Agri Info

Adding Green to your Life

February 26, 2024

10ம் வகுப்பு தேர்ச்சி போதும் ... கூட்டுறவுத் துறையில் சூப்பர் வேலை... முழுவிவரம் இதோ.

February 26, 2024 0

 தென்னிந்திய பர்மாவில் வேளாண்மை கூட்டுறவு சங்கம் (சிம்கோ) சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இயங்கிவரும் கிளை அலுவலகங்கள், சிம்கோ அமுதம் கூட்டுறவு ஆயுஷ், பல் மருத்துவமனைகள், சிம்கோ கூட்டுறவு பல்பொருள் அங்காடி ஆகிய பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இதில் ஆட்சேர்ப்பு பிரிவு மற்றும் அலகு வாரியாக 48 காலியிடங்கள் உள்ளன. இதற்கு விண்ணப்பிப்பவர்கள் பிப்ரவரி 29-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் பற்றிய விவரங்கள்:

 

.எண்

பிரிவு

காலியிடங்கள் எண்ணிக்கை

வயது வரம்பு

1

OBC

12

21-33

2

SC

6

21-35

3

ST

3

21-35

4

EWS

4

21-30

ஊதிய விகிதம், காலி இடங்கள்:

.எண்

பணியிடம்

ஊதிய விகிதம்

காலியிடங்கள் எண்ணிக்கை

கல்வி தஊதிய விகிதம்குதி

1

அலுவலக உதவியாளர்

5,200 - 20,200

12

பத்து, பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, மற்றும் ஐடிஐ.

2

விற்பனையாளர்

6,200 - 26,200

22

பண்ணிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, டிப்ளமோ மற்றும் ஐடிஐ.

3

மேற்பார்வையாளர்

6,200 - 28,200

14

ஏதேனும் ஒரு பட்டம்.

கட்டணம்:

பயிற்சி காலத்தில் ஒரு வட்டத்திற்கு தொகுப்பூதியம் வழங்கப்படும், தேர்வானது எழுத்துதேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல் முறையில் நடைபெறும். எழுத்துத் தேர்வு ஒன்றரை மணி நேரத்திற்கு 100 மதிப்பெண்ணிற்கு வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க கட்டணமாக SC/ ST பிரிவினருக்கு ரூ.250 மற்ற பிரிவினருக்கு ரூ.500 வசூலிக்கப்படுகிறது.

முகவரி:

தென்னிந்திய பன்மாநில வேளாண் அறிவியல் கூட்டுறவு சங்கம், தலைமை அலுவலகம், டவுன்ஹால் வளாகம்,
பழைய பேருந்து நிலையம் அருகில், வேலூர் - 632004 என்ற முகவரிக்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பி வைக்கவேண்டும்.

இணைக்கப்பட்ட வேண்டிய ஆவணங்கள்: 

பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு சான்றிதழ், ஆதார் அட்டை, சாதி சான்றிதழ், வருமானம் சான்றிதழ், இரண்டு பாஸ்போர்ட் புகைப்படம், தொழில்நுட்ப மற்றும் பிறதகுதிச் சான்று ரூ. 27 அஞ்சல்தலை ஒட்டப்பட்டு சுய விலாசம் எழுதி பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.

சிறப்பு வழிமுறைகள்: 

விண்ணப்பங்கள் www.simcoagri.com என்ற இணையதளத்திலும் மற்றும் SIMCO தலைமை அலுவலகத்தில் மட்டும் கிடைக்கும். முழுமையாக நிரப்பப்படாத விண்ணப்பங்கள் எந்தவொரு அறிவிப்பு இன்றி நிராகரிக்கப்படும்.

ஒரு விண்ணப்பதாரர் ஒரு பணிக்காக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணம் செலுத்தி ரசீது இல்லாத விண்ணப்பம் உடனடியாக நிராகரிக்கப்படும். விண்ணப்பத்தை அனுப்பும் கடைசி தேதி அல்லது அதற்கு முன்பு வழங்கப்பட்ட கல்விச் சான்றிதழை வைத்திருந்த வேண்டும்.

