Agri Info

Adding Green to your Life

February 29, 2024

தினமும் ஏன் 2 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்? காரணம் இதுதான்!

February 29, 2024 0

 மனிதர்கள், தங்களது உடலை எப்போதும் நீர்ச்சத்து உள்ளதாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். தினசரி தேவையான தண்ணீரை குடிப்பதால் உடலில் உள்ள பாகங்கள் அனைத்தும் சரியாக செயல்படும் என கூறப்படுகிறது. மருத்துவர்களின் கூற்றின்படி, ஒரு நாளைக்கு 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் நமது ஒட்டுமொத்த உடலுக்கும் நல்லது ஏற்படும் என கூறப்பட்டுள்ளது. உடலின் செயல்பாடுகள் ஆற்றலுடன் இருப்பதற்கும், நோய் வாய்ப்படாமல் இருப்பதற்கும் தினமும் 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது உதவும். இதனால் ஏற்படும் பிற உடல் நலன்கள் என்ன என்பதை இங்கு பார்ப்போம். 

உடல் சூடு:

உடல் சூட்டை சம நிலையில் வைத்திருக்க, தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பது உதவும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். வெளிப்புறமாக இருந்து மட்டுமல்லாமல், உள்ளூர இருந்தும், உடல் சூட்டை தணிக்க தண்ணீர் குடிப்பது உதவுகிறது. எந்த வகையான காலநிலையாக இருந்தாலும் குறிப்பாக, வெயில் காலங்களில் அதிகம் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்தினை தக்க வைத்துக்கொள்ளலாம். 

ஊட்டச்சத்து:

உடலில் உள்ள அனைத்து உயிரணுக்களுக்கும் தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் எலக்ட்ரோலைட்டுகள் உள்ளிட்ட முக்கிய ஊட்டச்சத்துக்களை வழங்குவதற்கான ஒரு சக்திவாய்ந்த முறையாக தண்ணீர் செயல்படுகிறது. ஊட்டச்சத்துக்களின் சிறந்த விநியோகம் மற்றும் உறிஞ்சுதல் ஆகியவை போதுமான நீர்ச்சத்தினால் செயல்பட உதவுகின்றன. 

உடல் கழிவுகளை நீக்குதல்:

குடல் இயக்கத்திற்கு நன்றாக உதவும் செயல்பாடுகளுள் ஒன்று, அதிகம் தண்ணீர் குடிப்பது. உடலில் உள்ள டாக்ஸின் கழிவுகளை வியர்வை மற்றும் சிறுநீர் மூலம் உடலில் உள்ள நச்சுகள் மூலம் கழிவுப்பொருட்களாக வெளியேற்ற உதவும். இவற்றை வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியம். போதுமான தண்ணீரை குடிப்பது, சிறுநீரகங்கள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. மேலும்,  உங்கள் ஆரோக்கியத்திற்கு ஆபத்தான டாக்ஸின்ஸை உருவாக்காமல் தடுக்கிறது.

செரிமானத்திற்கு உதவும்:

நாம் சாப்பிடும் உணவு, உணவு செரிமானப் பாதை வழியாக எளிதாக செல்ல நீர் எளிதாக்குகிறது. மேலும் உணவுகளின் மூலம் உருாகும் ஊட்டச்சத்துக்களை உடைத்து, உணவு செரிமானம் மற்றும் உறிஞ்சுதலுக்கு உதவுகிறது. இது, வழக்கமான குடல் இயக்கத்தை பராமரித்து, மலச்சிக்கலையும் தடுக்கிறது. 

அறிவாற்றல் செயல்பாடுகளுக்கு உதவும்:

மனத் தெளிவு மற்றும் சரியான அறிவாற்றல் செயல்பாடு போதுமான நீரேற்றத்தைப் பொறுத்து அமையும். நீர்ச்சத்தினை சரியாக உடலில் வைத்துக்கொள்வதால் நமது மன நிலையும், நினைவாற்றலும் கூட அதிகரிக்கும். இது, கவனச்சிதறல் ஏற்படாமல் தடுக்கும். 

சரும பராமரிப்பு:

சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்வதற்கு தண்ணீர் அவசியமாக உள்ளது. போதுமான தண்ணீர் குடிப்பது, சருமத்தின் வறட்சி, மந்தமான தன்மை மற்றும் முன்கூட்டிய வயதானது போன்ற தோற்றத்தை தடுக்க உதவுகிறது. 

