Agri Info

Adding Green to your Life

February 19, 2024

இஸ்ரோ இளம் விஞ்ஞானிகள் திட்டம்; தகுதிகள் என்ன? விண்ணப்பிப்பது எப்படி?

February 19, 2024 0

 விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை மாணவர்களுக்கு வழங்குவதற்கான இளம் விஞ்ஞானிகள் (YUVIKA) திட்டத்திற்கு விண்ணப்பிக்க இஸ்ரோ அழைப்பு விடுத்துள்ளது.அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகள் குறித்து பள்ளி செல்லும் மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகஇளம் உள்ளங்களின் ஆர்வத்தை ஊக்குவிக்கஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) 9-ம் வகுப்பு படிக்கும் பள்ளிக் குழந்தைகளுக்காக "இளம் விஞ்ஞானிகள் திட்டம்" (யுவ விஞ்ஞானி கார்யக்ரம்) என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டம் கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முறையே 111153 மற்றும் 337 மாணவர்களின் பங்கேற்புடன் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாணவர்களின் இருப்பிடங்களின் அடிப்படையில் 5 குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது.

நடப்பாண்டுஇளம் விஞ்ஞானிகள் திட்டத்தில் சேர நாளை (பிப்ரவரி 20) முதல் வருகிற மார்ச் 20 ஆம் தேதி வரை https://jigyasa.iirs.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் கடந்த 2023-ம் ஆண்டு நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து 1.25 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்தனர். இதனால் இஸ்ரோவுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. விண்வெளி அறிவியல்விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் குறித்த அடிப்படை அறிவை விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் வளர்ந்து வரும் போக்குகளுக்கு ஏற்ப இளம் மாணவர்களுக்கு வழங்குவதே இந்த முயற்சியின் முக்கிய நோக்கமாகும்.

குறிப்பாகநாட்டின் கிராமப்புறங்களுக்கு முன்னுரிமை அளித்து இளம் மாணவர்களுக்கு விண்வெளி அறிவியல்விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் விண்வெளி பயன்பாடுகள் பற்றிய அடிப்படை அறிவை வழங்குவதற்காக இளம் விஞ்ஞானிகள் திட்டம் உருவாக்கப்பட்டது.

2 வார கால வகுப்பறை பயிற்சிபரிசோதனை செயல்முறை விளக்கம்போட்டிகள்ரோபோடிக் கிட்இஸ்ரோ விஞ்ஞானிகளுடன் மாதிரி ராக்கெட் கலந்துரையாடல் மற்றும் கள ஆய்வு ஆகியவை இத்திட்டத்தில் அடங்கும். வகுப்பறை விரிவுரைகள்ரோபாட்டிக்ஸ் சவால்ராக்கெட்செயற்கைகோள்களின் வடிவமைப்புதொழில்நுட்ப வசதி வருகைகள் மற்றும் விண்வெளி விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடல் ஆகியவை இந்தப் பாடத்திட்டத்தில் அடங்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர்.

பதிவு செய்வது எப்படி?

படி-1: இஸ்ரோ அந்தரிக்ஷா ஜிக்யாசா தளத்தில் பதிவு செய்யுங்கள்: https://jigyasa.iirs.gov.in/registration

படி-2: மேலே உள்ள இணையதளத்தில் வெற்றிகரமாகப் பதிவுசெய்த பிறகு உங்கள் மின்னஞ்சலைப் பெற்றதைச் சரிபார்க்கவும். உங்கள் பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் .டி.,க்கு அனுப்பப்பட்ட சரிபார்ப்பு இணைப்பைக் கிளிக் செய்யவும்.

படி-3: SpaceQuiz இல் பங்கேற்கவும். வினாடி வினாவிற்கு வருவதற்கு முன்வினாடி வினா வழிகாட்டுதல்களை கவனமாகப் படிக்கவும்.

படி-4: உங்கள் தனிப்பட்ட சுயவிவரம் மற்றும் கல்வி விவரங்களை நிரப்பவும்.

படி-5: மாணவர் சான்றிதழ்களின் புகைப்பட நகலை எடுத்துசரிபார்ப்பதற்காக சான்றிதழில் கையொப்பமிடும் தலைமையாசிரியர் / பள்ளித் தலைவர் மூலம் சான்றளிக்க வேண்டும். சரிபார்க்கப்பட்ட சான்றிதழை ஸ்கேன் செய்து இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். சான்றளிக்கப்பட்ட சான்றிதழ்களின் புகைப்பட நகல் மற்றும் சரிபார்ப்புக்கான சான்றிதழ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

படி-6: உங்கள் முதல்வர்/ பள்ளித் தலைவர்/ பெற்றோர்/ பாதுகாவலர் மூலம் சரிபார்ப்பதற்காக உங்கள் சான்றிதழை உருவாக்கவும் (இணைக்கப்பட்ட சான்றிதழில்(களில்) மாணவர் மற்றும் மாணவர் சமர்ப்பித்த சரிபார்ப்புக்கான சான்றிதழில் ஏதேனும் பொருத்தமின்மை காணப்பட்டால்அந்த மாணவரின் விண்ணப்பம் ரத்துசெய்யப்படும்.)

