmccsalem@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 0427-2401750 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம், என்று தெரிவித்துள்ளார்.


🔻🔻🔻

வேலை தேடும் இளைஞர்களுக்கு சூப்பர் அறிவிப்பு...சென்னை உயர்நீதிமன்றத்தில் எக்கச்சக்க காலியிடங்கள் அறிவிப்பு

February 11, 2024 0

 சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள தட்டச்சர் (Typist), தொலைபேசி ஆப்ரேட்டர் (Telephone Operator),  காசாளர் (cashier),  ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xeorx operator) ஆகிய காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 33 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்க கடைசி தேதி 13/02/2024 ஆகும்.

தட்டச்சர் பதவியின் கீழ் 22 பணியிடங்களை நிர்ப்பப்பட உள்ளன. இப்பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள்,  ஏதேனும் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும், தமிழ்/ ஆங்கிலம் ஆகிய இரண்டிலும் தட்டச்சு தேர்வில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். கூடுதலாக,  தமிழ்நாடு அரசு தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தின் கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (CERTIFICATE COURSE IN COMPUTER ON OFFICE AUTOMATION)


1 தொலைபேசி ஆப்ரேட்டர் (Telephone Operator) பணியிடமும்,  2 காசாளர் (cashier) பணியிடமும், 8 ஜெராக்ஸ் ஆபரேட்டர் (Xeorx operator) பணியிடங்களும் நிர்ப்பப்பட உள்ளன. இந்த,  காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ. 500 ஆகும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் ஆகியோர் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு முறை:  எழுத்துத்தேர்வு (Common Written Examination), செய்முறைத் தேர்வு (Skill Test) மற்றும்  வாய்மொழி தேர்வின் (Viva - Voce) அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

Notification :

விண்ணப்பிப்பது எப்படி:  விண்ணப்பதாரர், பதிவு செய்வதற்காக, சென்னை உயர்நீதிமன்றத்தின் (https://www.mhc.tn.gov.in) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பின்வரும் விவரங்களைப்    பதிவுசெய்தல் வேண்டும்.
(i) மின்னஞ்சல் முகவரி (Email-ID)
(ii) கைப்பேசி எண்
(iii) பெயர் (பெயர் பள்ளிச் சான்றிதழில் உள்ளவாறு அல்லது பெயர் மாற்றம் செய்யப்பட்டிருப்பின் அரசிதழில் உள்ளவாறு)
(iv) புதிய கடவுச்சொல்லை (Password) உருவாக்குதல்
(v) கடவுச்சொல்லை உறுதி செய்தல்
(vi) கேப்சா குறியீடு (captcha code)


NotificationMadras High Court Recruitment for the posts of Typist Telephone Operator Cashier and Xerox Operator

விண்ணப்பதாரர்கள் அனைத்து விவரங்களையும் வெற்றிகரமாக பதிவுசெய்தபின், விண்ணப்பதாரர்களால் அளிக்கப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு ஓர் இணைப்பு (link) அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பதாரர், அந்த இணைப்பை சொடுக்கி (click), அதனை செயற்பாட்டுக்கு கொண்டுவருதல் வேண்டும். செயற்பாட்டுக்கு கொண்டு வந்தபின், விண்ணப்பதாரர்கள், தங்களது மின்னஞ்சல் முகவரியை பயனாளர் குறியீடாகவும் (user ID) பதிவின்போது அவரால் உருவாக்கப்பட்ட கடவுச்சொல்லையும் பயன்படுத்தி இணையதளத்திற்குள் login செய்து விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

மேலும், விண்ணப்பதாரர்கள், சென்னை உயர் நீதிமன்றத்தின் இணையதளத்தில் (https://www.mhc.tn.gov.in) தேர்வு சம்மந்தமான அனைத்து தகவல்களையும் தெரிந்துக் கொள்ளலாம்.

🔻🔻🔻

TNMAWS தமிழக அரசில் 2104 காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.130400/- || விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

February 11, 2024 0

 தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை ஆனது Junior Engineer (JE), Assistant Engineer (AE), Town Planning Officer Grade-II, Technical Assistant, Draughtsman, Overseer, Town Planning Inspector, Work Inspector & Sanitary Inspector ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த தமிழக அரசு பணிக்கு என மொத்தம் 2104 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்காக ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://tnmaws.ucanapply.com/ இல் 09.02.2024 @ 10.00 AM @ 10.00 AM @ 12.03.2024 @ 05.45 PM வரை செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலிப்பணியிடங்கள்:

Assistant Engineer – 718 பணியிடங்கள்
Town Planning Officer – 12 பணியிடங்கள்
Junior Engineer – 24 பணியிடங்கள்
Technical Assistant – 257 பணியிடங்கள்
Draughtsman – 176 பணியிடங்கள்
Overseer – 92 பணியிடங்கள்
Town Planning Inspector – 102 பணியிடங்கள்
Work Inspector- 367 பணியிடங்கள்
Sanitary Inspector – 356 பணியிடங்கள்

என மொத்தம் 2014 பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 32 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

கல்வி தகுதி:

Assistant Engineer : BE/B.Tech in the relevant fields.
Town Planning Officer : BE/B.Tech in Planning or Civil Engineering or Architecture.
Junior Engineer : Diploma in Civil Engineering.
Technical Assistant : Diploma in Civil/Mechanical Engineering.
Draughtsman : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Overseer : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Town Planning Inspector : Diploma in Planning or Civil Engineering or Architecture.
Work Inspector : Diploma in Civil/Mechanical/Electrical Engineering.
Sanitary Inspector : B.Sc in the field of Zoology/Public Health/Environmental Science/Microbiology/Biochemistry with Sanitary Inspector course.