உடற்பயிற்சியை ஆற்றலுடன் செய்ய உதவும்:

போதுமான அளவு தண்ணீர் குடிப்பது உள்ளூர இருந்து குணமடைவதற்கும், சிறப்பாக உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகிறது. தண்ணீர் குடிப்பதால் உடலில் ஆக்ஸிஜன் சரியாக செயல்படுவதற்கும், உடலில் நீர்ச்சத்து குறையாமல் இருப்பதற்கும் உதவுகிறது. உடற்பயிற்சி செய்யும் போது உடலில் ஆற்றல் குறையாமல் இருப்பதற்கும், தண்ணீர் குடிப்பது உதவுகிறது. 

இரத்த அழுத்தத்தை சமநிலையில் வைத்திருக்க உதவும்:

தினசரி 2 லிட்டர் தண்ணீர் குடிப்பதால் உடலில் நீரிழப்பு ஏற்படாமல் தவிர்க்கலாம். இது,  மயக்கம் வருதல், தலை சுற்றுதல் ஆகியவற்றையும் தடுக்கும்.

🔻 🔻 🔻 

February 28, 2024

அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை – சம்பளம்: ரூ.12,000/- || நேர்காணல் மட்டுமே!

February 28, 2024 0

 அழகப்பா பல்கலைக்கழகத்தில் Project Fellow வேலை – சம்பளம்: ரூ.12,000/- || நேர்காணல் மட்டுமே!

Project Fellow பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை அழகப்பா பல்கலைக்கழகம் ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

அழகப்பா பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Project Fellow பணிக்கென மொத்தம் 2 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Project Fellow கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.


Project Fellow ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு ரூ.12,000/- மாத ஊதியமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அழகப்பா பல்கலைக்கழக தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து blamurugank@alagappauniversity.ac.in எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி போதிய ஆவணங்களுடன் 05.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BEL Trainee Engineer வேலைவாய்ப்பு 2024 – 517 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.40, 000/- சம்பளம்!

February 28, 2024 0

 BEL Trainee Engineer வேலைவாய்ப்பு 2024 – 517 காலிப்பணியிடங்கள் || மாதம் ரூ.40, 000/- சம்பளம்!

பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் ஆனது Trainee Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இங்கு மொத்தம் 517 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 28.02.2024 முதல் 13.03.2024 வரை விண்ணப்பிக்கலாம்.

BEL காலிப்பணியிடங்கள்:

Trainee Engineer பதவிக்கு என மொத்தம் 517 பணியிடங்கள் காலியாக உள்ளன.


கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழத்தில் இருந்து B.E/B.Tech/M.E/M.Tech in Engineering (Electronics, / Electronics & Communication / Electronics & Telecommunication/ Telecommunication / Communication / Mechanical/ Electrical /Electrical & Electronics / Computer Science /Computer Science & Engineering / Information Science/ Information Technology) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Engineer வயது வரம்பு:

01.02.2024 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் BE/B.TECH முடித்தவர்களின் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். M.E/M.TECH முடித்தவர்களின் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

சம்பள விவரம்:

1st Year – Rs. 30,000/- per month
2nd Year – Rs. 35,000/- per month
3rd Year – Rs. 40, 000/- per month

Trainee Engineer தேர்வு செயல் முறை:

1. Written Test
2. Interview

விண்ணப்ப கட்டணம்:

ST/SC/ PWD – கட்டணம் கிடையாது

மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.150 + 18% GST


விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் https://bel-india.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் 28.02.2024 முதல் 13.03.2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf

Apply Online


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

RBI வங்கியில் பகுதி நேர வேலைவாய்ப்பு 2024 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1000/- ஊதியம்!

February 28, 2024 0

  இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில்  Bank’s Medical Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இந்திய ரிசர்வ் வங்கி பணியிடங்கள்:

Bank’s Medical Consultant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே RBI வங்கியில் காலியாக உள்ளது.

Bank’s Medical Consultant கல்வி தகுதி:

MBBS அல்லது Post Graduate Degree-யை அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென பெறப்பட்டு வருகிறது.

Bank’s Medical Consultant அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Bank’s Medical Consultant சம்பளம்:

இந்த RBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1000/- ஒரு மணி நேரத்திற்கான சம்பளமாக பெறுவார்கள்.

RBI Bank தேர்வு முறை:

Bank’s Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RBI Bank விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் வேலை – சம்பளம்: ரூ.1,45,000/- || உடனே விண்ணப்பியுங்கள்!

February 28, 2024 0

 JGM / DGM, DGM, Manager போன்ற பணிகளுக்கென சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட்டில் (CMRL) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது 21.02.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 18 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

CMRL காலிப்பணியிடங்கள்:

CMRL நிறுவனத்தில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.