விண்ணப்பத்துடன் 24*10 செமீ அஞ்சல் உரையின் மேல் ரூ.27-க்கான அஞ்சல்தலை ஒட்டப்பட்டு சுயா விலாசம் எழுதி இணைக்கப்படாத விண்ணப்பம் நிராகரிக்கப்படும். இணைக்கப்பட்ட ஆவணங்கள் போலி என கண்டறியப்பட்டால் ரத்து செய்யப்படும். கட்டணம் எந்தவொரு இழப்பீடும் திருப்பித்தர கூட்டுறவு சங்கம் பொறுப்பேற்காது.

மேலும், இறுதி நாளுக்கு பிறகு பெறப்பட்ட விண்ணப்பங்கள் காரணம் எதுவாயினும் நிராகரிக்கப்படும். கையெழுத்து இல்லாத விண்ணப்பமும் நிராகரிக்கப்படும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பதாரர்கள் குறிப்பிட்ட கிளைகளில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தபடுவார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 220+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

February 26, 2024 0

 

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் 220+ காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

ISRO இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் URSC ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Scientist/ Engineer, Technical Assistant, Scientific Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 224 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Scientist/ Engineer, Technical Assistant, Scientific Assistant மற்றும் பல்வேறு பணிக்கென காலியாக உள்ள 224 பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / ITI / Degree / BE / B.Tech / ME / M.Tech / M.Sc / B.Sc / Diploma in Engineering / Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 18 வயது பூர்த்தியான 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 10 வரையிலான ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:
  • தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 16.02.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

February 26, 2024 0

 

IT துறையில் வேலை வேண்டுமா? Wipro நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியீடு!

Wipro நிறுவனம் ஆனது அதில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது Associate Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Wipro-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும். இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Wipro காலிப்பணியிடங்கள்:

Associate Analyst பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Associate Analyst கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree computer science / B. Tech / BCA, MCA / Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Wipro வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Associate Analyst ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Wipro நிறுவன நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும்.

Wipro தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் Skill Test / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் பயன்படுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.37,000/- || முழு விவரங்களுடன்!

February 26, 2024 0

 

IIITDM காஞ்சிபுரத்தில் Junior Research Fellow வேலை – சம்பளம்: ரூ.37,000/- || முழு விவரங்களுடன்!

IIITDM காஞ்சிபுரம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையவும்.

IIITDM காலிப்பணியிடங்கள்:

IIITDM வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellow பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Research Fellow கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் BE / B.Tech, ME / M.Tech தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

IIITDM வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தளர்வுகளுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Junior Research Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.37,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIITDM தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 08.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

February 25, 2024

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || கடைசி வாய்ப்பு!

February 25, 2024 0

 

TANUVAS தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக வேலைவாய்ப்பு – தேர்வு இல்லை || கடைசி வாய்ப்பு!

தமிழ்நாடு கால்நடை மருத்துவ மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Project Associate பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master’s Degree in Natural or Agricultural Sciences / MVSc or Bachelor’s degree in Engineering தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் வினாபஹாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 26.02.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF

DRDO ஆணையத்தில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.67,000/- || நேர்காணல் மட்டுமே!

February 25, 2024 0

 DRDO ஆணையத்தில் JRF காலிப்பணியிடங்கள் – சம்பளம்: ரூ.67,000/- || நேர்காணல் மட்டுமே!

DRDO ஆனது Junior Research Fellowship, Research Associate பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

DRDO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Junior Research Fellowship, Research Associate பணிக்கென காலியாக உள்ள 4 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

JRF கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree / Post graduate degree / NET / GATE தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO வயது வரம்பு:
பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

JRF ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு ரூ.67,000/- மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

DRDO தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 03.04.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொண்டு பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

February 25, 2024 0

 பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் தேர்வில்லாத வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

Project Associate –II பணிக்கென காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது குறித்த அறிவிப்பு ஒன்றை பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் ஆனது சமீபத்தில் வெளியிட்டது. இப்பணிக்கென ஒரு பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Project Associate பணிக்கென காலியாக உள்ள ஒரு பணியிடம் நிரப்ப உள்ளது.
  • விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் M.Sc. Chemistry தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.35,000/- மாத ஊதியம் வழங்கப்படும்.
  • தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 27.02.2024ம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ முகவரிக்கு அனுப்பி விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

February 24, 2024

காலையில் காஃபிக்கு பதிலாக இந்த பானங்களை குடித்து பாருங்கள்... உடல் நடக்கும் அற்புத மாற்றத்தை உணர்வீர்கள்!

