Agri Info

Adding Green to your Life

February 21, 2024

BEL நிறுவனத்தில் Trainee Engineer காலிப்பணியிடங்கள் – ரூ.40,000/- சம்பளம் || முழு விவரங்களுடன்!

February 21, 2024 0

 BEL நிறுவனம் ஆனது Trainee Engineer – I பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள்  எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்..

BEL காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer – I பணிக்கென மொத்தம் 47 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer – I கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அனுமதி பெற்று இயங்கும் பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech / B.Sc தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு தகுதியானவர்கள்.

BEL வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Trainee Engineer – I ஊதிய விவரம்:

1st Year – Rs. 30,000/-

2nd Year  – Rs. 35,000/-

3rd Year  – Rs. 40,000/-

BEL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 07.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

TNHRCE-ல் Assistant Teacher காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.45,000/- || உடனே விரையுங்கள்!

February 21, 2024 0

 

இந்து சமய அறநிலையத்துறை ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Assistant Teacher, Computer Expert மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.45,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

TNHRCE காலிப்பணியிடங்கள்:

Assistant Teacher, Computer Expert மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 9 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Assistant Teacher கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree / Master’s Degree  தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE வயது வரம்பு:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 50 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Assistant Teacher ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.45,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNHRCE தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 02.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

PGIMER ஆணையத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.80,000/- || நேர்காணல் மட்டுமே!

February 21, 2024 0

 PGIMER ஆணையத்தில் Junior Research Fellow காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.80,000/- || நேர்காணல் மட்டுமே!

PGIMER ஆணையம் ஆனது Project Research Scientists-II, Junior Research Fellow, Senior Residents பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென மொத்தம் 5 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

PGIMER காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Research Scientists-II, Junior Research Fellow, Senior Residents பணிக்கென காலியாக உள்ள 5 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

Project Research Scientist கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் MBBS / MS / BVSc / BDS / Post Graduate தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

PGIMER வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Project Research Scientist ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.80,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும்.

PGIMER தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அல்லது மின்னஞ்சல் முகவரிக்கு 01.03.2024, 02.03.2024, 04.03.2024ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF 1

Download Notification PDF 2

Download Notification PDF 3

8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

February 21, 2024 0

 8ம் வகுப்பு முடித்தவர்களுக்கான Data Entry Operator வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Computer Operator, Data Entry Operator மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆனது சமீபத்தில் வெளியிட்டது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 8ம் வகுப்பு / Any Degree / B.Sc / Diploma / Nursing என பணிக்கு தொடர்புடைய ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Computer Operator, Data Entry Operator மற்றும் பல்வேறு பணிக்கென மொத்தம் 49 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் 35 மற்றும் 45 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் ரூ.17,430 ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

    Download Notification PDF

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IDBI வங்கியில் பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு – நேர்காணல் மட்டுமே!

February 21, 2024 0

 IDBI வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. Part Time Bank’s Medical Officer பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 07.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

IDBI வங்கி காலியிடங்கள்:

Part Time Bank’s Medical Officer பணிக்கென 18 பணியிடங்கள் IDBI வங்கியில் காலியாக உள்ளது.

Bank’s Medical Officer கல்வி:

இந்த வங்கி துறை சார்ந்த பணிக்கு அரசு அல்லது MCI சார்ந்த கல்லூரி / கல்வி வாரியங்களில் MBBS அல்லது MD டிகிரி முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள்.Bank’s Medical Officer வயது:

Part Time Bank’s Medical Officer பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

Bank’s Medical Officer சம்பளம்:

இந்த IDBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1000/- ஒரு நாளுக்கான சம்பளமாக வழங்கப்படும்.

IDBI வங்கி தேர்வு செய்யும் விதம்:

Part Time Bank’s Medical Officer பணிக்கு பொருத்தமான நபர்கள் Personal Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IDBI வங்கி விண்ணப்பிக்கும் விதம்:

இந்த IDBI வங்கி சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 07.03.2024 என்பது இப்பணிக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் ஆகும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

MOEF வனத்துறையில் IT Professional வேலைவாய்ப்பு 2024 – மாத ஊதியம்: ரூ.1,00,000/- || முழு விவரங்களுடன்!

February 21, 2024 0

 Ministry of Environment, Forests and Climate Change ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள IT Professional பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

MOEF காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி IT Professional பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

IT Professional கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.E / B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOEF வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

IT Professional ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

MOEF தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Contract அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 06.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPL நிறுவனத்தில் டிகிரி / டிப்ளமோ முடித்தவர்களுக்கு வேலை – விரைந்து விண்ணப்பியுங்கள்!

February 21, 2024 0

 Principal, Teacher பணிகளுக்கென TNPL School Society-ல் ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு டிகிரி, டிப்ளமோ தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் தபால் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

TNPL காலிப்பணியிடங்கள்:

TNPL School Society-ல் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

Principal – 01 பணியிடம்

Teacher – 14 பணியிடங்கள்

Principal / Teacher கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் UG, PG, B.Ed, B.P.Ed, Diploma தேர்ச்சி பெற்றவராக இருந்தால் போதுமானது ஆகும்.

Principal / Teacher அனுபவம்:

இந்த TNPL நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் 05 ஆண்டுகள் முதல் 15 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Principal / Teacher வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அதிகபட்சம் 35 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Principal / Teacher மாத சம்பளம்:

இந்த TNPL நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு தேர்வாகும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறமைக்கு ஏற்ப மாத சம்பளம் பெறுவார்கள்.

TNPL தேர்வு முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Written Test மற்றும் Personal Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

TNPL விண்ணப்பிக்கும் முறை:

இந்த TNPL நிறுவனம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 06.03.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

AAI Jobs: விமானத்துறையில் 490 காலியிடங்கள்; இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!