படி-7: உங்கள் ஆவணத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவும்.

யார் விண்ணப்பிக்கலாம்?

இந்தியாவில் ஜனவரி 12024 அன்று 9 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் ISRO இளம் விஞ்ஞானி திட்டத்திற்கு (YUVIKA) விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள். விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் விண்ணப்பப் படிவத்தில் உள்ளிடப்பட்டுள்ள அனைத்து விவரங்களையும்பதிவேற்றிய ஆவணங்கள் மற்றும் சான்றிதழ்களையும் கவனமாக மதிப்பாய்வு செய்ய விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். ஒரு முறை சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களை பின்னர் திருத்தவோ மாற்றவோ முடியாது. மேலும் தகவலுக்குவிண்ணப்பதாரர் மாணவர்கள் இஸ்ரோ அந்தரிக்ஷா ஜிக்யாசாவின் இணையதளத்தைப் பார்வையிடலாம்: https://jigyasa.iirs.gov.in/yuvika


🔻🔻🔻

தேர்வு இல்லை; ஆவடி தொழிற்சாலையில் 40 பணியிடங்கள்; டிப்ளமோ, டிகிரி, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

February 19, 2024 0

 சென்னை ஆவடியில் உள்ள போர் வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் டிப்ளமோ, டிகிரி மற்றும் இன்ஜினியரிங் படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 40 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் 20.02.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

இந்திய அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் போர் 

வாகனங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தில் தொழில் பழகுநர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக, அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Graduate Apprentices (Engineering/ Technology)

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 20

Computer Science and Engineering - 5

Electrical & Electronics Engineering - 3

Electronics and Communication Engineering - 4

Mechanical Engineering - 5

Automobile Engineering – 3

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Degree in Engineering or

 Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித் தொகை; ரூ. 9,000

Technician (Diploma) Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10

Computer Engineering/ Computer Technology - 2

Electrical & Electronics Engineering - 1

Electronics and Communication Engineering - 1

Mechanical Engineering - 3

Automobile Engineering – 3

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் Diploma in Engineering or 

Technology படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 8,000

Graduate Apprentices

பயிற்சி இடங்களின் எண்ணிக்கை: 10

B.Sc. - Computer Science - 5

B.Com - 5

கல்வித் தகுதி: 2020/ 2021/ 2022/ 2023 ஆம் ஆண்டுகளில் B.Sc Computer Science, 

B.Com படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

உதவித்தொகை: ரூ. 9000

வயது தகுதி: 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.

இந்த பயிற்சி இடங்களுக்கான கால அளவு 12 மாதங்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு டிகிரி, டிப்ளமோ 

மற்றும் இன்ஜினியரிங் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க www.mhrdnats.gov.in என்ற இணையதளத்தில் முதலில் பதிவு 

செய்துக் கொள்ள வேண்டும். 

பின்னர், COMBAT VEHICLES RESEARCH & DEVELOPMENT ESTABLISHMENT (CVRDE) 

என தேடுதல் மெனுவில் டைப் செய்து விண்ணப்பப் படிவத்தினை 

ஆன்லைனில் நிரப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 20.02.2024

மேலும் விவரங்களுக்கு http://boat-srp.com/wp-content/uploads/2024/02/CVRDE_Notification_updated.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.

🔻🔻🔻

அக்னிவீர் திட்டத்தின்கீழ் ராணுவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

February 19, 2024 0

 சென்னை: அக்னிவீர் திட்டத்தின்கீழ், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்ப தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின்கீழ், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப் பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண்ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி வரும் ஏப்.22. கூடுதல் தகவல்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ தேர்வு அலுவலகத்தை 044-25674924 என்ற தொலைபேசி எ்ண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

தொழிற்பழகுநர் பயிற்சி பெற வேண்டுமா ?? விவரம் இதோ.

February 19, 2024 0

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு / தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவிகளுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

எனவே இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 10, 12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக சேர்ந்து கொள்ளலாம்.இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ / மாணவியர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ / மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000/- முதல் ரூ.13,000/- வரை உதவித் தொகை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும்.என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