February 24, 2024 0

 நம்மில் பெரும்பாலானோருக்கு காஃபி அல்லது டீ மிகவும் பிடித்தமான பானமாக இருக்கிறது. சிலருக்கு காலை மற்றும் மாலை நேரத்தை பொறுத்து இரண்டுமே பிடிக்கும். பலருக்கும் பெரும்பாலான நாட்கள் காலை நேரத்தில் சூடான ஒரு கப் காஃபியுடன் துவங்குகிறது.

பிடித்தமான காஃபியுடன் நாம் துவக்கும் நாள் நம்மை உற்சாகப்படுத்துகிறது மற்றும் நமது மனநிலையை சிறப்பாக வைக்கிறது. சிலர் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை காஃபி குடிப்பதுடன் நிறுத்தி கொள்வார்கள். சிலர் நாளொன்றுக்கு கணக்கில்லாமல் காஃபி குடிப்பார்கள். அளவுக்கு அதிகமாக காஃபி குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு சில தீமைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

காஃபியில் இருக்கும் காஃபின் உடலில் விழிப்புணர்வை அதிகரிக்க செய்கிறது. இது நாம் சோர்வடைய செய்யும் பிரெயின் கெமிக்கலான adenosine விளைவுகளை தடுக்கிறது. மிக அதிக அளவு காஃபின் நுகர்வு நடுக்கம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவே அதிக காஃபி குடிப்பதால் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு உங்கள் டயட்டில் காஃபிக்கு பதில் நீங்கள் சேர்த்து கொள்ள கூடிய 5 ஆரோக்கிய பானங்களை இங்கே பார்க்கலாம்.

கிரீன் டீ: பிரபல டீடாக்ஸ் பானமாக இருக்கும் கிரீன் டீ, நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களால் நிறைந்துள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களோடு பிளான்ட் கெமிக்கல்ஸ்களும் நிறைந்து இருப்பதால் உலகளவில் பிரபலமாக இருக்கும் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே உங்களது தினசரி டயட்டில் கிரீன் டீ-யை சேர்த்து கொள்வது சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, உங்களது தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கூடும்.


இளநீர் : தேங்காயில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால், இழந்த ஊட்டச்சத்துக்களை ரீபிளேஸ் செய்ய உதவுகிறது. மேலும் இளநீரில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இளநீரை உங்களது பேலன்ஸ்ட் டயட்டின் ஒரு பகுதியாக சேர்த்து கொள்ளலாம்.

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் செல்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் B9 (ஃபோலேட்) ஏராளமாக உள்ளது. ரத்த நாள சிதைவைத் தடுக்க ஃபோலேட் அவசியம். இது இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இயற்கையாகவே பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் நிறைய இருப்பதால், உடலில் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது.

லெமன் ஜூஸ்: உங்கள் டயட்டில் தொடர்ந்து லெமன் ஜூஸை சேர்த்து கொள்வதன் மூலம் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெற முடியும். லென்னும் ஜூஸின் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைப்பதோடு எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானம்: இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த தண்ணீர் பானத்தை அடிக்கடி எடுத்து கொள்வது வாயுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற உதவும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த நீரானது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குணங்களை கொண்டுள்ளது. எனவே இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள மற்றும் நம்முடைய நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.


🔻 🔻 🔻 

Cold Water : வெயில் காலத்தில் ஐஸ் வாட்டர் குடிக்கலாமா..? மீறி குடித்தால் என்ன பிரச்சனை வரும் தெரியுமா?

February 24, 2024 0

 சில்லென்று இருக்கும் பானங்கள் அல்லது தண்ணீரை குடிப்பது நமது தாகத்தை தணிக்கவும், புத்துணர்ச்சியுடன் உணர வைக்கவும் உதவுகிறது. ஆனாலும் எப்போதாவது ஐஸ்-கோல்டு வாட்டரை குடிப்பது வேறு வெயிலுக்காக தினமும் குடிப்பது சிறந்த விஷயம் அல்ல என பலர் நம்புகிறார்கள்.