February 21, 2024 0

 இந்திய விமான நிலைய ஆணையத்தில் இளநிலை நிர்வாகி (Junior Executive) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளிவந்துள்ளது. மொத்தம் 490 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 01.05.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Junior Executive

காலியிடங்களின் எண்ணிக்கை : 490

Junior Executive (Architecture) - 03 

Junior Executive (Engineering ‐ Civil) - 90 

Junior Executive (Engineering ‐ Electrical) - 106 

Junior Executive (Electronics) - 278  

Junior Executive (Information Technology) - 13 

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட 

பிரிவுகளில் Bachelor’s Degree in Engineering/ Technology படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.05.2024 அன்று 27 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ. .40000-3%-140000 (வருடத்திற்கு ரூ. 13 லட்சம்)

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு கேட் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 

தேர்வர்கள் ஆன்லைனில் https://www.aai.aero/en/recruitment/ என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, OBC மற்றும் EWS 

பிரிவினருக்கு ரூ.300 ஆக உள்ளது. SC/ST, PWD, XS, DXS பிரிவுகளுக்கு 

விண்ணப்பக் கட்டணம் இல்லை.

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://www.aai.aero/sites/default/files/examdashboard_advertisement/Rectt%20Advt%20%20through%20GATE%202024.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கடலோர காவல் படையில் 70 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் தகுதி; உடனே விண்ணப்பிங்க!

February 21, 2024 0

 இந்திய கடலோர காவல் படையில் உதவி கமாண்டன்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் மொத்தம் 70 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுள்ளவர்கள் 06.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளவும்.

Assistant Commandant

காலியிடங்களின் எண்ணிக்கை: 70

General Duty (GD) – 50

Tech (Engg/ Elect) - 20

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு அல்லது இன்ஜினியரிங் 

படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.07.2024 அன்று 21 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும். 

SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது சலுகை உண்டு.

சம்பளம் : ரூ 56,100

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு 

மற்றும் உடற்தகுதித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் https://joinindiancoastguard.cdac.in/cgcatreg/candidate/login 

என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு,

 OBC மற்றும் EWS பிரிவினருக்கு ரூ.250 ஆக உள்ளது. 

SC/ST பிரிவுகளுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://joinindiancoastguard.cdac.in/cgcat/assets/img/news/Advertisement_for_Asst_Comdt_2025_Batch.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினை பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

February 20, 2024

60,567 பேருக்கு அரசுப்பணி.. அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு வேலை.. தமிழக அரசு தகவல்

February 20, 2024 0

 கடந்த 3 ஆண்டுகளில் 60 ஆயிரத்து 567 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னையில் 2 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டில் அடுத்த 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.

இதுகுறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில் தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. அதில் கடந்த 3 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 60 ஆயிரத்து 567 பேர் அரசுப் பணியில் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி, டிஆர்பி, சீருடைப் பணியாளர் தேர்வாணையம் உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் இந்த ஆண்டு ஜனவரி வரை 27 ஆயிரத்து 858 பேர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும்

பல்வேறு அரசு துறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மூலமாக 32 ஆயிரத்து 709 பேர் பணி அமர்த்தப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. குறிப்பாக நீதித்துறையில் 5,981 பேரும், பள்ளிக்கல்வித்துறையில் 1,847 பேரும், வருவாய்த்துறையில் 2,996 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

சுகாதாரத் துறையில் 4,286 பேரும், ஊரக வளர்ச்சித்துறையில் 857 பேரும், உயர்கல்வித் துறையில் 1,300 பேருக்கும் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், காவல்துறை, நகராட்சி, வேளாண்மை, சமூக நலம் உள்ளிட்ட துறைகளில் 15,442 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இவைதவிர, சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம் படித்த இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் வேலை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

TNPSC : குரூப் 4 தேர்வு என்றால் என்ன ? யாரெல்லாம் இதற்கு விண்ணப்பிக்கலாம்? முழு விவரம் இதோ...

February 20, 2024 0

 அரசுப்பணியில் சேர் வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் தான் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணபித்து வருகின்றனர். நேரடி பணி நியமனம் செய்த காலம் போய் இன்று யு.பி.எஸ்.சி போல தகுதி வாய்ந்த இளைஞர்களை டி.என்.பி.யும் தேர்வுகளை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்கள் குரூப் வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் ஒன்று தான் குரூப் 4 தேர்வு.

குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு வக்பு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பே குரூப் 4 தேர்வு. மேலும், இவ்வாண்டு முதல், தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணியில் அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான நியமனங்களும் குரூப் 4 தேர்வு வாயிலாகவே நிரப்பப்பட இருக்கின்றன.

குரூப் 4 பணியிடங்கள்:

கிராம நிர்வாக அலுவலர் (VAO) , டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணியிடங்கள் குரூப் 4 தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

குரூப் 4 தேர்வெழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 37 வயதுடையோர் அனைவரும் தகுதியுடையோர். இதில் ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொருத்தவரை வி.ஏ.ஓ தேர்வுக்கு மட்டும் 21 வயது முதல் 32 வயதுடையோர் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதில் சில பணியிடங்களில் சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகளும் உள்ளன.

சம்பளம்:

இந்த பணியிடங்களுக்கு தகுதிக்கு ஏற்ப குறைந்து மாதம் 19500 முதல் 62,000 ஊதியம் வழங்கப்படும்.

பாடத்திட்டம்:

குரூப் 4 தேர்வை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதலாம். இது 200 வினாக்களை கொண்ட எழுத்து தேர்வு முறை. ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். அனைத்தும் objective typeல் இருக்கும்.குரூப் - 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும். அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிக்கலாம்?

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான tnpscexams.in என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group