தேனி மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி பற்றிய அறிவிப்பும் வெளியாகி உள்ளது.
ஊர்க்காவல் படை வேலைவாய்ப்பு :
தேனி மாவட்ட ஊர்க்காவல்படையில் காலியாக உள்ள 17 ஆண்கள் மற்றும் 08 பெண்கள் மற்றும் இதர காலிப்பணியிடங்களுக்கு பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற அல்லது தோல்வியடைந்த நபர்களிடமிருந்தும் , 20 வயது பூர்த்தியடைந்த சமூக சேவையில் ஆர்வமுள்ள ஆண் மற்றும் பெண் ஆகிய இரு பாலரிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படவுள்ளது .
ஊர்க்காவல்படையில் சேர ஆர்வமுள்ளவர்கள் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள தேனி அனைத்து மகளின் காவல் நிலையம் முதல் தளத்தில் செயல்படும் ஊர்க்காவல்படை அலுவலகத்தை அணுகி 14.02.2024 & 15.02.2024 ஆகிய இரண்டு நாட்களில் விண்ணப்பத்தை பெற்றுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெற்றுக்கொண்ட விண்ணப்பத்தினை முழுவதும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களை இணைத்து 17.02.2024-க்குள் நேரில் அல்லது தபால், பதிவுத்தபால் மூலம் அனுப்ப வேண்டும். பின்பு விண்ணப்பதாரர்களை வரவழைத்து பின்னர் அறிவிக்கப்படும் நாளில் தேனி மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் தகுதியானவர்களை தேர்வு செய்து பின் 45 நாட்கள் அடிப்படை பயிற்சி வழங்கி ஊர்க்காவல்படையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பணியமர்த்தப்படுபவர்களுக்கு ஒரு மாதத்தில் 05 நாட்கள் பணி வழங்கப்படும். இந்த 05 நாட்கள் பணிக்கு நாளொன்றுக்கு ரூ.560/- வீதம் படித்தொகையா ரூபாய் 2800 வழங்கப்படும் என தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத், தெரிவித்துள்ளார்.
தபால் மூலம் விண்ணப்பம் அனுப்பும் நபர்கள் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து தபால் பதிவுத்தபால் மூலம் வட்டார தளபதி, மாவட்ட ஊர்க்காவல்படை அலுவலகம், தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் - முதல் தளம்,தேனி, தேனி மாவட்டம்-625531. என்ற அலுவலக முகவரிக்கு அனுப்பலாம்.
🔻🔻🔻