கோடைகாலம் வரவுள்ள நிலையில் வெயில் கொடுமையிலிருந்து சிறிது இளைப்பாற குளிர்ந்த பானங்கள் மற்றும் ஐஸ் வாட்டர் குடிக்கும் ஓழக்கம் பலரிடமும் உள்ளது. இதுகுறித்து நிபுணர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்க்கலாம்.

செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு உடல் செயல்பாடுகளை ஆதரிக்க மற்றும் இயல்பான உடல் வெப்பநிலையை பராமரிக்க, உறுப்புகள் மற்றும் திசுக்களை ஆரோக்கியமாக வைத்திருக்க தினசரி போதுமான அளவு தண்ணீரை குடிப்பது மிகவும் அவசியம். இது மற்ற உடல்நலப் பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடிய நீரிழப்பு தவிர்க்க உதவுகிறது. மேலும் இது பிற உடல்நலப் பிரச்சினைகளுக்கு காரணமான நீரிழப்பை தவிர்க்க உதவுகிறது.


பொதுவாக நம் உடலின் இயல்பான வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் ஆகும். நாம் குளிர்ந்த நீரை அருந்தும் நேரத்தில், இந்த வெப்பநிலையை கட்டுப்படுத்தும் நோக்கில் உடல் ஆற்றலை வெளியேற்றும் நோக்கில் இயங்குகிறது. சுருக்கமாக சொன்னால் குளிர்ந்த நீர் உடலில் சமநிலையின்மையை ஏற்படுத்தும் மற்றும் செரிமான செயல்முறையை மெதுவாக்கும். ஐஸ் வாட்டர் குடிப்பதை தவிர்க்க மற்றொரு காரணம் குறிப்பாக சாப்பிடும்போது அல்லது சாப்பிட்ட பிறகு, எரிச்சல், தொண்டை புண் மற்றும் மூக்கடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது என்கிறார் நுரையீரல் நிபுணர் டாக்டர் சோனம் சோலங்கி.

அதே சமயம் கடும் கோடை காலத்தில் ஒருவர் ஐஸ் வாட்டரை குடிப்பதால் குறிப்பிடத்தக்க உடல்நல அபாயங்கள் ஏற்பட வாய்ப்புகள் குறைவு என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் ஸ்வேதா மகாதிக். சில ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான ஆய்வு முடிவு ஒன்றில், வொர்கவுட்களின் போது ஜில் தண்ணீரை குடிப்பது உடலை அதிக வெப்பமடையாமல் தடுக்க உதவுகிறது என்று கூறப்பட்டிருப்பதை சுட்டிகாட்டி உள்ளார்.

ஒருவருக்கு காய்ச்சல் , ஜலதோஷம் இருக்கும் போது அல்லது அவருக்கு ஏதேனும் நாள்பட்ட நிலை இருந்தால் ஐஸ் வாட்டர் குடிப்பது சரியான யோசனை அல்ல என்கிறார் ஸ்வேதா. வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் ஏற்படும் பலன்களை பற்றியும் கூறி இருக்கிறார் ஸ்வேதா. வெந்நீர் அல்லது வெதுவெதுப்பான நீரை குடிப்பதால் கணிசமான நன்மைகள் உண்டு மற்றும் ஐஸ் வாட்டரை குடிப்பதால் ஏற்படும் ஆபத்துகள் எதுவும் இல்லை. மேலும் வழக்கமான அறை வெப்பநிலை தண்ணீரைக் குடிப்பது போன்ற அதே நன்மைகளையே வெதுவெதுப்பான தண்ணீரும் கொண்டிருக்கும் என்கிறார்.