JGM / DGM – 03 பணியிடங்கள்

DGM – 01 பணியிடம்

Manager – 03 பணியிடங்கள்

DM / AM – 10 பணியிடங்கள்

AM – 01 பணியிடம்
  

CMRL சம்பளம்:

இப்பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.62,000/- முதல் ரூ.1,45,000/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.  


CMRL தேர்வு செய்யும் விதம்:

Interview மற்றும் Medical Examination ஆகிய தேர்வு முறைகளின் வாயிலாக இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

CMRL விண்ணப்ப கட்டணம்:

SC / ST – ரூ.50/-

மற்ற நபர்கள் – ரூ.300/-    
 
CMRL விண்ணப்பிக்கும் விதம்:

இந்த CMRL நிறுவன பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (06.04.2024) https://careers.chennaimetrorail.org/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம். 

Download Notification Link

Online Application Link


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு!

February 28, 2024 0


ஆவின் நிறுவனத்தில் ரூ.43,000/- சம்பளத்தில் தேர்வில்லாமல் புதிய வேலைவாய்ப்பு!

தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள கால்நடை ஆலோசகர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இங்கு 3 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 08.03.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆவின் காலிப்பணியிடங்கள்:

வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க லிமிடெட் நிறுவனத்தில் கால்நடை ஆலோசகர் பதவிக்கு என 3 பணியிடங்கள் காலியாக உள்ளன.


Veterinary Consultant கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன் கணினி பயன்பாடு பற்றிய விவரங்கள் தெரிந்திருக்க வேண்டும். ஓட்டுநர் உரிமத்துடன் இரு சக்கர வாகனம் வைத்திருக்க வேண்டும்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்க பணிக்கான சம்பளம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- Inclusive all allowance (Salary- Rs.30,000/- + Propulsion Charges- Rs.8000/- + Individual Incentive -Rs.5000/-) வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல்முறை:

ஆவின் நிறுவன பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.


நேர்காணல் பற்றிய விவரங்கள்:

தகுதியான விண்ணப்பதாரர்கள் 08.03.2024 அன்று காலை 11:00 மணிக்கு வேலூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட், வேலூர்-9 என்ற முகவரியில் நடைபெற உள்ள நேர்காணல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. நேர்காணலுக்கு வரும் போது தகுதியானவர்கள் கல்வித் தகுதி, அசல் சான்றிதழ்கள், விண்ணப்பம் மற்றும் ஓட்டுநர் உரிமத்துடன் கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது.

Download Notification 2024 Pdf



 🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Air India நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 28, 2024 0

 Air India நிறுவனத்தில் Degree படித்தவர்களுக்கான வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!

Air India நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Associate Manger – Service Delivery பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம். இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Air India காலிப்பணியிடங்கள்:

Associate Manger – Service Delivery பதவிக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

Manger ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியானவர்களுக்கு Air India-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

Air India தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மத்திய அரசில் ரூ.30,000/- சம்பளத்தில் வேலை – நேர்காணல் மூலம் தேர்வு || உடனே விண்ணப்பியுங்கள்!

February 28, 2024 0

 ICMR NIRRCH ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Staff Nurse, Junior Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் General Nursing & Midwife (GNM) தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ICMR காலிப்பணியிடங்கள்:

Staff Nurse, Junior Nurse பணிக்கென காலியாக உள்ள 2 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Staff Nurse கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Nursing & Midwife (GNM), ANM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ICMR வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 28 மற்றும் 30 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Staff Nurse ஊதிய விவரம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு பணியின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும்.

Staff Nurse – ரூ.30,000/-

Junior Nurse-  ரூ.18,000/-

ICMR தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியானவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 06.03.2024ம் தேதி நடைபெறும் நேர்காணலில் நேரில் சென்று கலந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

BECIL ஆணையத்தில் Multimedia Designer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!

February 28, 2024 0

 BECIL ஆணையத்தில் Multimedia Designer காலிப்பணியிடங்கள் – மாத ஊதியம்: ரூ.60,000/- || முழு விவரங்களுடன்!

BECIL ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Multimedia Designer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் Test / Interview தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள். தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

BECIL காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Multimedia Designer பணிக்கென காலியாக உள்ள 1 பணியிடம் நிரப்ப உள்ளது.


Multimedia Designer கல்வி தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் Bachelor’s degree in graphic design, digital design, film அல்லது அதற்கு இணையான ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

BECIL வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Multimedia Designer ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.50,000/- முதல் ரூ.60,000/- வரை மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

BECIL தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் Test / Interview தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 10.03.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்கள் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

February 28, 2024 0

தமிழக அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்கள் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!

தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் நியமனத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பிப்.7 ஆம் தேதி தொடக்க கல்வி இயக்குநர், அரசுக்கு தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியிட வேண்டும் என கடிதம் எழுதினர். தற்போது கால அட்டவணை வெளியாகி இருக்கிறது.அதில், இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் பணி மே 1ம் தேதி உபரி இடைநிலை ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் மே 31, அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் ஜூன் 30ம் தேதி நடத்த வேண்டும். அதே போல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட மதிப்பீடுகள் ஜூலை 1ம் தேதி , காலிப்பணியிடங்கள் நிரப்பக் கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதை ஜூலை 15க்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். நேரடி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு அக்டோபர் 31க்குள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஜனவரி 31க்குள் தேர்வு நடத்த வேண்டும். மேலும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30க்குள் வெளியிட வேண்டும், சான்று சரிபார்ப்பு மே 1ம் தேதி தொடங்கி மே 31க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Click here for latest employment news 

ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.280000/-

February 28, 2024 0

 ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு 2024 – சம்பளம்: ரூ.280000/-

மஹாரத்னா பொதுத்துறை நிறுவனமான ஆயில் இந்தியா லிமிடெட் (OIL), கிரேடு G இல் General Manager பணியிடங்களை நிரப்ப இந்திய நாட்டவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு விருப்பம் உள்ளவர்கள் 22/03/2024 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ஆயில் இந்தியா லிமிடெட் காலிப்பணியிடங்கள்:

General Manager பதவிக்கு என மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன.


Manager கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து Bachelor’s degree in engineering/ Post-graduation தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம் விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.120000-280000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Physical Fitness

Document verification

Interview


விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பின் இறுதியில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 22/03/2024க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2024 Pdf



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

February 27, 2024

CUET – UG நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் – NTA வெளியிட்ட முக்கிய தகவல்!

February 27, 2024 0

 

CUET – UG நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் – NTA வெளியிட்ட முக்கிய தகவல்!

க்யூட் யூஜி நுழைவு தேர்வின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில் தேர்வு குறித்தான விவரங்களை தேசிய தேர்வு முகமையானது வெளியிட்டு வருகிறது.

நுழைவுத் தேர்வு:

மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு க்யூட் யூஜி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதுவரையிலும் கடினி அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வுகள் நிகழாண்டு முதல் எழுத்து தேர்வாகவும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 380 நகரங்களிலும் வெளிநாடுகளின் 26 நகரங்களிலும் நாட்டின் 13 மொழிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. நடப்பாண்டு முதல் மாணவர்கள் அதிகபட்சமாக ஆறு தாள்களை மட்டுமே தேர்வு செய்து தேர்வு எழுதிக் கொள்ள முடியும். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.


இந்நிலையில் நேற்று முதல் இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கு மொத்தமாக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மட்டுமே தேர்வுகள் கணினி அல்லது எழுத்து தேர்வு முறையில் நடைபெறுமா என்று முடிவு செய்யப்படும். மே 15 முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

February 27, 2024 0

 மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் மாதம் ரூ.15,000/- சம்பளத்தில் வேலை – விண்ணப்பிக்கலாம் வாங்க!

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Subject Experts/Professionals பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வார்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழக காலிப்பணியிடங்கள்:

Subject Experts/Professionals பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.


கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து M.Sc., Communication and Journalism, M.A .Journalism and Mass Communication தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

காமராஜர் பல்கலைக்கழக தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.15,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

நேர்காணல் விவரங்கள்:

மதுரை காமராஜர் பல்கலைக்கழக பணிக்கு நேர்காணல் ஆனது 01.03.2024 அன்று நடைபெற உள்ளது. நேர்காணல் ஆனது Office of the Head, Dept. of Journalism and Science Communication, School of Linguistics and Communication, Madurai Kamaraj University, Palkalai Nagar, Madurai – 625 021. என்ற இடத்தில் நடைபெற உள்ளது.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

கரூர் வைஸ்யா வங்கியில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை – விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!

February 27, 2024 0

 கரூர் வைஸ்யா வங்கி ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின்படி Relationship Manager பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளது.
  • அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Graduate / Post Graduate தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
  • 35 வயதுக்கு உட்பட்டவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
  • தேர்வாகும் தகுதியானவர்களுக்கு KVB-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.
  • விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
  • விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 29.02.2024ம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    Download Notification PDF


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news