சம்பள விவரம்:

1. Assistant Engineer (Corporation) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
2. Assistant Engineer (Civil/Mechanical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
3. Assistant Engineer (Municipality)- ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
4. Assistant Engineer (Civil) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
5. Assistant Engineer (Mechanical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
6. Assistant Engineer (Electrical) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
7. Assistant Engineer (Planning) (Corporation) – ரூ.37700 – 138500 (Pay Matrix, Level -20)
8. Town Planning Officer Grade-II /Assistant Engineer (Planning) (Municipality) – ரூ.35900 – 131500 (Pay Matrix, Level -13)
9. Junior Engineer- ரூ.35900 – 131500 (Pay Matrix, Level -13)
10. Technical Assistant – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
11. Draughtsman (Corporation) – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
12. Draughtsman (Municipality)- ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
13. Overseer – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
14. Town Planning Inspector /Junior Engineer (Planning) – ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)
15. Work Inspector- ரூ.18200 – 67100 (Pay Matrix, Level -5)
16. Sanitary Inspector (Corporation & Municipality)- ரூ.35400 – 130400 (Pay Matrix, Level -11)

தேர்வு செயல் முறை:

1. Written Exam
2. Interview

விண்ணப்பிக்கும் முறை:

தமிழக அரசு துறையில் பணிபுரிய விருப்பம் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி இணைப்பின் மூலம் இப்பணிக்கு வரும் 12.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


🔻🔻🔻

Cognizant நிறுவனத்தில் காத்திருக்கும் Process Specialist வேலை – கிடைத்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள்!

February 11, 2024 0

 


Cognizant  நிறுவனத்தில் இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் Process Specialist – Data பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் இணையவழி மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Cognizant காலிப்பணியிடங்கள்:

Process Specialist – Data பணிக்கென பல்வேறு பணியிடங்கள் Cognizant நிறுவனத்தில் காலியாக உள்ளது.

Process Specialist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு சார்ந்த கல்வி வாரியங்களில் BE, B.Tech, MCA டிகிரி முடித்தவர்கள் மட்டுமே இப்பணிக்கு விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

Cognizant பணியமர்த்தப்படும் இடம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் சென்னையில் உள்ள Cognizant நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளார்கள்.


Process Specialist சம்பளம்:

இந்த Cognizant நிறுவன பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத ஊதியம் பெறுவார்கள்.

Cognizant தேர்வு முறை:

Process Specialist – Data பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Process Specialist விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.


🔻🔻🔻

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.31,000/- சம்பளத்தில் வேலை – மிஸ்பண்ணிடாதீங்க!

February 11, 2024 0

 தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) ஆனது Farm Manager பதவிக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை tanuvas.ac.in இல் வெளியிட்டுள்ளது. இந்த பல்கலைக்கழக பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். எனவே தகுதியானவர்கள் 26.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.


TANUVAS காலிப்பணியிடங்கள்:

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகத்தில் Project Associate பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.

கல்வி தகுதி:

TANUVAS அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 60 % மதிப்பெண்களுடன்  Master’s Degree in Natural or Agricultural Sciences / MVSc or Bachelor’s degree in Engineering or Technology or Medicine தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

 சம்பள விவரம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.31,000/-  சம்பளம் வழங்கப்பட உள்ளது.

TANUVAS தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணிக்கு விண்ணப்பதாரர்கள்  நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த தேர்வு செயல் முறைகள் TRPVB, 2nd Floor, Central University Laboratory (CUL) Building, TANVUAS, Madhavaram Milk Colony, Chennai-600 051என்ற  முகவரியில் 26.02.2024  அன்று நடைபெற உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 26.02.2024  அன்று நடைபெற உள்ள தேர்வு செயல் முறைகளில் கலந்து கொண்டு பணிவாய்ப்பை பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

🔻🔻🔻

PNB பஞ்சாப் நேஷனல் வங்கி வேலைவாய்ப்பு 2024 – 1025 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 11, 2024 0

 Punjab National Bank ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது  வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Credit Officer, Forex Manager, Cyber Security Manager, Cyber Security Senior Manager பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PNB காலிப்பணியிடங்கள்:

Credit Officer, Forex Manager, Cyber Security Manager, Cyber Security Senior Manager பணிக்கென மொத்தம் 1025 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Punjab National Bank கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / MCA / CA/ ICWA / CFA / PG Diploma / MBA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PNB வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 21 என்றும் அதிகபட்ச வயதானது 38 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Punjab National Bank ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.36,000/- முதல் ரூ.78,230/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

Punjab National Bank தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 25.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