ஐஸ் வாட்டரை குடிப்பதை விட வெந்நீரை குடிப்பது நன்மை பயக்குமா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் ஆயுர்வேத நிபுணரான டாக்டர் டிக்ஸா பவ்ஸர். வெந்நீர் (வெதுவெதுப்பான தண்ணீர்) குடிப்பது பற்றி கூறி இருக்கும் டிக்ஸா பவ்ஸர், அதிக குளிர்ச்சியுடன் இருக்கும் ஐஸ் வாட்டரை தவிர்த்து விட்டு அதற்கு பதில் அறை வெப்பநிலை அல்லது வெதுவெதுப்பாக இருக்கும் நீரை குடிப்பது நல்லது என்கிறார்.

தண்ணீர் குடிப்பதற்கான சிறந்த வழி பற்றி கூறி இருக்கும் டிக்ஸா பவ்ஸர், குடிக்கும் தண்ணீரின் அளவு போதுமானதாக இருக்க வேண்டுமே தவிர அதிகமாக இருக்க கூடாது என்றும் பரிந்துரைத்து உள்ளார். அதே போல உட்கார்ந்து கொண்டு தான் தண்ணீர் குடிக்க வேண்டும், நின்று கொண்டு அல்லது நடந்து கொண்டோ தண்ணீர் குடிக்க கூடாது, என்றும் கூறி இருக்கிறார்.



வெயிட்லாஸ் பண்ண ட்ரை பண்றீங்களா..? உங்க வயதுக்கு ஏற்ப தினமும் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் தெரியுமா?

February 24, 2024 0

 பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க டயட் அல்லது ஒர்கவுட்ஸ்களில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் உடல் பருமனாக இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் பருமனை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

அதிகரித்து காணப்படும் உடல் எடையை குறைப்பதில் நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினசரி 10,000 ஸ்டெப்ஸ் அதாவது பத்தாயிரம் அடிகள் நடப்பது எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே எடையை குறைக்க விரும்பும் பலரும் தினசரி 10,000 ஸ்டெப்ஸ் என்ற எளிய பயிற்சியை செய்ய தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் வயதுக்கு ஏற்ப தினமும் இத்தனை ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தினசரி நடக்க வேண்டிய ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் எக்சர்சைஸ் படி, தினசரி 2500 ஸ்டெப்ஸ்கள் வரை நடப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதேநேரம் பல ஆராய்ச்சிகள் தினமும் குறைந்தது 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. எனினும் சில சுகாதார நிபுணர்கள் தினமும் குறைந்தது 5 ஸ்டெப்ஸ்களாவது நடக்க அறிவுறுத்துகிறார்கள்.

News18

வயதுக்கு ஏற்ப தினசரி எத்தனை ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்…!

  • ஒரு ஆய்வின் படி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • 18 முதல் 50 வயது ஆண்கள் தினமும் 10 - 12 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் வரை நடக்க வேண்டும்.

  • 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 10-11 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் வரை நடக்க வேண்டும்.

  • 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடப்பது நல்லது.

  • 40 முதல் 50 வயதுடைய பெண்கள் தினமும் 11 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்.

  • 50 முதல் 60 வயதுடைய பெண்கள் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்.

  • 60 வயதிற்கு மேற்பட்டபெண்கள் தினமும் 8 ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடக்க வேண்டும்.

இதனிடையே பிரபல endocrinologist நிபுணர் டாக்டர் சஞ்சய் கல்ரா பேசுகையில் வயதை பொருட்படுத்தால்மல் ஒவ்வொரு நபரும் தினசரி குறைந்தது 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும் என்கிறார். இதனால் நம்முடைய இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக-பெருங்குடல் புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயமும் குறையும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிக எடையுடன் இருக்கும் ஒருவர் தனது உடல் எடையை கணிசமாக குறைக்க விரும்பினால், அவர் தனது தினசரி நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நடைபயிற்சியுடன் உடல் உறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பிற்கு ஏற்ப சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்ட அல்லது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒருவர் தினமும் 12 ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடக்க வேண்டும்.

ஒரு நபர் தினமும் 4 முதல் 5 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றாலும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் வரை நடந்தால் எந்த பாதிப்புகளும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த 10,000 ஸ்டெப்ஸ் விதி குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகள் தினசரி குறிப்பிட்ட ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தினமும் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது தங்கு தடையின்றி விளையாடுவது அவசியம்.

🔻 🔻 🔻